புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15 – 30 நவம்பர்,1985 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த 40 ஆண்டுகளில் தேசிய, சர்வதேசிய அரசியல் போக்குகள், சமூக பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை அலசி ஆராய்ந்து அதனை சமூகத்தின் பார்வைக்கு வைப்பதுடன், அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றி அமைப்பதற்கான மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் முன்வைத்து வருகிறது. தற்போது, பாசிச அபாயம் மேலோங்கிவரும் காலகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்ற மாற்றுத் திட்டத்தை முன்வைத்து தொடர்ச்சியாக வினையாற்றி வருகிறது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

தியாகச் செஞ்சுடர்களுக்கு

உலகம் முழுவதும்
பாட்டாளி வர்க்கப்
புரட்சிகர லட்சியத்திற்காகவும்
ஒடுக்கப்பட்ட மக்களின்
விடுதலை முன்னேற்றத்திற்காகவும்
பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ள
எல்லாத் தியாகச் சுடர்களுக்கும்,
இந்தியத் தாய்த் திருநாட்டின்
விடுதலைக்காகவும்
உழைக்கும் மக்களின்
நல்வாழ்விற்காகவும்
மார்க்சிய-லெனினிய-மாவோ
சிந்தனையின் ஒளியில்
புதிய ஜனநாயகப் புரட்சிப் போரில்
தங்களது இன்னுயிரை ஈந்த
எல்லாத் தியாக தீபங்களுக்கும்,
அவர்களது உதிரத்தால் சிவந்த
புரட்சிப் பாதையில்
எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி
உறுதியாகப் போராடுவோம்
என சூளுரைத்து,
எம் நெஞ்செமெல்லாம் நிறைந்த
வீரத் தியாகிகளுக்கு
இந்தச் சிவப்புமலரை,
“புதிய ஜனநாயக”த்தைக்
காணிக்கையாக  சமர்ப்பிக்கின்றோம்.

– முதன்முதலில் வெளியான 1985, நவம்பர் 15-30 புதிய ஜனநாயகம் இதழின் தலையங்கம்.

வாசகர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!

ஆசிரியர் குழு,       
புதிய ஜனநாயகம்

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 01 | 1985 நவம்பர் 15 – 30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு 1 (pdf) | இணைப்பு 2 (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தியாகச் செஞ்சுடர்களுக்கு..
  • உழைக்கும் மக்களின் புரட்சி புயல்
  • காரியக் கோமாளிகள்
  • இது இயற்கையின் சீற்றமல்ல…
  • வாக்குறுதிகளை தின்று பசி ஆறவோ?
  • புதிய ஜவுளிக் கொள்கை: தொழிலாளர் மீதான தாக்குதல்
  • இது இன்னும் நீடிக்கலாமா?
  • சொந்த மண்ணுக்காக சிந்தும் குருதி
  • உலகை குலுக்கிய நவம்பர் புரட்சி
  • அணித்திரள்கிறார்கள் அமெரிக்கக் கைக்கூலிகள்
  • கிழிபடும் முகத்திரை
  • கண்ணீர்க் கடல்
  • நரவேட்டையாடும் போலீஸ் வெறிநாய்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க