Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 478

காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !

0

பத்திரிக்கை செய்தி

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் முன் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. –  ஆர்.எஸ்.எஸ். கும்பலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பொறுக்கிகள் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடியையும் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் புகைப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை காவல் துறை அனுமதித்தது மட்டுமன்றி அவர்களை பெயருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு போட்டு உடனே விடுவித்தும் உள்ளது. இச்செயலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் சமூகத்தின் நச்சுக்களை தின்று வன்முறையை தூண்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன. இவற்றின் அடையாளம் வன்முறையும் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிமைப்புத்தியும் ஆகும். பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.

இதற்கு முன்பாக கோவை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது வி.ஹெச்.பி. பொறுக்கிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் பெரும் வன்முறையை எதிர்நோக்கிய சிறு பொறிகள் இதில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பலாபலன்களும் ஒரு பகுதி பாஜக அரசின் வருமான வரி மற்றும் இதர துறைகளின் மூலம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆளும் அதிமுக அரசும் அதன் காவல்துறையும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தையாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆகையினால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை ஒரு பரந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி மூலமே எதிர்க்க முடியும்! விழ்த்த முடியும்! அதற்கான அபாய மணியாக இச்சம்பவத்தை எடுத்துக் கொண்டு அணியமாவோம் என அறைகூவி அழைக்கிறோம்.

விளவை இராமசமி

மாநில துணைத் தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 90924 60750.

விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !

0

மிழகம் முழுக்க டெங்குவால் பலர் இறந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் கூட எடப்பாடி அரசும், நகராட்சியும் பொது சுகாதாரத்தைப் பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழையின் காரணமாக பேருந்துநிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. பேருந்துநிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து செல்லும் நிலையே இருந்தது. இதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற வகையில், கடந்த 3.11.2017 அன்று விருத்தாச்சலம் பேருந்துநிலைத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக அங்குள்ள வணிகர்களை அணிதிரட்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். பின்னர் மக்களின் போராட்டமானது சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் போலீசு வந்து பேச்சு வார்த்தை நடத்தியது.

“உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும். என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.

அதன்பின்  போலீஸ் தரப்பில் “5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள், உடனடியாக சுத்தம் செய்து தருகிறோம்” என உறுதிமொழி அளித்தார்கள். பின்னர் பேருந்து நிலையத்தைச் சுற்றி முழக்கமிட்டு பேரணியாக சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பயணிகள் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.

பின் நகராட்சி ஊழியர்கள் வந்து கொசு மருந்து அடிப்பது, குப்பைக் கழிவுகளை அகற்றுவது மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என சுகாதாரப்பணிகளை செய்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வக்கில்லாத இந்த அரசை மக்கள் போராட்டங்களே பணியவைக்கின்றன. உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு போராட்டங்களே!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.


நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !

8

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது தொடர்பான விவாதங்கள் அனைத்தும், பாலா வரைந்தது கருத்துரிமையின் வரைமுறைக்கு உட்பட்டதா அல்லது, அல்லது மீறியதா என்ற அளவில் தான் விவாதிக்கப்படுகின்றன. பாலா கைது விவகாரத்தில் பேசப்பட வேண்டியது, பாலாவின் கார்ட்டூன் அம்பலப்படுத்திய அமைப்பின் தோல்வி குறித்த பிரச்சினையா இல்லை கருத்துரிமை குறித்த பிரச்சினையா? மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

0

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

ட- கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

பன்னாட்டு கம்பெனிகள், ஷாப்பிங் மால்கள், பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய வளர்ச்சியின் அடையாளங்களாக சொல்லப்படும் இவைதான், தமிழகம் முழுவதும் நீர்வழி பாதைகளையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவு தண்ணீர் வெளியேற வழியில்லாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

நிரம்பி வழியும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி

அப்படி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை நாராயணபுரம் அண்ணாநகர் மேற்கு பகுதிக்கு உட்பட்டு மொத்தம், 10 தெருக்களில் 6,7,8,9 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவு முதல் இடுப்பு அளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மேற்கண்ட பகுதியில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை விளக்கும் விதமாகவும் மக்களிடம் பேசப்பட்டது.

அப்பகுதி மக்கள் “மூன்று நாட்களாக மழை கொட்டியது, எங்களை அரசு – கட்சிக்காரங்க யாரும் எட்டி பார்க்கவில்லை. நீங்கள் வந்து பார்த்ததே ஆறுதலாக உள்ளது” என்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்ய, ஆபீஸ் மேடம் (office madam) – 8778814966, AE – 9445190788 ஆகிய அரசு அதிகாரிகளின் எண்களுக்குத் தொடர்பு கொண்ட போது, போனை அணைத்துவிட்டனர் (Switch off). மேலும் சுகாதார கண்கானிப்பாளர் (Health inspector)  9445190074 எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, உரிய ஏற்பாடுகளைச் செய்வோம், ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு (4.11.2017 மாலை, 6:45) கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி. மீண்டும் தொடர்பு கொண்ட போது, இவருடைய தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

கள நிலவரம் இவ்வாறு இருக்க, மழை நிவாரண வேலைகளுக்கு துறைவாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக அரசு நடந்து வருகிறது என்பது தான் உண்மையாகும்.

கடந்த 2015 -ம் ஆண்டைப் போல தொடர்ச்சியாக கனமழை பொழியாமல், சற்று இடைவெளி விட்டு பெய்த மழையால், தண்ணீர் வெளியேற இயற்கை வாய்ப்பளித்துள்ளது. ஆனாலும் நீர் வழிதடங்கள் அனைத்தும் முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.

வட கிழக்கு பருவ மழை பெய்வது என்பது இயற்கை! ஆனால் எடப்பாடி அரசு இன்னமும் நீடிப்பது இயற்கைக்கே எதிரானது என்பதுதான் கள நிலைமைகள் உணர்த்தும் உண்மை. இந்த உண்மையினை மக்களிடம் கொண்டு செல்வோம்…

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்


கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

1

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

ந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரையில்…

சக்கிமுத்து மரணத்திற்கு காரணமான நெல்லை எஸ் பி, கலெக்டர் மற்றும் எருமைத்தோல் எடப்பாடியை கைது செய்!  கார்ட்டூனிஸ்ட் பாலாவை நிபந்தனையின்றி விடுதலை செய் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இருபது தோழர்கள் கைது செய்யப்பட்டு மதுரை  திலகர் திடல், காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சியில்…

ந்து வட்டி – போலிஸ் – கலெக்டர் கொடுமையால் தீயில் கருகியது இசக்கிமுத்துவின் குடும்பம் ! இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவுகட்டுவோம் !! கார்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விருத்தாச்சலத்தில்…

க்கள் அதிகாரம் சார்பில் விருத்தாச்சலம் பகுதியில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?

2

கந்துவட்டி மேல் வராத கோபம் கார்ட்டூன் மேல் வருகிறதா !

ண்மையில்
எங்களை கேலிசெய்கிறது
உங்கள் ஆட்சி.

ஒரு கேலிச்சித்திரத்தை
முடிக்கும் முன்பே
அடுத்த கேலிக்குரியதை
படைத்துவிடுகிறது அரசு.

கேலிசெய்ய நீளும்
எந்தவொரு கார்டூனிஸ்ட்
கோடுகளையும்
முடிக்க இயலாவண்ணம்
வரைபவரின் கைகளை கேலிசெய்து
நீள்கிறது
அதிகார வர்க்கத்தின் ஆணவம்.

நாட்டில்
நீங்கள் நடத்தும் ஆபாசத்தை
கோட்டில் வரையும் அளவுக்கு
கூசாத இதயம்
எங்களுக்கு இல்லை.

எங்கள் கையில் இருப்பது
கண்ணாடி தான்
பிம்பம் உங்களுடையது.
ஆபாசமாய் இருப்பதாய்
அரற்றுவதால் தான் சொல்கிறோம்
கேலிக்குரியதாக்குவது
நீங்களே!

கொட்டாங்கச்சியில்
கொஞ்சம் நீர் இருந்தாலே
டெங்குவிற்கு நீங்கள்தான்
காரணம் என்று
தண்டம் விதித்தவர்கள்,

குடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு
தெண்டமான உங்கள் ஆட்சியை
கேள்விகேட்டால்
”மழை என்றாலே
தண்ணீர் தேங்கத்தான் செய்யும்”
என்கிறீர்கள்.
இதைவிடவா ஒரு அருவருப்பை
கார்ட்டூனில் காட்ட முடியும்?

நிவாரணம் கேட்டு
நிர்வாணமாக ஓடினான் விவசாயி.
வெடித்த நிலம் பார்த்து
நெஞ்சு வெடித்துச் செத்தான்,
அதையும்,
சொந்தப் பிரச்சனைக்காக செத்தான்!
என்றீர்கள்,
இந்த ஆபாசத்தை வரைவதற்கு
எந்த கார்ட்டூனிஸ்ட்டால் முடியும்?

கார்ட்டூன் மேல் வந்த கோபம்
கந்துவட்டி மேல் வரவில்லையே!
கருகிய மழலையைக் கண்டவுடன்
‘யானே கள்வன் என்று!’
நெஞ்சு வெடித்து சாக
நீங்கள் என்ன சிலப்பதிகார பாண்டியரா!
ஊருக்கே தெரியும்
உங்கள் உத்தமம்!

ஆபாசமாக…
அருவருப்பாக…
ஆணவமாக…
ஆளத்தகுதியில்லாமல்…
வாழ்வதில் போகாத மானம்
வரைந்ததிலா போயிற்று!

இதைவிட எங்களை யார்
கேலிசெய்து விட முடியும்!

அடக்குமுறைக்கெதிராக
வாழா இருப்பதைவிட
பாலா-வாய் இருப்பதே மேல்!

-துரை. சண்முகம்

பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !

8

மக்கள் அதிகாரம்  – பத்திரிகைச் செய்தி

5-11-2017

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீயில் கருகிய குழந்தையை கலெக்டர், கமிசனர், எடப்பாடி ஆகிய மூவரும் அம்மணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் கார்ட்டூன் படம் வரைந்த பத்திரிகையாளர் பாலாவை மாவட்ட ஆட்சியர் அளித்த சந்தீப்  புகாரின் பேரில் நெல்லை போலீசார் இன்று 5-11-2017 காலை கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த கம்ப்யூட்டர், செல் போன், கீ போர்டு என அனைத்தையும் போலீசார் குற்றத்தை நிருபிக்க பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். படம் வரைந்ததை பாலா மறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரும் ”இந்த படத்தில் என்ன தப்பு இருக்கு ?”என்று கேட்கிறார்கள்.

இசக்கிமுத்துவின் மரணம் கிரிமினல்மயமான தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதன் மூலம் அதிகார வர்க்கம் தங்களை நியாயப்படுத்த முடியாமல் அம்மணமாகி நின்றது. இதுதான் பாலாவின் கார்ட்டூன்.

நான்கு பேர் அநியாயமாகத் தீயில் கருகியது குற்றமாகத் தெரியவில்லை. கலெக்டர், கமிசனர், எடப்பாடியை அம்மணமாக பாலா படம் வரைந்தது தான் குற்றமாகத் தெரிகிறது. இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவு கட்டுவது எப்போது?. மக்கள் பிரச்சினைகளால் வெடிக்க காத்திருக்கும் தமிழகத்தை எந்தத் திரி பற்ற வைக்கும் எனத் தெரியவில்லை. அனிதா மரணத்திலும், டெங்கு மரணத்திலும், சென்னை வெள்ளத்திலும் சிக்கிய அதிமுக அரசு இப்போது கருத்துரிமையில் கை வைத்துச் சிக்கியிருக்கிறது.

“கந்துவட்டிக்காரன் மிரட்டுகிறான் காப்பாற்றுங்கள்” என ஆறு முறை குடும்பத்தோடு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார் இசக்கி முத்து. எந்தத் தீர்வும் இல்லை. மாவட்ட ஆட்சியரை நம்பினால் இனி மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டு 23-10-2017 அன்று தனது இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டாலே ஈரக் குலை நடுங்குகிறது. அனைவரும் பார்த்து நெஞ்சம் பதறினோம். கார்டூனிஸ்ட் பாலா படம் வரைந்தார். இனியும் வரைவார். அது நமது உரிமை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.

“பாலாவை விடுதலை செய்!

கலெக்டரை கைது செய்!” என முழங்குவோம்!.

 

இவண்

வழக்குரைஞர் சி.ராஜூ

மாநில ஒருங்கிணைப்பாளர், 

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

தொடர்புக்கு : 99623 66321

எடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! – வீடியோ Updates !

7

கார்டூனிஸ்ட் பாலா நெல்லை போலீசாரால், சென்னையில் அவரது வீட்டில் வைத்து இன்று (05-11-2017) கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் அச்சன்புதூர் காவல்துறையினர். ஆறுமுறை மனு அளித்தும் அதன் மீது மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கவில்லை.

“ஆமா, இந்தக் கார்ட்டூன் ஆத்திரத்தின் உச்சத்தில் நான் வரைந்தது” – கார்ட்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் தற்கொலைக்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் செயல்படாத எடுபிடி அ.திமு.க அரசும் தான் காரணம் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கழுவி ஊற்றியது.

இசக்கிமுத்து படுகொலை தொடர்பாக நெல்லை போலீஸ் கமிஷனர், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோரை அம்பலப்படுத்தி கார்ட்டூன் கேலிச்சித்திரம் வரைந்து தனது முகநூலில் வெளியிட்டிருந்தார் கார்ட்டூனிஸ்ட் பாலா. அதை பல்லாயிரக்கணக்கான பேர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கார்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் ஆறு மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்காத நெல்லை கலெக்டர் இந்த கார்ட்டூன் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை காவல்துறை உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து பாலாவைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.

அவரது கணினி மற்றும் இணைய இணைப்பு சாதனங்களையும் வலுக்கட்டாயமாக பிடுங்கிச் சென்றுள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 501, மற்றும் 67 (பிணையில் வெளிவரமுடியாத பிரிவு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கணினி, கணினியின் உப-பாகங்கள், அவரது கைப்பேசி, மோடம் ஆகியவை போலீசால் அள்ளிச் செல்லப்பட்டன.

பாலாவைக் கைது செய்ய 4 போலீசு மற்றும் ஒரு பெண் போலீசு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நெல்லையில் இருந்து வந்திருந்தனர். இன்று (05-11-2017) காலை பாலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த போலீசு அவரது குடும்பத்தினரிடம் எந்தக் காரணமும் சொல்லாமல் பாலாவின் வீட்டிலிருந்த கணினி மற்றும் அதன் அனைத்து உப பாகங்களையும், அவர் உபயோகித்த மோடம், அவரது மனைவியின் செல்போன், அவரது செல்போன் உள்ளிட்ட உபகரணங்களைப் பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி காரணம் கேட்ட பின்பு, முதல்வர் மற்றும் கலெக்டரை இழிவுபடுத்தும் விதமாக இசக்கிமுத்து விவகாரத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்கு எதிராக நெல்லை கலெக்டர் கொடுத்த புகாரின் பெயரில் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியது.

கைது செய்யப்படும் சூழலில் பாலாவுக்கு சட்டரீதியாக உள்ள உரிமைகளை மறுத்து அவரை, அவர் குடியிருக்கும் பகுதியிலேயே தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறது எடுபிடி அரசின் எடுபிடியான போலீசு.

பாலா கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படும் போது அவருடன் அவரது அண்டைவீட்டுக்காரரான பாலாஜியும் உடன் சென்றுள்ளார். அவரிடமும் கூட முழுமையான விவரங்கள் எதுவும் சொல்லாது பாலாவை அழைத்துச் சென்றிருக்கிறது போலீசு. அருகில் உள்ள மாங்காடு போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவண வேலைகளை முடித்துவிட்டு கிளம்புவதாகக் கூறிய போலீசு, மாங்காடு போலீசு நிலையம் செல்லாமல், போரூர் அருகிலேயே ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு, பாலாவின் அண்டைவீட்டுக்காரர் பாலாஜியிடம் அவருக்கான உடைகளை மட்டும் எடுத்து வந்து கொடுக்கக் கூறியிருக்கிறது. பாலாஜியும் அவருடைய உடைகளை எடுத்துக் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

பாலாவின் அண்டை வீட்டுக்காரர் பாலாஜி, பாலாவின் மனைவி சாந்தினி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியது பின்வரும் வீடியோவில் உள்ளது.

 

நேற்றே கைது செய்ய முயற்சித்ததா போலீசு?:

முந்தைய தினமே (04-11-2017) பாலாவுக்கு ஒரு பெண் அவரது கார்ட்டூனைப் பாராட்டி போனில் பேசி, அவரைச் சந்திக்க வெளியூரில் இருந்து வந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மழை பெய்யும் சமயத்தில் எதற்கு உங்களுக்கு வீண் அலைச்சல் என்று பாலா கேட்டுள்ளார். இருந்தும் அவர் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தவே, சரி அடையார் ஆனந்த பவனில் சந்திக்கலாம் என நேரம் கூறிவிட்டு, குடும்பத்துடன் அவர் வீட்டுப்பகுதியில் உள்ள அடையாறு ஆனந்தபவனிற்கு  சென்றுள்ளார். ஆனால் போனில் பேசிய பெண்ணோ அடையாரில் உள்ள ஆனந்தபவனிற்குச் சென்றிருக்கிறார். இதன் காரணமாக நேற்று அவரை சந்திக்கமுடியவில்லை.

இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்ய வந்த பெண் போலீசு இன்ஸ்பெக்டரின் குரலும், முந்தையநாள் தனக்கு போனில் பேசிய குரலும் ஒன்று தான் என கைது செய்து இழுத்துச் செல்லப்படும் போது தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார், பாலா. இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கையில் ‘காக்கிகள்’ பாலாவை நேற்றே கைது செய்யத் திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

பெருகும் ஆதரவு:

பாலாவின் மனைவி சாந்தினியை சந்தித்துப் பேசும் தோழர்கள்

கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். முன்னணி பத்திரிக்கையாளர்கள், கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர். பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்

பாலாவிற்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை

 

(படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது அழுத்தவும்)

– வினவு செய்தியாளர்கள்


சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு !

3

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5

ரு குறிப்பிட்ட துறையில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அனுமானிக்கும் ஆற்றலை, கடந்த கால மற்றும் நிகழ்கால மின் தரவுகளைப் பகுத்தாய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிக் கணினிகள் பெறுகின்றன. குறிப்பிட்ட விதத்திலான சூழ்நிலைகள் தோன்றாத வண்ணம் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆற்றலையும் இத்தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

தரவுகளை அலசுவது – தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பது – முடிவுகளை அமல்படுத்தி அதன் விளைவுகளை பரிசோதிப்பது – அதன் அனுபவங்களை மின் தரவுகளாகச் சேகரித்து, மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மேலும் துல்லியமான முடிவை எடுப்பது – மீண்டும் அமல்படுத்துவது என்கிற செயல்பாட்டுச் சுழற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் துல்லியத்தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

மீண்டும் மீண்டும் நிகழும் இந்தப் பகுத்தாயும் போக்கானது பின்வரும் நான்கு முக்கியமான கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

முதலாவதாக விவரணப் பகுப்பாய்வு (Descriptive analytics). அதாவது வந்து குவிந்துள்ள மின் தரவுக் குவியல்களைப் பகுப்பாய்வு செய்து என்ன நடந்தது என்பதை கண்டறிதல். காவல்துறையின் ஃபோரன்சிக் பிரிவு இம்முறையைக் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடந்து முடிந்த பின் அதில் தொடர்புடையவர்களின் இணையச் செயல்பாடுகள், செல்பேசி உரையாடல்கள் உள்ளிட்ட மின் தரவுகளைப் பரிசீலித்து நடந்த சம்பவத்தை முழுமையாக அதன் பின்னணியோடு அறிந்து கொள்ள இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

இரண்டாவதாக, சோதனைப் பகுப்பாய்வு (Diagnostic Analytics). மின் தரவுகளின் அடிப்படையில் ”ஏன் நடந்தது” என்கிற விளக்கம். ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடந்த பின் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான மின் தரவுகளைப் பரிசீலித்துப் பார்த்து அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட என்ன காரணம் என்பதைக் கண்டறிய இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

மூன்றாவதாக, முன்னறிப் பகுப்பாய்வு (Predictive Analytics). ஏற்கனவே உள்ள மின் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிகழ்ச்சிப் போக்குகளில் உள்ள வகை மாதிரிகளைப் (Pattern) புரிந்து கொள்வது. நிகழ்ச்சிப் போக்கின் வகை மாதிரியை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் இதே போன்ற நிகழ்வு நடக்குமா, எப்போது, எப்படி, ஏன் நடக்கும் என்பதைக் கணிப்பது. உதாரணமாக, ஒருவரின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள நடவடிக்கை, அவர் இணையம் மூலம் வாங்கும் புத்தகங்கள், இணையத்தில் பார்க்கும், கேட்கும் விசயங்களை வைத்து எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அரசியல் போக்கு ஒன்றில் அவரது பங்கெடுப்பு இருக்குமா இருக்காதா, அப்படி இருந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.

நான்காவதாக பரிந்துரைப் பகுப்பாய்வு (Prescriptive Analytics). கடந்த கால தரவுகளையும், நிகழ்காலப் போக்குகளையும் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விசயம் நிகழ்வதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குவது. உதாரணமாக, முகநூலில் ’புரட்சிகரமாக’ செயல்படும் ஒருவர் ஓய்வு நேரத்தில் கார்கள் குறித்து இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, அதில் அவரது ஆர்வம் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மாதச் சம்பளக்காரரான அவரைக் கார் கடன் வாங்கி தவணை கட்டச் செய்து விட்டால் ‘புரட்சி’ வேகம் குறைந்து விடும் என்பதை முன்கூட்டியே பரிந்துரைக்க முடியும்.

***

பகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தின் வழியாக நடந்த விசயங்களைத் தரவுகளின் அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ளும் செயற்கை நுண்ணறிக் கணினி, அதனடிப்படையில் நடக்கவிருக்கும் விசயங்களைக் குறித்த அனுமானத்தை அடைவதுடன், எப்படி நடக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கும் ஆற்றலையும் பெறுகின்றது.

மீப்பெரும் மின் தரவுத் தொழில்நுட்பத்தின் வரவுக்கு முன்பிருந்த, வழமையான செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பொருத்த வரையில் ஒரு முடிவை எடுப்பதற்கு என்னென்ன தரவுகளை ஆராய வேண்டும், எத்தனை கோணங்களில் ‘சிந்தித்து’ பார்க்க வேண்டும், சாத்தியமான முடிவுகள் எத்தனை இருக்க முடியும், அந்த முடிவுகளில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்கு எது சரியானது என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது எப்படி என்கிற வரம்புகள் அனைத்தும் நிரல்களாக ஏற்றப்பட்டிருக்கும் (Pre Programmed). சுருக்கமாகச் சொன்னால், முடிவுகளுக்கு வரம்புகள் இருந்தன.

மீப்பெரும் மின் தரவின் வரவுக்குப் பின் அந்த வரம்புகள் உடைந்திருக்கின்றன. முடிவு எடுப்பதற்கு முன் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்பதற்கு நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் மின் தரவுகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு குவிந்து கிடக்கும் மின் தரவுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு அறியத்தரும் மென்பொருட்களும் வந்து விட்டன. தரவுகளிலிருந்து “கற்றுக் கொள்வதில்” செயற்கை நுண்ணறிக் கணினிக்கு இதுகாறும் இருந்த வரம்பு உடைந்து விட்டது – எனவே அது எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு இருந்த வரம்புகளும் உடைந்து விட்டன.

***

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆளும்வர்க்கங்களின் கைகளில் இருப்பதால் அவை அடைந்துள்ள வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பதிலும் அதே வர்க்கங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்குவது, சிவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, காவல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளது என்பதெல்லாம் கேட்பதற்கு நம்ப முடியாத கற்பனைகள் போல் தோன்றினாலும், தற்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கும், அரசியல் பொருளாதார சூழலும் இந்தப் போக்கை நோக்கியே உள்ளன. ஒரு சில நாடுகளில் “தரவுகளின்” அடிப்படையில் குடிமைச் சமூகத்தை நிர்வகிக்கும் முறைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையிலான புலனாய்வு முறைகளும் நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளன.

***

அது 2014-ம் ஆண்டின் வசந்த காலம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம். தனது தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர பதினெட்டு வயதான ப்ரிஷா போர்டென் அவளது தோழியுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நீல வண்ண சைக்கிளும், ரேஸர் ஸ்கூட்டர் (கால்களால் உந்தித் தள்ளி ஓட்டும் சறுக்கு வண்டி) ஒன்றும் பூட்டாமல் நிறுத்தப்பட்டிருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். பூட்டாத வாகனங்களைப் பார்த்ததும் தோழிகளுக்கு சபலம்.

சட்டென அந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓடப் பார்க்கிறார்கள். இதைப் பார்த்து விட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உடனே சாலைக்கு ஓடி வந்து “அது என் மகனுடையது” என்று கூச்சலிடுகிறாள். பயந்து போன தோழிகள், உடனே அந்த வாகனங்களைப் போட்டு விட்டு ஓடி விடுகின்றனர். அவர்கள் திருட்டுக்குப் பழக்கமில்லாதவர்கள். இதற்கிடையே ’திருட்டுச்’ சம்பவத்தை பார்த்த ஒருவர் போலீசை அழைக்க, சிறுமிகள் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். திருட்டுப் பொருளின் மதிப்பு 80 டாலர்.

அதே சமயத்தில் நடந்த இன்னொரு சம்பவம். 41 வயதான வெர்னான் ப்ரடெர் ஊரறிந்த திருடன். ஏற்கனவே அவன் மேல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது உட்பட பல திருட்டு வழக்குகள் உள்ளன. ஐந்தாண்டுகள் சிறையிலும் கழித்துள்ளான். ஒரு நாள் அருகில் இருந்த கடையில் சுமார் 86.35 டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடும் போது மாட்டிக் கொள்கிறான்.

இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயற்கை நுண்ணறித் திறனில் இயங்கும் “அபாய மதிப்பீட்டு மென்பொருளின்” (Risk assessment tool) முன்னால் நிறுத்தப்படுகின்றனர். அந்த மென்பொருள் கேட்கும் விவரங்களுக்கான பதிலை ப்ரிஷா போர்டெனும், வெர்னான் ப்ரடெரும் சொல்கின்றனர். அதனடிப்படையில் இருவரில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு ப்ரிஷா போர்டென் என்ற அந்தப் பெண்ணுக்கு அதிகமிருப்பதாகவும், வெர்னான் ப்ரெடெர் என்ற திருடனுக்கு அத்தகைய வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அந்தக் கணினி பரிந்துரை செய்கின்றது.

கணினியின் பரிந்துரையின் படி ஜூரிகள் தீர்ப்பளிக்கின்றனர்; இருவருமே சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டாண்டுகளுக்குப் பின் விடுதலையான ப்ரிஷா போர்டென் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் – மீண்டும் குற்றமிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று செயற்கை நுண்ணறிக் கணினியால் கணிக்கப்பட்ட வெர்னான் ப்ரடெர் சிறையில் இருந்து வந்ததும் பெரும் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டு தற்போது 8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளான்.

இவர்களில் ப்ரிஷா போர்டென் கருப்பினப் பெண்; வெர்னான் ப்ரடெர் வெள்ளையினத்தவன். செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் வெளிப்படுத்திய இனவெறிக்கும், அது தவறிழைத்ததற்கும் என்ன காரணம்?

***

பல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிக் கணினிகள் நிறவெறியையும் பாலியல் ரீதியான முன்முடிவுகளையும் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளைகளுக்கு முன்முடிவுகள் இருக்கலாம் – ஆனால், இயந்திரத்திற்கு முன்முடிவு இருக்க முடியுமா? இதைக் கண்டறிய, ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஐலின் கலிஸ்கன் “உள்ளடக்க சோதனை மென்கருவிகளை” (Implicit Assessment Tool) கொண்டு செயற்கை நுண்ணறிக் கணினிகளை சோதித்துள்ளார்.

மனிதர்கள் தங்களிடம் சொல்லப்படும் வார்த்தைகளை எம்மாதிரியான உணர்ச்சிகளோடு இணைத்துப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய மனோவியல் துறையில் பயன்படுத்தப்படும் முறை தான் உள்ளடக்க சோதனை. உதாரணமாக, ரோஜாவின் பெயரைச் சொன்னவுடன் இன்ப உணர்ச்சியும், ஹிட்லரின் பெயரைக் கேட்டவுடன் கசப்புணர்வும் தோன்றும்.

எனினும், இவ்வாறு பெயர்களோடு இணையும் உணர்ச்சிகள் உலகம் முழுவதும் பொதுவானதாக இருப்பதில்லை. உணர்ச்சிகள் வர்க்கத்துக்கு வர்க்கம், இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடும் – மோடியின் பெயர் ஒரே நேரத்தில் மக்களிடம் ஆத்திரத்தையும், முதலாளிகளுக்கு மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பது போல.

மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அமெரிக்காவின் பிரத்யேகமான மனநிலைக்குப் பொருத்தமான சொற்களே எடுத்துக் கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில் ஆண்களின் பெயர்களை உள்ளீடு செய்த போது பொறியாளர், இராணுவம், ஆற்றல் மற்றும் அவை சார்ந்த விசயங்களோடும், பெண்களின் பெயர்களை வீட்டு வேலைகள், இசை போன்றவைகளுடனும் இணைத்துள்ளது செயற்கை நுண்ணறிக் கணினி. அதே போல் கருப்பினத்தவர்களின் பெயர்களை உள்ளீடு செய்ததும், அதோடு கசப்புணர்வு இணைந்துள்ளது.

மேற்கு நாடுகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்படும் சுயவிவரக் குறிப்புகளை (Resume) செயற்கை நுண்ணறிக் கணினிகளிடம் கொடுத்து முதல்கட்ட தேர்வைச் செய்யும் போக்கு துவங்கியுள்ளது. எதிர்காலத்தில் பொறியாளர், விஞ்ஞானி போன்ற வேலைகளுக்காக பெண்களும், கருப்பினத்தவரும் விண்ணப்பிக்கும் போது அவர்களை முதல் கட்டத்திலேயே செயற்கை நுண்ணறிக் கணினி வடிகட்டி விடும். முசுலீம்களின் நிலை பற்றித் தனியே விவரிக்கத் தேவையில்லை.

“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?” என்கிறார் ஐலின் கலிஸ்கன்.

துபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ போலீஸ்

இயந்திரக் கற்றுணர்தல் முறை, தனது பகுப்பாய்வுக்கான கச்சாப் பொருளாக மீப்பெரும் மின் தரவுகளையே சார்ந்திருக்கின்றது. மின் தரவுகளோ சமூக வலைத்தளங்கள் மற்றும் பொருட்களின் இணையத்திலிருந்து உற்பத்தியாகின்றன. “சமூகத்திலிருந்து” உற்பத்தி செய்யப்படும் மின் தரவுகள் சமூகத்தின் பொதுப்புத்தியையும் முன்முடிவுகளையும் தன்னோடு சுமந்து செல்கின்றன. சமூகத்தின் பொதுபுத்தியோ ஆளும் வர்க்க சித்தாந்தங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

ட்விட்டர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், தொலைபேசி உரையாடல்களில், இணைய அரட்டைகளில் குறிப்பிட்ட இனக்குழு அல்லது மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் குறித்து ‘பரவலான’ மக்களிடம் இருக்கும் கருத்துக்கள் மீப்பெரும் மின் தரவுகளாகச் சேகரிக்கப்பட்டு பின்னர் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இந்த “தரவுகளே” இயந்திரக் கற்றுணர்தலுக்கான மூலப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. செயற்கை நுண்ணறிக் கணினிகள், குறிப்பான ஒரு முடிவை எடுப்பதற்கு இயந்திரக் கற்றுணர்தலைச் சார்ந்திருப்பதால், பொதுபுத்தி சார்ந்த முடிவுகளே கிடைக்கின்றன.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். எதிர்காலத்தில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் பாரதிய ஜனதா அலுவலகத்தில் குண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து நான்கைந்து பேர் இறந்து விடுகிறார்கள்.

உடனடியாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் காவிக் கூலி கும்பல் குற்றத்தை முசுலீம்களின் மேல் சுமத்துகிறது. காவிகளால் அவ்விதமே புகாரும் பதிவு செய்யப்படுகின்றது. இப்போது வழக்கை முதற்கட்டமாக பரிசீலிக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி எவ்வாறு முடிவெடுக்கும்?

செயற்கை நுண்ணறிக் கணினி இந்த வழக்கில் எம்மாதிரியான முடிவுகளுக்கு எல்லாம் வந்தடைய முடியும் என்பதை பட்டியலிடும். இந்தப் பட்டியல் என்பது இயந்திரக் கற்றுணர்தலை அடிப்படையாக கொண்டது. இயந்திரக் கற்றுணர்தல், மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தே சாத்தியமான முடிவுகளின் பட்டியலை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கும்.

மீப்பெரும் மின் தரவுகள் சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. பொது புத்தியில் உள்ள “தாடி – குல்லா – முசுலீம் – தீவிரவாதி – வெடிகுண்டு” என்பதே சமூக வலைத்தளத்தின் பொதுக்கருத்து. இந்த “மூலப் பொருட்களில்” இருந்து முடிவெடுக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி, தாடி வைத்தவர்களைக் கைது செய்ய பரிந்துரை செய்யும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் சுரண்டும் வர்க்கங்களால் பயன்படுத்தப்படும் போது அது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலையே ஏற்படுத்தும். மேற்குலக முதலாளிய அரசுகள் தமது சொந்த மக்களை வேவு பார்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர்  மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60,  தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !

0

விழுப்புரம் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017 சனிக்கிழமை, மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டுத் திடலில் “இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? அரசியல் அராஜகங்களுக்கு, அக்கிரமங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தோழர்.சிவானந்தம் (பொருளாளர், விழுப்புரம் வட்டம் – மக்கள் அதிகாரம்) தலைமை தாங்கினார். தோழர்கள் ஞானவேல் (புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி அமைப்பாளர், விழுப்புரம்), மோகன்ராஜ் (விழுப்புரம் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்), செல்வக்குமார் (விழுப்புரம் வட்டம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்) உரையாற்றினார்கள். தோழர்.காளியப்பன் (மாநில பொருளாளர்- மக்கள் அதிகாரம் தமிழ்நாடு) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கும், காவிரி நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வறட்சியால் நெஞ்சு வெடித்து உயிரிழந்த விவசாயிகளுக்கும், நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கும், கந்துவட்டி கொடுமையால் கலெக்டரும், போலீசு துறையும் வைத்த தீயில் கருகிய இசக்கிமுத்து குடும்பத்திற்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர். சிவானந்தம் அவர்கள் பேசுகையில் “இன்று டெங்குவால் மக்கள் கொத்து கொத்தாக சாகின்றனர், நேற்று விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர், NEET- தேர்வால் மாணவர்கள் இறக்கின்றனர், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மாட்டுக்கறி தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டங்களை RSS-BJP கும்பல் திணித்து தமிழகத்தை சுடுகாடாக்குகிறது.

இந்த கொலைகார அரசிடமே சென்று மீண்டும் மீண்டும் மனுக் கொடுத்து, மன்றாடி  நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட போகிறோமா? அல்லது இந்த கட்சிகளுக்கு பதில் அந்தக் கட்சி என ஓட்டின் மூலமே தீர்வு தேடப் போகிறோமா? அல்லது இவர்கள் யாரும் சரியில்லை இன்று சினிமாக்காரர்கள் நன்றாக பேசுகிறார்கள்,படத்தில் கருத்து கூறுகிறார்கள் என்று அவர்கள் பின்னால் சென்று அவர்களுக்கு கொடி பிடிக்கப் போகிறோமா? இல்லை எப்படி மெரினாவில் சாதி கடந்து, மதம் கடந்து, அரசியல் கட்சிகளை தூக்கி எறிந்து, சினிமா மோகத்தை மறந்து, அதிகாரம் செலுத்தி நம் உரிமைகளை நாமே மீட்டு எடுத்தோமோ அது போன்ற போராட்டங்களை மீண்டும் முன்னெடுத்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறோமா? என்பதை விளக்கவே இந்த கூட்டம்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர்.ஞானவேல் பேசும்போது “வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.

மோடி வந்த பிறகு மக்களின் மீது அனைத்து திட்டங்களும் வலுக்கட்டாயமாக, அடாவடித்தனமாக திணிக்கப்படுகின்றன. இன்று நீட் தேர்வு வந்தபின் மாணவர்களின் கதி என்ன? நாங்கள் நீட்-ன் மூலம் மருத்துவ தரத்தை உயர்த்தப் போகிறோம், கட்டண கொள்ளையை தடுக்கப்போகிறோம், சுயநிதிக் கல்லூரிகள், தரமில்லா மருத்துவக் கல்லூரிகளுக்கு முடிவு கட்டப்படும் என்றெல்லாம் மோடி அரசு உதார் விட்டது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நீதிபதி அல்கபீர் தாமஸ் என்பவரால் நீட் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் BJP ஆட்சிக்கு வந்த பிறகு அணில் ஆர் தவே என்ற RSS நீதிபதியால் மீண்டும் நீட் கொண்டுவரப்பட்டு, அனிதா உயிர் காவு வாங்கப்பட்டதோடு, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

கேதான் தேசாய் போன்ற கிரிமினல்கள் மருத்துவ கவுன்சில் தலைவராகவும், கீதாலக்ஷ்மி போன்ற கிரிமினல்கள் துணை வேந்தர்களாகவும் நீடித்ததால்தான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் மூன்று மாணவிகள் பலியாகினர். இப்படி மாணவர்களின் உயிர்களை குடித்த கிரிமினல் நடத்தக்கூடிய கல்லூரிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறது.

கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து HERA போன்ற முறைகளால் இனி தனியார் தான் மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும். இனி யாரும் படிக்க கூடாது, காசு இருப்பவன் படிச்சிக்கோ, இல்லாதவன் அவன் அப்பன் தொழிலை செய்ய வேணும் என்று இந்த பார்ப்பன RSS, மோடி – கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறது.

இப்படி தனியார் நிறுவனங்களின் ஊழலையோ, கட்டணக் கொள்ளையையோ  கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. இது தான் கல்வியை அனைவரும் சமமாக பயில இந்த யோக்கியர்கள் கொண்டு வரும் திட்டம்.

இனியும் மக்கள் ஒன்றிணையாமல், போராடாமல் தீர்வு இல்லை. எப்படி  ஒரு ஓட்டை வண்டியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தோ அப்படி இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு தேடுவது பயனளிக்காது! நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு வெளியில் தான் தீர்வு. எங்களோடு சேர்ந்து செயல்பட வாருங்கள்” என்று பேசி முடித்தார்.

அதன்பின்னர் பேசிய தோழர் மோகன்ராஜ் அவரது உரையில் “இன்று தமிழக மக்களை காவு வாங்கி கொண்டு இருக்கும் டெங்கு என்பது வேற எதுவும் இல்லை இந்த மோடி கும்பலும், எடப்பாடி- பன்னீர் கும்பலும் தான்.

அவர்களை ஒழித்தாலே டெங்குவும் ஒழிந்து விடும், மக்கள் கஷ்டமும் தீரும். அரசு மருத்துவமனைகளில் பத்து நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நூறு நோயாளிக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர். ஒரு வார்டில் 32 இருக்கைகள் உள்ளன. ஆனால், 100 – 150 பேர் தரையில் படுத்துள்ளனர். எப்படி மாட்டுப் பட்டியில் மாடுகளை அடைத்து வைத்து இருப்பார்களோ அப்படி மக்களையும் அடைத்து வைத்துள்ளனர்.

போதிய மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை, படுக்கை  வசதி இல்லை. இதை ஏன் என்று மருத்துவ அதிகாரியிடம்  கேட்டால் எங்க கிட்ட இவ்ளோ தான் வசதி இருக்கு நாங்க என்ன பண்ண முடியும். இருப்பதை வைத்து தான் மருத்துவம் பார்க்க முடியும், நீங்க இதை மேலிடத்தில் தான் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

ஆனால் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி இருக்கு மக்களுக்கு இல்லை. இது தான் இவர்களின் யோக்கியதை. இன்னொரு புறம் கொசுவை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் நகராட்சி அபராதம் விதிக்கிறது. நாங்கள் விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட, நகராட்சிகளில் உள்ள அரசு அலுவலகம், வாய்க்கால்கள் என்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களோடு நகராட்சியை முற்றுகையிட்டு போராடினால் அவர்களும் நாங்கள் என்ன செய்ய மேலிடம்… என்று சொல்கிறார்கள்.

எனவே மக்களே இனியும் இந்த அரசை நம்பி நாம் வாழ முடியாது. இவர்கள் நம்முடைய வேலையாட்கள் தான். இவர்களிடம் கெஞ்சுவதை நாம் விட்டுவிட்டு இவர்களுக்கு ஆணையிடுவதும், இவர்களிடம் நாம் அதிகாரம் செலுத்துவதன் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது தான் மக்கள் அதிகாரம்” என்று முடித்தார்.

அவரையடுத்து தோழர் செல்வக்குமார் பேசும்போது “இன்று மக்களிடம் போய் இந்த ஆட்சியைப் பற்றி கேட்டாலே எடப்பாடி – ஓபிஎஸ் என்ற அடிமைகள் நம்மை  ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஏன்னென்றால் மக்களுக்கு பிரச்சனை தெரியாமல் இல்லை. அனால் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தான் தெரிவதில்லை. அந்த தீர்வை சொல்வதற்குத் தான் இந்த பொதுக்கூட்டம்.

இப்போதெல்லாம் திருடர்கள் பயப்படுவதில்லை. எந்த வீட்டில் திருடுகிறார்களோ அந்த வீட்டிலேயே சமைத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ஹாயாக போகிறார்கள். அது போலத்தான் இந்த அரசும் இன்று மக்களின் வரிப்பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு அவர்களை காக்காமல் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பராமரிக்காமல், மருத்துவக்கழிவுகளை அகற்றாமல், வாய்க்கால்களை மூடாமல், குப்பைகளை முறையாக பராமரிக்காமல் மக்கள் வசிப்பிடங்களிலேயே போட்டு விட்டு இன்று மக்கள் மீது பழி போட்டு அவர்களையே குற்றவாளிகளாக்கி அபராதமும் வசூல் செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் நேர்மையானவர்களின் நிலைமை என்ன? விஷ்ணுப்பிரியா, முத்துக்குமாரசாமி, சகாயம் – இவர்களின் நிலை என்ன? பெங்களூர் DSP கணபதி கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்து உயிரிழந்தார். DSP கணபதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட் சென்றுதான் முதல் தகவல் அறிக்கையையே பதிந்துள்ளார். அதுவும் மூன்று மாத போராட்டத்திற்கு பின். இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் அவலம்.

அதிகார வர்க்கம் பெரும்பாலும் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு விழுப்புரம் முழுக்க மூணு சீட்டு, கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது போலீசுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் இந்த அரசு தடுக்காது. ஏனென்றால் மாமூலோடு சேர்த்து போனஸ் வாங்கும் போலீசுதுறை எப்படி இதைத் தடுக்கும்?

இந்த அரசுக் கட்டமைப்பில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை. ஏனென்றால் இது கிரிமினல்களின் கூடாரம். இங்கே நேர்மையானவர்களுக்கு கிடைப்பது மரணம், இல்லையென்றால் டம்மியான பதவிகளுக்கு தூக்கி எறியப்படுவார்கள். டாஸ்மாக் விசயத்தில் ஐயா சசிப்பெருமாள் நிலை என்ன?

ஆனால் மக்களே அதிகாரத்தை எடுத்து “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்ட வழியை காட்டினோம். இன்று மக்களே மூடுகிறார்கள்.

இன்னொருபுறம் BJP, RSS, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற சங்க பரிவாரங்கள் மக்கள் மீது இந்துத்துவத்தை திணிக்கின்றன. ஆனாலும் மோடியின் அனைத்து இந்தியாவும் கிழிந்து தொங்குகிறது. இன்று அனைத்து மக்களும் வீதிக்கு வந்துவிட்டனர்.” என்று முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் காளியப்பன் பேசும்போது “உலகத்திலேயே சிறந்த அற இலக்கியத்தையும், நீதி இலக்கியத்தையும் கொண்டது தமிழ்நாடு. திருக்குறள் ஒன்றுக்காகவே நாமெல்லாம் பெருமைப்படலாம். ஒரு மன்னன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

”நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”

என்று எந்நாளும் மக்களை தேடித்தேடிச் சென்று அவர்கள் விருப்பத்தை அறிந்து மன்னன் செயல்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு நிலம் கொடு, வீடு கொடு, என்று கேட்டால் அது நாடு அல்ல. மக்கள் மனதில் நினைப்பதற்கு முன்னால் அவர்களை காத்து நிற்பது தான் மன்னனின் கடமை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகம் என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியாது. அப்போது சட்டமன்றம் இல்லை, பாராளுமன்றம் இல்லை,  கலெக்டர் இல்லை, தாசில்தார் இல்லை, போலீசு இல்லை, உளவுப்பிரிவு இல்லை. ஆனாலும் மக்கள் வாழ்ந்தார்கள்.

பின்னர் மன்னர்கள் ஆண்டார்கள். மன்னன் வைத்தது தான் சட்டம், அவனை எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அது போலத்தான் அ.தி.மு.க. என்றொரு கட்சி இன்று கொள்ளை கூடாரமாக, கொள்ளை அடிப்பதை பிரிப்பதில் தான் சண்டை போட்டுக்கொண்டு   மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்கு கூட நாதி இல்லாமல், முட்டாள்களின் கூடாரமாக தினம்தினம் அராஜகங்களை அரங்கேற்றுகின்ற ஒரு கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

டெங்கு நோய் உயிரைக் கொல்லும் அளவுக்கு பெரிய நோய் அல்ல. ஆனால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியாத இந்த அரசின் சார்பாக, டெல்லியிலிருந்து, ஆம்னி பஸ்சின் மூலம் டெங்கு கொசு வருகிறது என  தெர்மாக்கோல் மேதை சொல்லுகிறார். வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டால் கொசு வராதாம். நாம் நோபல் பரிசுக்கு இந்தியாவிலிருந்து  அ.தி.மு.க. அமைச்சர்களை சிபாரிசு செய்யலாம். அந்தளவுக்கு அறிவாளிகளாக உள்ளனர்.

மதுரை ராஜாஜி தலைமை மருத்துவமனையில் என்ன நடந்தது. ஒரு துப்புறவு பணிப்பெண் ஊசி போட்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார், தலைமை மருத்துவமனைகளின் நிலையே இதுதான். மற்ற மருத்துவமனைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். இந்த அரசு எழவு வீட்டிலும் திருடுகின்றது. கொசு மருந்து அடிப்பதற்கு வக்கில்லாது மக்கள் மீது பழிப்போட்டு அபராதம் என்ற பெயரில் திருடுகிறது.

ஒரு பக்கம் டெல்டா விவசாயிகள் வறட்சி, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. கடன் கிடைக்கவில்லை, காவிரியில் தண்ணீர் வரவில்லை என செத்து மடிந்தார்கள், திருப்பூரிலே நெசவுத்தொழில் அழிந்து அங்கு மக்கள் தங்கள் உடம்பை விற்று பிழைக்க வேண்டிய நிலை. சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சீன என்ஜின் படகுகளுக்கு எதிராகப் போராடினால் அவர்கள் மீது தடியடி நடத்துகிறது போலீசு. ஏனென்றால் அந்த சீன என்ஜின் படகுகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமானவை.

கந்துவட்டியால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்ததற்கு “அவர் ஏன் அவ்வளவு கடன் வாங்கணும், விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்” என ஒரு அமைச்சர் பேசுகிறான். திருப்பூரில் ஐம்பது கோடி மதிப்புள்ள நூற்பாலை முதலாளி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாரே அதற்கு யார் பொறுப்பேற்பது?  இப்படி மக்கள் சாவதை கண்டுகொள்ளாமல் எங்களை அம்மாவின் ஆவி தான் வழி நடத்துது,  ஆவிக்கூட பேசினேன் என்று அராஜகங்களை நாள்தோறும் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் டெங்குவுக்காக 26 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார், ஆனால் MGR நூற்றாண்டு விழாவுக்கு 76 கோடி செலவு செய்கிறது எடப்பாடி அரசு. எம்.ஜி.ஆர் -க்கு விழா எடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார். அவர் தமிழகத்துக்கு கொடுத்த கொடை என்பது ஜெயா என்கிற சதிகாரியை கொண்டுவந்தது தான்.

ஜெயா தமிழகத்தை இருந்தும் கெடுத்தார், இறந்தும் கெடுக்கிறார். இப்போது ஜெயா செத்ததுக்கு விசாரணையாம். அனைவரும் பிறக்கும்போதே கட்டாயம் இறப்பும் இருக்கும். தேர்தல் நேரத்திலேயே அந்த அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என எல்லோருக்கும் தெரியும். அதுவா பிரச்சனை? அவரை மருத்துவமனையில் வைத்து 75 நாள் மக்களை ஏமாற்றிய சசி, ஓ.பி.எஸ், எடப்பாடி, மோடி, கவர்னர், வெங்கையா நாயுடு இவர்கள் மேல் தான் விசாரணை வைக்கவேண்டும். இந்தக் கொள்ளைக்கார ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று ஊழல் கண்காணிப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரியே சொல்கிறார்.

இன்னொருபுறம் மோடியின் ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தையும், வணிகர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2% வீழ்ச்சி. அதாவது 1% என்பது 15 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ஒரே வரி, ஒரே தேசம் என்று இந்த காவி கும்பல் பிதற்றுகிறது. சுருக்கமாக இந்த GST என்பது இனி தரகு முதலாளிகளும், அம்பானி, அதானி, போன்றவர்களும் வரிகட்ட தேவை இல்லை. அதாவது ஜவுளி வணிகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு இடத்தில் நூல் வாங்குவார், ஒரு இடத்தில் தைப்பார், ஒர் இடத்தில் எம்ப்ரைடு பண்ணுவார் இவருக்கு வரி. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து வணிகம் செய்யும் அம்பானி போன்றவர்களுக்கு வரி இல்லை ஏனென்றால் அவர் உற்பத்தியாளர் ஆகிவிடுகிறார்.

முன்பு ஒருவர் 5 லட்சம் வியாபாரம் செய்தால் அவர் செய்த வியாபாரத்திற்கு ஏற்றதுபோல் வரி செலுத்தினார். ஆனால் இன்று அந்த 5 லட்சத்துக்கு வாங்கியவர்கள் வரியை கட்ட வேண்டும் அது தான் GST. இன்று நாட்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் மோடியின் பணமதிப்பு நீக்கம் தான் என்று அனைத்து முதலாளித்துவ பத்திரிக்கைகளே எழுதுகின்றன. இன்னும் சொல்லப்போனால் BJP-யை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண்சோரி, சுப்ரமணியசாமி போன்றவர்களே இதை பேசுகின்றனர்.

அமித்ஷாவின் மகன் ஒரு வழக்கில் சிக்குகிறார். அவரை விசாரிப்பதற்கு பதில் விசாரிக்க சொல்கிறவர்கள் மீது வழக்கு போடுகிறது இந்த யோக்கியர்களின் கட்சியான BJP. இப்படியாக விவசாயிகள், வணிகர்கள், சிறுதொழில்கள், மாணவர்கள், மீனவர்கள், முற்போக்காளர்கள், என்று யாருமே வாழமுடியாத சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே இந்த கொலைகார அரசிடம் போய் தீர்வு தேடுவதை விட்டு விட்டு இதற்கு வெளியில் தீர்வை தேடுவது தான் சரியாக இருக்கும். மீண்டும் மெரினா போராட்டத்தை, ஒரு அமைப்பாக, ஒரு அரசியல் தலைமையின் கீழ் முன்னெடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக கூட்டத்திற்கு தோழர். வித்யாசாகர் நன்றியுரை கூறினார். வட்டாரக்கலைக்குழு தோழர்கள் உரையின் இடையிடையே புரட்சிகர பாடல்களை பாடி எழுச்சியூட்டினர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஜனநாயக சக்திகள் என கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் – மண்டலம்.

ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !

2

மக்களிடம்  பகற்கொள்ளையில்  ஈடுபடும்  பென்னாகரம் அரசு போக்குவரத்து கழகத்தை  பணியவைத்த  மக்கள்  அதிகாரம்!

மிழகத்தின்  பிரபலமான சுற்றுலா தளங்களில்  ஒன்று  ஒகேனக்கல்  இங்கு ஆயிரக்கணக்கான  மக்கள்  வந்து செல்வது வழக்கம். அதுவும்  ஞாயிற்றுக்கிழமை   என்றால்  அதிக கூட்டம்  அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை  பயன்படுத்தி  அரசு ‘காய்லாங்கடை’  பேருந்துகளை இயக்கி கட்டண கொள்ளையடித்து வருகிறது பென்னாகரம் போக்குவரத்து துறை. பென்னாகரத்திலிருந்து  ஓகேனக்கல்லுக்கு  செல்லும் பேருந்துக்கு 8 ரூபாயும், டவுன் பஸ்சுக்கு  6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

29.10.2017 அன்று ஞாயிற்றுகிழமை  என்பதால் காயிலாங்கடைக்கு  போடவேண்டிய  டவுன் பஸ்களை இயக்கி  6 ரூபாய் வாங்க வேண்டிய  பேருந்து  கட்டணத்திற்கு  பதிலாக 10 ரூபாய் வசூலித்தனர். அன்று  மாலை  3.30 மணிக்கு  ஒகேனக்கல்  பேருந்து  நிலையத்திலிருந்து 7-ம் எண்   டவுன் பஸ் பென்னாகரம்  சென்றது.  இதில்  60 க்கும்  மேற்பட்ட  பயணிகள்  பயணம்  செய்தனர். இந்த பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்களும்  பயணம் செய்தனர்.

அப்போது நடத்துனர்  6 ரூபாய்க்கு  பதிலாக  10 ரூபாயை  டிக்கெட்டை  கொடுத்தார்.  மக்கள்  டவுன் பஸ்சில்  அநியாயமாக  காசு வாங்கிறீங்க என்று  முணுமுணுத்தனர்.  அப்போது பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்கள், “யாரும் பயணசீட்டு  வாங்க வேண்டாம்”  என்று  மக்களிடம்  பேசினர். இதனையடுத்து  நடத்துனர் மாதுராஜ்  இது    சிறப்பு  பேருந்து;   அதனால்  டிக்கெட் விலை 10 ரூபாய் தான்; வாங்கினால் வாங்கு, இல்லை என்றால் இங்கே இறங்கு” என்று நடுகாட்டில் இறக்கி விட முயற்சித்தார்.

அப்போது, வயதான  முதியவர்கள், பெண்கள், கை குழந்தைகள் என  அனைவரும்  தவித்தனர்.  அதை பார்த்த மக்கள்  அதிகாரம் தோழர்கள்   யாரும்  பேருந்தில்  இருந்து  இறங்காதீர்கள்  என மக்களிடம் அறிவித்துவிட்டு, ஒட்டுனரிடம்  பணிமணைக்கு  பேருந்தை விடுங்கள் இல்லை எனில் அதிகாரியை  வரசொல்லுங்கள்  என்று கூறினர்.

அதன் பிறகு  காட்டு பகுதியில் இருந்து  வெளியே உள்ள செக்போஸ்ட்டுக்கு  ஒட்டி வந்தார் ஓட்டுநர். அப்போது  அங்கு இருந்த  போக்குவரத்து  போலீசு இன்ஸ்பெக்டர்  மக்களை  மிரட்டினார். இதற்கு  அச்சபடாமல் மக்கள்  அதிகார தோழர்கள்  “திருடனுக்கு போலீசு ஆதரவாகத்தான்  செயல்படும்” என்பதை  பேருந்தில்  அம்பலப்படுத்தி  பேசினர்.  இதனை கண்ட போலீசு உடனே பேருந்தில் ஒரு  போலீசை   உடன்  அனுப்பி   பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  அங்கு  பணியில் இருந்த எஸ்.ஐ கல்பனா  பேருந்தில் வந்த பயணிகள் கொடுத்த புகாரை  பெற்று,  கூடுதலாக  கட்டணம் வசூலிக்க நிர்பந்தித்த அதிகாரிகள்  மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  பதிலாக  புகாரை  வாங்க மறுத்து விட்டார்.

இதனை  அடுத்து  அங்கு வந்த   பென்னாகரம்  போக்குவரத்து  கிளை மேலாளர்   போக்குவரத்து  நட்டத்தில் ஓடுது, என்ன சார்  பண்ண முடியும்?  இனிமேல்  கூடுதலாக  வசூலிக்க மாட்டோம்  என்றார். இதனை  குறுக்கிட்ட  மக்கள்  அதிகாரம் தோழர்கள்  இனி கூடுதலாக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று  எழுதித் தருமாறு  கேட்டனர்.

”அதெல்லாம் முடியாதுங்க, இனிமேல்  நடக்காது” என எழுதி தர  மறுத்தார்.  அப்போது  காவல் நிலையத்துக்குள்  வேகமாக  வந்தார்  இன்ஸபெக்டர் சிவராமன். ” மக்கள் அதிகாரத்துக்கு  இதே வேலையா போச்சு” என சத்தம் போட்டு பேசினார்.  ”கூட்டம்  இருக்குதுன்னு  பேசறீங்களா?” என்று  அதிகாரிகளுக்கு  ஆதரவாக  கண்மூடித்தனமாக  பேசினார். அதற்கு  ”அரசாங்க அதிகாரின்னா  பொறுமையா  பேசுவிங்க, மக்கள்ன்னா  எரிஞ்சு ,பொறுஞ்சி   மிரட்டி சத்தமா  பேசுவிங்க இல்லையா சார்?” என்று மக்கள்  அதிகார தோழர்கள் கேட்டனர்.

மேலும் கிளை மேலாளரிடம்  நீங்களும்  ஒரு  பெட்டிசன்  கொடுங்க  இரண்டு தரப்பிலும்  வழக்கு போடலாம் என்று மிரட்டினார்  இன்ஸ்பெக்டர். நீங்க  திருடனுக்கு  ஆதரவாகதான் பேசுவிங்க என்று தோழர்கள் கேட்ட உடனே  ”இவங்களுக்கு  மொதல்ல  பெட்டிசனை வாங்கி கிட்டு  சிஎஸ்ஆர்  போட்டு கொடுங்க” என்று  ஆத்திரத்தோடு  பேசி  உள்ளே  சென்றுவிட்டார்.

தினந்தோறும்  மக்கள்  தலையில் ஏதாவது ஒரு வரியை சுமத்தி கொள்ளையடிக்கும்  அரசு,  ஞாயிற்றுகிழமை  என்பதாலே  சுற்றுலா  பயணிகளையும், சாதாரண  உழைக்கும்  மக்களையும் பட்டபகலில் சிறப்பு  பேருந்து  என்று காய்லாங்கடை பஸ்ஸுக்கு கூடுதல்  கட்டணம்  வசூலித்து திருட்டை  பகிரங்கமாக  நடத்துகின்றனர். போக்குவரத்து  துறை அதிகாரிகள்.

இந்த மோசடியை  எதிர்த்து  கேள்வி கேட்டால் போலீசு  போராடுபவர்களை  மிரட்டுகிறது.  ஏற்கனவே  கடந்த ஆண்டு  பேருந்தை  மலைப்பகுதியில்  இயக்கியதால்  பெரிய  விபத்து ஏற்பட்டு  11  அப்பாவி  மக்கள் ஒகேனக்கல் மலைப்பகுதியில்   இறந்தனர். இது போன்ற விபத்துக்கள்  ஒகேனக்கல்  மலைப்பகுதியில்  அடிக்கடி சர்வ சாதாரணமாக  நிகழ்கின்றன.

பயணிகளின்   பயணத்தை  பாதுகாப்பாக  கொண்டு செல்வதற்கு  வக்கற்ற  அரசமைப்பு  மக்களை  பல வகையில்  சிறப்பு கட்டணம், விழா கட்டணம்  என்ற பெயரில்  கொள்ளையடிப்பதே நோக்கமாகக்  கொண்டு அதிகாரிகள்  செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு  அதிகாரிகளின்  வாய்வழி  உத்தரவு  போட்டு நடத்துனர்களை  மிரட்டி கூடுதல்  கட்டணம்  வசூலிக்க  நிர்பந்தம்  செய்கின்றனர்.

இது போல்  மக்கள்  கேள்வி கேட்கும் போதோ, போராடும் போதோ  ஓட்டுனர்கள்  நடத்துனர்கள் மீது  நடவடிக்கை  எடுத்து  அதிகாரிகள்  தப்பித்து  கொள்கின்றனர். இந்த பகற்கொள்ளையை திமிரோடு அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முன்நின்று கேள்வி கேட்கும் நபர்கள் மீது  வழக்கு போடுவதாக மிரட்டுகின்றது போலீசு. அநியாயம்  நடக்கும்  போது  தட்டிகேட்கவும், வீதிக்கு வரவும், தயங்க கூடாது   என்பதே  தற்போது நம்முன் நிற்கும் ஒரே வழி என்பதை  இப்போராட்டம்  உணர்த்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தொடர்புக்கு : 81485 73417.
த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும் ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !

0

த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும்  ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்

2

முதலாளித்துவம் –  ஒரு பேய்க்கதை !

முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு இயற்கை அழிக்கப்படுகிறது ! எங்கும் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ! மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக பூமி மாற்றப்படுகிறது !
நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan

 

கோடிக்கணக்கான மக்கள் வீடில்லாமல் இருக்கையில், பல வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் தேங்கி நிற்கின்றன. இது தான் முதலாளித்துவத்தின் இயல்பான பண்பு. இதுவே முதலாளித்துவத்தை வீழ்ச்சியை நோக்கி உந்தித் தள்ளும் அதன் உள்முரண்பாடு.

 

திருடப்பட்ட நமது உழைப்பு தான் மூலதனமாக முதலாளிகளின் வசம் குவிந்திருக்கிறது!. நமது உரிமையை நாம் கேட்கும் போது, அவர்கள் நம்மையே குற்றஞ்சாட்டுகிறார்கள்!

 

டந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் தான் மார்க்ஸின் மூலதனத்தில் பொதிந்திருக்கும் உண்மை  முதலாளித்துவவாதிகளின் மண்டையில் உறைத்தது! வால்வீதி எழுச்சியின் போது அதனை எண்ணி பயங்கொள்ளச் செய்தது!
ஓவியர்: கார்லோஸ் லடூஃப் ( Carlos Latuff ) – பிரேசில்

 

2008-ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது திவாலான கோல்டுமென் சாக்ஸ் எனும் முதலீட்டு வங்கி நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பண உதவி செய்து தூக்கிவிட்டது. அந்நிறுவனத்தால் திவாலான மக்கள் நடுத்தெருவில்! நம்புங்கள் முதலாளித்துவம் வண்ணமயமானது !
நன்றி: cartoon movement ஓவியர்: எலிக்கோட்ரிஸ்ட்

 

முதலாளித்துவ வெறியாட்டத்தின் கோர விளைவுகளிலிருந்து மீள ஒரே தீர்வு – கம்யூனிசமே !

கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!

3

மிழகத்தில் கந்து வட்டி கொடுமை போலிசு, அதிகாரிகளின் ஆசியோடு தலைவிரித்தாடுகிறது என்பதற்கான சமீபத்திய சாட்சியே நெல்லை இசக்கிமுத்துவின் மரணம். இசக்கிமுத்து எரிவதை பார்த்து பதறாத மனம் இல்லை. அந்த மரணத்தின் பின்னால் இருக்கும் வலி தோய்ந்த துயரங்களைச் சொல்லி மாளாது.

திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் அன்று  தன் தாய் பேச்சியம்மாள், தம்பி கோபியை நெல்லை கலெக்டர் அலுவலகம் வரச் சொல்லி விட்டு அவர்கள் கண்ணெதிரேயே குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை என்னவென்று சொல்வது. “ஐயோ…. எறியிறது எம்மொவனும், மருமொவளும்……என் பேத்திமாருங்களும் தான்” என்று பேச்சியம்மாள் கதறியதை நம்மால் மறக்க முடியாது. அன்று எரிந்த நெருப்பில் பொசுங்கியது இசக்கி மட்டுமல்ல. இந்த அரசு குறித்த மாயையும் தான்.

தீக்குளித்த இசக்கிமுத்து கந்து வட்டி தொல்லை காரணமாக நெல்லை மாவட்ட கலெக்டரிடம் ஆறு முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அச்சன்புதூர் போலீசும், கந்து வட்டி கும்பலோடு சேர்ந்து  இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளது. தன்னை பாதுகாக்க வேண்டிய அரசே கைவிட்ட நிலையில் தான், இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிசாருன்யா, அட்ஷயபரணிகா ஆகியோருடன் தீக்குளித்தார்.

தமிழகத்திற்கு இது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு  முன்பு தருமபுரியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, கட்ட முடியாத சுமார் 27 பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான் சிவராஜ் என்ற காமக் கொடூரன். தனக்கு நேர்ந்த  கொடூரத்தை வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் வெளியில் சொல்லவில்லை.  அன்று தருமபுரி சம்பவத்தை ஊடகங்கள் பரபரப்பாக்கி கல்லா கட்டியதை தவிர வேறெதுவும் பெரியதாக நடந்து விடவில்லை. வழக்கம் போல் “கைது நாடகம்” அரங்கேறியது அவ்வளவுதான்.

அதே போல, சமீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் தாமரைக் கண்ணன்,  கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அதே போல் மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் அருந்தி ஐந்து பேர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. விசாரணையில் கடன் பிரச்சனை என்று தெரிய வந்தது. இதுபோன்று கந்து வட்டிக் கடன் தொல்லையால் “குடும்ப தலைவர் தற்கொலை” என்பது மறைந்து “குடும்பத்துடன் தற்கொலை” செய்திதான் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.  கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள மேற்சொன்ன தருமபுரி சம்பவம் ஒன்றே போதும்.

கல்விக்காக கடன் வாங்கி அடைப்பதற்கு வழியில்லாமல் இளைஞர்கள் தற்கொலை, சிறு தொழில் நிறுவனர்கள் கந்து வட்டிக் கும்பலிடம் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை, கடன் வாங்கிய தாய்மார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கபடுவது என்று நாளுக்கு நாள் கந்து வட்டி கொடுமைகள் அரங்கேறி  வருகின்றன.

வங்கிகளில் விவசாயக்கடன், கல்விக்கடன், நகைக்கடன், வீடு கட்ட கடன், தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் என்று ஏகப்பட்ட கடன்கள் ஏழை எளிய மக்களுக்கு  வழங்கப்பட்டு வருவதாவும், மக்கள் இதனை முறையாக பயன்படுத்துவது இல்லை என்ற கோணத்தில் காரசார விவாதங்களை ஊடகங்களில் நடத்துகிறார்கள். வங்கி அதிகாரிகளும் தனியாக ’அட்வைசு மழை’ பொழிகிறார்கள்.

“இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 40,000 கிராமங்களில் தான் வங்கி கிளைகளே உள்ளன.  10, 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. அப்படி இருந்தால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு எப்படி கடன்கள் வழங்க முடியும். சில கிராமங்களில் வங்கி எங்கு உள்ளது என்பதை தேடி அலையும் நிலையும் உள்ளது” என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். வங்கிகளையே துளாவ வேண்டிய நிலையிலுள்ள இலட்சணத்தில் ’பணமில்லா பொருளாதாரம்’ என பீலா விட்டுக்கொண்டு திரிகிறார் மோடி.

தமிழகத்தில் “தென்மாவட்டங்களை பொறுத்தவரை கந்துவட்டி தொழிலில் இருந்து அம்மக்களை தனியாக பிரிக்க முடியாது” என்ற அளவிற்கு தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது. எனினும், இந்த சட்டமும், நீதிமன்றமும் வட்டித்தொழிலை ஒழித்த பாடில்லை.

அருண் சக்திகுமார், நெல்லை மாவட்ட எஸ்.பி.

அதிக வட்டி வசூலிப்பது, வட்டி செலுத்தாதவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவதை தடுக்க கடந்த 1957 -ம் ஆண்டிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டது. அது ஏட்டளவிலேயே முடங்கிக் கிடக்கின்றது. தமிழ் சினிமா நாயகர்களின்  ஆதர்சன இயக்குனரான மணிரத்னத்தின் சகோதரரும், ஜெயா ஆட்சியில் அரசுப் பணத்தில் படம் எடுத்தவருமான தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பின்னர், 2003 -ம் ஆண்டு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த ‘A1’ ஜெயா. இருப்பினும் இந்த சட்டம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது. முக்கியமாக இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதனை கழிப்பறை காகிதமாகத் தான் பயன்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் போலீசு கும்பல் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தையே நடத்தி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கந்து வட்டியை பொறுத்தவரை காவல்துறையை குற்றம் சாட்ட முடியாது” என்று கூறி முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்கிறார்.

இத்தனைக்கும் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லையில் வெறும் 302 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த பிரச்சனை முன்னுக்கு வந்த பிறகு தான் பத்து பேர் மீது வழக்கு பதிந்து நான்கு பேரை சிறையில் அடைத்துள்ளது போலீசு .

அதே நாளிதழுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், “கந்து வட்டி பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காத போலிசு, அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்” என்கிறார்.  மேலும் அவர், “கந்து வட்டி தடுப்பு சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்காத வரையில் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபோது “சட்டத்தை கடுமையாக்கினால்” இந்த குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்றார்கள். என்ன நடந்தது? பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே ஒழிய பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

கடந்த 2013ல் “ தி இந்து” நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், கந்து வட்டி தொடர்பாக தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும்.

கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டது ஜெயா அரசு. ”ஒருமணி நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை என்றால் “சஸ்பென்ட்” செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோவை மிரட்டிய நீதிமன்றம், தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பற்றி எந்த கண்டணமும் தெரிவிக்கவில்லை.  கந்து வட்டி விஷயத்தில் பல நூறு தற்கொலைகள் அரங்கேறிய பின்னரும் அதனை கண்டும் காணாமலும் தான் இருந்து வந்துள்ளது. இதுதான் நீதிமன்றத்தின் இலட்சணம்.

கந்து வட்டி, கடன் தொல்லையில் ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்புமே சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எதிராகத் தான் உள்ளது. தான் இயற்றிய சட்டத்தை தானே மீறியுள்ளது. இந்த கட்டமைப்பின் தோல்வி தான் இசக்கிமுத்துவை தீக்கிரையாக்கியது. மீண்டும் இவர்களையே நம்பினால் நம் கதி என்ன ஆகும்? மக்கள், பகுதிக் கமிட்டிகளை ஏற்படுத்தி, அதன் மூலமாக கந்துவட்டிக்காரர்களையும், அவர்களது கூட்டாளிகளான போலீசு கிரிமினல்களையும் விசாரித்து தண்டனை வழங்கினால் தான்இசக்கிமுத்துக்களின் மரணத்தை தடுக்க முடியும்.

மேலும் :

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்

2

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017  அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரளாக பொதுமக்களும்,  தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு தலைமையேற்ற தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்…

“எடப்பாடி அரசாங்கம் என்பது மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் கல்லா கட்டுவதையே தொழிலாக கொண்ட அரசாக உள்ளது. அதன் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் கேலிகூத்தாக உள்ளது மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர், வாசலில் சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் இன்னொரு அமைச்சர். இப்படிப்பட்ட அடிப்படை அறிவற்ற பேச்சுக்கள் மக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது.

இந்த அரசின் அராஜகங்கள், அக்கிரமங்கள் ஒன்றா இரண்டா? ஒட்டு மொத்த அரசின் செயல்பாடுகளுமே அக்கிரமமாக தான் உள்ளது. தலைமை செயலகம் என்பது மக்களுக்காக திட்டங்களை போட்டு செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை அப்படி மக்களுக்காக நடக்கிறதா என்றால் இல்லை. ஒரு அதிகாரியாவது மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்களா? என்றால் இல்லை. மக்கள் நல திட்டங்களை போடுகிறோம் என்ற பெயரில் கமிசன் பிரித்து கொண்டு தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ளுவது தான் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் பங்கு போவதில்லை, எதிர் கட்சியில் உள்ளவர்களுக்கும் சேர்த்து தான் பங்கு போகிறது. இவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

சமூகத்தில் நீர் நிலைகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீர் நிலைகளை அழிக்கும் வேலையை செய்கிறது. போலீசுத் துறை சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை மாறாக சீர்குலைக்கிறது. நமக்கு எதிராக மாறியுள்ள அரசை வீழ்த்தி மக்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர் ஜெயபிரகாஷ் – சென்னை பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்….

“கே.கே நகர் பகுதியில் கடந்த மழையின் போது ஏற்பட்ட ஒரு பள்ளம் ஆறு மாத காலமாக மூடப்படாமல் இருக்கிறது, அதை மூட கூட வக்கில்லாமல் தான் இவர்கள் இருக்கிறார்கள். தான் வாழும் பகுதியில் தண்ணீர் பிரச்சனைக்காகவும், அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் போராடும் போது அதை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் மதிப்பதில்லை.

மீஞ்சூர் பகுதியில் மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைத்து விவசாயம் அழிக்கப்படுகிறது. இதை தெரிந்தே தடுக்காமல் இருக்கும் நிர்வாகிகள் என ஒட்டு மொத்த அரசு நிர்வாகமே செயலழிந்து, எந்த பிரச்சனையும் தடுக்க வக்கில்லாமல் மக்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. இதற்கு மாற்று நமது பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரத்தை நாமே கையில் எடுப்பதுதான்.  இந்த பகுதியில் ஒரு பிரச்சனையென்றால் நாம் எல்லோரும் சேர்ந்து தானே கேள்வி கேட்போம் அது தான் மக்கள் அதிகாரம்”

அதன் பின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தோழர் இராஜூ – மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம் – அவரது உரையில்…

அரசியல் அராஜங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை என்ற இந்த பொதுக்கூட்டத்தை இன்று சென்னையில் தொடங்கியுள்ளோம். இன்று தர்மபுரி, விழுப்புரம் என மொத்தம் மூன்று இடங்களில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது. மேலும் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

இன்று எதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவது; போராட்டம் நடத்துவது? கந்துவட்டியை எதிர்த்து நடத்துவதா? டெங்கு பிரச்சனையை கண்டித்து நடத்துவதா? பொறையாரில் 8 தொழிலாளர்கள் இறந்தார்களே அதற்கு போராட்டம் நடத்துவதா? இல்லை புறம்போக்கு நிலத்தை யார் வேண்டுமென்றாலும் ஆக்கிரமிக்கலாம் என்பது போல செயல்படும் ஓபிஎஸ், இ.பி.எஸ் யை எதிர்த்து போராட்டம் நடத்துவதா? தினகரனை எதிர்த்து நடத்துவதா? எதை பேசுவது என்றே தெரியாமல் பேசும் எதிர் கட்சிகளை விமர்சித்து கூட்டம் நடத்துவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்,  வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என இவர்களின் கோரிக்கைகளிக்காக போராடுவதா? ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை முறை போராடுவது? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமான அரசியல் அராஜகங்களுக்கும், அக்கிரமங்களும் முடிவுக்கட்டும் போராட்டங்கள் தேவை. அப்போது தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஒவ்வொரு பிரச்சனைக்கும் லட்சக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியுமா? டெங்கு கொசு கடித்து மக்கள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஒரு நாளைக்கு 10 பேர் இறக்கிறார்கள். மக்கள் இறப்பது என்பது வெறும் புள்ளி விவரங்களாக ஆகிவிட்டது. இதற்கு என்ன சொல்கிறார்கள் அரசு முதலில் மர்ம காய்ச்சல் என்றது. அப்புறம் நிலவேம்பு கசாயம் குடி என்கிறது. ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர்.  எவ்வளவு திமிராக பேசுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் டெங்குவிற்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்க முடியாமல் இருக்கிறதா? மற்ற நோய்களுக்கெல்லாம் ஒழுங்காக மருத்துவம் பார்க்கிறார்களா?

விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் இருவரும் நான்கு நாள் ஊரில் உள்ள எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை பார்க்க வேண்டும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கூடம், கழிப்பிடங்கள், பிரதேச பரிசோதனை கூடம், மற்றும் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் கொட்டியிருக்கின்ற கழிவுகள், என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அதன் பிறகு பேச வேண்டும்.

டெங்கு ஒரு பிரச்சனையில்லை என்று ஒட்டு மொத்த அரசும் சொல்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை என எங்குமே சரியான மருத்துவ வசதியில்லை. கொசு கடித்தால் செத்துவிடுமோ என்று மக்கள் நினைப்பது இந்த அரசு நம்மை காப்பாற்றாது என்று அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் தான் வருகிறது.

மக்கள் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் போது தமிழக அரசு வெறும் 40 பேர் தான் இறந்துள்ளார்கள் என்று சொல்கிறது. மத்திய அரசு ஆய்வு குழு 18 பேர் இறந்ததாக சொல்கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். சிறு வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கி கொண்டிருக்கும் போது அவர்களிடம் அபராதம் போடுவது அயோக்கியத்தனம் இல்லையா?

அரசு அதிகாரிகளே போலீஸ் நிலையத்திற்கு செல்லுங்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு போய் பாருங்கள். டெங்கு கொசுவை உருவாக்கும் நிலையிருந்தால் அவர்களுக்கு அபராதம் போடுங்கள். நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். அந்த வளாகம் நீதிபதி கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அங்கு பிரச்சனையிருந்தால் 50,000 அபராதம் போடுங்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? மருத்துவம் கிடைக்காமல் மக்கள் சாகிறார்கள் என்றால் மருத்துவம் தரமுடியவில்லை என்றால் இந்த அரசு தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம். தோற்றுவிட்டால் மன்னிப்பு கேட்டவேண்டும். பணிந்து போகவேண்டும். நாம் என்ன தவறு செய்தோம், நம் குழந்தைகளை, உறவினர்களை இழப்பதற்கு, தவறு செய்தது இராதாகிருஷ்ணனும், விஜயபாஸ்கரும், அதிமுக-வும், அதிகாரிகளும் தான் காரணம். நாம் ஏன் சாக வேண்டும்?

நெல்லையில் இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்து இறந்தார், இதற்கு யார் காரணம், பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்காத கலெக்டரும், எஸ்.பி-யுமே காரணம், இதை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். கலெக்டர் நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியாதா? இல்லை கந்துவட்டி விட்ட முத்துலட்சுமியை எஸ்.பி கண்டித்து இருந்தால் தடுத்திருக்க முடியாதா?. அந்த குழந்தைகள் ஏன் சாக வேண்டும். நமக்கு பிறகு யாரும் நம் பிள்ளைகளை காப்பாற்ற மாட்டார்கள். நமக்கு பிறகு நமது குழந்தை பிச்சையெடுக்கும் என்று நினைத்து தானே குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

கலெக்டர் ஹெல்ப் லைன் தொடங்க போகிறோம் என்று முடித்து கொண்டார். பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து முடித்து கொண்டார்கள். சில கட்சிகள் கடுமையான தண்டனை வேண்டும். மூன்று வருடம் என்று தான் இப்போது தண்டனை இருக்கிறது 30 வருடம் தண்டனை என்று கடுமையான சட்டம் கொண்டு வந்தால் இப்படி நடக்காது என்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசி முடித்து கொண்டார்கள்.

கந்துவட்டிக்காக நான்கு பேர் செத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது. எங்கே போனால் தீர்த்து கொள்ள முடியும் கலெக்டரிடமோ, நீதிமன்றத்திற்கோ போனால் தீர்த்து கொள்ள முடியுமா? இது தனிநபர் பிரச்சனை இல்லை. இது சமூக பொருளாதார பிரச்சனை. ஒருத்தர்  10 வட்டிக்கு கடன் வாங்கிறார் என்றால் அவசர தேவைக்கு தான் வாங்குவார். கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, தொழிலுக்கோ தான் கடன் வாங்குகிறார். அந்த நேரத்தில் அவர்களுக்கு கந்து வட்டி விடுபவன் தான் மகாராசனாக தெரிகிறான். கந்துவட்டிக்காரன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான், சினிமா, வியாபாரம் என அவன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான்.

கந்துவட்டிக்காரன் தான் சமூக பொருளாதாரத்தை இயக்குகிறான். அரசு என்ன செய்கிறது. கணக்கில் வராத பணம் கருப்பு பணம் என்று தான் சட்டம் சொல்லுகிறது. கந்துவட்டி என்பது கருப்பு பணம் தானே? கந்துவட்டி என்ன உழைக்கும் தொழிலா? இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இதை எப்படி மாற்றுவது? இதற்கு என்ன தீர்வு?  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரத் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்வோம். கடனாக  பணம் கொடு என்று கேட்போம்.

எந்த முதலாளியாவது நிரந்தர வைப்பு தொகை லட்சக்கணக்கில் அரசு வங்கியில் போட்டு வைத்துள்ளானா? டாடா, பிர்லா, அம்பானி, மிட்டலின் சொத்தா? அரசு வங்கிகளில் இருப்பது யாருடைய பணம் நம்முடைய பணம், பெரும்பான்மை மக்களின் சேமிப்பு பணம். அரசே கொடுக்கும் புள்ளிவிபரம் என்ன? பாராளுமன்ற தணிக்கை குழுவின் அறிக்கை என்ன? பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் 70% பன்னாட்டு கம்பெனிகள், தரகு முதலாளிகளின் கடன் தான். விவசாயிகள் கடன் வெறும் 1% தான். பெண்ணின் கையை பிடித்து இழுத்தால் உடனே அடிப்பது போல, கந்துவட்டியை உடனே ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு பலர் விண்ணப்பித்துள்ளார்கள். அந்த வேலைக்கு 8 வதிலிருந்து 10 வது வரை படித்தால் போதும். ஆனால் அதற்கு பி.இ, எம்.ஏ,, பி.எட் படித்தவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார்கள். இந்த அரசு உயிரோடு இருக்கிறதா? இல்லையா?. பி.இ படித்தால் வேலைக்கிடைக்காது என்றால் எதற்கு இன்ஜினியரிங் கல்லூரி இழுத்து மூட வேண்டுயது தானே?.

பல அரசு துறைகள் இருந்தும் ஒன்றும் செயல்படவில்லை, பொதுப்பணித்துறை கட்டும் பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. வெறும் செய்தியாக கடந்து போகிறோம். 2000 வருடத்திற்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பென்னி குவிக் கட்டிய முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. இவர்கள் கட்டிய பல தடுப்பு பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. இதற்கு யாரை தண்டிப்பது, யாரிடம் கேள்வி கேட்பது? ஆனால் இவர்களிடம் தான் நாம் மனு கொடுக்கிறோம். எவன் தாலியை அறுத்தானோ? அவனிடமே மனு கொடுக்கிறோம். அவன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் நாம் தீக்குளிக்கிறோம், விஷம் குடிக்கிறோம், போராடுகிறோம். எவன் விவசாயத்தை அழித்தானோ அவனிடமே விவசாயத்தை காப்பாற்று என்று மன்றாடுகிறோம். இவர்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.

இசக்கிமுத்து செத்த பிறகு எல்லா கலெக்டர் அலுவலகத்திலும் தீயணைப்பு கருவிகள் பொருத்துகிறது அரசு.  பிரச்சனைக்கு என்ன காரணம் எப்படி தீர்ப்பது என்று யோசிப்பதில்லை. யாரும் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தீக்குளித்துவிடக்கூடாது என்று தான் சிந்திக்கிறார்கள். டெங்கு பிரச்சனையென்றால் எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல், காய்ச்சல் வந்ததையே மறைப்பது, மிரட்டுவது. எப்படி தீர்ப்பது என்று சிந்தக்கவில்லை எதற்காக இந்த அரசு மக்களை ஆள வேண்டும். குடும்ப தலைவர் என்பவன் மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், அதை விடுத்து மனைவியை விபச்சாரத்திற்கு விடுவது, பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து பிழைப்பது என்றால், அவன் குடும்ப தலைவனா? அது போல் இந்த அரசும் செயல்படுகின்றது.

கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இசக்கிமுத்து செத்தால் தான் கந்துவட்டியை பற்றி பேசனும், ஏழை அனிதா செத்தால் தான் கல்வி உரிமையை பற்றி பேசனும், விவசாயி செத்தால் தான் விவசாயத்தை பற்றி பேசனும் என்றால் எதற்கு இந்த அரசு. மொத்த பிரச்சனைக்கும் காரணமே இந்த அரசு தான். இந்த அதிகாரிகள் தான் காரணம்.

தீர்வு தான் என்ன?

எந்த சட்டத்தை படித்துவிட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள்? எந்த சட்டத்தையும் படிக்காமல் தான் மக்கள் தங்கள் வேலைகளை தாங்களே பார்த்து கொள்கிறார்கள். ஒரு பொது ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு தான் வாழ்கிறார்கள்.

மெரினாவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடினார்கள். ஒரு திருட்டு இல்லை, நகை பறிப்பு இல்லை, பெண்களுக்கு தொந்தரவு இல்லை. ஏழு நாட்கள் இரவு தூங்கி காலையில் எழுந்து போராடினோம். யார் உணவு கொடுத்தார்கள், யார் போர்வை கொடுத்தார்கள் யாருக்கும் தெரியாது. போக்குவரத்தை அவர்களே ஒழுங்கு செய்து கொண்டார்கள். மக்களிடம் ஒழுங்கு அர்ப்பணிப்பு இருக்கிறது. மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை இவர்களெல்லாம் இல்லாததா பிரச்சனை? இருப்பது தான் பிரச்சனை? அவர்கள் இருப்பதால் தான் பிரச்சனை. இந்த அரசு கட்டமைப்பில் ஆளை மாற்றி பிரயோஜனம் இல்லை.

இதில் தீர்வு இல்லை என்று முடிவு செய்வோம். டாஸ்மாக் கடையை மூடனுமா? மக்கள் அதிகாரத்தை கூப்பிடுங்கள். வருகிறோம். சேர்ந்து மூடுவோம். அப்படி தமிழ்நாட்டில் பல கடைகளை மூடியுள்ளோம். அய்யா சசிபெருமாளை போல போராடி தீர்வு இல்லை. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போல போராடுவோம். கடைகளை அடித்து உடைப்போம். கடை வைப்பது ஒரு குற்றம் அதை அரசு செய்யும் போது, மக்கள் எதிர்த்து தானே போராடியாக வேண்டும். மக்கள் அதிகாரத்தில் இணையுங்கள். மக்கள் அதிகாரத்தை அழையுங்கள். உண்மையான சுதந்திர போராட்டத்தை தொடங்குவோம். இதே மாதிரி பல பொதுக்கூட்டங்கள் நடத்துவோம் அதில் நீங்கள் வந்து பேசுங்கள் பிரச்சனைகளை குறித்து பேசுவோம். தீர்வை நோக்கி நகர்வோம்.”

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி சமகால அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடப்பட்டது. இப்பொதுக் கூட்டத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் திரளான பொதுமக்கள், வணிகர்கள் என பலதரப்பினரும் கவனித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொலைபேசி : 91768 01656.