கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! 2024 நாடாளுமன்ற தேர்தல்: “வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்கிற மைய இயக்கத்தை புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாடு தழுவிய இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்களை பாதிக்கும் இந்துராஷ்ர வரி முறையான ஜி.எஸ்.டி-யை எதிர்த்து “வேண்டாம் GST வேண்டும் ஜனநாயகம்!” என்கிற பிரச்சார இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறோம்.

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

நாம் பேசுவதை கவனித்த தேங்காய் கடை வியாபாரி “மற்ற கட்சிகளை போல இல்லாம மக்கள் பிரச்சனையை பேசுறீங்க” என்று பேசி தொடர்ச்சியாக செய்யுங்கள் என்றார். பெண்மணி ஒருவர் “எல்லாம் சரிதான்,  ஜி.எஸ்.டி ஒழிக்க முடியாது, ரத்து செய்ய என்ன செய்யனும்னு சொல்லுங்க” என விவாதித்தார். அரிசி கடை வியாபாரி, ஜவுளிக்கடை வியாபாரிகள் என பலரும் தங்களது மன குமுறல்களை “வேண்டாம் ஜி.எஸ்.டி என்பது தான் எங்களது கோரிக்கையும் ஆனால் என்ன செய்ய முடியும்” என்ற வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தினர். பிரச்சாரத்தின் போது தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்; அப்போது அப்பகுதியிலுள்ள மாணவர்களும், குழந்தைகளும் நமது தோழர்களுடன் முழக்கமிட்டனர்.

அப்பகுதியிலுள்ள சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) தோழர்கள் நமது பிரச்சாரத்தை கவனித்தனர்; அடுத்தடுத்தப் பிரச்சாரக் கூட்டத்தில் தோழர்களுடன் இறுதிவரை இருந்தனர். மேலும், தொடர்ச்சியாக செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் முகநூல் பக்கத்தில் நேரலையை பார்த்து பகுதியிலுள்ள ஜனநாயக சக்திகளில் ஒருவர் “என்னையும் அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேன்” என்றார். அப்பகுதியிலுள்ள தோழர்கள் தொடர்ச்சியாக இதுபோல் பிரச்சாரத்தை செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.

தெருமுனைப் பிரச்சாரத்தின் போது மக்களின் ஆதரவு நமக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இன்னும் வீச்சான தெருமுனைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

  • சிறு – குறு – நடுத்தர உற்பத்தியாளர்களை ஒட்டச் சுரண்டும் ஜி.எஸ்.டியை ரத்து செய்!
  • மாநில உரிமைகளை பறிக்கும் ஜி.எஸ்.டியை ரத்து செய்!
  • ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை எனும் இந்துராஷ்டிர வரிக்கொள்கையை ரத்து செய்!
  • அம்பானி, அதானி, அகர்வால் போன்ற மார்வாடி-குஜராத்தி-பார்ப்பன-பனியா கார்ப்பரேட் கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
  • மூலப்பொருட்கள் விலையேற்றம், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!
  • சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் பொதுசந்தைக் கொள்கையைத் திரும்பப் பெறு!

என்ற முழக்கங்களை மக்கள் முழக்கங்களாக மாற்றுவோம்! ஜனநாயகத்திற்கான போரில் வெல்வோம்!


தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க