விஜய் கட்சியில் செங்கோட்டையைன்: புதிய ‘அ.தி.மு.க.’விற்கு அடித்தளம்

அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில். வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.

ரலாற்றில் பல விசயங்களுக்கு உவமை கூறிவிடலாம், வேறு பெயர்களைச் சொல்லிக் குறிப்பிட்டுவிடலாம். ஆனால், அ.தி.மு.க.வினருக்கு மட்டும் அவ்வாறெல்லாம் குறிப்பிடுவது கடினம்.

அ.தி.மு.க.வினரை அடிமைகள், தன்மானமற்றவர்கள், பிழைப்புவாதத்தில் கைதேர்ந்தவர்கள், எந்த கொள்கை, கோட்பாடும் இல்லாதவர்கள், நத்திப் பிழைப்பவர்கள் என்று பல வகைகளில் குறிப்பிட்டாலும் அச்சொற்கள் குறிக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் விஞ்சியவர்கள்.

ஜெயலலிதாவின் பாதங்களில் படுத்துப் புரண்டவர்கள், டயர் நக்கிகள், முதுகெலும்பு இல்லாத புழுக்கள் என்ற இந்த உயிரினங்களின் பட்டியல், பழனிச்சாமி, பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, ராஜேந்திர பாலாஜி, வேலுமணி… என மிக நீண்டது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று இவர்கள் தங்களது எஜமான விசுவாசத்தைக் காட்ட, அவ்விருவரை அடுத்து ஒரு சிறந்த தலைவர் கிடைக்கவில்லை. அதுதான், இவர்கள் குறிப்பிடும் அரசியல் வெற்றிடம். தங்களைப் போன்ற அடிமைகளில் ஒருவரான பழனிச்சாமியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகராக வைத்து, அந்த இடத்தை நிரப்புவதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை.


படிக்க: அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !


அதனால்தான், அமித்ஷாவிடம் மண்டியிடுகின்றனர். அமித்ஷாவும் மண்டியிட வைக்கிறார். பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுவிழாது என்பதால், அ.தி.மு.க. என்ற அடிமைக் கூட்டத்தைக் தேர்தல்வரைக்குமாவது தக்க வைக்க வேண்டியுள்ளது. இது, பா.ஜ.க.வின் கவலை!

தங்களை அடக்கியாள ஓர் எஜமானன் வேண்டுமென்பது இந்த அடிமைக் கூட்டத்தின் ஒரே நோக்கமாகும். அதற்கு இவர்கள் கூறும் ‘நாகரிகமான’ வார்த்தைதான், அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்துவது.

இந்த நோக்கத்திற்கு ஒரே ஒரு கொள்கை மட்டும்தான் இருக்கிறது. அது, கொள்ளையடிப்பது.

இந்த கொள்ளைக் கூட்டத்திற்கு தொழில் சுத்தம் வேண்டும்; அதில் வெற்றிபெறவும் வேண்டும். அதற்கு இக்கூட்டத்திற்கு ஒரு ‘நல்ல தலைவன்’ வேண்டும். ’பொன்மனச் செம்மல்’, ‘புரட்சித் தலைவர்’, ’இதய தெய்வம்’, ’புரட்சித் தலைவி’ போன்ற இந்த அருவருப்பான துதிக்கு பொருத்தமான, அடுத்த ’தலைவன்’ வேண்டும்.

அப்படி இவர்களால் அடையாளம் காணப்பட்ட ‘தலைவன்’தான் நடிகர் விஜய்.


படிக்க: விஜய் செயல்திட்ட அறிவிப்பு: தொழில் தொடங்கிடுச்சு வியாபாரிகள் வரலாம்


அவ்வப்போது, செல்லூர் ராஜு விஜய்-யைப் புகழ்வதும் அவரது திரைப்படங்களை தான் ’ரசிப்பதாகவும்’ ராஜு குறிப்பிடுவது இந்த வகையில்தான்.

ஆகையால், இன்று செங்கோட்டையன் ‘விஜய்’ கட்சியில் சேர்வது என்பது, நாளை இந்த அடிமைக் கூட்டத்தினரின் அணிவரிசையாகவும் மாறலாம்.

அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில்.

வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.

தலைவர்களின் ‘கொள்கை’ ஒத்துப்போவது போல, தொண்டர்களாகக் காட்டப்படும் ‘ரசிகர்களின்’ உணர்ச்சியும் ஒத்துப்போவது இங்கு, கவனத்திற்குரியது, ஆனால், வியப்புக்குரியதல்ல.

எம்.ஜி.ஆர்.யையும் ஜெயலலிதாவையும் ரசித்த அ.தி.மு.க.வினரின் ‘ரசிக’ உணர்ச்சியும், எம்.ஜி.ஆர்.யைப் போலவே ‘குருவி’ படத்தில் நடித்த விஜய்யை ரசிக்கும் ரசிகர்களின் உணர்ச்சியும் ஒன்றே.


படிக்க: அரசியல்வாதி விஜய்: ஓப்பனிங் சீன், மாநாடு


எதிர்பாருங்கள், எம்.ஜி.ஆருக்கு அரசியல் புரோக்கராக செயல்பட்ட ஆர்.எம்.வீரப்பனைப் போல, விஜய்க்கு செங்கோட்டையன் செயல்படலாம். அதற்காகவே அவருக்கு ‘அமைப்புச்  செயலாளர்’ – ’நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்’ போன்ற பதவி அளிக்கப்பட இருக்கிறதாம்.

ரசிகர் கூட்டமாக இருந்த விஜய் கட்சி, கட்சிக்குரிய கட்டமைப்பைப் பெறத் தொடங்கியிருக்கிறது. இது, அ.தி.மு.க.வின் இடத்தை இட்டு நிரப்ப முயற்சிக்கலாம்.

அ.தி.மு.க. என்பது, சினிமாக்களில் வரும் வில்லன் கூட்டம், கொள்ளையடிப்பதையும் கொடூரக் கொலைகள் செய்வதையும் ஆபாச கூத்தடிப்பதையும் அப்படியே அரசியலுக்கு கடத்தி வந்த கட்சி. அதன் புதிய அவதாரமாக, விஜய் கட்சி உருவாவதை வேடிக்கைப் பார்ப்பதைவிட தமிழ்நாட்டிற்கு அவமானம் வேறெதுவும் இல்லை.

இந்தப் புதிய ‘அ.தி.மு.க.’ வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுமா என பட்டிமன்றம் நடத்துகின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.

இந்தப் புதிய கொள்ளைக் கூட்டம், தேர்தலில் வெற்றி பெறுமா என்பது நமது கேள்வி அல்ல, அவர்களது கவலை. நமது கவலையெல்லாம், இந்த கொள்ளைக் கூட்டத்தை அரசியலில் நீடிக்க அனுதிக்கப் போகிறோமா என்ற கேள்விதான்.


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க