விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

திருமாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 17, சமீபகாலமாக பாசிச ஜெயாவின் கட்-அவுட் களேபரங்களுக்குப் போட்டியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சொன்னை முழுவதும் பிளெக்ஸ் பேனர்கள் மயம்.  1990-களில் பிளக்ஸ் தொழில்நுட்பம் வளராததால் ஜெயாவின் கட்-அவுட்டுகள் இருந்தன. திருமாவின் காலத்தில் புற்றீசல் போல பிளெக்ஸ் அச்சகங்கள் தோன்றிவிட்ட நிலையில், சிறுத்தைகள் திருமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக எல்லா அச்சகங்களையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா என எண்ணுமளவுக்கு, பிளெக்ஸ் போர்டுகளின் எண்ணிக்கை சென்னைவாசிகளை மலைக்க வைத்தது.

சொன்னையில் திரும்பிய பக்கமெல்லாம், திருமாவை ‘மாசறு பொன்னே போற்றி, கடாரம் வென்ற மன்னா’ என்றபடி எல்லா உயர் தமிழ் சொற்களாலும் போற்றும் துதிபாடும் பிளெக்ஸ் போர்டுகள் மொய்த்தன. சேகுவேரா, பிரபாகரன் உள்ளிட்டு இன்னும் பல வரலாற்று மாந்தர்களின் கெட்டப்பில் தோன்றும் திருமாவின் அவதாரங்களோடு, அண்ணனின் அல்லக்கைகளின் படங்களும் எல்லா பேணர்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக அல்லக்கைகள் எல்லோரும் தங்கள் பெயருக்கு கீழே ஏதோ ஒரு பதவியையும் குறிப்பிட்டிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது எல்லோருக்கும் உறுப்பினர் தகுதி மட்டும் கிடையாது; ஏதாவது ஒரு பதவியும் போனசாக உண்டு.

அண்ணனின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஏதாவது ஒரு கொள்கை முழக்கத்தை வைத்து நடத்துவதை சிறுத்தைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இம்முறை ஈழம் சீசனாக இருப்பதால், “எழும் தமிழ் ஈழம்” என பேனர்களின் ஓரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது, அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திய கருணாநிதி அரசு, இப்போது ஈழப் போராட்டம் புதையுண்ட நேரத்தில், தனது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை என்பதைப் பார்த்துவிட்டவருக்கு, சிறுத்தைகளின் பேனரில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், பிரபாகரன் படம் இடம் பெற்றிருப்பதாக தினமலர் நாளேடு போட்டுக் கொடுத்தது.

உடனே முத்தமிழ் முதல்வரின் காவலரணி சிறுத்தைகளின் பேனர்களை நோக்கிப் பாந்தது. போலீசுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத சிறுத்தைகளும் எல்லா பேனர்களிலும் ‘எழும் ஈழத்தை’ அழித்து உதவி செய்தனர். கடைசில் ‘எழும் ஈழத்’திற்கு இடையில் இருந்த ‘தமிழ்’ மட்டும் பரிதாபமாக காட்சியளித்தது. கடந்த ஆறு மாதங்களாக ஈழத்திற்காக அமர்க்களப்படுத்திய சிறுத்தைகளின் ‘வீரம்’ இறுதியில் தாரை வைத்து, ஈழம் என்ற பெயரையே அழிக்கும் வண்ணம் அஞ்சி நடுங்கிப் போனது.

ஆனாலும் பிறந்த நாள் கூட்டத்தில் முழங்கிய திருமா, இனி புலிகளின் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்காத வழியில் சிறுத்தைகள் போராடுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதே சமயம், தி.மு.க அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க மாட்டோம் எனவும் முன்னெச்சரிக்கையாக, “கண்டிஷன்ஸ் அப்ளை”யும் போட்டார். ஒரு எம்.பி. சீட்டு நன்றிக்காக தமிழ்நாட்டு மேடையில் இப்படி பேசியவர், சமீபத்தில் ஜெர்மனியில் புலி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டில் பிரபாகரன் தலைமையில் விரைவில் ஐந்தாவது ஈழப்போர் துவங்கும் என அறிவித்தார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால், அதைத் தக்கவைப்பதற்கு அங்கே அப்படி; பிழைப்பை ஓட்ட இங்கே இப்படி…

திருமாவின் ஓட்டுக்கட்சி பிழைப்புவாதம் இப்போது தமிழக மக்களுக்கு புதிரான ஒன்றல்ல. எனினும், அயல்வாழ் தமிழ் மக்கள், அதுவும் ஈழம் தொடர்பாக மட்டும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, அவரது சரணாகதிப் படலம் தெரியாது.

‘90-கள் முழுவதும் “அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி” என்று ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிய போது தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால், இந்த முழக்கங்கள், அதாவது அவர்கள் விரும்பிய தீண்டாமை ஒழிப்பு ஆகியவை – சாதி ஒழிப்பிற்கான திட்டமோ, நடைமுறையோ, அதற்கேற்ற அமைப்பு – அணிகள் பலமோ இல்லாததால் வெற்றுச் சவடாலாகிப் போயின. திருமாவளவன் ஒரு பிரிவு தலித் மக்களிடம் பிரபலமான தலைவரானார். அவர் பேசிய கூட்டங்களுக்கு கணிசமாக மக்கள் வந்தார்கள்.

இப்படி திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது.

’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன.

அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம்.

முத்தாப்பாக, விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட,  வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர். இந்த விவரங்களெல்லாம்  புதிய ஜனநாயகம் இதழில் விரிவாகவே பதிவாகியிருக்கின்றன. இப்போது அடுத்த கட்டமாக, சிறுத்தைகள் எந்தப் பாதையில் சொல்கின்றனர் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம் என்ற வேட்பாளரைக் கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம், அந்தப் பிரமுகர் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா;  சி.பி.ஐ வழக்குகளைச் சந்தித்து வருபவர். அவ்விவகாரம் சந்தி சிரித்ததும், ஏதோ ஒரு முன்னாள் நீதிபதியை கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கும் கட்சிக்கும் அதற்கு முன்னர் கொள்வினையோ, கொடுப்பினையோ கிடையாது.

இதற்குமுன் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய சொல்வப்பெருந்தகை உலகறிந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி. அதிலேயே பல கோடிகளைச் சேர்த்தவர். கூடுதலாக, ஜெயாவின் வளர்ப்பு மகனது கருப்புப் பணத்தையும் சில பெண் தொடர்புகள் மூலமாக இவர் லவட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுவதுண்டு. சொல்வப்பெருந்தகை இப்போது பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறுத்தைகளும் இதை பெரியபிரச்சினையாக்கவில்லை. ஆக்கினால், சேர்ந்த வண்டவாளங்கள் அம்பலாமாகும் என்ற பயம்தான் போலும்.

சொல்வப்பெருந்தகை காலத்தில்தான், சிறுத்தைகளின் கட்சி தற்போதைய திருத்தமான வடிவைப் பெற்றது. இதன்படி, உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப் பஞ்சாயத்து சேபவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் சேயும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் சொலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பனை செய்தல், சினிமா கட்டப் பஞ்சாயத்து செய்தல் – இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது சிறுத்தைகளின் வெளிமுகங்கள்.

இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம்.

ஆக, வசூலிப்பதற்கு இவ்வளவு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட்டபடியால், இந்தக் கட்டமைப்பைத் தக்க வைப்பது எப்படி? அதற்குத்தான் மூன்று மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையைச் சாக்காக வைத்து மாநாடு என்று பிளெக்ஸ் பேனர்களில் அமர்க்களம் சேகிறார்கள். இதைப் பார்க்கும் மக்களெல்லாம் சிறுத்தைகள் பெரும் வளர்ச்சி பெற்றதாக நம்ப, முதலாளிகள் இனிமேல் அரசியல் கட்சிகளுக்குக் காசு கொடுக்கும் பட்டியலில் சிறுத்தைகளையும் சேர்க்க, மாற்றுக் கட்சிகளுக்கோ சிறுத்தைகளின் ‘பலத்தை’ அறிந்து அவர்களுக்கு சீட்டுக்கள் அதிகம் கொடுக்க வேண்டுமோ என யோசிக்க – இப்படி பல விதங்களில் திருமாவின் ‘கொள்கை’ மாநாடுகள் பயன்படுகின்றன.

இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்துத்தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார். அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் நடுத்தர வர்க்க தலித் மக்களின் கோரிக்கைகளைச் சட்டசபையில் பேசுவார். வெள்ளை அறிக்கை, பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், ஆதி திராவிடருக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், அரசுப்பணி மாற்றம் – இப்படியான அரசு கட்டப் பஞ்சாயத்துகளை அவர் சேகிறார். இதனால் கணிசமான அரசு, நடுத்தர வர்க்க தலித் மக்கள் தமது சுயநலத்திற்காகச் சிறுத்தைகளை ஆதரிக்கின்றனர்.

இப்படி லும்பன்களும், நடுத்தர வர்க்கமும் இணைந்த கலவையாக காட்சியளிக்கும் சிறுத்தைகளின் அரசியல் முகத்தை அடிக்கடி புதுப்பிப்பதற்குத்தான் ஈழம் பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அடிக்கடி அறிக்கை விடுவார். மாநாடு நடத்துவார். பேட்டிகள் கொடுப்பார். மற்றபடி, முன்பெல்லாம் சிறுத்தை அணிகள் தலித் அரசியல், தலித் தலைமை, தலித் புரட்சி என்றெல்லாம் ஆவேசமாக பேசுவார்கள். இப்போது எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை என அக்கட்சித் தோழர்களே வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொழிலை ஒரு அளவுக்குதான் செய்ய முடியும். அ.தி.மு.க; தி.மு.க. அளவுக்கெல்லாம் பிரம்மாண்டமாகச் செய்ய முடியாது. கருணாநிதி கூட சிறுத்தைகளை ஓரளவுக்கு அனுமதித்து விட்டு, தேவையான நேரத்தில் ஆப்படிப்பார். இதை திருமாவும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு இந்த விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு  ஆடப்பட்டு வருகிறது. பிளெக்ஸ் பேனரில் எவ்வளவு ஆவேசமாக மீசையை திருமா முறுக்குகிறாரோ, அந்த அளவுக்கு அரசியல் பிழைப்புவாதம் மறைந்திருக்கிறது என்று பொருள்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் அப்பாவி ஈழத்தமிழன் மட்டும் திருமாவை ஈழத்திற்கான ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் தூரம் அதிகம்தானே?

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

52 மறுமொழிகள்

  1. திருமா – பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!…

    கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது. https://www.vinavu.com/2009/09/07/thiruma/trackback/

  2. //இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள்
    எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர்.//

    அரசியல் ரீதியாக, பிழைப்புவாதிகள் என்கிறீர்கள். சரி! எலும்புகளை கவ்வியவாறு என வார்த்தைகளை
    பயன்படுத்தி கேவலப்படுத்துவது எந்தவிதத்தில் சரி?

    • Ahahahahahahahaaa …..ahahahahahaaaaa. I like that, enna thappu avan eludhirathala, they are after little bone pieces. Manangetta political leaders.

