Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 477

முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

3

தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை! – சிறப்புக் கட்டுரை !

முன்னுரை:

பிரிட்டிஷ் ஐரோப்பிய முதலாளிகள் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான மூலதனத்தை எப்படிச் சம்பாதித்தார்கள்? அது சிறு முதலாளிகளைப் போல உழைத்துச் சம்பாதித்ததோ, வேறு யோக்கியமான வழிகளில் ஈட்டியதோ அல்ல. முதலாளித்துவத்தின் தாயகமான இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதன் முதலில் தோன்றிய தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கத்தினரின் ஆதி மூலதனம் திரட்டப்பட்ட வரலாற்றை, அதாவது மூலதனத்தின் ரிஷிமூலத்தைத் தனது மூலதனம் நூலில் வெளிக்கொணர்கிறார் மார்க்ஸ்.

“மூலதனம்” நூலின் முதல் தொகுதியில் “ஆதித் திரட்டல் எனப்படுவது” என்ற 8-வது பகுதி அத்தியாயங்கள் 26 முதல் அத்தியாயம் 33 வரை கொண்டுள்ளது. அவற்றில் “தொழில்துறை முதலாளி பிறந்த கதை” என்ற தலைப்பிலான அத்தியாயம் 31, தொழில் துறை மூலதனத்தின் ஆதித் திரட்சியின் வரலாற்றை விவரிக்கிறது. “முதலாளித்துவத் திரட்டலின் வரலாற்று வழிப்பட்ட போக்கு” என்ற தலைப்பிலான அத்தியாயம் 32, முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடரும் மூலதனத் திரட்டல் பற்றிய சுருக்கமான சித்தரிப்பைத் தருகிறது.

இந்த இரண்டு அத்தியாயங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் இங்கு தருகிறோம். மூல நூலில் உட்தலைப்புகள் கிடையாது. வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்பொருட்டு உட்தலைப்புகளையும் அடைப்புக் குறிக்குள் கூடுதல் வரலாற்றுக் குறிப்புகளையும் சேர்த்துள்ளோம்.

17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் தமது சொந்த நாட்டிலும், காலனியாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட கற்பனைக்கெட்டாத கொடூரங்களை மார்க்ஸ் விவரிக்கிறார். இந்தக் கொடூரங்கள் அனைத்திலும் காலனியாதிக்கவாதிகளின் கையாட்களாகவும் கூட்டாளிகளாகவும் இருந்து திரட்டப்பட்டதுதான் இந்தியத் தரகு முதலாளிகளின் மூலதனம்.

ஆதித்திரட்டலின் கொடுமைகள் அன்றோடு முடிந்து விடவில்லை. இன்று தண்டகாரண்யாவில் நடைபெறும் காட்டுவேட்டை முதல் நெடுவாசல் வரையிலான ஆக்கிரமிப்புகளிலும், சிறு தொழில்களையும் கைவினைத் தொழில்களையும் அழிக்கும் நோக்கத்துடன் திணிக்கப்படும் ஜி.எஸ்.டி. முதலான வரிவிதிப்புகளிலும் அவை தொடர்கின்றன. இவை எதுவும் சுதந்திரமான போட்டியை அடிப்படையாகக் கொண்ட தூய பொருளாதார நடவடிக்கைகளாக அன்றும் இல்லை. இன்றும் இல்லை.

வரிக்கொள்கை, மானியங்கள், வங்கிக் கடன்கள், பொதுச்சொத்துக்களை அபகரித்தல், தொழிலாளர் சட்டத் திருத்தம் உள்ளிட்ட எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு அதிகாரத்தின் துணை கொண்டு ஏவப்படும் வன்முறை நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

கடந்த காலம் குறித்த மார்க்சின் சித்தரிப்புகள், நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்கு  மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான பாதைக்கும் வழிகாட்டுகின்றன.

ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தின் ஆதிமூலதனம் எங்கிருந்து வந்தது?

அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்ததும், பூர்வகுடிகளை அழித்து, அடிமைப்படுத்தி, சுரங்கங்களில் சமாதியாக்கியதும், இந்தியாவைக் கைப்பற்றிக் கொள்ளையிடத் தொடங்கியதும், கறுப்பின மக்களை வணிகப்பொருளாய் வேட்டையாடுவதற்கான களமாக ஆப்பிரிக்காவை மாற்றியதும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி சகாப்தத்தின் இனிய விடியலின் நற்காட்சிகளாய் அமைந்தன. அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தச் செயல்கள் ஆதித் திரட்டலின் பிரதான உந்து சக்திகளாய் அமைந்தன.

இவற்றைத் தொடர்ந்து வருகிறது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான வாணிகப் போர்; உலகம் முழுவதுமே அந்த போர்க்களத்தின் அரங்கம். ஸ்பெயினிலிருந்து பிரிவதற்காக நெதர்லாந்து கலகக் கொடி உயர்த்தியதில் அது தொடங்கியது; இங்கிலாந்து தொடுத்த ஜாக்கோபின் – எதிர்ப்புப் போரில் (பிரஞ்சு புரட்சியைத் தோற்கடிக்க பிரான்சுக்கு எதிராக இங்கிலாந்து 1790-களில் நடத்திய போர்) அது பிரம்மாண்டமான பரிமாணங்களை எட்டியது; சீனாவுக்கெதிரான அபினிப் போர்களிலும் (1839-1842, 1856-1860 என இரண்டு கட்டங்களாக சீனாவைக் காலனி ஆதிக்கத்துக்குத் திறந்துவிடும்படிக் கட்டாயப்படுத்தி இங்கிலாந்தும், பிற காலனியாதிக்க நாடுகளும் நடத்திய போர்) இன்னும் பிற போர்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கிறித்துவக் காலனியாதிக்க அமைப்பு பற்றி கிறித்துவத்தைத் தனது தனித்துறையாக்கிக் கொண்ட வி.ஹோவிட் என்பவர் கூறுவதை இப்போது பார்க்கலாம். உலகின் எல்லா பிராந்தியங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் கிறித்துவ இனத்தார் என அழைக்கப்படுபவர்கள் புரிந்துள்ள  காட்டுமிராண்டிச் செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும், வேறு எந்த இனத்தாலும் – அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும், நெறி புகட்டப்படாதவர்களாகவும், கருணை, வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாகவும் இருந்த போதிலும் – உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் நிகழ்த்தப்பட்டதில்லை.

பாட்டாளி வர்க்கப் பேராசான் கார்ல் மார்க்ஸ் (இடது) மற்றும் 1867 – ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் நூலின் முகப்பு அட்டை

அன்று தலையாய முதலாளித்துவ நாடு ஹாலந்து

ஹாலந்து 17-ஆம் நூற்றாண்டின் தலையாய முதலாளித்துவ நாடாக இருந்தது. அதன் காலனிய நிர்வாகத்தின் வரலாறு, துரோகத்துக்கும், இலஞ்ச லாவண்யத்துக்கும், படுகொலைக்கும், இழிதகைமைக்கும் இடையேயான அசாதாரணமான உறவுகளின் உச்சத்தைத் தொட்டது (தாமஸ் ஸ்தாம்போர்டு ராபின்ஸ், ஜாவாவின் சரித்திரம், 1817)

ஜாவா தீவுக்குத் தேவைப்பட்ட அடிமைகளைப் பிடிப்பதற்காக அவர்கள் உருவாக்கிய பிள்ளை பிடிக்கும் முறை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. ஆள் திருடர்கள் இந்தப் பணிக்காகவே பயிற்றுவிக்கப்பட்டனர். திருடனும், மொழிபெயர்ப்பாளனும், விற்பனையாளனும் இந்தத் தொழிலில் முக்கியமானவர்கள்; உள்நாட்டு மன்னர்களே பிரதான விற்பனையாளர்கள். திருடப்பட்ட இளைஞர்கள் அடிமைக் கப்பல்களுக்கு அனுப்பப்படும் வரை செலிபிசில் (இந்தோனேஷிய தீவுகளில் ஒன்று)  இரகசியப் பாதாளச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக, மக்காசர் என்ற இந்த நகரம் கொடூரத்தில் ஒன்றையொன்று விஞ்சும் இரகசியச் சிறைகளால் நிரம்பியிருக்கிறது. பேராசைக்கும் கொடுங்கோன்மைக்கும் பலியாக்கப்பட்ட பல துர்ப்பாக்கியசாலிகள் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு இச்சிறைகளில் திணித்து வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு அதிகாரபூர்வ அறிக்கை.

மலாக்காவைப் பிடிப்பதற்காக (மலேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம்) டச்சுக்காரர்கள் அதன் போர்ச்சுக்கீசிய கவர்னரை ஊழல்படுத்தினார்கள். 1641-இல் டச்சுக்காரர்களை அவர் நகருக்குள் வர விட்டார். அவர்கள் விரைந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரைக் கொலை செய்ததன் மூலம் அவரது துரோகத்துக்கு விலையாக கொடுக்க ஒப்புக் கொண்டிருந்த 21875 பவுண்டு செலவைத் தவிர்த்துக் கொண்டார்கள். அவர்கள் கால்வைத்த இடமெல்லாம் பேரழிவு விளைந்தது. மக்கள்தொகையே சுருங்கியது.  ஜாவா தீவின் பாஞ்சுவாங்கி மாகாணத்தில் 1750-ல் 80,000 மக்கள் வசித்தனர்; 1811-ல் 18,000 பேர் மட்டுமே எஞ்சினர். என்னே வாணிபத்தின் இனிமை!

கஞ்சா விற்ற கிழக்கிந்திய கம்பெனி !

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அரசியல் அதிகார உரிமையைக் கைப்பற்றியதோடு, தேயிலை வர்த்தகத்திலும், சீனாவுடனான பொது வர்த்தகத்திலும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதி சரக்குப் போக்குவரத்திலும் ஏகபோக உரிமை பெற்றிருந்தது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இத்தோடு இந்தியாவின் கரையோர வர்த்தகமும், சுற்றியுள்ள தீவுகளுக்கிடையேயான வர்த்தகமும், இந்திய உள்நாட்டு வர்த்தகமும் கம்பெனியின் உயர் அதிகாரிகளது ஏகபோகமாய் இருந்தன. உப்பு, அபின், பாக்கு மற்றும் பிற சரக்குகள் மீதான ஏகபோகம் அவர்களுக்கு வற்றாத செல்வச் சுரங்கமாய் இருந்தது.

இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட கஞ்சா தொழிற்சாலை

கம்பெனியின் அதிகாரிகள் தாமே விலை நிர்ணயம் செய்தார்கள்; பரிதாபத்துக்குரிய இந்தியர்களை விருப்பம் போல் கொள்ளையிட்டார்கள். இதில் கவர்னர் ஜெனரலும் பங்கு பெற்றார். அவருக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன. ரசவாதிகளையும் விஞ்சும் விதத்தில், வெறும் காற்றைத் தங்கமாக்கிக் கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. காளான்களைப் போல மலையளவு செல்வங்கள் ஒரே நாளில் முளைத்தன. சல்லிக்காசு முதல் போடாமல் ஆதித் திரட்டல் நடந்தேறியது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் வழக்கு விசாரணை இத்தகைய சம்பவங்களால் நிரம்பி வழிகிறது. (1772 முதல் 1785 வரை வங்காளத்தின் கவர்னராகவும், கம்பெனியின் இந்தியப் பகுதிகள் அனைத்துக்கும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அவர், பின்னர் ஆங்கிலேய அரசால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.)

இதோ ஓர் எடுத்துக்காட்டு : சல்லிவன் என்ற அதிகாரி இந்தியாவில் அபின் பயிரிடும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு பகுதிக்கு கம்பெனிப் பணி நிமித்தம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அபினுக்கான ஓர் ஒப்பந்தம் அவருக்கு தரப்பட்டது. தனக்குக் கிடைத்த அந்த ஒப்பந்தத்தை அவர் பிண் என்பவருக்கு 40000 பவுண்டுக்கு விற்றார்; பிண் அந்த ஒப்பந்தத்தை அதே நாளில் 60000 பவுண்டுக்கு விற்றார். கடைசியில் அந்த ஒப்பந்தத்தை வாங்கியவர், இவ்வளவுக்குப் பிறகும் தனக்கு அமோக இலாபம் கிடைத்ததாகக் கூறினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களில் ஒன்றின்படி, 1757 முதல் 1760 வரை கம்பெனியும் அதன் அதிகாரிகளும் இந்தியர்களிடமிருந்து 60 இலட்சம் பவுண்டுகளை அன்பளிப்புகளாகப் பெற்றிருக்கின்றனர். (அன்று ஒட்டு மொத்த வங்காளத்தில் கம்பெனி வசூலித்த நிலவரி சுமார் 3 கோடி பவுண்டு என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் – அதாவது இந்தியாவில் கம்பெனி அதிகாரிகள் வாங்கிய இலஞ்சம் கம்பெனியின் ஒட்டு மொத்த வரி வருவாயில் 20%)  1769-க்கும் 1770-க்குமிடையில், ஆங்கிலேயர்கள் அறுவடையான நெல் முழுவதையும் வாங்கிப் பதுக்கி, கொள்ளை விலை கிடைத்தாலன்றி அதனை விற்க மறுத்து ஒரு பஞ்சத்தையே உற்பத்தி செய்தார்கள். (1769-க்கும் 1773-க்கும் இடையே சுமார் ஒரு கோடி பேரை கொன்று குவித்த வங்காளப் பஞ்சம்.)

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வங்கப் பஞ்சம்(மேல் படம்) ஒரிசா பஞ்சத்தால் (கீழ் பஞ்சம்) உருக்குலைந்து போன உழைக்கும் மக்கள்

(அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சியில் 1866-ம் ஆண்டில் ஒரிசாவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். பட்டினி கிடந்த மக்களிடம் அத்தியாவசியப் பொருட்களை கொள்ளை விலைக்கு விற்று அரசுக் கருவூலத்தை நிரப்ப முயற்சிக்கப்பட்டது.- மொ.ர்)

ஒரு செவ்விந்தியக் குழந்தையின் தலைக்கு 50 பவுண்டு

ஏற்றுமதி வர்த்தகத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் போன்ற தோட்டத் தொழில் காலனிகளிலும், கொள்ளைக் களமாக மாற்றப்பட்ட செல்வச் செழுமையும் மனித வளமும் வாய்ந்த மெக்சிகோ, இந்தியா போன்ற நாடுகளிலும் பூர்வ குடிகள் நடத்தப்பட்ட விதம் இயல்பாகவே பயங்கரமானதாய் இருந்தது. காலனி என்பதன் சரியான பொருளில், ஐரோப்பியர்கள் நேரடியாக குடியேறிய நாடுகளிலும் கூட, ஆதித் திரட்டலின் கிறித்துவத் தன்மை பொய்த்து விடவில்லை.

1703-இல் புரோட்டஸ்டண்ட் சமயத்தின் மதச்சான்றோர்களான நியூஇங்கிலாந்தின் பியூரிட்டன்கள், தமது சமயப் பேரவையின் ஆணைகள் மூலம், ஒவ்வொரு வெட்டப்பட்ட செவ்விந்திய பழங்குடியினரின் தலைக்கும், உயிரோடு பிடித்து வரப்படும் ஒவ்வொரு பழங்குடி மனிதருக்கும் 40 பவுண்டு விலை நிர்ணயித்தார்கள். 1720-ல் வெட்டப்பட்ட ஒரு பூர்வகுடி தலைக்கு வைத்த விலை 100 பவுண்டு ஆனது; 1744-ல் மசச்சூசெட்ஸ் விரிகுடா பிரதேசத்தில் குறிப்பிட்ட பழங்குடியினத்தினரைக் கலகக்காரர்கள் எனப் பிரகடனம் செய்த பின்னர், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் வருமாறு: 12 வயதுக்கு மேற்பட்ட ஆணின் வெட்டப்பட்ட தலைக்கு 100 பவுண்டு (புதிய நாணயத்தில்), ஆண் கைதிக்கு 105 பவுண்டு,  பெண் மற்றும் குழந்தைக் கைதிக்கு தலா 50 பவுண்டு, வெட்டப்பட்ட பெண் தலைக்கும் குழந்தை தலைக்கும் தலா 50 பவுண்டு.

ஐரோப்பாவுக்கு வெளியே அப்பட்டமான கொள்ளை மூலமும், அடிமைப்படுத்தல் மூலமும், படுகொலைகள் மூலமும் கைப்பற்றப்பட்ட செல்வங்கள் கடல் வழியாகத் தாய்நாட்டுக்கு மிதந்து வந்து அங்கே மூலதனமாக மாற்றப்பட்டன.

மூலதனத் திரட்டலுக்கு நெம்புகோலாக பொதுக்கடன், தேசிய வங்கிகள்!

பொதுக்கடன் ஆதித் திரட்டலின் வலுமிக்க நெம்புகோல்களில் ஒன்றாகிறது. மந்திரக் கோலை வீசியதும் நிகழும் அற்புதம் போல், இது மலட்டுப் பணத்தைக் குட்டி போடும் திறனுடையதாக்கி, அதனை மூலதனமாக மாற்றுகிறது; தொழில் துறையிலும், ஏன், கடுவட்டியிலும் ஈடுபடுத்தப்படும் போது தவிர்க்கமுடியாதபடி நேரும் இன்னல்களும் அபாயங்களும் இல்லாமலேயே பொதுக்கடன் மூலம் பணம் மூலதனமாக மாறுகிறது.

காலனி ஆட்சியில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேங்டிங்ஸ் மீது இலண்டனில் நடந்த ஊழல் விசாரணை குறித்த சித்திரம்

அரசுக்குக் கடனளிப்போர் உண்மையில் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை; ஏனென்றால், அவர்கள் கடனாகத் தரும் பணம் எளிதில் மாற்றத்தக்க பொதுக்கடன் பத்திரங்களாக அவர்கள் கைக்கு உடனடியாகத் திரும்புகிறது. இப்பத்திரங்கள் ரொக்கப் பணம் போலவே அவர்களுக்கு பயன்படுகின்றன. இவ்விதம் வருடாந்திர வட்டி பெறுவோரின் சோம்பேறி வர்க்கம் ஒன்று உருவாகிறது; அரசாங்கத்துக்கும் தேசத்துக்கும் இடைத்தரகர்களாய்ச் செயல்படும் லேவாதேவிக்காரர்கள் எந்த முயற்சியும் இல்லாமலேயே, திடீரென செல்வம் குவிக்கிறார்கள். தேசக்கடன் தொகை ஒவ்வொன்றிலும் கணிசமான பகுதி வரிக் குத்தகையாளர்களுக்கும், வணிகர்களுக்கும், தனியார் உற்பத்தியாளர்களுக்கும் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழும் மூலதனமாய்ப் பயன்படுகிறது. அதோடு கூடவே, கூட்டுப் பங்கு நிறுவனங்கள் உருவாவதற்கும், அனைத்து விதமான ஊக பேர பரிவர்த்தனைகளுக்கும், பங்குச் சந்தை ஊக வணிகத்துக்கும், சுருங்கச் சொல்லின், பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் நவீன வங்கியாதிக்க சிறு கும்பலுக்கும் தேசக் கடன் வழிவகுக்கிறது.

தேசிய நாமம் சூட்டப்பெற்ற பெரும் வங்கிகள் எல்லாம் அதற்கு முன் தனியார் ஊக வணிகர்களின் சங்கங்களாகவே இருந்தன; அவை ஆட்சியாளர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகப் பெற்ற தனிச்சலுகைகள் மூலம், அரசுக்கே கடன் கொடுக்கும் நிலையை அடைந்தன. ஆகவே, தேசக் கடன்கள் திரண்டு பெருகியதற்கான பிழையில்லாத அளவீடு, இந்த வங்கிகளின் மூலதனத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிகரிப்பே ஆகும். தேசக் கடனின்  முழு வளர்ச்சி 1694-ல் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது.

8% வட்டிக்கு அரசுக்குக் கடன் கொடுத்து இங்கிலாந்து வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. வங்கி-நோட்டு வடிவில் பொது மக்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் அதே மூலதனத்திலிருந்து பணத்தை உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் அதற்கு அதிகாரமளித்தது. அதாவது, இந்த நோட்டுகளைப் பயன்படுத்தி வர்த்தகப் பத்திரங்கள் மீது கடன் கொடுக்கவும், சரக்குகளின் பேரில் முன்பணம் கொடுக்கவும், தங்கம்/வெள்ளி வாங்கவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது

இங்கிலாந்து வங்கி படிப்படியாகவும், தவிர்க்க முடியாதபடியும் நாட்டின் உலோகச் சேமிப்பின் இருப்பகமாகவும், வாணிபக் கடன் அனைத்தின் ஈர்ப்பு மையமாகவும் ஆனது. வங்கியாதிக்க சிறு கும்பல், கடன் கொடுப்பவர்கள், வட்டிப்பணத்தில் வாழ்வோர், தரகர்கள், பங்கு வியாபாரிகள் போன்றோர் அடங்கிய இந்த ஒரு கூட்டுப் பறவைகளின் திடீர் வளர்ச்சி சம காலத்தவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தை அக்காலத்திய எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது

வற்றாச் சுரங்கமாக வரி விதிப்பு!

தேசக்கடனுக்கு அரசின் பொது வருவாயே ஆதாரம். இந்த வருவாயிலிருந்தே வருடாந்திர வட்டி கொடுப்பதும், பிற செலவுகளும் செய்யப்பட வேண்டுமென்பதால், நவீன வரி விதிப்பு முறை தேசக்கடன் முறையின் தவிர்க்க முடியாத மறுபக்கமாயிற்று. வரி செலுத்துவோர் உடனடியாக உணராத வண்ணம் அரசாங்கம் தனது எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்கு இந்த தேசக்கடன்கள் பயன்படுகின்றன. ஆனால், கடன் வாங்கியதன் விளைவாக வரிகளை உயர்த்துவது அவசியமாகிறது. உயர் வரி விதிப்பைத் தொடர்ந்து, அரசு புதிய திடீர் செலவுகளுக்கு எப்போதுமே புதிய கடன்களை நாட வேண்டியதாகிறது. இவ்வாறு அத்தியாவசிய வாழ்வுச் சாதனங்கள் மீது வரி விதித்து, அவற்றின் விலையை உயர்த்துவதை அச்சாணியாய்க் கொண்ட இந்த நவீன வரி வருவாய் அமைப்பு, தொடர்ந்து பல்கிப் பெருகுவதற்கான கருவைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

உயர் வரி விதிப்பு தற்செயலாக நடப்பது அல்ல, அது ஒரு கொள்கையாய்ப் பின்பற்றப்படுகிறது. எனவேதான், இந்த அமைப்பு முதன்முதல் தொடங்கி வைக்கப்பட்ட ஹாலந்தில் பெரிய தேசபக்தரான டெவிட்,  தமது “நீதிமொழிகளில்” இதனைப் போற்றிப் புகழ்ந்தார்; “கூலித் தொழிலாளியை அடக்க ஒடுக்கமானவராகவும் சிக்கனமானவராகவும் முயற்சி வாய்ந்தவராகவும் இருக்கச் செய்வதற்கும், அதிக உழைப்பை அவர் மீது சுமத்துவதற்கும் இதுவே சிறந்த ஏற்பாடு” என்றார்.

ஆயினும் கூலித் தொழிலாளியின் நிலைமை மீது அது ஏற்படுத்திய நாசகார விளைவைக் காட்டிலும், இதன் விளைவாக விவசாயிகளும், கைவினைஞர்களும், சுருங்கச் சொன்னால் கீழ் நடுத்தர வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரும் பலவந்தமாக உடைமைப் பறிப்புக்கு ஆளானதன் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். (மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் விளைவுகளை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.) இது பற்றி முதலாளித்துவப் பொருளாதாரவியல் அறிஞர்களிடையே கூட மாற்று கருத்தில்லை.

காப்பு முறை என்ற ஏகபோகம்!

இந்த அமைப்பின் உடைமைப் பறிப்புத் திறனை அதனுடைய உறுப்புகளில் ஒன்றான வர்த்தகக் காப்பு முறை மேலும் கூட்டுகிறது

ஐரோப்பிய முதலாளிகளிடம் விற்பதற்காகக் கொண்டுவரப்படும் கறுப்பின அடிமைகள் (இடது); பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு ஆரோக்கியமான 94 கறுப்பின அடிமைகள் விற்பனைக்கு தயாராக இருப்பதை தெரிவிக்கும் விளம்பரம்

இந்த வர்த்தகக் காப்பு முறை என்பது பட்டறைத் தொழிலதிபர்களை உற்பத்தி செய்வதற்கும், சுயேச்சையான உழைப்பாளர்களின் உடைமையைப் பறிப்பதற்கும், தேசிய உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் தனியார் மூலதனமாக மாற்றுவதற்கும், மத்திய கால உற்பத்தி முறையிலிருந்து நவீன உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தை வலுக்கட்டாயமாகக் குறைப்பதற்கும் செயற்கையானதொரு வழிமுறையாகப் பயன்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையின் பொருட்டு ஐரோப்பிய அரசுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. உபரி – மதிப்பை ஈட்டும் முதலாளிகளுக்குச் சேவகம் செய்யத் தொடங்கிய அந்த அரசுகள், வர்த்தகக் காப்புத் தீர்வைகள் மூலம் மறைமுகமாகவும், ஏற்றுமதி வரிகள் மூலம் நேரடியாகவும் தம் சொந்த நாட்டு மக்களைச் சூறையாடியதோடு நிற்கவில்லை; தமது சார்பு நாடுகளின் தொழில் துறைகள் அனைத்தையும் வலுவந்தமாய் வேரோடு பிடுங்கியெறிந்தன, உதாரணம் : அயர்லாந்தின் கம்பளித் தொழிலை இங்கிலாந்து அழித்தது.

பிள்ளை பிடித்த முதலாளிகள்!

காலனியாதிக்க முறை, பொதுக் கடன்கள், கடும் வரி விதிப்பு, வர்த்தகக் காப்பு, வணிகப் போர்கள் ஆகிய பட்டறை உற்பத்தி பெற்றெடுத்த குழந்தைகள் நவீன எந்திரத் தொழில்துறையின் தொடக்க காலத்தில் மேலும் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தன. அப்பாவிகளைப் பெருமளவு கொன்று குவிப்பதன் மூலம் நவீன தொழில்துறையின் பிறப்பு தொடங்கி வைக்கப்பட்டது.

முடியரசின் கடற்படைக்கு ஆள் சேர்த்தது போலவே தொழிற்சாலைகளுக்கும் கட்டாய அரசு ஆணையின் பேரில் வலுவந்தமாக ஆள் சேர்த்தனர். 15-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து தன் காலம் வரையில் விவசாயக் குடிகளின் நிலவுடைமை பறிக்கப்பட்ட போது நடந்த கொடுமைகள் குறித்து எவ்விதக் கலக்கமும் அடையாதவர் சர் எஃப்.எம். ஈடன். முதலாளித்துவ விவசாயத்தை தோற்றுவிக்கவும், விவசாய நிலத்துக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமிடையே பொருத்தமான விகிதாச்சாரத்தை ஏற்படுத்தவும் இந்த நிகழ்முறை “அவசியமானது” என்று மன நிறைவுடன் மகிழ்ச்சியடைந்தவர் அவர்

எனினும், பட்டறைத் தொழில் சுரண்டலை ஆலைத் தொழில் சுரண்டலாக மாற்றும் பொருட்டும், மூலதனத்துக்கும் உழைப்புச் சக்திக்குமிடையேயான “உண்மை உறவை” நிலை நாட்டும் பொருட்டும், குழந்தைகளைத் திருடுவதும் அடிமைகளாக்குவதும் அவசியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கான பொருளாதார ‘நுண்ணுணர்வு’ ஈடனுக்கு இல்லையே. அவர் இப்படிப் பதிவு செய்கிறார்:

ஒரு உற்பத்தித் தொழில், தான் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏழைக் குழந்தைகளைத் தேடி குடிசைகளையும் உழைப்பு இல்லங்களையும் சூறையாடுவதையும், இரவின் பெரும்பகுதியில் முறை வைத்து அவர்களை வேலை வாங்குவதையும், எல்லாருக்குமே இன்றியமையாததும், ஆனால், இளம் வயதினருக்கு மிகவும் அவசியமானதுமான ஓய்வு நேரத்தைப் பறிப்பதையும், ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒழுக்கக் கேட்டையும் காம வெறியையும் கற்றுக் கொள்வதைத் தவிர்க்கவியலாத வகையில், பல்வேறு வயதிலான, பல்வேறு நாட்டங்கள் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்க்கப்படுவதையும் அவசியமாகக் கொண்டிருக்கிறது என்றால், அத்தகைய பட்டறைத் தொழில் மொத்தத்தில் தனிமனித நலனுக்கோ, நாட்டு நலனுக்கோ பயன் கூட்டுமா என்பது பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை.

ஃபீல்டன் சொல்கிறார் : டெர்பிஷயர், நாட்டிங்காம்ஷயர் மாவட்டங்களிலும், குறிப்பாக லங்காஷயர் மாவட்டத்திலும் நீர்விசைச் சக்கரத்தை இயக்கவல்ல நீரோடைகளின் அருகில் கட்டப்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நகரங்களிலிருந்து தொலைவாக ஒதுங்கியிருந்த இந்த இடங்களில் திடீரென்று ஆயிரக்கணக்கான ஆட்கள் தேவைப்பட்டார்கள்; குறிப்பாக, அது வரை ஒப்பளவில் மக்கள் நெருக்கமற்றதாகவும் பொட்டலாகவும் இருந்த லங்காஷயருக்கு இப்போது திரளான மக்கள் தேவைப்பட்டார்கள்.

மிகப் பெரும்பாலும் சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்களே அதிகமாய்த் தேவைப்பட்டதால், இலண்டன், பர்மிங்காம் போன்ற பகுதிகளில் திருச்சபையின் கீழிருந்த பல்வேறு உழைப்புக் கூடங்களிலிருந்து தொழில் பழகுனர்களைக் கொள்முதல் செய்யும் நடைமுறை உருவானது. 7 முதல் 13 அல்லது 14 வயதுடைய பல்லாயிரக்கணக்கான அனாதரவான குழந்தைகள் வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமெரிக்கக் கண்டத்துப் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மீது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த சித்திரம்

பட்டறை அதிபரே தனது தொழில் பழகுனர்களுக்கு உடை அளிப்பதும், தொழிற்சாலை அருகே அமைக்கப்பட்ட “தொழில் பழகுனர் விடுதியில்” உணவு-உறைவிடம் அளிப்பதும் வழக்கமாக இருந்தது; உற்பத்தியை மேற்பார்வையிடக்  “கங்காணிகள்” நியமிக்கப்பட்டனர்; கங்காணிகளது ஊதியம் அவர்களால் கறக்க முடிந்த வேலையின் அளவைப் பொருத்து இருந்ததால், குழந்தைகளை முடிந்த வரை அதிகமாய் வேலை வாங்குவதே அவர்களது நோக்கமாக இருந்தது. கொடுமைதான் இதன் தவிர்க்க முடியாத விளைவு.

பட்டறைத் தொழில் வட்டங்கள் பலவற்றிலும், குறிப்பாக குற்றத்தின் நிலைக்களனான எனது சொந்த மாவட்டத்தில் (லங்காஷயர்) பட்டறை அதிபர்களின் பொறுப்பில் இவ்விதம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாவமுமறியாத, கேட்பாரற்ற பிறவிகளுக்கு நெஞ்சு பொறுக்க முடியாத அளவு கொடுமைகள் இழைக்கப்பட்டன. அதீத உழைப்பால் இறப்பின் விளிம்புக்குச் செல்லும் வரை அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்… சவுக்கால் அடிக்கப்பட்டனர்… சங்கிலியில் பிணைக்கப்பட்டனர்… சகிக்கவொண்ணாத வகைகளிலெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டனர்…  பட்டினியால் எலும்பும் தோலுமாகிவிட்ட பலரும் சவுக்காலடித்து வேலை வாங்கப்பட்டனர்… சிலர் கொடுமை தாளாமல் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர்… டெர்பிஷயர், நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர் போன்ற மாவட்டங்களில் மக்களின் கண்ணுக்கெட்டாத இடங்களில் ஒதுக்கமாக இருந்த அழகான, எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், துயர் நிரம்பிய தனிமைச் சிறைகளாகவும் கொலைக்கூடங்களாகவும் மாறின.

பட்டறையதிபர்களின் இலாபம் அமோகமாக இருந்தது. ஆனால், அது இலாபப் பசியைத் தணிப்பதற்குப் பதிலாக, அதனை மேலும் கிளறி விட்டது. எனவே, எல்லையே இல்லாமல் இலாபம் ஈட்டிக்கொண்டே போவதற்கு உகந்ததாகத் தோன்றிய ஓர் உத்தியை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்; “இரவு வேலை” என்ற நடைமுறையை அமல்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது, ஒரு தொகுதி ஆட்களைப் பகல் முழுதும் வேலை வாங்கிக் களைப்படைய வைத்ததும், தொடர்ந்து இரவு முழுக்க வேலை செய்வதற்கு இன்னொரு தொகுதி ஆட்களைத் தயாராக வைத்துக் கொண்டார்கள்; இரவுத் தொகுதியினர் சற்று முன்னரே விட்டுப்போன படுக்கைகளில் பகல் தொகுதியினர் வந்து படுப்பார்கள்; பகல் தொகுதியினர் எழுந்து சென்றவுடன் இரவுத் தொகுதியினர் வந்து படுப்பார்கள். படுக்கையின் சூடு தணிவதே இல்லை என்பது லங்காஷயர் வழக்கமாகி விட்டது.

அடிமைகளால் வளர்ந்த ஆங்கிலேய  முதலாளித்துவம் !

உட்ரெட்க்ட் சமாதான உடன்படிக்கையின் கீழ், அதுகாறும் ஆப்பிரிக்காவுக்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் மட்டுமே நடந்து வந்த தமது நீக்ரோ (அடிமை) வர்த்தகத்தை, ஆப்பிரிக்காவுக்கும் ஸ்பானிய அமெரிக்காவுக்குமிடையிலும் நடத்துவதற்கான தனிச்சலுகையை 1713 அசியந்தோ ஒப்பந்தத்தின்படி ஸ்பானியர்களிடமிருந்து இங்கிலாந்து கறந்தது; இதனை ஆங்கிலேய ராஜ தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று வரலாற்றேடுகள் கொண்டாடுகின்றன.

இதன்படி, 1743 ஆம் ஆண்டு வரை, ஸ்பானிய அமெரிக்காவுக்கு ஆண்டொன்றுக்கு 4,800 நீக்ரோக்களை விற்கும் உரிமையை இங்கிலாந்து பெற்றது. இது பிரிட்டன் ஏற்கெனவே நடத்தி வரும் கள்ளக் கடத்தலை மறைத்துக் கொள்வதற்கான அதிகாரபூர்வ போர்வை ஆயிற்று. அடிமை – வர்த்தகத்தின் மூலம் லிவர்பூல் உப்பிக் கொழுத்தது. இதுவே அதன் ஆதித்திரட்டலுக்கான வழியாய் இருந்தது.

அடிமை வர்த்தகத்தில் லிவர்பூல் ஈடுபடுத்திய கப்பல்களின் எண்ணிக்கை

1730-ல் 15; 1751-ல் 53; 1760-ல் 74; 1770-ல் 96; 1792-ல் 132.

பருத்தித் தொழிலானது, இங்கிலாந்தில் குழந்தையடிமை முறையைப் புகுத்தியபோது, அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வந்த அடிமைமுறையினைப் புதுவிதமாக மாற்றியமைக்கவும் அது தூண்டியது. அடிமையின் குழந்தைகளும் அடிமைகள்தான் என்பதான, தந்தைவழி அடிமைமுறையை, ஒரு பொருளாதாரச் சுரண்டல் முறைமையாக உருவாக்கியது. ஐரோப்பாவின் கூலித்தொழிலாளர்கள் அனுபவித்து வந்த முகத்திரையிட்ட அடிமை முறைக்கு ஒரு பீடம் தேவைப்பட்டது. புதிய உலகத்தின் அம்மணமான அடிமைமுறையே அந்தப் பீடம். (1790-ல் ஒவ்வொரு சுதந்திர குடிமகனுக்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளில் 10 அடிமைகளும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் 14 அடிமைகளும், டச்சு மேற்கிந்தியத் தீவுகளில் 23 அடிமைகளும் இருந்தார்கள்.)

இப்படியெல்லாம் படாதபாடுபட்டுத்தான், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் “நிரந்தர இயற்கை விதிகள்” நிலைநாட்டப் பெற்றன. உழைப்பாளிகளும், உழைப்புச் சாதனங்களும் பிரிந்து தனித்தனியாகும் நிகழ்முறை பூர்த்தி செய்யப்பட்டது; ஒரு துருவத்தில் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்படுவதும் மறு துருவத்தில் பெருந்திரளான மக்கள் கூலித் தொழிலாளர்களாய், நவீன சமுதாயத்தின் செயற்கைப் படைப்பாகிய “சுதந்திர உழைப்பாளி ஏழைகளாய்” மாற்றப்படுவதும் நிறைவேறியது.

மூலதனத்தின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ரத்தம்!

“பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது” என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவின் மீது நடத்திய அபினிப் போர் குறித்த சித்திரம்

(வெற்றிடத்தை இயற்கை வெறுக்கிறது என்று முன்பு கூறுவார்களே, அது போல  மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபம் என்ற நிலையை ஒதுக்குகிறது. போதுமான இலாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. 10 சதவீதம் உறுதியான இலாபம்  அது எங்கு வேண்டுமென்றாலும் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்யும்; 20 சதவீதம் உறுதியான இலாபம் ஆர்வத்தைத் தூண்டும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால், அது திமிராய் நடந்து கொள்ளும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யத் தயாராகி விடும்; மூலதனத்தின் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட, எந்த நச்சுப் பரிட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையும் தடையின்றி ஊக்குவிக்கும். கடத்தலும் அடிமை வர்த்தகமும் இதைப் போதுமான அளவு தெளிவாக நிரூபித்திருக்கின்றன.  – டி டன்னிங் 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தொழிற்சங்க இயக்கத் தலைவர்களில் ஒருவர்.)

முதலாளிகளின் உடைமை பறிக்கும் முதலாளித்துவம்!

பலரது சிறு சொத்துடைமையைச் சிலரது பெருஞ்சொத்துடைமையாக மாற்றுவதும், பெருந்திரளான மக்களிடமிருந்து நிலத்தையும் வாழ்வுக்கான சாதனங்களையும், உழைப்புச் சாதனங்களையும் பறிப்பதும், அவர்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தும் வண்ணம் உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதும் மூலதனத்தின் வரலாற்றுக்கு முன்னுரை ஆகிறது. அடுக்கடுக்கான பல வலுவந்த முறைகள் இதில் அடங்குமென்ற போதிலும், மூலதனத்தின் ஆதித்திரட்டல் முறைகளில் சகாப்தகரமானவற்றை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறோம்.

மிகவும் இழிந்த, மிகவும் நேர்மையற்ற, ஆகக்கேடுகெட்ட, அற்பமான, அசிங்கத்திலும் அசிங்கமான உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, நேரடி உற்பத்தியாளர்களின் உடைமைப் பறிப்பு என்ற நடவடிக்கை, ஈவிரக்கமின்றி வெறித்தனமாய் செய்து முடிக்கப்பட்டது. முதலாளித்துவத் தனியுடைமை பெயரளவில் சுதந்திரமான உழைப்பின் சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைக்கப்பட்டதும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாற்றப்பட்டதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் மேலும் சமூகமயமாக்குதலும், நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் நுகரத்தக்க பொதுவான உற்பத்திச் சாதனங்களாக மாற்றுவதும், தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமைகளை மேலும் பறித்தெடுப்பதும் புதிய வடிவமெடுக்கின்றன.

இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாகவிருப்பது தனக்காக உழைக்கும் உழைப்பாளியல்ல; மாறாக, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பும்கூட “மூலதனம் ஒன்றுகுவிதல்” என்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதியின் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது.

எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். மூலதனம் ஒன்று குவியும் இந்த நிகழ்ச்சிப்போக்குடன் கூடவே, அதாவது பல முதலாளிகளைச் சில முதலாளிகள் உடைமைப் பறிப்பு செய்வதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டுத்துவ வடிவமும், அறிவியலை உணர்வுபூர்வமாகத் தொழில்நுட்பரீதியில் பயன்படுத்துவதும், நிலத்தின் முறைவழி சாகுபடியும், உழைப்புக் கருவிகளனைத்தும் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றப்படுவதும், உழைப்புச் சாதனங்கள் அனைத்தும் பொதுவில் மட்டுமே பயன்படுத்தத்தக்கவையாக மாறுவதும், சமூகமயமான உழைப்பில் மட்டுமே பயன்படுத்தப்படுத்தத் தக்கவையாக உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சிக்கனப்படுத்தப்படுவதும், சமூகமயமாக்கப்பட்ட உழைப்பும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களும் சிக்க வைக்கப்படுவதும், இத்துடன் மூலதனத்துடைய ஆட்சியின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன.

முதலாளித்துவத்துக்குச் சாவுமணி!

இந்த மாற்ற நிகழ்முறையின் ஆதாயங்களையெல்லாம் அபகரித்துத் தமது ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கிலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து செல்கின்ற அதே நேரத்தில், மக்கள் பெருந்திரளின் துன்ப துயரமும் ஒடுக்குமுறையும், அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் அதிகரிக்கின்றன;

ஆனால், இத்தோடு தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொறியமைப்பால் கட்டுப்பாடுமிக்கதாக ஆக்கப்பட்டு, ஒன்றுபடுத்தப்பட்டு, அமைப்பு வழியிலும் திரட்டப்படும் தொழிலாளி வர்க்கம், எண்ணிக்கையில் பெருகிக் கொண்டே செல்கிறது.

இன்னொரு பக்கம் மூலதனத்தின் ஏகபோகமே, அதனோடு சேர்ந்து அதன் ஆளுகையில் தோன்றி வளர்ந்த பொருளுற்பத்தி முறையின் மீது பூட்டிய விலங்காக மாறிவிடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்படுத்தலும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்குப் பொருந்தாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே, அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

மொழியாக்கம்: அப்துல்

***

பெட்டிச் செய்தி.

ஆங்கிலேயக் கொள்ளையர்களின் இந்தியக் கூட்டாளிகள்!

கஞ்சா விற்று டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்சேட்ஜி டாடா

ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தின் ஆதித்திரட்டலில், இந்தியாவில் அவர்கள் அடித்த கொள்ளையை மார்க்ஸ் விளக்கியிருக்கிறார். இந்தக் கொள்ளையில் அவர்களுக்குத் துணை நின்ற பங்காளிகள்தான் இன்று மோடி அரசைத் தாங்கி நிற்கும் இந்தியத் தரகு முதலாளிகள். இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் (அலைகள் வெளியீட்டகம்), இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (விடியல் பதிப்பகம்) என்ற தனது நூல்களில் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் மூலதனம் திரட்டப்பட்ட குற்ற வரலாற்றை விவரிக்கிறார் தோழர்.சுனிதி குமார் கோஷ்.

டாடா, பிர்லா, சிங்கானியா, ரூயா போன்ற முதலாளிகள் பிரிட்டிஷாருடன் சேர்ந்து சீனத்துக்கு கஞ்சா விற்றவர்கள். கோயங்கா போன்ற குழுமங்கள் இந்திய நெசவாளர்களுக்கு எதிராக லங்காஷயர் துணியை விற்றவர்கள். கோயங்கா, மகாஜன் போன்ற மார்வாரிகள் கந்துவட்டியால் இந்திய விவசாயிளின் இரத்தம் உறிஞ்சியவர்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கந்து வட்டி மூலம் பர்மா விவசாயிகளின் இரத்தம் குடித்தவர்கள். பழங்குடி மக்களின் நிலங்களை ஏமாற்றிப் பிடுங்கி அவர்களை விரட்டியடித்தும், நெசவாளர்களைக் கொத்தடிமையாக்கியும், முதல், இரண்டாம் உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உதவி செய்தும், பஞ்சங்களின் போது உணவுதானியத்தைப் பதுக்கி விற்றும், இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களுக்கு எதிராக இழைத்த எல்லாவிதமான கொலை பாதகங்களுக்கும் துணை நின்றும்தான் இந்தியத் தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் தனது மூலதனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

0

வம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி  பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழா இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இக்கூட்டத்தில் தோழர்கள் இரஷ்ய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை மாணவர்களுக்கு விளக்கியும், நாமும் இந்த கார்ப்பரேட் கைக்கூலி அரசுக்கு எதிரான புரட்சிப் பயணத்தில் இறங்குவோம் என்றும் கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகத்தை பற்றி விளக்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி

***

09-11-2017 அன்று மூலதனம் வெளியிடப்பட்டதன் 150 ம் ஆண்டு மற்றும் ரசியப் புரட்சியின் 100  ஆம் ஆண்டு நிறைவையொட்டி விருதை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பில் பாலக்கரையில் விளக்க கூட்டம் நடைபெற்றது. விருதை பேருந்து நிலையத்தில் பேருந்து தொழிலாளர்களுக்கும், தள்ளுவண்டி தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விருதை பு.மா.இ.மு செயலாளர் மணியரசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்பொழுது பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினர். அதை தொடர்ந்து உழவர் சந்தையிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருதை

***

நவம்பர்-7 ரசிய புரட்சி தின கொண்டாட்டங்கள்.
07-11-2017 அன்று காலை 09:00-மணிக்கு கூடலூரில் விவிமு செயலாளர் தோழர் ராஜேந்திரன் அவர்கள்  கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இரண்டாவதாக போடியில் தேவாரம் பகுதி விவிமு செயலாளர் தோழர் முருகன் கொடியேற்றினார். கடைசியாக தேவாரத்தில் போடி பகுதி விவிமு செயலாளர் தோழர் கணேசன் கொடியேற்றினார்.
இந்த மூன்று இடங்களில் ரசிய புரட்சியின் 100-வது ஆண்டு, கார்ல் மார்க்ஸ் மூலதனம் 150-வது ஆண்டு பற்றியும், செங்கொடி புகழ் பற்றியும் பேசி கொடியேற்றம் சிறப்புடன் நடைபெற்றது. தேவாரத்தில்  அரங்ககூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 30-சிறுவர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புரட்சிகர பாடலுடன் கூட்டம் துவங்கியது. போடி பகுதி  விவிமு தோழர் மாசாணம் அவர்களின் தந்தைக்கு பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தி சிறப்பிக்கபட்டது.
சிறுவர்களின் புரட்சிகர  கவிதைகள், உரைகள், பாடல்கள்  ஒயிலாட்டம் என  நிகழ்ச்சி நடத்தபட்டது.  தோழர் கார்க்கியின் வரலாறு, சிறப்புகளை பற்றி கூறப்பட்டது.
தோழர்கள் அனைவரும் நவம்பர்-7 ரசிய புரட்சி  பற்றியும், தற்போதைய நாட்டின் அவலங்களை சுட்டி காட்டி இந்திய நாட்டின் புரட்சியின் அவசியத்தை பற்றியும், இந்த கூட்டம் நம்மோடு நான்கு சுவருக்குள் முடங்கி விடாமல் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட வேண்டிய- அவசியத்தை வலியுறுத்தி, பேசி சபதமேற்றனர்.
 இறுதியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் பாடல் பாடி கூட்டத்தினை நிறைவு செய்தனர்.

தகவல்
விவசாய விடுதலை முன்னணி
போடி


மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்

1

மோடியின் ரெய்டு !  – கேலிச்சித்திரம்

மோடியின் ரெய்டு ! – கேலிச்சித்திரம்

எடப்பாடியின் கைது!  – கேலிச்சித்திரம்

எடப்பாடியின் கைது! – கேலிச்சித்திரம்

கேலிச்சித்திரங்கள் : முகிலன்

இணையுங்கள்:


மோடி இந்தியாவுக்கு மாட்டிவிட்ட ஜிமிக்கி கம்மல் ! பாடல் வீடியோ

1

மோடி அரசு மாட்டுக்கறிக்கு தடை விதித்த போது அதை எதிர்த்து ட்விட்டரில் கேரள மக்கள் இது எங்கள் கேரளா “போ மகனே மோடி” (#PooMoneModi) என்ற வார்த்தையை வைரலாக்கி பாஜக-வை அலறவைத்தனர்.

பார்ப்பனியத்தற்கு எதிரான திராவிட நாடு ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் வைரலாக்கினர். அந்த வரிசையில் மோடி அறிவித்த பணமதிப்பழிப்பின்  துயரத்தை பகடி செய்து, ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளத் திரைப்படப் பாட்டு யூடியூபில் வைராலாகி பலரும் அதற்கு நடனமாடி வீடியோ வெளியிடுகின்றனர்.

மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி மக்களின் கையில் இருந்த பணத்தை மொத்தமாக பிடுங்கி, இங்கு தொழிலில்லாமல் மக்களை அலையவிட்டதையும் அப்போது மோடி ‘நாடுமாறி’ நாடு சுற்றிக் கொண்டிருந்ததையும் கேலி செய்கிறது இப்பாடல். மற்றும் கேரள கருப்புப் பணப் பேர்வழிகளுடன் எப்படி சமாதனம் ஆனார்கள் என்பதோடு“குருவியின் தலையில் பனங்காயைப் போல்” மக்கள் முதுகில் மேலும் ஜி.எஸ்.டி வரியை சுமத்தி பாடாய் படுத்துவதையும் அம்பலப்படுத்துகிறது இப்பாடல்.

கேரளாவில் வெங்காரா சட்டசபை இடைத் தேர்தலை ஒட்டி இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இத்தொகுதியில் வாக்குப் பதிவு முடிந்து நவ 15-ல் முடிவு வெளியாக இருக்கின்றனது.
Lyrics : Abdulkhadar Kakkanad sung by : C.H. Fahadh & Liji Francis


பணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ – கருத்துக் கணிப்பு

3

வம்பர் 8, 2016 நள்ளிரவில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார். மக்களின் தலையில் இடியாக இறங்கிய இந்த அறிவிப்பு அனைவரையும் வங்கி வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது.

இந்தியாவெங்கும் பல இலட்சம் உழைக்கும் மக்கள் தங்களது கையில் பணத்தை வைத்திருந்தும். ஏதும் செய்ய முடியாத பித்துப் பிடித்த நிலைக்கு சென்றனர். அந்த நிலையிலும் மோடியின் பக்தர்கள் “எல்லையில் வீரர்கள் நமக்காக நிற்கும் போது வங்கி வாசலில் நிற்கமுடியாதா?” என தேசபக்த பாடம் எடுத்தனர்.

இன்னும் வக்கிரமாக ”நூற்றி முப்பது கோடிப் பேரில் 100 -பேர் செத்தால் என்ன? ” என பேசினார்கள். இனி தீவீரவாதிகளுக்கு பணம் போகாது, முற்றிலுமாக தீவிரவாதம் ஒழியும், பரணில் தூங்கும் பணமூட்டைகள் எதற்கும் உதவாது, கள்ளப்பணம் அறவே இல்லாது போகும், ஜி.பி.எஸ். சிப் வைக்கப்பட்டுள்ளதால் பணத்தை பதுக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள்.

மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக எதற்கும் அசைந்து கொடுக்காத ‘56 -இன்ச்’ மோடி, கோவா கூட்டத்தில் “ஐம்பது நாட்கள் கொடுங்கள், நாட்டை வல்லரசாக்குகிறேன்” என்று கண்ணீர் சிந்தி கபடநாடகம் போட்டார்.

இன்று ஓராண்டு நிறைவுற்ற நிலையிலும் ரிசர்வ் வங்கி கணக்குப்படியே கருப்புப் பணம் வந்து சேரவில்லை என்பது அம்பலமான போதும், எல்லா பணமும் வங்கிக்கு வந்துவிட்டதே இது தான் எங்கள் திட்டம் என தட்டை திருப்பிப் போட்டு பஜனை பாடுகிறது பாஜக கும்பல்.

அவற்றைத் தாண்டி கருப்புப் பணம் ஒழியும், பொருளாதாரம் மேம்படும் என சொன்னவை எல்லாம் பொய் என்பதை, தங்களது வாயாலே சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர் பாஜக -வினர்.

இந்த பணமதிப்பழிப்பு அறிவித்த சமயத்திலேயே அவற்றை ஆழமாக விமர்சித்தும், இப்பணமதிப்பழிப்பினால் யாருக்கு ஆதாயம் என்பதை உண்மையான பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர சக்திகளும் அம்பலப்படுத்தினர்.

நவம்பர் 8 -ஐ இன்று பலரும் வெளிப்படையாக கருப்பு தினம் எனப் பேசுகின்றனர். அந்த வகையில் பணமதிப்பழிப்பு சமயத்தில் வெளியான சில காணொளிகளை உங்களுக்காக வெளியிடுகிறோம்.

இதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம்.

இங்கே தோழர் மருதையனின் உரைகளும், நக்கலைட்ஸ் நண்பர்களின் வீடியோக்களும் இடம்பெறுகின்றன. மேலும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பையும் இணைத்திருக்கிறோம், வாக்களியுங்கள்!

இங்கே வாக்களிக்க:

டிவிட்டரில் வாக்களிக்க:

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க

பாருங்கள்….  நண்பர்களுடன் பகிருங்கள்…

மோடியின் பணமதிப்பழிப்பை பகடி செய்து வெளியான வீடியோக்கள் :


புரட்சியை புரட்சியால் கொண்டாடு ! கவிதை !

3

ரசியப் புரட்சி நூறாம் ஆண்டு: புரட்சியை புரட்சியால் கொண்டாடு..!

பூக்களின் மென்மை
போதவில்லை,
பசுமை பத்தவில்லை,
மலைகளின் எழிலும்
மனநிறைவில்லை.

நதிகளின்
நெளிவு சுளிவிலும்
நயம்படவில்லை,
புயலின் வேகமும்
போதவில்லை,

தீயின் பயனிலும்
திருப்தியில்லை,
நீரின் தாகம்
நிறைவில்லை

புவியீர்ப்பு விசை
பூரிக்க…
மார்க்சிய ஒளியில்
ஆக்சிஜன் மகிழ…
இயற்கை சிலிர்க்க
உலகையே அழகாக்கிய
மானுட மலர்ச்சி
ரசியப் புரட்சி!

”தொழிலாளி வர்க்கம்
தன்னைத் தான் அறியுமாறு
தம்மைப் பற்றி
உணர்வு கொள்ளுமாறு
போதித்தார்கள்”
மார்க்சும் எங்கெல்சும்
அதை,
உலகுக்கே புரியும்படி
சாதித்தார்கள்
ரசியப் பாட்டாளிகள்.

ரசியாவுக்கு மட்டுமா?
உழைத்து வாழும் உலகின்
விசையாக
ஒடுக்கப்பட்டவர்களின்
விடுதலை  திசையாக
புவியின் இதயமாக
துடித்தது புரட்சி!
தான் அமைந்த
காரணம் கண்டதில்
பூமிக்கே மகிழ்ச்சி!

மனிதகுலத்தின்…
முன்முயற்சி
முழு நம்பிக்கை
முன்னேற்றம்
மனித இனம் கண்டிராத
மானுடப் பரிணாமம்
மகிழ்ச்சியின் இயற்பொருள்…
இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம்
சுருக்கமாக
சோசலிசப் புரட்சி
எனச் சொல்லலாம்.

திசையற்ற வர்க்கத்தின்
திசையாக மார்க்சியம்
விழியற்ற வர்க்கத்தின்
விழியாக லெனின்
விசையற்ற இதயத்தின்
விசையாக ஸ்டாலின்
உலகின் கிழக்கை
விடிய வைத்த கம்யூனிசம்.

மதம், இனம், சாதி
பாலினம், தோல், நிறம் – என
மக்களை பிரிப்பது முதலாளித்துவம்
மனிதகுலத்தை
சேர்ப்பது கம்யூனிசம்.

மூலதனத்தின் சுரண்டலில்
சுழல்வது முதலாளித்துவம்
முதலாளித்துவச் சுரண்டலை
முடிப்பது கம்யூனிசம்.

‘எல்லோர்க்கும் எல்லாமும்’
முடியுமா முதலாளித்துவத்தால்.
முப்பதாண்டுகளில்
சோசலிசம்
சிகரம் தொட்ட சாதனைகளை
மனிதகுலப் பயனை,
முன்னூறு ஆண்டுகள்
ஆனாலும்
முதலாளித்துவத்தால்
எட்ட முடிந்ததா?

நீ…  நாள்பட்ட விசம்
சோசலிசம்
நாளைக்கும் தேவைப்படும் தேன்!

சொந்த நாட்டு மக்களுக்கு
சோறு போடவே வக்கில்லை
தானியற்றிய சட்டங்களை
கடைபிடிக்கவே துப்பில்லை
ஜனநாயகம் உயிர்வாழ
உன் உடம்பிலேயே இடமில்லை
கடைசியில்
உன்னைத் தூக்கி நடக்க
உனக்கே தெம்பில்லை
இற்று விழக் காத்திருக்கும்
இந்த லட்சணத்தில்
கம்யூனிசம் தோற்றதாம்!

உன் முதலாளித்துவம்
வென்றதா?

திருடன் வாழ்வதா
ஊருக்கு பெருமை
திரும்பத் திரும்ப
சுரண்டலை ஒழிக்கும்
கம்யூனிசம் வெல்வதே
உலகின் அருமை!

முடிந்துபோன விசயமல்ல
சோசலிசம்,
முடித்துகாட்டியது சோசலிசம்.

‘வந்துவிடுமோ
என்ற பயம்’ முதலாளித்துவம்
‘வருவோம்’
என்ற துணிவு சோசலிசம்.

முதலாளித்துவம்
வரலாற்று வழியின் கல்லறை.
சோசலிசம்
வளரும் வரலாற்றின் கருவறை.

எனவே,
நூற்றாண்டுகள் ஆன பின்னும்
கம்யூனிசம் தான் புதுசு
இன்றைக்கு ஆண்டாலும்
முதலாளித்துவம் பழசு.
கம்யூனிசம் –
புழுக்கம் தேடும் காற்று!
முதலாளித்துவம் –
புடுங்கி எடுக்கும் கொசு!
எதை விரும்பும் மனசு.!

புதுமையும், பூரிப்பும்
அழகும், அரும்பண்பும்
பொருள் பொதிந்த வாழ்வும்
ததும்பும் கவிநயம் கம்யூனிசம்.

வெறுமையும், சலிப்பும்
வெறுப்பும், அருவருப்பும்
வாழ விடாத வன்மமும்
மீளவிடாத துயரமும்
துரத்தும் சாவு முதலாளித்துவம்.

மூச்சு விடவும் முடியாமல்
முழு வாழ்வின் இன்பமும் கிடைக்காமல்
முதலாளிகளுக்காகவே
முழு நேரமும் உயிர்வாழும்
கேவலம் ஒழித்தது கம்யூனிசம்.
சாதித்தது ரசியப் புரட்சி!

ஒரு சுரண்டலுமின்றி
உழைப்பவர்க்கு ஒரு வாழ்க்கை!
இது போல வேண்டுமென்ற
ஏக்கம் மட்டும் போதாது
இயக்கமாக போராடு
போராட்டமில்லாமல்
எதுவும் புதிதாக கிடைக்காது!

கட்சி – அமைப்பு பயமா?
கட்டியழும் முதலாளித்துவம் பயமா?
கம்யூனிசப் போராட்டம்
தடை  தாண்டும் செயலின் இனிமை!
முதலாளித்துவ இருத்தலில்  முடங்குவது
முடை நாறும் பிணத்தின் தனிமை.

நாளின்
ஒவ்வொரு  துளியும்
மூலதனத்தால் உறிஞ்சப்படுகிறது
நரம்பின்
ஒவ்வொரு  உயிர்ப்பும்
முதலாளிகளால் விழுங்கப்படுகிறது.

தெருவிலே எரிக்கிறது
கந்து வட்டி
கருவிலேயே எரிக்கிறது
கார்ப்பரேட்டு
மூலதனத்தின் வாசலெங்கும்
காத்திருக்கும் சவப்பெட்டி.

புரட்சி என்பது
எங்கோ நடப்பதல்ல,
ரசியப் புரட்சியின் நியாயங்கள்
உன் அன்றாட வாழ்க்கையின்
அருகேயும் உள்ளது,
வியர்த்திருக்கும் வர்க்கத்தின்
ஒரு  விசைக்காக
காத்திருக்கிறது புரட்சி!

இடம் பெயர்க்கப்படும்
வாழ்க்கை
நிலம் பெயர்க்கப்படும்
இயற்கை
அட்டைகளே வெறுக்கும்
அடிபணிதல் எதற்கு?
கரையான்களே வெறுக்கும்
மெளனங்கள் நொறுக்கு!

அமுதூட்டிய கைகள்
தீமூட்டிய போது
எப்படி அதிர்ச்சி அடைந்திருக்கும்
அந்தப் பிள்ளை…

முதலாளித்துவ கொள்ளி வழங்கிய
கொடூரமல்லவா
அந்த நெருப்பு!
எரிக்கப்பட வேண்டியது
வாழ்கிறது
எரிக்கும் வர்க்கம்
கருகுகிறது!

எதற்காக எரிக்கப்படுகிறோம்
என்ற விபரமே தெரியாமல்
கையில் உள்ள பிஸ்கட்டோடு
கருகிய குழந்தை…
தாய் தகப்பனே
தன் மேல்
தீ வைக்கும் போது
யாரை நம்பும்?
உழைக்கும் வர்க்கமே
உன்னை நம்பியே
அந்தச் சாம்பல் தகிக்கிறது
அந்த அன்னையிட்ட தீ
நம் அடிவயிற்றிலே..!

இதற்கும் மேல்
என்ன வேண்டும்
ஒரு புரட்சியைத் தவிர,

”பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை
பாட்டாளி வர்க்கத்தின்
பணியாகவே இருக்கவேண்டும்”
என்றார்கள் மார்க்சும் எங்கெல்சும்
இதைவிட வேறென்ன வேலை!

”பறிமுதல்காரர்களை
பறிமுதல் செய்கிறது புரட்சி”
என்ற மார்க்சின் குரல்
நம் வர்க்கத்தில் கலந்து
வெகு நாளாயிற்று.

ரசியப் புரட்சி
அதன் வரலாற்றுச் சாட்சி
மக்களே அதிகாரத்தை
கையில் எடுத்துக்கொள்வதுதான் புரட்சி!

புதுசு புதுசாய்
எதை எதையோ வேண்டும் மனம்
புரட்சியை வேண்டாதா என்ன!
புரட்சி வேண்டுமா
வா…
அதற்கு முயற்சி வேண்டும்
முன்னேற அமைப்பு வேண்டும்
யாருக்காகவோ வேலை செய்யும்
உழைக்கும் வர்க்கமே
உனக்கான ஒரே வேலை
புரட்சி மட்டுமே!

எல்லா தகுதிகளையும்
இழந்து
எந்த உத்திரவாதமும்
இல்லாமல்
ஒரு கார்ப்பரேட்
உலகுக்காக
இந்த வாழ்க்கை

உழைக்கும் வர்க்கம்
என்ற ஒரே தகுதியினால்
சுரண்டலற்ற
அமைதி வாழ்வை படைக்கும்
கம்யூனிசப் பாதையே
நாம் வாழ்வதன்  வேட்கை!

ரசியப் புரட்சி
நமக்கும் வேண்டுமா?
புரட்சிக்கு
நாமும் வேண்டும்!

புரட்சியை
புரட்சியால் கொண்டாடுவதுதான்
பொருத்தமானது
இது கம்யூனிசத்தின் காலம்
தவிர்க்கவியலாமல்
நீயும் கலப்பதுதான் நியாயம்!

-துரை. சண்முகம்


மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்?

3

மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்? கருத்துக் கணிப்பு !

மிழகத்தைப் பொறுத்தவரை, இன்னும் மீசை முளைக்காத சிறுவர்கள் கூட அடித்துப் பழக வசமாக சிக்கியிருக்கும் கைப்பிள்ளைகளாக பாஜக கும்பல் மாறி வருகிறது. மெர்சல் பட பிரச்சினையின் போது இவர்களுக்கு கிடைத்த ‘அர்ச்சனை அபிஷேகத்தை’  பார்த்தால் ஹிட்லருக்கே இரக்கம் வரும்.

இன்றைக்கு அரசியல் வெளியில் பேசப்படும் ஒரு பிரச்சினைக்கு கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலையில், திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த எதுகை மோனை பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்த சினிமா நடிகர்களுக்கு இது புதிய சோதனையை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தையில் தக்க வைத்துக் கொள்வதற்காகவேணும் பாஜகவைத் தொட்டு பேச வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், இளைய தளபதியிலிருந்து தளபதியாக தனக்குத் தானே ’ப்ரொமோசன்’ கொடுத்துக் கொண்ட விஜய்,’மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி.யைப் பற்றி பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹரிஹர ராஜா சர்மா, அவரை ஜோசப் விஜய் என விளித்தார். இதற்கு தமிழகமே பொங்கினாலும் தளபதி விஜய் வெளிப்படையாக பொங்க வில்லை.

அடுத்தது கமலஹாசன். அதிமுக என்னும் செத்த பாம்பை ’லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிக் கொண்டிருப்பவர். நீட்டிற்கு எதிராக தமிழகமே பாஜகவை காறி உமிழ்ந்த போது ஒரு வார்த்தை பேசாமல், அதிமுகவை மட்டும் பொளந்து கட்டியவர். பணமதிப்பழிப்பு தவறு என ஆதாரம் இல்லாமல் ஒத்துக் கொள்ளமாட்டேன் என முதல் நாள் கூறிவிட்டு சில நாட்கள் கழித்து பணமதிப்பழிப்பை ஆதரித்ததற்காக தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

[yop_poll id=”3″]

முதல் நாள் ”என் நிறம் காவி அல்ல” என்றார். மறுநாள் ”கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்றார். பல ஆண்டுகளாக நான் ஒரு நாத்திகன் என்று கூறி வந்தார். சமீபத்தில் ”என்னை நாத்திகன் என்று அழைக்காதீர்கள், பகுத்தறிய விரும்புகிறவன் என அழையுங்கள்” என்கிறார். சமீபத்தில் அவர் பேசிய ‘இந்துத் தீவிரவாதம்’ தற்போது நானும் இந்துதான், இந்துக்களை சிறுமைப்படுத்தவில்லை என்பதாக மாறியிருக்கிறது.

இறுதியில் பிரகாஷ்ராஜ். பாஜக, சங்க பரிவார கும்பல், எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கொண்டாடியதைக் கண்டு பொது மேடையிலேயே கொதித்தெழுந்து வாய் திறக்காத மோடிக்கு சிறந்த நடிகர் பட்டம் கொடுத்தவர். உ.பி. முதல்வர் ஆதித்யநாத்-ஐ, “இவர் சி.எம்.-மா இல்லை பூசாரியா?” எனவும் பகிரங்கமாக பேசினார். இதன் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா, வாய்க்கு வந்தபடி பிரகாஷ்ராஜைக் கடுமையாகச் சாடினார்.

எனினும் எனது கருத்தைத் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார். பன்சாரே, தபோல்கர், கல்புர்கியின் தொடர்ச்சியாக கவுரி லங்கேஷின் கொலையை தான் பார்ப்பதாகக் கூறி சங்கப் பரிவார கூலிப்படையான சனாதன் சன்ஸ்தாவை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அடுத்தது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான ’புரட்சித் தளபதி’ விஷால். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகும் முன்னரே திருட்டு விசிடியைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு குண்டர்களுடன் பர்மா பஜார் கடைகளுக்குள் அத்து மீறி நுழைந்து அட்டகாசம் செய்தவர். மெர்சல் பட விவகாரத்தில் ஹரிஹரி ராஜா சர்மா அவர்கள் பகிரங்கமாக திருட்டு விசிடியில் படம் பார்த்தேன் என கூறியதும் ‘கொதித்தெழுந்து’ பக்குவமாக தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

விளைவு, புரட்சித் தளபதியின் அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. மெர்சல் பட விவகாரத்தில் ”நானும் மதுரக்காரன் தான்டா” என நெஞ்சை விடைத்த புரட்சித் தளபதி ”மதுர வந்து …. கடலூர் பக்கத்துலயோ பண்ருட்டி பக்கத்துலயோ தான் இருக்குன்னு நினைக்கிறேன்” என ஜகா வாங்கினார். தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வருமான வரித்துறைக்கும் ஹரிஹர ராஜா சர்மாவிற்கு எதிராக தான் விடுத்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்

இந்நிலையில் இன்றைய கருத்துக் கணிப்பு:

மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்?

அ) விஷால்

ஆ) கமல்

இ) பிரகாஷ்ராஜ்

ஈ) விஜய்


 

நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி – மின்னூல்

0

ம்யூனிசத்தை பூதமென்றும், கொடுங்கோலர்களது ஆட்சி என்றும் கதை கட்டி வந்த முதலாளித்துவத்தின் முகத்தில் கரிபூசப்பட்ட நாள் நவம்பர் 7, 1917. அது உலகின் முதல் சோசலிசக் குடியரசு கட்டப்பட்ட நாள். ஜாரின் கொடுங்கோல் முடியாட்சியிலிருந்தும், முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து ரசிய மக்கள் விடுதலை பெற்ற நாள் அது. அன்று தான் மாமேதை தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி ரசியாவில் மாபெரும் சோசலிசப் புரட்சியை நடத்தியது.

அது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதையர் உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு.

அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுமுறை, அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை இனங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை என மேற்குலகம் பல நூற்றாண்டுகளாயும் சாதிக்க முடியாத விசயங்களை சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம்.

இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாரதவையல்ல. இதுவே இறுதிச் சுற்றும் அல்ல.

அதனை, 2010 வால் ஸ்ட்ரீட் எழுச்சி உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் தலையில் ஓங்கியடித்து பறைசாட்டியிருக்கிறது. “முதலாளித்துவம் ஒழிக” என இலட்சக்கணக்கான மக்கள் குரல் எழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களும் கூட மார்க்சின் மூலதனம் குறித்த கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.

தனது உள்முரண்பாடுகளாலேயே முதலாளித்துவம் தனக்கான புதைகுழியைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் அழிவிலிருந்து அதனைக் காப்பது என்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அதன் அழிவோடு மனிதகுலமும் தன்னை அழித்துக் கொள்ளுமா அல்லது முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தப்புமா என்பதை மனித குலம் தனது செயல்பாட்டின் மூலமாகத் தான் தீர்மானிக்க முடியும் என்றார் மார்க்ஸ்

நவம்பர் புரட்சியின் எளிய அறிமுகத்தை தருகிறது இத்தொகுப்பு

தோழமையுடன்
வினவு

நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
  • ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
  • தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
  • நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
  • நமக்கும் வேண்டும் நவம்பர் – 7
  • அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
  • நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
  • சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
  • இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?
  • புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
  • நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
  • மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !
  • மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா?
  • இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
  • மே 9 : பாசிசத்தை தோற்கடித்த 70-ம் ஆண்டு நினைவு நாள்
  • உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
  • தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்

பதினேழு கட்டுரைகள் – 160 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.


பாலா கைதை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !

0

கார்டூனிஸ்ட் பாலா மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து  மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் நவம்பர் 6,7 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவையில்…

ந்துவட்டி கொடுமையால் கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளோடு தீக்குளித்து இசக்கிமுத்து மாண்டு போனார்.

இசக்கிமுத்துவின் மொத்த குடும்பமும் அழிய காரணமாயிருந்தது, நெல்லை கலெக்டர், எஸ்.பி. மற்றும் செயல்படாத இந்த அரசுதான். இதனை தனது தூரிகையால் அம்பலப்படுத்திய கார்டூனிஸ்ட் பாலா 05.11.2017 கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கையை கண்டித்து கோவை மண்டல மக்கள் அதிகாரம் 06.11.2017 அன்று தடையைமீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக ஆர்பாட்டம் குறித்து காவல்துறையிடம்  தெரிவித்தபோது, ஏற்கனவே அனுமதிக்கப்படும் இடத்தில்தான் நடத்தவேண்டும் என உத்திரவிட்டது. மக்களுக்கான போராட்டங்களை மக்கள் கூடாத இடங்களில் நடத்த முடியாது என உறுதியாக கூறி கோவை காந்திபுரம் நகர மற்றும் விரைவு பேருந்து நிலையம் கூடும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 06.11.2017 அன்று மாலை 4 மணியளவில் கோவை, கோத்தகிரி, உடுமலை, திருப்பூர் பகுதிகளின் தோழர்கள்கள் ஒன்றுகூடி பதாகைகள், கொடி, முழக்க அட்டை, கார்ட்டூன் படங்களோடு கந்துவட்டிக்கு காரணமான காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களை அம்பலபடுத்தும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் ஊடங்களுக்கு போட்டி கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர்களை காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு சென்றது. செல்லும் வழியெங்கும்  அரசை அம்பலப்படுத்தும் முழக்கங்களை தோழர்கள் முழக்கமிட்டவாறே சென்றனர்.

தங்கவைக்கப்பட்ட அரங்கத்திலேயே தோழர்கள் வட்டமாக அமர்ந்து கந்துவட்டியைப் பற்றியும் மற்றுயும், கருத்துரிமை பற்றியும் இந்த அரசின் கையாலாகாத்தனம் பற்றியும் கலந்துரையாடல் நடத்தினர்.  பின்னர் இரவு 8 மணிக்கு காவல்துறை தோழர்களை மண்டபத்தில் இருந்து விடுவித்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை – மண்டலம்.

________

நெல்லையில்….

நெல்லை நீதிமன்ற வளாகத்திற்கு 06.11.2017 அன்று கார்டூனிஸ்ட் பாலா அவர்களை ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, அவருக்கு ஆதரவாக நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிணை வழங்கப்பட்ட பின்னரும் பாலாவை சட்டவிரோதமாக கைது செய்ய முயன்றதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் பலரும் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது இந்த அரசை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை.

***

குடந்தையில்….

க்கள் அதிகாரம் சார்பாக தோழர். தமிழ் ஜெயாபண்டியன் தலைமையில் கடந்த 6.11.2017 அன்று குடந்தை காந்தி பூங்காவில் “கார்டூனிஸ்ட் பாலா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்து” ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ”அனுமதி வாங்கி விட்டுதான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” எனக் கூறி போலீசு ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றது. ஆனால் ”மைக் எதுவும் இல்லாமல் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும்?” எனக் கேள்வி கேட்டனர் தோழர்கள். ஆர்ப்பாட்டம் முடியும் வரை அங்கு இருந்து விட்டு பின்னர் கலைந்து சென்றது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை.

***

ஓசூரில்….

ந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை அம்பலப்படுத்தி, கார்ட்டூன் வரைந்த பாலாவின் கைதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, “கந்து வட்டி- போலீசு- கலெக்டர் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பமே தீயில் கருகியது! கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!! இந்த அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முடிவு கட்டுவோம்!”  என்ற முழக்கத்தை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 07.11.2017 அன்று காலை 11.30 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில், “கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட்டை கைது செய்வதில் காட்டும் முனைப்பை கந்துவட்டிக் கொடுமைக்காரர்களை கைதுசெய்வதில் காட்டவில்லை இந்த கலெக்டரும் , எஸ்.பி-யும் என அம்பலப்படுத்திப் பேசியது; மற்றும் இந்த சட்டமும் போலீசும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதோ நடுநிலையானதோ அல்ல என்பதை அம்பலப்படுத்திப் பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக ஒரு கலெக்டரின் புகாரை வாங்கி சென்னைக்கு ஓடி வந்து பாலாவை கைது செய்ததில் இருந்த அக்கறையில் ஒரு மைக்ரான் அளவு கூட இசக்கிமுத்துவின் புகார் மனுவில் வெளிப்படவில்லை என்பதை ஒப்பிட்டுப் பேசியது” நல்ல வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
 மக்கள் அதிகாரம்,
ஓசூர். தொடர்புக்கு : 99948 84923.


மடியில் வச்சிக்க நீ என்ன மல்லையாவா? – கேலிச்சித்திரம்

1

மவனே…மடியில் தூக்கி வச்சிக்கிறதுக்கு நீ என்ன மல்லையாவாடா?

திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கியின் படுகொலை !

கேலிச்சித்திரம் : முகிலன்

இணையுங்கள்:


ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

16

லகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.

***

பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.

முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.

மேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக்  காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

உதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.

இந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1)  என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.

மனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே, பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.

இரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.

எனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.

சமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?

இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.

ஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும்  இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.

பல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.

இந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.

“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.

எனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.

மனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.

ஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.

மானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.

மனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின்  கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும்? சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.

மேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.

நமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.

மேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல்  கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.

இன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் –  சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

விளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.

உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.

உழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.

சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.

மேலும், தனியார் முதலாளிகள்  நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.

மூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.

இந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.

“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.

“எப்போது வேலை போகுமோ என்ற  பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”

வேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.

இலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும்  இட்டுச் செல்கிறது.

தனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

சமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.

இருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது?

மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review)  தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.

மொழியாக்கம்: அப்துல்

– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.

அடிக்குறிப்புகள்:

1. மிருகங்களை வேட்டையாடுவதைப் போல பிற இனங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடுகின்ற ஒரு வர்க்கம், தன்னைத்தானே சமூகத்தின்  காவலனாக நியமித்துக்

கொண்டு, சமூகத்தின் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்வதை வெப்லன் குறிக்கிறார். ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தை அந்த வர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்.

2. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சோசலிச ரசியாவின் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்திருந்த சூழலில், சோசலிசக் கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரையும் அமெரிக்காவின் எதிரிகள், ரசிய உளவாளிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கியது அமெரிக்க அரசு. 1947-56 காலகட்டத்தில் தலைவிரித்தாடிய மெக்கார்த்தியிசம் என்றழைக்கப்பட்ட இந்த அடக்குமுறையில் சாப்லின், ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பலரும் குறிவைத்து மிரட்டப்பட்ட சூழலை அவர் குறிப்பிடுகிறார். இந்த அடக்குமுறைக்குப் பணிய மறுத்தார் ஐன்ஸ்டைன்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கம்யூனிசம் வெல்லும் ! – புதிய ஜனநாயகம் நவம்பர் 2017 மின்னூல்

3

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. கம்யூனிசம் வெல்லும் !

உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

2. தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை !

முதலாளித்துவத்தின் தாயகமான இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதன்முதலில் தோன்றிய தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கத்தினரின் ஆதி மூலதனம் திரட்டப்பட்ட வரலாற்றை, அதாவது மூலதனத்தின் ரிஷி மூலத்தைத் தனது மூலதனம் நூலில் வெளிக்கொணர்கிறார் மார்க்ஸ்.

3. மூலதனத்தின் தத்துவஞானம் !

மார்க்ஸின் மூலதனம் ஒரு பொருளாதார ஆய்வு நூலா, வரலாற்று ஆய்வா, தத்துவஞானங்களின் ஆய்வு முறையிலிருந்து மார்க்சியம் எப்படி வேறுபடுகிறது, ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

4. ஏன் சோசலிசம் ?

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்த கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் ( மே 1949 ) வெளியிடப்பட்டது.

5. செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.

6. வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு

தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்து கொண்டே செல்வதைத்தான்.

7. மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்தி நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

8. ஜேப்படிக்கு நோபல் பரிசு !

முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதாரம் சார்ந்த நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart


 

ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

1

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஓபசமுத்திரம் கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சுற்றி 15 -க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்த கிராமத்தின் பிரதான தொழில்களான மீன் பிடி தொழிலும், விவசாயமும் முற்றிலுமாக அழிந்து வருகிறது.அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுப்போய், குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போதைக்கு அக்கிராமத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்திலிருந்துதான் குழாய் மூலமாக குடி தண்ணீர் பெற்று வருகின்றனர். தற்போதே இந்த நிலைமை என்றால், எதிர் வரும் காலத்தில் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகப்போகிறது? என உணர்ந்த கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இறால் பண்ணைகளை அகற்றுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பது, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களை நடத்திவிட்டனர். அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தியுள்ளனர். மக்களின் போராட்டத்தால் மிகுந்த நெருக்கடிக்கு ஆட்படும்போது, அரசு அதிகாரிகள் பெயரளவிற்கு கிராமத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணைகளை அகற்றியே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 2016 -ம் ஆண்டு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் திரு.நாராயணன் அவர்கள் இறால் பண்ணைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல் கிராமத்திற்கே வந்து இறால் பண்ணை உரிமையாளர்களை அழைத்து “உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றவேண்டும்; இல்லாவிட்டால் அரசு நிர்வாகமே அந்த வேலையை செய்யும், அதற்கான அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் தங்கள் போராட்டம் வெற்றியடைந்ததாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர்தான் தெரிந்தது அது வெரும் கண்துடைப்பு, ஏமாற்று என்று!.

இன்றளவும் இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கிராம மக்கள் அவமானமாக கருதினர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்நாளிலேயே, தமது சந்ததிகள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவனிடன் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் உண்டானது.

ஓபசமுத்திரம் இறால் பண்ணை அழிப்பு போராட்டதில் கைது செய்து ரீமான்டு செய்யப்பட்ட பெண்.

இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இருந்தபோதிலும் இறால் பண்ணை உரிமையாளர்கள் ‘தமக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், போலீசும் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும், மக்களால் என்ன செய்துவிட முடியும்’ என அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால், அதற்கு மாறாக சொன்னபடியே 05.11.2017 அன்று கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் சொந்த அதிகாரத்தை கொண்டு இறால் பண்ணைகளை அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

பாதிப்படைந்த பண்ணை உரிமையாளர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆரம்பாக்கம் போலீசு நிலையத்தில் 11 பேர் மீது பொய் புகாரும் கொடுத்துள்ளனர். காவல் துறையும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த அரசு நமக்கு உதவாது என தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள ஓபசமுத்திர கிராம மக்கள் என்ன நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் (கிழக்கு). 
தொடர்புக்கு : 94444 61480


சினிமா நட்சத்திரங்களை நாக் அவுட்டாக்கிய நக்கலைட்ஸ் வீடியோ !

4

நக்கலைட்ஸ் குழுவினர் ஒராண்டு பயணத்தை முடித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள் !

ஃபேஸ்புக்கில் நாலு ஸ்டேட்டஸ் போட்டு அதையும் ஃபேக் ஐ.டியில் வந்து லைக் பண்ணும் பேதை ஒருத்தி, துப்பறிவாளனிடம் ரொமான்டிக்கான ஹீரோவை தேடித் தருமாறு கேட்கிறாள்.

விக்ரம், தனுஷ், சிம்பு, ரஜினி, கார்த்தி, விஷால் அனைவரும் நக்கலைட்ஸ் படைப்பில் தாருமாறாக அடி வாங்கி ஒரே ரவுண்டில் நாக் அவுட்டாகிறார்கள்.

சினிமா நாயகர்களை நச்சென்று தரைமட்டமாக்கும் படம். வினவு போன்ற ‘குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்களே” குறையேதுமின்றி நிறைவாக பாராட்டும் படம்.

வடிவம், உள்ளடக்கம் இரண்டும் நீ இல்லாமல் நானில்லை என அழகாகப் பொருந்துகிறது.

நக்கலைட்ஸ் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்! படத்தைப் பாருங்கள், பகிருங்கள்!

Thupparivalan-2 – A Love Mystery – Spoof – Nakkalites | துப்பறிவாளன் 2 : காதல் ஒரு மர்மம் – நகலடி – வீடியோ

(நகலடி – Spoof ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் = நகலைப் பகடி செய்வதால் நகலடி!)


நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

1

கம்யூனிசம் வெல்லும் !

2017 – கார்ல் மார்க்ஸின் மூலதனம் வெளியிடப்பட்டதன் நூற்று ஐம்பதாவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூறாவது ஆண்டு. சீனத்தின் மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சிக்கும் இது ஐம்பதாம் ஆண்டு.

பல்வேறு கற்பனாவாத சோசலிசப் போக்குகள் கோலோச்சிய ஒரு காலத்தில், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தை வழங்கினார் மார்க்ஸ். தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் தோன்றிய பொருளாதாரவாதம், இடது சாகசவாதம், தேசவெறி ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் லெனின்.

பின் தங்கிய விவசாய நாட்டில் புரட்சியைச் சாதித்தது மட்டுமின்றி, சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவ மீட்சி சாத்தியமே என்று எச்சரித்து, அதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியையும் நடத்திக் காட்டினார் மாவோ, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு என்ற சமரசவாத அரசியலிலிருந்தும், நாடாளுமன்றச் சரணடைவுப் பாதையிலிருந்தும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை மீட்டு புரட்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி.

இவையனைத்தும் இடையறாமல் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகள். இப்போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பின்னடைவுக்கும் தோல்விக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதன் பொருள் முதலாளி வர்க்கம் அறுதி வெற்றி பெற்று விட்டது என்பதல்ல.

ஆனால், அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தவே உலக முதலாளி வர்க்கம் தொடர்ந்து முயற்சிக்கிறது. தனது மூலதனம் நூலின் மூலம் அந்தப் பிரமையைத் தகர்த்தெறிந்தார் மார்க்ஸ். வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில் முதலாளித்துவம் எப்படித் தோன்றியது என்பதையும், தனது உள் முரண் பாடுகள் காரணமாக அது அழிவை நோக்கிச் செல்வது ஏன் தவிர்க்கவியலாதது என்பதையும் அறிவியல்பூர்வமாக நிறுவினார்.

உலகப் போர்களும் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும், முதலாளித்துவப் போட்டியும், சுரண்டலும் தோற்றுவித்த தவிர்க்கவியலாத விளைவுகள்தான். அவற்றைத் தற்செயல் நிகழ்வுகளாகக் காட்டுவதன் மூலம்தான் சாகாவரம் பெற்று விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறது சர்வதேச மூலதனம்.

மீட்சியே இல்லாமல் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான பல நாடுகளில் வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களும் உலக முதலாளித்துவக் கட்டமைவு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குச் சான்று கூறுகின்றன. கடுமையான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம் தலைமுறையினர் மத்தியிலேயே இந்த நெருக்கடி, மார்க்சியத்தை நோக்கிய ஈர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைவுகளின் தோல்வி மறைக்கவே முடியாத அளவுக்கு மக்களிடம் அம்பலமாகி வருவதால், ஆளும் வர்க்கங்களே புதிய மீட்பர்களை இறக்கி விடுகின்றன. பாசிஸ்டுகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள் முதல் அரசியல் கோமாளிகள் வரையிலான பலரும் மக்களைத் திசை திருப்ப அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.

இந்நிலையில் இளம் தலைமுறை தொழிலாளி வர்க்கத்தினரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்வது காலத்தின் தேவை. இதனைக் கருத்தில் கொண்டே இந்த இதழைக் கொண்டு வந்திருக்கிறோம்.

– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.

**************************************************************************************************************************

ரஷ்ய சோசலிசப் புரட்சி நூறாம் ஆண்டு நிறைவு – அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

**************************************************************************************************************************