பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.
பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
அன்று காளைக்காக கூடிய மாணவர்கள் விவசாயிகளுக்காகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் கூட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்று நாங்கள் போராடுகிறோம்.
கருப்புப் பணம் என்பதை 'அந்நியன்' பட பாணியிலும் 'கந்தசாமி' பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.
குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தப்பட்டது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.
பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்... ஐம்பதாவது வார்டுக்கு... நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் ... தொடர் பாகம் 20 ...
புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...
தன் உத்தரவின் பேரில் வீசப்பட்ட குண்டுகளால் பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு அமெரிக்க அதிகாரி, எப்படி தன் குழந்தைகளிடம் அன்பாகப் பேச முடிகிறது? இத் திரைப்படம் அது குறித்த சித்திரத்தை வழங்குகிறது.
ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப்படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது.
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
தேசிய வளர்ச்சி விகிதம் பற்றி கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது.
மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர்.



















