கல்லூரி வளாகத்தில் ஜனநாயக வெளி சுருங்கி வருவதைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் இன்று (19.02.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முதல்வர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற்ற கூட்டத்தில் ”சோறு, ஐஸ் கிரீம் தருவதாகக் கூறினால் மாணவர்கள் கூடுவார்கள்” என்று மாணவர்களைத் தரக்குறைவாக பேசியுள்ளார். அதேபோல், சனிக்கிழமையன்று (பிப்ரவரி 17) கல்லூரியில் ரூட் பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் மாணவர்களையும், மாணவர்கள் முன்பாக பேராசிரியர்களையும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். “வேண்டுமென்றால் போராட்டம் கூட செய்துகொள்ளுங்கள், அதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவதைப் போன்றது” என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கல்லூரி விடுதியில் நல்ல உணவு வழங்கப்படுவதில்லை. கழிவறை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் மாணவர்களுக்கு முறையாக செய்து தரப்படுவதில்லை.
இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண வலியுறுத்தி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube