23.01.2025
டங்ஸ்டன் சுரங்கத்திட்ட ஏலம் இரத்து!
மாபெரும் மக்கள் போராட்டங்கள் முன்பு பாசிசம் வீழும்!
வென்றது தமிழ்நாடு!
பத்திரிகை செய்தி
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட ஏலத்தை ரத்து செய்துள்ளது பாசிச பாஜக அரசு. மாபெரும் மக்கள் போராட்டங்கள் முன்பு பாசிசம் வீழும் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு நிரூபித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மேலூர் அரிட்டாபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு வகையிலான மக்கள் போராட்டங்களை நடத்தினர்.
அதன் விளைவாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்திலேயே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்ற அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
அதற்குப் பின்னரும் கூட டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை வேறு பாதையில் அமைப்போம் என்று பாசிச பாஜக அரசு திமிர்த்தனமாக அறிவித்தது. அதற்கு எதிராக மேலூர் அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.
மாபெரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை அச்சுறுத்தும் விதமாக சுமார் 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்தது தமிழ்நாடு அரசு. கடும் கண்டனங்கள் இதில் எழுந்த நிலையில் வழக்கை இரத்து செய்தது தமிழ்நாடு அரசு.
பொங்கல் விழாவையும் போராட்டக் களமாக்கியது டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு.
மதுரை மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வில் கூட டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு பதாகைகள் தமிழ்நாடு தனித்துவமானது என்பதை மீண்டும் நிரூபித்தன. இனியும் தமிழ்நாட்டில் பாசிச பாஜக இருக்க வேண்டும் என்றால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
திடீரென்று போராட்டக் குழுவுக்கு தொடர்பு இல்லாத சிலரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று அங்கே மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தார் அண்ணாமலை. இந்தப் பொய்யான வேடிக்கையை அம்பலப்படுத்தியது டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு.
வேறு வழி இன்றி இன்றைய தினம் பல்லுயிர் பாரம்பரிய தளம், கலாச்சார பாரம்பரிய தளம் என்பதால் இத்திட்டம் கைவிடப்படுவதாக பாசிச பாஜக அரசு அறிவித்துள்ளது. திட்டம் அறிவித்த போதும் அதற்கு எதிராக மக்கள் போராடிய போதும் இந்த விசயங்கள் பாசிச பாஜக அரசுக்கு தெரியவில்லை. இத்தனை கேவலத்திற்கு பிறகும் அண்ணாமலை மோடிக்கு நன்றி சொல்கிறார்.
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு இதோ! தமிழ்நாடு மரண அடி கொடுத்திருக்கிறது!
பாசிச பா.ஜ.க-வை பணிய வைத்த மாபெரும் மக்கள் போராட்டத்தை வரவேற்போம்!
மாபெரும் மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றியை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவோம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram