Saturday, August 2, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4214 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றார்.

கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!

2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.

செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!

நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

சிறுவணிகத்தை அழிக்கும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்குவோம்! | தோழர் ரவி

சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி...

எரிகிறது மணிப்பூர்: பற்ற வைத்தது காவி! | தோழர் அமிர்தா

மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல். அங்கு மெய்த்தி, குக்கி,...

பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!

கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் - உள்நாட்டுப் போர் - காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான்.

டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

"விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது" டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி

ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் | ஆர்ப்பாட்டம்

சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில்...

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட...

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.