வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | கோவை | செய்தி – படங்கள்

கோவை அரங்கக் கூட்டம்

சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!” என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ”வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்று அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் செப்டம்பர் 26 அன்று மாலை 5.30 மணிக்கு அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

ம.க.இ.க வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் பறையிசையோடு நிகழ்ச்சி தொடங்கியது.

கோவை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ராஜன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பின், மக்கள் அதிகாரம் தோழர் காந்தி வரவேற்புரை வழங்கினார். தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு வெளியீடு ஜனநாயக சக்திகளுக்கு வழங்கப்பட்டது.

தோழர்.சுசி கலையரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
தோழர் பன்னீர்செல்வம், சமூகநீதிக் கட்சி,
தோழர்.பார்த்தீபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்,
தோழர்.மலரவன், புரட்சிகர இளைஞர் முன்னணி,
திரு.முசிபுர் ரஹ்மான், தமுமுக
ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.டி.யு, மாநில பொதுச்செயலாளர் திரு.ரகூப் மிஸ்தார் அவர்கள் பேசும் போது “இந்த புரட்சிகர அமைப்புகள் எடுத்துள்ள செயல்பாடு நாட்டிற்குத் தேவையானது. பாசிசத்தை வீழ்த்த வீதிக்கு வர வேண்டும், போராட வேண்டும், பாசிசத்தை வீழ்த்த எப்போதும் மக்கள் அதிகாரம் அமைப்போடு நாங்கள் உடன் நிற்போம்” என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர்.அமிர்தா அவர்கள் எதனால் “வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கம் வைத்திருக்கிறோம் என்பதை விரிவாக விளக்கி பல்வேறு நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர்.வெற்றிவேல் செழியன் அவர்கள் “தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்ற மாற்றுத்திட்டம் குறித்தும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைந்தால் எப்படி இருக்கும் என்பதையும், மக்களுக்கு ஜனநாயகமாகவும், பாசிஸ்டுகளுக்கு சர்வாதிகாரமாகவும் இருக்கும்” என்பதை வலியுறுத்திப் பேசினார்.

உரைகளுக்கு இடையில் ம.க.இ.க வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “சனாதனம் ஒழிப்போம், வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம், சுற்றிவளைக்குது பாசிச்சப்படை, BAN BJP, BAN RSS” ஆகிய பாடல்கள் பாடப்பட்டன.

மக்கள் அதிகாரம் மண்டல இணைச் செயலாளர் தோழர் குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

கோவையை காவிகள் கைப்பற்ற கலவரம் செய்ய முயற்சித்து வருகின்றனர். அவ்வேளையில் ”வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கம் அவர்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த முழக்கத்தை வைத்துப் பிரச்சாரம் செய்தபோது அதிமுக உடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தோழர்களைத் தாக்கியது. இந்த முழக்கத்தை வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் போது “இவ்வளவு தைரியமாக கோவையில் பிரச்சாரம் செய்கிறீர்கள், இதற்கெல்லாம் தனி கட்ஸ் வேண்டும்” என்று பல்வேறு வார்த்தைகளில் மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் முழக்கத்திற்கு பெரும் ஆதரவும் வரவேற்பும் கொடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அரங்கக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.


தகவல்:
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க