Friday, May 2, 2025

ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

0
ஆப்கான் பெண்கள் பொதுவெளிக்கு செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பதின்ம வயதுப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் அதிகரித்து வருகிறது.

நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!

"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் போலீசு கூட்டறிக்கையில் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

0
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.

பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!

கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில் பாசிஸ்டு மோடி!

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான...

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ....

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!

0
பாசிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற வேளையிலும், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலில் தீவிர அரசு ஒடுக்கு முறையை துச்சமாக மதித்து பத்தாவது வாரமாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நமக்கு இதை உணர்த்துகிறது.

துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!

0
1999-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எர்துவான் அரசு மேற்கொண்டிருக்கும் கைதுகளையும் இவ்வாறே நாம் காண வேண்டியுள்ளது.

பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!

0
தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா - கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது துருக்கி!

இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!

0
இந்தோனேசிய அரசின் தத்துவமான பஞ்சசீலம் (Pancasila) என்பதற்கு ஏதுவாக இல்லாத சித்தாந்தங்களை, அதாவது மார்க்சியம் கம்யூனிசம் போன்றவற்றை, பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

அரசுக்கு எதிராக மங்கோலிய மக்கள் போராட்டம்!

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!

பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.

அண்மை பதிவுகள்