இந்தியாவில் தயாரிக்கப்படும் பீரங்கி குண்டு குப்பிகளும் வெடி மருந்துகளும் ஐரோப்பிய நாடுகள் வழியாக உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் மோட்டார் ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 120 மி.மீ மற்றும் 125 மி.மீ அளவுள்ள 10 ஆயிரம் குண்டுகள் (வெடிமருந்து இல்லாத குப்பிகள்) ஐரோப்பிய நாடான செக் குடியரசிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், 2022 பிப்ரவரி முதல் 2024 ஜூலை வரையிலான காலத்தில் இந்திய அரசின் ஆயுத நிறுவனமான ‘யாத்ரா இந்தியா’ 3.5 கோடி மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு எல்-15 எ-1 ரக குண்டுகளுக்கான குப்பிகளை அனுப்பி வைத்துள்ளது.
படிக்க : உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
இந்த தகவல்களை இந்தியா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் வணிக ரீதியாக கிடைக்கும் சுங்கத் தரவுகளின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்த பகுப்பாய்வில் வெளிவந்துள்ளது.
கடந்து சில மாதங்களுக்கு முன் மோடி அரசானது பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்காக சென்னையில் இருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிக் குண்டுகளை சித்தார்த் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூலமாக அனுப்பியது. மேலும், அதானி நிறுவனமானது இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து இனப்படுகொலைகளுக்கான டிரோன்களை தொடர்ந்து தயாரித்து அனுப்பி வருகிறது.
மேலும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமானது இந்தியா, செக் குடியரசு, உக்ரைன், ஸ்பெயின், இததாலி நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களிடம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு யாரும் முறையாக பதிலாளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போரை நிறுத்தப்போகிறோம், அமைதியை கொண்டுவரப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுதான் அதானியின் நலனுக்காக தொடர்ந்து உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இன்குலாப்
நன்றி:தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram