என்ன தோழர் இப்படி சொல்லிட்டிங்க, யார சொல்றீங்க? என்று தொடங்கினார் நண்பர்.
அது ஒன்னுமில்லைங்க, விஜய் அவர் பாட்டுக்கு அவரது கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவை நடத்துனார். ஆனால், விஜய்யை நம்பியிருந்த, கூட்டத்துக்குத்தான் சொல்றேன்.
புரியுர மாதிரி சொல்லுங்க தோழர் என்றார் நண்பர்.
அவர் வருவாரா, அவர் வருவாரா என்று ரஜினிக்கா காத்திருந்த கூட்டம்தான். நேத்து விஜய் கூட்டத்தைப் பார்த்துட்டு ஒரே புலம்பல். இப்ப இந்த கூட்டத்தோட ஒரே பேச்சு, இவர் பேசுவாரா, இவர் நடப்பாரா-ன்னு ஒரே ஒப்பாரி.
“இவருக்கு இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஆதரவு இருக்கு அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க”, ”அரசு ஊழியர் போராட்டத்தைப் பத்தி இந்த விஜய் ஒரு வார்த்தை கூட பேசல”, “கெட்டவுட்-னு சொன்னாரு, யாரைன்னு சொல்லல” இதெல்லாம் ஒரு அரசியலானு கோபத்தை அடக்கிக்கிட்டு, காறித்துப்பாம, மனசுல நொந்துக்கிட்டு, அதை வெளியில காட்டிக்காம பேட்டி கொடுக்குறாங்க பாருங்க, அந்த திறமையோ திறமை!
அடுத்து மேடைய பார்க்கனுமே.
ஒரு புரோக்கர், ஒரு ‘கிரியா ஊக்கி’, ஒரு எடுப்பிடி. இதுதான் இவரோட கட்சி தலைவருங்க! ஏண்டா, தொழிலதான் நடத்துறீங்க, புரோக்கரை கூட்டிட்டு வந்து ஸ்டேஜ் ஏத்துறீங்களே, இதுஎன்னடா கொடுமைனு முக்காடு போட்டுக்கிட்டு அழுறாங்க.
அதுயாரு அந்த ‘கிரியா ஊக்கி’, ஆதவ் அர்ஜுனா?
ஆமாம். அவிருதான். அந்த ‘கிரியா ஊக்கி’, வி.சி.க.விடம் போய், அதிகாரத்திலும் பங்குன்னு உசுப்பிவிட்டு, தி.மு.க.வைத் திட்டிப் பார்த்துச்சி. கடைசியில, வி.சி.க.வை விட்டு வெளியேற வேண்டியதாயிடுச்சி.
இப்ப, விஜயை உசுப்பிவிட்டு, தி.மு.க.ன்னு ஒரு வார்த்தைய பேச வைக்க முடியல. வி.சி.க.வுல இருக்கும் போது, “அதிகாரத்தில் பங்கு”ன்னு சொன்னவரு, இங்க வந்து, அடுத்த ஓராண்டு எதிர்க்கட்சியாக இருக்கும்னு விஜய் கட்சியை உசுப்பிவிட்டுப் பார்த்தார்.
பாவம், இத விஜய் கூட ரசிக்கல. எத சொன்னாலும் விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுங்களுக்கு, இவர் பேசுறது என்னன்னு புரியல.
அந்த புரோக்கரு, புரோக்கர்னு சரியா காட்டிட்டார்.
எப்படி சொல்றீங்க தோழரே.
விஜய் வைச்ச, “கெட்டவுட்” முழக்கத்துக்கு ஒரு கையெழுத்து போடுங்கனு சொல்ல, ”நான் புரோக்கர், ஜெய்க்கறதுக்கு என்ன சொல்லனுமோ அததான் சொல்லுவேன். இங்க வந்து கையெழுத்து போடு, கும்புடுன்னு எல்லாம் சொல்லக் கூடாதுனு” சிம்பாலிக்கா ஒதுங்கிட்டார்.
Prasanth Kishore refused to sign ✍️
He knows very well that Vijay is just a seasonal customer for his business. If he signs it, he is risking his own career – business!
Why did Vijay’s party accord so much importance to a political advisor?
