திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓராண்டாக MRI ஸ்கேன் செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தையும் மருத்துவ நிர்வாகத்தையும் கண்டித்து டிசம்பர் 20-ஆம் தேதி காலை 11 மணியளவில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டாக MRI ஸ்கேன் இயங்காமல் இருப்பதை சரிசெய்யக் கோரியும், சிறப்பு மருத்துவர்களை 24 மணி நேரமும் பணி அமர்த்தக் கோரியும், பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்தக் கோரியும், மருத்துவமனை முழுவதும் அடிப்படை சுகாதார வசதிகளை உடனே ஏற்படுத்த கோரியும், அனைத்து வார்டுகளிலும் வெந்நீர் வழங்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் திருவாரூர் மாவட்ட பொருளாளர் தோழர்.எம்.முரளி தலைமை தாங்கி நடத்தினார். தோழர். லெனின், மக்கள் அதிகாரம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.இராஜ்குமார், வழக்கறிஞர் தோழர்.அரசு, விசிக தோழர் சீமா.மகேந்திரன், தோழர்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய தோழர்.ஆசாத் அவர்கள் ”மருத்துவத்தை அரசே இலவசமாக வழங்கிட அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube