அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரசு செலவினங்களைக் குறைப்பது குறித்தான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை கைவிடுவது குறித்தான மசோதா ஒன்றை தாக்கல் செய்வதற்கான முயற்சியில் ஜேவியர் மிலே அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 12 அன்று தலைநகர் புவெனஸ் ஐரிஸ்-இல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசு தடியடி, கடும் குளிரில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவது போன்ற அடக்குமுறைகளைப் பயன்படுத்தி போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. ஆனால், போராட்டங்கள் தொடரும் என்பதை மக்களின் உணர்வு பிரதிபலிக்கிறது.
அர்ஜெண்டினா மக்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்கு பகிர்கிறோம்.






சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube