தேனி மாவட்டத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் தூய்மை பணியாளரை தரக்குறைவாகப் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களைத் தனது அலுவலக பணிக்குப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதால் செயல் அலுவலர் வசைபாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

“உனக்கு என்ன வேலை சொல்லியிருக்கறனோ அதை மட்டும் தான் நீ செய்யனும். ஒருத்தன் பன்றி மேய்த்தால் நீ பன்றி மேப்பியா…” என்று அந்த அலுவலர் தரக்குறைவாகச் சாதிய ரீதியாகத் தாக்கிப் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. தனக்கு அலுவலக பணிகள் தரப்படுவதை எதிர்த்து “நான் ஸ்வீப்பர் தான்” என்று தூய்மைப்பணியாளர் கேள்வி கேட்பதும் அதில் பதிவாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் சொல்லொன்னா துயரங்களை தினமும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக சாதி ரீதியாக அவர்களைத் தாக்குவதும் அணுகுவதும் நடைமுறையாகவே உள்ளது.

இந்த அவலங்களை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

செய்தி ஆதாரம்:


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க