30.01.2025

உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி!
யோகி ஆட்சியின் கொடூரம்!

பத்திரிகை செய்தி

ல லட்சம் மக்கள் கூடும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி. போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாதது வி.ஐ.பி தரிசனம் போன்ற காரணங்களால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இதில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நேற்று மாலை வரை யோகி அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் செய்யாமல் 17 மணி நேரம் கள்ள மவுனம் காத்து வந்தது. ஊடகங்களில் செய்தி வெளியான பின்பே வேறு வழியின்றி 30 பேர் இறப்பு என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

1954 இல் ஹரிதுவார் கும்பமேளாவில் 800 பேர், 2013 கும்பமேளாவில் ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 42 பேர் என தொடர்ந்து மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதிலிருந்தும் பாசிச யோகி அரசு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத். இதுதான் சாமானிய மக்களின் உயிர்கள் மீது பாசிஸ்டுகள் வைத்திருக்கும் மரியாதை.

பா.ஜ.க என்பது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சாமானிய இந்துக்களுக்கும் எதிரானது.

மக்களின் உயிர்ப் பலிக்குப் பொறுப்பேற்று பாசிச யோகி பதவி விலக வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க