சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
மொதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
முதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்

சென்னை தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் வெளியே சாலையில் டிராபிக் ஜாம்! ஜாம் என்றால் வாகனங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! இது மனிதர்கள் நீண்ட க்யூ வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட ஜாம். வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலையை அடைத்துவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக நீண்ட வரிசையில் சீமான்களும், சீமாட்டிகளும் திவ்யமாக நிற்பதற்கு என்ன காரணம்? எட்டிப் பார்த்தால் திருப்பதி தேவஸ்தான கோவிலின் சென்னை பிரான்ஞ்ச் முன்னால்தான் இந்த கூட்டம். திருப்பதியைத்தான் கெடுத்தார்கள் என்று பார்த்தால் இப்போது சென்னையிலுமா?

ஜெயாவின் நகர உலாவுக்காக நிறுத்தப்படும் டிராபிக்கை வைத்து ஹிந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் மிஸ்டர் கோபக்கார அம்பிகள் இதை கண்டு கொள்ளாமல் போகும் மர்மம் என்ன? மிஸ்டர் வெங்கடாசலபதியின் பவரும், பந்தாவும் அந்த அளவுக்கு பக்தகோடிகளை கட்டிப் போட்டிருக்கிறதோ?

தமிழகத்தில் இருக்கும் பெரிய கோவில்களில் ஒரு ஐம்பது சதவீதம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும். பல ஏக்கர் பரப்பளவில் மலைக்குன்று போல ஆக்கிரமித்திருக்கும் அந்த சிவன் கோவில்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். கற்பாறையோ, மலையோ இல்லாத தஞ்சை மாவட்டத்தில் தொலைவிலிருந்து சிகரங்களை கொண்டு வந்து கோவில் கட்டி எத்தனை பேர் குடியை அழித்தார்களோ தெரியவில்லை. ஆனால் இப்படி மனித உழைப்பை, இரத்தத்தை உறிஞ்சி வீற்றிருக்கும் இந்தக் கோவில்களில் மக்கள் கூட்டத்தை என்றுமே பார்க்க இயலாது. வௌவால்களும், காணிக்கைக்கு வழியில்லாமல் சிவனே என்று காலத்தை ஓட்டும் டுபாக்கூர் ஐயர்களையும் தவிர ஒரு காக்கா குஞ்சைக் கூட அங்கே காண இயலாது.

இப்படி இந்தியாவில் பல கோவில்களும், கடவுளர்களும் கஞ்சி குடிப்பதற்கே காய்ஞ்சி போயிருக்கையில், வெங்கி மட்டும் ஒய்யாரமாக ஸ்காட்சு குடித்து வருகிறார். பக்தர்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை கடவுள் ஏன் படைத்தான் என்று நாத்திகர்கள் இனியும் கேட்க முடியாது போலும். கடவுளர்களிலேயே இப்படி அப்பட்டமான கார்ப்பரேட் முதலாளிகள், ஏதுமில்லாத அனாதைகள் என்று வந்துவிட்ட போது நாம் எப்படிப் பிரச்சாரம் செய்வது?

இந்தியாவின் கருப்புப் பணம் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பது இருக்கட்டும். இங்கேயே அந்தக் கருப்புப் பணம் திருட்டு முதலாளி பக்தர்களால் திருப்பதிக்கு வாரி வழங்கப்படுவதை யாரும் கண்டு கொள்ளவில்லையே? திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம் போடுபவன் பரலோகம் போவான் என்று சும்மானாச்சும் எழதிக்கூட வைக்க வில்லையே? அல்லது திருப்பதிக்கு பணம் தருபவன் அதை கணக்கு காண்பிக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த கணமே மிஸ்டர் வெங்கட் லிபர்டி தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி.

சாலையோரம் இருக்கும் தொந்திப் பிள்ளையாரையெல்லாம் போகிற போக்கில் விஷ் பண்ணிவிட்டு கன்னத்தில் ரெண்டு போட்டுக் கொள்ளும் காரியவாத பக்தர்கள் திருப்பதியில் மட்டும் கால்கடுக்க நிற்கிறார்கள். வார இறுதி நாட்களில் சராசரிரியாக ஒரு இலட்சம் பக்தர்கள் வந்து சேவித்து விட்டு செல்கிறார்களாம். அதிலும் மிஸ்டர் வெங்கட்டை பார்ப்பதற்கு பணத்திற்கேற்ற தரிசன முறை வைத்திருக்கிறார்கள். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். ரூ.300 கட்டணத்தில் கும்பிட விரும்புவர்கள் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். திவ்ய தரிசனம் செய்பவர்கள் ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம்.

இப்படி வேலை வெட்டி இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சும்மா நின்று பொழுதை விரயமாக்கும் விசயம் உலகில் எங்காவது உண்டா? இந்த பக்தர்கள் இதே நேரத்தில் ராஜஸ்தானில் புல் வளர்க்கும் திட்டத்தில் உழைப்பைச் செலவிட்டால் தார் பாலைவனம் சோலைவனம் ஆகுமே? இதில் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வரிசையில் நிற்கும் போது தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையாம். அதற்காக இனி அந்த வரிசை கம்பார்ட்மெண்டுகளில் தாய்ப்பாலுக்கென்று தனியறை கட்டப் போகிறார்களாம். ஒரு வேளை அந்ந கியூ வரிசை நெரிசலில் யாராவது மண்டையை போட்டுவிட்டால் வைகுண்டத்துக்கு ஷார்ட் கட்டாக அங்கேயே சுடுகாட்டையும் ஏற்பாடு செய்வார்களோ? இதையெல்லாம் சுருக்கென்று தட்டிக் கேட்க பெரியாரில்லையே?

சரி, இனி தலைப்பில் உள்ள கொடூரமான சம்பவத்திற்கு வருவோம்.

மாலை முரசில் வந்த செய்தி இது. ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரிபேட்டையைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படிப்பவள், பெற்றோரோடு ஏதோ சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். பேருந்து நிலையம் வந்தவள் அங்கு இருந்த திருப்பதி பஸ்ஸில் ஏறி வெங்கட் வசிக்கும் ஊருக்கு வந்துவிட்டாள்.

திருப்பதியில் தகவல்மையம் அருகே என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை, திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு என்ற ஐம்பது வயதுக்காரன் அழைத்துச் செல்கிறான். வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் அவளது நிராதாரவான நிலையை புரிந்து கொண்டு ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொடுக்கிறான்.  பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.

பின்பு அந்தச் சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பித்து வெளியே வருகிறாள். அங்கு ஒரு ஏட்டு விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை அறிகிறார். பிறகு அந்தச் சிறுமி போலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பெற்றோரும் அழைக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகிறாள். போலிசாரும் வழக்கு பதிவு செய்து  மிஸ்டர் வெங்கட்டின் செக்யூரிட்டி டில்லி பாபுவை கைது செய்கிறார்கள். அவனது வேலையும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.

இதனால் மிஸ்டர் வெங்கட்டின் இமேஜூக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இரண்டு இலட்சம் ரூபாயை அந்த சிறுமிக்கு வழங்குகிறார்கள். மேலும் அவளது பெற்றோருக்கு திருப்பதி கோவிலில் ஒரு கடையை ஒதுக்கி வியாபாரம் செய்வதற்காக கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்

திருப்பதியில் கற்பழிக்ப்பட்டால் இவ்வளவு சன்மானம் கிடைக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. என்ன இருந்தாலும் பணக்காரக் கடவுள் இல்லையா?

டில்லி பாபு யார்? லார்டு லபக்தாஸ் பெயரால் அவரது சொத்துக்களையும், கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு செக்யூரிட்டி. வழிதவறி வந்த ஒரு பச்சப்புள்ளயை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஒரு பாதுகாவலன் கொடூரமாக கற்பழித்திருக்கிறான் என்றால்? அந்த கற்பழிப்பை தடுத்து நிறுத்த வக்கில்லாத மிஸ்டர் வெங்கட் அந்த நேரத்தில் என்ன மயிரா பிடுங்கிக் கொண்டிருந்தார்? இதில் உலகளந்த பெருமாள், உக்காந்து முழுங்குன திருமால் என்ற பில்டப் வேறு.

ஒருவேளை மிஸ்டர் வெங்கட் தனது ஒன்னுவிட்ட மைனர் அவதாரம் புகழ் கிருஷ்ணன், கோகுலத்தில் செய்த லீலையாக நினைத்து மகிழ்ந்திருப்பாரோ? பிட்டுப் படம் பார்ப்பவனெல்லாம் எப்படியைய்யா கடவுளாக இருக்க முடியும்? ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் இந்த வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ?

ஒன்று கடவுள் பவர் உள்ளவர் என்றால் இந்த கொடுமையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளே தள்ளப்பட வேண்டும். ஏனெனில் இங்கே குற்றமிழைத்திருப்பது மிஸ்டர் வெங்கட்டின் பாடிகார்டுகளில் ஒருவன். சீதையை தொட்டுக்கூட துன்புறுத்தாத இராவணனுக்காக இலங்கையையே எரித்த ராமன், திரௌபதி கூந்தலையும், சேலையையும் இழந்தாள் என்பதற்கு கௌரவர்களது நாட்டை பூண்டோடு அழித்த கிருஷ்ணன் இன்னபிற அவதார அம்பிகளெல்லாம் இப்போது எங்கே போனார்கள்?

அந்த 14 வயதுச் சிறுமி ஒரு ஏழை என்பதால் கண்டுகொள்ளவில்லையா? இல்லை தேவநாதன் போன்ற மன்மதன்களெல்லாம் காமபூஜை செய்யும் நாட்டில் ஒரு செக்யூரிட்டி கற்பழிப்பையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது என்ற சங்கோஜமா? என்ன எழவாக இருந்தாலும் மிஸ்டர் வெங்கட் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் குற்ற வழக்கில் உள்ளே போகவேண்டும்.

டில்லிபாபுவை சஸ்பெண்ட் செய்தும் இரண்டு இலட்சம் ரூபாயை வீசியும் வாயை அடைக்க முயன்ற தேவஸ்தான அதிகாரிகள் முதலில் திருப்பதி வெங்கட்டை கைது செய்திருக்க வேண்டும். “நானே கடவுள், நானே மனிதன், நானே டில்லி பாபு, நானே செக்யூரிட்டி, நானே கற்பழிப்பு” என்ற கீதை லாஜிக்படியும் அந்த ஆளை கைது செய்திருக்க வேண்டும். சோத்தில் உப்பைப் போட்டு சாப்பிடும் சுரணையுள்ள பக்தர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பக்தி என்பது காலணாவுக்குக்கூட அருகதை இல்லாத வெத்து வேட்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் வீட்டில் சண்டையிட்டுவிட்டு பஸ்ஸேரும் பிள்ளைகள் யாரும் திருப்பதிக்கு சென்று விடாதீர்கள். ஏதாவது கோவில் இல்லாத ஊருக்குச் சென்று விடுங்கள். குறைந்தபட்சம் மானமாவது மிஞ்சும்.

133 மறுமொழிகள்

 1. அவர் பணக்காரக் கடவுள்…. ஏழைகளுக்கு உதவி செய்ய மாட்டார்….

 2. இது வெளிவந்த செய்தி. வெளியில் வராத செய்திகள்?..

  லட்சங்கள் பறிமாறுவது இது முதல் தடவையாகத்தான் இருக்கணுமா?..

  மிஸ்டர் வெங்கட், மிஸ்டர் ஜீஸஸ் க்கு எல்லாம் வேற வேலையில்லையா?..

  அதுக்கெல்லாம் நரகம் , சொர்க்கம் என்ற கோர்ட் இருக்குன்னு சமாதானம் ஆயிடணும்..

  • தப்பு தப்பு இப்படியெல்லாம் பேசபிடாது அப்புறம் சாமி வினவு கண்ணை குத்திடும் அதுஅதுக்குண்னு பரிகாராம் இருக்குலியோ அந்த பரிகாரத்தை பண்ணின்டா அந்த தோசமெல்லாம் நாசமா போயிடுண்னா

   அபிதோ கற்பழிப்போ நம அதில் பகவானுக்கும்
   பங்குண்டு நம ஸர்வே அதெல்லாம் கிருஹ்ன
   லீலை நம எல்லாத்தையும் பண்னின்டு
   தட்டுல ரூவா போட்டா எல்லா பாவமும்
   போயிடும் சுவாஹா சுவாஹா சுவாஹா

   அப்படிண்னு தினமும் 108 முறை வினவு சொல்ல வேண்டும் இப்படி ஒரு கட்டுரை எழுதி பகவான் வெங்கியை பற்றிய தேவ ரகசியத்தை சொல்லியதற்கு வினவுக்கு அதுதான் தண்டனை

 3. அம்பிய ஏன்டா வம்புக்கு இழக்கிறீர்…. அது தெலுங்கு கொல்டிய கேளும் ஓய்….

 4. கட்டுரையின் முதல் பாகத்தில் இருந்த கேலியை ரசித்துப் படித்தேன். பின்பகுதி மனதை கனக்கச் செய்துவிட்டது.

 5. உங்கள் குற்றச்சாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன், நிராகரிக்கிறேன்! நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றியதுமாபெரும் குற்றமா? அருள் பாலித்தாலும் குற்றம், அருள் பாலிக்காவிட்டாலும் குற்றம். என்ன தான் செய்ய சொல்லுகிறீர்கள் வினவு?

  நன்றி
  வெங்கடாசலபதி
  திருமலை

 6. சிந்திக்க வேண்டிய பதிவு, கடவுள் இருந்திருந்தால் அங்கே இந்த தப்பு நடந்திருக்குமா? நல்ல அருமையான கருத்துகளைத் தந்துள்ளீர்கள். நன்றி.

  • சகோதரி கடவுள் இருந்திருந்தால் அங்கே மட்டும் இல்லை. உலகில் என்கும் தப்பு நடக்காது

 7. அச்சிறுமி போன ஜென்மத்தில் ஏதாவது பாவம் செய்திருப்பாள். அதற்குத்தான் வெங்கடாஜலபதி தன் இடத்திற்கு அவளை வரச்செய்து செக்யூரிட்டி மூலமாக தண்டனை கொடுத்துவிட்டார் என்று பக்திப்பெருமான்கள் பதிலளிக்கக் கூடும்!!

