“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவால் உருவாக்கப்பட்டு பாடகி இசைவாணியால் பாடப்பட்ட “ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா” பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி சங்கிகள் கூச்சலிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடலை தற்போது திட்டமிட்டே சங்கிகள் சர்ச்சையாக்கி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், பெண்கள் உரிமை தொடர்பான கருத்துகள் சிலவற்றை மையமாகக் கொண்டிருந்தது.
2018-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது காவிக் கும்பல் கொக்கரித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பாடப்பட்ட பாடல் தான் “ஐயாம் சாரி ஐயப்பா”. அதை வைத்துக்கொண்டு தற்போது சங்கிகள் வேடிக்கையாகக் கத்திக் கொண்டிருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram