கடந்த ஆகஸ்டு மாதம், நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை வீடுபுகுந்து மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சரமாரியாக வெட்டிப்போட்ட சம்பவம், தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே. பள்ளர், பறையர், அருந்ததி மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல்கள் நடந்தேறி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, ஆதிக்கச் சாதியினரின் தாக்குதல் இலக்கில் தலித் மக்கள் இருக்கின்றனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறுநூல் வெளியிடப்பட்டது.
இச்சிறுநூலின் அரசியல் தேவை கருதி, இதனோடு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இரண்டு கட்டுரைகளையும் இணைத்து மறுபதிப்பு செய்துள்ளோம்.
வாங்கிப் படியுங்கள்!!
வெளியீடு: அடங்காத வெண்மணிகள்: என்ன செய்யப் போகிறோம்?
விலை: ரூ.30/-
வெளியிடுவோர்: புதிய ஜனநாயகம்
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
கைபேசி: 9444632561
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube