அரசியல் அரங்கில், “ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி” கும்பல், தோல்வி முகத்தில் சென்று கொண்டு இருக்கும் தருணத்தில் அதை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு நெம்புகோளாக! பாசிச கும்பல் மேற்கொண்ட ‘ஜி-20 மாநாடு’ தொடங்கி, ‘சந்திராயன்-3 ஏவுகனை நிலவின் தென் துருவத்தில்’ இறங்கியது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா போன்ற வரிசையில், அடுத்ததாக ‘உலகக் கோப்பையையும்’ அதில் இந்திய அணி வெற்றி பெற்றால், ‘தேசிய வெறி’ ஊட்டி அந்த பிம்பத்தை தூக்கி முன் நிறுத்தி; தனது அரசியல் ஆதாயத்திற்கு ‘துருப்புச் சீட்டாக’ பயன்படுத்த பெரு முயற்சி செய்தது. ஆனால் நடந்ததோ வேறு!
என்னதான்; அகமதாபாத் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தில் ரசிகர்கள் போர்வையில் சங்கிகள் புகுந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என பாகிஸ்தான் வீரர் ‘முகமது ரிஸ்வானை’ பார்த்து வெறிக் கூச்சலிட்டிருந்தாலும், நாங்கள் எல்லாம் மதச்சார்பின்மையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள்.
சங்கிகளே! உங்களுடைய ‘மதவெறிக்கும் தேசவெறிக்கும் ஒருபோதும் பலியாக மாட்டோம்’ என்பதை உணர்த்தும் விதமாக, அதை மெய்ப்பித்தும் காட்டியுள்ளனர்.
வினவு செய்தியாளர்