வினவு
இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் !
ஒவ்வொரு தோழரும் அமைப்பில் வந்து செயல்பட நீண்ட காலம் தேவைப்படுகிறது. வளர்ந்த தோழரை இழக்கும் போது அது அவர் குடும்பத்திற்கு மட்டுமன்றி இந்த பகுதிக்கு மட்டுமன்றி இந்த நாட்டிற்கே மிகுந்த இழப்பாகிறது.
ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.
தருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் !
ஏகதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பிறந்த நாளில் மீண்டும் தேசவிடுதலைப் போரை தொடங்குவோம்! என பு.மா.இ.மு சார்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
லென்ஸ் – புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?
மற்றவரின் அந்தரங்கத்தை ரசிப்போர் தமது அல்லது தன்னைச் சேர்ந்தோரது அந்தரங்கத்தை ரசிப்பார்களா என்று படம் கேள்வி எழுப்புகிறது. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கவில்லையா என்ற அதே கேள்வி.
அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !
‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.
மோடியின் சவுபாக்கியா – மக்களுக்கு ’சாவு தான் பாக்கியா ?’
தற்போது அனைவருக்கும் மின்சாரம் என மோடி அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க மின்சாரத்தைத் தனியார் கைகளில் கொடுக்கவே கொண்டு வரப்படுகிறது.
நோயாளிகளை காக்க வைத்து ’ரெப்’களோடு குலாவும் அரசு மருத்துவர்கள் !
எங்களால் அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்பதால்தான் நாங்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். ஆனால், இங்கு எங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். மருத்துவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். ஆனால், அவர்கள் எங்களை மதிப்பதில்லை
காஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !
மூத்த எழுத்தாளரும், தலித் இலக்கியவாதியும், பேராசியருமான காஞ்சா அய்லய்யா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார்.
கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்
இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை.
பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !
பொது சுகாதாரத்தின் பல்வேறு துறைகளைப் போலவே, மீட்பைக் காட்டிலும் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கே கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’காவி பயங்கரவாதம்’ - புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள். அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.
பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.
குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !
''மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.















