பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. செய்தி ஊடகங்கள் கூட இதை கவனித்து செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. இதை எப்படிப் பார்ப்பது?

டுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை ஒரு போதையாக வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியது. மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மனிதர்களுக்கான விழுமியங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. அதிலும் குறிப்பாக அனைத்தையும் கேலிக்குரியதாக பார்க்கும் இன்றைய 2K தலைமுறையினரிடம் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் மக்கள் இயல்பாக பொருத்துகின்றனர்.

அதிலும் தற்போது நடந்துவரும் “பிக்பாஸ் 7” நிகழ்ச்சி மிகவும் வக்கிரமான மனநிலையை உருவாக்குவது குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு குறித்தான கீழ்த்தரமான கருத்துக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களால் பேசப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல் போன்றவற்றை தன் டி.ஆர்.பி-க்காக விஜய் டிவி கேளிக்கை பொருளாக்கியுள்ளது. பிரதீப் ஆண்டனி போன்ற கீழ்த்தரமான நபர்கள் இன்று சமூக ஊடகங்களில் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார்கள். இவையெல்லாம், தற்போது மனிதர்களின் நுகர்வுவெறி கலாச்சாரம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதையே காட்டுகின்றன.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க