செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாள்

பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம்

பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர,

★ மனிதர்களை மிருகமாக்கும் போர்னோகிராபியை தடை செய் !

★ ஆபாச வக்கிரங்களை பரப்பும் யூடியூப், முகநூல், இணையப் பக்கங்களை தடை செய்!

★ பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பத்திரிகைகள், விளம்பரங்கள், திரைப்படங்களை தடை செய்!

★ கஞ்சா, சாராயம் விற்பனையில் ஈடுபடும் கிரிமினல் கும்பல் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைது செய்!

★ கல்லூரிகளில், மாணவர்களுக்கு சமூக உணர்வூட்டும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதி கொடு!

★ பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற பணியிடங்களில் சங்கம் வைக்க அனுமதி கொடு!

★ பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தனியார் பள்ளிகளை சீல் வைத்து அரசே தன் பொறுப்பில் எடுத்து நடத்திடு!

★ பள்ளி முதல் கல்லூரி வரை பார்ப்பனிய பண்பாட்டு இழிவுகளை உதறியெரிந்து, அறிவியல் கல்வி வழங்குவதை உறுதிப்படுத்து!

★ ஆசிரியர்களுக்கு, அறிவியல் கண்ணோட்டமும், சமூக அக்கறையும் இருப்பதை உறுதிப்படுத்து!

★ பள்ளிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் அமைத்திடு!

★ கஞ்சா, சாராயம், டாஸ்மாக், போதை பொருட்களை உடனடியாக ஒழித்துக்கட்டு!

★ பார்ப்பனிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடு!

★ பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போலீஸ், ராணுவ அதிகாரிகள் மற்ற அரசு அதிகாரிகளை உனடடியாக கைது செய்து சிறையில் அடை!

இம்முழக்கங்களை முன்வைத்து அரசை பணிய வைத்திட உழைக்கும் மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் உரிமைகளுக்காக போராடக்கூடிய அமைப்புகள், பிற இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒருங்கிணைந்த முறையில், ஒரு சமூக இயக்கத்தை கட்டியமைப்போம்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய சமூகக் காரணிகளை ஒழித்துக் கட்டுவோம். அனைத்திற்கும் மேலாக பில்கிஸ்பானு தொடங்கி மணிப்பூர் பழங்குடியின பெண்கள் வரை அனுதினமும் பெண்கள் மீது பயங்கரவாத போரைத் தொடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை வீழ்த்துவோம். “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” எனும் மாற்றுக் கட்டமைப்பை நோக்கி முன்னேறுவோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க