இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே இரண்டு மாத காலத்திற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இந்த ஒப்பந்தத்தைத் துளியும் மதிக்காமல் சுமார் 62 முறை லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு இடையே நவம்பர் 26 அன்று இரண்டு மாத காலத்திற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 27 அதிகாலை முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக மாறும் என அமெரிக்கா சவடால் அடித்து வந்தது.
இந்த போர் நிறுத்தம் குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி “இஸ்ரேலின் நடவடிக்கையைப் பொறுத்தே அமைதி திரும்பும்” என கூறியிருந்தார்.
ஆனால் இஸ்ரேல் ராணுவம் நவம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களில் இஸ்ரேல் ராணுவம் 38 முறையும், நவம்பர் 30 அன்று மட்டும் 24 முறையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியது.
அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படிக்க: காசாவில் இருந்து! | கவிதை
கடந்த 13 மாதங்களாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 3,960க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 16,500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த காலத்தில் இருதரப்பினரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுவதை பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மேற்பார்வையிடும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேலின் ஒப்பந்த மீறலை இந்த இரு நாடுகளும் கண்டிக்கவில்லை. இதுதான் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளைக் கண்காணிக்கும் இலட்சணம்.
இந்த ஒப்பந்தம் போடப்பட்ட போதே, இஸ்ரேலிடம் ஆயுதங்கள் குறைவாக உள்ளது என்றும் படைகளுக்கு ஓய்வு தேவை என்றும் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை நிரப்பிக் கொள்ளப் போவதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். பாசிச இஸ்ரேல் அரசின் நோக்கத்தை இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram