சுரங்கத்திற்குள் அமைதி!
ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம்
இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்!
சுரங்கத்தின் உள்ளே அமைதி
சுற்றிலும் மண் புழுதி
மூச்சுவிட முடியாமல் அவதி
முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி
பதினான்கு நாளாகியும் பலனில்லை
நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம்
நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை
இது யாருக்கான விஞ்ஞானம்?
இரவு பகலாக வேலை பார்த்து
இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம்
இனியும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
இறந்த பிறகாவது வெளியே எடுப்பார்களா என்ற கேள்வி மட்டும் எங்களின் கண்முன்னே!
ஆளும்வர்க்க அதிகாரிகள் உள்ளே இருந்தால்
உடனடியாக வேலைகள் நடக்கும், இந்திய ராணுவம் ஓடிவரும்
இரவு பகலாக வேலை நடக்கும்
உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளே இருந்தால்
உடைக்க முடியவில்லை;
கல்லை தோண்ட முடியவில்லை; இயந்திரமும் ரிப்பேர்
இதுபோன்ற செய்திகள்தான் வரும்
சுரங்கத்தின் உள்ளே அமைதி
சுருங்கத் தொடங்கும்
தொழிலாளர்களின் வாழ்க்கை
எண்ணிக் கொண்டிருக்கிறோம் நாட்களை
எங்களுக்கும் இவ்வுலகில் வாழ சிறிது காலம் கிடைக்கும் என்று
முதலாளித்துவம் முட்டுச் சந்தில் நிற்கிறது
முதலைகளின் லாபத்திற்கு தொழிலாளர்களின் குரல்வலையை நெரிக்கிறது
ஆளும் வர்க்கத்தினைத் தகர்த்து!
அரசியல் அதிகாரத்தைப் பறித்து!
தொழிலாளர்களின் கையில் எடுத்து!
தொடங்கப்பட வேண்டும் புதிய அரசு!
அதுதான் புதிய ஜனநாயக மாற்று!
(குறிப்பு: நவம்பர் 12 அன்று உத்தரகாசியில் பணியின் போது சுரங்கம் ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17-ஆம் நாளான இன்று (நவம்பர் 28) தான் மீட்கப்பட்டனர். இக்கவிதை தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கு முன்னரே எழுதப்பட்டது.)
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube