Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 596

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் பிடியில் சென்னை ஐ.ஐ.டி – கார்ட்டூன்

9

அம்பேத்கர் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்!
சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம்

iit-bans-apsc-cartoonபடம் : ஓவியர் முகிலன்

தமிழ் சினிமா எடிட்டர்கள் : வாழ்வும் மரணமும்

3

டிட்டர் கிஷோர். தமிழ் சினிமாவின் அடையாளமான கோடம்பாக்கத்தின் பிரபலமான படத்தொகுப்பு  கலைஞர்களில் ஒருவர். கடந்த மார்ச் (2015) மாதம் தனது பணியிடத்திலேயே மயங்கி விழுந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் இறந்து போனார்.

editor-kishoreதமிழ் சினிமாவின் பாலா, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு தொகுப்பாளாராக பணிபுரிந்தவர். “ஆடுகளம்” படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றவர். பரதேசி, மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா, எதிர்நீச்சல் போன்ற தமிழ்ப்படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட  70-க்கும்  மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியவர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கிஷோர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சினிமாவில் ஆளாகும் ஆசையுடன் நுழைந்தவர் தற்செயலாகவே எடிட்டிங் துறைக்குள் வந்து சேர்ந்தார். பிரபல படத் தொகுப்பாளர் வி.டி விஜயனிடம் பயிற்சி எடுத்து பணியாற்றியவர். பின்னர் கடும் உழைப்போடும், துறைசார் நுட்பங்களை கற்றறிந்தும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தொழில் நுட்பக் கலைஞராக உருவெடுத்தார்.

திருமணமாகாத இவர், இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின்,  தொகுப்பு பணியின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பேசுவோரும், உலக சினிமாக்களை அணு அணுவாய் ரசிப்போரும் ஏராளமாய் உண்டு. ஆனால் ஒரு தொழில் நுட்பக் கலைஞனின் மரணம் குறித்து அவர்கள் தீவிர ஆய்வு எதையும் செய்யவில்லை. கிராஃபிக்ஸோ இல்லை புதிய கேமாராவுக்கோ இருக்கும் மதிப்பு தொழிலாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உயிர்களுக்கு இல்லை. கிஷோரின் மரணம் குறித்து பேசியவர்களும் ஒரு பொதுவான மனிதாபிமானத்திற்காக பேசினார்களே அன்றி அந்தத் துறையின் பிரச்சினைகள் குறித்து வாய்திறக்கவில்லை.

எடிட்டர் கிஷோர் மரணம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் அது அவரது படங்கள் அவற்றின் பிரபலங்களை வைத்தே பேசப்பட்டது. ஒரு இணைய வீடியோவில் அவரது உறவினர் – அவரும் சினிமாத் துறைதான் – பேசும் போது, “கிஷோருக்கு ஏற்பட்ட கதியை வைத்து அவர் ஏழை என்பதாக ஊடகங்கள் கதை திரித்ததாக” குறைபட்டுக் கொண்டார். மேலும், “கிஷோர் நினைத்தால் ஒரு ஐம்பது பேருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி கொண்டவர், அப்படி சினிமாவில் சம்பாதித்தார்” என்பதை வலியுறுத்தினார். ஆக, கிஷோர் என்பவர் ஏழையா பணக்காரரா என்ற அந்தஸ்து குறித்தே அவர் கவலைப்பட்டார்.

கிஷோர் சன் டிவியில் பங்கேற்ற நிகழ்ச்சி

https://www.youtube.com/watch?v=j9dPdw_cxps

நெருக்கடியான காலக்கெடுவுக்குள் ஒப்புக்கொண்ட பணிகளை எப்படி முடித்துக் கொடுப்பது? என்ற தொடர் மனஅழுத்தமே எடிட்டர் கிஷோர் மரணத்துக்கு அடிப்படை. இந்த மருத்துவ உண்மை, அதன் சமூகவியல் பரிமாணங்கள் குறித்தெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஒரு வகையில் தமிழ் சினிமாவின் எல்லா வகையான நோய்களோடும் இம்மரணம் தொடர்புடையது.

பாலாவின் பரதேசி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய திரு செழியன் அதே படத்தில் எடிட்டராக பணியாற்றிய கிஷோரை நினைவு கூர்கிறார் (நன்றி தி இந்து):

”..சில நேரங்களில் அவர் எடிட் செய்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் இருக்கும் அறையின் கதவைத் திறப்பேன். கணினியின் முன்னால் இருக்கும் நாற்காலியைத் திருப்பி வேறு திசையில் அமர்ந்து கண்கள் மூடி தியானம் போல ஆழ்ந்த யோசனையில் இருப்பார். உள்ளே யார் வருகிறார்கள் என்ற கவனம் இருக்காது. நான் கதவை மெதுவாக சாத்திவிட்டு திரும்பி விடுவேன். செய்கிற வேலையை அவர் நேசிக்கிற விதம் அவர்மேல் எனக்கு பெரிய மரியாதை கொடுத்தது. சிலநாள் நள்ளிரவு வரை படத்தொகுப்பு செய்வார். ஒருநாள் அதிகாலை அலுவலகத்துக்குப் போனபோது தனியாக படத்தொகுப்பு செய்துகொண்டிருந்தார்.

‘என்ன கிஷோர்..’

‘ஒண்ணுமில்ல சார்..அந்த சீன்ல ரிதம் செட் ஆகல அதுதான்..’

எனக்கு படத்தொகுப்பின் ரிதம் குறித்து அவருடம் பேச விருப்பமாக இருந்தது. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

‘அது என்ன கிஷோர்..மானிட்டருக்கு முன்னால அமைதியா இருக்கீங்களே.. அது என்ன தியானமா..யோசிப்பா..’

“சார்… சில சீன் அப்படியே வந்துரும் சார்.. சில சீன்.. ரிதம் செட்டே ஆகாது…” என்று பேசத்துவங்கி, வி.டி விஜயன் அவர்களிடம் தான் உதவியாளராக இருந்தபோது கட் கண்ணுக்குத் தெரியாமல் எப்படி இரண்டு ஷாட்களை இணைப்பது, ஒரு காட்சியின் அசைவும் அடுத்த காட்சியின் அசைவும் எப்படி இணையும், ஒரு காட்சியின் அசைவில் எந்த ஃபிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த ஃபிரேமுடன் இணைத்தால் அந்த கட் தெரியாது? ஒரு வைட் காட்சியும் ஒரு க்ளோசப்பும் எப்படி இணையும், எப்படி இணையாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

இந்த சிறிய வயதில் அவருக்கு படத்தொகுப்பில் இருந்த ஞானமும் தேடலும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”

படத்தொகுப்பு
ஒரு காட்சியின் அசைவில் எந்த ஃபிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த ஃபிரேமுடன் இணைத்தால் அந்த கட் தெரியாது?

…நமது படங்களில் சராசரியாக குறைந்தபட்சம் 2,000 ஷாட்கள் இருக்கின்றன. அதுவும் டிஜிட்டல் வந்த பிறகு இந்த ஒவ்வொரு காட்சியும் சராசரியாக ஐந்து டேக்குகள் வரை எடுக்கப்படுகின்றன. இந்த பத்தாயிரத்தில் இருந்து சரியான 2000-த்தை தேர்வு செய்யவேண்டும். அதை வரிசையாக்கிப் பார்க்க வேண்டும். அதற்குள் ஒரு லயத்தை உருவாக்க வேண்டும். இதுபோல ஒரே நேரத்தில் ஐந்து படங்கள். ஒன்று ஆக்‌ஷன், இன்னொன்று த்ரில்லர், இன்னொன்று ரொமான்ஸ், இன்னொன்று இன்னொரு வகை இப்படி பலவகைப் பட்ட காட்சிகளோடு ஒரு இளைஞன் பணிபுரியவேண்டும்.

இதில் ஒரு படத்தை உரிய நேரத்தில் தயார் செய்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் காலக்கெடுக்கள் அதற்குள் பணிபுரியவேண்டும். அந்த மன அழுத்தமும் காட்சிகளின் இயல்பான துரத்தலும் கிஷோரின் மூளையைப் பாதித்திருக்கிறது.”

– என்று துயரத்துடன் நினைவு கூறுகிறார்.

ஆனால் இந்தக் காலக்கெடு, நிர்ப்பந்தம், மன அழுத்தம் அனைத்தும் ஒரு தயாரிப்பாளருக்கோ, இல்லை பிரபல நட்சத்திரங்களுக்கோ இல்லாமல், வெளியே தெரியாத ஒரு தொழில் நுட்பக் கலைஞருக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? இல்லை, மற்றவருக்கு இருக்கும் நிர்ப்பந்தங்களிலிருந்து இத்தகைய தொழில் நுட்பக் கலைஞர்களின் நிர்ப்பந்தம் எப்படி வேறுபடுகிறது? இந்தக் கேள்விகளுக்குள் செழியன் போகவில்லை. ஐந்தில் ஒரு பங்கு காட்சிகளை தெரிவு செய்வது, ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் வேலை செய்வது இவையெல்லாம் ஒரு தொழில் எனும் முறையில் முறைப்படுத்த முடியாத ஒன்றா?

காட்சிகளுக்கிடையில் ‘ரிதம்’ செட்டாவதைப் பற்றி கவலைப்பட்ட அந்த கலைஞனின் வாழ்க்கை, தொழில், உடல் நலம் இவற்றுக்கிடையே ‘ரிதம்’ அமையவில்லையே, ஏன்?

“ஆடுகளம்” படத்தில்தான் கிஷோருக்குத் தேசிய விருது கிடைத்தது. அதன் இயக்குநர் வெற்றிமாறன் நினைவுகூர்கிறார்:

“இன்னைக்கு ஃபீல்டுல நிறைய எடிட்டர்கள் இருக்காங்க. ஆனா, ஒருசிலர்தான் அதைத் தொழில்நுட்பமாவும் கலையாவும் ஒருசேரப் பார்ப்பாங்க. கிஷோர் அப்படி ஒருத்தர். அதுக்குக் காரணம், அவர் பழைய மேனுவல் எடிட்டிங்கும் தெரிஞ்ச இளைய தலைமுறைக் கலைஞன். ஒரு காட்சி திரையில் என்னவாக வரும் என்பதைக் கச்சிதமாகக் கணிப்பார். ஏன்னா, ஸ்கிரிப்ட் பேப்பரில் இருக்கும் காட்சிகள் படப்பிடிப்புத் தளத்தின் சூழ்நிலைகளால் தொலைந்துவிடும் அல்லது வேறு ஒன்றாக மாறி வந்திருக்கும். தொலைந்த, வேறொன்றாக மாறிய காட்சிகளை எடிட்டர்தான் கண்டுபிடிச்சு மீட்டு எடுக்கணும். இப்படி ஒன்று, வேறு ஒன்றாக மாறி இருப்பதையும் அதைக் கண்டுபிடித்துக் காட்சியாக்குவதும் கிஷோருக்கு ரொம்பப் பிடிச்ச சவால். இப்போ யோசிச்சா, கிஷோர்கிட்ட எப்போ என்ன பேசினாலும் அது சினிமா சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்கு. அவரோட பெர்சனல் விஷயங்களைப் பத்தி நான் எதுவும் கேட்டதும் இல்லை… அவர் சொன்னதும் இல்லை. ரொம்பச் சின்ன வயசுலயே 50 படங்கள், தேசிய விருதுனு உச்சம் தொட்டவர், மரணத்தையும் அதே அவசரத்தோடு எதிர்கொண்டு விட்டார்”.

மரணம் ஒருவரின் பெர்சனல் என்றால் அந்த மரணத்தின் தோற்றுவாய் ஒரு கலையின் சுமையாகவும் இருக்கிறதே! ஓநாயக் குலச்சின்னத்தின் புல்வெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுச்சூழலை கவலைப்படும் மனது மனிதர்களையும் கவலைப்பட வேண்டாமா?

கிஷோரின் கலை ஞானம் குறித்து வியந்து பேசும் இயக்குநர் வெற்றி மாறன் ஒரு தமிழ் சினிமாவில் பணியாற்றும் எடிட்டிங் கலைஞர்களின் பணிச்சுமை, அது குறித்த சட்ட ரீதியான பாதுகாப்பு அல்லது பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் பெரிய பிரச்சினையாக கருதவில்லை. அவருக்கு ‘கலைதான்’ கண்ணுக்கு தெரிகிறது. அந்தக் கலைக்கு உயிர் கொடுக்கும் கலைஞர்கள் அல்லது தொழிலாளிகள் தெரியவில்லை. மேலும் தமிழ் சினிமாவில் அப்படி உயிரைக் கொடுத்து வேலை செய்யும் அளவுக்கு என்ன ‘கலை’ இருக்கிறது என்பது அந்தக் கலை தேவதைக்கே வெளிச்சம்!

தற்கால தமிழ் சினிமாவில் முக்கிய படத்தொகுப்பாளராக மதிக்கப்படும் பி. லெனின்,

”தமிழ் சினிமாவில் எழுத்து இல்லாமல் போய்விட்டது. கதையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நேராக படப்பிடிப்புக்குப் போய்விடுகிறார்கள்.”

-என்று விமர்சிக்கிறார். அதாவது குப்பையில்தான் குண்டூசியை (கதையை) தேடுகிறோம் என்கிறார். உண்மையும் அதுதான்!

நெகடிவ் தொழில்நுட்பமான ஃபிலிம் போய், டிஜிட்டல் காமரா வந்ததால் தமிழ் சினிமா இயக்குநர்கள், 2 மணிநேரப்படத்திற்காக 80 மணிநேரம் ஓடக்கூடிய படக்காட்சிகளை படத்தொகுப்பாளரின் மேசையில் கொட்டுகிறார்கள். இதில் இருந்துதான் கதை எங்கே இருக்கிறது என்று படத்தொகுப்பாளர்கள் இரவும் பகலும் தேடுகிறார்கள்!

படத்தொகுப்பு
2 மணிநேரப்படத்திற்காக 80 மணிநேரம் ஓடக்கூடிய படக்காட்சிகளை படத்தொகுப்பாளரின் மேசையில் கொட்டுகிறார்கள்.

நீங்கள் அறிந்த பிரபலமான அல்லது தொழில்முறை இயக்குநர்கள் கூட படத்தின் கதையை சீன்களாக மட்டும் குறைந்த பட்சமாக வைத்துக் கொள்வார்கள். அந்த சீன்களின் முழுமையான வடிவம், திரையாக்கம், உரையாடல், இதரவை அனைத்தும் இயக்குநர்கள் – நட்சத்திர நடிகர்களின் மூடுக்கேற்ப படப்பிடிப்பு தளத்தில் துரித உணவு போல தயாராகும்.

இறுதியில் இந்த, குறை சமையல் குழப்பங்கள் அனைத்தும் எடிட்டர் மேஜையில்தான் பட்டி பார்க்கப்படும். அல்லது இந்த சோம்பேறி படைப்பாளிகளின் சுமையை அல்லது செய்யதவறிய உழைப்பை இறுதியில் எடிட்டர்தான் தனியொருவராக செய்ய வேண்டும்.

ஆக, டாஸ்மாக் பார்களில் சீரியசாக பேசும் காமெடி குடிகாரர்கள் போல உருவாகும் தமிழ் சினிமாவின் பிரச்சினைகளை படத்தொகுப்பு கலைஞர்களே அதிகம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமாவின் கதை இதுதான் என்று எடிட் செய்வதற்கும், கதை என்னவென்றே தெரியாமல் எடிட் செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டது. பின்னது நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவதைக் கோருகிறது. கூடுதலாக ஒரு சினிமாவின் இறுதி வெளியீட்டின் அருகில் படத்தொகுப்பு இருப்பதால் கண்டிப்பாக இரவு பகல் பார்க்காமல் வேலைபார்த்தே ஆக வேண்டும்.

இதில் ஸ்ரீகர் பிரசாத் போன்ற முன்னணி படத்தொகுப்பாளர்கள் மட்டும் தங்கள் பணிநேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழில் அங்காடி தெரு, தங்கமீன்கள் உட்பட, வட கிழக்கின் அசாம்  வரை  15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பணிபுரிந்து  8 தேசிய விருதுகளும் 7 மாநில விருதுகளும் பெற்ற இவரும் உடல் நிலை பாதிப்படைந்ததால் பணிநேரத்தை பாதியாக குறைத்துக்கொண்டுள்ளார். இந்த பாதிப்பு யாருக்கு, எப்போது, எவ்வளவு என்பதே வேறுபாடு!

ஸ்ரீகர் பிரசாத்
ஸ்ரீகர் பிரசாத் போன்ற முன்னணி படத்தொகுப்பாளர்கள் மட்டும் தங்கள் பணிநேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்

பழைய ஃபிலிம் எடிட்டிங்கில் இருந்த நேரக் கட்டுப்பாடு, திட்டமிடல், முறைப்படுத்துதல், சற்றே ஓடி ஆடும் உடல் உழைப்பு போன்றவை தற்போதைய டிஜிட்டல் எடிட்டிங்கில் இல்லை. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அராஜகத்தையும், மூலதனத்தின் வளர்ச்சி கடும் சுரண்டலையும் வளர்த்திருப்பதால் தற்போதைய எடிட்டிங் துறை என்பது இளமையைக் பலிகொடுக்கும் ஆட்கொல்லித் துறையாக மாறிவிட்டது.

தமிழ் சினிமாவின் புகழ்வெளிச்சத்தில் இருந்தவருக்கே இந்த நிலைமை என்றால், இருட்டறையில் உழலும் பிற படத்தொகுப்பாளர்களின் நிலை என்ன?

தமிழ் சினிமாவின் மையமான ஏ.வி.எம் ஸ்டியோவுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே பலர், பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டு, நோய்வாய்ப்பட்டு, கடன்பட்டு, பின்னர் கட்டாய ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஓரிருவர் இறந்தும் போயிருக்கிறார்கள். இவை எவையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. ரஜினியின் “விக்”கும், கமலின் “கெட்டப்”பும், த்ரிஷாவின் “மிஸ் சென்னை” பட்டமும் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவில், எடிட்டிங்கிற்காக வாழ்வைப் பறிகொடுத்தவர்கள் குறித்த பட்டியல் கூட இல்லை.

அப்படி விடுபட்ட கதைகளில் ஒரு கதை இது.

இந்தக் கதையில் வருபவர்கள் சகோதரர்கள். இருவரும் எடிட்டர்கள். இளையவர் ஆனந்த் அவரது மூத்த சகோதரர் தங்கவேலைப் பார்த்து சினிமா எடிட்டிங்கிற்கு வந்தவர். எடிட்டர் கிஷோரோடு இவரும் வி.டி.விஜயனிடம் பயிற்சி எடுத்தவர். மரியான், தபாங், மிர்சி, டைகர், சோட்டா மும்பை, என்று பல மொழிகளில் உதவி தொகுப்பாளராக வேலை செய்தவர்.

இவரது அண்ணன் தங்கவேல் பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டு, திடீரென சுயநினைவிழந்து பல மாதங்கள் மருத்துவமனையிலிருந்தும் நோய் தீராமல் இப்போழுது நடக்கவும் முடியாமல் வீட்டிலேயே குடும்பத்தார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.

எடிட்டிங் அறையிலிருந்து வந்த ஆனந்த் தனது அண்ணனது கதையை கூறுகிறார்.

“தங்கவேல், 15 வருடங்கள்  எடிட்டிங் துறையில் இருந்தார். அண்ணா பல்கலையில எப்.சி.பி  டிப்ளமோவை முதல் பேட்சில் முடித்தவர். அவரோட சேர்ந்த ஒருத்தர் பாரின் போயிட்டாரு, இன்னொருத்தர் தனியார் இன்ட்டியூட்டில் எடிட்டிங் பாடம் நடத்துறாரு.

அண்ணன் டைரக் ஷன் பண்ணறதா இருந்தது. ஆனா, எந்த வழியில போனா சினிமாவுல, எல்லா விஷயங்களையும் கத்துக்க முடியுமோ அந்த வழியில போகணும்னு, எடிட்டிங்க தேர்வு செஞ்சாரு. இது மூலமா டைரக் ஷன், எடிட்டிங், விசுவல், எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும்னு சொல்லுவாரு

முதல்ல சின்ன கம்பெனிகளின் விளம்பரங்கள், எடிட் பண்ணாரு. அப்புறம், சினிமா வாய்ப்பு வந்தது. சினிமாவுல குறிப்பிட்ட  டைமுக்கு நம்மகிட்ட எதிர்பார்ப்பாங்க. முதல்ல, அசோக் மேத்தா என்பவரிடம் உதவியாளரா சேர்ந்தாரு. படிப்படியா வளர்ந்தாரு. அண்ணனும் அசிஸ்டெண்ட் வைச்சி வேலை செய்தார். என்னதான் உதவியாளர் வச்சிக்கிட்டாலும் அவங்க, சீன் ஆர்டர், சவுண்ட் சிங்க் பண்ணி கொடுப்பாங்க, அது கால் பங்கு வேலைதான். மீதி மொத்தமும்  நாம்மதான் பைனல் பண்ணியாகணும் அப்பத்தான் திருப்தியா இருக்கும்.

இந்த துறையில, ஆரம்பத்ல, பல இயக்குநர்களுக்கு எடிட்டிங் மற்றும்  மெஷின் (movilor, stean bag, avid) நாலெஜ் இருக்காது. நம்மகிட்ட வர்ற டைரக்டருக்கும்,  புரொடியுசருக்கும் என்ன பிரச்சனைகள் இருக்குனு நமக்கு தெரியாது. பல வருசங்கள் ஒரு படத்த எடுத்து இருப்பாங்க! ஆனா நம்மகிட்ட வந்ததும்  வேலை உடனே முடியணும்னு கேட்பாங்க!

இப்ப டிஜிட்டல் வந்துடுச்சி. ஆனா, முன்னல்லாம் பிலிம். நெகட்டிவிலேயே பாக்கணும். ரொம்ப கஷ்டம். ஒரு டைரக்டர் போனா, அடுத்து, இன்னொரு டைரக்டர் வந்து  படம் எடுக்க, பட்ட கஷ்டத்தை சொல்லுவாரு. அவருக்கும் உடனே முடிச்சிக் கொடுக்கணும். டைமுக்குள்ள முடிச்சாதான் அது ஒர்த்.

எங்கண்ணன் தங்கவேல் ஏ.வி.எம் ஸ்டுடியோ எடிட்டிங் ரூம்ல  இரண்டு செட் துணி வைச்சிருந்தாரு. அங்கேயே தூக்கம்! அங்கேயே சாப்பாடு! வீட்டுக்கே வரமாட்டாரு. இப்படியே, தொடர்ந்து தூங்காம வேலைப் பார்க்கறதால உடம்பு கெட்டுப் போச்சி.  அப்பப்ப  அன்கான்சியல மயக்கம் ஆயிடும். தொடர்ந்து  கம்பியூட்டர பார்த்துட்டே இருக்கறதால, இரத்த ஓட்டம் உடம்பு முழுவதும் சீரா இல்லாததால பல பிரச்சனைகள்.

முதல்ல தலைசுத்தல், மயக்கம். இரண்டாவது வாந்தி, பார்வை போயிட்ட மாதிரி திடீருனு கண்ணு தெரியாது. அப்ப, நமக்கு தெரியாமலேயே யூரின் பாஸ் ஆயிடும். உடம்பு நம்ம கண்ட்ரோல்ல இல்லாமல் போயிடும். இன்னும் சொல்ல முடியாத பல  பிரச்சனைகள் நிறைய இருக்கு. நானும் இந்தத் துறையில இருக்கிறதால எனக்கு அது தெரியும்.

எடிட்டர் ஆனந்த்
எடிட்டர் ஆனந்த்

எங்க அண்ணன் அன்னிக்குப் பாத்திங்கனா, தலைவலிக்குதுனு போய் படுத்தாரு. கொஞ்ச நேரத்துல வேர்த்துக் கொட்டி எழுந்திருக்கவே முடியலைனு பக்கத்தில் இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்காரு. உடனே கூட இருந்த நண்பர்கள் எனக்கு தகவல் சொன்னாங்க. விஜயா ஆஸ்பிடல்லா சேர்த்தோம். டாக்டர்கள் “இது நியுரோ பிராப்ளம். அவசரமா, எம்.ஆர்.ஐ ஸ்கேனும், டெஸ்ட்டும் எடுத்துட்டு, உடனே ஒரு இன்ஜெக் ஷன் போடணும், அதப் போட்டாலும் 24 மணி நேரம் கழிச்சித்தான் சொல்ல முடியும்”னு ஐ.சி.யு.ல சேர்த்தாங்க.

அப்புறம் கொஞ்சம் நினைவு திரும்புச்சி, ஆனா அன்னிக்கு சாயந்திரமே திரும்பவும் டீப் ஸ்லீப்புக்கு போய்ட்டாரு. உடனே, டாக்டருங்க, அவர தூங்க விடாம பாத்துக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நரம்பு ஸ்பெஷல் டாக்டர் பார்த்துட்டு, “ஒரு பக்கம் பிரெய்ன் வேலை செய்யும் தன்மை இழந்து மூளை பல்ஜி ஆயிடுச்சி. அப்படியே விட்டம்னா மூளை வீங்கி ஜாம் ஆயிடும். உடனே ஆபரேஷன் செய்யணும்”னு சொன்னாங்க. ஸ்கல்ல (மண்டை ஓடு) ஓபனாக்கி ஆபரேசன் செய்தாங்க.  ஆஸ்பத்திரியில,மொத்தமா 7 லட்சத்துக்கு மேலே செலவாச்சி, அவ்வளவும் கடன். நாங்க, எடிட்டர்   யூனியன்ல எங்க நிலைமைய சொன்னோம்.  அவங்க எல்லா யூனியனுக்கும் சொன்னாங்க, எல்லோரும் ஏதோ கொஞ்சம் உதவி செய்தாங்க. மீதிய நாங்க கடன் வாங்குனோம்.

இதேமாதிரி, 6 வருசத்துக்கு முன்னாடி, விருதகிரி என்ற படத்தோட எடிட்டர்  சலீம் என்பவருக்கும் நடந்தது. அவர் வேலை பார்த்துட்டு இருக்கும்போது கீழே விழுந்து காது மூக்குல இரத்தம் வந்து கடைசியில்  அண்ணன் மாதிரியே ஆனாரு.

சாதாரணமாக, இம்மாதிரி நோய் சிம்ப்டம்ஸ் ஆரம்பிக்கும்போது நம்மால உடனே கவனிக்க முடியறதுல்ல. வேலையின்போது வாந்தி, மயக்கம் வந்தா அத கவனிக்கறது இல்ல. சாப்பிட்டது எதும் செரிக்கமா இருக்கும் என்ற எண்ணத்தில விட்டுடுவோம். இப்படி, நேரம் காலம்,  தூக்கம், ஓய்வு இல்லாத இந்த,  எடிட்டிங் வேலையினால் எங்களுக்கு  துயரம்தான் மிச்சம். இவ்வேலையினால் ஏற்படும் நிரந்தரமான  உடல், மனப்பாதிப்புகள் பற்றி எந்த விழிப்புணர்வும் எங்களுக்கு இல்ல. அதற்கான வசதியும் இல்ல. இதற்கெல்லாம் பயந்தா குடும்பத்த, குழந்தைகள யார் காப்பத்தறது?

ஆனா, அந்தக் காலத்திலயும் இதவிட அதிகமான வேலை செய்திருக்கிறாங்க.  அந்த வேலைப்பாணி வேற, பிலிம (film) தொட்டு பார்த்து, கையினாலயே வெட்டி, ஒட்டி ஒவ்வொரு சீனாவும் ரீலாவும் சேக்கணும். உடம்பு இப்படி அப்படி அசையும். அடிக்கடி எழுந்துஎழுந்து ஷாட், சீனை தனித்தனியா வெச்ச ஃபிலிம் பாக்ஸ ஒவ்வொன்னா தேடி எடுத்துப் பார்த்து சேர்க்கணும். வேலை இதவிடமோசமா இருந்தாலும் உடல் அசைவால இரத்த ஓட்டம் கொஞ்சம் இருந்தது. இப்ப அதுக்கும் வழியில்ல. ஆணி அடிச்சமாதிரி சிஸ்டத்துல உட்கார்ந்தா தலையைக்கூட அசைக்கிறது கிடையாது. வேலை டென்ஷன், வீட்டு பிரச்சனை, படம் ரீலீசு தேதி இதெல்லாம் நினைச்சாவே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கும்! அதோடுதான் பரபரனு வேலைச் செய்யனும்.

அண்ணன் தங்கவேலு, சினிமா ட்ரெயிலர் எடிட்டிங் வேலையில தான் பேமசு. சிங்கம், வரலாறு, சரவணா போன்ற படங்களுக்கு ட்ரெயிலர் பண்ணியிருக்காரு. டைரக்டர் டேஸ்ட்க்கு ஏற்ப ஃபுல்ஃபில் பண்ணி காட்றவரைக்கும் இரவுபகலா வேலையில  மெனக்கெடணும். 3 மணி நேரப் படத்தை 3 நிமிஷமா சுருக்கி ட்ரெயிலர் காட்டி ஜனங்களை ஈர்க்கணும். இது, சாதாரண விஷயம் கிடையாது. ரிஸ்க் கான வேலை. ட்ரெயிலர் சரியில்லனு தியேட்டர்ல பேசிட்டாங்கன்னா போச்சு! வேலை சரியா செய்யலனு நம்ம தொழிலே போயிடும் ! அந்த பயத்துலதான் வேலவேலனு, ராவும் பகலும் தூங்காம  ஓடுவோம்!

எடிட்டர் தங்கவேல்
தங்கவேல் பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுப்பட்டு, திடீரென சுயநினைவிழந்து பல மாதங்கள் மருத்துவமனையிலிருந்தும் நோய் தீராமல் இப்போழுது நடக்கவும் முடியாமல் வீட்டிலேயே குடும்பத்தார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.

இப்ப 3 வருஷமா அண்ணன் வீட்லதான் இருக்காரு. சுத்திக்கிட்டே இருந்தவரு. உட்கார்ந்திட்டு இருக்கிறது கஷ்டம்தான். எங்களுக்கு அவருடைய அனுபவத்தை இப்ப அறிவுரையா சொல்றாரு. ஆனாலும் எங்களுக்கு அதைக் கேட்டு நடக்க நேரம் இல்லை. சாப்பாட்டு விஷயம் முதல் உடற்பயிற்சி வரை சொல்றாரு.  ஆப்ரேஷன் முடிச்சு வீட்டுக்கு வந்தப்போ எல்லோரும் சேர்ந்து அவர தூக்கி வைப்போம். அவரே தினமும் மூச்சுபயிற்சி எக்ஸசைஸ் பண்ணி தன்னை தேத்திகிட்டார்.  எங்களையும் எக்ஸஸைஸ் பண்ண சொல்லுவார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. டாக்டர்கள் தொடர்ந்து பிசியோ எடுத்துக்க சொல்றாங்க. இன்னும் தனியா எழுந்து நடக்கும் நிலைமைக்கு வரலை. சினிமாவுல பல காலம் உழைச்ச எடிட்டர் பலபேருக்கு  இந்த நிலைமை வந்தும் இந்தத் துறையில இருக்குறவங்களுக்கு விழிப்புணர்வு வந்ததா தெரியல.

எனக்கு, இப்ப வயசு 37. 15வருடம் இந்த தொழில்ல கழிச்சிட்டேன்.  உடம்பு முடியல. என்ன பண்றது? இந்த துறையில இருக்கறவங்களுக்கு ஸ்ட்ரோக் நிறைய வரும். ஒரு வாரமெல்லாம் தூங்காம வேலை பார்ப்போம்.  அப்ப கழுத்த திருப்ப முடியாத வலிவரும். உயிர் போகும்.

வெளிநாடுகளில் டியூட்டி டைம் இருக்கு. அதால அவங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா இங்க அப்டி இல்லை. இந்த நிலமையை கண்டிப்பா வெளிய கொண்டு போகணும். நீங்க பாக்கிற சினிமா வேற, எங்க வாழ்க்கை  வேற.  யார் ஜெயிப்பா? யாரு தோப்பா?  தெரியாது!   வேலைய ரசிச்சி செய்தாதான் தொழில்ல நீடிக்கமுடியும். நம்ம குடும்பத்தையும், நம்மையும் காப்பாத்தும் தொழிலை நாம, நேர்த்தியா செய்யணும்கிற எண்ணம் மாறக்கூடாது.

நிறைய பேரு கதை சொல்லும் போது நல்லாதான் இருக்கும்! ஆனா ஷூட்டிங் முடிஞ்சி அப்டியே எடுத்துட்டுவந்து தருவாங்க. அத பொறுமையா சரிசெய்யணும். அத வேலையா இல்ல,  ஒரு உதவியா நினைச்சி செய்யணும். ஒருத்தர், ஒரு ஹிட்டுக் கொடுத்துட்டா, அடுத்து  அதமாதிரி செய்ய ஆசைப்படுவாங்க. சிலபேர்கிட்ட வேலை பார்க்கும்போது, உட்காரவும் கூடாது. நிக்கவும் கூடாது. உட்கார்ந்து நிக்கிற மாதிரி வேலை பார்க்கணும். சர்க்கஸ் மாதிரி!”
______________________________

டிட்டர் ஆனந்த் பேசியதிலிருந்து சில விசயங்களை பரிசீலிக்கலாம்.

முதலில் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்ப்பது என்ன விளைவை எற்படுத்தும்?

மனித உடல் என்பது அதனுடைய மனம் சார்ந்த செயல்பாடுகளோடும் சேர்ந்தே வினை புரிகிறது. அதாவது உங்களுடைய உணர்ச்சிகள் அவற்றின் அளவுகள் கூட குறிப்பிட்ட அளவுக்கு உடல் இயக்கத்தை பாதிக்கும். இந்த பாதிப்பு என்பது நோயாக மட்டுமல்ல, அதன் எதிர்ப்பதமான ஆரோக்கியமான உற்சாகமாக கூட இருக்கலாம்.

விரும்பிய விசயத்திற்காக ஒரு மனிதன் கண் விழிப்பதும் தொடர்ந்து வேலை செய்வதும் பெரிய பிரச்சினை இல்லை. மனித உடல் அதை குறிப்பிட்ட அளவுக்கு ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் காதல் வயப்பட்ட இளையோர்கள் கண் விழிப்பதோ இல்லை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாரக்கணக்கில் கடும் வேலைகளை அதிக நேரம் செய்வதோ பாரிய விளைவை ஏற்படுத்துவதில்லை. கூடவே அவர்கள் ஆரோக்கியமான மன-உடல் நிலையை தற்காலிகமாக பெறுகிறார்கள்.

அதே நேரம் இத்தகைய உணர்வு மற்றும் உணர்ச்சி பூர்வமான ஒன்றுதல் இல்லாமல் அதிக நேரம் வேலை செய்வதோ, கண் விழிப்பதோ உடல் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மறுகாலனியாக்கத்தின் சாபமே இதுதான். நமது உதிரிப்பாட்டாளிகள் அனைவரும் இத்தகைய பாதிப்பில்தான் நாற்பது வயதிற்குள் இறந்து போகும் வாய்ப்பை அதிகம் பெற்றிருக்கின்றனர். உயிரோடு இருப்போரும், குடி, பான், இதர போதை வஸ்துக்களின் உதவியோடு வேலை செய்கின்றனர். இந்த உலகம் தனி.

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை அதன் அராஜகமான செயல்பாட்டில் இருக்கும் ஏராளமான பிரச்சினைகளே, ஒரு எடிட்டர் திடீரென அதிக நேரம் வேலை செய்ய அடிப்படையாக இருக்கிறது. அடுத்து இங்கே ஒரு நிலையான இடம் பெற வேண்டும் என்றால் அதற்கென முறையான வாய்ப்போ வசதியோ இல்லை. ஏதாவது ஒரு படம் வெற்றி பெற வேண்டும், அது பேசப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு எடிட்டரை சினிமா உலகம் அங்கீகரிக்கும். அதனால் ஒரு தொகுப்பாளர் படம் குப்பையா, கோபுரமா, காட்சி ரீதியாக கதை இருக்கிறதா இல்லையா என்ற ஆய்வுக்கெல்லாம் போக மாட்டார். அவரைப் பொறுத்த வரை தரப்படும் காட்சிகளை அழகாக தொகுத்து படமாக்கி தனது திறனை நிரூபிக்க வேண்டும்.

அவர் பிரபலமான எடிட்டராகவே ஆனாலும் இந்த நிலை மாறிவிடுவதில்லை. ஆக இங்கே ஒன்றுதல் என்பது குறிப்பான வேலையோடு இல்லாமல் வாழ்க்கையில் செட்டிலாதல் எனும் நீண்டகால நோக்கோடு நடக்கிறது. இதனால் முட்டாள் இயக்குநர்கள், அசட்டு தயாரிப்பாளர்கள், பணக்கார திரை மாந்தர்கள் சொல்லும் அனைத்து மொக்கையான விசயங்களையும் மாபெரும் தத்துவ ஞான விளக்கமாக எடுத்துக் கொண்டு அதை காட்சிப்படுத்தி கத்தரி போட்டு கலையாக்க வேண்டும். இது உடல் களைப்போடு மனதையும் வெகுவாக பாதிக்கிறது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், பணி செய்வதுமே தமிழ் சினிமாவின் தேசிய மொழி என்றாலும் எடிட்டர்களின் உடல் நலத்தை பாதிக்கும் சீர்குலைவிற்கும் இது காரணமாக இருக்கிறது.

நாற்காலியில் சில பல வருடங்கள் அமர்ந்து கணினி வேலை செய்வதற்கும், அதையே எடிட்டிங் கணினியில் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இரண்டுமே கழுத்து வலி, இடுப்பு வலியைக் கொண்டு வரும். அதற்கேற்ற உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் இருந்தாலும் எடிட்டிங் வேலை என்பது நரம்பியல் சார்ந்த நுட்பத்துடன் அதிக திறனை எடுத்துக் கொள்ளும் ஒன்று. பெரிய அசைவோ, உழைப்போ இல்லை என்றாலும் நுட்பமான உழைப்பே நரம்பு மண்டலத்தை பாதிக்க போதுமானதாக இருக்கிறது.

ஒரு நாளில் 8 மணிநேரம் இந்த வேலை, பின்னர் நடைப் பயிற்சி, யோகா, வேறு சமூகவியல் நடவடிக்கைகள் என்று இருந்தால் ஆயுள் முழவதும் இந்த வேலை செய்யலாம். அல்லது கண் விழிப்பது என்பது மாதத்திற்கு சில நாட்கள் என்று இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து கண் விழிப்பது என்பதே இங்குள்ள நடைமுறையாக இருக்கிறது.

சன் டி.வி விருந்தினர் நிகழ்ச்சி ஒன்றில் எடிட்டர் கிஷோர் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது அலுவலகத்திற்கு கீழ் வீட்டில் நடந்த சாவு கூட ஒரு வாரம் கழித்தே கிஷோருக்கு தெரியவருகிறது. அவருக்கென்று நண்பர்கள் அதிகம் இல்லை. வேலை நேரம் போக வெளியே பல்வேறு இடங்களுக்கு சென்று வரும்போது மட்டுமே நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அவரே அதை குறிப்பிடுகிறார்.

ஆக, என்னதான் உழைப்பில் கடுமை இருந்தாலும் மற்றவர்களுக்கு இருக்கும் சமூக நடவடிக்கைகள் இருட்டறையில் பணியாற்றும் எடிட்டர்களுக்கு இல்லை. சமூகத்தை தொடர்பு கொள்ளும் ஒரே கண்ணாடியாக கணினியும், அதில் தமிழ் சினிமா படைப்பாளிகள் கொட்டும் காட்சிகளே வாழ்க்கையாகவும் அவர்களுக்கு இருக்கிறது. மற்ற வேலைகளில் உடல் அசைவுடன் கூடிய உழைப்பு அதிகமிருக்கலாம். எடிட்டிங்கிலோ உடல் அசைவு இல்லாமல் நுட்பமான முறையில் மூளை வெகுவேகமாக செயல்படுவதால் இவர்களுக்கு சமூக நடவடிக்கைகள் நிச்சயம் வேண்டும். அது இல்லாது போனால் உடல் பாதிப்பை சமநிலைப்படுத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகிறது.

ஒரு படம் வெளியாகும் கடைசி இருமாதங்களுக்குள் அசுர வேகத்தில் எடிட்டர்கள் வேலை செய்கிறார்கள். ஆக கண் விழிப்பு, கடுமுழைப்பு, வேகமான அழுத்தம் என மூன்று பரிமாணங்களில் உடல் பாதிக்கிறது. இதுவே இறுதியில் குறுகிய காலத்தில் உருவாகும் உயர் ரத்த அழுத்தமாக மாறுகிறது. முதலில் வாந்தி, மயக்கம் என்று வரும். சிறிது நேரம் தூங்கி எழுந்தால் நார்மலாக இருக்கும். பிறகு ஒரு இடைவெளியில் மீண்டும் வரும். இறுதியில் அழுத்தம் அதிகரித்து மூளை வெடித்து பக்க வாதமோ இல்லை மரணமோ நடக்கிறது.

இதை குறிப்பாக கண்டுணர்ந்து சொல்லுமளவுக்கு, எச்சரிக்கை செய்யுமளவுக்கு இங்கே இருக்கும் மூத்த எடிட்டர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை. எடிட்டிங் யூனியனிலும் இது குறித்த புரிதல் இல்லை. அதிக பட்சம் ஊதியம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே யூனியன் கேட்கும். ஒரு வேளை மரணம் நிகழ்ந்தால் ஓரளவுக்கு உதவுவார்கள். ஆனால் ஒரு வேலை மரணத்தையோ இல்லை உடல் இயக்கத்தை முடக்கியோ போடுகிறதே அதை தட்டிக் கேட்போம் என்பதற்கு யூனியன் தயாராக இல்லை. ஏன் யூனியன் ஏன்று போக வேண்டும், இதை எந்த எடிட்டரும் கூட கேட்க மாட்டார்.

காரணம் தமிழ் சினிமாவின் இயக்கமே காடாறு மாதம், நாடாறு மாதம் என்று இருக்கிறது. இங்கே பணியாற்றும் அனைத்து தொழிலாளிகளும் பணியின் போது எந்த மிகப்பெரிய வேலையையம், சுமையையும் மறுக்காமல் செய்வார்கள். அந்த வலியை இரவு குடியின் மூலம் தணித்துக் கொள்வார்கள். பிறகு வேலையின்றி இருக்கும் நாட்களில் ஆடு முழுங்கிய மலைப்பாம்பு போல அசைவற்று கிடப்பார்கள்.

எனவே குறிப்பிட்ட வேலை நாட்களில் ஒரு தொழிலாளிக்குரிய எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இங்கே தவறாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒப்பீட்டளவில் மற்ற கலைஞர்கள், தொழிலாளிகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச ஓய்வு, இதர சமநிலை சூழல்கள் ஒரு எடிட்டருக்கு இல்லை.

பிரபல இயக்குநர்களோ இல்லை நட்சத்திரங்களோ வருடத்திற்கு ஒன்றோ இல்லை இரண்டு வருடத்திற்கு ஒரு படமோ இயக்குவார்கள். அதை முடித்த பிறகு அமெரிக்காவிற்கோ, சிங்கப்பூருக்கோ, இல்லை இமயமலைக்கோ பயணம் செய்து இளைப்பாறுவார்கள். ஆனால் ஒரு பிரபல எடிட்டருக்கு இத்தகைய இளைப்பாறுதல் சாத்தியமில்லை. துறையில் அவர் பிரபலமாக இருக்கிறார் என்பதன் பொருளே அவர் தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்க தயாராக இருக்க வேண்டும் என்பதே.

பேட்டில்ஷிப் போதம்கின்
சினிமாவின் ஆக முக்கியமான கலைக் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்டுகளே (“பேட்டில்ஷிப் போதம்கின்” திரைப்படக் காட்சி)

படம் ஓடவில்லை என்றால் வினியோகஸ்தர்கள் அடுத்த படத்திற்கு ரெட் கார்டு போடலாம். ஆனால் தொழிலாளிகள், கலைஞர்களின் உயிரை வதைக்கும் இச்சூழலுக்கு ரெட் கார்டு போட யாருமில்லை.

உலக சினிமா, சினிமாக் கலை என்று சரடு விட்டுக் கொண்டு வார்த்தைகளிலும், பெயர்களிலும் மிரட்டும் அறிஞர் பெருமக்கள் முதலில் எடிட்டிங் என்றால் என்ன, எடிட்டர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று நேரில் சென்று பார்க்க வேண்டும்.

10-க்கு ஒன்பது குப்பையாக வரும் தமிழ் சினிமாவிற்காக இந்த இளம் இளைஞர்கள் செத்துப் போவதா என்று கேள்விக்கும் நாம் பதில் தேட வேண்டும்.

சினிமாவின் ஆக முக்கியமான கலைக் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்தால் அதிர்ச்சியும் அடைவார்கள். கம்யூனிஸ்டுகள் அருளிய இந்த சினிமா கோட்பாடுகள் – விதிகள் – கலை கண்டுபிடிப்புகள் இன்றி, இன்றைய ஹாலிவுட்டோ இல்லை தொலைக்காட்சிகளோ இல்லை.

புரட்சிக்கும், சோசலிச சமூகத்தை படைப்பதற்கும் மக்களை திரட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் இச்சினிமா கோட்பாடுகள் சில கலைஞர்களால் கண்டறியப்படுகின்றன. கலையின் ஆதி தோற்றம் கூட இத்தகைய வர்க்க் போராட்டத்தின் விளைவுதான். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை விரிவாக பேசலாம்.

ஐசன்ஸ்டின்
ஐசன்ஸ்டின் எடிட்டிங் கோட்பாடுகளை ஐந்தாக விளக்குவார்கள். அதில் ரிதமிக் எடிட்டிங், இன்டலிஜென்ட் எடிட்டிங் என்று இரண்டு முறைகள் உண்டு.

அந்த கோட்பாடுகளின் பிதாமகர் ஐசன்ஸ்டின், சோவியத் யூனியன் காலத்தில் வாழ்ந்த பிரபலமான திரைப்பட கலைஞர். படத்தொகுப்பு குறித்து அவர் உருவாக்கிய கோட்பாடுகள் இன்றைக்கும் எடிட்டிங்கின் பாலபாடமாக இருக்கிறது. ஐசன்ஸ்டின் எடிட்டிங் கோட்பாடுகளை ஐந்தாக விளக்குவார்கள். அதில் ரிதமிக் எடிட்டிங், இன்டலிஜென்ட் எடிட்டிங் என்று இரண்டு முறைகள் உண்டு.

ரிதமிக் எடிட்டிங் என்பது ஏதோ ஒரு ஒத்திசைவின் மூலம் இரு காட்சிகள் இணைக்கப்படுவதை உணர்த்துகிறது. அவை இசை, உரையாடல், காட்சி, கோணம், உருவகம் என்று ஏதோ ஒரு நேரடியான அளவீடாக இருக்கலாம். இன்டெலிஜென்ட் எடிட்டிங் என்பது இத்தகைய நேரடி அளவீடுகள் இன்றி அறிவுபூர்வமாக இரு காட்சிகளை இணைப்பதாகும். இந்த எடிட்டிங்கை புரிந்து கொள்ள படைப்பாளிகள் மட்டும் போதாது, பார்வையாளர்களும் சற்று சிந்திக்க வேண்டும். புலனறிவு, பகுத்தறிவு என்ற அறிவியக்கத்தின் இயங்கியல் ரீதியான வளர்ச்சி குறித்து தோழர் மாவோ விளக்கியிருப்பதிலிருந்தும் இதை புரிந்து கொள்ளலாம்.

எடிட்டர் கிஷோர் கூட காட்சிகளின் இணைப்பில் ரிதம் செட்டாகவில்லை என்று கவலைப்பட்ட ஒரு கலைஞன்தான். அவர் மட்டுமல்ல அனைத்து எடிட்டர்களும் கூட இந்த ரிதம் பற்றி அதாவது இரு காட்சிகள் இணைப்பட்டிருக்கின்றன என்ற செயற்கைத்தனம் இன்றி இயற்கையாக இருப்பது போன்ற உணர்ச்சி குறித்தே அதிகம் கவலைப்படுவார்கள். ஒரு வகையில் இது வடிவவாதம்.

ஆனால் காட்சிகளை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அராஜகத்தையும், அந்த அராஜகத்தை தோற்றுவிக்கும் முதலாளிகளையும் கட்டுப்படுத்த நமக்குத் இன்டெலிஜென்ட் எடிட்டிங் தேவை.

போர்க்குணமிக்க தொழிற்சங்கம் எனும் அந்த அறிவார்ந்த எடிட்டிங்கை கற்றுத் தரும் கம்யூனிஸ்டுகள் வரும் போது தொழிலாளிகளும், கலைஞர்களும் கிஷோர் போல மரணிக்க வேண்டியிருக்காது; தங்கவேல் போன்று முடங்கிக் கிடக்க தேவையிருக்காது.

திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்

2

ரெயில்வே அதிகாரிகளை அடிபணிய வைத்த சுமைப்பணி தொழிலாளர்களின் போராட்டம்.

திருச்சி ரெயில்வே குட்செட்-ல் 400-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தமிழகத்தின் சரக்கு கையாள்வதில், நம்பர் 1 குட்செட் என்று வகைப்படுத்தப்பட்ட திருச்சி குட்செட் யார்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை கூட இரயில்வே நிர்வாகத்தால் தரப்படவில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டைக்கான விவரங்கள் அனைத்தும் ஒப்படைத்த பிறகும் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். குட்செட் தொழிலாளி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதுடன் இரவில் வேலை முடித்து செல்லும் போது காவல் துறையிடம் சிக்கி தண்டம் கட்டுவதும் அவமானப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. 30 ஆண்டுகளாக இந்தச்சிக்கலுக்கு விடிவில்லை.

trichy-load-men-protest-banner-1மேற்படி 400 தொழிலாளர்கள் மட்டுமின்றி தினசரி பல நூறு லாரிகள் வந்து செல்வதால் அதன் ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் வந்து காத்திருந்து சரக்குகளை ஏற்றிச்செல்கின்றனர். இவ்வளவு பேர் கடுமையான பணியில் ஈடுபட்டுள்ள குட்செட்-டில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. வியர்வையால் உடல் வற்றி நீர்ச்சத்து அற்று அவதியுறுவதுடன் பலருக்கும் சிறுநீரகக் கல் பிரச்சினை ஏற்பட்டு பெரும் வேதனையையும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகிறார்கள்.

அத்துடன் சிமெண்டிலும் யூரியா போன்ற இரசாயனத்திலும் அழுக்கு மற்றும் உடல் அரிப்புகளைத் தாங்கி வேலை செய்தாலும் வேலை முடித்து குளிக்கக் கூட தண்ணீர் வருவதில்லை. அழுக்கு கோலத்துடன் குளிக்காமல் வெளியில் செல்ல முடியாமல் தண்ணீருக்காக இரவு 12 மணி வரை காத்திருந்தது பத்திரிகைகளில் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. கடுமையான வேலையை முடித்து விட்டு உடல் அசதியுடன் எப்போது கட்டையை சாய்க்கலாமென்று ஒட்டுமொத்த உடலும் ஏங்கும் நிலையில் பசியுடன் துன்புற்ற தருணங்கள் பல உண்டு. இதற்காகவே இந்த வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பலரும் சென்று விட்டனர்.

ரெயில்வேயை உலகத் தரத்திற்கு நவீனமாக்குவதாக ஆட்சியாளர்கள் கதைத்து வந்தாலும் தொழிலாளர்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் துன்புறும் நிலை மாறவில்லை. பணியிடத்தில் கொட்டகை அமைக்கக் கோரி ஆண்டுகள் பலவாயின. ஆனால், கொட்டகை வந்த பாடில்லை.

அவ்வளவு ஏன், சரக்குகளைக் கையாள அடிப்படையான சாலை வசதியைக் கூட சரிவர செய்து தராமல் குண்டும் குழியுமான சாலைகளில் லாரிகள் தடுமாறுகின்றன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திய போதெல்லாம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தருவது, நடவடிக்கை எடுப்பது போல அதையும் இதையும் அளப்பது, ஆய்வு செய்வது என அதிகாரிகள் பாவ்லா செய்வது, பின் அத்தனையையும் கிடப்பில் போடுவது என்பது தொடர் கதையாக உள்ளது. தொழிலாளர்களின் வேதனை மட்டும் தொடர்ந்து கொண்டேயுள்ளது. மீண்டும் கோரிக்கை, மீண்டும் போராட்டம், மீண்டும் வாக்குறுதி, மீண்டும் அதிகாரிகளின் சூரத்தனங்கள், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பது…. இப்படி ஒரு முறையல்ல, இருமுறையல்ல நூறு முறைக்கு மேலாக நடந்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் 27-07-2014 அன்று எழுத்துப் பூர்வமாக தந்த வாக்குறுதியை அமுல்படுத்தாதது குறித்து பேசுவதற்காக 30-04-2015 அன்று CITU தொழிற்சங்கத் தலைவர்கள் சென்ற போது அவர்களை சந்திக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி திருப்பியனுப்பினர் DRM அலுவலக அதிகாரிகள்.

அதிகாரிகளின் ஆணவமான அலட்சியத்தால் தொடர்ச்சியாக காயப்படுத்தப்பட்ட நிலையில் குட்செட் –ல் செயல்படும் 4 சங்கங்களும் (CITU, AITUC, INTUC மற்றும் பு..தொ.முவின் இணைப்பு சங்கமான சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய சங்கங்கள்) ஒன்று பட்டு 15-ம் தேதி DRM அலுவலக முற்றுகை மற்றும் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின.

trichy-good-shed-protestகோரிக்கைகள்:

  1. ரெயில்வே குட்செட் யார்டில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் அனைவருக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  2. சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், குளிப்பதற்கு தாராளமான தண்ணீர் வசதி, காற்றோட்டமான ஓய்வறை ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும்.
  3. வேலையிடத்தில் வெயில், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக வேலை செய்ய கொட்டகை (Shed) அமைத்துத் தர வேண்டும்.
  4. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட்டுத்தர வேண்டும்.
  5. அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனம், தொழிற்சங்கங்களை அவமதிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது பற்றி 9-ம் தேதியே கடிதம் தந்த நிலையிலும் சங்கங்களை அழைத்துப் பேசக்கூட விரும்பவில்லை ரெயில்வே நிர்வாகம். 15-ம் தேதி திட்டமிட்டவாறு வேலைநிறுத்தம் தொடங்கியது. சரக்கு இறக்கி ஏற்றும் வேலை முற்றாக ஸ்தம்பித்தது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களும் ஒத்துழைத்தனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி DRM அலுவலகத்தை முற்றுகையிட தொழிலாளர்கள் திரண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கி விடலாமென்று மனப்பால் குடித்த நிர்வாகம் நூற்றுக்கணக்கான போலீசைக் குவித்தது. கைது செய்வதற்கு ஏதுவாக 3 பேருந்துகளைக் கொண்டு வந்து அச்சுறுத்த முயன்றது. ஆனால், இந்த அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் நீண்டகால ஆதங்கத்தை முழக்கங்களாக்கி ஆக்ரோசமாக வெளிப்படுத்தினர். அனைத்து சங்கமும் ஒன்று பட்டு கூட்டாக எதிர்ப்பை தெரிவித்ததால் வேறு வழியின்றி பேச்சு வார்த்தைக்கு அழைத்தது ரெயில்வே நிர்வாகம்.

பேச்சுவார்த்தையின்போது, “ஓய்வறை என்றால் எப்படி…. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேண்டுமா? தரைக்கு டைல்ஸ் போட வேண்டுமா?” என்றெல்லாம் எகத்தாளமாக பேச ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

“ஏன் போட்டால் என்ன? ஏ.சி-யில் உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு எங்களின் கோரிக்கை எகத்தாளமாகத்தான் இருக்கும். ஜங்சன் நடைபாதையில் டைல்ஸ் ஒட்டும் உங்கள் நிர்வாகம் வெயிலில் மூட்டை தூக்கி உழைக்கும் எங்களுக்கு ஓய்வறையில் டைல்ஸ் போட்டால் குறைந்து விடுமா?” என்று சூடாகவே எதிர் கேள்வி எழுப்பப்பட்டது.

தண்ணீர் விசயத்தைப் பற்றி பேசும்போது பம்ப் ஹவுஸ் திறன், திருச்சி மாநகரத்துக்கே போதிய தண்ணீரில்லை என்பது போன்ற பொதுவான விசயங்களை முன்வைத்து சில நாட்கள் தண்ணீர் வராததை நியாயப்படுத்தினர்.

“புழுதியிலும் அரிப்பிலும் வேலை செய்துவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அப்படியே பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல்ல முடியுமா?” என்றும், “தண்ணீர் வராததற்கான நிலைமையைப் பற்றி பேசும் அதிகாரிகளுக்கு அத்தகைய சூழலை எதிர்கொள்ள தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று சிந்திக்கத் தெரியாதது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இவ்வாறே வேலையிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாததற்கு தொழிலாளர்களை பொறுப்பாக்கியும் குளிக்குமிடத்தில் குடித்துவிட்டு பாட்டிலை போடுவதாகவும் குற்றம் சாட்டிய விசயத்திற்கும் பதிலடி தரப்பட்டது. இத்தகைய பதிலடிகளால் அதிகார போதை தெளிந்த நிலையில் அடுத்தடுத்த விசயங்களை அடக்கத்துடன் பேச ஆரம்பித்தனர்.

சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை 18-05-2015 – க்குள் வைத்து விடுவதாகவும் அடையாள அட்டை தொடர்பாக முடிவெடுக்க உரிய அதிகாரி வராததால் அன்று முடிவு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த அடிப்படையில் முற்றுகையை விலக்கிக்கொண்டாலும் அதிகாரிகள் மீதான நம்பிக்கையின்மை காரணமாக வேலை நிறுத்தத்தைக் கைவிட முடியாது என்று அறிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவகாசம் கோரியிருந்த 18-05-15 அன்று மதியத்திற்கு மேலும் அடையாள அட்டை வழங்காததால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் சென்று DRM அலுவலக முற்றுகையை மீண்டும் தொடங்கினோம்.

இனியும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த ரெயில்வே நிர்வாகம் அடையாள அட்டை தவிர்த்த அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவதாகவும் அதற்கான டெண்டர் நடைமுறைகளை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தது. தற்போது போதிய கொள்ளளவுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் வைப்பது, ஓய்வறை ஒதுக்கி அதில் டைல்ஸ் பதிப்பது போன்ற ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடை பெற்று வருகிறது. சாலை, கொட்டகை தொடர்பான டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையைப் பொருத்தவரை தமிழகத்தில் எங்கும் வழங்கப்படாததை முன்வைத்து மாநிலம் தழுவிய அளவில் எடுக்க வேண்டிய முடிவு என்பதால் அவகாசம் கோரியுள்ளனர் அதிகாரிகள். நாமும் இக்கோரிக்கைக்காக மாநிலத்தின் அனைத்து குட்செட்டுகளையும் இணைத்து விரிவாக நடத்தலாமென்ற திட்டத்துடன் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

trichy-load-men-protest-banner-2ஒன்று பட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பே இத்தகைய ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம் அழைத்த போது, தாங்கள்தான் பெரிய சங்கம் என்ற கர்வத்துடன் மற்றவர்களைத் தவிர்த்துவிட்டு தனியே பெயரளவிற்கான ஒரு போராட்டத்தை நடத்தியது CITU சங்கம். அதன் மூலம் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலைக்கும் அதிகாரிகளின் அலட்சியத்திற்கும் ஆளான நிலையில் அந்த சங்கத்தின் நிர்வாகிகளில் சிலரே ஒன்று பட்ட போராட்டத்தின் அவசியத்தை உணந்து இத்தகைய ஒற்றுமைக்கான முயற்சியை முன்னெடுத்தனர். இதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு பிற சங்கங்களும் ஊக்கமாக ஆதரித்தன. அதற்குரிய பலனும் கிடைத்துள்ளது. இத்தகைய ஒற்றுமை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழிலாளர்களின் விருப்பமாக உள்ளது.

உரிய ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவதன் வாயிலாக ஒற்றுமையை பராமரிக்க முடியும் என்பதை இந்த போராட்டம் உணர்த்தியுள்ளது. இந்த அனுபவத்துடன் அனைத்து குட்செட் தழுவிய அடுத்தகட்ட போராட்த்திற்கான தயாரிப்பை முன்னெடுக்க முயற்சித்து வருகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்,
( பு.ஜ.தொ.மு-வுடன் இணைக்கப்பட்டது.),
திருச்சி.

சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு

4

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு குறித்து வழக்குரைஞர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறிய சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு சென்றோம்.

காலை 10.30 மணி, சைதாப்பேட்டை நீதி மன்ற வளாகம். அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு போலீசு வாகனங்களில் இறங்கும் விசாரணைக் கைதிகள், அவர்களைச் சுற்றி பாதுகாப்பாக நிற்கும் போலீசு, கத்தை கத்தையாக கேஸ் கட்டுகளுடன் பரப்பாக இருக்கும் வழக்குரைஞர்கள் என்று இறுக்கமான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் நீதி மன்ற வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த வழக்குரைஞர்களை இடை மறித்து பேசினோம்.

ஒரு சிலர் ஜெயா விடுதலை பற்றிய கேள்விகளுக்கு வாய் திறவாமல் விநோதமாக பார்த்தார்கள். தொடர்ந்து வலியுறுத்தினால் ‘நோ கமன்ட்ஸ்’ ‘ஐ ஏ ம் ஐகோர்ட் லாயர்‘ என்று பறந்து போனார்கள்.

சட்டம் படித்த வழக்கறிஞர்களே ஒரு வழக்கு குறித்து பேசுவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்? இது ஏதோ நீதிமன்ற அவமதிப்பு குறித்த பயமல்ல; பொதுவில் சமூக விசயங்கள் குறித்து நிலவும் அக்கறையற்ற உணர்வு இங்கேயும் இருக்கிறது. மேலும் அ.தி.மு.கவை ஆதரிக்கும் கருத்துக்களை பேசியவர்கள் வெளிப்படையாக பேசினார்கள். வழக்கை எதிர்த்து பேசியவர்கள் அதிகம் என்றாலும் வெளிப்படையாக பேசியவர்கள் குறைவே. அது ‘அம்மா’ கட்சி குறித்த பயத்தின் காரணமாக இருக்கிறது. இனி உரையாடிய வழக்கறிஞர்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு……

சைதாப்பேட்டை நீதி மன்றத்தின் வாயிலிலேயே ஒருவர் நீறு பூசிய நெற்றியுடனும், கருப்பு அங்கியுடனும் அமர்ந்திருந்தார். அவர்தான் வழக்குறைஞர் சைதை செல்வம்

சைதை செல்வம்
நீதிபதி தீர்ப்புல தப்புன்னா எங்கிட்ட காட்டுங்க பாக்கலாம்! வழக்குறைஞர் சைதை செல்வம்

“குமாரசாமி தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனரே ?”

“யார் சொன்னது எந்த எடத்துல தப்புன்னு என்கிட்ட காட்டுங்க பாக்கலாம்.”

“ஆச்சார்யா, சுப்பிரமணியசாமி, பல கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஆதாரபூர்வமா சொல்லியிருக்காங்களே ?”

“அவங்க சொன்னா நாங்க ஏன் சார் ஏத்துக்கனும், இவங்க வேணும்னே காழ்ப்புணர்ச்சில சொல்றானுங்க ? சுப்ரமணியசாமியை பத்தி தெரியாதா ? திருட்டு பய அம்மா மேல இருக்க காழ்ப்புணர்ச்சியால தான் அவன் இப்படி பேசுறான். மத்த கட்சிக்காரனுங்க யோக்கியதை ஊருக்கே தெரியும். எங்களை பொருத்தவரை தீர்ப்பு சரியானது அவ்வளவு தான். இந்த மாதிரி சின்ன தப்பு நடந்திருந்தா அதுக்கு ஜட்ஜ் பொறுப்பாக மாட்டார். அது தீர்ப்பையும் பாதிக்காது.”

“இப்போது வழங்கப்படுகிற பல தீர்ப்புகள், ஜாமீன்களால் நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டதாக மக்கள் சொல்றாங்களே உண்மையா ?”

“உண்மை தான் நீதிமன்றங்கள் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைஞ்சிருக்கு. 2ஜி வழக்கு அதுக்கு ஒரு உதாரணம்.”

“சொத்துக்குவிப்பு வழக்கை அப்படி சொல்ல முடியாதா ?”

“என்ன சார் நீங்க திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டுருக்கீங்க. இந்த கேசே காழ்ப்புணர்ச்சியில போடப்பட்ட பொய் வழக்குன்னு இத்தனை காலமா சொல்லிகிட்ருக்கோம். நீதிமன்றமும் தண்டனை இல்லைன்னு தீர்ப்பு குடுத்துடுச்சி அதுக்கப்புறமும் எதுக்கு அதையே சொல்றீங்க. எதிர்க்கட்சிக்காரனுங்க தான் தேர்தல் ஆதாயத்துக்காக பேசுறானுங்க உங்களுக்கு என்ன வேணும் ?”

“பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்பேர்வழிகள்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?”

“அது பத்தி தெரியல சார்.”

“நீதித்துறையில் இது பற்றி பரவலாக பேசப்படுதே ?”

“எனக்கு  தெரியலைன்னா தெரியலைன்னு தான் சார் சொல்வேன். வேற என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறீங்க ?”

“நீங்க எந்த கட்சி அ.தி.மு.க வா ?”

“ஆமாம்” .

_______________________

வழக்குரைஞர் ஷாந்த், சைதாப்பேட்டை

“குமாரசாமியின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது சார். தீர்ப்பில் முறைகேடு நடந்துள்ளது. எல்லா இடத்திலும் அப்படித்தான் பேசிக்கிறாங்க. ஒரு வேளை மேல் முறையீட்டுக்குப் போனால் தண்டனை வரும் என்று தான் நினைக்கிறேன்.

ஒரு நீதிபதி  இது மாதிரி அடிப்படை கணக்கிலேயே தவறு பண்ணக்கூடாது, தீர்ப்பு ஒருத்தரோட தலைவிதியையே மாத்தும் என்கிறப்ப கவனமா செயல்பட்டிருக்கனும். குன்காவோட தீர்ப்ப எடுத்துகிட்டா அதுல ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாது. இதுவரைக்கும் அவர் எழுதின தீர்ப்பு எதுவுமே தவறா இருந்தது இல்ல. சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போயும் கூட ரிஜெக்ட் ஆனதில்ல. ஆனா குமாரசாமியோட தீர்ப்ப எடுத்துகிட்டா சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கு கூட சரியா போடல. இதனால அட்வகேட்ஸ் மட்டுமில்ல பொது மக்களே கூட இந்த தீர்ப்பை மதிக்கமாட்டேங்கிறாங்க.”

வளர்ப்பு மகன் திருமண செலவு…

“அது நாட்டையே திரும்பிப் பாக்க வச்ச கல்யாணம் சார். தீர்ப்பை மாத்துனவங்களுக்கு அதை மட்டும் மாத்தத் தெரியாதா என்ன ? ஊடகங்கள்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவா இருக்குறப்ப எப்படி தீர்ப்பை எதிர்த்து எழுதுவாங்க ? இங்க எந்த ஊடகமும் சரியில்ல அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.

பார் கவுன்சில் தலைவர் செல்வம் சொல்றது தவறான கருத்துன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க. குன்காவை விமர்சனம் பண்ணப்ப ஒன்னும் சொல்லாம இப்ப மட்டும் பேசக்கூடாதுன்னா எப்படி ?

நீதித்துறை மேல யாருக்குமே நம்பிக்கை இல்லங்க.  ஒரு சில நீதிபதிகள் நல்லவங்களா இருக்காங்க அவ்ளோ தான்!”

____________

வழக்குரைஞர் காசி, சைதாப்பேட்டை

“நீதிபதி சொல்லறது தான் தீர்ப்பு. தவறுன்னா மேல் கோர்ட்டுல அப்பீல் போட்டு நிரூபிக்கணும், அது தான் தீர்வு. மக்கள் பல கருத்துகள் சொல்லுவாங்க அதைதெல்லாம் ஏத்துக்க முடியாது. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, தீர்ப்பு இதுல என்ன சொல்லியிருக்காங்கன்னு மக்களுக்குத் தெரியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி நான் கருத்து சொல்ல விரும்பல” என்று சட்டம் தெரியாதவர்களிடம் எல்லாம் நான் என்ன பேசுவது என்பதாக நம்மை பார்த்தார்.

___________

பெயர் கூற விரும்பாத ஒரு பெண் வழக்குரைஞர், “சார் சிம்பிளா சொல்லணும்னா இந்த தீர்ப்பில் அட்வகேட்ஸ் யாருக்கும் திருப்தி இல்லை அவ்ளோதான்” என்று முடித்துக்கொண்டார்.

இவரும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு வழக்கறிஞர்:

“இந்த தீர்ப்பை எல்லாம் எவனாவது முட்டாளாக இருந்தால் தான் வரவேற்க முடியும் நான் இதை கடுமையாக எதிர்க்கிறேன்.”

“என்ன காரணத்தால் எதிர்க்கிறீங்க ?”

“இது நேர்மையான ஜட்ஜ்மெண்டே இல்லை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு மாதிரி தெரியுது. ஜட்ஜ்மெண்டே நான்சென்ஸா இருக்கு. சில லட்சங்கள்ல கல்யாணம் செய்ததா குமாரசாமி சொல்லியிருக்காரு. ஆனா குன்கா உண்மையான செலவு என்னன்னு சொல்லியிருக்காரு. அவரோட தீர்ப்பு தான் சரியான தீர்ப்புன்னு கருதுறேன்.”

“கூட்டல் கழித்தல் கணக்கின் பின்னணி என்ன என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் நீங்கள் கேட்பது போல நிச்சயம் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது” என்றார் சிரித்துக்கொண்டே. “பத்திரிகைகள் அமைதியாக இருப்பதற்கும் ஒரு பின்னணி இருக்கும். எல்லாம் அவங்க அதிகாரத்திற்குட்பட்டது தானே ?”

“ஜட்ஜ்மெண்ட் பத்தி யார் வேணும்னாலும் டிஸ்கஸ் பன்னலாம். நீதிபதியை தான் விமர்சிக்கக்கூடாது, தீர்ப்பை தாராளமா விமர்சிக்கலாம். பார் கவுன்சில் தலைவர் செல்வம் அவங்க சார்பான ஆளா இருக்கலாம் தெரியல. நீதி மன்றத்தின் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும், கார்பரேட்டுகளுக்கும் நீதி மன்றம் துணை போவது சமீப காலத்தில் அதிகமாகியிருக்கிறது.”

“அப்படியானால் இனி சட்டப்படி நீதி பெற முடியாது ஆனால் நீதிபதிகள் நினைத்தால் குற்றவாளிகளை காப்பாற்றலாம் என்றால் இந்நிலைமை எங்கு கொண்டு போய் விடும் ?”

“நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். நீதிபதிகள் தான் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தத்து மீது மட்டுமில்லை நிறைய நீதிபதிகள் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சட்டுகள் இருக்கு.”

“நீங்க எந்த கட்சி ?”

“எந்த கட்சியும் இல்லை.”

வழக்குரைஞர் ஆத்திச்சூடி, சைதாப்பேட்டை.

“லா மேனுக்கும் லே மேனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தீர்ப்பை எல்லாம் நீதிபதிங்க கையில எழுதறது இல்ல டிக்டேட் பண்றதோட. சரி அதுல தப்பு வர்றது சகஜம் ஜூடிசியல் எரரை ஜூடிசியல் ரிவ்யூவ்ல திருத்தலாம்.

வழக்குரைஞர் ஆத்திச்சூடி
நீதியரசர் குமாரசாமி அய்யா குற்றமே பண்ணலைன்னு சொல்லலை. சாட்சிகள் மூலம் அதை சரியா நீருபிக்கலைன்னு தான் சொல்றாரு – வழக்குரைஞர் ஆத்திச்சூடி

நீதியரசர் குமாரசாமி அய்யா குற்றமே பண்ணலைன்னு சொல்லலை. சாட்சிகள் மூலம் அதை சரியா நீருபிக்கலைன்னு தான் சொல்றாரு. வாயில்லாத மாட்டின் புகாருக்கு தன் மகனைக் கொன்று நீதி வழங்கிய மனுநீதி சோழன் வாழ்ந்த மண் இது. அதே நேரத்தில் ஏமாத்துறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாறுறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. அதனால தான் பானிப்பூரி வாங்கிற மாதிரி பெயில் வாங்குறாங்க.

பணம் இருக்கிறவங்களுக்கு உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், பணம் இல்லாதவங்களுக்கு லோக் அதாலத், ஆர்பிட்ரேட்டர், மீடியேசன், கவுன்சிலிங் இப்படி நிறைய நீதித்துறைகள் இருக்குது. மக்கள் அதை பயன்படுத்தணும். மக்களுக்கு நீதித்துறை பற்றிய விழிப்புணர்வு வரணும். ஒரு பேப்பர்ல எழுதி புகார் அனுப்புனா கூட அதை நீதி மன்றம் வழக்கா பதிவு செய்யும். புகாரே பண்ணலைன்னா கூட சூ மோட்டோ மூலம் நீதிமன்றமே வழக்கு தொடுக்கும். நீதி துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கு நாம தான் அதை பயன்படுத்தணும்.”

பெயர் கூற விரும்பாத வழக்குரைஞர்.

“இந்த கேசில் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான். கர்நாடகா அரசுக்காக வாதாடிய அட்வகேட் ஆச்சாரியாவே தனக்குப் போதுமான நேரம் தரப்படவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளார். இந்த கேசில் முற்றிலும் தவறான கணக்கு போடப்பட்டுள்ளது என்று குமாரசாமி மீது ஆச்சார்யா குற்றம் சாட்டிய பிறகு தான் குமாரசாமி தனது அசிஸ்டென்டுகளிடம் இது குறித்து ஆய்வு செய்யுமாறு கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறு ?

கல்யாணத்தில் எவ்வளவு நகை போட்டிருந்தார்கள், எவ்வளவு செலவானது என்பதை நீதிபதி மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது அட்வகேட் தரும் ஆதாரங்களை வைத்துத் தான் மதிப்பிட முடியும். ஆனால் மக்கள் இதற்குத் தேர்தலில் தான் தீர்ப்பு வழங்குவார்கள்.

சல்மான் கான் வக்கீல் அவருக்காக வாதாடுகையில், ஏன் இந்த மக்கள் ரோட்டில் படுத்து உறங்குகிறார்கள் என்று கேட்கிறார். நாட்டில் வீடு இல்லாதவர்கள் எல்லாம்  ரோட்டில், ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாப்புகளில் தான் உறங்குகிறார்கள். அரசாங்கம் இந்த ஏழை மக்களுக்கு எதுவும் செய்ய வக்கில்லாத கேவலமான நிலையில் இருக்கு.

90% பணக்காரர்களுக்கு ஈசியா ஜாமீன் கிடைக்குது, ஆனா 2.5 லட்சம் பேர் ஜாமீன் கிடைக்காத விசாரணைக்கைதிகளாக இருக்காங்க. நீதிபதிகள் நினைத்தால் வழக்கின் தன்மையையோ அல்லது ஆதாரங்களையோ உதறிவிட்டு தாங்கள் நினைத்தபடி தீர்ப்பு கொடுக்கும் நிலைமை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய்விடும்.

எனவே ஒட்டுமொத்த நீதித்துறையையும் குறை சொல்வது தவறு. நிறைய நீதிபதிங்க மோசமா இருப்பதும் உண்மை தான். இப்ப கூட ஆந்திராவில் ஒரு ஜட்ஜ் தீர்ப்புக்காக ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசி அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. இப்ப நீதிபதிகள் எல்லாம் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கானோ அப்படி இருக்காங்க.

எந்த கட்சியிலும் இல்லை கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி ஓட்டுபோட்டேன்.”

வழக்குரைஞர் குமரன், சைதாப்பேட்டை.

“அ.தி.மு.க அட்வகேட்ஸ் வேணும்னா ஏத்துப்பாங்க, எங்களை மாதிரி ஆளுங்க எப்படி வரவேற்க முடியும். தீர்ப்பில் நிறைய பிரச்சினைகள் இருக்கு சார், குன்கா தீர்ப்பு மாதிரி இது அவ்வளவு அலசி ஆராயப்பட்டு வழங்கிய தீர்ப்பு மாதிரி தெரியல. அதனால சரியா இருக்கும்னு தோனல. தீர்ப்பை பத்தி விமர்சிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல, அது நீதி மன்ற அவமதிப்பும் இல்லை நீதிபதிகளை பத்தி தான் விமர்சிக்கக்கூடாது.

சொத்துக் குவிப்பு வழக்கு, சல்மான் கான் ஜாமீன் போல நீதிமன்றங்கள் பல மோசமான தீர்ப்புகளையும் ஜாமீன்களையும் வழங்கியிருக்கு உண்மை தான், ஆனா நீதி மன்றங்கள் மட்டுமா அப்படி இருக்கு. நீங்க கேட்ட மாதிரி பத்திரிகைகள் ஏன் இந்த தீர்ப்பை பத்தி துணிச்சலா எழுதல? எல்லாம் ஊழல்பட்டிருக்கு நீதிமன்றங்கள் மட்டுமில்ல இங்கே எதுவுமே சரியில்லை. பல கேஸ்ல போலீசே திருடர்களோடு சேர்ந்து கொள்ளையடித்தது அம்பலமாகியிருக்கு.”

வழக்குரைஞர் முகம்மது, சைதாப்பேட்டை.

“குமாரசாமியின் தீர்ப்பு முற்றிலும் தவறானது. ஒரு வழக்குன்னா அதுல ரெண்டு தரப்பு விவாதத்தையும் முழுமையா கேட்டுட்டு தான் தீர்ப்பு கொடுக்கனும் இது மிக மிக அடிப்படையான விசயம். ஆனா அதுலயே தப்பு நடந்துருக்கு. இன்னொரு பக்கம் அவருக்கு என்ன பிரஷர்னு யாருக்குத் தெரியும் ?

வழக்குரைஞர் முகமது
“குமாரசாமியின் தீர்ப்பு முற்றிலும் தவறானது” – வழக்குரைஞர் முகம்மது

குமாரசாமியின் பழைய ஜட்ஜ்மெண்டை எல்லாம் பாத்தீங்கன்னா ரொம்ப நியாயமா இருக்கும், அதனால தான் அவரை அரசு அப்பாயிண்ட் பன்னுச்சு, மத்த தீர்ப்பெல்லாம் தப்பா கொடுத்திருந்தாலோ அல்லது கணக்குல தவறு பண்ணியிருந்தாலோ அது இவரோட நேச்சர்னு விட்டுடலாம். ஆனா குமாரசாமி அப்படி இல்ல. இதுல மட்டும் இத்தன தப்பு இருக்குன்னா பாக்குறப்பவே வேற ஏதோ நிர்ப்பந்தம்ணு தோணுது.

எவ்வளவோ நல்ல ஜட்ஜஸ் இருக்காங்க என்ன பிரச்சினைன்னா யாரு ரூலிங் பார்ட்டியா இருக்காங்களோ அவங்க தான் ஜட்ஜுகளை செலக்ட் பண்றாங்க ஐந்து நீதிபதிங்கள் ஒரே வயசுல எல்லா தகுதியும் உள்ளவங்களா இருக்காங்கன்னா, திடீர்னு ஆறாவதா ஒருத்தரை சம்பந்தமே இல்லாம சீஃப் ஜஸ்டிஸா போடுறாங்க. எல்லா துறையும் எப்படி மோசமா இருக்கோ அதே போல தான் இதுவும் களங்கமுள்ளதா இருக்கு. யார் ரூலிங் பார்ட்டியோ அவங்க கையில தான் நீதி துறை இருக்கு.

போன தேர்தல்ல நோட்டாவுக்குத் தான் போட்டேன். போட்டோ செய்தியெல்லாம் போட்டு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குற அளவுக்குப் போகாம பாத்துக்கங்க.”

வழக்குரைஞர் சரவணன், சைதாப்பேட்டை.

“ஒரு ஜட்ஜை விமர்சனம் பண்றதுக்கு நமக்கு அருகதை இல்ல! லீகல் லாங்வேஜ்ல அழகா சொல்லனும்னா ‘அரசன் தவறிழைப்பது இல்லை’ என்ற முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கணும். ஒரு கருத்து இருந்தா அதற்கு எதிர் கருத்து வரும். மக்கள் ஆயிரம் சொல்வாங்க. சட்டப்படி லோயர் கோர்ட்டு நமக்கு எதிரா தீர்ப்பு சொன்னா அதுக்கும் மேல் ஹைகோர்ட்டுக்கு போய் நீதி கேக்கணும் அது தான் வழி. நம்ம கையில ஐந்து விரல் இருக்குது. ஐந்தும் ஒண்ணு மாதிரியா இருக்குது ?இது இந்த நீதிமன்ற கண்ணோட்டத்திலிருந்து கொடுத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை நாம தப்புன்னு சொல்லமுடியாது அது ரொம்ப தப்பு” என்றார்.

சந்திரசேகர், கார்பரேட் நிறுவனத்தின் வழக்குரைஞர், சைதாப்பேட்டை

வழக்குரைஞர் சந்திரசேகர்
“இப்போது நீதியான ஜனநாயம் இல்ல பணநாயகம்தான் இருக்கிறது. ” – வழக்குரைஞர் சந்திரசேகர்

“இப்போது நீதியான ஜனநாயம் இல்ல பணநாயகம்தான் இருக்கிறது. பல்வேறு கோணங்களில் பார்த்தாலும் நீதி தோற்றுள்ளது. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமா ? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பது இந்தியாவின் மிகப்பெரும் மூன்று பதவிகளில் புரொட்டொக்கால்படி பெரும் பதவி. ஒரு சாதாரண குடிமகன் , சர்வசாதாரணமாக ஒரு குற்றச்சாட்டை அந்த பதவியில் இருபவர் மீது கூறி விட முடியாது, கூறக்கூடாது. யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் அது பிரதமராகவே இருந்தாலும். மன்மோகன்சிங் ரிட்டயர்ட் ஆனாலும் சி.பி.ஐ இப்போது விட்டதா என்ன ?”

வழக்குரைஞர் சிங்காரம், சைதாப்பேட்டை.

“இந்த தீர்ப்பை பற்றி நாங்க  சொல்லறதை விட, ஜனங்க சொல்லறது தான் சரி. நான் எங்க ஆளுனு சொல்ற செல்வம் சொன்னதுக்கு மட்டும் பதில் சொல்றேன்.

ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை விமர்சனம் பண்ணா அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்னு சொல்றதுக்கு இவர் யார்? எல்லாருக்கும் இவரா தலைவர் ? இவர் அ.தி.மு.க சாயம் பூசிய ஆளு. அ.தி.மு.க கொடுத்த பதவி அது. அ.தி.மு.க  வாரிய தலைவர் மாதிரி, இவர் பார் கவுன்சில் சேர்மன் அவ்வளவு தான். இதுக்கு முன்னாடி குன்கா தீர்ப்பு வழங்கிய போது அ.தி.மு.க காரங்க கேவலமா போஸ்டர், கட் அவுட் வைச்சி அவரை திட்னாங்களே அப்ப எங்க போனாரு இந்த செல்வம் ?

நீதிபதி குமாரசாமி தீர்ப்பால் நீதிமன்ற மாண்பு மட்டுமல்ல இந்திய மானமும் போச்சு. ஜெயலலிதா ஊழல் செய்தாரா இல்லையானு தீர்ப்பு சொல்லச் சொன்னா 10% ஊழல் செய்தாரு அது ஊழல் இல்லைன்னு சொல்றாரு இதுவா நீதி?”

பெயர் குறிப்பிடாத தி.மு.க வழக்குரைஞர், எழும்பூர்.

“ஊரறிய கொள்ளையடித்த குற்றவாளிகளை விடுவித்திருக்கும் இந்த தீர்ப்பை எப்படி சார் வரவேற்க முடியும்?

வளர்ப்பு மகன் கல்யாணத்தை எப்படி கோடி கோடியா கொட்டி நடத்தினார்கள் என்பதை தமிழ்நாடே பார்த்தது. நாங்க சொன்னா தி.மு.க காரன் சொல்றான்னு சொல்லுவாங்க. குமாரசாமி வேணும்னா கல்யாணத்துக்கு போன தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை கூப்பிட்டு விசாரிக்கட்டும். இல்லைன்னா தேவாரத்துக்கிட்ட கேட்கட்டும்.”

வழக்குரைஞர் முருகன், எழும்பூர்.

“சட்டமே இப்ப கார்ப்பரேட்மயமாகி வருது சார். ஜெயலலிதா அம்மாவை ஊழல்னு கண்டிக்கிறோம், முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர், இப்படி செய்வது ஜனநாயகத்தை சிதைக்குது. ஆனா கார்ப்பரேட்காரனுங்க வரிச்சலுகையா பல லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கிறானுங்க நிலம் கையப்படுத்தும் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம் இப்படி பல சட்டங்களை அவனுங்களுக்காக போடுறாங்க ஏழைகளுக்கு என்ன சட்டம் இருக்கு ?

அம்மா தீர்ப்பு மட்டுமா இங்கு பிரச்சினை ? இது சரியா இல்லையான்னு மேல் கோர்ட்டு பார்த்துக்கும். எப்பவும், அவங்கள புடிச்சவங்க ஒரு மாதிரியும் புடிக்காதவங்க ஒரு மாதிரியும் தான் பேசுவாங்க. பொதுவா நீதிமன்றத்தின் மேல நம்பிக்கை குறைஞ்சிக்கிட்டே தான் போவுது, தப்பு எங்க சார் இல்ல?”

ஜெயராமன், அ.தி.மு.க, எழும்பூர்

வழக்குரைஞர் ஜெயராமன்
“எங்க அம்மா விடுதலை ஆகியிருக்காங்க, அதை வரவேற்காம எதிர்க்கச்சொல்றீங்களா ?” – வழக்குரைஞர் ஜெயராமன்

“தீர்ப்பை வரவேற்கிறோம் மக்களும் ஆதரிக்கிறாங்க தி.மு.க காரனுங்களும் மற்ற கட்சிக்காரனுங்களும் தான் எதிர்க்கிறானுங்க அதுக்கு அம்மா மேல உள்ள காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.”

“ஏன் வரவேற்கிறீங்க ?”

“இது என்ன சார் கேள்வி எங்க அம்மா விடுதலை ஆகியிருக்காங்க, அதை வரவேற்காம எதிர்க்கச்சொல்றீங்களா ?”

“கூட்டல் கழித்தல் கணக்கு பிரச்சினை பற்றி ?”

“எதுவாயிருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கும், ஹைகோர்ட்டுக்கு மேல சுப்ரீம் கோர்ட் இருக்கு இவனுங்க எதுக்கு சும்மா சாமி ஆடுறானுங்க. கூட்டல் கழித்தல் பிரச்சினைங்கிறது டைப்போகிராபிக்கல் எரர் அதுக்கு நீதியரசர் பொறுப்பாக மாட்டார்.”

“தீர்ப்பை பற்றி விமர்சிக்கக்கூடாதுன்னு பார்கவுன்சில் செல்வம் கூறியிருக்கிறாரே ?”

“ஆமா ஒரு ஜட்ஜ்மெண்ட் வந்த பிறகு அதை பற்றி விமர்சிக்கக்கூடாது. சட்டப்படி பார்த்தா இந்த ஜட்ஜ்மெண்ட்டுக்கு எதிரா பேசிக்கிட்ருக்க எல்லோர் மேலையும் கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட் போடனும்.

இந்த மாதிரி நல்ல தீர்ப்பு வந்ததனால தான் மக்களுக்கு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கையே வந்திருக்கு. தீர்ப்பு வேற மாதிரி வந்திருந்தா தான் நம்பிக்கை போயிருக்கும்.

2ஜி வழக்குல என்ன ஆச்சு குற்றஞ்சாட்டப்பட்ட எல்லாம் வெளிய இருக்காங்க, நிலக்கரி ஊழலில் என்ன ஆச்சு, யார் தண்டிக்கப்பட்டிருக்காங்க ? காங்கிரஸ் தி.மு.க ஆட்சியில் எத்தனை ஊழல் நடந்திருக்கு ? கருணாநிதி குடும்பம் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கு ஆனா யாரும் தண்டிக்கப்படலையே. இப்படி இருந்தா மக்களுக்கு நீதி மன்றத்தின் மேல நம்பிக்கை குறையத்தான் செய்யும்.

அதோட இப்பல்லாம் ஊழல்ங்கிறது ரொம்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு. யார் தான் ஊழல் பண்ணாம இருக்காங்க, எந்த கட்சி யோக்கியம் ?”

வழக்குரைஞர் மோகன், எழும்பூர்.

வழக்குரைஞர் மோகன்
“நடுநிலையான யாரும் இந்த தீர்ப்பை ஏத்துக்க மாட்டாங்க. ஏன்னா அவ்வளவு மோசமான தீர்ப்பு இது” – வழக்குரைஞர் மோகன்

“அ.தி.மு.க காரங்க வேணும்னா வரவேற்பாங்க. நடுநிலையான யாரும் இந்த தீர்ப்பை ஏத்துக்க மாட்டாங்க. ஏன்னா அவ்வளவு மோசமான தீர்ப்பு இது.

இப்படி ஒரு தீர்ப்பு வரும்னு யாருமே எதிர்பார்க்கலைங்க. குறைந்தபட்சமாகவாவது தண்டனை கிடைக்கும்னு தான் நாங்களே நினைச்சிட்ருந்தோம். ஆனா இது பெரிய அதிர்ச்சியா இருக்கு. அட்வகேட்ஸ் எல்லோரோட மனநிலையும் இது தான்.

இந்த கணக்கு தப்பை ஏத்துக்க முடியாது. இது ஏதோ ஒரு சாதாரண சின்ன தப்பு இல்ல. ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிற ஜட்ஜ் இந்த மாதிரி விசயத்திலேயே கவனமில்லாம இருந்தா தீர்ப்பு எப்படி இருக்கும் ?”

வழக்குரைஞர் செழியன்.

“தீர்ப்பை வரவேற்கிறீர்களா ?”

வழக்குரைஞர் செழியன்
“இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பால் நடுநிலையுடன் இருக்கும் அட்வகேட்ஸ் அத்தனை பேரும் ஷாக் ஆகியிருக்காங்க.” – வழக்குரைஞர் செழியன்

“இல்லை இந்த தீர்ப்பை வரவேற்க முடியாது. குன்கா வழங்கிய தீர்ப்பை போல இந்த தீர்ப்பை பார்க்க முடியவில்லை. இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பால் நடுநிலையுடன் இருக்கும் அட்வகேட்ஸ் அத்தனை பேரும் ஷாக் ஆகியிருக்காங்க.

கணக்கு பிரச்சினையை சிலர் டைப்போக்கிராப்பிக்கல் எரர்னு சொல்றாங்க ஆனா குன்கா தீர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கும்போது மொத்த தீர்ப்புமே எரராக இருக்கிறது.

என்னோட மகன் ஜட்ஜ்மெண்ட்டை டவுன்லோட் பன்னினான், ரெண்டு ஜட்ஜ்மெண்டையும் படிச்சோம். குன்கா தீர்ப்பு எவ்வளவு அற்புதமான தீர்ப்பு, அதுல எவ்வளவு உழைப்பு செலுத்தியிருக்காரு அவர். அதோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் பிரச்சினை இருப்பது நல்லா தெரியுது.”

“ஊரே அறிந்த கூட்டல் கழித்தல் தவறை பற்றி ஊடகங்கள் எழுதாமல் இருப்பது ஏன் ?”

“அவங்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கலாம், பயம் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது இருக்கலாம்.”

“தீர்ப்பைப் பற்றி விமர்சிக்கக்கூடாதுன்னு பார்கவுன்சில் செல்வம் கூறியிருப்பது பற்றி ?”

“தப்பு, ஒரு ஜட்ஜ்மெண்டை யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம்னு தைரியமா சொல்லுங்க.”

“நீதிபதிகள் நினைத்தால் குற்றவாளிகளை காப்பாற்றலாம் என்கிற நிலைமை எங்கு கொண்டு போய் விடும் ?”

“நீதிபதிகளுக்கும், நீதி மன்றத்திற்கும், அட்வகேட்சுக்கும் மக்களிடம் கெட்ட பெயர் வரும். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள். அப்பாவிகள் தண்டனை அனுபவிப்பார்கள். மொத்ததில் நீதி இருக்காது.”

வழக்குரைஞர் சாரதி, எழும்பூர்.

“அவங்க ஒழுங்கா சட்டப்படி விடுதலை ஆகியிருந்தா யாரும் பேச முடியாது! இது சட்டத்த வளைச்சி,நெளிச்சி வாங்குன தீர்ப்பு. இதை நீதிக்கும், நீதிமன்றத்துக்கும் நேர்ந்த அவமானமாத்தான் நாங்க கருதுகிறோம். கூட்டல், கழித்தல் கணக்குல தப்புப்பண்ணி அத வச்சி ஒரு தீர்ப்பு வருதுன்னா இதை விட அசிங்கம் வேறு என்ன ?

வழக்குரைஞர் சாரதி
“10% தான் ஊழல் பன்னாரு அதனால அது தப்பில்லான நீதி மன்றத்தை இனிமே யார் மதிப்பாங்க ?” – வழக்குரைஞர் சாரதி

ஏற்கெனவே இவங்கள மாதிரி ஆளுங்களுக்குன்னு சட்டத்துல ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்குது அது வழியா வந்திருந்தா கூட சரி ஆர்க்கியூமெண்ட்ல வெளியே வந்துட்டாங்கன்னு ஏத்தூக்குலாம்! பதவி,பணத்தை வச்சி எதுவும் பண்ணலாமா? ரொம்ப அசிங்கம் சார் இது. இப்ப ஜனங்களுக்கு நீதிமன்றத்து மேல எந்த நம்பிக்கையும் இல்லாம போயிடுச்சு!

இந்தம்மா வளர்ப்பு மகனுக்கு பண்ண திருமணம் உலகத்துக்கே தெரியும் அதுல அவங்க போட்டுகினு வந்த நகை, அவங்க பண்ண அமர்க்களம் எல்லாத்தையும் இப்ப ஒன்னுமே இல்லன்னு சொன்னா யார் நம்புவாங்க. அப்படி சொன்னா நீதிபதியையும் நீதிமன்றத்தையும் யார் நம்புவாங்க ? நான் எதுவும் பண்ணுவேன் எப்படியும் பூந்து வெளிய வந்துருவேன்னு சொன்னா அநியாயம் இல்லயா ? 10% தான் ஊழல் பன்னாரு அதனால அது தப்பில்லான நீதி மன்றத்தை இனிமே யார் மதிப்பாங்க ?

இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர் ” என்றார் வெறுப்புடன்.

வழக்குரைஞர் சங்கர், எழும்பூர்.

“அ.தி.மு.க காரங்களே இந்த நீதியை பார்த்து மிரண்டு போயிருக்காங்க. அம்மாவுக்கு குறைந்தபட்ச தண்டனையாவது கிடைக்கும்னு தான் நினைச்சாங்க. ஆனா இப்படி மொத்தமா ஒண்ணுமில்லாம போயிரும்னு நினைக்கவே இல்ல. சம்திங் இவ்வளவு தூரம் பாயும்னு அவங்களுக்கே தெரியாது. இப்ப மக்களுக்கு நீதிமன்றத்துல நீதி இல்லைன்னு நல்லா புரிஞ்சிப்போச்சு. ஸ்பெஷல் கோர்ட்டு 100 கோடி ரூபாய் அபராதம், நான்காண்டு சிறைத்தண்டனைன்னு சொல்லுது, மேல் கோர்ட்டு தப்பே பண்ணலைன்னு விடுதலை பன்னுதுன்னா இது கூத்தா இல்ல.”

___________________

இவ்வாறு பெரும்பாலான வழக்குரைஞர்கள் இது விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்பதை பல்வேறு கோணங்களிலிருந்து விளக்கினர். அ.தி.மு.க, தி.மு.க மற்றும் பிற கட்சி சார்ந்த வழக்குரைஞர்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் பிற வழக்கறிஞர்கள் ஒரு சேர தீர்ப்பை எதிர்க்கின்றனர். பொதுவில் இந்த தீர்ப்பு வழக்குரைஞர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக பலரும் குறிப்பிட்டனர்.

வழக்குரைஞர்கள் மட்டுமின்றி நீதி மன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடமும் பேசினோம். அவர்களும் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை இது பணத்தால் அடித்து வாங்கப்பட்ட தீர்ப்பு என்றனர்.

________________

–    வினவு செய்தியாளர்கள்

சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

14

சின்டெல் எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக 3,000 பேருக்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றது. 4 மாதங்களுக்கு முன் டி.சி.எஸ்.  (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் இதைப் போன்று கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு தொடர்ச்சியான பிரச்சாரம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

சின்டெல் ஆட்குறைப்பு
ஊழியர்களை பலி கொடுக்கும் சின்டெல் நிறுவனம்

டி.சி.எஸ் 25 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோது, வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தந்திருந்தது. விசயம் ஊடகங்களில் வெளியானது.

ஆனால், பு.ஜ.தொ.மு.-வின் தொடர்ச்சியான பிரச்சாரம், ஐ.டி ஊழியர்களிடையே துண்டுப்பிரசுர வினியோகம் போன்றவற்றால் அதிர்ச்சியடைந்துள்ள கார்ப்பரேட்கள் இம்முறை வேலை நீக்கத்தை, வேறு தந்திர வழியில் செய்யத் தொடங்கியுள்ளனர். ஊழியரை மிரட்டி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,  அவர்களது அடையாள அட்டையை (ஐ.டி கார்ட்) பிடுங்கிவிட்டு, 15 நிமிடங்களுக்குள் நிறுவன வளாகத்துக்கு வெளியில் போய் விடும்படி துரத்துவது என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு சின்டெலின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் அறிந்து அதற்கு எதிராக் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது; தொடர்ந்து சின்டெல் நிறுவனத்தின் ‘விலகல் கடித‘ பாணி கட்டாய வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை காஞ்சிபுரம் மாவட்டம் தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் அழைத்துச் சென்று தலையீடு (சமரசத் தீர்வு) கோரி மனு அளிக்கவும் உதவி செய்துள்ளது.

ஐ.டி. துறை ஊழியர்களே!

இனி இதே பாணியில்தான் நம்மைப் பணி நீக்கம் செய்து தனது லாபத்தை உயர்த்தப் போகின்றது கார்ப்பரேட் கும்பல். செய்வது அறியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின் வருந்தாதீர்கள்.. கையெழுத்திட மறுத்து சங்கத்தினைத் தொடர்பு கொண்டு, இணைந்து போராடி, உங்கள் வேலை உரிமையை நிலை நாட்டுங்கள்.

வஞ்சகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் வாக்குமூலத்தை கீழே தருகிறோம்.

***

பிரஷாந்த் ரானடே
பிரஷாந்த் ரானடே – சின்டெல் துணைத்தலைவர்

வரிடமிருந்து அடையாள அட்டையை (ஐ.டி கார்டை) பிடுங்கிக்கொண்டு 15 நிமிடத்திற்குள் அலுவலகத்தை காலிசெய்து வெளியேற உத்தரவிட்டுள்ளது நிர்வாகம். பல ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனத்தால், அவமானப்படுத்தப்பட்டு, வேலையை விட்டு துரத்தப்பட்ட அவர் ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிரான பு.ஜ.தொ.மு-வின் சுவரொட்டியை பார்த்துவிட்டு நம்மை அழைத்தார்.

“என்ன நடந்துச்சிங்க?”

“மூணு வருசம் ஆன்சைட்டில் (அமெரிக்கா) டீம் லீடராக இருந்தேன் பாஸ். இங்கிருந்து போகும் போது ஒரு புரொஜெக்டிற்குனு தான் அனுப்புனாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் வேறு இரண்டு புரொஜெக்டிற்கு டீம் லீடர்கள் வரும் வரை டெம்பொரெரியாக (தற்காலிகமாக) பார்த்துக்கங்கனு சொல்லி கொடுத்தாங்க. அநத புரொஜெட்டிற்கு கடைசி வரை டீம் லீடர் வரவே இல்லை.

குடும்பப் பிரச்சனையால போன வருசம் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர்றது மாதிரி ஆயிருச்சி. எனக்குப் பதிலா அங்க போனவங்க கொஞ்ச நாள்லயே வேற கம்பெனிக்கு மாறிட்டாங்க. என்ன மாதிரி சரியான அடிமை அவங்களுக்கு சிக்கல. கொஞ்ச நாள்ளயே என்னை போகச்சொன்னாங்க. எனக்கு ஃபேமிலி சூழலால போகமுடியல. அப்படியே சொல்லிட்டேன். இது டெலிவரி மானேஜருக்கு பிடிக்கலை.

இத்தனை வருசம் நைட் ஷிப்ட் தான் பார்த்தேன். ஆனால், உடம்பு சரியில்லாம ஆகவே, ‘நைட்ஷிப்ட் வேண்டாம் டே ஷிஃட் கொடுங்க’னு கேட்டேன். நைட் ஷிப்ட் கஷ்டம்னு சொல்லிட்டேன். அதையும் அவங்க ஏத்துக்கல. டெலிவரி மானேஜருக்கு என் மேல கடுப்பு வந்திருச்சி. நான் என்ன பாஸ் பண்ண முடியும்.”

“இத்தனை வருசம் நைட்ஷிப்ட் தான் பாத்திருக்கீங்க இப்போ உடம்புக்கு ஒத்துக்கலை எனச் சொன்னா ஏத்துக்க மாட்டாங்களா?”

சின்டெல் ஆட்குறைப்பு
டாடா சன்ஸ் நிர்மல்யா குமாருடன் சின்டெல் தலைவர் பரத் தேசாய் (சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்)

“இதைதான் நானும் கேட்டேன். இதெப் பத்திலாம் அவனுங்க எங்க கவலைப்படுறாங்க. ஆனா என்னோட உடல்நிலையில என்னால சுத்தமா முடியாது. அதனால நைட்ஷிப்ட் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போன மாச கடைசில தான் ரேட்டிங் போட்டாங்க. என் மானேஜர் நல்ல ரேட்டிங்தான் கொடுத்தேன்னு சொல்றார். ஆனா எனக்கு மேல் உள்ளவங்க மாத்திட்டாங்களாம்.

டெலிவரி மானேஜரிடம் பேசினேன். ‘நீங்க பிளெக்சிபிலாக இல்லை. சரியா வேலை செய்யலை’னு சொன்னாரு.

‘எந்த வேலையை நான் சரியா செய்யலை’ னு கேட்டேன். அதுக்கு அவருகிட்ட பதில் இல்லை. கிளையன்ட் அப்பிரிசியேட் (பாராட்டு) பண்ணி இருக்காங்க என்று எடுத்துச் சொல்லியும் அவங்க ஏத்துக்கல.

வருடத்தில் முதல் பாதியில் நடக்கும் “மிட் அப்ரைசலில்” ஏன் எந்த கமெண்டும் சொல்லைனு கேட்டேன். இதுக்கும் அவர்கிட்ட எந்த பதிலும் இல்லை.

டெலிவரி மானேஜர்கிட்ட பதில் கிடைக்காததால் எச்.ஆரிடம் கேட்டேன்.

சின்டெல் ஆட்குறைப்பு
2014-ல் சின்டெல் நடத்திய நாஸ்காம் முதலாளிகள் மாநாட்டில்

பாஸ், அந்த எச்.ஆருக்கு நான் யாரு, என்ன பேருனு நான் போகிற வரைக்கும் தெரியாது. ஆனா நான் தகுதியில்லாதவனு அவன் சொல்றான்.

‘கடைசி மூணு அப்ரைசலில் டாப் ரேட்டிங்க் போட்டிருக்கீங்க. திடீர்னு ஒருத்தனோட பெர்பாமன்ஸ் எப்படி டாப் ரேட்டிங்கிலிருந்து பத்தாவது இடத்திற்கு குறையும்’னு கேட்டேன்?

நான் கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்குனது அவருக்கு தெரியவர கொஞ்சம் பின்வாங்கினார். இது குறித்து பரீசீலிப்பதாகவும், லீவ்ல இருக்கும் என் மானேஜர் திரும்புனதும் இது பத்தி பேசுறதாகவும் சொல்லியனுப்பினார்.

போன வாரம் திங்கட்கிழமை எதேச்சையா பார்க்கும் போது தான் தெரிஞ்சது சிஸ்டம்ல என் சூப்பர்வைசர் பெயரும், புரொஜெக்ட்டும் மாறியிருந்தது. நான் பெஞ்சில் இருப்பதாக காட்டியது.

அவசரமாக என் டெலிவரி மானேஜரிடம் கேட்டால்

‘உங்கள போன புதன் கிழமையே ரிலீஸ் பண்ணிட்டோமே’னு கூலா சொல்கிறான்.

‘என்கிட்ட ஏன் இன்பார்ம் பண்ணலை. இன்னைக்கு காலைல வரை ஒர்க் பண்ண வெச்சிருக்கீங்க’னு கோபமாக கேட்டதற்கு

‘நாங்க மெயில் சென்ட் பண்ணிட்டோம்.’

‘எனக்கு எதும் வரலையே’

‘மே பி கம்யூனிகேசன் எரரா இருக்கலாம்’ னு திமிராப் பேசுறான்.

என்ன புரொஜெட்லிருந்து ரிலீஸ் பண்ணினதோடு இல்லாம ரெண்டு நாள் வேலை வாங்கியிருக்கானுக. எதேச்சையாத்தான் இத பாத்தேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி எச்.ஆர் வரச் சொல்லி மெயில் போட்டிருந்தாரு.

அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னு சொன்னாரு.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்ரைசலில் ரேட்டிங்கையே நான் ஏத்துக்கல. அந்தப் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. என் மேனேஜர் லீவ் முடிஞ்சி வந்தப்புறம் பேசலாம்னு சொன்னாங்க. இப்போ அதையே காரணமா வெச்சி கிளம்ப சொல்றாங்க.

நான் கையெழுத்துப் போடத் தயார். ஆனா வேலைநீக்கத்திற்கான காரணத்தை ஏற்கமுடியாதுன்னு தோணிச்சு. எச்.ஆரிடம் இதை சொல்லிட்டு கையெழுத்து போட முடியாதுன்னு சொல்லிட்டேன். எச்.ஆர் இதை ஏத்துக்கல.

கடந்த ஆண்டுகளில் டாப் ரேட்டிங் வாங்கியதால் வேண்டுமானால் சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ‘கருணை’ காட்டினார்.

கிடைத்த அவகாசத்தில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி முதல் அனைவருக்கும் எனக்கு நடந்த அநியாயத்தை விளக்கி ஒரு மெயில் அனுப்பினேன். சிறிது நேரத்தில் அதற்கு பதிலும் வந்தது.

‘உங்களது கோரிக்கையை பரிசீலித்தோம். எச்.ஆர்களுடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் உங்கள் குறைகளைக் கூறலாம்’ என்று பஞ்சாயத்திற்கு நாள் குறித்தார்கள்.

அடுத்த தினத்தில் அந்த கட்டபஞ்சாயத்தும் ஆரம்பித்தது. மும்பை , சென்னையிலிருந்து எச்.ஆர்கள் நாலைந்து பேர் தொலைபேசி கான்பரன்சில் இணைந்திருக்க, நேரில் இருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

மீண்டும் பழைய பல்லவியே ஆரம்பித்தது. சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் வேலைநீக்கத்தை நியாயப்படுத்தினார்கள்.

‘ நீங்க சரியா வேலை பார்ப்பதில்லை’

‘இப்படிச் சொன்னா எப்படி. கொடுத்த வேலையில் எதை சரியாக செய்யவில்லை என்று ஆதாரபூர்வமாக சொல்லுங்க, நான் பதிலளிக்கிறேன்.’

‘அந்த டேட்டா கையில் இல்லை. நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை. ஆன்சைட் போக முடியாதுன்னு சொல்லியிருக்கீங்க அதனால் கிளைன்ட் சேட்டிஸ்பேக்ஷன் குறைஞ்சிருக்கு’

‘ஆன்சைட்டிலிருந்து வரும்போதே ஃபேமிலி இஸ்யூனு சொல்லிட்டு தான் வந்தேன். அப்படியிருக்கும்போது எப்படி உடனே போகமுடியும். அதற்கு தகுந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.’

இப்படி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கவும் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்கள்.

‘ நீங்கள் எப்பொழுதும் அவைல்பிளாக இருப்பதில்லை. உங்கள் இருப்பிடத்தில் இருப்பதில்லை.’

‘(மனுசன் ஒண்ணுக்கு போறது ஒரு குத்தமாயா) அப்படியில்லையே. எப்பொழுது நான் அவலைபிளாக இல்லைனு சொல்லுங்க. போன் செய்து அதை எடுக்காமல் இருந்திருக்கிறேனா?’

நான் இப்படி அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்ல சொல்ல அவங்க வேறு எதை எதையோ சொல்ல ஆரம்பிச்சாங்க.

இடையில ரெஸ்ட் ரூமுக்கு போகணும்னு வெளியே வந்தேன்.

என் பின்னாடியே ஒரு எச்.ஆர் வந்தான்.

பிரெண்டு போன் பண்ணான். எடுத்து பேசிட்டு இருந்தேன்.

‘ரெஸ்ட் ரூமுக்கு போகனும்னு சொல்லிட்டு போன் பேசிட்டு இருக்கீங்க’னு கேக்குறான். நான் டாப் மேனேஜ்மென்ட்டுக்கு மெயில் பண்ணி பிரச்சனை பண்ணதால இப்ப நான் எதையும் செஞ்சிற கூடாதுனு குறியா இருந்தாங்க.

எனக்கும் அவங்களிடம் வேலை பார்க்க பிடிக்கவில்லை. ஆனா எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் என்னை ஏன் வேலை நீக்கம் செய்கிறாங்கங்குறதுக்கு நியாயமான காரணம். கடைசி வரை நான் அதைத்தான் கேட்டேன். ஆனால் யாரும் அதுக்கு பதில் சொல்லல.

ஒரு எச்.ஆர் மட்டும் எனக்கு ஆதரவா பேசினார். என்னை தனியா கூட்டிட்டுபோய், ‘இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க பண்ணது தப்புனு ஒத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்கு பிரச்சனை. அதானால ஏத்துக்கமாட்டாங்க. பேசாம நீங்க ரிசைன் பண்ணிருங்க. வேற ஜாப்க்கு நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றே’ன்னு சொன்னாரு.

எனக்கு வேற எதுவும் தோணவில்லை. ஒத்துக்கிட்டேன். உடனே ஐ.டி கார்டை வாங்கிட்டாங்க. என் மெயில், அக்ஸஸ் எல்லாத்தையும் முடக்குறதுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தாங்க.

அவ்ளோதான். எவ்ளோ நாள் நைட் ஸ்டே பண்ணி ஒர்க் பண்ணிருப்பேன். ஆனா ஐ.டி கார்டை உடனே பிடுங்கி வெளியே அனுப்பிட்டானுக. மனுசத் தன்மைன்னு ஒண்ணு இவனுகளுக்கு கிடையாது பாஸ்.”

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு

சி.ஆர்.ஐ – பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை

0

கோவைத் தொழிலாளர்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்களின் போராட்டமானது 60 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. பெஸ்ட் பம்ப்ஸ் தொழிலாளர்கள் போராட்டமும் 50 நாட்களைக் கடந்து விட்டது. ஆனால் இந்த அரசும் அதிகாரிகளும் எந்த முடிவும் எடுக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதையொட்டி சீரழிந்து தோற்றுப் போயுள்ள இந்த அரசக் கட்டமைப்பை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தப் போராட்டத்தை இன்னும் பெருவாரியான மக்களிடத்து எடுத்துச் செல்லும் பொருட்டும் 25-05-2015 திங்கள் குறை தீர்ப்பு நாளன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஏற்கெனவே ஒரு முறை மனு கொடுத்து அதற்கு உரிய நடவடிக்கை இல்லையென்பதால் அதன் இணைப்பு மனுவாக இன்னொரு மனுவும் கொடுத்து காத்திருந்தனர் தொழிலாளிகள். அழைப்பு வந்ததும் சி‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் ஆகிய நிறுவனத் தொழிலாளிகள் ஆட்சியர் அறைக்கு சென்றனர். தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் நியாயமான உணர்வுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினார், ஆட்சியர்.

அதே சமயம், வெளியே சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் 98 பேரும் பெஸ்ட் பம்ப்ஸ் தொழிலாளர்கள் 46 பேரும் தமது குடும்பத்துடன் சுமார் 250 பேர் அந்த ஆட்சியர் அலுவலகத்தை நிரப்பியிருந்தனர். வர்க்கச் சீருடையான சிவப்புச் சட்டைகளுடன் தோழர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறு ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பை அலங்கரித்தனர்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
வர்க்கச் சீருடையான சிவப்புச் சட்டைகளுடன் தோழர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறு ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பை அலங்கரித்தனர்.

முழக்கங்கள் பொறித்த மேலங்கிகளுடன் தொழிலாளிகளும் அவரவர் தம் குழந்தைகளும் பெண்களும் அலுவலகத்தின் அனைத்து திசைகளிலும் அடையாளங்களாய் நின்று கொண்டிருந்தனர்.

தகித்து கொண்டிருந்த அக்கினி நட்சத்திரத்தை மீறும் தகத்தகாய சூரியன்களாய் கீழே அமர்ந்து தார் சாலையை தலைகள் மட்டும் தெரியும் படி நிறைத்திருந்தனர்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
வர்க்கக் கோபம் தெறிக்கும் தொழிலாளிகளின் முழக்கம்

ஆட்சியர் பேச்சு வார்த்தையின் முடிவில், “வரும் புதனன்று தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும்” என அறிவித்தார். எந்த தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவித்தாரோ அதே தாசில் தார் தான் சி‌.ஆர்‌.ஐ கதவடைப்பு நிகழ்ந்த மறு நாள் வந்து, “இது சட்டவிரோத கதவடைப்பு உடனடியாக திறக்க வேண்டும்” என அறிவித்தார். இப்படியான இந்த சட்டத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளின் ஆணைகளை மயிருக்கு சமானமாக பார்க்கும் சி‌.ஆர்‌.ஐ முதலாளியுடன் பேச்சுவார்த்தையாம். அவர் பேச்சுவார்த்தைக்கு வராததால் தான் இவ்வளவு போராட்டமும் என்பது அறியாதவரல்ல கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா.

துரோகி சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முதலாளி சௌந்திரராஜன் நோட்டீஸ்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது சி‌.ஆர்‌.ஐ செயலாளரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்டத் தலைவருமான தோழர் குமாரவேல், “நாங்கள் ஏற்கெனவே பல முறை பல இடங்களில் மனு கொடுத்தாயிற்று. கம்பெனியின் வாசலில் 60 நாட்களாய் கிடக்கிறோம். இத்தனை நாட்களாக கதவடைப்பு என்பதை ஒத்துக் கொண்ட சௌந்திர ராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் எனும் புதுக் கதையை கட்டுகிறார். இந்த சட்டத்தின் முன்பு எங்கள் போராட்டங்கள் எல்லைகளை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மனு கொடுப்பது இது தான் இறுதி முறை இந்தப் போராட்டத்தை நாங்கள் மக்கள் முன் எடுத்துச் செல்லப் போகிறோம்.

ஆயிரம் பவுனும் கணக்கிலடங்கா சீர்வரிசைகளுடன் கூடிய டாம்பீகத் திருமணத்தின் அழைப்பிதழ் ஆடம்பரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்த மாதம் 8-ம் தேதி சௌந்திர ராஜன் தனது மகளுக்கு திருமணம் நடத்தப் போகிறார். அது சாதாரணத் திருமணம் அல்ல. ஆயிரம் பவுனும் கணக்கிலடங்கா சீர்வரிசைகளுடன் கூடிய டாம்பீகத் திருமணம். இதே கோவையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தேய்ந்து போன டயருடன் பஞ்சர் கடைக்கும் வீட்டிற்கும் தனது இத்துப் போன ஸ்கூட்டரில் அலைந்து கொண்டிருந்த சௌந்திர ராஜன் இன்று இந்த நிலைமைக்கு உயர்த்திய தொழிலாளர்களை வெளியே தள்ளிய சௌந்திர ராஜனது வீட்டு திருமணத்திற்கு சென்று போராடுவோம்” என எச்சரித்து கனல் மூட்டினார்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்அழுகைகளையும் ஆறுதல்களையுமே அதிகம் பார்த்திருந்த அந்த ஆட்சியர் அலுவலகத்தின் குறை தீர்ப்பு நாள், முதல் முறையாக வர்க்கக் கோபம் தெறிக்கும் தொழிலாளிகளின் முழக்கத்தினால் சற்று பூரித்துத் தான் போயிருக்கும்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மருதமலை முருகைய்யா – மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

2

மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

(” மருதமலை மாமணியே முருகய்யா…” பாடல் மெட்டில் பாடி சுவைக்கவும் )

கோடி ருசிகளிலே கொடுக்கும் ருசி எந்த ருசி?
குமரி முதல் இமயம்வரை குவிந்த ருசி எந்த ருசி?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் ருசி எந்தருசி?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் அந்த ருசி!
அ ஆஆ… ஆஆஆ.. மாட்டுக்கறி மாட்டுக்கறி கோமாதா.

மாட்டுக்கறி
“உலகமெலாம் உணவாகும் மாடய்யா…”

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…

மணமிகு வெஞ்ஜனம் அழகிய பக்குவம்
மணமிகு வெஞ்ஜனம் அழகிய பக்குவம்
ஐயா உமது மருத்துவ குணம் தருமே…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…
தைப்பனி நன்நாளில் தள்ளு வண்டி யெங்கும்
பக்தர்கள் கொண்டாடும் மாடய்யா ஆ…
தைப் பனி நன்நாளில் தள்ளு வண்டி யெங்கும்
பக்தர்கள் கொண்டாடும் மாடய்யா ஆ…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…

மாட்டுக்கறி
“உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா”

கோடிகள் குவிந்தாலும் கோமாதாவை மறவேன்
ஆ… ஆஆஆ …. ஆ.. ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமாதாவை மறவேன்
நாடியென் பலம் கூட நான் வருவேன்
நாடியென் பலம் கூட நான் வருவேன்…

அஞ்சுதல் நிலை மாறி அவரவர் விருப்பாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டிடுவேன் ஆ…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…
சக்தித் திருமகன் கொத்துக்கறிதனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென சக்திப்பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் கொத்துக்கறிதனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென சக்திப்பெருகிட வருவேன் நான் வருவேன்

மாட்டுக்கறி
“காண்பதெல்லாம் உனது பலம் அது நூறுபலம்”

பரமனின் வாகனனே அழகிய தமிழ்முகனே
காண்பதெல்லாம் உனது பலம் அது நூறுபலம்
காலமெல்லாம் எனது பலம் பெருகுது விடையா
காண்பதெல்லாம் உனதுபலம் அது நூறு பலம்
காலமெல்லாம் எனது பலம் பெருகுது விடையா…

அதிபதியே பலபொருளே இன்சுலினே மருத்துவனே
அதிபதியே பலபொருளே இன்சுலினே மருத்துவனே

பாலது நெய்யது பையது பெல்ட்டது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பாலது நெய்யது பையது பெல்ட்டது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் சுகமே மாடய்யா
ஆ ஆ… ஆஆ… ஆஆ..
யாவர் வணங்கும் மாட்டுக்கறி ஐயா!
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா…

மறுஆக்கம் : துரை. சண்முகம்

( யக்ஞ்யவல்யரின் பார்முலா படி இளங்கன்று குட்டிகளை ஏப்பம்விட்டு காலக்கொடுமையால் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும் ‘பிதுர்க்களின்’ கோடான கோடி ஆவிகளுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்!)

யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

0
https://www.vinavu.com/wp-content/uploads/2014/11/fascist-jaya-wedding.jpg

( ஜெயா – சசி கும்பலின் வெளிப்படையான கொள்ளையை ஏன் தண்டிக்க முடியவில்லை? தண்டிக்க வேண்டிய நீதித்துறைதான் இக்கும்பலை தப்புவிக்க எல்லா வகைகளிலும் உதவுகிறது. 96-ம் ஆண்டிலிருந்தே இதுதான் வரலாறு! 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய ஜனநாயகத்தில் வெளியான தலையங்கம்)

ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு ஆறு மாதங்களாகி விட்டன. லஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளால் தமிழ் நாட்டையே சூறையாடி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அந்தக் கும்பலை சிறையிலடைத்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தைத்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து வந்த மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும் பிரதிபலித்து உள்ளன. இப்படிச் சொல்லித்தான் கருணாநிதி, மூப்பனார், சிதம்பரம் வகையறாக்கள் ஆட்சியுரிமை கோரிப் பெற்றார்கள்.

ஜெயா - சசி
“லஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளால் தமிழ் நாட்டையே சூறையாடி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அந்தக் கும்பலை சிறையிலடைத்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்”

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள், மக்களின் அந்த ஆணையை நிறைவேற்றுவதில் எந்த அளவு அக்கறையும், முனைப்பும் காட்டியுள்ளார்கள் என்பதைப் பரிசீலிப்பதற்கு கடந்த ஆறு மாத கால அவகாசமே போதுமானது. ஜெ.ஜெ. டி.வி ஒப்பந்தம், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்தது, வெளிநாட்டில் வாழும் இந்தியர் பெயரால் ஹவாலா பணம் கடத்தி வந்து உள்நாட்டில் சொத்துக்கள் வாங்கியது ஆகிய அந்நிய செலாவணி மோசடி வழக்குகளுக்காக சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன், பாஸ்கரன் மூவரும் ”காபிபோசா” சட்டத்தின்கீழ் மத்திய அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஜெயாவும், சசியும் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தலா 3 லட்சம் டாலர்கள் வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பு வாங்கிய வழக்கில், ஆரம்ப கால தயக்கத்துக்கு பிறகு சி.பி.ஐ விசாரணையைத் துவக்கி உள்ளது.

ஜெயா — சசி கும்பலின் ஊழல் முறைகேடுகளை விசாரித்து, நேரடியாகவே வழக்குகள் தொடுப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. அது இந்திரகுமாரி, செல்வகணபதி, செங்கோட்டையன், மதுசூதனன், கு.ப. கிருஷ்ணன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கைது செய்து வழக்கும் போட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், ஓரிரு எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வீடுகள் சோதனையிடப்பட்டு சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஜெயாவும் அவரது அரசியல் குரு சோவும் வாதிடுவதைப் போல, ஜெயாவுக்குத் தெரியாமல் யாரோ சேர்த்த சொத்துக்கள் அல்ல. எல்லாம் ஜெயா – சசியின் பங்காளிகள், பினாமிகளுடையவை தான். விசாரணை – கைதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், சாட்சிகள், தடயங்களை அழிப்பதற்காகவும் ஜெயாவின் முன்னாள் வளர்ப்புப் பிராணி சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜன் போன்ற நெருங்கிய உறவினர்கள் அலைந்து திரிகின்றனர்.

எனினும் ஜெயா – சசி கும்பல் மீதான விசாரணைகளும், வழக்குகளும் நடக்கும் விதத்தையும் வேகத்தையும், சட்டத்திலும் நீதித்துறையிலும் உள்ள ஓட்டையையும் சிக்கலையும் பார்க்கும்போது, ஜெயா – சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் தண்டனைக்குள்ளாகும் என்று நம்புவதற்கான வாய்ப்பில்லை. முதலாவதாக, ஜெயா – சசி கும்பலுக்கு எதிரான நடவடிக்கையை முனைப்போடு நடத்துவதற்கான தார்மீக பலமும் உரிமையும் மத்திய, மாநில ஆட்சியாளர்களிடம் கிடையாது. குறிப்பாக லஞ்ச – ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்டும், வெளியிலிருந்து அத்தகைய நபர்களின் ஆதரவாலும் தான் மத்திய ஆட்சி நடக்கிறது. அதன் கீழ் நீதித்துறையும், சி.பி.ஐ.-ம் வழக்குகளை விசாரித்து வரும் யோக்கியதை கண்டு நாடே சிரிக்கிறது.

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு
படம் : ஓவியர் முகிலன்

இரண்டாவதாக, யாரையும் விலை கொடுத்து வாங்கும் பணபலமிக்க ஜெயா – சசி கும்பலுக்கு ஐக்கிய முன்னணி, காங்கிரசு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று தரப்பிடமும், விஜய் மல்லையா, உடையார், அய்யங்கார், செட்டியார் குடும்பங்கள் போன்ற தரகு முதலாளிகளிடமும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் முதல் மத்திய உளவுத்துறை, வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு வரையும், நீதித்துறையிலும் கூட செல்வாக்கு உள்ளது. மூன்றாவதாக, சட்டத்திலும் நீதித்துறையிலும் உள்ள ஓட்டைகள், சிக்கல்கள், முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் பிரபல வழக்கறிஞர்களை வைத்து வழக்குகளை இழுத்தடித்து முடக்கி விடுவதில் ஜெயா – சசி கும்பல் வெற்றி பெற்று வருகிறது. நான்காவதாக, ஏற்கெனவே ஆதிக்கம் வகித்து வந்த கவர்ச்சிவாத, பிழைப்புவாத, பொறுக்கி அரசியல், ஜெயா – சசி குடும்ப ஆட்சிக் காலத்தில் முழுவதும் கிரிமினல் மயமாகி விட்டது. மாநகரில் இருந்து கிராம மட்டம் வரை பரவி விரவியுள்ள கிரிமினல் வலைப் பின்னலின் ஆதரவு ஜெயா – சசி குடும்பத்திற்கு இருக்கிறது.

வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் சதிகாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சதி விவரங்கள் அனைத்தும் கிட்டியபோதும் சாட்சியங்களைக் கலைத்து, பகைமையாக மாற்றுவதிலும், குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதிலும் கிரிமினல் கும்பல் வெற்றி பெற்று விட்டது. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கிலும், சந்திரலேகா மீது திராவகம் வீசிய வழக்கிலும் கூட இதே மாதிரி நிலைமை தான் நீடிக்கிறது. சசிகலா – நடராஜன் குடும்பத்தினர் பதுக்கி வைத்திருந்த அரிசி, நெல் மூட்டைகளைக் கையும் களவுமாக கைப்பற்றிய வழக்கில் கூட, நீதிபதியை சரிக்கட்டி தப்பி விட்டனர். தற்பொழுது நடைபெற்று வரும் விசாரணை – சோதனைகள் பற்றி ஜெயா – சசி கும்பலுக்கு முன்கூட்டியே தகவல் தெரியும்படி செய்து, முக்கிய ஆவணங்களையும், பொன் – பொருட்களையும் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு போதிய அவகாசமளிக்கப்படுகிறது.

ஜெயா - சசி கும்பல்
ஜெயா – சசி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எல்லாம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கண்களை மறைக்கும் போது பிடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது

ஜெயா – சசி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எல்லாம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கண்களை மறைக்கும் போது பிடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. குறைவான மதிப்பைக் காட்டி சொத்துக்கள் வாங்கியது, ரிசர்வ் வங்கி அனுமதியின்றி அந்திய செலாவணி பரிமாற்றங்கள் செய்தது, பத்திரப் பதிவு முறைகேடுகள் போன்ற வழக்குகள் தாம் விசாரித்து நடத்தப்படுகின்றன. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச – ஊழல் வழக்குகள் நடக்கின்றன. ஆனால் பொதுச் சொத்தை சூறையாடிய கிரிமினல் குற்றத்துக்காக, நேரடியாக வழக்குத் தொடுத்து தண்டிப்பதற்கான முயற்சியும் இல்லை; சட்டத்தில் அதற்கான இடமுமில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்களை சட்டம், வழக்கு, விசாரணை என்கிற வழக்கமான வழிகளில் போய் தண்டிக்கும் முயற்சி என்பது பானைக்குள் யானையை அடக்க முயற்சிப்பது தான். இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல; இப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் மேல் மட்டத்திலுள்ள ஒரு சில நபர்கள் மீது தான். இந்த நச்சு மரம் அனைத்து மட்டங்களிலும் பல கிளைகளாகப் பிரிந்து, விழுது – வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. கருணாநிதி, மூப்பனார், சிதம்பரம் போன்ற ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தமது அரசியல் ஆதாயம் வேண்டி பிரச்சாரம் செய்வதற்கு மேல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள். ஓட்டுக் கட்சித் தலைவர்களுக்குள் இது ஒரு மரபு; எழுதப்படாத ஒப்பந்தமாகி விட்டது. உலகறிந்த, இவ்வளவு தூரம் அம்பலப்பட்டுப் போன குற்றவாளிகளைக் கூட தண்டிக்க முடியாத இந்தச் சட்டமும், நீதித் துறையும் இருந்து என்ன பயன்?..

.. மற்ற பிற கிரிமினல் குற்றவாளிகளுக்குத் தரப்படும் வாய்ப்புகள் அனைத்தையும் மறுத்து விட்டு, நேரடியாகவே சொத்துக்களைப் பறிமுதல் செய்து, கடுஞ்சிறைத் தண்டனைக்குள்ளாக்கும் வகையில் அரசியல் கிரிமினல் குற்றவாளிகளுக்கெதிரான மக்கள் இயக்கம் தேவை.
__________________________________________
தலையங்கம்,
புதிய ஜனநாயகம், நவம்பர் 01 – டிசம்பர் 15, 1996
___________________________________________

பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை

0

வாளேந்திக் களம் புகும் குதிரை வீரர்கள் எதிரிகளிடமிருந்து தாய் நாட்டைக் காக்க ஆவேசத்தோடு போரிடும் காட்சிகளை நாம் நாவல்களில் வாசித்திருப்போம். அதே போன்று மத்திய பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் மால்வியாவும் வாளேந்திக் குதிரையில் ஏறி வருகிறார். ஆனால் இது நாவல் இல்லை.

பவன் மால்வியா
கற்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பவன் ஹெல்மெட் அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்துள்ளார்.

இந்த குதிரை வீரர் சண்டை போடும் எதிரி சாதாரண நபர் அல்ல. பல நூற்றாண்டுகளாக இந்தியத் தீபகற்பத்தை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் சாதிய கட்டுமானம் தான் பவன் மால்வியா எதிர்க்கத் துணிந்த அந்த எதிரி.

இம்மாதத் துவக்கத்தில் பவன் மால்வியாவுக்குத் திருமணம். வடநாட்டு இந்துத் திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகன், மணமகள் வீட்டிற்கு வாளேந்திய வண்ணம் குதிரையில் வர வேண்டும். பவனும் அப்படி விரும்பியுள்ளார். ஆனால் திருமண ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட குதிரையை அதே கிராமத்தைச் சேர்ந்த சக “இந்துக்கள்” திருடிச் சென்று விட்டனர்.

தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்த பவன், காவல் துறையில் புகாரளித்து, போலீசு பாதுகாப்போடு இன்னொரு குதிரையில் ஊர்வலம் சென்றுள்ளார். அவ்வாறு பவன் குதிரையில் செல்லும் போது சக இந்துக்கள் அவர் மேல் கற்களை எரிந்து தாக்கியுள்ளனர். சக இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த 15 பெண்கள் திரண்டு ஊர்வலத்தில் வந்தவர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். கற்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பவன் ஹெல்மெட் அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்துள்ளார்.

(ஆஜ் தக் – தொலைக்காட்சி வீடியோ – இந்தியில்)

இவ்வளவும் காவலுக்கு இருந்த போலீசை சாட்சியாக வைத்து நடந்த சம்பவங்கள். திருமணம் முடிந்ததும் தங்கள் எதிர்ப்பை மீறி பவன் குதிரை ஊர்வலத்தில் வந்ததை தாங்கிக் கொள்ள முடியாத ‘சக இந்துக்கள்’ அக்கிராமத்தில் பவனின் உறவினர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணற்றில் விஷத்தைக் கலந்துள்ளனர். மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடித்தவர்கள் மயங்கிச் சரியவே, மீண்டும் பவனின் உறவினர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர். போலீசும் கண்துடைப்பிற்காக ஒரு சிலரை மாத்திரம் கைது செய்துள்ளது.

இவ்வளவும் நடக்க காரணம், பவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தான். சக இந்துக்கள் அனைவரும் ‘உயர்’ சாதியினர்.

ஒரே பரமாத்மாவிலிருந்து சிதறிய துளிகளான ஜீவாத்மாக்களிடையே வேறுபாடு எதையும் இந்து சனாதன தர்மம் பார்ப்பதில்லை என்று வாய்கிழிய பசப்பும் இந்துத்துவ கும்பல் எந்தளவுக்குப் பொய்யர்கள் என்பதற்கு இந்தக் குதிரை ஊர்வலம் ஒரு சாட்சி.

தலித்துகள் திருமணம் செய்து கொள்வதென்றால் மணமகனை கிராமத்துக்குள் கால் நடையாக நடத்தியே அழைத்து வர வேண்டும். ஒரு வேளை வசதி படைத்த தலித்தாக இருந்தால், காரில் வரலாம் – கார் பிரச்சினையில்லை, குதிரை தான் பிரச்சினை. ஏனெனில், வட மாநிலத் திருமணச் சடங்குகளில் மணமகன் குதிரையில் வருவது வெறும் சடங்கு மாத்திரமல்ல, அது ஆதிக்க சாதித் திமிரின் அடையாளம்.

ராமதாஸ்
தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போடுவது பா.ம.க சாதிவெறியர்களுக்கு பிடிக்காது.

நமது ஊரில் தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போடுவது பா.ம.க சாதிவெறியர்களுக்கு பிடிக்காது. ஆதிக்க சாதி வாழ்வில் இருக்கும் வசதிகள் மட்டுமல்ல, சடங்குகளும் கூட தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சொந்தமில்லை என்பதே பார்ப்பனியத்தின் புனிதம். இந்த புனிதம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது அங்கே மிகப்பெரும் கலவரம் நடக்கிறது.

மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் ராஜஸ்தான் மாநில தலித் உரிமைகளுக்கான மையத்தின் இயக்குனர் சதீஷ் குமார். பதிவு செய்யப்பட்ட புகார்களே 15 என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு அஞ்சி பதியாமல் விடுபட்ட சம்பவங்கள் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

இச்சம்பவம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிடம் தனது கருத்தை தெரிவித்த தலித் செயல்பாட்டாளரான சந்திர பான் பிரசாத் (தலித் மில்லியனர்கள் நூலின் ஆசிரியர்), “பல தலித் குடும்பங்கள் தமது அத்தியாவசிய அடிப்படை தேவைகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டு விட்டதால், சுய மரியாதைக்கான போராட்டங்களை முன்னெடுத்திருப்பதையே இந்தச் சம்பவம் மெய்ப்பிக்கிறது. நாம் இப்போது சாதி அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். இது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின், கிராமப்புற விவசாயப் பொருளாதார கட்டுமானம் தளர்ந்து போயுள்ளது. கூட்டம் கூட்டமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து விழும் மக்களில் கணிசமானவர்களாக நிலமற்ற விவசாயக் கூலிகளான தலித்துகள் உள்ளனர். இது சாதிய மலைப்பாம்பின் இறுக்கத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்த்து போராடுவதற்கு தூண்டுகிறது.

சாதிய வன்கொடுமை
இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து நிற்பதோ, குரல் கொடுப்பதோ கிராமப்புறங்களைச் சேர்ந்த தலித் மக்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

ஆசிய பாணி சொத்துடைமை வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட, முற்றிலும் சுயசார்பான கிராம பொருளாதார உற்பத்தி முறையில் பன்னெடுங்காலமாக உறைந்து போயிருந்த இந்திய சமூகத்தில் கிழக்கிந்திய கம்பேனியின் வருகையும் அதைத் தொடர்ந்த வெள்ளைப் பேரரசின் ஆட்சியும் ஏற்படுத்திய சலனத்திற்குப் பின், புதிய பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் கவனத்திற்குரியது என்பதில் சந்தேகமில்லை.

முன்பு தங்களது வாழ்வுக்கும், பிழைப்புக்கும் உள்ளூர் ஆதிக்க சாதி ஆண்டைகளைச் சார்ந்திருந்த நிலமற்ற தலித் மக்கள், தற்போது அந்தப் பொருளாதாரச் சார்பு நிலையிலிருந்து ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து நிற்பதோ, குரல் கொடுப்பதோ கிராமப்புறங்களைச் சேர்ந்த தலித் மக்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

அப்படி ஆதிக்க சாதித் திமிரின் முன் மண்டியிட மறுப்பவரை ஊர்விலக்கம் செய்தால் அது ஏறக்குறைய பட்டினி போட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் தண்டனையாகவே இருக்கும். தற்போதோ நகரங்களில் கிடைக்கும் கூலி வேலைகள், ஒரு வேளை கஞ்சிக்காவது உத்திரவாதமளிக்கின்றன. இதுவே இத்தகைய தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களின் அடிப்படையாக இருக்கிறது.

அதே நேரம் இதன் வரம்பைத் தாண்டி போராட்டங்கள் வளர்வதில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள்
கூலிகளாக வந்து விழும் இம்மக்கள் புதிய சூழ்நிலையில் கிள்ளுக்கீரைகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு தலித் தனது திருமண ஊர்வலத்திற்கு விரும்பியபடி குதிரையில் வர ’சுதந்திரம்’ கிடைத்த பின்னும் அறுபது ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள பொருளாதார மாற்றங்கள் தலித்துகளுக்கு புதிதாக எதையும் வழங்கி விடவில்லை.

கிராமங்களில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் கூலிகளாக வந்து விழும் இம்மக்கள் புதிய சூழ்நிலையில் கிள்ளுக்கீரைகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். நகர்ப்புற சேரிகளிலோ நடைபாதைகளிலோ ஒண்டிக் கொள்ளும் இவர்களின் உழைப்பை மொத்தமாகச் சுரண்டிக் கொள்ளும் நகரம், தேவையில்லாத போது இவர்களைத் தூக்கியெறியத் தயங்குவதில்லை.

தர்மபுரி நத்தம் காலனியில் இருந்து கூலிகளாக பெங்களூருவுக்குச் சென்று சம்பாதித்த பணத்தில், அவர்கள் பெங்களூருவில் வீடுகள் கட்டுவதில்லை – தங்கள் சொந்த கிராமத்திலேயே கட்டுகிறார்கள். பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் மக்களின் இடப்பெயர்வு உண்மையில் மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கைகளாக இல்லை.

அந்த மக்கள் இன்னமும் தமது வேர்களைத் தங்கள் சொந்த கிராமத்திலேயே விட்டு வைத்துள்ளனர். நகரம் என்பது அவர்களைப் பொருத்தவரை கால் வயிற்றுக் கஞ்சிக்கு மட்டுமே – அதுவும் தற்காலிகமாக – வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அமைப்பு சாராத் துறைகளில், நிரந்தரமற்ற வேலைகளில் (வாட்சுமேன்களாக, சுகாதாரப் பணியாளர்களாக, ஓட்டுனர்களாக, கட்டுமானத் துறை கூலிகளாக) உதிரிப் பாட்டாளிகளாக இம்மக்களின் உழைப்பை சுரண்டிக் கொள்ளும் நகரம், பின்னர் இவர்களைத் தூக்கி வெளியே எரிகிறது.

சாதிய ஒடுக்குமுறை
தனது கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கோ, தனது பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை.

இடப்பெயர்வு என்பது பொதுவில் வலி மிக்கதென்றாலும் குறிப்பாக தலித்துகளைப் பொருத்தவரை அது பெரும் துன்ப துயரத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. நாட்டுப்புறத்தில் சாதிப்படிநிலையில் மேலான நிலையில் உள்ள ஒருவர் நகரத்திற்கு கூலியாக வந்தாலும், தனது அடுத்த தலைமுறையை நகரமயத்திற்கு ஏதுவானவர்களாக தயாரிப்பதற்கு சொந்த ஊரில் இயல்பான ஒரு அடிப்படை உள்ளது. ஆதிக்க சாதியிலிருந்து நகரங்களுக்கு வரும் சிறு விவசாயிகள் அரசு, அரசியல் மட்டங்களில் சொந்த சாதித் தொடர்புகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் என்பதைத் தவிர சமூக ரீதியிலான தீண்டாமையை அவர்கள் சந்திப்பதில்லை.

தலித்துகளைப் பொறுத்தவரை அவர்கள் இவ்விரண்டு உலகங்களிலும் வேண்டாதவர்களாகவே நீடிக்க வேண்டியுள்ளது. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறைக்குத் தப்பி, எரியும் அடுப்பில் விழும் நிலை. இரண்டு உலகத்தின் வளங்களின் மேலும் அவர்களுக்கு உரிமை கிடையாது.

அடுத்து, நகரமயத்திற்குப் பின் பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மை முந்தைய காலங்களைப் போல் கச்சாவாக இல்லாமல், மேலும் நுணுக்கமான தளங்களுக்குச் சென்றுள்ளது.

எப்படியோ முட்டி மோதி, தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளையை படிக்க வைக்கும் பாக்கியம் ஆயிரத்தில் ஒரு தலித்துக்கு வாய்க்கலாம். நகரத்தில் வேலைக்கு வருபவர், தனது சாதி அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. தனது கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கோ, தனது பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை. ஏன், ஒரு தனியார் நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் நிம்மதியாக உட்கார்ந்து மாட்டுக்கறி பிரியாணியையோ நல்ல கருவாட்டையோ கூட தின்ன முடியாது. ஒன்றரையணா கருவாடு தனது அருமையான மணத்தோடு சேர்த்து ஆயிரம் குத்தல் பார்வைகளையும், ஒதுக்குதல்களையும் கூட்டி வந்து தலையில் சுமத்தி விடும்.

ஐ.டி நிறுவன சாதி
‘இவன் வேறு – நாம் வேறு’ என்பது போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கியுள்ளனர்.

பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞன், பிறப்பால் தலித். அவனது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நீண்ட முயற்சிகளுக்குப் பின் அவனது சாதி இன்னதென்று கண்டுபிடித்து விட்டார்கள். அதன் பின் அவர்களின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிடும் போது, இவனது டப்பாவில் உரிமையோடு  கையை விட்டு சாப்பாட்டை எடுப்பது, இவனை அவ்வாறு எடுக்க அனுமதிப்பது என்று இருந்தவர்கள் மாறியுள்ளனர்.

குழு விவாதங்களில், முரண்பாடான சிக்கலான நிலைமைகளில், இவன் ஏதாவது ஒரு தீர்வைச் சொன்னால் அதை அந்தத் தளத்தில் வைத்து எதிர்கொள்ளாமல் ஏளனமாக பார்ப்பது, எல்லோரும் கூடி இருக்கும் போது சம்பந்தமில்லாமல் கிராமத்தில் உனது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்து, இவன் சொல்லத் தயங்குவதைப் பார்த்து இரசிப்பது என்று கண்ணுக்குத் தெரியாத ஒதுக்குதல்கள் ஆரம்பித்தன. மெல்ல மெல்ல தனிமைப்பட்டு குறுகிப் போயிருக்கிறான். வேலை செய்பவர்கள் உணவகத்தில் ஓய்வாகக் கூடி வேடிக்கையாக பேசும் போது கூட, “ஏன் மச்சி.. உங்காளுங்க ஈசல் பூனையெல்லாம் திம்பாங்களாமே.. நீ சாப்ட்ருக்கியாடா?” என்பது போல் விளையாட்டாக கலாய்ப்பதைப் போல் கேட்டு ‘இவன் வேறு – நாம் வேறு’ என்பது போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கியுள்ளனர்.

ஒன்று, பார்ப்பனப் பொதுக் கலாச்சாரத்தைப் போலியாக பின்பற்றி முடிந்தவரை நதிமூலம் ரிஷிமூலத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் – அல்லது, கூட்டத்தின் மத்தியில் கோமாளியாக நின்று, மிக நுட்பமான ஒதுக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தன்மானத்தின் மீது சாணி கரைத்து ஊற்றுவதைப் போன்ற இந்த நுண்மையான ஒதுக்குதல்கள் சாதி வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளுக்குள் அடக்க முடியாதவை. கிராமத்து ஆண்டைகள் செய்யும் ஒடுக்குமுறை அப்பட்டமாக இருப்பதால் அவை வழக்கு போடுவதற்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளன – நகரத்து ஆண்டைகளின் ஒதுக்குதல்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தியச் சட்டங்கள் இன்னும் ஜனநாயகமயமாக இல்லை.

பெரியார்
தென்னிந்தியாவைப் போலன்றி வட இந்தியாவில் சாதி ஆதிக்கம் – தீண்டாமையை எதிர்த்த போராட்டங்கள் – தலைவர்கள் குறைவு

என்றாலும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே அலைக்கழிக்கப்படும் இந்த நிலை தலித் மக்களுக்கு இன்னொரு உலகத்தையும், கொஞ்சம் சுயமரியாதையான ஜனநாயகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையிலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக கலகக்குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

தென்னிந்தியாவைப் போலன்றி வட இந்தியாவில் சாதி ஆதிக்கம் – தீண்டாமையை எதிர்த்த போராட்டங்கள் – தலைவர்கள் குறைவு. இதுவே இந்துமதவெறியரின் பலமும் கூட. இந்தியாவின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் இந்த வட இந்திய மாநிலங்கள்தான் கோட்டையாகத் திகழ்கின்றன.

அந்த வகையில் பவன் மால்வியாவின் குதிரை ஊர்வலம், நாம் படித்த நாவல்கள், கௌபாய் படங்களை விட முக்கியமானது.

–    தமிழரசன்

ஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்

0

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக, “ஊழல் செய்த ஜெயா பதவி ஏற்பது தமிழகத்திற்கு அவமானம்” என்றும், “நீதிமன்றம் பணத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் கைப்பாவை” என்றும் முழக்கங்களின் அடிப்படையில் 22.05.2015 அன்று தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெயா பதவி ஏற்பு -கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயா முதல்வர் பதவி ஏற்பதைக் கண்டித்து 22-ம்தேதி காலை திருச்சி நகர் முழுவதும் மற்றும் பேருந்துகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன

23.05.2015 அன்று ஊழல் ராணி ஜெயா முதல்வர் பதவி ஏற்பதைக் கண்டித்து 22-ம்தேதி காலை திருச்சி நகர் முழுவதும் மற்றும் பேருந்துகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. நகர் முழுவதும்  சுவரொட்டியை பார்த்து போலீஸ் பரபரப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தது.

மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு காலை 10.30 மணியளவில் பறை முழக்கத்துடன் தோழர்கள் கூடி போர்க்குணத்துடன் முழக்கமிட்டனர்.

தோழர்கள் கொடி, பேனருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உடன், காவல் துறை ஆய்வாளர் உமா சங்கர் கோபத்துடன் ஓடி வந்து தோழர்களை தடுத்து பார்த்தும் முடியாததால் ஒரு தோழரை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார். தோழர்கள் கோபத்துடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் ஆய்வாளர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸ் வேன் ஒன்று மட்டும் இருந்தது அதில் தோழர்களை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள்.

போலீஸ் வேன் ஒன்று மட்டும் இருந்தது அதில் தோழர்களை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள் காவல்துறையினர். பெண் தோழர்கள் வைத்திருந்த ஆர்ப்பாட்ட பேனரை பிடுங்க நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேனரை பெண் தோழர்கள் விடுவதாக இல்லை; பெண் காவலர்கள் திகைத்தனர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
காவலர்கள் தோழர்களின் போர்குணத்தை கண்டு திகைத்தனர்

மீதம் உள்ளவர்களை ஏற்ற வேன் இல்லாததால் அவ்வழியே வந்த ஒரு அரசு பேருந்தை நிறுத்த முயற்சித்தார் ஆய்வாளர். அது நிற்காமல் சென்றதால் பேருந்து ஓட்டுநரை ஒருமையில் திட்டி அப்பேருந்தை நிறுத்தி தோழர்களை அதில் ஏறச் சொன்னார்.

ஜெயா பதவியேற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
“இவ்வளவு கேவலமாக ஆய்வாளர் மிரட்டுகிறார். உனக்கு கோபம் வரவில்லையா? ஏன் இந்த பொழப்பு?”

ஒரு தோழர் பேருந்தின் உள்ளே சென்று ஓட்டுனரிடம், “இவ்வளவு கேவலமாக ஆய்வாளர் மிரட்டுகிறார். உனக்கு கோபம் வரவில்லையா? ஏன் இந்த பொழப்பு? எங்களை காவல்துறை வேனில் தான் ஏற்ற வேண்டும். இதில் நாங்கள் ஏற மாட்டோம். அதனால் நீங்கள் கிளம்புங்கள்” என்று ஓட்டுநருக்கு ஆதரவாக பேச அவரும் அதை ஏற்றுக் கொண்டு காவல்துறையை மதிக்காமல் சென்று விட்டார்.

“அடுத்த வேன் வரும் வரை நாங்களும் போக மாட்டோம்” என முன்பு வேனில் ஏற்றப்பட்ட தோழர்களும் கீழே இறங்கி முழக்கமிட்டனர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
பெண் தோழர்கள் வைத்திருந்த ஆர்ப்பாட்ட பேனரை பிடுங்க நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் குவிந்தன.

அவர்களுக்கு மாவட்டச் செயலர் தோழர் ஜீவா அளித்த பேட்டியில், “ஜெயா பதவி ஏற்பு மற்றும் இந்தத் தீர்ப்பு அவமானம். ஏழை மக்கள் ஒரு தவறு செய்தால் காவல்துறை துவைத்து எடுக்கிறது. நீதிமன்ற நீதிபதியோ குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி தானா இல்லையா என முகத்தைக் கூட பார்க்காமல் 15 நாள் ரிமாண்டு என்று பேசுவார். ஆனால் ஜெயா-சசி கும்பல் சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகாலம் கழித்து இந்த நீதிமன்றத்தையே விலைக்கு வாங்கி உள்ளது உலகத்துக்கே தெரியும். நான் எது வேண்டுமானாலும் செய்வேன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று திமிராக நடந்து கொள்கிறார். நாளை முதல்வர் பதவி வேறு ஏற்கப் போகிறார், இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்” என்று கூறினார்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
“நான் எது வேண்டுமானாலும் செய்வேன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று திமிராக நடந்து கொள்கிறார். நாளை முதல்வர் பதவி வேறு ஏற்கப் போகிறார், இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்”

அடுத்த வேன் வந்து சேரவே காவல்துறையினர் தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். கைதான தோழர்கள் உற்சாகத்துடன் ஜெயாவின் பார்ப்பன பாசிச ஆட்சியைக் கண்டிக்கும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடியும், நீதிமன்ற கேலிக்கூத்துகளை விரிவாக விளக்கியும் கூட்டம் நடத்தியதை காவல்துறையினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்; அன்று மாலை அனைவரையும் விடுவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பாசிச ஜெயாவின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி கட்சியும் வாய் திறக்கக்கூட அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில் புரட்சிகர அமைப்புகளின் இப்போர்க்குணமிக்க போராட்டம் மக்களிடம் மட்டுமல்ல அரசியல் கட்சியினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

  • அரை பவுன் அறுத்தவனுக்கு!
    ஆறு மாசம் ஜெயிலு!
  • அறுபத்தி ஆறு கோடி!
    ஆட்டைய போட்ட அம்மாவுக்கு!
    விடுதலை விடுதலை!
  • ஊரரிந்த திருட்டு!
    உலக மகா திருட்டு!
    இல்லையின்னு சத்தியம் செய்யுறாரு!
    உத்தமரு குமாரசாமி!
  • சொத்து குவிப்பு வழக்கிலே!
    அஞ்சும் மூணும் இரண்டு தான்!
    தீர்ப்பு சொன்னது நீதிபதியா?
    பதினெட்டு பட்டி நாட்டாமையா?
  • சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில்!
    கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை!
    முறியடிப்போம்! முறியடிப்போம்!

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்

  • பணத்துக்கும் பார்ப்பானுக்கும்!
    கைப்பாவையாய் நீதிமன்றம்!
    ஜெயலலிதா சசிகலா!
    மன்னார்குடி கும்பலை!
    கொட்டம் அடக்க வாருங்க!
    நக்சல் பாரியா சேருங்க!
  • நீதி வழங்கும் அருகதையற்ற!
    நீதி மன்றத்தை நம்பாதே!
    கஞ்சா கடத்தும் ராணுவம்!
    காப்பியடிக்கும் ஐ.ஜி!
    வழிப்பறி செய்யும் போலீசு!
    நாட்டையே விற்குது ஓட்டுகட்சிகள்!
    அரசு கட்டமைப்பே அழுகி நாறுது!
    அடித்து நொறுக்க அணிதிரள்வோம்!
  • மக்கள் சொத்தை கொள்ளையடித்த!
    பாசிச ஜெயாவின் சொத்துக்களை!
    பறிமுதல் செய்வோம் பறிமுதல் செய்வோம்!
    ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
  • நம்பாதீங்க நம்பாதீங்க!
    நீதிமன்றம் போலீசு!
    சட்டமன்றம் பாராளூமன்றம்!
    ஓட்டுக்கட்சிகளை நம்பாதீங்க!
  • பெரியார் பிறந்த மண்ணிலே!
    பார்ப்பனியம் கொட்டமடிக்க!
    அனுமதியோம் அனுமதியோம்!
  • ஆளும் அருகதையற்ற!
    அரசுக் கட்டமைப்பை!
    வீழ்த்திடுவோம் வீழ்த்திடுவோம்!
  • போடாதீங்க போடாதீங்க!
    ஓட்டு எவனுக்கும் போடாதீங்க!
    தேர்தல் பாதை திருடர் பாதை!
    நக்சல் பாரியே புரட்சி பாதை!
  • நக்சல் பாரி பாதையிலே!
    மக்கள் அதிகாரத்தை படைத்திடுவோம்!
    நாட்டை மீட்க அணிதிரள்வோம்!

பத்திரிகை செய்திகள்

[செய்திகளைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை
.

ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்

8

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா 2001-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றதை ஒட்டி புதிய ஜனநாயகத்தில் வெளியான தலையங்கக் கட்டுரை, 2015-க்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இது போலி ஜனநாயகம் என்பதை புரிய வைக்க பல்வேறு பிரச்சினைகள் உதவயிருந்தாலும், புரட்டுத் தலைவி போல இதை அம்மணமாக்கியது வேறு யாருமில்லை.  எனினும் இது ஏதோ ஜெயா-சசி கும்பலின் தனிப்பட்ட ‘சாதனை’ அல்ல. இந்த அமைப்பு முறையே இப்படித்தான் இயங்குகிறது.

– வினவு

தமிழகத் தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு : அம்பலமானது அரசியல் சட்ட போலித்தனம்

ஜெயா - நாற்காலி
தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராகியிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவி ஜெயலலிதாவை ஒரே ஒரு காரணத்திற்காக நாம் பாராட்டி வந்திருக்கிறோம்.

ற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராகியிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவி ஜெயலலிதாவை ஒரே ஒரு காரணத்திற்காக நாம் பாராட்டி வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இரண்டு ஊழல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை நிரபராதி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுவித்ததைத் தொடர்ந்து இதையே எழுதியிருந்தோம். இப்போதும் சொல்லுகிறோம்.

இந்த நாட்டின் சட்டங்கள் – நீதிமன்றங்கள் போன்றவற்றின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மேன்மை, பத்திரிகை – செய்தி ஊடகத்தின் நடுநிலைமை, நிர்வாக அதிகார வர்க்கத்தின் நேர்மை ஆகிய எல்லாம் போலியானவை என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், ஜெயலலிதா. இதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

நாட்டிலேயே மிக அதிகம் ஊதியம் பெறும் திறமை வாய்ந்த சட்ட நிபுணர்களையும் உயர்நீதிமன்ற – உச்சநீதிமன்ற நீதியரசர்களையும் கூட விலைக்கு வாங்கவும் நீதியின் செங்கோலை வளைக்கவும் முடியும் என்று செய்து காட்டினார். மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜேத்மலானியை புதுக்கோட்டை குற்றவியல் வழக்குமன்றம் வரை கொண்டு வந்து வேலை வாங்கினான் போலி சாமியார் பிரேமானந்தா. அவனையும் விஞ்சும் வகையில் மாநில முதலமைச்சாரகவும் மத்திய சட்ட அமைச்சராகவும், அமெரிக்காவில் இந்தியத் தூதராகவும் பதவி வகித்த சித்தார்த்த சங்கர் ரேயை தமிழ்நாட்டில் ஒரு கோட்டாட்சியர் முன்பாக வாதிடும்படி வைத்து விட்டார் ஜெயலலிதா.

வழக்குகளை முடக்கி வைப்பது, இடைக்காலத் தடைகள் போடுவது, ஒரு தரப்பாகவும், சட்டவிரோதமாகவும் தீர்ப்புகள் வழங்குவது ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் விலைக்கு வாங்கினார். முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என். சேசன் முதல் மலைச்சாமி, தேவாரம் ஆகிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட இப்போது பதவியில் இருக்கும் அதிகாரிகளையும் தனது விசுவாச சேவகர்கள் ஆக்கிக் காட்டினார், ஜெயலலிதா. முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கிடராமன், முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயணன் சிங் முதல் இன்னாள் அரசுத் தலைவர்களையும் தனது சேவையில் வைத்துக் கொண்டார்.

சித்தார்த்த சங்கர் ரே
அரை பாசிச ஆட்சி நடத்தித் தமது கட்சியினரைக் கொன்று குவித்தவர் என்று போலி கம்யூனிஸ்டுகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர் சித்தார்த்த சங்கர் ரேதான் ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர்.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, காந்தியம், பாரதீயம், திராவிடம், தமிழினம், தலித்தியம், மார்க்சியம் ஆகிய எல்லா பேச்சுக்களுமே வெறும் சவடால்கள்; எந்த ஓட்டுக் கட்சியையுமே விலைக்கு வாங்கி விட முடியும் என்று காட்டி விட்டார். ஜெயலலிதா சில கோடி ரூபாய்களுக்கும், சில தொகுதிகளுக்கும் வேண்டி எத்தகைய அவமானத்தையும் தாங்கிக் கொள்ளும் முதுகெலும்பு இல்லாத கும்பல்கள்தாம் எல்லா ஓட்டுக் கட்சிகளும் என்பதையும் நிரூபித்து விட்டார். ஜெயலலிதாவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கருணாநிதியோ, வைகோவோ, தனது கொள்கை, இலட்சியங்களை வீசியெறிந்து விட்டு அவற்றுக்கு நேரெதிரான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு விசுவாசிகளாக மாறியிருப்பதற்கும் ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறையும் ஒரு காரணம். தமிழக அரசியல் வாழ்வில் பாம்பும், கீரியுமாக கடித்துக் குதறிக் கொண்டிருந்த திராவிடர் கழக அய்யா வீரமணியையும், இந்து முன்னணியின் வீரத்துறவி ராமகோபாலனையும் ஒரே மேடையில், ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்தி ஒரே குரலில் பேச வைத்திருக்கிறாரே ஜெயலலிதா, அதை விடப் பெரிய சாதனை என்ன வேண்டும்?

ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஐந்தாண்டு கால ஆட்சியின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், உல்லாச – ஊதாரித்தனங்கள், கிரிமினல் – ரவுடித்தனங்களையும் படம் பிடித்துக் காட்டியே பரபரத்து வந்த பத்திரிகை – செய்தி ஊடகங்களை அப்படியே புரட்டிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் கிரிமினல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஆத்திரத்துக்கு இலக்கான அதே செய்தி ஊடகம், இப்போது அவரது அரசியல் நிர்வாகத் திறமையைப் பாராட்டும்படி செய்து விட்டார். சந்தர்ப்பவாதம் அரசியலில் மட்டுமல்ல, எங்கும் எதிலும் நிறைந்திருப்பதை மிகவும் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜெயலலிதாதான்.

***

சிலியின் பினோசெட், பனாமாவின் நோரிகா, உகாண்டாவின் இடி அமீன், இந்தோனேசியாவின் சுகார்த்தோ, யூகோஸ்லாவியாவின் மிலோசேவிச் போன்ற பதவியிழந்த பாசிச கிரிமினல் குற்றவாளிகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்பினால் நம்முடைய ஜெயலலிதாவிடம் வந்து பாடம் கற்க வேண்டும். அதுவும் இரத்தம் சிந்தி அதிரடி ஆட்சிக்கவிழ்ப்புகளில் ஈடுபடாமல் அமைதி வழியில், சட்டபூர்வமாகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை மூலமாகவே எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதை ஜெயலலிதா அவர்களுக்குத் தெளிவாகவே சொல்லிக் கொடுக்க முடியும்.

ஆனாலும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஜெயலலிதா, முன்னோடிகளே இல்லாத புதியதொரு பாத்திரம் அல்ல. அரசியல் கிரிமினல்மயமாவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எப்பொழுதோ தொடங்கி விட்டது. அதாவது, அரசியல்வாதிகள் கிரிமினல்களாக வளர்வதும், கிரிமினல்கள் அரசியல்வாதிகளாவது இவ்விரு வகையினருடன் அதிகாரிகள் கைகோர்த்துக் கொள்வதும் புதிதல்ல. இத்தகைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் ஒரு பரிணாமத் தோற்றந்தான் ஜெயலலிதா.

கிரிமினல் நாடாளுமன்றம்
1996 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட 13,592 பேர்களில் 1,500 பேர் கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டவர்கள்.

1996 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட 13,592 பேர்களில் 1,500 பேர் கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள். அவர்களில் 40 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி விட்டனர். உத்தரபிரதேசத்தின் தற்போதைய 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 166 பேர், 100 மந்திரிகளில் 19 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள குற்றவாளிகள். இவ்வாறு அரசியல் கிரிமினல்மயமாவதைக் கண்ட ஜனநாயகவாதிகள் பலரும் கூச்சல்போடவே, அது குறித்து விசாரிப்பதற்கு மத்திய போலீசுத் துறைச் செயலாளர் வோரா என்பவர் தலைமையில் கமிசன் போடப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், மத்தியிலும் மாநிலங்களிலும் அரசியல்வாதிகளில் – அதிகாரிகளில் குறிப்பாக போலீசு அதிகாரிகளில் எவ்வளவு பேர், யார் – யார் கிரிமினல் குற்றக் கும்பல்களோடு உறவு வைத்திருக்கின்றனர் என்ற விவரம் மூடி மறைக்கப்பட்டது.

வோரா கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சி சார்ந்த, கட்சி சாராத ஜனநாயகவாதிகள் எல்லோருமே அரசியல் கிரிமினல்மயமாவது குறித்து ரொம்பவும்தான் கவலைப்பட்டார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளைத் தவிர, எல்லா அரசியல் கட்சிகளுமே கிரிமினல் குற்றங்கள் புரிந்து தலைமறைவானவர்கள், பிணையில் உலாவுபவர்கள், சிறையில் உல்லாச ஓய்வு எடுப்பவர்கள் பலரையும் தேர்தல்களில் நிறுத்தி, அமைச்சர்களாகவும் வரச்செய்தனர். போலி கம்யூனிஸ்டுகள் தேர்தல் கூட்டணி வைத்து, இவர்களை ஆதரித்தனர். இத்தகைய கிரிமினல்கள் பெரும்பாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதி – மதக் கலவரங்களை நடத்தியவர்கள். இன்னும் பலர் ஆள் கடத்தல் பணயத்தொகை பெறுவது, நிலக்கரி – இரயில் வாகனக் கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள். பால் தாக்கரே, முலயம் சிங், கன்ஷிராம், சௌதாலா, பஜன்லால், பன்சிலால், லல்லு பிரசாத், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா இப்படிப் பலரும் தளபதிகள், மாவீரர்கள், “சம்பா”க்களை வைத்தே கட்சி நடத்துகின்றனர்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி தனது அமைச்சர்களுடன்

இப்படி கிரிமினல்கள் அரசியலுக்குக் கொண்டு வரப்படுவது ஒருபுறம் இருக்க, அர்ஜூன் சிங், சௌதாலா, பஜன்லால் – பன்சிலால்கள், சரத் பவார் – பங்காரப்பாக்கள் என்று இலஞ்ச-ஊழல் அதிகார முறைகேடுகள் செய்து கோடி கோடியாகக் குவித்து கிரிமினல் மயமானவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு முன்னோடிகள் என்றால், குறிப்பாக தேர்தல் தில்லுமுல்லுகள் செய்து தண்டிக்கப்பட்ட பின்னும், சட்ட விதிகளை வளைத்து ஆட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் ஜெயலலிதாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும் உண்டு. அவர்தான் “அன்னை” இந்திராகாந்தி.

1971 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களின் போது உ.பி ரேபரேலித் தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரதமரான இந்திரா காந்தி அரசு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கமும் சிறைத்தண்டனையும் பெற்றார். உ.பி உயர்நீதிமன்றத்தில் இத்தண்டனை பெற்ற இந்திரா, உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையும், இரண்டும் கெட்டான் தீர்ப்பும் பெற்றார். அதாவது, இந்திரா பிரதமராக நீடிக்கலாம், ஆனால், நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகளை கோர முடியாது என்பதே தீர்ப்பு. இன்று மனித உரிமை பேசித்திரியும் முற்போக்கு வேடதாரி வி.ஆர். கிருஷ்ணய்யர்தான் (ஜெயலலிதாவுக்கு இப்போது வக்காலத்து வாங்கும் சேசன், சோ, ராம கோபாலன் வகையறாக்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்) அந்தத் தீர்ப்பை வழங்கியவர். அதன் பிறகு இந்திரா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராடி அரசியல் நெருக்கடி முற்றியது. தனக்கு எதிராக அமெரிக்க சி.ஐ.ஏ சதி செய்ததாகக் கூறி “அவசர நிலை” பாசிச ஆட்சியைப் பிரகடனம் செய்து, சட்டத்தைத் திருத்தி, தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். எதிர்த்த அனைவரையும் சிறையிலடைத்தார்.

அதன் பிறகு 1977 பொதுத்தேர்தல்களில் ஆட்சிக்கு வந்த ஜனதா கூட்டாளிகள் இந்திரா – அவரது இளைய வாரிசு சஞ்சய் காந்தியின் அவசர நிலைக்கால அக்கிரமங்களை விசாரிப்பதற்கு கமிசன்கள் போடப்பட்டன. விசாரணை முடிந்து தண்டனை பெறுவதற்கு முன்பாகவே ஜனதா அரசு கவிழ்ந்து மறுதேர்தல்கள் வந்தன. மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா – சஞ்சய் கும்பல் இலஞ்ச -ஊழல் அதிகார முறைகேடு வழக்குகளையெல்லாம் ரத்து செய்தது.

இந்திரா காந்தி
இந்திரா ஏற்படுத்திச் சென்ற அவரச நிலைக் காலச் சட்டம்தான் ஜெயலலிதா போன்ற அரசியல் கிரிமினல்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

அந்தக் காலம் முழுவதும் இந்திரா – சஞ்சய் கும்பலின் விசுவாசக் கூட்டாளியும் ஆலோசகருமாக இருந்த சித்தார்த்த சங்கர் ரே, மேற்கு வங்கத்தில் அரை பாசிச ஆட்சி நடத்தித் தமது கட்சியினரைக் கொன்று குவித்தவர் என்று போலி கம்யூனிஸ்டுகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர் அதே சித்தார்த்த சங்கர் ரேதான் இப்போது ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர், அந்த ஜெயலலிதாவின் அணியில் சித்தார்த்த சங்கர் ரேயுடன் தோள் உரசுகிறார்கள், “அந்தத் தோழர்கள்”.

இந்தக் கதை பழையதென்றாலும், அப்போது இந்திரா ஏற்படுத்திச் சென்ற அவரச நிலைக் காலச் சட்டம்தான் ஜெயலலிதா போன்ற அரசியல் கிரிமினல்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. அரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று சட்டம் போட்டார் இந்திரா. பின்னர் அது எந்தக் கட்சி ஆட்சியிலும் நீக்கப்படவில்லை. அரசுத் தலைவர், மாநில ஆளுநர் அனுமதி பெற்று கிரிமினல் வழக்குப் போடலாம் எனத்தான் மாறியது.

இரயில் விபத்துக்கள் நடந்தாலோ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலோ தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்று சொல்லப்படும் மரபு இருந்ததாகக் கூறப்படுவது கூட உண்மையல்ல என்று காட்டத்தான் இந்த பழைய கதை. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற இந்திரா மீண்டும் பிரதமராகவில்லையா? போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் ராஜீவ் காந்தி கும்பல் தண்டனை பெற்றதா, பதவி இழந்ததா? மீண்டும் தேர்தலில் நிற்கத் தடை வந்ததா? எவ்வளவோ மந்திரிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றங்களுக்காக “பிடி வாரண்ட்” பிறப்பிக்கப்பட்டும் சிறப்புக் காவல்படை பாதுகாப்புடன் நடமாடுகின்றனர்; அதேசமயம் போலீசு அவர்களைத் தேடி வருகிறது; இன்னும் பிடிக்க முடியவில்லை என்று வழக்கு மன்றங்களில் பதிவாகிறது.

  • அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு பொறுப்புகளைத் துறந்து கட்சிப் பொறுப்புகளை ஏற்பதும், சிறிது காலம் சென்று மீண்டும் அரசுப் பதவி ஏற்பதும் என்பதுதான் முன்பிருந்த மரபு.
  • குற்றச்சாட்டுகள்தான் நிரூபிக்கப்பட்டு விட்டதா, வழக்கு ஏதும் இருக்கிறதா என்று கேட்கும் மரபு பின்னர் வந்தது.
  • வழக்கு பதிவாகியிருக்கிறது, வழக்கு மன்றத்தில் குற்றம் பதிவாகியிருக்கிறதா என்று கேட்டு அப்படி பதிவான பிறகு பதவி விலகுவது மரபானது.
  • அதன் பின்னர் குற்றம் பதிவானாலும் அது நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லையே என்று கேட்பது அடுத்த மரபானது. தண்டிக்கப்பட்டாலும் கீழ் நீதிமன்றத் தீர்ப்புதானே, மேல்முறையீடு செய்யலாம், உச்சநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று கேட்பது மரபானது.
  • உயர்நீதி மன்றமென்ன, உச்சநீதி மன்றமென்ன எங்கே தண்டிக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்று சொல்லும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இப்படிச் சொல்லித்தான் இந்திரா – சஞ்சய் கும்பல் மீதான வழக்குகள் 1980 தேர்தலுக்குப் பின்னர் இரத்து செய்யப்பட்டன.
ஜெயா-சசிகலா
ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஆட்சியின் போது இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த காலத்திலிருந்தே தன்னைக் காத்துக் கொள்வதற்காக அடுத்தடுத்து அரசியல் – சட்ட நெருக்கடிகளை எழுப்பி வருகிறது.

ஆனால், மக்கள் தீர்ப்பை நாடாளுமன்ற ஜனநாயகவாதிகள் ஒரு போதும் மதித்ததில்லை. தேர்தல்கள் மூலம் பெரும்பான்மை பெற்று அமைக்கப்பட்ட ஆட்சியை 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட முறை கலைத்திருக்கிறார்கள். 1977-இலும் அதன் பின்னரும் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனதா வகையறாக்களும் இதைச் செய்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக் கவிழ்ப்புகள் – கலைப்புகளுக்கு இரண்டு கழகங்களுமே மாறி மாறி ஆதரவு தெரிவித்தன, கோரிக்கை விடுத்தன. ஒரு கட்சியின் நின்று வெற்றி பெற்ற பின் மக்கள் தீர்ப்புக்குத் துரோகம் செய்து பணத்துக்கும், பதவிக்கும் கட்சி மாறுவதும் மரபாக மட்டுமல்ல, நியதியாகவும் இருக்கிறது.

***

ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஆட்சியின் போது இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த காலத்திலிருந்தே தன்னைக் காத்துக் கொள்வதற்காக அடுத்தடுத்து அரசியல் – சட்ட நெருக்கடிகளை எழுப்பி வருகிறது. அப்போது முதல்வர் மீது வழக்கு போடுவதற்கு அனுமதி தரும் உரிமை ஆளுநருக்குக் கிடையாது என்று வழக்கு போட்டு வாதாடி, இலஞ்ச – ஊழல் வழக்குகளை முடக்கி வைத்தது. பதவி இழந்த பிறகும் இப்படியே பல தடைகளை உருவாக்கி வழக்குகளை முடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது, அடுத்து வரும் தேர்தல்களில் எப்படியும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்படையும் மக்கள் தம்மை தேர்ந்தெடுப்பர், வழக்குகளை இரத்து செய்து தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டது.

அது எதிர்பார்த்தபடியே வந்த 1998 தேர்தல்களில், பா.ஜ.க-வுடன் கூட்டுச் சேர்ந்து, கோவை குண்டு வெடிப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அதிக இடங்களைப் பிடித்து மத்திய ஆட்சியிலும் பங்கேற்றது. தனது எடுபிடி தம்பிதுரையை மத்திய சட்ட மந்திரியாக்கி அம்மணமான வழிமுறைகளைப் பயன்படுத்தி, சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்து, ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட எத்தனித்தது. உச்சநீதி மன்றமே, வெட்கக் கேடான முறையில் நடந்து கொண்டு, ஜெயா-சசி கும்பலுடன் ஒரு பேரம் நடத்தி அதன் எத்தனிப்புகளை கைவிடும்படி செய்தது. தமிழ்நாட்டு நலன்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது என்ற பெயரில் பா.ஜ.க கூட்டணி அரசின் கையை முறுக்கி காரியம் சாதிக்க முயன்றது. பா.ஜ.க அரசு கால தாமதம் செய்வதாக எண்ணி அவசரமும் ஆத்திரமும் அடைந்த ஜெயலலிதா ஆட்சிக் கவிழ்ப்பு செய்தார். அடுத்து வந்த தேர்தல்களில் ஜெயலலிதா கூட்டணி பெரும்பான்மை பெற முடியாத நிலையில் அதிகாரப் பங்கு கிடைக்காமல் தவித்த ஜெயலலிதா, சட்டபூர்வமான தடைகளைப் பெற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கூடவே, யாகங்கள், சோதிடங்கள் நடத்தியும் பார்த்தார். ஆனாலும், இரண்டு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியவில்லை.

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர்
புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு பிரச்சாரம் செய்வதில் தற்போதைய அரசியலில் ஜெயலலிதாவுக்கு நிகரானவர் யாருமில்லை.

புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு பிரச்சாரம் செய்வதில் தற்போதைய அரசியலில் ஜெயலலிதாவுக்கு நிகரானவர் யாருமில்லை.

  • கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், தனது கார் மீது லாரி விட்டு மோதியும் கொல்ல முயன்றனர்;
  • சட்டமன்றத்தில் சேவை அவிழ்த்து மந்திரியும், ஆளுநர் மாளிகையில் தகாத முறையில் அணுகி ஆளுநரும் தன்னை மானபங்கப்படுத்தினர்;
  • எம்.ஜி.ஆருக்கு நஞ்சு வைத்து அவர் மனைவியே கொன்றார்;
  • தனது ஆட்சியில் நட்ட ஈடு பெறுவதற்காகவே காவல் நிலைய கற்பழிப்பு புகார்கள் கூறுகின்றனர்;
  • தமிழ்நாட்டில் பிரிவினைவாத – தீவிரவாத ஆபத்து, துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது; இதற்குக் காரணம் கருணாநிதிதான்; ராஜீவ் கொலை, கோவை குண்டு வெடிப்பு, வீரப்பன் – தமிழ்த் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஆகியவற்றின் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் –

இப்படி அடுக்கடுக்காக இடைவிடாது புளுகி வருகிறார் ஜெயலலிதா. இந்த வகையில் இட்லரின் நாஜி பிரச்சார மந்திரிகள் கோயபல்சு, கோயரிங் ஆகியோர் ஜெயலலிதாவிடம் பிச்சை கேட்க வேண்டும்.

போயசு தோட்டத்து நீண்ட நெடிய சுவர்களுக்குள் உல்லாச – ஊதாரி வாழ்க்கை நடத்திக் கொண்டே தனக்கென்ன பிள்ளையா, குட்டியா? அனாதையான தனக்கு மக்கள் சேவைதான் ஒரே இலட்சியம் என்று புளுகிப் புளுகி ஆட்சிக்கு வந்து கோடி கோடியாகக் குவித்து அம்பலமாகி, ஆட்சியிலிருந்து எட்டி உதைக்கப்பட்டு, போயசுத் தோட்டத்துப் புதையல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்த போது, எல்லாம் தனக்குத் தெரியாமல் சுற்றி இருந்தவர்கள் செய்து விட்ட தவறு; இனி வளர்ப்பு மகனும் கிடையாது, உடன்பிறவா சகோதரியும் தள்ளி வைப்பு என்று நாடகமாடினார். ஆனால், மிகப்பெரிய கொள்ளைக்காரி ஜெயலலிதாதான் என்பது அம்பலமான போது, சிறைக்கொடுமை, பெண் என்பதால் இழைக்கப்படும் கொடுமை, அரசியல் சதி, பழிவாங்கும் முயற்சி என்றெல்லாம் பச்சையாகப் புளுகி அனுதாபத்தைத் தேடுவதில் ஈடுபட்டார்.

தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற வழக்குகள் எல்லாம் பொய்யானவை; அவற்றை இரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதா செய்த முறையீடுகள் மீண்டும் அவரது முகத்தில் வீசியடிக்கப்பட்டன. விலைபோன நீதிபதிகளால் தற்காலிகத் தடைபோட்டு வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும் நடந்தன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றதும் கோரத் தாண்டவமாடிய ஜெயா விசுவாசிகள் மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய போதிலும், அதுவும் தன்னுடைய எதிராளிகள் செய்த சதிதான் என்று புளுகினார். மேலும் ஒரு வழக்கில் தண்டனை பெற்று, சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிந்தும் சட்டபடி தான் போட்டியிட்டு வென்று முதல்வராக முடியும் என்று சாதித்து வந்தார்.

***

ஜெயா வெற்றி
1996 தேர்தல்களில் ஜெயலலிதா உட்பட அவருடைய அணியினரை மண்ணைக் கவ்வச் செய்த அதே மக்கள், இப்போது மீண்டும் ஒரு ஐந்தாண்டுகள் ஜெயா – சசி கும்பல் தமிழ்நாட்டை ஆளுவதற்காக அமோக ஆதரவு தந்திருக்கிறார்கள், அது ஏன்?

பொய் – புளுகு, பித்தலாட்டங்களையே அரசியல் மூலதனமாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று தற்போதைய தனது தேர்தல் வெற்றிக்கு ஒரு வியாக்கியானம் தந்து வருகிறார். “ஜெயலலிதா – சசிகலா மீதான இலஞ்ச – ஊழல், சொத்துக் குவிப்பு, அதிகார முறைகேடுகள் என வழக்குகள் எல்லாம் பொய்யானவை, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு புனையப்பட்டவை. அதற்காக சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டவைதாம் சிறப்பு நீதிமன்றங்கள். ஆகவே எல்லா வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா – சசிகலா மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்க வேண்டும்” என்று மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள். இதைத்தான் தன் தலைமையிலான அணியின் வெற்றி குறிக்கிறது என்று ஜெயலலிதா விளக்கமளிக்கிறார். இதையே வேறு வார்த்தைகளில் போலி கம்யூனிஸ்டுகள் உட்பட ஜெயலலிதா அணையினர் அனைவரும் கூறுகின்றனர்.

தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது என்பது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி எழுதப்படாத வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் போட்டுத் தருவதைப் போன்றதுதான். பிறகு அதில் அவர்கள் தமது நோக்கப்படி எழுதிக் கொண்டு இதற்காகத்தான் தனக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று சொல்வதும், செய்வதும்தான் நடைமுறை என்பதை நாமறிவோம். 1991 தேர்தல்களில் ஜெயலலிதா கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆட்சிக்கு அனுப்பினார்கள். கோடி கோடியாக கொள்ளையடித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துக்களைக் குவிப்பதற்கா அப்படி ஓட்டுப் போட்டார்கள்.

ஜெயலலிதா அணியின் இன்றைய வாதப்படியே பார்த்தாலும் 1996 தேர்தல்களில் எந்தப் பிரச்சாரத்தைக் கேட்டு ஓட்டுப் போட்டார்கள்? ஜெயா – சசி கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே! மக்களுடைய அந்தத் தீர்ப்பை மட்டும் அவர்கள் ஏற்க மறுத்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, அரசியல் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கருணாநிதி அரசு மக்களுக்கு அளித்த ஏமாற்றங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வரத் துடித்தது ஏன்?

இது ஒருபுறமிருக்கட்டும். 1996 தேர்தல்களில் ஜெயலலிதா உட்பட அவருடைய அணியினரை மண்ணைக் கவ்வச் செய்த அதே மக்கள், இப்போது மீண்டும் ஒரு ஐந்தாண்டுகள் ஜெயா – சசி கும்பல் தமிழ்நாட்டை ஆளுவதற்காக அமோக ஆதரவு தந்திருக்கிறார்கள், அது ஏன்?

1991-96 ஆகிய முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அக்கும்பல் நடத்திய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், உல்லாச – ஊதாரி வாழ்க்கைக் களியாட்டங்கள், இவை மட்டுமல்ல, அதே ஆட்சியில் நடந்த வாச்சாத்தி – சின்னாம்பதி, சிதம்பரம் – பத்மினி பாலியல் வன்முறைகள், தராசு அலுவலகம் மற்றும் வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சியினர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், மீனவர் மீது, கொடியங்குளம் தாழ்த்தப்பட்டவர் மீது, வீரப்பனைத் தேடுவதாக மலைவாழ் மக்கள் மீதான போலீசு படுகொலைகள் – கற்பழிப்புகள் – இப்படி எல்லா அக்கிரமங்கள், அட்டூழியங்களையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டார்களா? அல்லது இவையெல்லாம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கருணாநிதி குடும்பத்தினர் செய்யும் அவதூறு – பொய்ப் பிரச்சாரம் – பொய் வழக்குகள் என்ற ஜெயலலிதா அணியினரின் வாதத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பி விட்டார்களா?

அதெல்லாம் இல்லை, தேர்தல்களில் கருணாநிதி அணியைத் தோற்கடித்ததற்கும், ஜெயலலிதா அணியை வெற்றிபெறச் செய்ததற்கும் வேறு காரணங்கள் உள்ளன. ஜெயா – சசி கும்பலின் கிரிமினல் குற்றங்களை இன்னும் மக்கள் மறந்துவிடவில்லை என்பதால்தான் இந்த அளவாவது கருணாநிதி அணி சில இடங்களைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா அணியின் வாதத்தை மக்கள் அப்படியே ஏற்றிருந்தால் முந்தைய தேர்தல்களில் நடந்ததைப் போல ஒற்றை இலக்கத்தைக் கூட கருணாநிதி அணி பெற்றிருக்க முடியாது.

உண்மையில் கருணாநிதியின் தோல்விக்கும், ஜெயாவின் வெற்றிக்கும் மிக முக்கியமாக அமைந்த காரணம், தமிழக மக்கள், ஏழை எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கையை சமீப காலத்திலும் உடனடியாகவும், நேரடியாகவும் பாதித்தது எப்போதோ (!) நடந்த ஜெயா-சசி கும்பலின் இலஞ்ச ஊழல் – அதிகார முறைகேடுகளை விட இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகள் மற்றும் பொருளாதார – வாழ்க்கைப் பிரச்சனைகள்தாம்.

சாதாரண மக்கள், கருணாநிதியின் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்று கருதவில்லை. “வருமானம் இல்லை, அதே சமயம் விலைவாசி கிடுகிடுவென உயருகின்றது. அடிமட்ட இலஞ்சம் ஒழியவில்லை” இதுதான் மக்கள் பேசிக் கொள்வது. இதைக் கேட்கும் நிலையில் கருணாநிதி இல்லை. கொங்குச்சீமையிலே ஆலை விசைத்தறி, பஞ்சாலை, பனியன் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழில்கள் மூடப்பட்டு முடங்கிக் கிடக்கின்றன. நெல்லை – விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி – அச்சு – பட்டாசுத் தொழில்கள் இயந்திரமயமாக்குவதால் 10 லட்சம் பேருக்கு வேலை இல்லை. வேலூர் – திண்டுக்கல் மாவட்டங்களில் தோல் பதனிடும் ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. கைத்தறித் தொழில்கள் – கட்டுமானத் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன.

விவசாயிகளுக்கோ அடி மேல் அடி. விவசாய இடுபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு, விளைபொருட்கள் விலை போகவில்லை. கரும்புத் தோட்டங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. வெங்காய மூட்டைகள் வீதியில் கொட்டப்படுகின்றன. தேயிலை விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – நிர்வாண ஊர்வலம், கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது. ரௌடித்தனமும் பகற்கொள்ளையும் புரியும் கிரிமினல் கும்பல்கள் குறையவில்லை.

இவ்வளவு இருந்தும், “தொடரட்டும் இந்தப் பொற்காலம்” என்றார் கருணாநிதி. பாலங்கள் போட்டோம், சாலைகள் அமைத்தோம், கணினிக் கல்வி பெருக்கினோம், சென்னையை வாகன உற்பத்தி நகராக்கினோம், கணினி மென்பொருள் பூங்கா நிறுவினோம், அந்நிய முதலீடு பன்மடங்கானது, அமெரிக்க்காவுக்கு கணினிப் பட்டதாரிகள் ஏற்றுமதி அதிகரித்தது என்கிறார் கருணாநிதி. எல்லாம் சரி! இவற்றால் நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினரில் கூட ஒரு சிறு பிரிவினருக்குப் பொற்கால ஆதாயமாக இருக்கலாம். உழவர் சந்தைகளும், வருமுன் காப்போம் திட்டமும், சமத்துவபுரங்களும், சில இலவசத் திட்டங்களும் யானைப் பசிக்கு சோளப்பொறிதான்.

கருணாநிதி அரசால் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது. நரசிம்ம ராவ் – ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சிதம்பரம் – மாறன் – வாஜ்பாய் போன்றவர்களால் தீவிரமாக அமலாக்கப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராள மயம் என்ற மக்கள் விரோதக் கொள்கைகளின் பாதிப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் கடுமையாக மக்களைப் பாதித்திருக்கிறது.

இதனால் மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்து கொண்ட காங்கிரசு, த.மா.கா., பா.ம.க மறும் போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய கணிசமான ஓட்டு வங்கியைப் பெற்றுள்ள கட்சிகளை அணி சேர்ப்பதிலும், ம.தி.மு.கவை பா.ஜ.க-தி.மு.க அணியிலிருந்து வெளியேற்றி, கருணாநிதியைத் தனிமைப்படுத்துவதிலும், பெரும்பான்மை சாதியினரின் ஆதரவைப் பெறுவதிலும் ஜெயலலிதா வெற்றி கண்டார். சில சிறிய சாதிக் கட்சிகளோடும் இரு தலித் அமைப்புகளோடும் தனிமைப்படுத்தப்பட்ட கருணாநிதி வீழ்த்தப்பட்டார்.

முக்குலத்தோருடைய திடமான ஆதரவைப் பெற்றுள்ள ஜெயலலிதாவின் கட்சி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தனக்கென நிரந்தரமானதொரு ஓட்டு வங்கியைப் பெற்றிருக்கிறது. படிப்பறிவில்லாத பாமர மக்கள் மட்டுமே எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் பின்புலம் என்று பலரும் நம்புகின்றனர். கள்ளச் சாராயம், ஆற்று மணல் திருட்டு, புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு விற்பது போன்ற சட்ட விரோத, சமூக விரோத தொழில்கள் முதல் அரசு ஒப்பந்தக் காரர், சாலை போக்குவரத்து, வீடியோ கடை, வீடு – வீட்டு மனை விற்பனை, கந்து வட்டி நிதி நிறுவனங்கள் என்று பல வழிகளிலும் தொழில் புரியும் அல்லது அரசியலையும் தரகு வேலையையுமே முழு நேரத் தொழிலாகக் கொண்ட ஒரு பொறுக்கி அரசியல் கும்பல்தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியைப் பராமரித்து வருகிறது. இவர்கள் கருணாநிதி ஆட்சியினால் முடக்கப்பட்டு, இத்தொழில்களில் ஆளும் கட்சிப் போட்டியாளர்களைக் கண்டார்கள். இவர்கள் ஆத்திரத்துடன் அரசியல் வேலை செய்து கருணாநிதியை வீழ்த்துவதற்கு அடித்தளமாக அமைந்தனர்.

ஆனால், ஒரு உண்மையை ஜெயலலிதா அணியினர் மறந்து விட்டனர். தொடரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் அதிதீவிர ஆதரவாளரான ஜெயலலிதா, காங்கிரசு, பா.ஜ.க கும்பல்கள் மக்களை மேலும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுப்பது தவிர்க்க முடியாது. கூடவே, ஜெயலலிதாவின் போலீசு பயங்கரவாத அடக்குமுறை கொள்கைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள், தொடரும் கிரிமினல் குற்றங்கள் தவிர்க்க முடியாது விரைவிலேயே மக்கள் ஆத்திரத்துக்கு உள்ளாகும். அதற்குள்ளாகவே அரசியலை முழுமையாக கிரிமினல் மயமாக்குவதில் ஜெயலலிதா வெற்றி பெற்று விடுவார். அப்போதாவது ஜெயலலிதா – சசிகலா போன்ற கிரிமினல் – பொறுக்கி அரசியல் தலைமையோடு இந்தப் போலி ஜனநாயகத்தையும் அடியோடு தூக்கி எறிந்து விட வேண்டும். இல்லை என்றால் சுழற்சி முறையில் மீண்டும் அத்தகைய சமூக விரோதிகள் ஆட்சிக்கு வருவது தவிர்க்க முடியாது.
__________________________________________
புதிய ஜனநாயகம் – 16 மே 2001 – 15 ஜூன் 2001
தலையங்கம் (சுருக்கப்பட்டிருக்கிறது)
___________________________________________

புர்ரட்சித் தலைவி பதவியேற்பு – கேலிச்சித்திரம்

2
புர்ரட்சித் தலைவி பதவியேற்பு
படம் : ஓவியர் முகிலன்
அம்மா உணவகங்கள் - டாஸ்மாக்
படம் : ஓவியர் முகிலன்

பாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது

5

“ஜெயலலிதாவை விடுதலை செய்து மக்களிடம் சிறைப்பட்ட நீதித்துறை”

புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

ஜெயா விடுதலையையும். பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயா நிரபராதியா - ஆர்ப்பாட்டம்
ஜெயா நிரபராதியா? பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!

இன்று காலை 11 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 27 அன்று குற்றவாளி என்று நீதிபதி குன்ஹாவால் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழகம் முழுவதும் ஜெயாவின் தொண்டர்கள் என்ற பெயரில் கூலிப்படைகளால் நடத்தப்பட்ட வன்முறையை, பேருந்து எரிப்பை, கடையடைப்பை கைகட்டி, வாய் பொத்தி, ஐம்புலனடக்கி வேடிக்கை பார்த்த அதே போலிசு,  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்தது; பெண் தோழர்கள், குழந்தைகள் உள்ளிட்டு அனைத்துத் தோழர்களையும் தர தரவென இழுத்து வேனில் ஏற்றியது. வேனுக்குப் பக்கத்தில் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவரையும் அப்படியே தூக்கி வேனில் அடைத்து கைது செய்தனர்.

ஜெயா நிரபராதியா? - ஆர்ப்பாட்டம்
“இது நிதியால் வாங்கப்பட்ட நீதி, இது பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் நீதிமன்றம்”

66 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்ட ஜெயலலிதா, மீண்டும் பல கோடிகளை சுருட்ட, எம்.எல்.ஏ கூட்டம் கூட்டுவதும், மீண்டும் முதல்வராவதற்கு அனைத்து ஆயத்தங்களை செய்து கொண்டும் இருக்கிறார். உண்மையான குற்றவாளி ஜெயாவின் பதவியேற்பு விழாவிற்கு 7,000 போலிசை அனுப்பி பாதுகாக்கச் செய்யும் அதே போலிசு, தோழர்களை குற்றவாளிகளைப் போல அடித்து வேனில் ஏற்றி ’வால் டாக்ஸ்’ சாலையில், போலிசு குடியிருப்பில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஜெயா நிரபராதியா - ஆர்ப்பாட்டம்
குற்றவாளிகளை தண்டிக்க அருகதை அற்ற அரசமைப்பை வீழ்த்துவோம்.

கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், ”கொடுத்த காசுக்கு மேல் குமாரசாமி கூவியதால்”, தமிழக மக்களின் சொத்துக்களை திருடிய ஜெயலலிதா ’நிரபராதி’யாக்கப்பட்டார். தீர்ப்பு வந்ததும், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் வெல்லும்” என மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கை பேசினார், ஜெயா. குனிந்து கும்பிடுப் போட்டே பழக்கப்பட்ட அடிமைகள் கூட்டத்தைக் கூட்டி ஐந்தே நிமிடத்தில் ஒப்புதல் வாங்கி, இன்று ஆளுநரிடம் அரசமைக்க உரிமையும் கோரியுள்ளார் மக்கள் சொத்தைத் திருடிய ஜெயலலிதா.

எம்.எல்.ஏ-க்கள் கைத்தட்டலால் அவ்வை சண்முகம் சாலையே அதிர்ந்ததாகவும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்ததாகவும் செய்திகளை அப்டேட் செய்து நெஞ்சம் குளிருகின்றன பத்திரிகைகள்.

ஆனால், இது நிதியால் வாங்கப்பட்ட நீதி என்பதையும், இது பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் நீதிமன்றம் என்பதையும் புரிந்து கொண்டு தீர்ப்பையும், நீதித்துறையின் யோக்கியதையையும் எள்ளி நகையாடுகின்றனர், மக்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் நீதித்துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்தவதாகவும் அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள்,
சென்னை.

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம். தோழர்கள் கைது

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

______________________

புர்ரட்சித் தலைவி

9

12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் டான்சி  நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை வாங்கிய குற்றத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து அவரது மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது உச்சநீதிமன்றம். அதை ஒட்டி புதிய கலாச்சரம் இதழில் வெளியான தலையங்கத்தை இங்கு தருகிறோம். 

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை தெளிவாக்குகிறது. நீதித்துறை நீதியின் பால் இயங்குவதில்லை என்பதை டான்சி தீர்ப்பும் வெளிப்படையாக தெரிவிக்கிறது.

டான்சி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இரண்டே வரிகளில் இப்படிச் சுருக்கிக் கூறலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது; உச்சநீதிமன்றமோ ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பியவர்களும், நிச்சயம் தண்டிக்கப்பட்டு விடுவாரென நம்பியவர்களும் தீர்ப்பைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதையும், “நீதி தேவதைக்கு நன்றி” என அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளையும் கண்டு மனம் வெதும்பிய சிலர், “பெட்டி வாங்கிட்டான்னு நாமும் போஸ்டர் அடிச்சு ஒட்டினா என்ன? நீதிமன்ற அவமதிப்புன்னு கைது பண்ணுவானா? பண்ணட்டும். எத்தனை ஆயிரம் பேரைக் கைது பண்ணுவான்னு பார்ப்போம்” என்று குமுறினார்கள்.

“டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை இரண்டே வரிகளில் இப்படிச் சுருக்கிக் கூறலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது; உச்சநீதிமன்றமோ ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது.”

“நீதித்துறையைப் பெட்டிக்குள் அடக்க முடியாது” என்று அவர்களிடம் நாம் வாதாட முடியாது. நீதிபதிகளில் சுமார் 25 சதவீதம் பேர் கறை படிந்தவர்களென்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியே ‘தீர்ப்பளித்திடும்போது’ அவரை மறுத்து வாதாடுமளவுக்கு நம்மிடம் ஆதாரமில்லை.

எனினும், “நீதி பெட்டிக்குள் அடங்கி விட்டது” என்ற வகையிலான இந்தப் பொதுக்கருத்தை நாம் மறுப்பதற்கு வேறு காரணமிருக்கிறது. இந்த அரசமைப்பு நீதியானதென்றும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், நீதித்துறையும் சட்டத்தைக் கறாராகப் பற்றியொழுகினால் பூலோக சொர்க்கத்தை இந்தியாவில் உருவாக்கி விடலாமென்றும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் மாயையை இந்தப் பொதுக்கருத்து வழிமொழிகிறது. மாறாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ மேற்படி மாயைகளைப் பொடிப்பொடியாக நொறுக்குகிறது. பட்டப்பகலில் வழிப்பறி செய்தாலும் “ஓட்டுக் கட்சிகளையோ, அதிகாரவர்க்கத்தையோ சட்டப்படி தண்டிக்க முடியாது” என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

பாசிச ஜெயா
படம் : ஓவியர் முகிலன்

***

சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத்தான் டான்சி சொத்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்றும், இதனால் அரசுக்கு இழப்பும், ஜெயலலிதா-சசிகலாவுக்கு ஆதாயமும் கிட்டியிருக்கிறதென்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில் தண்டனையும் விதித்து. “ஒரு பொருளின் சந்தை மதிப்பை யார் எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?” என்ற தத்துவ ஞானக் கேள்வியை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்தது.

இதை வழிமொழிந்ததுடன் நில்லாமல், உச்சநீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறான ஆதாயம் அடையவில்லை. டான்சி நிறுவனம் தவறான நட்டமும் அடையவில்லையெனக் கூறியிருக்கிறது.

அப்படியானால் ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையில், “நியாயமான லாபம், நியாயமான நட்டம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?” என்ற கேள்வி நமக்கு எழுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் நியாயமான விலை கேட்கும் விவசாயி, முதலுக்கு மோசமில்லாத விலையை நியாயவிலை என்று கருதுகிறான். உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ 300 சதவீத லாபத்தை நியாயமான லாபமாகக் கருதுகின்றன. இதைத் ‘தவறான லாபம்’ என்று கூறித் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ இல்லை.

“பட்டப்பகலில் வழிப்பறி செய்தாலும் “ஓட்டுக் கட்சிகளையோ, அதிகாரவர்க்கத்தையோ சட்டப்படி தண்டிக்க முடியாது” என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.”

அதேபோல, 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள மாடர்ன் ஃபுட் நிறுவனத்தை வெறும் 120 கோடி ரூபாய்க்கும், பால்கோ நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கும் விற்பனை செய்த அமீனாத்துறை அமைச்சர் அருண் ஷோரியும் “இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு இவ்வளவுதான்” என்று வாதாடுகிறார். ஆகவே, ஒரு பொருளின் சந்தை விலையை இன்னதென்று தீர்மானிக்கவியலாது எனும்போது அதை வாங்கியவர் எவ்வளவு லாபமடைந்தார் என்பதையும் திட்டவட்டமாக யாரும் கூற முடியாது.

இன்னதென்று கூற முடியாத சந்தை விலை, இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத வழிகளின் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உருவாக்கப்படுகின்ற முன்மாதிரி விலை (guiding value) என்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்தச் சட்டத்தால்தான் குற்றத்தை நிரூபிக்க முடியும்? அதனால்தான், “யாரும் தவறான லாபமோ, நட்டமோ அடையவில்லை.” என்று மிகவும் எச்சரிக்கையுடன் வரம்பிட்டுக் கொள்கிறது தீர்ப்பு.

அப்படியானால் “தவறான முறையில் ஆதாயமடைவது” என்ற நோக்கமில்லாத புரட்சித்தலைவி, டான்சி நிலத்தை ஏன் வாங்கினார்? முடவர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்குவதைப் போல, நொடித்துப் போன டான்சி நிறுவனத்துக்கு அம்மா அவர்கள் தாயுள்ளத்துடன் தனது கைக்காசை வழங்கியிருக்கிறார் என்பதைத் தவிர வேறென்ன நோக்கம் கற்பிக்க முடியும்?

***

டான்சி நிலம் அரசுச் சொத்தென்றும் அதை அரசு ஊழியராகிய முதல்வர் வாங்கியது குற்றமென்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டையும் இத்தீர்ப்பு நிராகரித்து விட்டது. “அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், ஒரு ‘அரசு நிறுவனம்’ என்பதற்கு தனித்த சட்ட அடையாளம் இருக்கிறது. எனவே அரசுச் சொத்தையும் அரசு நிறுவனத்தின் சொத்தையும் ஒன்றெனக் கருதவியலாது. மேலும், ‘அரசு நிறுவனத்தின் சொத்தை அரசு ஊழியர் வாங்குவது குற்றமே’ என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

இத்தீர்ப்பின் விளைவாக அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒளிவுமறைவான முறைகளில் திருடவேண்டிய அவலநிலை ஒழிக்கப்பட்டு விட்டது. எடுத்துக் காட்டாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வாங்கிக் கொள்ளலாம். அவற்றுக்கான நியாயமான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

சொத்துக் குவிப்பு வழக்கு
படம் : ஓவியர் முகிலன்

ஒருவேளை சென்னை கடற்கரை போன்ற நேரடியான அரசுச் சொத்தை வாங்க சசிகலா அம்மையார் விரும்பினால், முதலில் ஒரு அரசு உத்தரவின் மூலம் மெரினா கடற்கரையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமாக்க வேண்டும். பிறகு கடற்கரையை விலைக்கு வாங்கியதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து சுற்றுலாக் கழகத்தை மீட்க புரட்சித் தலைவியவர்கள் தன் சொந்தக் காசைக் கொடுத்து மேற்படி கடற்கரையை தன் பெயருக்கே மாற்றிக் கொள்ளலாம்.

அரசுச் சொத்து வேறு, அரசுத்துறைச் சொத்து வேறு என்று கூறும் இத்தீர்ப்பு, “பொதுத்துறை (Public Sector) பொது மக்களுக்குச் சொந்தமானது” என்ற மாயையைத் தகர்த்து, “அது அதிகாரவர்க்கத்தின் உடைமை” என்ற உண்மையை நிலைநாட்டியிருக்கிறது. பொதுத்துறையைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் / சட்டமன்றத்தின் ஒப்புதல் கூடத் தேவையில்லை என்பதற்கும் அத்தகைய முடிவுகளை அதிகாரவர்க்கமே மேற்கொள்ளலாம் என்பதற்கும் ஏற்கனவேயுள்ள சட்டத்தில் பொதிந்திருக்கும் வாய்ப்புகளை இத்தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

***

சந்தை விலை, அரசுச் சொத்து என்ற இரு கருத்தாக்கங்களையும் நிராகரித்ததுடன் உச்சநீதிமன்றம் நிற்கவில்லை. “இந்தச் சொத்தை குறைந்த விலைக்கு வாங்க ஜெ, சசி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் சதித்திட்டம் தீட்டினர்” என்ற குற்றச்சாட்டையும் ஏற்க மறுத்திருக்கிறது. “முதல்வர் விரும்பும் வகையில் இந்த விற்பனை இடையூறின்றி நடந்து முடிய வேண்டுமென்பதில் அதிகாரிகள் பேரார்வம் காட்டியிருப்பார்கள்” என்று ஒப்புக் கொள்ளும் இத்தீர்ப்பு வேறொரு கேள்வியை எழுப்புகிறது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய சிந்தனைகள் வெவ்வேறு கட்டங்களில் எவ்வாறு சந்தித்தன, அவர்களுடைய பொதுத்திட்டம் என்ன என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை” என்பதால் சதி (குற்றப்பிரிவு 120-B) என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது.

சதியை எப்படி நிரூபிப்பது? தீவிரவாதிகளின் சதியை நிரூபிப்பது சுலபம். அவர்கள் பாலத்தின் அடியிலோ, புதர்களின் மறைவிலோ, பாழடைந்த மண்டபத்திலோ நள்ளிரவில் காடா விளக்கொளியில் ஒன்று கூடுவார்கள். “சட்டபூர்வமாக அமைந்த இந்த அரசை, செக்சன் : 120-B-யின் கீழ் தூக்கியெறிவோம்” என்று பத்தடி தூரத்தில் ரோந்து போகும் ஏட்டின் காதில் விழும்படி சபதம் செய்வார்கள். அந்த நேரத்தில் அதே இடத்திற்கு சிறுநீர் கழிக்க வரும் கிராம நிர்வாக அதிகாரியைச் சாட்சியாக்கி குற்றம் நிரூபிக்கப்பட்டு ‘தீவிரவாதிகள்’ தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால், ஜெ-வும், அதிகாரிகளும் தீவிரவாதிகள் அல்ல என்பதுடன் அவர்கள் பாழடைந்த மண்டபத்திலும் சந்திப்பதில்லை என்பதால் ஏட்டுகளால் அவர்களை வேவு பார்க்க முடியாது. குறிப்பாக, சட்டபூர்வமாக அமைந்த அரசின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் என்ற முறையில் அவர்கள் கோட்டையில் சந்தித்துப் பேசும் போது அது வளர்ச்சித் திட்ட விவாதமா, சதியாலோசனைக் கூட்டமா என்று சோதித்தறியும் அதிகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், காதலர்களின் உள்ளம் குறிப்பறிந்து செயலாற்றுவதைப் போலவே களவாணிகளின் உள்ளமும் குறிப்பறிந்து செயல்படுகிறது. சாட்சியங்களோ அரிதாக ஓரிரு வழக்குகளில் சிக்கலாம். அது சீப்பில் சிக்கிய முடியைப் போன்றது. எனவே, விளைவிலிருந்து சதியை ஊகிக்க முடியுமேயன்றி, சதித்திட்டத்தின் கூட்டக் குறிப்பை கண்டுபிடிக்க ஒருக்காலும் முடியாது. எனினும் ஊகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்ட முடியாது என்கிறது உச்சநீதிமன்றம். “பாபர் மசூதியை இடிக்கும் சதித்திட்டத்தில் அத்வானியின் பங்கை நிரூபிக்க ஆதாரமில்லை” என்று கூறி விடுவித்ததைப் போல.

***

அடுத்ததாக, “டான்சி சொத்தை வாங்கியதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை ஜெயலலிதா மீறியிருக்கிறாரா? ஆம், எனில் அந்த நன்னடத்தை விதிமீறல் என்பது இ.பி.கோ. 169-வது பிரிவின்படி தண்டிக்கத் தகுந்த குற்றமா?” என்ற கேள்வியைப் பரிசீலிக்கிறது இத்தீர்ப்பு.

ஜெயா நீதி
படம் : ஓவியர் முகிலன்

“அரசு ஊழியர் நன்னடத்தை விதி என்பது கனவான்கள் ஏற்கும் ஒரு ஒப்பந்தம்; அதனை மீறுவது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக் கூடிய கிரிமினல் குற்றமாகி விடாது. மேலும், நன்னடத்தை விதியின் சொற்களை ஜெயலலிதா மீறவில்லை (டான்சி நிலம் நேரடியான அரசுச் சொத்தல்ல என்ற காரணத்தினால்); அதன் உணர்வைத்தான் மீறியிருக்கிறார்” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றம்.

நன்னடத்தை விதியை மீறுவது கிரிமினல் குற்றமாகி விடாது என்று தீர்ப்பு கூறுவது ஒருபுறமிருக்கட்டும்; 1968-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட அந்த விதி என்ன கூறுகிறது தெரியுமா? “அசையாச் சொத்து எதையும் அரசிடமிருந்து வாங்குவதையோ விற்பதையோ அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்” என்கிறது.

இதனை “விதி” என்று பெயரிட்டு அழைக்கவியலுமா? இது ஒரு நல்லொழுக்க போதனை, அவ்வளவுதான். இந்த விதி ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டதல்ல; எனவே, இதற்காக அவரை நாம் குற்றம் சாட்ட முடியாது.

நன்னடத்தை விதி மட்டுமல்ல, குற்றப்பிரிவு : 169-ம் மேம்போக்காகவே உள்ளது. எவையெவை அரசுச் சொத்துக்களாகக் கருதப்படும் என்பதை இச்சட்டத்திலேயே தெளிவுபடுத்தியிருக்க முடியும். இது கவனக்குறைவாக நேர்ந்த தவறல்ல; கவனமாகச் செய்யப்பட்டிருக்கும் சூழ்ச்சி. சட்டத்தின் சொற்களையும், வாக்கியங்களையும் அமைக்கும் ஆளும் வர்க்கச் சட்ட வல்லுநர்கள் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஆராய்ந்து தேவையான சொற்களுக்கு அடிக்குறிப்பும் பொருள் விளக்கும் அளிக்கிறார்கள்.

“இத்தீர்ப்பின் விளைவாக அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒளிவு மறைவான முறைகளில் திருட வேண்டிய அவல நிலை ஒழிக்கப்பட்டு விட்டது !”

வெள்ளையனால் உருவாக்கப்பட்டு இன்னும் அமலில் இருக்கும் தேசத்துரோகச் சட்டம் (பிரிவு 124-A) முதல், பொடா வரையிலான சட்டங்கள் கூறுவதென்ன? செயலால் மட்டுமல்ல, பேச்சு – எழுத்து – சைகை ஆகிய எந்த வடிவில் இருந்தாலும் ‘தேசத்துரோக – பயங்கரவாதக் குற்றங்களை’ அவை அடையாளம் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் ‘டெஸ்மா’வோ போராட்டத்தை ஆதரித்துக் கருத்து கூறுவது, தொழிற்சங்க உண்டியலில் காசு போடுவது உள்ளிட்ட அனைத்தையும் குற்றமாக இனம் காண்கிறது. ஆனால், இத்தகைய சட்டங்களை உருவாக்கிய மேதைகளால் அரசாங்கச் சொத்துக்கள் எவையெவை என்பதை மட்டும் தெளிவாக இனம் காட்ட முடியவில்லையாம்! ஒரு வேளை சுண்டெலிகள் தப்பிச் செல்வதற்காக வேண்டுமென்றே விடப்பட்டிருக்கும் சட்டத்தின் ஓட்டையாக அது இருந்திருக்கக் கூடும்! ஆனால், அதையே குடைந்து பெரிதாக்கி, பெருச்சாளி தப்பிவிட்டது. ஓட்டையை ஆராய்ந்த நீதிமன்றம் அதை அடைக்குமாறு உத்தரவிடவில்லை. ‘நன்னடத்தை விதியின் உணர்வு’ என்று அந்த ஓட்டைக்குப் பெயரிட்டிருக்கிறது.

ஜெயலலிதா, ‘விதி’யை மீறவில்லை; விதியின் உணர்வைத்தான் மீறியிருக்கிறார். விதியும், சட்டமும் அறிவுபூர்வமானவை; எனவே அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றம். உணர்வோ மனம் சார்ந்தது. எனவே ஜெயலலிதாவின் மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுகிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பின் இரண்டாவது அத்தியாயம் இங்கே தொடங்குகிறது.

***

ஜெயா - சசி கோயில் வழிபாடு
வெறும் மனச்சாட்சியினால் உச்ச நீதிமன்றத்தையே வீழ்த்திய ஜெயா – கற்சிலை அம்மனுக்கு நன்றி சொல்கிறார்.

சட்டப்படி ஜெயலலிதா குற்றவாளியல்ல என்ற போதிலும், அவர் வகிக்கின்ற பதவி கோருகின்ற நடத்தையும், அவரது உண்மையான நடத்தையும் முரண்படுவதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. “… நிபந்தனையற்ற முறையில் டான்சி சொத்தைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் தனது தவறுக்கு அவர் பிராயச்சித்தம் தேட வேண்டும்… அது மட்டுமல்ல, ‘சொந்த ஆதாயத்திற்காக விதிகளை வளைக்கிறார்’ என்ற சந்தேகம் எழும் வகையில் நடந்து கொண்டதும், நன்னடத்தை விதிகளின் உணர்வை மீறியதும் சரிதானா’ என்று ஆழ்ந்து சிந்தித்து அவர் தன்னுடைய மனசாட்சிக்கே பதில் சொல்ல வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறது நீதிமன்றம்.

சாட்சிகளை மிரட்டிப் பல்டியடிக்க வைத்ததன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றக் காரணமாயிருந்த மனச்சாட்சியிடம், சிறைத் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த போதும் நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமரத் தயங்காத மனச்சாட்சியிடம், டான்சி ஒப்பந்தத்தில் தான் போட்ட கையெழுத்தையே ‘போர்ஜரி’ என்று கூண்டிலேறிப் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்காத மனச்சாட்சியிடம் தான் தாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்ற உண்மை நீதிமன்றத்துக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. எனினும், இந்த மனச்சாட்சிக்குள்ளே இன்னொரு உண்மையான மனச்சாட்சி ஒளிந்திருக்கக் கூடுமென நீதியரசர் நம்பியிருக்கலாம். சரியாகச் சொன்னால், அத்தகையதொரு நம்பிக்கையை நமக்கு உருவாக்க அவர்கள் முனைந்திருக்கலாம்.

எவ்வாறு இருப்பினும் அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால். “புரட்சித் தலைவி அவர்கள் மேற்படி சொத்தை டான்சி நிறுவனத்துக்கு ஏற்கனவே தானமாக வழங்கி விட்டார்” என்ற உண்மையை நீதிமன்றத்தின் முன் எடுத்துக் கடாசினார். இதன் மூலம் மேற்படி வழக்கின் நிலவரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் அறியாமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்ல, “தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே புரட்சித் தலைவியின் மனச்சாட்சி முன் தேதியிட்டு அதனை அமல்படுத்தி விட்டது” என்ற உண்மையையும் அவர்களுக்கு உணர்த்தினார்.

***

புரட்சித் தலைவியின் மனச்சாட்சிக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் இத்தீர்ப்பில் துருத்திக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் நீதிபதிகளின், ‘மனச்சாட்சி’யைக் குத்தத் தொடங்குகின்றன போலும். “சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு வேறொரு சட்டமா? நன்னடத்தை விதி என்பது என்ன? அது சும்மா அருங்காட்சியகத்தில் வைத்து வேடிக்கை பார்க்கத் தக்க புராதனக் கலைப்பொருளா? இந்த விசயங்கள் எங்கள் மனச்சாட்சியை கவலைக்குள்ளாக்குகின்றன” என்று அங்கலாய்க்கிறார்கள்.

“அவை கலைப் பொருட்களல்ல, கொலைப் பொருட்கள்” என்று கதறுகிறார்கள் தமிழகத்தின் அரசு ஊழியர்கள். எந்த நன்னடத்தை விதியை “தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமல்ல” என்று இந்தத் தீர்ப்பு கூறுகிறதோ, அதே விதிகளின்படிதான் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்ட ஊதியத்தைத் தர மறுக்கும் தமிழக அரசின் ‘ஒப்பந்த மீறல்’ (Breach of Contract) உச்சநீதிமன்றத்தால் அன்று கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசு ஊழியர்கள் நன்னடத்தையிலிருந்து வழுவியதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் எச்சரித்தது. “வேலை நிறுத்தம் செய்வதற்கான தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ அரசு ஊழியர்களுக்குக் கிடையாது” என்று மிரட்டியது. ஆனால், அரசு நிறுவனத்தின் சொத்தை முதலமைச்சர் விலைக்கு வாங்குவது சட்டப்படி குற்றமல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறு என்பதால் முதல்வர் மனம் வருந்தித் தனது சொந்த மனச்சாட்சிக்குப் பதிலளிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுகிறது. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட ஊழியர்களையோ நீதிபதிகள் இரக்கமின்றி தண்டிக்கிறார்கள்.

“உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற ‘சர்வ வல்லமை’ பொருந்திய இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம் போல நொறுக்கிய புரட்சித் தலைவி உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.”

“சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா” என்ற கேள்வி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களிடமிருந்து வெடித்துக் கிளம்பும் கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டிய உச்சநீதிமன்றமோ புரட்சித் தலைவியின் பாதாரவிந்தங்களில் மேற்படி கேள்வியை சமர்ப்பிக்கிறது. உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற ‘சர்வ வல்லமை’ பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.

ஒரு தத்துவஞானக் குறிப்புடன் தீர்ப்பு முடிவடைவதாகக் கூறுகிறது ‘இந்து’ நாளேடு. அதன் சாரம் பின்வருமாறு : “பொதுவாக கிரிமினல் சட்டம் என்பது கிரிமினல்களைக் கையாள்வதற்கானது; உயர்பதவிகளை வகிப்பவர்களிடமோ நாம் அதியுன்னதமான நாணயத்தை எதிர்பார்க்கிறோம்.”

அவலச்சுவை ததும்பும் இந்தத் தத்துவக் குறிப்பு வெளிப்படுத்தும் உண்மை இதுதான். சூத்திரனுக்குத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!

இந்திய ஜனநாயகம் எனும் பாற்கடலை டான்சி வழக்கெனும் மத்தால் எட்டாண்டுகள் இடையறாது கடைந்து, இந்த தேவரகசியத்தை உலகறியச் செய்த ‘புரட்சி’த் தலைவிக்கு நன்றி சொல்வோம்.

இனி, உண்மையானதொரு புரட்சிக்கு ஆக வேண்டிய வேலைகளைக் கவனிப்போம்!

– மருதையன்
________________________________
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003
சிறப்புத் தலையங்கம்
________________________________

தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !

1

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி சைக்கிள் பேரணிவிழிப்புணர்வு பிரச்சாரம்

அரசுப்பள்ளிக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து, நலிந்து வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கம்மாபுரம் வட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு தே.பவழங்குடியிலிருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை உள்ள கிராமங்களில் 19-05-2015 செவ்வாய் கிழமை அன்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

காலை 9.00 மணிக்கு தே.பவழங்குடி திருவள்ளுவர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் இருந்து பேரணி தொடங்கியது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைமதி வாழ்த்துரை வழங்கினார். கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பஞ்சநாதன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

பேரணி கீரமங்கலம் வழியாக சென்ற பொழுது அப்பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.தமிழ் செல்வி பேரணியை வரவேற்று அனைவருக்கும் மோர் வழங்கினார். அங்கிருந்து புறப்பட்டு காவனூர் கிழக்கு, மேற்கு, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் லட்சுமி, ரேகா, மோகன்தாஸ் பேரணிக்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு, கொடுமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தேவங்குடி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, மருங்கூர் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி , சி.கீரனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி , மே.பாலையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணி மதியம் 2.00 மணி அளவில் வல்லியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது.

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
அரசுப் பள்ளியில் பிள்ளைகள சேர்க்க வலியுறுத்தும் பேனர்கள் வைத்தும் பறை இசை முழங்கிய படி, மைக் செட் அமைத்து கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்ற பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அங்கு அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு 3.15-க்கு புறப்பட்டு கார்மாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நேமம் வழியாக மாலை 5.00 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி சென்றடைந்து நிறைவு பெற்றது.

பேரணியை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க அமைப்பாளர் தே.பவழங்குடி திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி சிறுதொண்ட நாயனார் ஏற்பாடு செய்து நடத்தினார். பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு அனைத்தும் அவரே ஏற்பாடு செய்து வழங்கினார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பொன்னிவளவன் பேரணி செல்லும் பாதையை திட்டமிட்டதுடன் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்றார். அனைத்து பள்ளிகளிலும் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
அரசுப் பள்ளிக்கு ஆதரவான தனியார் பள்ளிகளுக்கு எதிரான கோஷங்கள் “ஆகா அரசு பள்ளி”, “ஐயோ தனியார்பள்ளி”, “தாலி அறுக்கும் தனியார் பள்ளி”, “அனைத்தும் இலவசமாய் வழங்குது அரசு பள்ளி” அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் மாலை பேரணியில் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
“கிராமத்திற்கு ஆறு தனியார் பள்ளிகளில் இருந்து வெவ்வேறு ஊர் வேன் பஸ் வருது. கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது”

பேரணியை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கம்மாபுரம் பகுதி தொடக்கக் கல்வி அலுவலரை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் நேரில் சந்தித்து விழிப்புணர்வு பேரணியில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. ராஜேஸ்வரி, “நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கிறீர்கள். கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வாம்” என கூறினார். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேரணியை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
நமது பிரசுரத்தையும், கோஷத்தையும் கேட்ட கிராமத்து மக்கள் இதுதான் சரியான முடிவு என ஆதரித்தார்கள்.

பேரணிக்கு 2 நாட்களுக்கு முன்பே பேரணி செல்லும் பகுதி கிராம மக்களிடம் பேரணி பற்றி விளக்கி கலந்து கொள்ள அழைப்பு விடுத்து, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

பேரணியின் முன்புறம் Tata ace வாகனத்தில் முன்புறம் மற்றும் பக்கவாட்டு இருபுறத்திலும் அரசுப் பள்ளியில் பிள்ளைகள சேர்க்க வலியுறுத்தும் பேனர்கள் வைத்தும் பறை இசை முழங்கிய படி, மைக் செட் அமைத்து கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்ற பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
“ஆகா ஓகோ அரசுப்பள்ளி அய்யோ அய்யோ தனியார் பள்ளி” என்பதற்கான தாளம் ராகமாக மாணவர்களிடம் எதிரொலித்தது.

பேரணியில் எழுப்பப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஆதரவான தனியார் பள்ளிகளுக்கு எதிரான கோஷங்கள் “ஆகா அரசு பள்ளி”, “ஐயோ தனியார்பள்ளி”, “தாலி அறுக்கும் தனியார் பள்ளி”,  “அனைத்தும் இலவசமாய் வழங்குது அரசு பள்ளி” அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

6-ம் வகுப்பு மாணவன் ரீத்திஷ் பல தாளங்களில் தப்பு அடித்து சைக்கிளில் வந்த மாணவர்களை உற்சாகப் படுத்தினார். “ஆகா ஓகோ அரசுப்பள்ளி அய்யோ அய்யோ தனியார் பள்ளி” என்பதற்கான தாளம் ராகமாக மாணவர்களிடம்  எதிரொலித்தது. கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் நமக்காக ஆதரவு பேரணியா என மகிழ்சியோடு பார்த்தனர். கூடவே சில மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் நமக்காக ஆதரவு பேரணியா என மகிழ்சியோடு பார்த்தனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ”சார் நாங்கள் நல்லாதான் சொல்லி கொடுக்கிறோம். இந்த கிராமத்திற்கு ஆறு தனியார் பள்ளிகளில் இருந்து வெவ்வேறு ஊர் வேன் பஸ் வருது. கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள். பணம் கட்ட முடியாமல் பாதியில் திரும்பி இங்கே மீண்டும் சேர்ப்பது நடக்கிறது. நாங்கள் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறோம். நாளுக்கு நாள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ரேசன் கடையில் அரிசி மண்ணெண்ணெய் போட்டா சில மாணவர்கள் அன்றைக்கு வரமாட்டார்கள். வெளியூருக்கு மரம் வெட்ட குடும்பத்தோடு போகும் போது பிள்ளைகளை கூட்டிட்டு போய்விடுவாங்க. நாங்க வருகை பதிவேடை பராமரித்து அடுத்த வகுப்பிற்கு ஏதோ சொல்லி கொடுத்த அனுப்புவோம். சில நேரம் சில மாணவர்கள் வந்த பிறகு பாடம் நடத்தலாம் என காத்திருப்போம். வீட்டில் அப்பா அம்மாவோடு சண்டை, குடித்துவிட்டு ரகளை, அதனால் தலை சீவாமல் வருவார்கள். நாங்கள் இதை கடந்து பாடம் சொல்லி கொடுக்க தயாராக இருக்கிறோம். அரசு பள்ளிக்காக நீங்கள் சைக்கிள் பேரணி நடத்துவது, இவ்வளவு சிரமப்படுவது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது” என எலுமிச்சை பழச்சாறை அனைவருக்கும் வழங்கி சொந்த வீட்டு விசேசம் போல் கவனித்தார்கள்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
தனியார் பள்ளிகளின் மோகம் அதன் சாயம் வெளுத்து வருகிறது என்பதற்கான ஆதாரம் தான் நமது பிரச்சாரத்தின் இந்த பிரதிபலிப்பு.

நமது பிரசுரத்தையும், கோஷத்தையும் கேட்ட கிராமத்து மக்கள் இதுதான் சரியான முடிவு என ஆதரித்தார்கள். தனியார் பள்ளிகளின் மோகம் அதன் சாயம் வெளுத்து வருகிறது என்பதற்கான ஆதாரம் தான் நமது பிரச்சாரத்தின் இந்த பிரதிபலிப்பு. சைக்கிள் பேரணி நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அதற்கு நல்ல பலன் இருக்கிறது.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணிபேரணியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன், ஆடியபாதம் ஆகிய இருவரும் அனைவருக்கும் குளுகோஸ் வழங்கினார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் விருத்தாசலம் வழக்கறிஞர் புஷ்பதேவன், மாவட்ட இணைச் செயலாளர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில், பொருளாளர் செந்தாமரைகந்தன், அசோக், செல்வம், செல்வகுமார், வேலுமணி, ஆச்சி குமார், பழனி, அறிவரசன், தெய்வக்கண்ணு, ஆனந்தகுமார் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

(வை.வெங்கடேசன்)
தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்