Thursday, August 7, 2025
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை‌ முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.
இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் சகித்துக் கொள்ள முடியவில்லை உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை! தாங்கிக் கொள்ள முடியவில்லை உங்கள் (அ)ஹிம்சைகளை! காந்தியிடம் ஆரம்பித்தது ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது… துரோகத்தால் நாறுகிறது உங்கள் கைகளிலுள்ள ரோஜாப்பூ! துவண்டு கிடக்கிறது உங்கள் கரங்களில் தேசியக் கொடி! கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்.. ரோஜாக்களை செடியிலேயே மலர விடுங்கள்.. பாசிசத்தின் பாதங்களில் அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்! நரமாமிசம் சுவைக்கும் பற்களுக்கிடையில் என்ன தேடுகிறீர்கள் கருணையா..? பாசிஸ்டுகளே முகமூடிகளை கழற்றியபின் அவர்களுக்கு ஜனநாயக சாம்பல் பூசாதீர்கள்! பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல.. நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்! அதானி பற்றி...
அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியானது, இணையக் குற்றவாளிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இதுபோன்ற இணையக் குற்றங்கள் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும்.
பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.
காசாவில் இருந்து! எங்களின் கண்ணீரெல்லாம் கார்மேகமாகி இருந்தால், காணாமல் போயிருக்கும் இசுரேல் கடலுக்குள்… இதோ, காசாவெங்கும் ஆயிரமாயிரம் பிஞ்சுகளின் பிணக் கடல்… குண்டுவீச்சுகளில் சிதைபவை எங்கள் சிறுவர்களின் சிரங்களும் கரங்களும் தான், சிறகடிக்க விரும்பும் விடுதலைக் கனவுகள் அல்ல... சிரசில்லா சிறார்களின் சிதைந்த உடல்களைச் சிலுவையாய்ச் சுமக்கிறோம்; ஈரமில்லா வெறியர்களின் கொட்டம் அடக்கிட, மீண்டும் உயிர்த்தெழ வேண்டியே விதைக்கிறோம்... உரிமை மட்டுமா இல்லை என்றார்கள், ஒருவேளை உணவும் கூடத்தான்... பாலுக்கு ஏங்கும் பிள்ளை கண்டு, வடித்த கண்ணீர் வற்றியது கடந்த காலம்; இது, பாலூட்டும் அன்னைகளின் மார்புகளே வற்றும் காலம்! இனி கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது எங்கள் ரத்தமே! ஆனாலும், வற்றாது எஞ்சியிருக்கிறது, விடுதலை வேட்கை! ரத்தம் வடியினும் மண்ணில்...
ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்! சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்! கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை! நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல் உழைப்பவர்கள் அரசாக உதயமானது. இதனைப் பார்த்த...
நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை ஓடவும் வைக்கும்.
மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். "சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்" என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார், முத்துராமலிங்கம்

அண்மை பதிவுகள்