புதிய ஜனநாயகம்
உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
நாட்டையே மறுகாலனியாக்கும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கம்
புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !
கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து எழுதிய கடிதங்கள், பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதழுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !
இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்
பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !
ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற அரசுக் கட்டமைப்பைத் தூக்கியெறிவதைத் தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறது பெருவின் போலி சோசலிசக் கட்சியான ‘‘சுதந்திர பெரு’’ கட்சி
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்
அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !
புதிய ஜனநாயகம் செப்டம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக நீண்ட நாட்களாக வெளிவராத சூழலில், இந்த மாதம் மீண்டும் வெளி வந்திருக்கிறது புதிய ஜனநாயகம் !
எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?
இந்தியாவில் கரோனா பரவலுக்கு டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் காரணமென்று கூறும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறுகளும் வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் பல்லிளித்துவிட்டன.
இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.
மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !
யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை
இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு
அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்
நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.
வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு
ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.
எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !
பொன் விடியல் என்ற நவீன நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக கிரீஸ் நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, அப்பாசிசக் கட்சியின் தலைவர்கள் கிரீஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.