 8. எல்லாம் சரி, திருப்பதி வெங்கட் பெயரை கெடுக்கரோம்ன்னு சொல்லிக்கிட்டு, அந்த சின்ன பெண்ணொட வாழ்க்கையை வீணடிக்காதீங்கப்பா.
  நீங்க சொல்றது நல்ல விஷயமாவே இருந்தாலும், தெவையில்லத அசிங்கமான வார்த்தைகளை உபயோகபடுத்தாமல் கொஞ்சம் நாகரீகமா பேசினால் தெவலை.

   • ஏன்? தமிழில் உரைக்கும்படி சொல்வதற்க்கு நல்ல சொற்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடு வந்துவிட்டதா? இல்லை வினவு தோழருக்கும், உமக்கும் நல்ல சொற்க்கள் தெரியாதா?

  • பீயை பீ என்று சொன்னாலும் மலம் என்று சொன்னாலும் அது அதுதான். அதுக்காக அதை பன்னுக்குள்ள வச்ச ஜாம்முன்னா சொல்ல.

   • நீ கடவுள் இல்லைன்னு தெரியும், இப்பதான் நாகரீகம் இல்லாத மனுஷன்னு தெரியுது.
    உன் வழியிலேயெ உனக்கு சொல்றேன்.
    விபச்சாரி கிட்ட படுத்தாலும் சுகம் கிடைக்கும், பொண்டாட்டி கிட்ட படுத்தாலும் சுகம் கிடைக்கும் அதுக்காக பொண்டாட்டிய விபச்சாரின்னு சொல்ல முடியுமா? இல்ல விபச்சாரியதான் பொண்டாட்டின்னு சொல்ல முடியுமா?

 9. //இனிமேல் வீட்டில் சண்டையிட்டுவிட்டு பஸ்ஸேரும் பிள்ளைகள் யாரும் திருப்பதிக்கு சென்று விடாதீர்கள். ஏதாவது கோவில் இல்லாத ஊருக்குச் சென்று விடுங்கள். குறைந்தபட்சம் மானமாவது மிஞ்சும்//

  அருமையான கட்டுரை…ஆணித்தரமான கருத்துக்கள்…வாழ்த்துக்கள் வினவு!!

  கற்பழிப்பதற்கு முன்னாடியே உண்டியலில் காணிக்கை செலுத்தியாசே…அப்பேர்ப்பட்ட பக்தரை எப்படி தண்டிக்க முடியும்.

  இத்தகைய செய்திகளை போலிசு எப்போதும் போல மூடி மறைக்காமல் வெளியாகியிருப்பதே உலகில் எட்டாவது அதிசயம்…

 10. @ ரிஷி/வினவு

  அது மட்டுமல்லாமல், அந்த செக்யூரிட்டி அடுத்த ஜன்மத்தில் சிறுமியாகப்பிறந்து வருவான்; அந்த சிறுமி செக்யூரிட்டியாக பிறந்து இந்த ஜன்மத்தில் நடந்ததிற்க்காக பழி வாங்கலாம். இன்னொரு முறை இந்த மாதிரி கற்பழிப்புகள் நடந்தால் இது போல பாசிடிவாக think பண்ண கற்றுக்கொள்ளுங்கள் வினவு…வீணாக வெங்கி மீது பழி போடாதீர்கள்…பிசினஸ் கேட்டு போயிட்ட நீங்களா நட்ட ஈடு கொடுப்பீங்க…

 11. //இதில் உலகளந்த பெருமாள், உக்காந்து முழுங்குன திருமால் என்ற பில்டப் வேறு.//
  அந்தச் சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? அந்த செக்யூரிட்டிக்கு கடுமையான தண்டனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு லட்சம் ரூபாய், கடை வைக்க உதவி என்று லஞ்சம் கொடுத்துவிட்டு அப்புறம் சும்மா சஸ்பெண்ட் ஆட்டம் ஆடும் தேவஸ்தான போர்டை மக்கள் கண்டித்துப் போராட்டம் நடத்த வேண்டும். ஏழுமலையானின் சன்னிதானத்தில் தான் நீதியில்லை கோர்ட்டிலாவது நீதி வழங்க வழி செய்யவேண்டும்.

 12. அது சரி., இப்ப நீங்கள் சொன்னவுடன் அங்கே கூட்டம் குறைத்துவிட போகிறதா? சரி சொல்வது நமது கடமையல்லாவா ……. சரி சரி இது இருந்துவிட்டு போகட்டும்!

 13. அட முட்டால் வினவு, அப்ப எல்லா மஷுதிநடக்கும் தப்புகலுக்கு அல்ல துக்கு பொடக்கு ….

  • இவ்ளோ கஷ்டப்பட்டு இன்னாத்துக்கு தமிழ்ல டைப்பனும்?, இங்கிளிபீஷ்லயே பினாத்தலாம்ல..

 14. சரியான சாட்டை அடி புதியநோக்கம் இன்னொரு பெரியார் தாங்கள்.வாழ்த்துக்கள்

  • ஆகா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்த டம்மி பீசா பெரிய ஆளா ஆக்கீருங்கப்பா..

 15. ஒரு பணக்கார (உயர்ஜாதி) பக்தரின் குழந்தைக்கு இப்படி திருப்பதியில் நடந்திருந்தால் மீடியாக்கள் ஒரு வாரம் இதை பிரித்து மேய்ந்து விடுவார்கள் எந்த பேப்பரை திறந்தாலும் தலைப்பு செய்தியே இதுவாய்தான் இருக்கும் வெங்கி மீது கேஸ் போட்டாலும் போடுவார்கள்.ஏழை சாதி என்பதால் தான் அந்த ஊர்காரனுக்கே தெரியவில்லை. அம்பானி குழந்தைக்கு நடந்தால் தான் கற்பழிப்பு குற்றத்திற்கு மிகக்கடுமையான சட்டங்கள் அடுத்த நாளே கொண்டு வருவார்கள்…….ஆகவே நாம் காத்திருப்போம்.

  • Siva, Bautham matrum Kristhavathirkkum pira mathangalukkum oru verubaadu undu. Intha iru mathangalum bothanaigal sariyaga ullana. avatrai uruvaakiya Buthar matrum Yesuvin vaazhkaiyum sariyaaga ullathu. aanaal antha mathathai pinpatruvor elloraiyumpola thavaru seikindranar. atharkku antha mathangalai kutram solla mudiyaathu.

   aanal, hindu mathathai poruthavarai, oruvan 100 pondaati kattuvathu, oru pen 5 purushan kattuvathu, kadavulgaley vanpunarchiyil eedupaduvathu ena verum saakadaithan ullathu. Islamilum athey saakadai naatramthan. athai silar akthar thelithu maraikka muyalkiraargal. Intha mathangalil seiyappadum thavarugalukku intha mathangalum oru vagaiyil kaaranamaagindrana.

   In short, SOME Christians and Buddhists commit horrible crimes and inhuman acts because they are NOT following their religions correctly.

   SOME Hindus and Muslims commit horrible crimes and inhuman acts like terrorism, polygamy, child marriage etc because they ARE following what their religions teach.

