Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 44

நீங்கள் இன்னும்….! | கவிதை

நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்..‌.
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் சேரிகளை எரித்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் பிணங்களை பொதுப் பாதையில் கொண்டு செல்ல விடாமல்
தடுத்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
உங்கள் குப்பைகளையும் கழிவுகளையும் அள்ள
எங்களை மட்டுமே கை காட்டுகிறீர்கள் ‌…

நீங்கள் இன்னும் இன்னும்
இதுபோன்ற வன்முறைகளைச்
சளைக்காமலும் சலிக்காமலும் மகிழ்வோடோ அல்லது மறைமுகத்தோடோ
தொடரும் போது…

எங்களுக்கிழைத்த அநீதிகளை
அன்றாடம்
நாங்கள் பேசும்போது
மட்டும்
உங்களுக்கு ஏன் அத்தனை சலிப்பு..!

இன்னும் இன்னும் உரக்கப் பேசுவோம்
உலகின் மூலைமுடுக்கெல்லாம்
கேட்கும்படி உரக்கப் பேசுவோம்
உங்கள் மனசாட்சியை உலுக்கும்படி
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
உரக்கப் பேசுவோம்…


ஏகலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ரூட் மோதல்: என் தம்பிக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது – உயிரிழந்த மாணவரின் சகோதரி

ரூட் மோதல்: என் தம்பிக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது
– உயிரிழந்த மாணவரின் சகோதரி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



நிலக்கரிச் சுரங்கத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் – போலீசு துப்பாக்கிச்சூடு | தோழர் ரவி

ஜார்க்கண்ட்: நிலக்கரிச் சுரங்கத்திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் – போலீசு துப்பாக்கிச்சூடு

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி அரசால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் “தி கேரவன்” | “The Caravan” under threat from Modi government

மோடி அரசால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் “தி கேரவன்” 
“The Caravan” under threat from Modi government

காணொளியை பாருங்கள்1 பகிருங்கள்!!

ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | புமாஇமு ஊடகவியலாளர் சந்திப்பு

ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
– RSYF ஊடகவியலாளர் சந்திப்பு

பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை | Revolutionary Student And Youth Front | Student Murder

🔴LIVE:மாணவர் தேர்தலை அரசு ஆதரிக்க வேண்டும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி செய்தியாளர் சந்திப்பு!.

route THALA – After Samsung union now the TN government STOPS college students UNION

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

🔴LIVE: ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | ஊடகவியலாளர் சந்திப்பு

🔴LIVE: ரூட் மோதல்கள்:
மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
ஊடகவியலாளர் சந்திப்பு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

இரயில்வே: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மறுக்கும் மோடி அரசு!

இரயில்வே: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை
உருவாக்க மறுக்கும் மோடி அரசு!

சாந்தக்குமார்,
மக்கள் அதிகாரம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்! உயரும் நாட்டு மக்களின் வறுமை! | தோழர் சாந்தக்குமார்

உயரும் அம்பானி-அதானி சொத்துக்கள்!
உயரும் நாட்டு மக்களின் வறுமை!

தோழர் சாந்தக்குமார்,
மக்கள் அதிகாரம்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை | SC-ST ஆணையத்தில் புகார் | வீடியோ

மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை
SC-ST ஆணையத்தில் புகார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் சேமிப்பை களவாடும் மோசடி

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:
அரசு ஊழியர்களின் சேமிப்பான ரூ.10 இலட்சம் கோடியை
களவாடும் மோசடி

ன்றிய அரசு தனது ஊழியர்களுக்கென்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என்றும், தேசிய ஓய்வூதியத் திட்டம் என்றும் இரண்டு ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறையிலுள்ள நிலையில், மூன்றாவது ஓய்வூதியத் திட்டம் ஒன்றை மோடிக் கும்பல் கொண்டுவந்துள்ளது. எதற்காக இந்த மூன்றாவது ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது? இது யாருடைய நலனுக்கானது? என்பதை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, அரசின் திட்டம் என்கிற வகையில் உழைக்கும் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம்

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme – OPS) என்பது காலனிய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்ததாகும். 1947-க்கு பிறகும் அப்படியே தொடர்ந்து வருகிறது. அது, வரையறை செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Defined Benefit Pension Scheme) என்கிற வகையை சேர்ந்ததாகும்.

அதனடிப்படையில், அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் 50 சதவிகிதத் தொகை, அதற்கு அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். அவரது இறப்பிற்குப் பின் அவர் 67 வயது அடையும் வரை இதே அளவு ஓய்வூதியமும், அதன் பின்னர், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் அவரது இணையருக்கு வழங்கப்படும்.

மேலும், ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் (அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி (DA)) 10 சதவிகிதத் தொகை பொது சேமநலத் திட்டத்திற்காக (General Provident Fund – GPF) பிடித்தம் செய்யப்படும். இந்த சேமநல நிதி அதற்கென தனியே இயங்கும் ஊழியர்களுக்கான சேமநல நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation – EPFO) மூலம் வங்கிகள் மற்ற பிற அரசு தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இறுதியில் ஊழியர் ஓய்வு பெறும் நாள் வரையிலான வட்டியுடன் சேர்த்து கணிசமானதொரு தொகை வழங்கப்படும்.

இது தவிர, ஓர் அரசு ஊழியரின் பணி ஓய்வுக்கு பின் அவரது பணிச்சேவைக்கு சன்மானம் என்கிற வகையில், ஓர் ஆண்டு பணிக்கு அரை மாதச் சம்பளம் என்கிற முறையில் கணக்கிடப்பட்டு (அதாவது 30 ஆண்டு பணி சேவைக்கு 15 மாத ஊதியம்) ஊழியர் ஓய்வு பெறும் நாளில் கருணைத்தொகையாக (Gratuity) வழங்கப்படும்.

அந்தக் கருணைத் தொகைக்கான உச்ச வரம்பு, 2016-ஆம் ஆண்டு வரையிலும் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயாக இருந்தது. பின்னர், 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒன்றிய அரசு 20 லட்சம் ரூபாயாக அதனை உயர்த்தியது. தற்போது, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதனை 25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் முழு பலனைப் பெறுவதற்கு ஓர் அரசு ஊழியர் 20 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். பணியாண்டுகள் குறைவதற்கு ஏற்ப இந்த பலன்களும் அதற்குரிய விகிதத்தில் குறையும். அதேசமயம் அதன் குறைந்தபட்ச பலனை பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் எனப்படுவது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

இதில் ஊழியர்களிடமிருந்து மாதாந்திரமாக பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவிகித சேமநல நிதிக்கு மட்டுமே “இ.பி.எஃப்.ஓ.” பொறுப்பேற்கும். மற்றபடி கருணைத்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான நிதிப் பொறுப்பை அரசே முழுமையாக ஏற்கும்.

இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வாழ்வை உத்தரவாதப்படுத்தும் விதமாக இருந்தது. இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் உட்கூறுகளை சரியானபடி உள்வாங்கிக் கொள்வது அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களின் சாதக பாதகங்களை புரிந்துக் கொள்ள உதவியாக அமையும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த இப்பழைய ஓய்வூதியத் திட்டமானது, 01.01.2004 அன்று இதே பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. “ஒரு கோடிக்கும் கூடுதலான ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் என்பது ஒரு கட்டத்தில் பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கூடிக் கொண்டே செல்கிறது. 20 ஆண்டுகள் அரசுப் பணி செய்த ஒருவருக்கு அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியம் வழங்க வேண்டியிருக்கும். இது நாட்டு மக்களின் மீது ஏற்றப்படும் சுமையாகும். எனவே, கண்டிப்பாக இவ்வொய்வூதியத் திட்டத்திற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்” என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது.

அந்த வகையில், அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் ஒரு தொகையைப் பிடித்தம் செய்து, அப்படிச் சேர்ந்த தொகையை கொண்டு தொகுப்பூதியம் போன்ற ஒன்றை ஓய்வூதியமாக வழங்கலாம் என்று உலக வங்கி மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் அரசியல் பொருளாதார ஆலோசகர்கள், வல்லுநர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை உள்ளடக்கி, தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme – NPS) என்ற பெயரில் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில், பழைய திட்டத்தில் இருந்த, ஓய்வு பெறும் ஊழியருக்கு இறுதியாக அவர் பணியிலிருந்தபோது பெற்ற மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் என்ற முறை ரத்து செய்யப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கென்று இரு வேறு ஓய்வூதியத் திட்டங்கள் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருப்பது அநீதி என்றும் முன்னெப்போதையும் விட தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு மாற்றாக, மாதந்தோறும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து சேமநலநிதி என்று 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் தொகையுடன் அரசு தன் சார்பில் 10 சதவிகிதம் (இந்தத் தொகையை 2019-ஆம் ஆண்டு 14 சதவிகிதம் என்று உயர்த்தியது) தொகையை ஊழியர் கணக்கில் சேர்க்கும்.

ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் 60 சதவிகிதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும். மீதமிருக்கும் 40 சதவிகிதத் தொகையை அந்தந்த ஊழியர் விருப்பம் தெரிவிக்கும் அரசு அங்கீகரித்திருக்கும் சில அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் (எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ…) அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.

அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகைக்கு அந்த நிறுவனம் வழங்கும் வட்டி தொகையானது அந்த ஊழியருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த ஓய்வூதியத் தொகை என்பது மிகவும் சொற்பமான அளவில் அதாவது பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான அளவிலேயே இருக்கும். மற்றபடி கருணைத்தொகையானது பழைய முறையிலேயே தொடரும். இதுவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் சாரமாகும். இது ஊழியர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributary Pension Scheme- CPS) என்றும் அழைக்கப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம்: வாஜ்பாயி அரசின் சூழ்ச்சி

நமது சமூகத்தில், சாதாரண மக்களைப் பொறுத்தவரை அரசுப்பணி என்பதுதான் வாழ்க்கை உத்தரவாதத்திற்கான ஒரே வழியாகவும், ஓய்வூதியம் என்பது ஒருவருக்கு மரணம் வரை கண்ணியமான வாழ்வை உத்தரவாதம் செய்வதாகவும் கருதப்படுகிறது.

எனவே, ஓய்வூதியம் ரத்து செய்யப்படுமானால் அதை அரசு ஊழியர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாதென்று அரசு நன்கு உணர்ந்திருந்தது. ஆகையினால் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் அரசு அன்றைக்கு ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகின்ற அன்று ( 01-01-2004) வரையிலும் அரசுப் பணியில் உள்ள ஊழியருக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தாது என்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேரும் புதிய ஊழியர்களுக்கு மட்டுமே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று அரசு ஊழியர்களை பிரித்தாலும் சூழ்ச்சியோடு தனது திட்டத்தை அறிவித்தது.

அன்று, அரசு ஊழியர் சங்கங்கள் அனைத்தும் சந்தர்ப்பவாத நிலை எடுத்து அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசை நிர்பந்திக்கும் வகையில் எதிர்ப்போ போராட்டமோ இல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டன. அதன் மூலம் அன்றைய சங்கத் தலைமைகள் எதிர்கால ஊழியர்களின் நலனை அரசிடம் அடகு வைத்தன.

நெருக்கடியும் அதனை எதிர்கொள்ளும் கார்ப்பரேட் சதித்தனமும்

இன்றைக்கு, 2004-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் ஓய்வு வயதை எட்டவில்லை. இதுவரை ஓய்வு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. ஏறக்குறைய அனைவரும் இனிவரும் உடனடி ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். இந்நிலையில்தான் ஓய்வூதிய திட்டம் குறித்தான கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கென்று இரு வேறு ஓய்வூதியத் திட்டங்கள் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருப்பது அநீதி என்றும் முன்னெப்போதையும் விட தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் எனும் கோரிக்கையும் பழைய ஓய்வூதியமே தம் வாழ்வை உத்தரவாதப்படுத்தும் என்ற கருத்தும் அரசு ஊழியர்கள் அனைவரின் உணர்வுபூர்வமான நிலைப்பாடாக மாறி நிற்கிறது.

இதனால்தான், “இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது ஐந்து மாநிலங்களில் (ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகியன) புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. மேற்கு வங்க மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னமும் அப்படியே நடைமுறையில் இருந்து வருகிறது. கேரளாவும் தமிழ்நாடும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்காக அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறார்.

இச்சூழலில்தான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க. அரசிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு,  ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கும் டி.வி.சோமநாதனால் வகுத்துக் கொடுக்கப்பட்ட திட்டம்தான் புதிதாக, வந்திருக்கும் மோசடியான “ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமாகும்”.

தற்போது நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பாசிசக் கும்பல் தன்னுடைய பிம்பத்தை தூக்கிநிறுத்த இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் கோரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் சிறந்தது என்றும், இதனால் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும் என்றும் கதையளக்கிறது.

அதோடு, அரசு ஊழியர்களின் கவனத்தைக் கவர்ந்திடும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சில அம்சங்களை மட்டும் எடுத்துக்காட்டுகிறது. சான்றாக, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதம் ஊதியம் வாழ்நாள் முடிய ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறிப்பிடுவதாக கூறுகிறது.

ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நுட்பமாக பார்க்கும் போதுதான் பாசிச பா.ஜ.க. அரசின் கேடான உள்நோக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தற்போது நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பாசிசக் கும்பல் தன்னுடைய பிம்பத்தை தூக்கிநிறுத்த இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கிடப்படும் மாதச் சம்பளம் எனப்படுவது பஞ்சப்படியை உள்ளடக்கியதாகும். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் (பஞ்சப்படி இல்லாமல்) மட்டும் 50 சதவிகிதம் வழங்கப்படுகிறது. ஆகையால் இது குறைக்கப்பட்ட ஓய்வூதியம் ஆகும்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கடைசி மாதம் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் என்று இருந்ததை இப்பொழுது கடைசி ஆண்டு சம்பள சராசரியில் 50 சதவிகிதம் என்றும் திருத்தப்பட்டுள்ளது. இதுவும் ஓய்வூதியப் பலனை குறைக்கிறது.

மொத்தத்தில், இது மிகப்பெரும் அளவில் ஓய்வூதியத்தை குறைத்து விடுகிறது. ஆனால், சில்லறையான சில அம்சங்களை மிகைப்படுத்திக் காட்டி இந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்து வகைகளும் சிறப்பாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.

மூன்று ஓய்வூதியத் திட்டங்களை ஒப்பிட்டும் பிற வகைகளிலும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இந்த ஓய்வூதியக் குறைப்பை மறைத்து, மோடி அரசுக்கு துணை சேவை செய்கின்றன.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்கள் கேட்டுவரும் பொழுது, மூன்றாவது ஒன்றை கொண்டு வருவதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறப்பதில்லை.

அதே வேளையில், அரசு ஊழியர் சங்கங்கள் எவையும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சதித்தனத்தை அம்பலப்படுத்தாமல்  கள்ள மவுனம் சாதிக்கின்றன.

அப்பட்டமான கார்ப்பரேட் பகற்கொள்ளை

ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தின் சதிப் பின்னணியானது, நமது கற்பனைக்கு எட்டாததாகும்.

இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வருகின்ற நிதியாண்டில் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றது. அதன்படி, அதற்கு முந்திய நாள் வரையிலும் ஓய்வு பெற தகுதி பெறுகின்ற எல்லோரும் இந்த புதிய திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் அதாவது 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பணிக்கு சேர்ந்தவர்கள் உட்பட தற்போதுள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறுகிறது.

அதேசமயம், புதிய திட்டத்திற்கு ஒருவர் மாறி கொண்டு விட்டால் மீண்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு உறுதியாக திரும்ப முடியாது என்று மறுத்துவிடுகிறது. நேர்பொருளில் கூறவேண்டுமென்றால், ஓர் அரசு ஊழியருக்கு அவரும் அரசும் சேர்ந்து சேமித்து வைத்திருக்கின்ற மொத்த தொகை வேண்டுமா அல்லது அவரது வாழ்நாள் முழுவதும் அரை மாத சம்பளம் ஓய்வூதியமாக வேண்டுமா என்பதை கறாராக முடிவு செய்துவிட வேண்டும். ஒருவர் இந்த இரண்டில் ஏதோ ஒரு திட்டத்தின்படியான பலனை மட்டுமே பெற முடியும் என்று வரையறை செய்கிறது.

20 ஆண்டு காலமாக மாதச் சம்பளத்தில் 24 சதவிகிதம் ஒவ்வொரு ஊழியருக்கும் சேமிப்பாக சேர்ந்து இருக்கின்ற தொகை பல லட்சங்களாகும். சான்றாக, சராசரியாக ரூ.50,000 மாத ஊதியம் பெறுகின்ற ஓர் அரசு ஊழியருக்கு இந்த சேமிப்புத் தொகையின் மதிப்பானது 35 முதல் 40 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். ஓய்வு பெறும் போது, இதில் 60 சதவிகிதம் மொத்தத் தொகையாக கைக்கு வரும். ஆனால், 50 சதவிகித மாத சம்பளம் ஓய்வூதியமாக கிடைக்காது. இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு, பாசிச பா.ஜ.க. அரசு அரசு ஊழியர்களை மிரட்டுகிறது. வெளிப்படையாக பகற்கொள்ளையடிக்கிறது.

இப்போதைய நிலையில் 23 லட்சம் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 30 லட்சம், 40 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் என்று சேமித்து வைத்திருக்கும் மொத்த தொகை சற்றேறக்குறைய 6.5 லட்சம் கோடி ரூபாயாகும். இன்னும் சில மாநில அரசு ஊழியர்களையும் சேர்த்து தற்போது அரசின் கைவசம் உள்ள மொத்த சேமிப்புத் தொகை 10.6 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் அரையாண்டு பட்ஜெட்டுக்கான இந்தப் பெரும் தொகை தான் பாசிச பா.ஜ.க. அரசின் கண்களை தற்போது உறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த கையிருப்பு சேமிப்புத் தொகையை கபளீகரம் செய்து தங்களின் எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையலிடும் நோக்கத்திலிருந்து தான் பாசிச பா.ஜ.க. அரசு இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. மற்றபடி அரசு ஊழியர்களின் எதிர்காலம் என்பதை பற்றி எல்லாம் பாசிச பா.ஜ.க. அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

அப்படியெனில், இப்பொழுது 2024 செப்டம்பர் மாதத்தில் ஊழியர் பங்களிப்பான 10 சதவிகிதத்துடன் அரசின் பங்களிப்பை 14 சதவிகிதத்திலிருந்து 18.5 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது ஏன் என்று கேள்வி எழலாம். இதுவும், அரசு ஊழியர்களின் விரல்களை வெட்டி அவர்களுக்கே சூப்பு வைக்கும் அயோக்கியத்தனம்தான்.

அதாவது, இனிமேல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையான 50 சதவிகிதத்தை மாதாந்திரம் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும். இருப்பில் இருக்கும் சேமிப்புத் தொகையை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுத்து விட்ட பிறகு, ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக அரசின் கையில் இருக்கும் சேமிப்பை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே, 14 சதவிகிதத்தை 18.5 சதவிகிதம் என்றோ அல்லது 38.5 சதவிகிதம் என்றோ உயர்த்துவதால் ஊழியர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

அரசு ஊழியர்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பதிலும் பா.ஜ.க-விற்கு வாஜ்பாய் தான் முன்னோடி. 1998 மே மாதத்தில், நிதிநிலை நெருக்கடியை காரணங்காட்டி அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60 ஆக உயர்த்தியது அன்றைய வாஜ்பாய் அரசு. இதனால், அந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற இருந்த அரசு ஊழியர்களின் கருணைத்தொகை உள்ளிட்ட மொத்த ஓய்வூதியப் பணப்பலன்களையும் சேர்த்தால் அன்றைய நிலையில் சில ஆயிரம் கோடிகள் சேரும். இந்த சில ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஊழியர்களின் பணத்தை எடுத்து  தமது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி இறைத்தது.

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்த அரசு ஊழியர் சங்கங்களின் பொருளாதாரவாதம்

இப்படி அப்பட்டமான பகற்கொள்ளை நடக்கும் போது, இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து” என்று ஒற்றை வரியில் முழக்கங்களை வைத்து, பாசிச மோடி அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்களே துணை போவதற்கு காரணம் என்ன? இதுதான், அரசியலற்ற பொருளாதாரவாதத்தின் விளைவாகும்.

இந்திய தொழிற்சங்கங்களில் கோலோச்சிய பொருளாதாரவாதம் 1990-களில் தாராளமயம்-தனியார்மயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை அரங்கேறியதற்கு பின்னால், தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டன. ஒப்பந்த தொழிலாளர் முறை புகுத்தப்பட்டது. நிரந்தர வேலை என்பது எல்லா துறைகளிலும் கேள்விக்குறியானது. ஆனால், பலமான தொழிற்சங்கங்களாக இருந்தும், தனியார்மயத்திற்கு எதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியமைக்கவில்லை. தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் போது அடையாள எதிர்ப்புகளுடன் வரம்பிட்டுக்கொண்டன. பல தொழிற்சங்கத் தலைவர்கள் காண்ட்ராக்ட்மயத்தின் அங்கமாகினர்; மேல்மட்டத் தலைமைகளோ, பிழைப்புவாதத்தில் மூழ்கிப் போயின. இவ்வாறான தொழிற்சங்கத் தலைமைகளின் துரோகம், அரசு ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை அவற்றை பிராய்லர் கோழிகளாக மாற்றிவிட்டன.

தற்போது அரசு ஊழியர்கள் அனைவரின் உணர்வுபூர்வமான நிலைப்பாடாக பழைய ஓய்வூதியத் திட்டம் மாறிவருகிற சூழலில் கூட இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட மிகவும் நயவஞ்சகமானது, சதித்தனமானது என்ற உண்மையை அம்பலப்படுத்தாமல், துரோகமிழைக்கின்றன.

ஆனால், அரசு ஊழியர்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பது ஏதோ அரசு ஊழியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் வரிப்பணம்தான் அரசு ஊழியர்களின் சேமிப்பாகும் என்ற உண்மையை விளக்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது தற்போது உடனடி தேவையாக உள்ளது. ஏனெனில், 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மக்கள் பணத்தைக் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கு மோடி-அமித்ஷா கும்பல் பாதை வகுத்துக் கொடுக்கும் சதித் திட்டம்தான், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.

எனவே, அம்பானி-அதானிகளை மேலும் கொழுக்க வைக்க மக்களை ஒட்டச் சுரண்டும் இந்த பாசிச மோடி அரசுக்கெதிராக, உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவது காலத்தின் கட்டாயம்.


ஆதி

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை | கவிதை

டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை

டாடாவின் நாய் “கோவா” கலங்கியது என்று ஆளும் வர்க்கத்தின் மீடியாக்கள் கொக்கரிக்கின்றன!
பீகாரின் தொல்குடி “குவா” உழைக்கும் மக்களை டாடா குழுமமும் இந்த அரசும் கொன்றொழித்தது உங்களுக்குத் தெரியுமா?

டாடாவின் நேனோ உங்களுக்குத் தெரியும்!
அதற்காக 900 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க சுட்டுத்தள்ளப்பட்ட சிங்கூர் மக்களின் ஒப்பாரி உங்களுக்குத் தெரியுமா?

உலகையே உலுக்கிய போபால் விஷ‌வாயு தாக்குதல்
இப்போதும் எண்ணிப்பார்த்தால் நெஞ்சம் பதைக்கிறது.. குலை நடுங்குகிறது….
அதற்குக் காரணமான கொலைக்குற்றவாளி ஆண்டர்சன் கைதை
கண்டித்த கொடூரன் இந்த டாடா என்பது உங்களுக்கு தெரியுமா?

டாடா எஃகு ஆலைக்காக ஒரிசாவிலும், கலிங்கா நகரிலும்
ஒடுக்குமுறைக்கு ஆளான
பழங்குடியின மக்களின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

நம்மையும் நம்மைப் போன்ற காலனிய நாடுகளையும்
ஒட்டச்சுரண்டி இரத்தம் குடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
முதல் உலகப்போரில் இரயில் தண்டவாளங்கள் அமைக்க
இரும்பு உற்பத்தி செய்து கொடுத்த
தேசவிரோதி டாடா என்பது உங்களுக்குத் தெரியுமா?

மியான்மர் நாட்டின் இராணுவ சர்வாதிகாரத்திற்கு
கனரக வாகனங்களை வழங்குவதாக
ஒப்பந்தம் போட்ட சர்வதேச குற்றவாளி டாடா என்று உங்களுக்குத் தெரியுமா..?

இவையெல்லாம் கசப்பாக இருந்தாலும்..
உங்களால் ஏற்க முடியாவிட்டாலும்..
இதுதான் உண்மை!

ஆளும் வர்க்க ஊடகங்களின் வாந்திகளுக்கும் வக்கிரங்களுக்கும்
நாம் பலியாகி
டாடாவை நம் தேசத்தின் அடையாளம் என்று கொண்டாடத் துணிந்தால்
நாளை இதே ஊடகங்கள் அம்பானியையும் அதானியையும்
தேசத்தின் கடவுள்களாக உங்கள் முன் நிறுத்துவார்கள்…

இந்த பாசிஸ்டுகளை கொண்டாடத் தயாரா?

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்ற வேதாந்தாவை
வளர்ச்சியின் முன்மாதிரியாகக் காட்டுவார்கள்..
இவர்களையும் நீங்கள் கொண்டாடத் தயாரா?

எண்ணிப்பாருங்கள்…

ஒரு இறப்பைக் கொண்டாட வேண்டுமென்ற
குரோத மனநிலை
எங்களுக்கு இல்லை..

ஆனால்.. நீங்கள் “சிகரம் தொட்டதாக” கொண்டாடுகிற “டாடாவின் சிகரம்”
உழைப்பால் எட்டியது இல்லை…
இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின்
பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது…

உழைக்கும் மக்களின் ஒப்பாரிகளும் – ஓலங்களும் அந்த இரத்த வாடையும்..
எங்களின் வர்க்க ஆத்திரத்தை உரசிப்பார்க்கத்தான் செய்கிறது…


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!

டந்த அக்டோபர் 11-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி பாக்மதி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எறிந்தன. 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அரசால் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் ஏற்பட்ட சத்தத்தினை கேட்டு அந்த பகுதிக்கு அருகிலிருந்த கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு அவர்களுக்குத் தேவையான தண்ணீர், பிஸ்கட் முதலியவற்றைக் கொடுத்து அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.

விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பிறகு அரக்கோணத்தில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பெட்டிகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 19 பேர் ஆம்புலன்சுகள் மூலம் ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள் கவரப்பேட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் பேருந்துகள் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சனிக்கிழமை (அக்டோபர் 12) காலை சிறப்பு ரயில்கள் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: ரயில்வே துறையைச் சிதைத்து  கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!


கடந்த ஆண்டில் மேற்குவங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதைப் போன்று இந்த பாக்மதி ரயில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் அளவுக்கு பாக்மதி ரயில் வேகமாகச் செல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று செய்திகளில் கூறப்படுகிறது. எனவே, நூலிழையிலேயே கோரமண்டல் ரயில் விபத்தைப் போன்று கோரவிபத்து நடைபெறுவதிலிருந்து பாக்மதி ரயில் தப்பித்துள்ளது.

பாக்மதி ரயில் விபத்திற்கு ஜனநாயக சக்திகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மக்களும் மோடி அரசுக்கெதிரான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “ஆறு நாட்களுக்கு ஒரு முறை ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்ச்சேதம் இல்லை என பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கித் தள்ளும் சூழலிலிருந்து மீளாமல் இருக்கும் ரயில்வே துறை என்ன தான் செய்யப் போகிறது?” எனத் தனது விமர்சனத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமான தொடர் ரயில் விபத்துகள் நடந்தும் பல உயிர்கள் பலியானபோதும் மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மோடி அரசு விழித்துக் கொள்வதற்கு இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?


இவ்வாறு மோடி அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள போதிலும் இரயில்வே விபத்திற்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என்றும், திட்டமிட்ட சதியால் தான் ரயில் விபத்து நடந்துள்ளது என்றும் திசைதிருப்பும் வேலையையே பாசிச மோடி அரசு செய்கிறது.

மோடியின் பத்தாண்டுக்கால ஆட்சியில் இரயில்வே துறை திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டதே இரயில் விபத்துகளுக்குக் காரணம் என்பதை அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளே கூறிவிட்டனர். சான்றாக, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட தெற்கு ரயில்வே தலைமைச் செயலாளர் ஆர்.என் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாக்மதி விரைவு ரயில் மெயின் லைனில் வருவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அருகில் வரும்போது அதிர்வுகள் ஏற்பட்டு லூப் லைனில் போவதற்கு சிக்னல் காட்டியுள்ளது. அதன்படி சென்ற ரயில் அங்கே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் மீது மோதியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த ரயில் விபத்து மட்டுமின்றி மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் ரயில் விபத்துகளுக்கு ரயில்வே துறைக்கான நிதியை வெட்டுவது; காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ரயில்வே துறையைத் திட்டமிட்டுச் சீரழித்து கார்ப்பரேட்மயமாக்குவதே காரணமாகும். எனவே ரயில்வே துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதை ஒழித்துக்கட்டாதவரை ரயில் விபத்துகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது

21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! |
தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



4 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் | தோழர் வெற்றிவேல் செழியன்

நான்கு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் |
தோழர் வெற்றிவேல் செழியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram