இன்று (டிசம்பர் 6, 2024) ஷம்பு எல்லையில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கிய 101 விவசாயிகள் மீது ஹரியானா பா.ஜ.க அரசு தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும், அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் (bulk SMS) சேவையை டிசம்பர் 9 வரை நிறுத்தி வைத்துள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். ஹரியானா எல்லை அருகில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீசாரும் அமைதிப் பேரணி நடத்தும் விவசாயிகளைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர்.