நாள்: 02/03/2024

உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும், அதற்கு மாநில, ஒன்றிய  அரசுகள் உடனடியாக குடியரசு தலைவரிடம்  ஒப்புதல் பெற்று சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 24 வழக்குரைஞர்கள் சென்னையில்  உண்ணா நிலை போராட்த்தில் ஈருபட்டு வருகிறார்கள். அந்தப் போராட்டத்தை புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி ஆதரிக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று போராடிவரும் வழக்குரைஞர்களை ஆதரித்து களத்திற்கு வரும் சட்டக் கல்லூரி மாணவர்கள், ஜனநாயக இயக்கங்களை சார்ந்த தோழர்கள், வழக்குரைஞர்களின் குடும்பத்தினர், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட யார் வந்தாலும் அவர்கள் போலீசின் அனுமதி பெற்ற பின்பே  உள்ளே வரவேண்டும் என்று தடுக்கப்படுகிறார்கள். போலீசு மற்றும் திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கினை புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

படிக்க : “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அந்தந்த உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி பல ஆண்டுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நூற்றாண்டாக மட்டுமே பேசப்பட்டு வரும் இந்தி, இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கலாம். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளாக கலை, இலக்கியம் வளர்த்து தொன்றுதொட்டு அழியாமல் பல மொழிகளில் இருந்து தனித்து நிற்கும் தமிழ் மொழிக்கு, – 8 கோடி மக்கள் பேசும் ஒரு மொழிக்கு- தமிழ்நாடு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்காட அனுமதி இல்லை என்பது எவ்வளவு பெரிய அநீதி.

தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் போராடிவரும் வழக்குரைஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரித்து துணைநிற்போம்.

  • உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் போராட்டத்தை தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வோம்.
  • மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்!

இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி.
தமிழ்நாடு. 9444836642

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க