 16. உங்கள் அக்கறை அந்த சிறுமி பற்றியது அல்ல.உங்களுடைய கொள்கையை பரப்புவது.கடவுள நம்பிக்கை உள்ளவர்களும் இந்த வன்செய்கையை கண்டிப்பார்கள்.ஆனால் உங்களுக்கு அச்சிறுமியின் துயரம் கூட உங்களுக்கு பிடிக்காத சாமியையும், பிடிக்காதவர்களையும் திட்ட ஒரு வாய்ப்பாக தெரிகிறது. எத்தகைய ஒரு குரூர புத்தி உங்களுக்கு.

  • உங்கள் அக்கறை அந்த சிறுமியின் பாற்பட்டது அல்ல. புண்ணிய ஷேத்தரம் ஒன்றில் ஆண்டவன் சன்னிதானத்தில் நடந்து விட்ட கொடுமை காரணமாக இறை நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப் படக்கூடாது என்பதற்காக டில்லிபாபு, தேவஸ்தானம், ஏழுமலையானை விடுத்து வினவை குரூர புத்தி என்று அழைத்து சுய திருப்தி அடைகிறீர்கள். எல்லாவற்றிலும் பாசிட்டீவாக பார்க்கும் இந்தியனானா உங்க்ளால் இதை மட்டும் அப்படி பார்க்க முடியவில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்பது எமது வார்த்தையல்ல. இந்த சம்பவத்தை பக்தர்களும் கண்டிப்பார்கள் என்று எளிதாக ஒரு பக்தி சுற்றுலா தொழிலை, ஏமாற்றை, சுரண்டலை, எளிமையாக கடந்து செல்கிறீர்கள். உங்களுக்கு தேவை மக்கள் இளித்தவாயர்களாக இருப்பது. எங்களுக்குத் தேவை மக்கள் விழிப்புணர்வு பெறுவது. மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

   • ஏழுமலையானை போட்டுத்தாக்கியிருக்கும் அதே நேரத்தில், டில்லிபாபுவின் குரூர புத்தியையும் – பொதுவில் மனித வர்க்கத்தின் மனங்களிடையே புதையுண்டிருக்கும் ஆழ்மன வக்கிரங்களையும் சாடியிருக்கலாம். சக மனிதருக்கு இதுபோல பாலியல் ரீதியான துன்பம் இழைப்போருக்கு அவர்களது பாலியல் விருப்பையே நீக்குமளவிற்கு ஹார்மோன் ஊசி போடுவதுதான் அவர்களுக்கான தண்டனை – என்பதாக சட்டம் இயற்றி அதை செயல்படுத்துவதையும் வலியுறுத்தியிருக்கலாம். ஒன் சைடாக மிஸ்டர் வெங்கட்டை மட்டும் கிழித்திருக்கிறீர்கள்.

   • இவ்வளவு பேசுகிற வினவு வீட்டுக்குள் சென்றுப் பார்த்தால் நடப்பது தெரியும். உபதேசம் ஊருக்குத்தான்…

     • ஆமா அவரு பெரிய பிரம்ம சூத்திரத்தை விளக்கி சொல்லிட்டாரு இதுக்கு ஒரு ஆமாம் சாமி வேறயா?

      ஒரு பேச்சு நான் வெங்கடேசு வூட்டுக்குள்ள சாராயம் காச்சுராருன்னு சொன்னா
      ”சரியாக சொன்னீர்கள் நண்பா!” அப்படின்னு எனக்கும் காவடி தூக்குவீகளோ?

      தாங்க முடீலடா சாமீ….

      • அவரு சாரயம் காய்ச்சுவது உண்மைன்னா ஆமாம் என்று சொல்வேன், இல்லைன்னா உம்மை பார்த்து புளுகு மூட்டை என்பேன்.
       தாங்க முடிலடா சாமீ…யா…..?
       எந்த சாமீ தொழா? திருப்பதி வெங்கடெசனா? நீங்களுமா…..?

       அதுசரி, காவடி தூக்க சொல்றீங்களே…
       நீங்க என்ன பழனி முருகனோ?
       பாத்துங்க எவனாவது எதாவது பண்ணபோயி உங்கள தலைப்பு செய்தியில போட்ரபோறங்க….?

  • Wonderfully said. These people trying to propagate the concept that they believe in. What happened was a grave sin and the perpetrator has to be punished the maximum for that. Rest all shows your crooked interest in twisting a tale to propagate yourselves.

  • அந்த சிறுமி உங்கள் மகளோ அல்லது உங்கள் தங்கையாகவோ இருந்திருந்தால் கூடவா இன்னும் அந்த பொம்பளை பொறுக்கி கடவுளுக்கு (கண்ணனாக கோகுலத்தில் எத்தனை பெண்களின் மானத்தை கெடுத்திருக்கிறான். த்தூ…அதை வேறு நியாயப்படுத்தி சொல்கிறீர்கள்) சப்போர்ட் பண்ணி பேசுவீர்கள் ,காலாகண்டன். அமாம் ஆமாம் காஞ்சீபுரம் தேவனாதன் கருவறையிலேயே சாமான் போட்டுவிட்டு சாமி மேல் போட்டிருந்த துணியையே எடுத்து சாமானை துடைச்சி மீண்டும் சாமி மேல போட்டப்போ அப்போ என்ன செஞ்சிது அந்த சாமி ?

   • Sariyaaga Soneergal,

    Aanal appadi ondru nadakume aanal,
    Kadavulin kirubai petra pakkiyasaali nu solli
    andha pennaiyum theivam aakuvargal…

    Avargal appadi than….

 17. apparam Kartharum allavum enna vijayakanth madhiri nermayana police karangala illa sivaji the boss mariya Pera kettavudane summa adhirudhilla … appadiya ella kollakaranum, kolakaranumbayandhu odi poradhukku???.. Konjam suthi paaruya en kannyakumari, nagercoil pola christians neraya vazhura oorla crime nadakarethe ilaya?..

 18. உணர்ச்சிகரமான நாத்திக வாதம். அதுவும் திருப்பதி வெங்கடாஜலபதியைக் குறிவைத்து. ஒரு சிறுமி அனாதையாக வந்தாள்.அவளை என்ன செய்தாலும் கேட்க நாதி கிடையாது என்ற நன்கு தெரிந்தவுடன் அவளை வன்புணர்ந்தானொருவன். இதுதான் கதை.

  ஆனால் இக்கதை நடந்தவிடமே மிகப்பூதாகரமாக உங்களுக்குத் தோன்றிவிட்டது. சிதம்பரம் பத்மினிக்கு இதைவிட பயங்கர கொடுமை நடக்க, அரசு வேலையும் நட்ட ஈடும் கொடுத்தது. ஒரு பெண் இரயில் வண்டியில் வன்கொடுமை செய்யப்பட்டு அவள் கீழே குதித்து தன் காலை இழந்து விட்டாள் உ.பியில். மத்திய அரசு இரயில்வே இலாகாவில் வேலை கொடுத்தது. உ பி அரசும் வேலையும் பணமும் கொடுத்தது. ஆங்கு உங்கள் உணர்ச்சிகள் பிரயோகம் வேறுமாதிரி சென்றிருக்கும். மனிதர்களைத்தான் பிடித்து விளாசுவீர்கள்.

  ஆனால் இங்கே ஆரும் பார்க்கமுடியாத கேட்க முடியாத பேச முடியாத திருப்பதி வெங்கடாஜலபதியைப் பிடிக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால், உங்களால் இல்லை என்று சொல்லப்பட்ட கருதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட கடவுள் வரவேண்டும்; தட்டிக்கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவரைக்கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று சொல்வது எவ்வளவு பித்தலாட்டத்தனம் !

  வினவு, மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தை மனிதர்கள்தான் நிறுத்தவேண்டும். கடவுள் அல்ல. இது கூட உங்களுக்குப்புரியவில்லையா ?

  அம்பிகள் அட்டகாசம் கடவுள் பெயரால் செய்தால், தாக்கப்படவேண்டியது, அம்பிகளா கடவுளா?

  தேவநாதன் கருவறையில் புணர்ந்தால் மச்சேசுரவரர் எப்படி பொறுப்பாவார் வினவு ?

  • தேவநாதன் கருவறையில் புணர்ந்தால் மச்சேசுரவரர் எப்படி பொறுப்பாவார் வினவு ?
   ____________________

   தப்பு செஞ்ச தேவனாதன் கண்ணை குத்தாம ஓசில பிட்டு படம் பாத்தாரா இல்லயா?

   தேவநாதனை விடுங்க..

   சைடு கொண்டைங்க நந்தனை எரிச்சு கொன்தை நடராசன் வேடிக்கை பாத்தாரா இல்லையா?

   போங்க பாஸ், நாத்திகத்தை டிசெக்ட் செய்வதற்கு முன்னால் கொஞ்சம் பெரியாரை படிச்சிட்டு வாங்க, அப்பத்தான் நிதானமா சிந்திக்க முடியும்.

   • நேத்து 18 பேர் செத்ததை அல்லாவும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாராம் மாமேஸ்வர். டிரைவரோட ஸ்டியரிங்கை வளைச்சு ஒடிச்சு தன் பக்தர்களைக் காப்பாற்றியிருக்க வேணாமா? மச்சேசுவரரும் இப்படித்தான், நடராசனும் இப்படித்தான், அல்லாவும் இப்படித்தான், கர்த்தரும் இப்படித்தான்!!! இந்தக் கடவுளர்களே இப்படித்தான்.. குத்துங்க எஜமான்.. குத்துங்க..!

  • சரியாச் சொன்னீங்க . ஆத்திகவாதியக் காட்டிலும் நாத்திகவாதி தான் ரொம்ப நேரம் கடவுளைப் பத்தி பேசுறான். என்னதான் வினவு கரடியாக் கத்தினாலும் அவனுக மாறப் போறதில்லை.

  • அமலன்,
   வினவு கடவுள் இல்லைனு சொல்லல… இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றார்!

   ஆதாரம் : ஒன்று கடவுள் பவர் உள்ளவர் என்றால் இந்த கொடுமையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

   • ரிஷி வினவு இந்தக் கட்டுரையை பக்தர்களுக்காக எழுதியிருக்காங்க. எல்லா நாத்திகபிரச்சாரமும் அப்படித்தான். பக்தர்களை பொறுத்தவரை அவர் இருக்கார்னுதானே நம்பராங்க, அப்ப அந்த மொழியிலதான் எழுதனும்.

  • ஜோ அமலனை ஆதரிக்கிறேன். உலகமெங்கும் பாதிரியார்கள் கன்யாஸ்திரிகளையும், சிறுவர்களையும் சிறுமிகளையும் சர்ச்சுக்குள்ளேயே ஏசு கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்னாலெயே வைத்து பாலுறவு பலாத்காரம் செய்தார்கள். செய்கிறார்கள். இதற்கு இயேசுவின் பூலோக பிரதிநிதி என்று சொல்லிகொள்ளும் போப்பாண்டவர் கூட உடந்தை. ஜீவனுள்ள கடவுள் என்று சொல்லிகொள்ளும் இயேசு கிறிஸ்து கூட இந்த பாதிரிகளையும் சிறுவர் சிறுமிகளை கற்பழித்த கன்யாஸ்திரிகளையும் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு தெமே என்று தொங்கிகொண்டிருக்கிறார். அதற்காக கிறிஸ்துவை கைது செய் என்றா எழுதமுடியும்?

   • சரியான பதில் (ஜோ.அமலன்-க்கு மட்டும்!)

    To Jo.Amalan

    கடவுளால் குருடன் பார்வை பெற்றான், ஊமை பேசினான் என்று ஆத்திகன் சொல்லும் போது, கடவுள் கண்ணெதிரே சிறுமி வல்லுறவு செய்யப்பட்ட போது அதை அந்தக் கடவுள் தடுத்தால் தான் என்ன என்று நாத்திகன் கேட்பதில் தவறு என்ன இருக்கிறது?

    • இது நாத்திகர்கள் அனைவருக்கும்.

     பாதிரி யேசுவின் நாமத்தினாலே என்று சொல்லி வன்புணர்ச்சி செய்கிறான். முசுலீம் மெளனாலா அல்லது அவர்கள் பாதிரி ஏழை மக்களை மாந்திரிகம் சொல்லி ஏமாற்றுகிறான். அல்லாவின் பெயரால் பெண்களை விலங்கிட்டு வைக்கிறான்; இந்து சாமியார்கள் கடவுள் பெயரைச் சொல்லி பணம் பறிக்கிறான். பெண்களை பயமுறுத்தி வன் புணர்கிறார்கள்.

     அதைச் செய்வார் இதைச்செய்வார் கடவுள் என்று சொல்லும் இவர்களின் குற்றங்களை கடவுள் ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை?

     இந்தக்கேள்விக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டோர் கடவுள் இருக்கிறார்; அவர் சர்வ வல்லமை படைத்தவர் என்று நம்புவோர் மட்டுமே.

     கடவுள் இல்லை என்னும் நாத்திகர்கள் எப்படி இந்தக் கேள்வியை எழுப்ப முடியும் என்பதுதான் என் வாதம்.

     • //இந்தக்கேள்விக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டோர் கடவுள் இருக்கிறார்; அவர் சர்வ வல்லமை படைத்தவர் என்று நம்புவோர் மட்டுமே.//

      ஆக, கடவுளை நம்புபவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை என்கிறீர்கள். (மறைமுகமாக)

      //கடவுள் இல்லை என்னும் நாத்திகர்கள் எப்படி இந்தக் கேள்வியை எழுப்ப முடியும் என்பதுதான் என் வாதம்.//

      நாத்திகனும் கேள்வி கேட்க கூடாது என்கிறீர்கள். (நேரடியாக)

      இப்போது உங்கள் வாதத்தின் அபத்தம் புரிகிறதா? 🙂

      • TO Paacist :

       Konjam nandraaga padiyum

       //இந்தக்கேள்விக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டோர் கடவுள் இருக்கிறார்; அவர் சர்வ வல்லமை படைத்தவர் என்று நம்புவோர் மட்டுமே.//

       Indha kelvikku bathil solla kadamai pattor yendru thaane solli irukkiradhu..

       Ungalai Kelvi ketka koodathu yendru yenge Solli irukkiradhu??

  • in the name of God, in the place of God, by the servants of God, to the children of God………. now what is the role of God, she left her parents and wanted to seek asylum in the residence of (so called) God and there it happends to her like this. if it happens to your own sister or own daughter you will feel in a different way; it happened to a girl and that too she is poor. here that target of the author is not single rather multiple. that are…..an irresponsible individual, who is supported by an unjust society with all its legal structures and unwritten norms in the name of idiotic cultures, which is basically caste and class ridden, which is the basic problem of all in the indian context, which is not at all addressed by this (so called) almighty and all present. instead of God saving people, here people like you save God.

   etthana periyaar vantthaalum maaravé maatteengalaa? etthana vinavin pathivuhal vanthaalum yoasikkavé maatteengalaa?

   thiruppathi venkatta vida
   dilli baabuva vida unga koduma thaaga mudiyala.

   britto

 19. En sir, ippo devanathan bit pakkurarunu sonnenga sari karthar vandhu kaapathalamla.. illa vera engavadhu balana padathukku poiirunnthara? kettu sollunga mameswar sir vinavu kitta

  • சிவா, அது என்ன பொம்பளை பொறுக்கி சாமியெல்லாம் பொந்து மதத்துக்கு மட்டும்தான் சொந்தமா? திருச்சபை மேட்டர்லாம் தெரியாதா? போய் கட்டுரைக்கு கீழே ரிலேடட் போஸ்ட் லிங்க் கொடுத்திருக்காங்க பாருங்க அதப்படிங்க

   • வினவுக்கோ எந்த நாத்திகனுக்கோ கடவுளை மறுப்பதில் பிரச்சனை இல்ல, ஆனா ஒங்க பொந்து மத சாமியை திட்டினா ஒடனே அவன் மட்டும் யோக்கியமான்னு கேக்காதீங்க ரொம்ப கேவலமா இருக்கு. ஒரு பக்தனா உமக்கு அக்கறை இருந்தா இந்த அநியாயத்துக்கு எதிரா குரல்குடுக்கும் முதல் ஆள் நீங்களாத்தான் இருக்கனும், அதை விட்டுட்டு ஏன்யா கழுவாம வந்தேன்னு கேட்டா அவன் மட்டும் கழுவுனானான்னு கேட்டா என்னாத்த சொல்ல? காலைச் சொன்னேன்…

 20. மூன்று + மூன்று = ஏழு என்று கரும் பலகையில் எழுதப்பட்டிருந்தால், காரி உமிழப்படவேண்டியது, கரும்பலகையல்ல.
  கணக்கு வாத்தியார்!
  இந்தக் கட்டுரை ஒரு தேர்ந்த பெரியாரிஸ்ட் அல்லது வினவின் வகுப்பில் கடைசி பென்ச் ஆள் கொட்டாவி விட்டுக்கொண்டே எழுதினாற்போலுள்ளது.
  கருத்து சரிதான். ஆனால் ஆல்பர்ட் எய்ன்ஸ்டினின் புத்தகத்தில், அவரே ஒரு ஆத்திசூடிக்கு விளக்கம் எழுதினாற்போலுள்ளது…!

 21. Can you made the same kind of criticism against Alla. (alla means God in arabic. Not muslim god). You will never. Hindus have no value in their own land. Hence people like you are degrading your own people. It is your mistake if you imagine Venki is your personal body guard. Thiruppathi Devasthaanam never ever force any one to visit and donate. God is only a concept. Try to understand what is god before comment like this

  • கவலையே வேண்டாம் கிங்ஸ்லி. நேற்று குஜராத்தில் புகழ்பெற்ற தர்காவிற்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் சாலையோரம் படுத்து தூங்கியிருக்கின்றனர். 18 பேர் லாரியில் சிக்கி உயிரை விட்டிருக்கின்றனர். அந்தோ பரிதாபம்! தன்னை நோக்கி வந்தவர்களின் உயிரைப் பறித்து அல்லா தன்னிடமே சேர்த்துக்கொண்டார் போலும்! அகமதாபாத் போலிஸார் அல்லாவை தேடிவருகின்றனராம்!!

 22. Just a suggestion..
  கற்பழிப்பு என்ற ஆண்டாண்டுகால ஆணாதிக்க அடிவார்த்தையைத் தவிர்க்கலாமே நீங்கள்.

 23. இந்துக்கடவுள்களை நையாண்டி செய்வதில் அப்படி என்ன ஒரு சுகம். நாத்திகத்தின் சரியான அர்த்தத்தை புரிந்துகொள்ளாத பலரில் நீங்களும் ஒருவர் போல. எத்தனை முறை தொண்டை கிழிய கூவினாலும் ‘கடவுள்’ இருப்பதை உணர்ந்த மக்கள் இதை எல்லாம் சட்டை செய்ய மாட்டார்கள். தொடர்ந்து கூவவும்!!

 24. அன்பின் வினவு தோழர்கள் ,

  பெண்களுக்கு ‘கற்பு’ ன்னு ஒரு பொருள் இருப்பதாக பார்பனிய வாதிகள் நம்புவது போல் வினவும் நம்பியுள்ளது வருத்தத்துக்குறியது…:((

  நியாயமாகப் பார்த்தால் ‘பாலியல் வன்புணர்வு’ என்று தான் தலைப்பில் இருக்கனும், ஆனால் நீங்க கற்பழிப்பு ன்னு எழுதி இருக்கிறீர்கள்.

  இத்தகவலை சுட்டிக்காட்டிய கோவியாருக்கு நன்றியும்..

  வினவு இத்தலைப்பை மாற்ற வேண்டுகிறோம்..

  நன்றி..

  • சாந்தி, கடவுளை கைது செய்னு வினவு சொல்லிட்டதினால கடவுள் இருக்கார்னு நம்பும் ஆத்திகர்கள் போல வினவும் நம்பிவிட்டதுன்னு கோவியார் கேக்கலயா? அவர் ஞானத்துக்கு இன்னேரம் கேட்டிருக்கனுமே.

   என்னோட இந்தக் கேள்வி உங்களுக்கு புரிந்தால் போதும். கோவியாருக்கு புரிய வைக்க அந்த எல்லாம்வல்ல ரெட்பையர்ரவியால்தான் முடியும்

   • அரசன் சோப் ,

    கற்பு என்ற வார்த்தையே பெண்ணடிமைக்காக ஏற்படுத்தப்பட்டதென்கிறபோது , அதை ஏன் நாம் பழக்கப்படுத்தணும்?..

    • சாந்தி, கற்பு மேட்டரை விட கடவுள் மேட்டர் பெருசு, வினவு கடவுளை கைது செய்னு ஏன் சொல்லனும்? அப்ப கடவுள் இருக்கார்னுதானே அர்த்தம்? இப்படிக்கூட யாரோ கேட்டிருக்காங்க.
     இதுக்கு என்ன பதில் சொல்வீங்க?

     கட்டுரையில் இப்படி ஒரு வரி

     //பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.//

     இதை ஏன் இப்படி எழுதியிருக்காங்க?

 25. //கடவுளை கைது செய்னு ஏன் சொல்லனும்? அப்ப கடவுள் இருக்கார்னுதானே அர்த்தம்?//

  இதை Sarcastic அல்லது Ironic criticism னு எடுத்துக்கலாம்..( saying usually the opposite of what is meant )

  ஆனால் கற்பு என்ற வார்த்தையே மொத்தமா பெண்ணை அடிமைப்படுத்தும்விதமாக உள்ளதே..

 26. //பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.//

  கற்பு னு ஒண்ணு இருந்தால் தானே அழிக்க?..

  ஆக இது வன்புணர்வு..

  • கற்பு னு ஒண்ணு இருந்தால் தானே அழிக்க?..

   கடவுள்னு ஒண்ணு இருந்தால் தானே கைது செய்ய? இப்படி நீங்க ஏன் கேட்கவில்லை

   ஒரு விசய்தை படிக்கும் போது மொத்தமா படிச்சு புரிந்துகொள்ள வேண்டும். தனித்தனியா சொற்களை பார்த்தால் விசயங்கள் தலைகீழாத்தான் புரியும். மையப்பொருளை ஏற்றுக்கொள்ள கசக்கும் ‘அறிவு ஜீவிகளுக்கு’ வார்த்தையை பிடித்து தொங்கும் விளையாட்டு புதிதல்ல. வினவை இதற்காக விமர்சனம் செய்யும் முன்னர் மேலே மாமேஸ்வர் சொன்னது போல பெரியாரை படிக்கவும். (வள்ளலாரையும் பெரியாரையும் மிக்சிங் செய்து கட்டிங் விடுபவருக்காக இதை சொல்லவில்லை)

 27. கடவுள்னு ஒண்ணு இருந்தால் தானே கைது செய்ய? இப்படி நீங்க ஏன் கேட்கவில்லை //

  See , I totally understand and agree with your explanation. But God is something universal..

  ஆனா கற்பு என்ற கற்பிதம் நம் நாட்டில் மட்டும்தான்..:((

  கடவுள் , மதம் என்ற பேரில் நல்லதே நடக்கலை என முற்றிலுமாக சொல்லிட முடியாது..

  நம்பிக்கையோடே , நல்லவராய் வாழ்ந்தும் சுற்றியிருப்போரை நல்லோரை ஆக்கியவருமுண்டு..கடவுள் பேரில் சேவைகள் நடக்குது ஆங்காங்கே..மறுப்பதற்கில்லை..

  இருப்பினும் விழிப்புணர்வு கொண்டு வருவதும் நன்றே..

  நிற்க..

  ஆனால் கற்பு என்பதெல்லாம் பெண்ணை ஒரு சக மனுஷியாகவே நினைக்காமல் அவளை இழிவுபடுத்தி ஒதுக்கவே ஏற்படுத்தியது என்ற எண்ணம் வருது..

  பெண்ணுரிமைக்காக போராடும் வினவு இதை இனிமேலாவது தவிர்க்கணும்..

  வருத்தத்துடன்..:(

  • கற்பு னு ஒண்ணு இருந்தால் தானே அழிக்க?..

   கடவுள்னு ஒண்ணு இருந்தால் தானே கைது செய்ய? இப்படி நீங்க ஏன் கேட்கவில்லை //

   கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.. அந்த நம்பிக்கை அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடாதவரை பிரச்னையில்லை..கடவுள் இருக்கார் இல்லை என எவரும் நிறுவமுடியாது..நல்லதும் கெட்டதும் இருக்கு..அந்த நம்பிக்கையில்..ஆன்மீகத்துக்கான ஒரு வழியாக மதம் இருக்கிறது.. நல்ல ஒரு ஆன்மீகவாதி எவருக்கும் தொந்தரவு தருவதில்லை..

   ஆனால் கற்பு என்பது ஒரு நம்பிக்கை அல்ல.. வெத்து கற்பிதம் மட்டுமே.. எவருக்கும் பிரயோசனமில்லை..அழிவு மட்டுமே.. பெண் என்பவள் மீண்டும் மீண்டும் அடிமை என்ற ஆணாதிக்க மனோபாவம் மட்டுமே..

  • சாந்தி

   1) வினவு கற்பு என்பதை பெண்ணுக்கு அவசியம் என்று பிரச்சாரம் செய்து வருவதைப்போல நீங்கள் கருதுகிறீர்கள் அல்லது அப்படிப்பட்ட அவதூறை நம்பி இங்கே விவாதிக்கிறீர்கள். நீங்கள் இதை மறுக்கலாம் ஆனால் உங்கள் விவாதம் என்பது அதைத்தான் செய்கிறது

   2) வினவு இதற்கு முன்னர் பாலியல் வன்முறை – பாலியல் வண்புணர்வு என்ற சொற்றொடர்களை பயன்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கற்பு என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கடவுளையும் கற்பையும் நம்புவர்களுக்காக எழுதப்பட்ட இந்த கட்டுரையில் கற்பு என்ற சொல் இடம் பெறுவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

   3) வெறும் இணைய அரட்டையோடு இல்லாமல் மக்களிடையே வேலை செய்பவர்கள், அவர்களிடத்திலேயே பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் மக்கள் மொழிலேயே பேசுவதுதான் ஒரே வழி.

   4) கடவுள், கற்பு உள்ளிட்ட எல்லாமே மனிதனை சுரண்ட மதங்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள்தான். இதில் ஒன்று உசத்தி ஒன்று தாழ்நதது எல்லாம் இல்லை. உங்களுக்கு மதம்-கடவுள் நம்பிக்கை உள்ளது அதனால் ஒரு சாப்ட் கார்னரோடு அணுகுகிறீர்கள். அதே நேரத்தில் விமர்சனங்களை ஜனநாயக பூர்வமாக அனுகுவது நல்ல விசயம். வாழ்த்துக்கள்

   சில விசயத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னமே சொன்னேன் அதை மீண்டும் சொல்கிறேன்

   • குறிப்பாக கடவுளையும் கற்பையும் நம்புவர்களுக்காக எழுதப்பட்ட இந்த கட்டுரையில் கற்பு என்ற சொல் இடம் பெறுவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

    3) வெறும் இணைய அரட்டையோடு இல்லாமல் மக்களிடையே வேலை செய்பவர்கள், அவர்களிடத்திலேயே பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் மக்கள் மொழிலேயே பேசுவதுதான் ஒரே வழி. //

    —–

    உங்கள் கோணம் புரிகிறது..

    • உங்களுக்கு மதம்-கடவுள் நம்பிக்கை உள்ளது அதனால் ஒரு சாப்ட் கார்னரோடு அணுகுகிறீர்கள். //

     முன்பு அதிகமாக இருந்தது உண்மையே..

     ஆனால் இப்ப இல்லை.. இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களோடே பழகி வந்தமையால் ஒரு மிக அருமையான சூழல் நல்லெண்ணம் கொண்டவரோடு இருந்தது என்றும் மறுப்பதற்கில்லை..( நல்ல , பாஸிட்டிவ் , நேர்மறை எண்ணங்கள் , அதிர்வுகளில் நம்பிக்கை உண்டு )

     என்னைப்பொறுத்தவரை ஒரு மோசமான நாத்திகனே மத வெரியனாகவும் இருக்கக்கூடும் . அழிவை தரக்கூடும். ஏன்னா அவனுக்குத்தான் சுத்தமா கடவுள் பயம்னு ஏதுமிருக்காது..

