திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலநிலை – மக்கள் அதிகாரம் மனு

மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரம் ஓராண்டிற்கும் பழுதடைந்திருப்பதால், ஏழை மக்கள் ஸ்கேன் (SCAN) எடுக்கவேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

நவம்பர் 20 அன்று, திருவாரூர் மருத்துவமனையில் பழுதடைந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) எடுக்கும் இயந்திரத்தை சரி செய்து தருமாறு மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தினம்தோறும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதில், பெரும்பாலானோர் ஏழை, எளிய உழைக்கும் மக்கள். திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் நாகை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த அரசு மருத்துமனையை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

படிக்க : ”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!

ஆனால், இந்த மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரம் ஓராண்டிற்கும் பழுதடைந்திருப்பதால், ஏழை மக்கள் ஸ்கேன் (SCAN) எடுக்கவேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. ஆனால், தனியார் மருத்தவமனைகளில் ஸ்கேன்(SCAN) எடுப்பதற்கு ரூ.1000 முதல் 4000 வரை பணம் கேட்கிறார்கள். பணம் இல்லாத, இலவச மருத்துவத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏழை நோயாளிகளால் என்ன தான் செய்யமுடியும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதிப்படுவதை தவிர! மருத்துவ தனியார்மயத்தை நோக்கி ஏழை மக்களை தள்ளுகிறது திருவாரூர் அரசு மருத்துவமனை என்பதே உண்மை.

அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை போன்றவற்றுடன் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் தரமற்ற நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் வாகனங்களுக்கு கண்காணிப்புடன் கூடிய நிறுத்துமிடமில்லாமையால், வாகனங்கள் திருடபடுவதாக குற்றச்சாட்டை மக்கள் முன்வைக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

ஓராண்டாக பழுதடைந்திருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரத்தை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும், மேற்கூறிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத்,  மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின், மாவட்டப் பொருளாளர் தோழர் முரளி மற்றும் பல தோழர்கள் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

  • திருவாரூர் அரசு மருத்துவமனையின் எம்.ஆர்.ஜ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரத்தை உடனே சரி செய்து கொடுத்திடுக!
  • மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்திடுக!
  • மருத்துவமனையை தரமிழக்க செய்து மருத்துவத் தனியார்மயத்தை ஊக்குவிக்காதே!
  • ஏழை மக்களுக்கு இலவச தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதிபடுத்திடுக!

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு:- 6383461270

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க