அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையானது நன்றி தெரிவிக்கும் நாளாக (Thanksgiving Day) ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அந்நாளன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதற்கு அடுத்த நாள் “கருப்பு வெள்ளி” (பிளாக் ஃப்ரைடே – Black Friday) என்று அழைக்கப்படுகிறது. அன்று நாடு முழுவதும் பொருட்களை வாங்குவதற்கான நாளாக, கிறிஸ்துமஸ் தினத்துக்கான வணிகத்தின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய நாளில் பலவகை தள்ளுபடிகளை வழங்கி வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்றுத் தீர்க்கும்.
2020 ஆம் ஆண்டு முதல், அந்த கருப்பு வெள்ளி நாளை அமேசான் தொழிலாளர்கள் தங்களின் போராட்ட நாளாக மாற்றியுள்ளனர். அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆண்டுதோறும் கருப்பு வெள்ளியன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை பல்வேறு நாடுகளில் உள்ள அமேசான் தொழிற்கிளைகளில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். “மேக் அமேசான் பே” (#Make Amazon Pay) என்ற பதாகைகளை ஏந்தி 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
யு.என்.ஐ. குளோபல் யூனியன் (UNI Global Union) மற்றும் புரோகிரஸிவ் இண்டர்நேசனல் (Progressive International) ஆகிய தொழிலாளர் கூட்டமைப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்கின்றனர்.
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள்
இந்தியா:
இந்தியாவில் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இருபது நகரங்களில் “மேக் அமேசான் பே” ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ₹26,000 வழங்க வேண்டும்; பணிப் பாதுகாப்பு; மேம்பட்ட பணிச்சூழல்; கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமேசான் தொழிலாளர்கள் முன்வைத்தனர்.


***
வங்கதேசம்:

***
பாலஸ்தீனம்:
பாலஸ்தீன அஞ்சல் சேவை ஊழியர் சங்கம் (Palestinian Postal Service Workers’ Union – PPSWU) இப்போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

***
நேபாளம்:

***
ஃபிஜி:

***
இந்தோனேசியா:
***
இவை தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, டென்மார்க், லக்சம்பர்க், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
![]()
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