     மற்றபடி கடவுள் வருவார் , காப்பாத்துவார், நம் ஜெபத்தை கேட்பார் என்ற நம்பிக்கை சுத்தமா இல்லை..

 28. jmms,
  இக்கட்டுரையின் பிரதியை என் மனைவிடம் காட்டி விவாதித்துக்கொண்டிருந்தேன். அவரைப் பொறுத்தவரை, “கடவுள் என்பது ஒரு உணர்வு. கோவிலுக்குச்சென்றாலோ, மனமுருகி வேண்டினாலோ மனதில் சில நேரங்கள் ஏற்படும் பார உணர்வு குறைந்தாற்போன்று உணர்கிறேன். அவ்வளவே! சில நேரங்களில் அப்படிச் சென்றும் மனதினில் பாரம் நீடிப்பதை உணர்கிறேன். அப்பேர்ப்பட்ட தருணங்களில் தாய், கணவன், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்போது அப்பாரம் நீங்குவதைக் கண்டிருக்கிறேன். உறவுகளினால் கிடைக்கும் உணர்வு, உறவுகளுக்கு அப்பாற்பட்ட கடவுளினால் ஏற்படும் உணர்வு இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.” என்று கூறிக்கொண்டே போகிறார். நீங்கள் சொல்வதுபோல யாருக்கும் தொந்தரவு இல்லாதவகையில் நமது கடவுள் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை.

  • உறவுகளினால் கிடைக்கும் உணர்வு, உறவுகளுக்கு அப்பாற்பட்ட கடவுளினால் ஏற்படும் உணர்வு இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்//

   அதனால் தான் மன அழுத்தமுடையோர்க்கு இடமாற்றம் பரிந்துரைப்பது..சில மனிதர்கள் , சில இடங்கள் , சூழல் அமைதி தரும் என்பது உண்மை..மதசார்பற்ற தியான இடங்கள் சொல்லலாம்.

   • jmms என்னை உங்களுக்கு ஞபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருமுறை உங்களுடன் விவதித்தபோது உங்களிடம் இருந்த மதபற்று குறைந்துள்ளது.

    • jmms என்னை உங்களுக்கு ஞபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருமுறை உங்களுடன் விவதித்தபோது உங்களிடம் இருந்த மதபற்று குறைந்துள்ளது.//

     நன்றிங்க..

     கற்கும் மாணவிதான் நான்..

     மாற்றம் ஒன்றே மாறாதது..

     ( ஆனால் இன்னமும் மதம் என்ற சமூக கூடத்தின் மீதான நம்பிக்கை குறையவில்லை.. கடவுள் நம்பிக்கை குறந்தாலுமே.. உதாரணத்துக்கு பாலியல் தொழிலை விட சொல்லுமுன் அவர்களுக்கான மாற்று என்ன வைத்துள்ளோம் என யோசிக்கணும்.. அதே தான்.. மதத்திலிருந்து முற்றிலுமாக வெளிகொணர , அதே நம்பிக்கை/மன நிம்மதியை வேறு எப்படி வழங்கலாம் எனவும் யோசிக்கப்படணும்.. போரிலும் , வறுமையிலும் இருக்கும் மக்கள் பலர் இன்னமும் நம்புவது அந்த இல்லாத கடவுளைத்தானே?.. )

     • //உதாரணத்துக்கு பாலியல் தொழிலை விட சொல்லுமுன் அவர்களுக்கான மாற்று என்ன வைத்துள்ளோம் என யோசிக்கணும்..//

      நடுவீட்டில் மலம் நாறுகிறது. முதலில் அதை அப்புறப்படுத்து என்று சொன்னால், அந்த இடத்தில என்ன வைக்க வேண்டுமென முடிவு செய்தபின் தான் அதை அப்புறப் படுத்துவேன் என்று சொல்லுவது தான் அறிவுடமையா? – பெரியாரிடமிருந்து.

      • அந்த இடத்தில என்ன வைக்க வேண்டுமென முடிவு செய்தபின் //

       தவறா புரிஞ்ச்சிட்டீங்க..

       இங்கே நீங்க சொல்லும் மலத்தை அப்புறபடுத்திடமுடியாது..

       எல்லா பாலியல் தொழிலாளிகளையும் கொன்றிடலாமா?..

       மீண்டும் முளைக்க மாட்டார்கள் என என்ன நிச்சயம்?..

       உலகின் கடைசி ஆண் இருக்கும்வரை பாலியல் தொழில் இருக்கும்..

       ஆக எல்லோரும் ( ஆணும் ) மலமே .

 29. இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இரண்டு வருடங்களுக்கு முன் இதைக் கிறுக்கியது சாட்சாத் அடியேன்தான்!! :-))

  http://www.nilacharal.com/ocms/log/08170907.asp

  நான் உணர்ந்தவற்றை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

  • வாழ்க்கையின் அர்த்தத்தை (meaning of life) உணர்ந்து விட்டாலோ அல்லது ( வாழ்க்கையின் நோக்கம் (purpose of life) தெரிந்து விட்டாலோ//

   அதேதான் ஆன்மீக தேடல் ரிஷி..

   ஆன்மீகம் என்பது கடவுள் சார்ந்ததல்ல ( அப்படி சில கார்ப்பரேட் சாமியார்கள் ஏமாற்றுவதுண்டு . ஆன்மீக அமுது , ஆன்மீக அற்புதங்கள் என )

   நம்மை நாம் உள்தேடுவதே ஆன்மீகம்.. இதுக்குன்னு எங்கேயும் போகவேண்டியதில்லை.. நம்மை சுற்றியிருக்கும் சூழல் , மக்கள் போதும் ஆராய..

 30. // (வள்ளலாரையும் பெரியாரையும் மிக்சிங் செய்து கட்டிங் விடுபவருக்காக இதை சொல்லவில்லை)
  //

  பெரியார் கம்யூனிச கொள்கையை கடைசிவரை தாங்கிப் பிடிக்கவில்லை, அதிலிருந்து வெளியேறி திராவிட இயக்கம் கண்டார், நீங்களெல்லாம் பெரியாரையும் கம்யூனிச கொள்கைகளையும் மிக்சிங் செய்யும் போது பெரியாரே போற்றிய வள்ளலாரை மிக்சிங் செய்தது என்ன தவறாம்?

  கற்பழிப்பு என்ற தலைப்புச் சொல்லுக்கு மீண்டும் இங்கே கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்

  • ஆமா பெரியார் திராவிடர்களை கண்டார்
   கோவி பார்ப்பனிய அதிமுகவை கண்டார்

   பெரியாரிய பார்ப்பனிய காக்டெயில் – வெரி வெரி கோவி வெரி வெரி குட்
   —————-
   மத்தபடி பெரியார் கம்யூனிசத்தை ஏற்காமல் போனது பெரிய விசயமில்லை ஆனால் திகவும் இன்னபிற திக-முகக் களும் சமரச/பிழைப்புவாதிகளாக சாயம் வெளுத்து போன நிலையில் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் பெரியாரின் கொள்கைகளை இன்னமும் உயிரோடு வைத்திருப்பதுதான் பெரிய விசயம்.