விஜய் செயல்திட்ட அறிவிப்பு:
தொழில் தொடங்கிடுச்சு வியாபாரிகள் வரலாம்
விஜய் அவரது செயல் திட்டத்தை 28 அம்சங்களில் அறிவித்துள்ளார்.
உடனே அவற்றை எடுத்துக் கொண்டு முற்போக்கு தன்மையுடன் விஜய் இருப்பதாக கூறிக்கொண்டு ஊடகங்களில் ஓரிரு நாட்கள் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
விஜயை சுற்றி வாதங்கள் இருக்க வேண்டும் என்பதை தாண்டி, இந்த அறிவிப்புக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அவரது நிர்வாகம் இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன்பு முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டை பாதிக்கின்ற எந்த கார்ப்பரேட் திட்டங்களையும் இவர் எதிர்க்கவில்லை.
இதுதான் தமிழ்நாட்டின் பிழைப்புவாத வாக்குவங்கி அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத அணுகுமுறை. அதுதான் விஜயின் வழிமுறை.
திமுகவை எதிர்ப்பதால் இது அதிமுகவுக்கு இணையான அணுகுமுறையாகும்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியின் பாத்திரத்தை விஜய் எடுத்துக் கொள்வதால், வழக்கம்போல இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளைப் போல முற்போக்கு சவடால் அடிப்பார்.
மாநாட்டிலேயே கூட்டணி பேரத்தை அறிவித்து விட்டார். ஆகையால் செயல் திட்டங்கள், கொள்கை என்று சொல்வதெல்லாம் மக்களின் கண்களில் மண்ணை தூவும் சவடால்களே.
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram