18.08.2024

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியை காட்டிலும் மிகவும் பல மடங்கு குறைவாக தற்பொழுது நிதி அறிவிக்கப்பட்டுள்ளதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இடைக்கால மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு தொகையை அறிவிப்பது, அதற்குப் பிறகு அதைக் காட்டிலும் மிகவும் குறைவான தொகையை பெயருக்கு அறிவிப்பது என்று செயல்பட்டதன் மூலம் மாபெரும் பிராடு அரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

ஸ்ரீபெரும்புதூர் – இருங்காட்டுக்கோட்டை – கூடுவாஞ்சேரி; திண்டிவனம் – திருவண்ணாமலை; அத்திப்பட்டு – புத்தூர்; ஈரோடு – பழனி; சென்னை – கடலுார் – புதுச்சேரி போன்ற புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்திப்பட்டு – புத்தூருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


படிக்க: 2024 பட்ஜெட்: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு!


திண்டிவனம் – நகரிக்கு ரூ. 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை- அருப்புக்கோட்டை – தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை – ஆவடி வழித்தடத்துக்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை – ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எவ்வித நிதியும் அளிக்காமல் முடக்க வேண்டும் என்பதில் பாசிச மோடி அரசு தெளிவாக இருக்கிறது.

வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.

இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும், மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கி இருப்பது வரலாற்றில் முதல் முறையாகும்.

தங்களுக்கு ஒரு தொகுதியை கூட கொடுக்காத தமிழ்நாட்டை பழி வாங்குகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க