தமிழகத்தில் மாஃபியா ஆட்சி பாகம் -2
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
தமிழகத்தில் மாஃபியா ஆட்சி பாகம் -2
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
மறுபடியும் ஒருமுறை தேசதுரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை அது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. தேசதுரோகம் மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகிய குற்றங்களை சுமத்தி ஒரு தீவிர இடதுசாரி குழுவை சேர்ந்த நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றம்: முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் மது விற்பனைக் கொள்கையை இரு பாடல்களில் பழித்து பரப்பியது. அந்த பாடல் வரிகளின் மிக தூரமான பொருளில் கூட அரசு மற்றும் அரசு நிறுவனத்துக்கு எதிராக என்று எதுவுமில்லை. அரசின் கொள்கைக்கெதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதற்கு அப்பால், வன்முறையை தூண்டும்படி ஏதுமில்லை. சமூக வலைத்தளங்களில் அது மிகவும் பரவி அதன் கருப்பொருள் நிறைய பேரின் மனதோடு உறவு கொண்டிருக்கிறது. மது விற்பது என்ற அரசின் கருத்தையும் அதே நேரத்தில் இலவசங்கள் மூலம் மக்களை குளிப்பாட்டுவதையும் தேர்ந்த நகைமுரணுடனும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுரத்துடனும் பாடல் விரித்துரைக்கிறது.
இன்னொரு பொருளில், அரசியல் பொருளாதாரத் துறையின் மானிய வழங்கல் கொள்கையை பாடல் விமர்சிக்கிறது. ஆளும் கட்சி, நலத்திட்டங்களை வாரி வழங்குகின்ற பாவனையில் மக்களை மதுக்குடியையும், அரசின் பிச்சையையும் சார்ந்திருக்கச் செய்திருக்கும் நிலைமையை படம் பிடித்து காட்டுகிறது. சிவதாஸ் என்ற இயற்பெயரை கொண்ட கலைஞன் கோவன் இந்த எதார்த்தத்தை தனது பாடல்களில் வசப்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு பாடல்களில் ஒன்றின் பகடி தொனியும் கேலிச்சித்திரங்களும் ஜெயலலிதாவை மிகமோசமாக சித்தரிக்கின்றன என்றும் அது தனிநபர் மீதான தாக்குதல் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரமான சிறு குழுக்கள் நாட்டுப்புற வடிவத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு வலிமையாகவும் அதே நேரத்தில் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் முன்வைத்து வருவது வாடிக்கைதான்.
செல்வாக்கான அரசியல்வாதிகள் இந்த விமர்சனங்களை உள்வாங்கி அடுத்த அடியை எடுத்து வைப்பதே சிறந்தது. அடிநாதத்தில் ஒலிக்கும் குறைகளை அவர்கள் போக்க வேண்டும். அடக்குமுறைகளை பிரயோகிப்பது பயன் தராது. அரசின் எதிர்வினையில் தேவையற்ற ஆத்திரம் வெளிப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 124 அ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்கில் கோவனை கைது செய்திருப்பது ஒரு துவண்ட போலீஸ் நிர்வாகம் அதன் வரம்புகள் பலமுறை நீதிமன்றத் தீர்ப்புகளால் மட்டுப்படுத்தப் பின்னரும் அவற்றின் மீது எந்த மரியாதையும் கொள்ளாததையே காட்டுகிறது. விமர்சனப் பார்வைகளுக்கு எதிராக இத்தகைய கொடுங்குற்ற வழக்குகளை சுமத்துவதை நிராகரித்து நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பளித்துள்ளன. வன்முறையை உண்மையாகவே தூண்டுவது மற்றும் கலகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருப்பது ஆகியவற்றை தவிர்த்து அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்குவது கூட தவறானதல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது.
முதலமைச்சருக்கு எதிரான உரத்த விமர்சனத்தை சட்ட ரீதியில் அமைந்த அரசுக்கு எதிரான அச்சுறுத்தலுடன் சமன்படுத்தியதன் மூலம் இந்தப் பிரச்சினையில் சென்னை போலீஸ் இழுக்கை தேடிக் கொண்டுள்ளது. மிகச் சமீபத்தில் அரசு ஊழியர்கள் அரசை விமர்சித்தால் தேசதுரோக சட்டம் பாயும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை மராட்டிய அரசு திரும்பப் பெற்றது. ஊழலுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் 2012-ம் வருடம் தேசதுரோக குற்றம் சுமத்தப்பட்டார். கடந்த வருடம் மீரட்டில் கிரிக்கெட் ஒளிபரப்பின் போது பாகிஸ்தான் அணிக்காக கைதட்டிய காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக தேசதுரோக சட்டத்தை புனைந்தார்கள். பிறகு அதனை திரும்பப் பெற்றார்கள். இச்சட்டம் திரும்பத் திரும்ப தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது தேவையில்லாத, வழக்கொழிந்த, காலனியத்தன்மை கொண்ட இச்சட்டம் முற்றுமுழுதாக வெட்டியெறியப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது.
தமிழில் : சம்புகன்
நன்றி : The Hindu
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் கைதை கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 02-11-2015 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய இடத்தில் வேறொரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் 03-11-2015 அன்று நடத்திக் கொள்ளுமாறு காவல்துறை அனுமதி அளித்தது. கூடுதலாக பல்வேறு நிபந்தனைகளையும் விதித்திருந்தது.
இந்நிலையில் திருச்சி – மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகே 03-11-2015 காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துமிடத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் அழைப்பை ஏற்று பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், கட்சிகளை சார்ந்த தலைவர்கள் வந்திருந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மைக்செட் கட்டும் வேலைகளில் ஈடுபட்டபோது, மைக்செட் வைப்பதற்கோ, இசைக் கருவிகள் பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது என்றும், மீறி செய்தால் ஆர்பாட்ட அனுமதியை ரத்து செய்து கைது செய்வோம் என போலீசார் மிரட்டினர். இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு, கருத்துரிமையை நசுக்கும் செயல் என்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் தர்மாராஜ் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து வழக்குரைஞர்களும் எதிர்த்து வாதாடினர்.
ஆனாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடக் கூடாது என முன் கூட்டியே முடிவெடுத்த போலீசார் பெரும் படையை கொண்டு வந்து இறக்கி, ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த இடத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த ஊடகத்தினரிடம் தோழர் தர்மராஜ் போலீசின் அடக்குமுறையை கண்டித்து பேட்டியளித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தோழர் கோவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நவம்பர் 17 வரை நடவடிக்கை எடுக்கப்படாது என தற்காலிகமாக பின்வாங்கிக் கொண்ட ஜெயா போலீசு குறித்த செய்திகள் வெளிவந்திருந்தன.
“கொடைக்கானல் மலைப்பகுதியில் வனச்சரணாலயம் அமைக்கும் திட்டம் என்கிற பெயரில் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை அரசு வெளியேற்றுவதை எதிர்த்த போராட்டத்தில் பாடல் பாடிய குற்றத்திற்காக திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் இருந்து போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதற்கும், மேலும் புதிய வழக்குகள் போட்டு நிரந்தரமாக சிறையிலேயே முடக்குவதற்கும் சதித்திட்டம் தீட்டியிருப்பதை” அம்பலப்படுத்தினார். “ஜெயா அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், டாஸ்மாக்கை மூடும்வரை ஓயமாட்டோம்” என மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கமிட்டதுடன், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும், வயதானவர்கள் – பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்டோரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியும் போலீசு வாகனங்களில் ஏற்றினர். போலீசின் அராஜகத்தை கண்டித்து ஆவேசமாக முழக்கமிட்ட தோழர்களை குறிவைத்து அதிரடிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியதில் வேதாரண்யம் சாமி மற்றும் திருச்சி மருதை ஆகிய தோழர்களுக்கு மண்டை உடைந்தும், கழுத்துப் பகுதியில் கொடுங்காயமும் ஏற்பட்டது. ஊடகங்கள் முன்னிலையிலேயே போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். அத்துடன் சுற்றிலும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தும், ரோட்டில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். பொதுமக்கள் ஆவேசமடைந்து எதிர்க்கவே அவரை போலீசார் விட்டுவிட்டனர். பின்னர் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாநகர தலைவர் சின்னதுரை, தமிழ்தேசியப் பேரியக்க திருச்சி மாநகர செயலாளர் தோழர். கவித்துவன் உள்ளிட்ட பேச்சாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 106 பேரை கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
போராட்டம் முடிந்து விட்டதாக போலீசு நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் போலீசின் இந்த சட்ட விரோத பாசிச அடக்குமுறையை கண்டித்து சிறை வைக்கப்பட்ட இடத்திலும் தோழர்கள் போராட்டத்தை மீண்டும் துவங்கினர். போலீசார் உணவு ஏற்பாடு செய்ததையும் மறுத்துவிட்டு, உண்ணாவிரதம் இருக்க துவங்கினர். பிரச்சனை அதற்குள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவர துவங்கியதால் உளவுத்துறை மேலதிகாரி ஒருவர் நேரடியாக தொலைபேசியில் பேசி, நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுமாறும் கெஞ்சியுள்ளார். தோழர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டும் அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரகள். மேற்கண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மாநகர் முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி
94454 75157
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி அணிதிரட்டும் விதமாக மூடு டாஸ்மாக்கை என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தின் மூலம் அரச பயங்கரவாதத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 31-10-2015 அன்று முத்தியால்பேட்டை மார்கெட் எதிரில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடந்தது. பு.ஜ.தொ.மு.வின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன் கண்டன உரை யாற்றினார்.
தோழர் சரவணன் தனது தலைமையுரையில், “மக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாடல் பாடியதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், தோழர் கோவன். மக்களோடு மக்களாக வசிக்கும் தோழரை அதிகாலை 02.45 மணிக்குக் 10 பேர் கொண்ட போலிசு தனிப்படை அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்துள்ளது. தேடப்படும் தலைமறைவு கிரிமினல் குற்றவாளியைத் தேடிச் சென்று கைது செய்வது போல் கைது செய்துள்ளது. அதே நேரத்தில் தஞ்சையில் தோழர் காளியப்பனைக் கைது செய்ய திருடனைப் போல் அவரது வீட்டின் பின்பக்க சுவரேறிக் குதித்துள்ளது. பின்னிரவு 02.45 மணிக்கு சாதாரண மக்களில் ஒருவரது வீட்டின் பின்பக்கச் சுவரேறிக் குதித்தால், குதித்தவனை திருடன் என்று தானே சொல்ல முடியும். இவர்கள் பெயர் போலிசு. இவர்களுக்கு இதில் கொஞ்சமும் வெட்கமில்லை போலிருக்கிறது.
ஏற்கனவே, மக்கள் வேலையில்லாமல் அற்பக் கூலிக்கு கிடைத்த வேலைக்குச் சென்றால், அந்தக் கூலியையும் டாஸ்மாக்கை வைத்து புடுங்கிக் கொள்கிறது அம்மா அரசு. மக்களின் மாதவருவாயைப் புடுங்கிக் கொண்டு மதுவருவாயைப் பெருக்கிக் கொள்கிறது. ஒருபுறம் தாலிக்குத் தங்கம் திட்டம், மறுபுறம் தாலியறுக்கும் டாஸ்மாக் என்று சொல்லி பெண்களே அம்மா ஆட்சியின் மீது காறித் துப்புகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையுமின்றி, ஊத்திக் கொடுப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும். எனவே, இவர்கள் டாஸ்மாக்கை மூடமாட்டார்கள். மக்களே அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது தான் தீர்வு” என்று சொல்லி தனது உரையை முடித்தார்.
அடுத்து கண்டனவுரையாற்றிய தோழர் லோகநாதன், “அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்து பாட்டுப் பாடுவதே தேசக் துரோகக் குற்றம் என்றால், இதன் பெயர் ஜனநாயக நாடா? மேலும், தோழர் கோவனைக் கைது செய்வதற்கான காரணத்தைச் சொல்லாமல், அவரை வைத்திருக்கும் இடத்தைக் கூட சொல்லாமல் இருப்பதென்றால், அதற்குப் பெயர் கைது நடவடிக்கையா? அல்லது ஆள்கடத்தலா? இந்தச் செயலைச் செய்பவர்கள் பெயர் ரவுடிகள். காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு இந்த வேலையைச் செய்வதை விட வேறேதாவது வேலையைச் செய்யலாம்.” என்றும், இது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் தற்கொலை, பகுத்தறிவாளர்கள் படுகொலை என் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாசிசமயமாகி வருவதையும், பாசிசத்திற்கு துணையாக இருப்பதையும் தோலுரித்துக் காட்டினார்.
இறுதியாக, மக்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப் பாடுவது தேசத் துரோக குற்றம் என்றால் அக்குற்றத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்ற அறிவிப்புடன், மூடு டாஸ்மாக்கை பாடலையும், பாடு அஞ்சாதே பாடலையும் தோழர்கள் பாடினர். தோழர். கோவன் பாடிய மூடு டாஸ்மாக்கை, ஊத்திக் கொடுத்த உத்தமி ஆகிய இரண்டு பாடல்களையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் மகேந்திரனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி
தொடர்புக்கு: 95977 89801.
தோழர் கோவன் தேச துரோக வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும் தோழர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும், கரூரில் 02-11-2015 அன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்க இழுத்தடித்த காவல்துறை, ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் இரவு 8 மணிக்கு நிபந்தனைகளுடன் (பறையடிக்கக் கூடாது, முழக்கங்களை முன்கூட்டியே காவல்துறையிடம் கொடுக்க வேண்டும், 1 மணி நேரம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்) அனுமதி வழங்கியது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். தோழர் காவல்துறையையும், இயற்கை வளக் கொள்ளைதான் தேசத் துரோகம் என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.
கண்டன உரையாற்றிய தோழர் வசந்தன், “மூடு டாஸ்மாக்கை பாடலை பாடினால் மட்டுமல்ல, அதை பரப்பினாலும், பார்த்தாலும் தேச துரோக வழக்கு போடும் இந்த அரசு” என்று போலி ஜனநாயகத்தை தோலுரித்து பேசினார்.
மக்கள் அதிகாரம் தோழர் புஸ்பராஜ், “அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம், அடக்கு முறையை முறியடிப்போம். தோழர் கோவன் செய்த துரோகத்தை நாமும் செய்வோம். தோழர் கோவன் ஒருவரை கைது செய்யலாம். ஆனால், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கோவன்கள் உருவாகி வருவார்கள்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் சத்யா, “உலக அளவில் பாசிஸ்டுகளை எதிர்த்து ஒழித்தன மக்கள் போராட்டங்கள். நாமும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அதை எதிர்கொள்வோம்” என்று பேசினார்.
சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, பார்ப்பன பாசிசத்தை திரைகிழிக்கும் விதமாக பேசினார். தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க-வின் சரஸ்வதி இந்தப் பிரச்சனையில் அம்மாவிற்காக அமைதியாக இருக்கிறோம் என்று திமிராகச் சொன்னதைக் குறிப்பிட்டு, அ.தி.மு.க குண்டர்களை இறக்கி விட்டாலும், களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம் என்று சவால் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், “மூடு டாஸ்மாக்கை” பாடலை பாடிய போது, காவல்துறை தலையிட்டு பாடக் கூடாது என்று நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுவர்களும் அதிகம் கலந்து கொண்டனர்.
இறுதியாக மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் பாக்கியராஜ் நன்றியுரை வழங்கினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர் – தொடர்புக்கு 9791301097
என்ற முழக்கங்களுடன் மதுரை அண்ணாநகர், அம்பிகா திரையரங்கு அருகில் 2-11-2015 அன்று காலை 10.30 மணி அளவில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தோழர் கோவன் கைதைக் கண்டித்து, 03-11-2015 அன்று அண்ணாசிலை, மேலசிந்தாமணி, திருச்சியில் மதியம் 1.00 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
என்ற முழக்கத்தின் அடிப்படையில், நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.
மதுரையில் கடந்த செப்டம்பர் 10 அன்று நீதித்துறை ஊழலை கண்டித்து வழக்கறிஞர்கள் பேரணி நடத்தியதை ஒட்டி மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 14 பேர் அனைத்திந்திய பார் கவுன்சிலால் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அநீதியை கண்டித்து பேச முடியாத ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை மதுரை நகருக்குள் நிலவி வருகிறது.
நீதிமன்ற வளாகத்தில் சுவரொட்டி ஒட்டுவதோ, துண்டறிக்கை கொடுப்பதோ, கூட்டம் நடத்தவோ கூடாது என்றும் மீறினால் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்ற அவசர நிலை தான் மதுரையில் உள்ளது. ஜனநாயக இயக்கங்களின் எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப் படுகிறது. தமிழகத்தின் ‘மிகப் பெரும் எதிர் கட்சி’யான தி.மு.க மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தொடர்ந்து பலமுறை அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில், 27-ம் தேதியே மதுரை முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மயமாகிவரும் நீதித்துறையை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட அறைகூவலுடன் சுவரொட்டிகள் பளிச்சிட்டன. இது அதிகாரவர்க்கத்தை நேருக்கு நேர் மோதலுக்கு அழைப்பது போல் இருந்தது.
கடமை தவறாத காவல்துறை 28-ம் தேதி அதிகாலை முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குவிந்தது. மக்களோடு மக்களாக இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள், சரியாக 10.45 மணிக்கு மடக்கி வைத்திருந்த பதாகைகள், முழக்க அட்டைகள் ஆகியவற்றை ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பாய்ந்து சென்றனர். பதறி ஓடிவந்த காவல்துறையினர் தோழர்களை தடுக்க முயன்றனர். அதற்குள் பத்து பதினைந்து பேர்களாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென நூறு பேர்களாக மாறியதை கண்டு திகைத்து போனது காவல்துறை. மக்கள் அதிகாரம் அமைப்பினரோடு தென் மாவட்டங்களைச் சேர்ந்த வி.வி.மு, பு.மா.இ.மு., ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பெவிமு ஆகிய தோழமை அமைப்புத் தோழர்களும் ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர். கட்டுப்படுத்த முடியாத காவல்துறை திணறியது. உடனடியாக கைது செய்துவிட முயன்றது. அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் குருசாமியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் கிடைத்த இடைவெளியில் தோழர்கள் மேலும் சிற்ப்பாக முழக்கமிடத் தொடங்கினர்.
மீண்டும் கைது செய்ய முயன்றது காவல்துறை. “நாங்கள் கைதாக வரவில்லை. நீதித்துறையின் சதிகளை அம்பலப்படுத்த வந்துள்ளோம். அதற்கு கைது செய்வாய் என்றால். நீயே செய்து கொள் “ என்று ரோட்டில் படுத்து விட்டனர் தோழர்கள். திரளாக சுற்றி நின்ற மக்களின் முன் தோழர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று வாகனங்களில் புளி மூட்டையை போல திணித்தது போலீசு. தோழர்களோ ஒருவரோடு ஒருவராக தங்களை பின்னிக் கொண்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.
கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒவ்வொரு தோழரையும் இரண்டு மூன்று காவலர்கள் சேர்ந்து இழுத்துச் சென்றனர். அந்த இடமே போர்களம் போல் ஆனது. வாகனங்களில் ஏறிய தோழர்களை கொன்று விடுவேன் என மிரட்டினான் ஒரு உதவி ஆய்வாளர். தோழர்களோ மிக எழுச்சிகரமாக முழக்கமிட்ட படி இருந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பின்னர் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். கருத்தரங்கம் நடத்த செலவில்லாமல் அரங்கம் பிடித்து கொடுத்த காவல் துறைக்கு நன்றி கூறிவிட்டு தோழர்கள் கருத்தரங்கம் நடத்த ஆரம்பித்தனர். பாடல்கள் உரைகள் என மாலை 6 மணிவரை கூட்டம் நடந்தது. பின்னர் தோழர்கள் விடுவிக்கப் பட்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை
Singing in Dark Times -Horaata, October 2014
Beef Song- Sharath Nalengatti
the song highlights the benefits of beef eating.
It says that all great people in the world are all particularly beef eaters
We resemble black lotus
We have been singing very beauty
We have been learn more very easy
Reason for all this thing is beef
secret of my energy, secret of our knowledge
Its fantastic, its aesthetic, its our favourite,
It is native, its delicious, its dearest
its moralist, it is precious
beef is not a local brand, it is an international brand
It is pure and solid international brand
Beef, secret of my energy
secret of our knowledge
Socrates, Aristotle,
Plato, Buddha
Mohammed, Jesus
Marx, Ambedkar
Newton, Austin
Stehpen Hawking
Martin Luther
Malcolm X
Stalin, Lenin
Lincol, Che gu vera
Paul Robson, Michael Jackson
All the legends are
They not eat dhal, they eat beef only
Paul Robson, Michael Jackson
All the legends are beef eaters.
beef secret of my energy, beef secret of our knowledge
இருண்ட காலத்தின் பாடல்கள்
ஹோராட்டா, அக்டோபர் 2014
மாட்டிறைச்சி பாடல் – சரத் நளன்கட்டி
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது
உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது
நாங்கள் கருப்புத் தாமரை போன்றவர்கள்
எங்கள் பாடல் அழகானது
அறிவு எங்களுக்கு எளிதாக கைவருகிறது
அது எல்லாவற்றுக்கும் அடிப்படை மாட்டிறைச்சிதான்
எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
அது சிறந்தது, அழகானது, எங்களுக்கு பிடித்தது
அது நம்ம ஊரு உணவு, சுவையானது, நெருக்கமானது
அது நியாயமானது, விலைமதிப்பற்றது
மாட்டிறைச்சி உள்ளூர் பிராண்ட் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச பிராண்ட்
அது சுத்தம் சுயம் சர்வதேச பிராண்ட்
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
சாக்ரடீஸ், அரிஸ்டாடில்
பிளேட்டோ, புத்தா
முகமது, ஏசு
மார்க்ஸ், அம்பேத்கர்
நியூட்டன், ஆஸ்டின்
ஸ்டீபன் ஹாக்கிங்
மார்ட்டின் லூதர்
மால்கம் எக்ஸ்
ஸ்டாலின், லெனின்
லின்கன், சேகுவேரா
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும்
பருப்பு சாதம் சாப்பிட்டவங்க அல்ல, அவங்க சாப்பிட்டது மாட்டிறைச்சிதான்
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும் மாட்டிறைச்சி சாப்பிட்டவங்க
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிமைப்படுத்தித் தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் ஜெயாவிற்கு இணையாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி, தற்பொழுது பா.ஜ.க.வில் ஒட்டிக் கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தீயாய் வேலை செய்து வருகிறது.
நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தமிழ்நாட்டைக் குடிநாடாக ஆக்கியதுதான் அம்மாவின் ஒரே சாதனையாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள கட்சி சாராத ‘நடுநிலை’ வாக்காளர்கள் அனைவரையும் ஒரு ரேட்டு போட்டு வாங்கிவிட அம்மாவால் முடியுமென்றாலும், கொஞ்சத்துக்கு கொஞ்சம் பேரிடமாவது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் அறவுணர்ச்சியும் சுயமரியாதை உணர்வும் அதற்குத் தடையாக இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சிகள் தி.மு.க.வோடு கூட்டணி சேர்வதைத் தடுக்கும் பார்ப்பனக் கும்பலின் நோக்கம் நிறைவேறினாலும், அ.தி.மு.க. ஆட்சி மீது உள்ள அதிருப்தி தி.மு.க.விற்கு வாக்குகளாக மாறுவதைத் தடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இப்படியான நிலையில் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்ற பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தமிழகத்து வாக்காளர்களின் முன் பரிமாறுவதற்குப் பல்வேறு சதித்தனங்களில் இறங்கியிருக்கிறது.
2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசா மீது புதிதாக சொத்துக் குவிப்பு வழக்கு; 2ஜி வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த தி.மு.க. ஆட்சியின்பொழுது உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் இருவருக்கும் சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பவிருப்பதாகக் கசியவிடப்பட்ட தகவல்; தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது, தனது இல்லத்தில் சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்த குற்ற வழக்கில் அவரைக் கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ. எடுத்த முயற்சிகள்; சன் குழும தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலி ஆகியவற்றுக்கான உரிமத்தை ரத்து செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய உள்குத்து வேலைகள்; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் சு.சாமி தாக்கல் செய்திருக்கும் மனு; 223 கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் வாசன் கண் மருத்துவமனையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும்; இம்மருத்துவமனையே ப.சிதம்பரம் குடும்பத்திற்குச் சொந்தமானதென்றும் ஆடிட்டர் குருமூர்த்தியும் தினமணியும் இணைந்து
வைத்துள்ள குற்றச்சாட்டு – இவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தி.மு.க. தலைமை மற்றும் ப.சிதம்பரத்தை நோக்கி எய்யப்பட்டுள்ளன. தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் இந்த வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் பெருத்த அக்கறையும் ஈடுபாடும் காட்டுவதற்குப் பின்னே அதன் சுயநல நோக்கம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
ஆகஸ்டு முதல் வாரத்தில் சென்னையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, ஜெயாவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துவிட்டு டெல்லி திரும்பினார். அதற்கடுத்த பத்து நாட்களிலேயே ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்பட்டு, ஆ.ராசா, அவரது மனைவி உள்ளிட்டு 20 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பாய்ந்தது. இந்தக் காலவரிசையே காக்கை உட்கார்ந்த பிறகுதான் பனம் பழம் கீழே விழுந்தது என்பதை நிரூபிக்கிறது.
2ஜி முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகள் நடந்து வருகின்றன. உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்குகளில் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கின் தொடக்கத்திலேயே ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளைச் சோதனையிட்ட சி.பி.ஐ., அப்பொழுதே கண்டுபிடிக்க முடியாததை – ஆ.ராசா தனது வருமானத்திற்கு அதிகமாக 30 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதை இப்பொழுது கண்டுபிடித்திருப்பதாகக் கூறுவதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இந்த வழக்கு குறித்துத் தன்னிலை விளக்கம் அளித்துள்ள ஆ.ராசா, “2004 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் நானோ, எனது குடும்பத்தாரோ சொத்துக் குவிப்பில் ஈடுபடவில்லை என சி.பி.ஐ. விசாரணை அதிகாரி விஜய் பிரயதர்ஷினி கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதாக”க் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கு டெல்லியிலிருந்து அல்லாமல், சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகளால் போடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார், அவர். இவையெல்லாம் உண்மையென்றால், இந்த வழக்கின் பின்னணி குறித்து சந்தேகம் கொள்ள முகாந்திரம் இருக்கிறது.
இந்த சந்தேகங்கள் குறித்து சி.பி.ஐ. எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காதபொழுது, தமிழகத்து பார்ப்பனக் கும்பலோ சி.பி.ஐ.யின் பிரதிநிதி போல, “வழக்கை யார் போட்டால் என்ன? நீதிமன்றத்தில் வழக்கின் ஒரு கட்டத்தில் ஒரு கருத்து கூறப்பட்டால், ராசா மீது இனிமேல் சி.பி.ஐ. சந்தேகப்படக்கூடாது என அர்த்தமல்ல” எனப் பாய்ந்திருப்பதோடு, 2ஜி வழக்கின் முடிவு தெரியும் முன்பே, “ராசா ஒன்றும் அப்பழுக்கற்றவரோ, அப்பிராணியோ அல்ல” எனத் தீர்ப்பெழுதிவிட்டது. (துக்ளக், 9.9.2015)
சண்முகநாதன், ஜாபர் சேட் விவகாரம் இதனைவிட வன்மமும் குதர்க்கமும் நிறைந்ததாக உள்ளது. சண்முகநாதன், ஜாபர் சேட் இருவருக்குமிடையே கலைஞர் டி.வி.க்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெறுமான விளம்பரங்கள் பெறுவது தொடர்பாக நடந்த உரையாடல் பதிவுகள் புதிய விவகாரமல்ல. 2ஜி வழக்கு தொடர்புடைய நீரா ராடியா டேப் விவகாரம் கசிந்தபொழுதே இவையனைத்தும் சந்திக்கு வந்துவிட்டன. அதனை இப்பொழுது கையில் எடுத்துக்கொண்டு தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்படுத்துவதுதான் சி.பி.ஐ. – பார்ப்பனக் கூட்டணியின் நோக்கம்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு முறையான அழைப்பாணை எதுவும் சி.பி.ஐ.யால் அனுப்பப்படவில்லை. மாறாக, அவரை விசாரணைக்கு வருமாறு தொலைபேசி மூலம் சி.பி.ஐ. கோரியிருக்கிறது. இதற்கு சண்முகநாதன், “எழுத்துபூர்வமாக அழைப்பாணை அனுப்புமாறு” சி.பி.ஐ.க்குப் பதில் அளித்துவிட்ட பிறகு, இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், அவரை விசாரிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலை. இந்த அனுமதியை சி.பி.ஐ. பெறுவதற்கு முன்பே, அவரது பெயரை வழக்கில் சேர்த்து விசாரிக்கப் போவதாக கிசுகிசுக்கள் இறக்கை கட்டிப் பறந்தன.
நீரா ராடியா டேப் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை 2ஜி வழக்கில் இணைக்க வேண்டும் எனக் கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவின் மீது உச்சநீதி மன்றம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்த டேப் விவகாரத்தில் பழம் பெரும் தரகு முதலாளிகளான ரத்தன் டாடா, அம்பானி போன்றோரும் சம்பந்தப்பட்டிருப்பதால், உச்சநீதி மன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் குறி வைக்கப்படுவதற்கு அரசியல் பழிவாங்குதல் தவிர்த்து வேறு காரணம் இருக்க முடியாது.
தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது அவருக்குத் துறைரீதியாக வழங்கப்பட்ட 3 இலவச உயர்ரக தொலைபேசி இணைப்புகளை ரகசியமாக நீட்டித்து, அதில் இருந்து 764 தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி, அவற்றை சன் டி.வி.க்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 229.2 கோடி ரூபாய்க்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தினமணியில் திரும்ப திரும்ப எழுதி வருகிறார். மேலும், சட்டவிரோத இணைப்புகளை வைத்திருப்பது தேசப் பாதுகாப்பை அச்சுறுத்தும் குற்றமாகும் என்றும் பீதியூட்டி வருகிறார்.
ஆனால், சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கு குருமூர்த்தி குறிப்பிடுவது போல பிரம்மாண்டமானதாக இல்லை. தயாநிதி மாறன் தனக்கு வழங்கப்பட்ட மூன்று இலவச இணைப்புளை நீட்டித்து, 364 இணைப்புகளைச் சட்டவிரோதமாக உருவாக்கி, அதன் மூலம் அரசுக்கு 1.2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்பதுதான் சி.பி.ஐ. வைத்துள்ள குற்றச்சாட்டு.
குருமூர்த்தி வாதிடுவது போல இது 229.2 கோடி ரூபாய் பெறுமான மோசடி என்றால், சி.பி.ஐ. ஊழல் தொகையைக் குறைவாக மதிப்பிட்டு, வழக்கை ஏன் சப்பாணியாக்கிவிட்டது என்ற கேள்வி எழுகிறது. மாறாக, சி.பி.ஐ., குறிப்பிடும் தொகைதான் உண்மை என்றால், 2ஜி வழக்கில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தி.மு.க. ஊழல் செய்துவிட்டது போலக் கூசாமல் புளுகி வரும் பார்ப்பனக் கும்பலின் இன்னொரு பித்தலாட்டமான ஏற்பாடாக இவ்வழக்கு ஊதிப்பெருக்கப்படுகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், “உ.பி.யில் நடந்துள்ள 8,000 கோடி ரூபாய் பெறுமான ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளவர்களைக் கைது செய்ய முயலாத நீங்கள், தயாநிதி மாறனைக் கைது செய்ய ஏன் துடிக்கிறீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மாறன் சகோதரர்கள் யோக்கியமானவர்கள் இல்லைதான். அதே அளவிற்குப் பார்ப்பனக் கும்பலும் ஊழலை எதிர்ப்பதில் சுய இலாபமில்லாத பரிசுத்தவான்கள் இல்லை என்பதை உச்சநீதி மன்றத்தின் கேள்வி அம்பலப்படுத்துகிறது.
“சன் டி.வி.க்கு அயல்நாட்டிலிருந்து முறைகேடான வழியில் முதலீடு வந்திருக்கிறது; மாறன் சகோதரர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன” என்ற காரணங்களை முன்வைத்துதான் சன் குழுமம் பண்பலை ஏலத்தில் பங்கு பெறுவதற்குத் தடை விதித்தது, மத்திய உள்துறை அமைச்சகம். இதே அளவுகோலைப் பிரயோகித்தால் 2ஜி வழக்கில் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனமும் பண்பலை ஏலத்தில் பங்கு கொள்வதைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதே அரசியல் காரணங்களுக்காகவே சன் குழுமத்தின் மீது தடை விதிக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்துகிறது. சன் குழுமம் இத்தடைக்கு எதிராக சென்னை, டெல்லி உயர்நீதி மன்றங்களில் வழக்குப் போட்டு சாதகமான தீர்ப்பை பெற்ற பிறகும்கூட, உள்துறை அமைச்சகம் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்து சன் குழுமத்தை முடக்கிப் போட்டு விடும் முயற்சியில் இறங்கித் தோற்றுப் போனது.
“வாசன் கண் மருத்துவமனையில் 223 கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் முதலீடு செயப்பட்டுள்ளது; அம்மருத்துவமனையின் நிர்வாகம் ஏறத்தாழ 20 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறது; இம்மருத்துவமனையின் உண்மையான அதிபர்கள் ப.சிதம்பரம் குடும்பத்தினர்தான்” என்று குருமூர்த்தியும் தினமணியும் வைக்கும் குற்றச்சாட்டுகள் மைய அரசால் வழக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை. வருமான வரித்துறையின் சென்னை மண்டலத்தில் ஆணையராகப் பணியாற்றி வந்த எம்.சீனிவாச ராவ், தன்னைப் பணியிட மாற்றம் செய்ததற்கு எதிராக ஒரு வழக்கை மத்திய தீர்ப்பாயத்தில் தொடுத்தார். அந்த வழக்கில், “வாசன் கண் மருத்துவமனையில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டுபிடித்து, அந்நிறுவனம் மீதும், அதனின் உண்மையான உரிமையாளர்களான ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதும், அவர்களின் கூட்டாளியான ஜே.டி. குழுமம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வந்தேன். அதனால்தான் உயர் அதிகாரிகள் தன்னைப் பணியிட மாற்றம் செய்துவிட்டதாக”க் குறிப்பிட்டுள்ளார். அவர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரத்திற்கு எதிரானது என்பதால் தினமணியும் குருமூர்த்தியும் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பாக எழுதி வருகின்றனர்.
“வாசன் கண் மருத்துவமனையில் கருப்புப் பணத்தை முதலீடு செய்த ஜே.டி.குழுமம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வியை இதற்குப் பொறுப்பான அதிகாரியான நாகபிரசாத் என்பவரிடம் வருமான வரித்துறை ஆணையரான சீறிவத்சவா கேட்டபொழுது, “மேலிடத்தின் அறிவுரையின் பெயரில்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இதனைத் தனது கட்டுரையிலேயே குறிப்பிடும் குருமூர்த்தி, “வருமான வரித்துறையில் ஆட்சி மாறிய பிறகும் ப.சிதம்பரத்தின் ஆட்கள் உயர் பதவிகளில் இருந்து வருகிறார்கள். இவையெல்லாம் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? அவர் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்?” என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
வாசன் கண் மருத்துவமனை கருப்புப் பண புழக்கத்திலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டிருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தும், அதன் மீதும், அந்நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகிறதென்றால், இந்த விவகாரத்தில் முதன்மைக் குற்றவாளி மோடி அரசுதான். ஆனால், குருமூர்த்தியும் தினமணியும் தமது அரசியல் நோக்கங்களுக்காக மோடி அரசையும், நிதியமைச்சகத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ப.சிதம்பரத்தின் மீது மட்டும் பாய்கிறார்கள்.
இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தைத் தமது அரசு கொடுத்துள்ள சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையாக்கிக் கொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறது, மோடி அரசு. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வரியே விதிக்கக்கூடாது என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள வோடாஃபோன், நோக்கியா, வீடியோகான், என்.டி.டி.வி. உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்ளப் போவதாக உத்தரவாதமளித்திருக்கிறார், நிதியமைச்சர். இப்படிபட்ட நிலையில் ப.சி.க்குச் ‘சொந்தமான’ வாசன் கண் மருத்துவமனை வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பண புழக்கத்தில் ஈடுபட்டிருப்பது குறித்த குருமூர்த்தியின் அறச்சீற்றம், தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மோசடித்தனமும் விளம்பரத்தனமும் கொண்டதாகும்.
“1970-களில் வெறும் 265 ரூபாய் இலஞ்சம் பெற்றவருக்கு 30 ஆண்டுகள் கழித்து ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்பொழுது, தயாநிதி மாறன், ப.சி. போன்றவர்கள் தப்பித்துவிடக் கூடாது” என ஆதங்கப்பட்டு எழுதுகிறார், குருமூர்த்தி. நிச்சயமாக; ஆனால், அவரின் இந்த தார்மீக கோபமும் ஆதங்கமும் ஜெயாவை நோக்கித் திரும்ப மறுப்பது ஏன்?
ஜெயாவை விடுதலை செய்த கணக்குப் புலி குமாரசாமிகூட, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிக்கவில்லை எனத் தீர்ப்பெழுதவில்லை. அந்தக் கொள்ளை 10 சதவீதத்திற்குள் இருக்கிறது என்பதுதான் குமாரசாமியின் கணக்கு. 265 ரூபாய் இலஞ்சம் பெற்றவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், குமாரசாமியின் தீர்ப்புப்படி 2.82 கோடி ரூபாய் சொத்தை வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்துள்ள ஜெயாவிற்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை என்ற கேள்வியை தினமணியும் குருமூர்த்தியும் ஒருநாளும் எழுப்பியதேயில்லை. தண்ணீரைவிட ஒரே சாதி இரத்தம் அடர்த்தியானது அல்லவா!
***
குருமூர்த்தி – தமிழ்நாட்டின் குமாரசாமி!
தயாநிதி மாறன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் 341 அதிநவீன இணைப்புகளையும், போட் கிளப் பகுதியில் உள்ள தனது நவீன பங்களாவில் 323 அதிநவீன இணைப்புகளையும் ஆக மொத்தம் 764 இணைப்புகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார், குருமூர்த்தி. (தினமணி, 15.8.2015, பக்.8) ஆனால், இவையிரண்டையும் எப்படிக் கூட்டினாலும் 664 என்றுதான் விடை வருகிறது. இந்த வகையில் நானும் குமாரசாமிதான் எனக் கூவியிருக்கிறார், ஆடிட்டர் குருமூர்த்தி. வேத கணிதம், வேத கணிதம் என்று இந்து மதவெறிக் கும்பல் கூப்பாடு போட்டு வருகிறதே, அதன்படி கூட்டினால் இப்படித்தான் விடை வருமோ!
***
– குப்பன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________
தோழர் கோவன் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மகன் தோழர் சாருவாகனின் பேட்டி – நக்கீரன் தளத்தில் வெளியானது
https://www.youtube.com/watch?v=exLup6KGXdw
நன்றி : நக்கீரன்
நன்றி http://www.bandw.in/2015/11/10-cartoons-against-sedition-charges-on.html
1. அமைதி காக்கவும்
3. நிபந்தனைகளுக்கு உட்பட்டது
4. கத்திரிக்கோல்
6. கபீராவும் அரசும்
7. மகாராணி விக்டோரியா
8. தேசத் துரோகம் என்ற பிசாசு
9. ஒரு வழிப் பாதை
10. 124A-ன் பயன்பாடு
போர்க்குணத்துடன் நடப்பதே போராட்டம். போர்க்குணம் என்றால் சாதாரணமாக அல்ல, போராட்டக்களத்தில் போலீசை எதிர்த்து நின்று தங்கள் கொள்கையை கைவிடாது போராடுவதே என்ற இந்த இலக்கணத்தை வகுத்து வைத்துள்ளது மக்கள் அதிகாரம் அமைப்பு.
அதற்கேற்றாற்போல் இன்று காலை 11.30 மணிக்கு, புரட்சிகர பாடகர், மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலை குழு தோழர் கோவன் கைதை கண்டித்து பரபரப்பான தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே “மூடு டாஸ்மாக்கை” என்ற பாடலும், “ஊத்திக்கொடுத்த உத்தமி…” பாடலும் மக்களிடையே வேகமாக பரவி, கோவனை விடுதலை செய்ய கண்டன குரல்கள் எழுந்து வரும் சூழலில் இப்போராட்டம் வீரியமாக நடைபெற்றால் மேலும் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றெண்ணிய ஜெயா அரசு வழக்கம் போல தனது ஏவலாளி போலீசு படையை குவித்து வைத்திருந்தது. பத்தடிக்கு ஒரு போலிசு, மொத்தமாக தி.நகர் பெரியார் சிலை அருகில் 100 போலிசு, அதுமட்டுமன்றி ரங்கனாதன் தெருவின் சந்து பொந்துகளிலெல்லாம் உளவுப்போலிசு என காக்கி மயமாயிருந்தது தி.நகர்.
அதுமட்டுமன்றி முன்னேற்பாடாக இரண்டு அரசுப் பேருந்துகளை கொன்டு வந்து நிறுத்தியிருந்தது, போராட்டக்காரர்களை அள்ளிப்போட்டு செல்ல. சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களிடையேயும், வாகன ஓட்டிகளிடையேயும் பீதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இருப்பினும் சரியாக 11.40-க்கு பேருந்திலிருந்து வந்திறங்கிய மக்கள் அதிகாரம் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் போலிசை நெருங்கி முழக்கமிடத் துவங்கினா. அவருடன் வந்திருந்தவர்கள் நான்கைந்து பேனரை விரிக்க சற்றே ஏமாந்து போனது போலிசு. ஆனால் அதற்கு மறுபக்கத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மொத்தமாக முழக்கமிட்டுக்கொண்டே வர இன்னொரு பக்கம் பெண்கள் அமைப்பினர் சூழ போராட்டம் கச்சிதமாக துவங்கியது. துவக்கம் முதலே போராட்டத்தை தடுத்துவிட வேண்டுமென பிரயத்தபட்ட போலிசு ஒவ்வொருவரையும் குண்டுகட்டாக தூக்கி வண்டியில் ஏற்றியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தமிழகத்தில் பொதுவான அரசியல் கட்சிகளின் போராட்டமாக இல்லாமல், தடை செய்ய வந்த போலீசுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு தடைளை ஏற்படுத்தினர். நிராயுதபாணியாக வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினரின் போராட்ட உறுதி தி.நகரையே ஸ்தம்பிக்க வைத்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பெண்கள், குழந்தைகளை தாக்கியதை கண்டு சுற்றியிருந்த பொதுமக்கள் போலிசை வசைபாடத் துவங்கினர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலிசு ஒவ்வொரு போராட்ட நபருக்கும் நான்கு போலிசு வீதம் அனுப்பி கைது செய்ய முயன்றது. ஆனால் மொத்த பேரும் பெரியார் சிலையை சுற்றி நடுரோட்டில் முழக்கங்களை எழுப்பியதால் தான, தண்ட, சாம, பேத வழிமுறைகளையெல்லாம் பிரயோகித்து பார்த்தது போலிசு. ஆனால் விடாமல் “தோழர் கோவனை விடுதலை செய்!” என்றும் “மூடு டாஸ்மாக்கை” என்றும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன்ர். மேலும் பாடல்களை உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தனர்.
இறுதியில் அரைமணி நேரம் கழித்து மூன்று பேருந்துகள், பல ஷேர் ஆட்டோகள், இரண்டு ஜீப்கள் போராட்டக்குழுவினரின் முழக்கங்களுடன் சென்னை சாலைகளை சுற்றத்துவங்கியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட
தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்!
தமிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” சார்பில் நாங்கள் நடத்திய போராட்டங்களை அனைவரும் அறிவர். இப்போராட்டங்களையொட்டி இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு“, ’’ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’’ என்ற இரண்டு பாடல்களும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கடந்த 30-10-2015 (வெள்ளி) நள்ளிரவு 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 505(1) மக்களை அச்சுறுத்தி போராடத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை மக்களின் பிரச்சனையை பாடல் இயற்றி பாடி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த ம.க.இ.க தோழர் கோவனை கைது செய்ததை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ம.க.இ.க சார்பு இணையதளமான வினவில் இந்த பாடல் வெளியானதற்காக மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் காளியப்பனை கைது செய்ய காவல் துறை முயற்சிக்கிறது. இதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது இனி அம்மா டாஸ்மாக் சாராயத்தை குடிக்க மறுப்பவர்கள் மீது தேச துரோக சட்டம் பாயலாம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயத்தை எதிர்த்து பாடல் பாடியதற்காக தேசதுரோகம் என்று சிறையில் அடைக்க முடியும் என்றால் நடப்பது மக்களாட்சி அல்ல மக்கள் விரோத அந்நியர்கள் ஆட்சி, எதிரான ஆட்சி அதை அகற்றுவதுதான் தீர்வு.
தமிழகம் முழுவதும் அறிவிக்கபடாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனது நாட்டு மக்களுக்கு உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் உத்திரவாதம் செய்யும் தகுதியை, தார்மீக உரிமையை இழந்து அதை நடை முறை படுத்துவதில் அரசு கட்டமைப்பு முழுவதும் தோற்று போய் விட்டது. அது மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறி நிற்கிறது.
அதனால் தான் நேர்மையான அதிகாரிகள் விஷ்னுபிரியா, முத்து குமாரசாமி தற்கொலை, அரசு மருத்தவர்கள் தற்கொலை, கிராணைட் விசாரணை அதிகாரி சகாயம் அரசுக்கு எதிராக மயானத்தில் போராடுதல் என தொடர்கிறது. மக்களின் எந்த அடிப்படையான போராட்டங்களுக்கும் தீர்வு கானாமல் காவல் துறையை வைத்து அடக்குமுறை செய்கிறது அரசு. எனவே, அரசின் இத்தகைய பாசிச நடவடிக்கையை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
ஆர்.எஸ்.எஸ் எப்படி தேசத்துரோகியாக இருக்கின்றது?-ஒரு நிரூபணம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடாத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவக்காலிகள் தான் என்பது ஊரறிந்த உண்மை.
‘வலியவன் என்றால் காலை நக்கு; எளியவன் என்றால் எட்டி உதை’ என்று காவிக் கூட்டத்தின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஒரே வரியில் அடக்கிவிடலாம்.
இவ்வழியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோசம் போட்ட இந்தக் கும்பலின் பாசிச ஆட்சி இன்றைக்கு மாட்டுக்கறிக்கு தடை, மாட்டுக்கறி தின்றதாக மக்களைக் கொல்வது, இந்துத்துவ பார்ப்பனியத்தை எதிர்க்கும் எழுத்தாளர்களைக் கொல்வது, தலித்துகளை எரிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, கல்வி நிலையங்களை காவிமயமாக்குவது, வரலாற்றைத்திரிப்பது, மை அடிப்பது என்று ஊழிக்கூத்து புரிகின்றன.
இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தில் ஒருபகுதி தான். ஆனால் இதற்கு கைமாறாக ஆர்.எஸ்.எஸ் ஏகாதிபத்திய முகமைகளுக்கு ஏவல் நாயாக எப்படி இந்தியாவை விற்றுத் தீர்த்திருக்கிறது என்று தெரியுமா?
28-10-2015 அன்று மத்திய அரசு, இந்தியாவில் அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்வதாகவும் இனிமேல் இவையனைத்தும் தங்களுக்குத் தேவையான நிதியை தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து ஆய்வு நிறுவனங்களும் வணிகமயமாக்கப்படும் என்றும் இந்திய கல்வித்துறையையே காலியாக்கி இருக்கிறது.
இம்முடிவு கடந்த ஜூன் மாதமே டேராடூன் பிரகடனத்தில் (Dehradun Declaration) முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பிரகடனத்தை செயல்படுத்திய முக்கியமான செயல்கர்த்தா ஆர்.எஸ்.எஸ் கும்பலின் விக்யான்பாரதி அமைப்பாகும். இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது எப்படி புரிந்துகொள்வீர்கள்?
“சிந்தான் சிவிர்” என்பதன் பெயரில் டேராடூனில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் ஓர் அதிர்ச்சிகரமான கேள்வி ஒன்றை முன் வைக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்த அறிவியல் கூட்டத்தில் என்ன வேலை என்பதுதான் அந்தக் கேள்வி. இது வழமைபோல ‘வேதக்கலாச்சாரத்தில் நானோ தொழில்நுட்பம்’, ’40க்கு 40 அடியில் விமானம்’ என்று திணிக்கிற இந்துத்துவக் காலித்தனம் அல்ல.
மாறாக, உலக வர்த்தக கழகத்தின் காட்ஸ் ஒப்பந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதன் பொருட்டு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களை, விற்றுத்தீர்க்கும் பிரகடனத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னின்று நடத்திக்கொடுத்திருக்கிறது என்பதுதான்.
காக்கி டவுசர்கள் என்றால் காவிப்பயங்கரவாதம் மட்டும் தான் என்று பார்த்து பழகிய பொதுமக்கள், இக்கும்பல் எப்படி இவ்விதம் தேசவிரோதியாக செயல்படுகிறது என்பதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் இக்கும்பல் விட்ட தேசாபிமான ஊளைச்சவுண்டு அவ்வளவு காட்டமானது. ‘மாட்டுக்கறி தின்பவன் இந்தியாவில் இருக்கக் கூடாது’, ‘முசுலீம் கிறித்தவர்கள் இந்தியர்கள் அல்லர்’, ‘கலாமைப் போன்று முசுலீம்கள் தேசபக்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும்’ என்று பாரதமாதா சேவையில் 24*7 நேரமும் ‘வேலையில்’ இருந்தனர்.
ஆனால், இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை எத்தகையது? இந்திய கல்வித்துறையையே ஏகாதிபத்தியத்திற்கு விற்றிருக்கிறார்கள். இன்றைக்கு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, இதே மோடி கும்பலின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம், ஹெ.எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸிற்கான ஆராய்ச்சி நிதிநல்கையை நிறுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் 14 செயல்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களை நிறுத்தியிருக்கிறது. 18 நிதிநல்கை ஆராய்ச்சித்திட்டங்களையும் வாபஸ் பெற்றிருக்கிறது.
இந்துத்துவம் என்பதன் பெயரில் இரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் எப்படி இந்தியாவை விற்றுத்தீர்க்கும் களவாணியாக இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இரண்டாவது எடுத்துக்காட்டு இன்னும் சற்று கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாட்டுக்கறி அரசியல் இன்றைக்கு மனிதக்கறி வேட்டையாக மாறியிருக்கிறது. தாத்ரியில் மாட்டுக்கறிதின்றார் என்ற புரளிக்காக இச்சமூகத்தின் சாமானியன் அடித்தே கொல்லப்பட்டார்.
இது வெளிவந்த சில நாட்களிலேயே பா.ஜ.க எம்.பி சங்கீத் சோம் (முசாபர் நகர் கலவரத்தை முன்னின்று நடத்திய காவிப் பொறுக்கி) தாத்ரி படுகொலையை இந்து-முசூலிம் வகுப்ப்வாத கலவரமாக மாற்றும் அரசியலை கையிலெடுத்தார். ஆனால் இந்தக்காவி ஓநாய் ‘அல்-துவா’ எனும் அரபுப் பெயரில் மாட்டுகறியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனி நடத்திவருவது வெட்டவெளிச்சமாகிப்போனது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது காவிக்கும்பலின் இத்தகைய தெள்ளவாரித்தனம் மட்டுமல்ல. இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல் சைவம் என்று சொல்பவர்களையும் எப்படி உயிரோடு வாழ அனுமதிக்கவில்லை என்பதைப் பற்றியும் தான்.
இன்றைக்கு பருப்புவிலை கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய்க்குப்போய்விட்டது. மாட்டுக்கறி தின்றால் தலித்துகளையும், முசுலீமையும், கிறித்தவனையும் கொல்வேன் என்று சொல்லும் இந்துத்துவ வானரங்களும் ஏ.பி.வி.பி குண்டாந்தடிகளும் பருப்பு விலையேற்றத்தை பேசாது இருப்பது ஏன்?
மோடி கும்பல் இதுவரை 80,000 டன் பருப்பு பதுக்கலை கண்டுபிடித்திருப்பதாக சவுண்டுவிடுகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்தையே காயடித்திருக்கிறது. பதுக்கலுக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுக்கும் வழியில் வெளிமார்கெட்டை மட்டும் திறந்துவிட்டு அரசின் வினியோக-விவசாய கட்டமைப்புகளை நிர்மூலமாக்கியிருக்கிறது.
இந்நிலையில் சைவப் பட்சிணிகளின் புரத தேவையை சரி செய்யும் அத்வாசிய பருப்பை பதுக்கும் எந்தவொருவரும் ஆர்.எஸ்.எஸ் காவிக்கும்பலால் தாக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மையடிக்கப்படவில்லை! நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லப்படவில்லை!
இது எதைக் காட்டுகிறது? சைவம் என்று சொல்கிறவனின் புரத்தேவையையும் இந்தக் காவிக்கும்பல் விடுவதாயில்லை. மாட்டுக்கறி உண்ணும் எளிய மக்களின் புரதத்தேவையையும் இந்தக் காவிக்கும்பல் விடுவதாயில்லை.
மொத்தத்தில் நம் நாட்டு மக்களின் மீது ஆர்.எஸ்.எஸ் காவிக்கும்பல் பகிரங்கமாக உணவுப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது!
இதிலிருந்து தெரிவது என்ன? இந்துத்துவ அரசியல் மறுகாலனியாதிக்கத்திற்கு ஈயும் பீயுமாக இருக்கிற அரசியல். அது உங்களிடையே வெறும் கலாச்சார பாசிசத்தை மட்டும் கட்டவிழ்த்து விடுவதில்லை.
இதுவரை இயற்கை வளங்களையும் நாட்டின் கட்டமைப்புகளையும் சூறையாடி வந்த ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான விலங்காக இருக்க வேண்டியது காவிக்கும்பலின் அரசியல் உயிர்வாழ்வதற்கான முன்நிபந்தனையாக நிற்கிறது. இவ்வகையில் அது தேசத்துரோகியாக இருப்பதன்றி வேறு எதுவாகவும் இருக்க இயலாது.
ஆர்.எஸ்.எஸ் கும்பல் எப்படி தேசத்துரோகியாக இருக்கிறது என்பதற்கான நிரூபணம் இது.
– இளங்கோ
இது தொடர்பான செய்திகள்
shut down the TASMAC,
shut it down
dont wait in vain for the elections, shut it down now
shut down the TASMAC,
shut it down
how many kids should perish
how many women should lose home
how many women should lose home
how many elections till / will you wait
how many elections till / will you wait
shut it down – now, Its evil – you know, shut it down.
shut down the TASMAC,
shut it down
liquor to gather crowd
liquor to garner votes
liquor to garner votes
liquor to shout their slogans
liquor to hold their flags
liquor to hold their flags
parties you know, grow in the brew
YOU, my love, are the side dish in their electoral game.
you are the side dish in their electoral game.
come on, you only need a big lock
not a vote
to shut this evil down
shut down the TASMAC,
shut it down
father a drunkard, together the son, also in the bar.
for the woman the menfolk is useless
the menfolk is useless
life drowning in sea of debts
honour auctioned in streets
honour auctioned in streets
You think they give us freebies?
they squeeze our lives as price
(கோரஸ்) they squeeze our lives as price
life’s light is gone, darkness drowns our homes
curse on the lady
shut down the TASMAC,
shut it down
Ruined are our lives
Broken are our homes
Broken are our homes
Fire in our bellies
who invited this hell here
who invited this hell here
out the liquor shops, ours is this village – and
who is the collector to decide?
shut down the TASMAC,
shut it down
The state is raged against you – don’t plead
the police may pounce upon you – don’t fear
down the shutters
who will stop us?
no tasmac here, in this village, anymore
shut it down.
தமிழக அரசே!
புரட்சிப் பாடகர் கோவனை
விடுதலை செய்!
மக்கள் கலைஞர்களைக் கண்டு
அஞ்சிநடுங்குவது அரசுக்கும்,
ஆட்சியாளர்களுக்கும் இது முதன்முறை அல்ல…
உலகம் அறிந்த மக்கள் நாடகக் கலைஞன்
பிரக்ட்டின் நாடகத்தைக் கண்டு சர்வாதிகாரி
ஹிட்லர் அஞ்சி நடுங்கியது
உலகறிந்த வரலாறு
ஏகாதிபத்திய, வெள்ளைய ஆட்சிக்கு எதிராக
மேடைகள் தோறும் விடுதலைப் பாடல்களை
பாடியதற்காக 19 முறை சிறையில் அடைத்தும்
சாகும்வரை விடுதலை உணர்வை ஊட்டிய
தமிழகத்தின் விடுதலைப் போராட்ட கலைஞன்
தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸை,
குரலை அறிந்திருப்போம்.
தமிழக மக்கள் அறிந்த கலைஞன்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் முற்போக்கு
நாடகங்களை தடுக்கவே உருவாக்கப்பட்டதுதான்
நாடக அரங்கேற்றத் தடைச்சட்டம் 1950.
கலை ஆயுதத்தின் வீரியம்
ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.
இப்படி அடக்குமுறையின் போதெல்லாம்
அதை நிறைவேற்றியவர்கள்
ஆளும் வர்க்கத்தின் காவல்துறைதான்.
இன்று கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள்
கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள்
அவர்களை காவல்துறையால் பிடிக்க முடியவில்லை
தாலி அறுக்கும் குடியைப் பற்றி பாடினால்
நடுராத்திரியில் கைதுசெய்து ரகசிய இடத்தில்
விசாரணை நடத்துகிறது காவல்துறை.
தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கருப்புச் சட்டம் மூலம்
நெருப்பை பொட்டலம் கட்ட நினைக்கிறது அரசு…
கலைஞனின் கலைக்குரல் காற்றில் கலந்து
விட்டால் அது மக்களின் மூச்சுக் காற்றாக
மாறிவிடும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா என்ன?
கலைமாமணிக்கும், தேசிய விருதுக்கும்
பாட்டெழுதி பணம் சம்பாதிக்கவும், புகழ் சேர்க்கவும்
தனது குரல் ஆயுதத்தை பயன்படுத்துபவரல்ல
மக்கள் கலைஞன் கோவன்
நான்கு அறைச்சுவர்களுக்குள் குளுகுளு என்று
அமர்ந்து எழுதியதல்ல அவரது பாடல்கள்…
“நாங்க படிக்கிற பாட்டு போராடத் தூண்டும் பாட்டு
சேத்த தொட்டு, நாத்த நட்டு, வாய்க்கா வரப்புல
எடுத்த மெட்டு..” என்று மக்களின் பிரச்சனைகளை
களத்தில் நின்று பாடுபவர் தோழர் கோவன்.
அதிகார ஆட்சியாளர்களின் கனவு மக்கள்
கலைஞன் கோவனை சிறைக்குள் அடைத்து விட்டால்
பிரச்சனை முடிந்து விடும் என்று
கோவனின் வாயில் முழங்கிய வார்த்தைகள் இன்று
லட்சக்கணக்கான மக்களின் வாய்களில் ஒலிக்கத்
தொடங்கி விட்டது.
இருண்ட காலத்தின் பாடல் ஒலிக்குமா? ஒலிக்கும்
இருண்டகாலத்தைப் பற்றி… என்றால் பிரக்ட்.
தமிழகத்தின் இருண்ட காலத்தில் பாடல்
ஒலிக்கின்றது. இருண்ட காலத்தைப் பற்றி…
டாஸ்மாக் என்ற இருண்ட காலத்தைப் பற்றி
இனி நாமும் பாடுவோம்!
கோவனின் குரல்தான் எங்கள் குரல், மக்களின் குரல்…
மக்களின் பிரச்சனைகளை நாடகமாக, பாடலாக வீதிகள் தோறும் எடுத்துச் செல்வோம்.
வீதி நாடகக் கலைஞர்கள் கூட்டியக்கம் – தமிழ்நாடு
8110091098
அதிகாரத்தை காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது!
கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?
”தோழர் கோவன் ஒரு மக்கள் பாடகர். தமிழகத்தின் புனிதமான (?) காலடியில் புரண்டு சனநாயகம் பெற்றெடுத்த பண்ணையடிமைத் தலைவர்களைப் போல புனித காலைப் போற்றி பாட அவர் அரண்மனை விகடகவிஅல்ல.அவர் உண்மையான கலைஞர்.
அவரது பாடல் அதிகாரத்தை காயப்படுத்தியது. அவ்வாறு காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது. அவரது பாடல் மக்களை சாராயத்திற்கு எதிராக புரட்சி செய்ய சொன்னது . அரசியலமைப்பு சட்டமும் அதைத்தானே சொல்கிறது.மக்களின் உடல் நலத்தை காப்பது அரசின் கடமை அல்லவா ? கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?
நீதித்துறையும் , நிர்வாகமும் அதிகாரத்திற்கு கால் அமுக்கி கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சாமானிய மக்களுக்காக குரல் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமை இல்லையா?
என்ன நோக்கத்திற்காக தோழர் கோவன் போராடினாரோ அதற்காக அவருடன் துணை நிற்போம்.”
வரம்பு மீறி குடிக்க வைத்து
வேட்டி விலக
வீழ்ந்துகிடக்க விடுவது
நாகரீகம்
விலகிய வேட்டியை சரிசெய்து
விழுந்து கிடப்பவனை
வீட்டில் சேர்ப்பது
ஆபாசம்
முட்டக் குடிக்க வைத்து
கெட்டவார்த்தை பேசி
வீதிகளில் அலைய விடுவது
நாகரீகம்
கெட்டவார்த்தை பேசியவன்
சட்டை பிடித்து
சட்டென்று அறைந்து
சுயத்தை உரைப்பது
ஆபாசம்
குடிவெறி புகுத்தி
குடும்பங்கள் அழிப்பது
நாகரீகம்
குடிகளின் நலன் காக்க
குடி ஒழிக்க
குரல் கொடுப்பது
ஆபாசம்
ஊத்திக் கொடுத்து
ஊரான் வாழ்க்கையெல்லாம்
ஊத்தி மூடிவது
நாகரீகம்
ஊறிப்போன குடிவெறிக்கு எதிராக
உரத்து குரல் கொடுப்பது
ஆபாசம்
பத்து ஊருக்கு
ஒத்தப் பள்ளிக்கூடம்
ஒத்த ஊருக்கு
பத்து மதுக்கூடம்
இது நாகரீகம்
மதுக்கூடம் ஒழி
கல்விக்கூடம் திற
இது ஆபாசம்
குடும்பத் தலைவன்
குடித்துக் களித்திட
குடும்பச் சிலுவையை
குழந்தைகள் சுமந்திட விடுவது
நாகரீகம்
ஊட்டப்படும் குடிவெறிக்கெதிராய்
ஊர் திரட்டி கோசம் போடுதல்
ஆபாசம்
எலும்பில்லாத நாக்குகள்
எப்படியும் பேசும்
எலும்பு துண்டுகளின்
சுவை கண்ட நாக்குகளோ
இப்படித்தான் பேசும்
அம்மணப் பேய்களை
ஆராதிக்கும் தேசம்
ஆடை பூட்டவரும் கோவன்களை
ஆபாசம் என்றே ஏசும்…..
விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி மாவட்டம்
Gopalan TN
இரண்டு பாடல்களையும் கேட்டேன். வினவின் முயற்சி பாராட்டுக்குரியது. அருவருப்பான அம்சம் ஏதுமில்லை. ஒரு தலைமுறையினை சீரழித்துக்கொண்டிருக்கும் இவ்வரசை சாடக்கூட ஜனநாயகத்தில் நமக்கு உரிமை இல்லையா என்ன.
Feroz Babu Gvr Chennai
இரு பாடல்களின் வரிகளை அப்படியே பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன். எல்லோரும் அப்படிச் செய்யவேண்டும். ஊருக்கு ஊர் கூடி பாடத் தெரிந்தவர்கள் பாடவேண்டும்.
எனக்குப் பாடவராது ! எனவே முழுவதுமாகப் பாடல்கள் கிடைத்தால் எங்காவது பொதுவில் படிக்கலாம் என நினைக்கிறேன்
Venkada Prakash with Sridharan Kathamuthu and 3 others
தெரியுமா! கோவன் கைதாம்!
ஏனாம்!?
கோவம் வந்துச்சாம்!
ஓ ! யாருக்காம்!?
கோவனுக்காம்!
அட!
ஏன் உனக்கும் வருதா!?
பின்ன? என்ன இருந்தாலும் அஜீத்து ஓட்டுப்போட வந்துருக்கணும்லா!?
Arul Ezhilan
இயக்கப் பின்னணி எதுவுமில்லாமல் ரோமன் கத்தோலிக்க மரபில் வளர்க்கப்பட்ட எனக்கு சமூக உணர்வையும், அரசியல் உணர்வையும் ஊட்டியது தோழர் கோவனின் குரல்! அந்த விடுதலைப் பாடகரின் குரல் ஒலிக்காத மேடைகள் இல்லை…. எல்லா கட்சிகளும்,அமைப்புகளும் அவரது பாடல்களை பயன்படுத்திக் கொண்டன,தேவாலயங்களில் கூட புரட்சிகரப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கியது கோவன் குழுவினர் பாடத் துவங்கிய பின்னர்தான்.இவர்தான் கோவன் என்பது தெரிந்த பின்னர் அவரது கலை நிகழ்ச்சிகள் எதையும் தவறவிட்டதில்லை…. 20 ஆண்டுகள் ஆகி விட்டாலும் கூட “தொழுகை முடிந்த வாசலிலே அந்த யாருக்கும் கேட்கலியே”இன்னும் சன்னமாக என் ஆன்மாவோடு பயணிக்கிறது அந்த குரல்! ..செவ்வணக்கம் தோழர்.
Aloor Sha Navas
என் குருதியில் கலந்தவர் கோவன்!
ஆளூரில் பள்ளிக்கூட மாணவனாக இருக்கும்போதே கோவனின் குரல் எனக்கு அறிமுகமாகி விட்டது.
‘அண்ணன் வர்ராரு, அசுரகானம், காவி இருள்’… போன்ற ம.க.இ.க வின் இசைப்பாடல் தொகுப்புகளின் வழியே கோவன், என் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களை வந்தடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அப்பாடல்கள் அனைத்தும் எம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகும் கூட, சமரசமின்றி ஆதிக்க எதிர்ப்பில் நாம் உறுதியுடன் நிற்பதற்கு, அப்பாடல்கள் ஊட்டிய கருத்தியலே காரணம்.
கோவனை சிறை வைக்கிறீர்கள். கோவனின் புரட்சிப் பாடல்களை என்ன செய்வீர்கள்? அது என்னையும் கடந்து, என் நான்கு வயது மகன் வரை ஊடுருவிச் செல்கிறதே! அதை எப்படித் தடுப்பீர்கள்?
‘கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே, வேர்களை என்ன செய்வாய்?’ எனக் கேட்டார் கவிக்கோ. அதையே அரசை நோக்கியும் கேட்கிறோம்.
E.V.K.S.Elangovan (official)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 31.10.2015
சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் தங்களது விலைமதிக்க முடியாத விருதுகளை பா.ஜ.க. ஆட்சியாளர்களின் முகத்தில் வீசி எறிந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்படுகிற வகையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக அவலங்களை சித்தரித்தும் கலை இரவு நிகழ்ச்சிகள் மூலமாக கிராமிய பாணியில் தாரை தப்பட்டைகளுடன் பாடல்களை பாடி எழுச்சியை ஏற்படுத்திய மக்கள் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிவதாஸ் என்கிற கோவன் தேசதுரோக குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
‘இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்” என்ற கொடுமை ஹிட்லர் ஆட்சியில்தான் நடந்தது. அத்தகைய கொடுமையான நடவடிக்கைகள் தற்போது ஹிட்லர் ஆட்சியை மிஞ்சும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில் தற்போது நடந்து வருகிறது. பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. ஆட்சிக்கு எதிராக செய்தி வெளியிடுகிற பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் அச்றுத்தப்படுகின்றன. எந்த தொலைக்காட்சியாவது ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால் கேபிள் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது. அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் மக்கள் கொண்டிருந்தால் இன்றைய கொடுங்கோல் ஆட்சி, நாளை பேயாட்சியாக மாற வழிவகுத்துவிடும். இதை உடனடியாக தடுத்து நிறுத்த கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிற வகையில் வருகிற 2.11.2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் பெருந்திரளான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
தமிழச்சி (Tamizachi)
இந்திய சட்டத்தை எழுதியவர்களில் ஒருவரான தோழர்#அம்பேத்கர், சட்டத்தின் திருத்த முடியாத பக்கங்கள் தனியார் உரிமைகளில் தலையீடுவதாக சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவின் பெரும்பாலான #மாநில_சட்டமன்றங்கள் பொது மக்களின் உரிமைகளை ஒழுங்குப்படுத்துவதில் தமது சட்ட அதிகாரங்களை ஈடுபடுத்துகின்றன” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கடைசியாக, “மக்களுக்கு பயன்படாத ஒரு சட்டம் இருக்குமானால் இந்திய சட்டப்புத்தகத்தை கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்றார்.
அம்பேத்கர் கூறியபடி மாநில சட்டமன்றங்களின் தனி மனித உரிமைகளில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதற்கு#டாஸ்மார்க்கை_மூடு என்று பாடியதற்காக தோழர் கோவனை மீது இந்திய தண்டனை சட்டத்தின் [124A, 153A, 505]#தேசத்துரோகம், இரு குழுக்களுக்கிடையே வன்முறையை தூண்டுதல், #கலகம்_விளைவித்தல் என்னும் பிரிவுகளின் கீழ்#கைது செய்யப்பட்டு, #புழல்_சிறை யில் அடைக்கப்பட்டுள்ளதை உதாரணமாக பார்க்கலாம்.
இரு குழுக்களுக்கு இடையே #கலகம் விளைவித்தல் என்றால், குடிப்பவர்கள் / குடிக்காதவர்களுக்கு இடையே தோழர் கோவனை கலகம் விளைவித்தார் என்று பொருட் கொள்ள முடியுமா?
ஒருவேளை #மாநில_அரசு_அதிகாரம் அதையே வலியுறுத்துகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஜெயாவின் அரசு குடிக்காரன்களுக்கு மட்டுமான அரசா? குடிக்காதவர்களுக்கான அரசு இல்லையா?
இங்கே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட#மக்களாட்சி நடக்கிறதா? குடிக்காரன்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட#குடிமகன்கள் ஆட்சி நடக்கிறதா?
அரசு மக்களுக்காக இல்லை. சட்டம் தனிமனி மனிதனுக்கான உரிமையை வழங்கவில்லை என்றால் வேறு எதற்காக மக்களுக்கு #அரசு, #சட்டம், #காவல்துறை?
#தமிழச்சி
Barathi Thambi shared Alagesa Pandian’s post.
’மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.
சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா?
Yuga Bharathi
தோழர் கோவனின் கைதுக்கு காரணம் சமூக அக்கறை.மக்களுக்காகப் பாடினால் கைது.மக்களைப் பாடினால் கொலை.இந்த நாடும் அரசும் நாசமாய்ப் போகட்டும்.
Rk Rudhran
மதுவை எதிர்த்து ப்ரச்சாரம் செய்ய நிச்சயம் தோழருக்கு உரிமை உண்டு. ஓரிடத்தில், மாட்டிறைச்சி எதிர்ப்பை நீங்கள் எதிர்ப்பது போலத்தான் இதுவும் என்று படித்தேன்…ஹ்ம்ம்ம்… குடிப்பவன் தானும் நாசமாகி தன் கும்பத்தையும் நாசமாக்குவான், மாடு தின்பவன், தானும் உண்டு தன் குடும்பத்துக்கும் அவரது சுவைக்கேற்ற உணவைத் தருவான்.
மாடுகள் பலவற்றை மறைக்கின்றன.
ஒரு சந்தர்ப்பவாத வெறியாட்டமும் நியாய போராட்டமும் ஒன்றெனக் காட்டும் விஷத்தையாவது நாம் அடையாளம் காண்போம்.
ஆடு மாடு கோழி எதையும் நான் தின்பதில்லை, ஆனாலும் மாட்டிறைச்சி அரசியலை எதிர்க்கிறேன். மதுவை அவ்வப்போது நான் விரும்புவதும் உண்டு, ஆனாலும் தோழர் கோவனின் போராட்டத்தை ஆத்ரிக்கிறேன், அவரது கைதை கண்டிக்கிறேன்.
Alagappan Abdul Kareem
கோவன் கைது தொடர்பாக இன்று புதியதலைமுறையில் நடந்த நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கோவன் கைதை நியாயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மூன்று அதிமுகவினரை கலந்து கொள்ளச் செய்துள்ளனர்.
திமுகவின் சார்பில் மனுஷ்யபுத்திரன், காங்கிரஸின் ஜோதி ஆகியோருடன் அதிமுக சார்பில் காசிநாத பாரதியும் கலந்து கொண்டார்.
காவல்துறையின் சார்பில் கருத்து கேட்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ள ஆர். நட்ராஜ் மற்றும் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவரும் கலந்து கொண்டனர்.
நட்ராஜும் ராஜசேகரும் காசிநாத பாரதிக்கு சற்றும் சளைக்காமல் ஜெயாவுக்கு ஆதரவாகக் களமாடினர்.
புதியதலைமுறை….
உங்க ஊடக நேர்மைல கொள்ளிய வைக்க…
#ஊடகம் #கோவன்
Suguna Diwakar
எனக்குத் தோழர் கோவனோடு பழக்கமில்லை என்றாலும் 15 ஆண்டுகளுக்கும் மேல் அவர் குரல் பரிச்சயம். சாதியம், மதவாதம், உலகமயமாக்கலுக்கு எதிராக உரத்து ஒலிக்கும் குரல் அவருடையது. வெறுமனே பாட்டுப் பாடுவதோடு நின்றுவிடாமல் உடல் மொழியிலும் கலைத் தெறிப்பையும் கருத்தியல் வெளிப்பாட்டையும் பிரதிபலிக்கும் அற்புதமான அரசியல் பாடகன். ம.க.இ.க.வின் சில நிலைப்பாடுகளில் உடன்பாடில்லாத பலரும்கூட கோவனின் பாடல்களுக்கு ரசிகர்கள். ஒருபுறம் உரத்து ஒலிக்கும் அவரது பாடல்களின் இன்னொருபுறம் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
‘சம்மதமா சொல் சம்மதமா’ என்று முஸ்லீம்கள் இந்துத்துவப் பயங்கரவாதத்தால் வேட்டையாடப்படுவதைச் சொல்லும் பாடலாக இருந்தாலும் ’சொல்லாத சோகம்…’ என்று முஸ்லீம்களைத் தேசத் துரோகிகளாகக் கட்டமைக்கும் கற்பிதங்களுக்கு எதிராக முஸ்லீம்களின் தியாகங்களை விளக்கும் பாடலாக இருந்தாலும் ‘அந்த நந்தன் கதை சொன்னா நாவும் தடுமாறுமய்யா’ என்று பார்ப்பனப் பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களின் கதை சொல்லும் பாடலாக இருந்தாலும் கோவனின் பாடல்கள் மனதைப் பிசைய வைக்கும் மாயக்குரலை உள்ளடக்கியவை. உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமுடைய தனித்துவக் குரல் அவருடையது. அசுர கானம், இருண்ட காலம், காவி இருள், அண்ணன் வர்றாரு என்று விரியும் ம.க.இ.க. மய்யக் கலைக்குழுவின் ஒலிநாடாக்கள் எத்தனையோ பேருக்கு அரசியல் உணர்வை ஊட்டியிருக்கின்றன. அதற்கு கோவனின் பாடல்களும் பாடல்களுக்கு இடையில் அரசியலை விவரிக்கும் தொனியும் மிக முக்கியமானது. சந்தேகமில்லாமல் கோவனைத் ‘தமிழ்நாட்டின் கத்தார்’ என்றழைக்கலாம்.
மதுவிலக்கில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் டாஸ்மாக்கை எதிர்த்த ஒரு கலைவெளிப்பாட்டுக்கான கைது என்பது அரச பயங்கரவாதம்தான். டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடுவதற்கு தேசத் துரோக வழக்கு ஒருபுறம் என்றால் ‘இரண்டு பிரிவுகளுக்கு இடையில் மோதலைத் தூண்ட வாய்ப்புள்ளதாக’க் குற்றம் சாட்டுவது அநீதியானது. ‘இரண்டு பிரிவுகள்’ என்றால் என்ன? குடிப்பவர்கள், குடிக்காதவர்களா? உண்மையிலேயே சாதிய மோதல்களையும் மத மோதல்களையும் இனவாத மோதல்களையும் தூண்டும் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தைரியமாக நடமாடும்போது எதிர்ப்புக்குரலுக்கு சிறை வாய்த்திருக்கிறது.
இந்தியா முழுவதும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் மோடியின் அரசுக்குச் சவால் விடுகிறார்கள் எனில் கோவன் என்னும் ஒற்றைக் கலைஞனின் இரண்டு பாடல்கள் ஜெயலலிதா அரசுக்குச் சவால் விட்டிருக்கிறது.
கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கைது செய்வது என்பது விதையை மண்ணுக்குள் மறைக்கப் பார்ப்பதுதான். மீண்டும் வீரியத்துடன் முளைப்பார் கோவன். எழுச்சி இசை மழை பொழியும்!
Raj Arun
ரிட்டையர்ட் ஐ ஏ எஸ் அதிகாரி முருகனை இன்னைக்கு சமூக ஆர்வலர்னு தந்தி டீவியில் கேப்சன் கொடுக்குறாங்க.
இப்படி தான் கிஷோருக்கு அந்த கேப்சனை கொடுத்து நாறடச்சிசாங்க.
இந்த முருகன் ஒரு விவாதத்தில்
முன்னையெல்லாம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தா பெண்கள் உள்ள போய் ஒழிஞ்சுவாங்க, ஆனா இப்ப அப்படி இல்ல. அதுனாலயே பாலியல் குற்றங்கள் நடக்கதுன்னு பேசிய ஆளு.
வினவு குழுமத்தின் மீது எனக்கு எப்பொழதும் பெரிய மரியாதை உண்டு.
இப்பொழது அது பல மடங்கு கூடிவிட்டது
Abdul Hameed Sheik Mohamed
டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் அந்த தேச துரோகத்தை தினமும் செய்ய விரும்புகிறேன்.
மக்களின் துயரத்தை பாடுவது சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் எனில் அந்த சமூக ஒழுங்கு குலைவதே நல்லது
– இன்று புதிய தலைமுறையில் நான் சொன்னது.
Abu Haashima
அரசாங்கம் மனசுவச்சா
ஒரு சாதாரண ஆளைக்கூட
ஒரேநாளில்
ரொம்ப பிரபலமான ஆளா
ஆக்கிவிட முடியும்.
சமீபத்திய உதாரணம் …
கோவன் !
ஈவிகேஎஸ் இளங்கோவனிலிருந்து
ஈத்தாமொழி இளங்கோவன்வரை
ஒருத்தர் பாக்கியில்லாம
அத்தனை பேரும்
பாடகன் கோவனின்
பரம ரசிகர்களாயிட்டாங்க.
டீக்கடையில கூட
கோவன் பாட்டை போடுய்யான்னு
பட்டைய கெளப்புறாங்க.
இன்றைய நிலவரப்படி
தமிழ்நாட்டின் நம்பர் ஒன்
சூப்பர் சிங்கர்
கோவன்தான் !
டாப் 1 பாடல்
மூடு டாஸ்மாக்கை மூடு
கருப்பு கருணா
ம க இ க வுடன் உடன்படமுடியாத பல விஷயங்கள் இருக்கலாம்.ஆனால் கோவனின் பாடல்களில் ஒலிக்கும் ஆவேசத்துடனும் ஆன்மவலியுடனும் உடன்படாதிருப்பவன் கலைஞனாக இருக்க முடியாது.
ஒத்த குவார்ட்டரை பத்தி பாடுனாக்கூட ராஜதுரோக வழக்கு போடுவீங்கன்னா..நான் தெரியாமத்தான் கேக்குறேன்..ஒங்க ராஜ்ஜியமே அந்த குவாட்டருக்குள்ளதான் கீதா..?
கருத்துரிமையின் குரல்வளையை நெறிப்பதை இன்று நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்…குறித்து வைத்துக்கொள்ளுங்கள்…நாளை உங்கள் குரல்வளையும் நெறிக்கப்படலாம்..
Sam Ponraj
Now our TN state govt competing with the Central govt. Thanks folks for voting #ADMK
Tamil Nadu police on Friday imposed sedition charges against Kovan for the songs he had penned against the government, criticising its liquor policies and the Chief Minister J Jayalalithaa.
Shankar Raj
Wonder why The Hindu did not cover Tamil folk singer Kovan’s arrest or comment on it in its national editions. And Ram & co speak of ‘honest’ journalism.
Chezhian Ramalingam
So again Jaya back into her 91-96 term.. As usual arresting activist Kovanaround 2 AM as a dictator and buying the luxe cinemas by claiming false case against Satyam Reddy.. varaey va… தமிழகம் முழுவதும் சொத்துக்கள் வளைப்பு:
மீண்டும் திரும்புகிறதா 1991-96 கலாச்சாரம்? any ADMK supporter ???
Sathyamurthi Thambusamy
This is not about politics. It is about free speech. If you protest and people in power do not like it ( Gujarat, TN) they haul you on sedation. Given a choice I would rather wish my children live in less prosperous India than one without freedom of speech …
For all good things in India, we are very intolerant of criticism, we need to mature and grow up! just sample the vitriol educated bhakts generate on twitter …
BTW I am not sure shutting all of these shops solves anything but Govt and society at large not think of steps to crub access to school kids and support system for addicts and the addicts is morally not right.
பாசறை செல்வராஜ்
ம.க.இ.க.தோழர் கோவன் சிறப்பான பாடகர் தோழரை1987களில் இருந்தே தெரியும் அந்த காலங்களில் பேசும் அளவுக்கு பழக்கம் இல்லை ஆனாலும் நான் வனத்துறையில் பணியாற்றுகிறபோது வனஊழியர்/வனத்தோட்டக் காவலர் சங்கத்தின் பொதுச்செயளாலராகவும் பிறகு மாநிலத் தலைவராகவும் பணியாற்றிய போது சங்கத்தின் வேளையாக தொடர்ந்தாற்போல் திருச்சி செல்லவேண்டிய வாய்புகள் இருக்கும் அந்த நேரங்களில் திருச்சியில் பலயிடங்களில் ம.க.இ.க, பாடல்கள் பாடுவதை பார்பேன் 1990களுக்கு பிறகு பல பாடல்கேசட்டுகளை வெளியிட்டார்கள் அதில் அரிசன்னு பேருவைக்க யாரடா நாயே, அண்ணன் வர்ராரு, ஊரான் ஊறான் தோட்டத்திலே போன்ற பல பாடல்கள் மக்களிடத்தில் விழிப்புனர்வை உருவாக்கின
தமிழகத்தில் பல தலித் அமைப்புகள் இருந்தாலும் 1994காலங்களில் காஞ்சிபுரத்தை மைய்யமாக கொண்டு இயங்கிய அம்பேத்கர்பாசறை அமைப்போடு நல்ல உறவுகளோடு இருந்தது ம.க.இ.க தஞ்சையில் நடத்திய கலையிரவு நிகழ்வுகளில் தொடர்ந்து என்குடும்பத்தோடு பங்கெடுத்துள்ளேன் பாசறையின் அமைப்புகள் இருந்த கிராமங்களில் ம.க.இ.க பாடல்கள் ஒளிக்காத கிராமமே இல்லாத நிலையிருந்தது
மேலும் கோவன்உள்ளிட்ட பெண் தோழர்கள் எல்லாகிராமங்களிலும் வந்து நேரடியாக பாடியிருக்கின்றார்கள் பாசறை மாநிலத்துணைத்தலைவர் வழக்கறிஞர் ராமன் திருமணத்தில் இரவு கலைநிகழ்சி நடத்தினார்கள் வேலூர்மாவட்டம் அரக்கோனம் பக்கத்தில் உள்ள கணபதிபுரம் கிராமத்தில் அம்பேத்கர்பாசறை நடைத்திய கோவில்நுழைவு போராட்டத்தை புதியஜனநாயகம் இதழில் வெளியிட்டு அம்பேத்கர்பாசறைக்கு ஒரு கவுரவம் வழங்கினார்கள்
காஞ்சிபுரத்தில் 1995காலக் கட்டத்தில் திடிர்பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துக்கட்டுவோம் என்ற இயக்கம் ம.க.இ.க.வால் நடத்தப்பட்டடது அதற்கு பாசறையின் முழுஆதரவு
இணைந்து பணியாற்றியுள்ளோம் அந்த வகையில் தோழர்.கோவன் நெருக்கமாக தெறியும் நல்லமனிதர் சமூகத்தின் மீது மிக அக்கறையோடு மட்டுமில்லாமல் அற்பணிப்போடு பணியாற்றக்கூடிய தோழர்.கோவன்
நான் கடைசியாக பென்னகரம் இடைத்தேர்தல் நேரத்தில்நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தொடர்ந்து ம.க.இ.க.நிகழ்வுகளில் பார்த்துக்கொள்வேன் சென்னையில் உள்ள கீழைக்காற்று புத்தகளாயத்திற்கு செல்கின்றபோது கலைக்குழுவினரை விசாரித்துக்கொள்வேன்
தமிழக அரசே!
தோழர் கோவனை விடுதலைசெய்
பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு தடைபோடாதே
அமைதி காக்கும் மக்கள் நீண்ட நாள் அமைதி காக்கமாட்டார்கள்..,
சிங்கை பிரபாகரன்
டாக்டர் நோயாளியிடம் : உன் உடல் பலவீனமாகஇருக்குது, இனிமேல குடிக்கறதை நிறுத்திக்கோ உனக்கு எதாவது ஆச்சுனா பிள்ளைகுட்டியெல்லாம் அனாதையாகிடுவாங்க அதனால இனிமேல குடிக்காதே குடிக்காதே!
நோயாளி :இனி மேல சத்தியமா குடிக்கமாட்டேன் அய்யா!
டிரிங். டிரிங், டிரிங் டிரிங் (செல் அழைப்பு மணி ஓலிக்கிறது) ஹலோ
டாக்டர் மனோஜ் ஸ்பீகிங் …………..
மறு முனை : கமிசனர் அலுவலகத்திலிருந்து பேசுறேன், உங்களை கைது செய்ய மேலிடத்திலிருநது உத்தரவு!
டாக்டர் :என்ன தவறு செய்தேன்?
மறுமுனையில் :குடிக்ககூடாது என்று நோயாளிகளுக்கு அறிவுரை கூறினீர்களாமே இது தேச விரோத செயல் அல்லவா! அந்த குற்றத்திற்காக “அம்மா உத்தரவின்படி “கைது செய்கிறோம்!
டாக்டர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!
#KOVAN
Marx Anthonisamy
ஜெயாவின் பாசிச முகம் வெளிப்படும் இன்னொரு தருணம்..
டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்கள் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் கோவனைக் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிப்போம்.
தேசத் துரோகச் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள். “சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது”
அதுக்காக இவர்கல் தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவார்களாம். ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா’ காலம் நினைவுக்கு வருகிறது.
ஒரு அரசாங்கமே சாராயக்கடை நடத்த்ம், டார்கெட் நிர்ணயித்து சாராயம் விற்கும். தட்டிக் கேட்டால் தேசத் துரோகச் சட்டம்.
ஜெயா ஆட்சியின் பாசிசத்தை எதிர்ப்போம். மக்கள் கலைஞர் கோவனை விடுதலை செய்யக் குரல் கொடுப்போம்.
Arunan Kathiresan
“தேசத் துரோகத்தில்” இறங்கிய பாட்டு !
மதுவிற்கு எதிராகப் பாட்டு எழுதியதற்காக மகஇக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார் . மகஇகவின் சில தடாலடிச் சிந்தனைகளோடு நமக்கு உடன்பாடில்லை. ஆனால் மது எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு என்று தமிழக அரசிலேயே தனி இலாகா இன்னும் இருக்கும்போது (டி ஒ ஐ ஏடு) அத்தகைய பிரச்சாரப்பாடலை இயற்றியதற்காகக் கோவன் கைது செய்யப்பட்டிருப்பது அபத்தமானது. அதில் ஆட்சியாளர்கள் பற்றி அவதூறு இருப்பதாக அரசு கருதினால், இருக்கிறது அவதூறு வழக்கு. அது இந்த அரசுக்கு கைவந்தகலையும்கூட. அதைவிடுத்து பாடகரைக் கைது
செய்ததும்,அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததும் ஏற்கவே முடியாத செயல்.
ஏற்கெனவே நாடெங்கும் நடந்துவரும் கருத்துரிமை பறிப்பு வேலையில் இதுவும் சேரும்
Shankar A
ஜெயலலிதாவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியே தோழர் கோவனின் கைது.
தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே தள்ளாட வைத்த ஜெயலலிதாவை ஊற்றிக் கொடுத்த உத்தமி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ? மதுவை எதிர்த்து ஒரு பாடலைப் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டமென்றால், ஜெயலலிதா எந்த அளவுக்கு பாசிசமயமாகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.