ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 16

ந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க கும்பல் எப்போதும் போல தனது இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னிறுத்தவில்லை என்றாலும், தனது உயிர்நாடியாக இருக்கு இந்துத்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை நீருபிக்கும் விதமாகத்தான் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நீங்கள் ராம் லல்லாவை தரிசனம் செய்ய விரும்புகிறீர்களா? இல்லையா? செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள், அயோத்தியில் ராம் லல்லாவை இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜ.க. உதவும்” என்று பேசியுள்ளார்.

தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகருக்கு பாக்யாநகர் என மறுபெயரிடப்படும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். “தேவி பாக்யலட்சுமி இங்கே இருக்கிறார், நாங்கள் (பா.ஜ.க) ஆட்சிக்கு வந்தால் அந்த பெயரை இந்நகரத்திற்கு வைப்போம். இது தெலுங்கானாவில் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் எங்கள் பரிசாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தான் ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்திலும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பல இஸ்லாமிய பெயர்களை நீக்கி ஊர்பெயர்களை காவிமயமாக்கியுள்ளது. அலகாபாத்தை ப்ராக்யராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தியா என்றும் மாற்றியிருக்கிறது. இத்தகைய பெயர் மாற்றங்கள் மூலம் மக்களிடையே இந்து மதவெறியை தூண்டிவிடுகிறது. அதே உக்தியை தான் தெலுங்கானாவிலும் கையாண்டு உள்ளது பா.ஜ.க கும்பல்.


படிக்க: எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!


மேலும் தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவிகித இடஒதுக்கீட்டையும் விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் அசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள குமுராம் பீமில் ஒரு பேரணியில் உரையாற்றும் போது யோகி ஆதித்யநாத் “முஸ்லீம் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. அது எந்த வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.

மேலும், “பி.ஆர்.எஸ் அரசாங்கம் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அறிவித்தபோது, ஒரு அரசாங்கம் எந்த அளவிற்கு சமூகத்தைப் பிரிக்க முடியும் என்பதை தெலுங்கானாவில் பார்த்தோம்” என்றும் “முஸ்லிம் இடஒதுக்கீடு என்பது தலித்துகள் மற்றும் பின் தங்கிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான ஒரு சதித் திட்டத்தின் பகுதியாகும்” என்று தனது இந்துத்துவ நச்சுக் கருத்துகளை கக்கியுள்ளார்.

இதற்கு முந்தைய சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களை விட இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. கும்பல் இந்துத்துவ பிரச்சாரத்தை குறைவாக மேற்கொண்டதை பல பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முன்வைத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ’நாம் எல்லாம் இந்து’ என்று கூறி பிற்படுத்தப்பட்ட மக்களை தன்பக்கம் திரட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை உடைத்ததால் தற்காப்பு நிலையிலிருந்து கவர்ச்சிவாதத் திட்டங்களை முன்பை விட அதிகமாக முன்வைத்து பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. கும்பல்.

இந்துத்துவ பிரச்சாரத்தை விட கவர்ச்சிவாதம் முன்னுக்கு வந்துள்ளதை பல பத்திரிகையாளர்கள் வரவேற்கின்றனர். கவர்ச்சிவாத அரசியலை முன்னிறுத்தி மட்டுமே பாசிசக் கும்பலை வீழ்த்தி விட முடியும் என்ற மனநிலையில் இருந்துதான் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பா.ஜ.க கும்பல் சூழலுக்கு ஏற்பவே இந்துத்துவ பிரச்சாரத்தை கையாண்டு உள்ளது. தனக்கு சாதகமான சூழல் அமையும் போது இந்துத்துவ பிரச்சாரத்தை மேலும் தீவிரமாகக் கையில் எடுக்கும் இந்த காவிக் கும்பல். ஏனென்றால் இந்துமுனைவாக்கம் தான் பாசிசக் கும்பலின் உயிர்நாடி.


கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க