Immaturity at its peak! pic.twitter.com/eDaIcqEYJX
— Social Justice:சமூகநீதி (@Sathyantweets) February 26, 2025
இதெல்லாம் சரி, தலைவிரு பேசுவாருன்னு, வி.சாலை மாதிரி அடிச்சி விடுவாருன்னு ஒரே எதிர்ப்பார்ப்பு. ஆனா, தலைவிரு எந்த அதிரடியான விசயத்தையும் பேசல. 15 நிமிசத்துல அவர் பேசி முடிச்சாரு. வி.சாலையில பேசுனதெல்லாம், மறந்துட்டு, “கெட்டவுட்” இவரு உருவாக்கு சோசியல் மீடியா பிரச்சாரத்தையே இவர் மெச்சுனாரு.
அவரு பேசுவாரு, பேசுவாருன்னு இருந்த நம்ம ஆளு, தலையில அடிச்சிக்கிட்டாரு.
அப்புறம், அரசு ஊழியர் போராட்டம் பத்தி தலைவிரு ஒரு வார்த்தை கூட பேசல.
அப்புறம் தோழரே.
அப்புறம், டி.வி., யுடியூப் பேட்டியில, விவாதத்துல ஒரே ஒப்பாரி.
ஒரு வருசத்துல, தலைவிரு எத்தன தடவ வீட்ட விட்டு வெளியே வந்தாருன்னு இவனுங்களே, விரல் விட்டு எண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியே போனா, கூடாராம் காலியாயிடும். இனுமேலாவது, திருத்திக்கனும், அரசியல் செய்யனும்னு… ஒரே அட்வைஸ்.
அப்ப இவங்களுக்கெல்லாம், இன்னும் விஜய் மேல நம்பிக்கை இருக்கா?
வேற என்ன செய்ய, இவனவிட்டா வேறு யாரும் இல்ல. இவன் முக்குனா, முணகுனா அதற்கு அர்த்தம் சொல்லித்தான், அரசியல் செஞ்சாகனும்னு முடிவு செஞ்சுட்டாங்க.
ஆனால், தலைவரு முக்குற மாதிரியும் தெரியல, முணகுற மாதிரியும் தெரியலனு மனசுக்குள்ள ஒரே வெதும்பல்.
சரி, அப்புறம் போய்ட்டு வர்றேன் தோழரே.
நில்லுங்க, நண்பா!
தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க மாட்டேன், இந்திய ஏத்துக்கணும்னு சொல்லி அந்தப் பிரச்சன ஓட்டிட்டு இருக்கு. புதிய கல்விக் கொள்கை மூலமா, கல்வியில மாநில அரசின் கட்டுப்பாடெல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு போயிட்டது தொடர்பான பிரச்சினை இது.
இது இல்லாம, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பல்கலைக் கழங்களை ஒன்றிய அரசு தூக்கிட்டு போற யு.ஜி.சி. வரைவறிக்கை பிரச்சினை இருக்கு. ஜி.எஸ்.டி.யால மாநில அரசின் வரி வசூலிக்கும் உரிமை பறி போயிடுச்சி. மாநிலங்களின் தொகுதி மறுவரையறை பிரச்சினை இருக்கு. அரசு ஊழியர் போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களைச் சுட்டுக்கொல்றது தினந்தோறும் நடந்துக்கிட்டு இருக்கு. பாலியல் வன்முறை, தலித் மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டு இருக்கு.
ரொம்ப முக்கியமா, திருப்பரங்குன்றம் பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கண் முன்னாலயே, இந்து முன்னணி – பா.ஜ.க. கும்பல் மதுரையில கலவரத்தை நடத்துறதுக்கு முயற்சிக்கிறத நாம பாத்துக்கிட்டு இருக்கோம்.
இப்படி நிறைய விசயத்தை சொல்லலாம்.
ஆனால், இத எதைப்பத்தியும் வாயைத் திறக்காத விஜய், பத்தியும், அவர் பேசனும்னு நினைக்கிறதும் அடிமைப்புத்தியத் தவிர வேறு எதுவும் இல்ல.
தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருக்கிற யாரும், விஜய் என்ன சொன்னாருன்னு டி.வி.யில உட்கார்ந்து கேட்க வேண்டிய அவசியமில்ல.
களத்துல, தோழர்கள், ஜனநாயக சக்திகள் போராட்டிட்டு இருக்காங்க. அவங்க சொல்றத கேளுங்க. நாட்டுக்கு நல்லது நடக்கும். நாமும் நாளு விசயத்தை தெரிஞ்சுக்க முடியும்.
சரிதான் தோழரே.
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram