ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.
புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.
கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும்.
தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.
இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.
நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: காலை 11 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பதிவு செய்யாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. ஆனால், போராடும் மக்களின் பக்கம் நின்று களச் செய்திகளையும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விரிவாக விளக்கும் காணொளிகளையும் வினவு யூடியூப் சேனல், சமூக ஊடகப் பக்கங்களில் தோழர்கள் பதிவு செய்து வந்தனர்.
தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.
தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.
சரவணனும் அவனுடைய சகோதரர் லோகேஷ் இருவரும் சாதிவெறி தலைக்கேறி சிறுவனின் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரவணன் என்பவன் சிறுவனின் சாதியைக் குறிப்பிட்டு இழிவான முறையில் வசைபாடிக் கொண்டே அடித்துள்ளான்.