      More than 300 homes been burned down to the ground, oru naikuda antha vanniayargala pudhichi jaila poda mudiyala, apppa enna bonekka alaigira naigalinnu chollatha what else we must say about them.

      I think, the author made an exact description of these so called dalit politicians.

  3. ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் உயர்சாதி வெள்ளாள ஈழத்தமிழர்கள் மட்டும் இந்தியாவில் தலித் திருமாவை பணம் கொடுத்து உசுப்பி விட்டு ஈழம் காணலாம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் உயர்சாதி வெள்ளாள ஈழத்தமிழர்கள் மட்டும் ஈழத்தில் தலித் போராளிகளை பணம் கொடுத்து உசுப்பி விட்டு ஈழம் காணலாம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

  4. இப்படிப்பட்ட அரசியல் வாதிகளுடன்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்து இருந்தார்கள்,மீண்டும் வைப்பார்கள்?
    இல்லை என்று சொல்ல முடியுமா…?

  5. (புதிய)ஜனநாயகத்தின் பிழைப்புவாதம் நன்றாக தெரிகிறது,தப்போ சரியோ எதையும் உங்களால செய்யமுடியலையே ஏன்,சிதம்பரம் கோவில் தீட்ததர் பிரச்சனையை விட்டால் எதையும் நீங்க செய்யாதபோது வெறும் வெற்று தூற்றுதல் உங்களுக்கு நல்லதல்ல,தலித் பிரச்சனையை கொஞ்சம் முனெடுத்து போராடி பாருங்க எப்படி பிரச்சனையை எதிர்கொள்வது என்று உங்களுக்கு அப்பறம் தெரியும்.

    • இல்லை. ம.க.இ.க தோழர்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டிருப்பவர்கள் தாம். அவர்க‌ளின் பொருளாதார கொள்கைகள் மீது எமக்கு வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் நேர்மை, அர்பணிப்பு மற்றும் தியாக வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை உண்டு. ஊழல் மிகுந்த, போலிகள் மிகுந்த இந்தக்காலத்தில், கடும் நிதி நெருக்கடிகளிலும், தொடர்ந்து போராடி வரும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் தாம்.

      என்ன, பல நேரங்களில் “தவறான எதிரிகளை” தேர்ந்தெடுத்து விடுகின்றனர். (உ.ம் : ரிலையன்ஸ் ஃப்ரெஸ்.) பொதுதுறை நிறுவன ஊழல் அதிகாரிகள், தொழிற்சங்க ஊழல் தலைவர்கள் (எஸ்.ஆர்.எம்.யூ கண்ணையா போல), ஊழல் அரசியல்வாதிகள் : இவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இன்னும் பாராட்டலாம். மற்றபடி பாசிச, ஊழல் அரசியல் களத்தில் இவர்கள் கண்டிப்பாக தேவை தான். உருப்படியான வேறு அமைப்புகள் அனேகமாக எங்கும் இல்லைதான்.

      “ஓட்டு பொறுக்கிகள்” என்ற சொல்லாடல் சரியல்ல. பணம் மற்றும் இலவசங்கள் கொடுத்து ஓட்டு வாங்குபவர்களை வேண்டுமானால் அப்படி திட்டலாம். ஆனால் வாக்களர்களும், தேர்தல்களும் அடிப்படை ஜனனாயகத்தின் அம்சங்கள். கம்யூனிஸ்ட் நாடுகளில் நடந்த தேர்தல்கள் பற்றி இங்கு பலருக்கும் தெரியாது.
      ஒரே கட்சி (கம்யுனிஸ்ட்), ஒரே வேட்பாளர் தான், அனைத்து வகை தேர்தல்களிலும். மக்கள் வாக்களிக்காமல் இருக்கலாம். (மிகவும் கஸ்டம்). அல்லது சுமார் 98 சதவித வாக்குகளை “ஏகமனதாக” பெற்ற கட்சியின், தேர்தலின் ஒரே வேட்பாளர், “வெற்றி” பெறுவார். இதுதான் “புதிய” ஜனனாயகம் !!
      அதற்க்கு நம் தேர்தல் முறை எவ்வளவோ பரவாயில்லை.

      திருமா வழிதவறி போனதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. எது எப்படியோ, 80கள், 90கள் போல இன்று தமிழகத்தில் சாதி மோதல்கள், கலவரங்கள் பெரிய அளவில் இல்லைதான். (ராமதாசுடன் ராசியானதிம் ஒர் காரணி). வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல. ஆனால் 90கள் வரை திருமா சென்ற இடங்களிலெல்லாம்
      வன்முறை தொடர்ந்தது. (காரணிகள் பல) ; இன்றைய இளைஞர்கள் முன்பு போல் “தலைவனை” நம்பி ஏமாறும் இளுச்சவாயன்கள் இல்லை. உலகமய்மாக்கலின் விளைவால், மிகுந்த விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், முன்பு போல் வட மற்றும் தென் தமிழகத்தில் பெரிய சாதி கலவரங்களை முன்பு போல சுலபமாக “தூண்ட” முடிவதில்லை.

      சரி, இருக்கட்டும ; இன்னொன்று :மார்கிஸியவாதிகளுக்கு நடுத்தர வர்கத்தை கண்டால் வெறுப்பு, இளக்காரம் தான். காரணம் “செம்புரட்சிக்கு” இவர்கள் தடையாய் இருப்பார்கள். அதனால் கண்மூடித்தனமான சாடல் !

  6. //(புதிய)ஜனநாயகத்தின் பிழைப்புவாதம் நன்றாக தெரிகிறது,தப்போ சரியோ எதையும் உங்களால செய்யமுடியலையே ஏன்,சிதம்பரம் கோவில் தீட்ததர் பிரச்சனையை விட்டால் எதையும் நீங்க செய்யாதபோது வெறும் வெற்று தூற்றுதல் உங்களுக்கு நல்லதல்ல,தலித் பிரச்சனையை கொஞ்சம் முனெடுத்து போராடி பாருங்க எப்படி பிரச்சனையை எதிர்கொள்வது என்று உங்களுக்கு அப்பறம் தெரியும்.// இளையராஜா பிறந்த ஊரிலேயே தலித்துகளுக்காக போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள். அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    • தோழர் அறிவுடைநம்பி, தலித்துக்களுக்காக யார் அதிக அல்லது முக்கியமான போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்ற வழியில் இந்த விவாதத்தை கொண்டுபோக வேண்டாம். தலித்தியத்தின் அரசியல் ஓட்டான்டித்தனத்தை விவாதிக்கும் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுள்கள்.

  7. புதிய ஜனநாயகத்தின் விமர்சனம் கண்டனத்துக்குரியது.அய்யா இளையராஜா ஊரில் நீங்கள் போராடிவிட்டீர்கள் என்றால் நீங்கள் சாதியை ஒழித்துவிட்டது என்று அர்த்தமா? இந்த எழவு காரித்தையெல்லாம் போலி கம்யுனிஸ்ட் என்று சொல்கிறீர்களே அவர்கள் கூட செய்துவிட்டார்கள்.அவர்களும்,நீங்களும் ஒன்றா? விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள் யாரும் கிடையாது நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் ஒரு நல்ல மார்க்ஸியவாதி,சாதி அமைப்பைப்புரிந்தவன், திருமாவின் ஓட்டு அரசியல் வெற்றி தோல்வியை இயக்கவியல் ரீதியாக பார்க்கிறவன்,தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலைகளைப்புரிந்தவன், இந்த‌ விமர்சனத்தை எடுத்துவைக்கக்கூடிய சரியான தருணம் அல்ல என்பது தெரியும்.தோழர் மருதையன் கூட ஒரு பேட்டியில் விமர்சித்துள்ளார்.அவர் விமர்சிப்பது அறிவுரிதியான, முற்போக்கான நடைமுறையில் வி.சி.யின் கொள்கை இயக்கம் தோல்வில்தான் முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.திருமாவின் வளர்ச்சி தாழ்த்தப்பட்ட மக்களின் அவல‌ நிலையை போக்காது என்பது தான் அவரது பார்வை.மிகவும் சரி. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைப்பொருத்தமட்டில் வி.சி கட்சி, தங்களுக்குள் இருக்கும் உரசல்களை வி.சி தீர்த்துவைக்கிறது.
    தாழ்த்தப்பட்டமக்கள் ஒன்றிணைய முக்கிய காரணமாக இருக்கிறது.இது சாதிக்கட்சியாகவே வளர்ந்தாலும்,மார்க்ஸியபார்வையில் வளர்ச்சியாகதான் இருக்கும். ஏன்னென்றால் திருமா என்றைக்குமே பொது தலைவனாக முடியாது. அவர் தாழ்த்தப்பட்டமக்களின் தலைவனாகவே தான் இருப்பார்,பின்பு தோற்ப்பார்.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைப்பொருத்தமட்டில் மனரிதியாக ஒரு வளர்ச்சிதான். இது கண்டிப்பாக அவர்களை கம்யுனிஸ்ட்டுக்களை நோக்கிதான் வரவைக்கும். அவர்கள் வலிக்கான மருந்து மாக்சியதால்தான் போடமுடியும்.அதை விடுத்து திருமாவை விமர்சித்து ஏன் தாழ்த்தப்பட்டமக்களின் மனங்களில் இருந்து விலகிபோரிங்களோ.

    • தோழர். ரூபகாந்தன், உங்கள் விமரிசனம் சரியானது, அறிவுடைநம்பியின் பதிலில் தவறுள்ளது. உங்கள் விவாதப்படி ‘தாழ்தப்’பட்டவர்களை மார்க்சியம் நோக்கி கொண்டுவரவைக்க வேண்டுமென்றாலும், அதற்கு திருமா போன்ற சமரச சக்திகளை அம்பலப்படுத்தித்தான் ஆகவேண்டும். அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாயைகளிருந்து மட்டுமல்ல, தனிநபர் வழிபாடு என்னும் கற்கால சிந்தனைமுறையிலிருந்தும் கூடத்தான். மாற்று யோசனை ஏதாவது உங்களிடம் உள்ளதா? பகிர்ந்து கொள்ளுங்கள். பயனளிக்கும்

  8. சிதம்பரம் கோயிலுக்கு சென்று தீட்ஷிதரின் ஆசி பெற்று தனது பிறந்த “பாவத்தை ” போக்கிக்கொண்டார் போலும்.

    தாழ்த்தப்பட்டவளுக்கு மேல் சாதி ஆம்பிளைங்க வேண்டும் என சாதி வெறி பிடித்து உறுமிய சேது ராமன் ஊட்டிவிட்டது கருப்பட்டியா இல்லை ……………. எது வாயிருந்தா என்ன பணம் கிடைச்சா சரிதான் கொள்கை, மானமாவது வெங்காயமாவது செயாவூட்டுல கொஞ்ச நாள் கர்ணா வீட்டுல கொஞ்ச நாள் என காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது சிறுத்தைகள்.

    திருப்பி அடி
    திமிறி எழு
    அப்படியே சீட் கிடைச்சா வாய மூடு

  9. சிறுத்தைகள் சிறுத்து, சிறுத்து…….
    முதலெழுத்து மட்டும் தனித்து நெடிலாகி
    சீ என்று நிற்கிறதிப்போது.

    தோழமையுடன்
    செங்கொடி

  10. விடுதலை சிறுத்தைகளின் வெறியாட்டம் – தோழர் முகுந்தன் மீது தாக்குதல்.

    புதிய ஜனநாயகம் செப்டம்பர் ‘09 மாத இதழில் விடுதலை சிறுத்தைகளின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலபடுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

    இந்த பிழைப்புவாத சந்தர்ப்ப அரசியல் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாத விடுதலை சிறுத்தைகள், புதிய ஜனநாக தொழிலாளர் முண்ணனி மாநில செயலாளர் தோழர் முகுந்தன் அவர்களை நேற்று அவரின் அறையில் புகுந்து அவரையும் மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    http://vrinternationalists.wordpress.com/2009/09/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/

  11. http://vrinternationalists.wordpress.com/2009/09/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/
    விடுதலை சிறுத்தைகளின் வெறியாட்டம் – தோழர் முகுந்தன் மீது தாக்குதல்..

    புதிய ஜனநாயகம் செப்டம்பர் ‘09 மாத இதழில் விடுதலை சிறுத்தைகளின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலபடுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

    இந்த பிழைப்புவாத சந்தர்ப்ப அரசியல் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாத விடுதலை சிறுத்தைகள், புதிய ஜனநாக தொழிலாளர் முண்ணனி மாநில செயலாளர் தோழர் முகுந்தன் அவர்களை நேற்று அவரின் அறையில் புகுந்து அவரையும் மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகளின் வீரம் என்ன என்பதை நாம் அனைவரும் கண்கூடாக அறிந்ததே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதாரண சுவரெழுத்து பிரச்சனையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு தலித் சகோதரனின் கையை வெட்டிய வீரர்கள் தான் இவர்கள். ஆனால் மீசையை முறுக்கி தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக இவர்களின் கை மட்டுமல்ல மீசையும் ஏனோஒருபோதும் எழுந்ததில்லை.

    தாழ்த்தபட்டமக்களின் மீது சவாரி செய்யும் இவர்கள் கட்டபஞ்சாயத்து ஒன்றையே தன் மூலதனமாக கொண்டு பனத்தை பெருக்கி வருகிறார்கள்; இவ்வாறு பணத்திற்காய் பொருக்கி தின்னும் பல நேரங்களில் தாழ்த்தபட்ட மக்களுக்கெதிராகவே கட்டபஞ்சாயத்து செய்தும் வருகிறார்கள். அதற்காகவே ஆதிக்க சாதியர்கள் இவர்கள் கட்சியில் சேர்ந்து இவர்களின் மீது சவாரி செய்து லாவகமாக தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி வருகிறார்கள்.

    சமூக அக்கறையுடன், சமூக மாற்றத்தை நோக்கி வரும் பல தாழ்த்தபட்ட இளைஞர்களையும் காயடித்து தவறான, சந்தர்ப்பவாத அரசியலில் அவர்களை பழக்குகிறார்கள்.

    சமூக விடுதலையை நோக்கும் இளைஞர்களே! உங்கள் கவனத்திற்கு!

    சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாய் பிரசாரம் செய்தது ம.க.இ.க. ஆனால் விடுதலை சிறுத்தைகளோ அம்மாணவர்களுக்கெதிராகவே பேசவும் செய்தார்கள்; அம்மாணவ்ர்கள் தொடர்ந்து கல்வி பயில அரசு அனுமதிக்க கூடாது என்று அரசிடம் கோரிக்கையும் வைத்தார்கள்.

    திருமாவின் முறுக்கிய மீசையில் தாழ்த்தபட்ட மக்களுக்கெதிரான துரோக செயல்களே ஒளிந்துள்ளதை என்று காண போகிறீர்கள்?

    ராமதாசுடன் கூட்டணி, முத்துராமலிங்கம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை. இவை பற்றியெல்லாம் நீங்கள் எப்போது சிந்திக்க போகிறீர்கள்?

    இன்று பார்ப்பனர் முதல் ஆதிக்க சாதிவெறியர்கள் வரை விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேருவது எதற்காக? தாழ்த்தபட்ட மக்களுடன் ஒற்றுமையை பேணவா? அவர்களின் வர்க்க நலன்களுக்காகவும், அவர்கள் தாழ்த்தபட்ட மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவும் போது அதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பும் போதும் தாழ்த்தபட்ட மக்களுடன் வி.சி யே பஞ்சாயத்து பேச வேண்டும் என்னும் முன் எச்சரிக்கை நடவடிக்காக மட்டுமே. மேலவளவு, திண்ணிய சம்பவங்களே இதற்கு சான்று. இதை அம்பலபடுத்தும் விதமாகவும், இதற்கு ஆதாரமாக பார்ப்பனர் கூட்டம் வி.சி யில் இணைந்த படத்தையும் நம் இதழில் வெளியிட்டுள்ளோம்.

    இளைஞர்களே உங்களை கவர்ந்த முழக்கங்களின் பின்னால் ஒளிந்துள்ள நட்சத்திர குறியில்லாத நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்கியங்களே இவை.

    அடங்க மறு – கருணாநிதியிடம் மட்டும் அடங்கி இரு

    அத்து மீறு – தன்னை யாராவது விமர்சித்தால்

    திமிரி எழு – ஆதிக்க சாதிவெறியர்களுக்கெதிராக மட்டும் எழாதே

    திருப்பி அடி – தாழ்த்தபட்ட சகோதரனை மட்டும்

    ஈழத் தமிழருக்காய் உண்ணாவிரதம் இருந்த போது தமிழகத்தில் இருந்து காங்கிரஸை வேரறுப்போம் என்று சொன்ன திருமா தான் தேர்தல் நேரத்தில் காங்கிரஸடுடன் கூட்டணி தர்மத்தை பாதுகாத்தார்.அதோடு மட்டுமல்ல சோனியா சென்னை வந்த போது “அன்னை சோனியா வாழ்க” என்று வாழ்த்தவும் செய்தார். சொல் ஒன்று செயல் வேறு.

    இளைஞர்களை உசுப்ப மேடை பேச்சுக்களில் மட்டுமே முழங்கும் சக்திகள் தேர்தல் நேரங்களில் மட்டும் ஏனோ அடக்கமாய் வாசிக்கிறார்கள்.

  12. திருமாவின் பேச்சுகளும் முழக்கங்களும் பிரமாதமாக இருக்கும். ஆனால் தன்னுடைய அரசியலுக்காக, வளர்ச்சிக்காக தமிழ், ஈழம், தலித் அரசியல் போன்றவற்றை பயன்படுத்தி கொள்கிறார்.

    இப்போது பிளக்ஸ் மற்றும் சுவர் விளம்பரங்களில் திமுக, அதிமுக பிழைப்புவாத கட்சிகளுக்கு இணையாக கருணாநிதி, ஜெயா போல் திருமாவளவனையும் பல உவமைகளால் வருணிக்கின்றனர்.

  13. “விடுதலை சிறுத்தைகள், புதிய ஜனநாக தொழிலாளர் முண்ணனி மாநில செயலாளர் தோழர் முகுந்தன் அவர்களை நேற்று அவரின் அறையில் புகுந்து அவரையும் மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.”

    http://vrinternationalists.wordpress.com/2009/09/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/

    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  14. நேற்று இரவு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை தாக்கியதன் மூலம், பிழைப்புவாத, பொறுக்கி அரசியலோடு, ரவுடிதனமும் சேர்ந்திருக்கிறது.

    நேர்மையாக தனது அரசியலை பேச முடியாத பொழுது இந்த நிலைக்கு வந்து சேர்கிறார்கள்.
    வன்மையாக கண்டிக்க தக்கது.

    • //நேற்று இரவு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை தாக்கியதன் மூலம், பிழைப்புவாத, பொறுக்கி அரசியலோடு, ரவுடிதனமும் சேர்ந்திருக்கிறது.//

      விசி கட்சி அதிகாரப் பூர்வமான செட்டில்மெண்டு குருப்பாக(கட்டப்பஞ்சாயத்து) மாறி வெகுநாட்களாகிவிட்டது. இதில் பங்கு பிரிக்கும் தகராறில் கட்சிக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகிறார்கள் இவர்கள். எனவே, ரவுடியிசம், கழிசடைத்தனம், பொறுக்கித்தனம் அந்த கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் தாதாக்களுக்கு புதிதல்ல. ஆனால், முகுந்தனை தாக்கிய பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் ரீதியான விமர்சனக் கட்டுரைக்காக தாக்கியுள்ளனர். இது முற்றிலும் புதியதொரு நடவடிக்கை.

  15. இந்த கருமா(திருமா)ந்திரம் புடிச்சவனா பற்றி தான் முன்னாடியே தெரியுமே. இவனைப் பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. காங்கிரஸ்சை ஒழிப்பதுதான் என் முதல்வேலை என்று சொன்ன இந்த சர்க்கஸ் சிறுத்தை இன்று தமிழ் இனத்தை வெறுக்கிற சோனியா பாதத்திலே படுத்தது புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் இங்குள்ள உணர்வாளர்கள் அறிந்ததுதான்.

    தோழமையுடன்,

    செந்தில்.

  16. ரூபகாந்தன், வி.சி தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றிணையும் கட்சியா? தாழ்த்தபட்ட மக்கள் என்றால் யார்? பார்பனீயத்தால் ஒடுககப்பட்டுவரும் பள்ளர், பறையர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஆகியோர் அனைவரும் தாழ்த்தபட்ட மக்கள். இவர்கள் அனைவருக்குமான ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான கட்சியாக வி.சி இருந்ததா என்றால் இல்லை என்பது கசப்பான உண்மை. ஏனெனில் வி.சி யும் உட்பிரிவு அரசியலை கொண்ட பிரிவினை சாதி கட்சியாகத்தான் இருக்கிறதே தவிர தாழ்த்தபட்ட மக்களுக்கான கட்சியல்ல. பள்ளர், பறையர், அருந்ததியர் போன்ற அனைத்து சமூகத்திற்கான உரிமையை பற்றி பேசுவதே நேர்மையான ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தபட்ட மக்களின் கட்சி. திருமா மட்டுமல்ல கிருஷ்ண சாமியும் உட்பிரிவை கொண்டே சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். திருமாவின் கட்சி பறையர்களின் கட்சிதான். கிருஷ்ணசாமியின் கட்சி பள்ளர்களின் கட்சிதான்.யார் உண்மையான ஒடுக்கபட்ட சமூகத்தின் உட்பிரிவை பாராமல் நேர்மையாக குரல் கொடுக்கிறார்களோ, அவர்களை தாழ்த்தபட்ட மக்களுக்கான கட்சி என்று பெயரிட முடியும்.

  17. விடுதலை சிறுத்தைகளின் வெறியாட்டம் – தோழர் முகுந்தன் மீது தாக்குதல்
    இந்தக் கட்டப்பஞ்சாயத்து கழிசடை நாய்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்? இவனெல்லாம் ஈழ மக்களுக்கு ஆதரவா மாநாடு நடத்துகிறானாம் கேட்கவே அசிங்கமாயிருக்கு. ஒரு விமர்சனத்தையே தாங்கமுடியாத கோழைகள்.

  18. ஃபாசிசம் என்பதற்க்கு மிக சரியான உதாரண்ம் தான் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். கடும் கண்டனங்கள். எந்த வித விமர்சனத்தையும், மாற்றுக்கருத்துக்களையும் ஏற்க்க மறுத்து, விமர்சகர்களை தாக்குவது ஃபாசிசத்தின் அடிப்படை.

    வி.சி கட்சியில் நன்கு படித்த, அறிவுஜீவியான‌ ஒரே எம்.எல்.ஏ ரவிகுமார். ஃபேஸ்புக்கில் இருக்கிறார். அவரிடம் “விளக்கம்” கேட்க்கலாம்.

    போலிஸார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ள‌ன‌ரா ? என்ன‌ நிலை ? தொலைகாட்சி ஊட‌க‌ங்க‌ளில் இதை ப‌ற்றி
    அதிக‌ம் பார்க்க‌ முடிய‌வில்லை. இருட்ட‌டிப்பா ? ப‌த்திரிக்கைக‌ள் ?

    • //Mr Thiruma is following Mr Prabakaran foot step on repling his critics.
      Well done Thiruma Keep it up.// ம்ம்ம்..சிலருக்கு அனுபவிச்சா தான் புரியுது.

  19. விடுதலை சிறுத்தைகளை விமர்சனம் செய்தால் புத்தகம் நன்றாக ஓடும் என்கின்ற எண்ணத்தில் “புதிய ஜனநாயக்தில் ” வெளி வந்து இருக்கும் கட்டுரை நன்றாக விற்பனையாக வாழ்த்துக்கள் ………….

    ம. க.இ.க போன்ற இயக்கம் எல்லாம் ஒரு பாப்பான் தலைமயில் இயங்கிவருவதும் ,அப்படி பட்டவர்கள் திருமாவை விமர்சனம் செய்வதும் புதிதல்ல !!!

    makkal kalai ilakiya kazhkam chief is brahmin ?? oh……… then they will write like this only

    why Brahmin should not say true or what ??

    பார்ப்பானை நக்கி வாழ்வது உன் போன்ற ஓட்டுப் பொறுக்கிகள்தான்../././././

    What ashok said is True m.k.i.k chief is Brahmin

    m.k.ik means???

    brahmin headed movement is speaking about thiruma and dalits

    haaaaaaaaaaa
    aaaaaaaaaaaaaaaaaa
    aaaaaaaaaaaaaaaaa

    makkal kalai ilakiya kazhakam is lead by IYER

  20. வி.சி.கட்சியின் பயணங்கள் பாதை மாறிவிட்டதும், கட்சிக்காக கொள்கைகளை மாற்றி யமைப்பதும் எல்லோருக்கும் குறிப்பாக மாற்றங்களை விரும்பி உழைக்கிற மக்களுக்கு தெரியும். ஒருவேளை திருமாவளவனுக்கு கூட தெரிந்திருக்கும். வெள்ளம் தலைக்குமேலே போகும்போது என்னசெய்வது என்று தெரியாமல் ஒரு கட்சி யை அமைப்பது தவறு என்பதையும் இவர்களுடாக கற்றுகொள்ள வேண்டியிருக்கிறது. எந்த மக்களின் விடுதலைக்காக பாடுபடுகிறார்களோ அந்த மக்களின் அறிவின்மையைப் பயன்படுத்தி குண்டர்படைகளை உருவாக்குவதும், பிரியாணி க்கும் குவாட்டருக்கும் (தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வார்த்தை) இளைஞ ர்களை இழுத்துசெல்வதும் அவர்களை உதிரிகளாக மாற்றுவதிலும் இந்திய ஜனநா யகத்தில்(?) சேர்ந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைகளாக இருக்கின்றது. இதில் வி.சி. ஒன்றும் விதிவிலக்கல்ல.
    முதலாளிகள், தரகர்கள், கோயிலில் பூசை செய்யும் பார்ப்பணர்கள் இந்த கட்சி யில் சேர்வது கட்சிக்கு பலத்தை சேர்த்துவிடுவதாக பயப்படவேண்டாம். அம்பானி, வால்மாட் மற்றும் வெளிநாட்டு முதலாளிளும் போய் சேருவார்கள். என்ன வித்தியாசம் உள்நாட்டு முதலைகளிடம் அதிகாரமாய் பறிப்பார்கள். வெளிநாட்டு முதலைளுக்கு பாதுகாப்பாய் இருப்பார்கள். கலைஞரை வென்றெடுப்பது எவ்வளவு கடினமோ அதேபோல்தான் திருமாவும். ஆனால் கட்சியில் மாற்றங்களை விரும்பாமல் எல்லோரும் இருந்து விடுவதில்லை. ஈழத்தமிழர்கள் ஒன்றும் இவரை நம்பி இல்லை. இவர் வேண்டுமானால் ஈழத்தமிழர்களை நம்பி இருக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் பிரச்சனைகள் இன்றி, சாதி மதக்கலவரங்களின்றி, உயர்ந்தவன் தா ழ்ந்தவன் வேறுபாடுகளின்றி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எந்த பிரச்சனைகளை எடுத்து போராடுவது? யாரை எதிர்த்து போ ராடுவது? பெரியார், அம்பெத்கர் கொள்கைகள் வெற்றி பெற்றுவிட்டன(?) அப்படியானால் போராடுவதற்கும் போராட பயன்படுவதற்கும் என்ன செய்வது? பாவம் ஈழத்தமி ழர்கள் இருக்கிறார்களே! கவலை ஏன்?

    /அகதி

  21. ஒருநாள் உணவில் அக்பருக்கு கத்தரிக்காய் பொரியல் கொடுத்தார்கலாம் அதன்சுவையில் மயங்கிய அக்பர்…உலகத்திலேயே சிறந்த்தகாய்கத்தரிதானென்ராராம் , உடனே பீர்பால் ஆமரசே கத்தரிக்காய்தான்மிகசிறப்பானகாயென்ராராம் தினமும் மன்னருக்கு கத்தரிக்காய் சமைத்து கொடுக்கப்பட்டது விளைவு அந்தகாய்மேலவருக்கு சளிப்புன்டாயிற்று ..உடனே உலகில்மோசமானகாயிதுதானென்றார் ,பீர்பால் உடனே ஆமாம் மோசமானது என்றார் . அக்பர் பீர்பாலைப்பார்த்து நான் நல்லதுஎன்றதும் நல்லதுஎன்ராய்…மோசமென்ரதும் மோசமென்கிராயே …..சட்டென்று கத்தரிக்காயெனக்கு சம்பளம்தரவில்லைஎன்ராராம் பீர்பால்.இதுபோல.. திருமாவுக்கு ஆமாம்சாமி போடுகின்ற சுயமாக சிந்திக்கத்தெரியாதமூடர்கள்தான் திருமாவின்[தொ]குண்டர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள்…தோழர்முகுந்தனைதாக்கிய,இந்தகாலிகலை வன்மையாககன்டிக்கின்றோம்.

  22. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர் திரு மானமிகு மாண்புமிகு உண்மைத்தமிழர் தொல்.திருமா அவர்களும் பாமர மக்களுக்களின் சாதிவெறியை தூண்டிவிட்டு தமிழ் தமிழன் ஈழம் என்று பேசிக்கொண்டும் பதவிக்காக சோனியாவின் கால்களில் வீழ்ந்து கொண்டும் தங்களது பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனை அம்பலப்படுத்துவோர்களை இப்படிப்பட்ட அல்லக்கைகளை வைத்து அசிங்கப்படுத்துகின்றார்கள். ராமதாசுக்கும் இந்த மானமிகு மாண்புமிகு உண்மைத்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எனக்குத்தெரியவில்லை.
    (வி.சி கட்சியினரே! உங்கள் தலைவரை எவ்வளவு மரியாதையாக குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்! இது போதுமா?)
    தோழமையுடன்,

    Ravi……

  23. திருமா அவர்களே இதே ரேஞ்சில் சென்றால் அடுத்த‌
    முதல்வர் நீங்க‌ள் தான், சிங்கம், புலி, கரடி, நரி, இருக்கு கவனம்.

    தொ(கு)ண்டர்களே… உங்கள் படை மென்மேலும்
    வளர்ந்து உலகிலேயே மிகப் பெரிய காலிப்படையாக வளர்ந்து கின்னஸ்சில்
    இடம் பிடிக்க வழிப்போக்கனின் வாழ்த்துக்கள்.

  24. ஜெயலலிதாவிற்கு இணையாக திருமாவின் பேனர் இருந்ததால் இப்படி ஒரு கட்டுரையை “புதிய ஜனநாயகம்” வெளியிட்டு உள்ளது என்ன செய்வது பாப்பான் தலைமையில் இயங்கும் பத்திரிக்கை அல்லவா !! அப்படி தான் இருக்கும் ….

    • அடடா நீங்கள் எல்லாம் கூட‌ பார்ப்பானை பற்றி பேச வந்துவிட்டீர்களே. உங்களுக்கு வெள்ளைப் பார்ப்பானை தானே தெரியும் ‘கருப்பு பார்ப்பானை’ தெரியாது இல்லையா ? இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். அய்யாவின் பெயரை கெடுக்கும் மானம் மரியாதை இல்லாத ‘வீரமணி’ யும் அண்ணலின் பெயரை கெடுக்கும் சூடு சொரணை இல்லாத ‘திருமாவும்’ தான் ‘கருப்பு பார்ப்பன குஞ்சுகள்’

  25. உங்களுடைய திருமாவைப் பற்றிய கட்டுரையில் பிழைப்புவாதம் பற்றி மட்டும்தான் குறிப்பிட்டுள்ளீர்கள். பிழைப்புவாதம் என்பது இன்று எல்லா கட்சியிலும் உள்ளது. ஏன் உங்கள் கட்சியில் கூட இருக்கலாம். அப்படி உள்ள பிழைப்புவாதம் எப்படி மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று விளக்கவில்லை. அவருடைய பிழைப்புவாத அரசியல் யாருக்கு சேவை செய்கிறது என்ற விளக்கமில்லை. இன்னொன்று இவர் எப்படி பிழைப்புவாதி என்று கூறுகிறீகள் என்று தெரியவில்லை. அம்பேத்கார் முதலில் காங்கிரஸ்தான் எதிரி என்றார், பிறகு காங்கிரசில் பங்கேற்றார். அவர்களுக்காக சட்டம் கூட இயற்றினார். அவர் செய்ததைத்தான் திருமா அவர்களும் முன்னோடியாக கருதி செய்கிறார். அன்று சாதி எதிரியான பார்ப்பன கட்சியான பண்ணையார் கட்சியான காங்கிரசிடம் கைக்கோர்க்கும்போது எப்படி சரியனாதோ அப்படிதான் திருமா அவர்களும் அந்த அரசில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர போராடுகிறார். இப்படி இருக்கும்போது எதை பிழைப்புவாதம் என்கிறீர்கள். வீரமணியை கருப்புப் பார்ப்பான் என்று வசைபாடுகிறீகள். பெரியார் அவர்கள் காமராஜர் காங்கிரசை, ராஜாஜி பார்ப்பன காங்கிரசை ஆதரித்தார் வளர்த்தார். ஆட்சியிலிருக்கும் வரை காங்கிரசை ஆதரித்துப் பிறகு (அதாவது 1954 முதல் தான் இறக்கும் வரை அவர் ஆட்சியில் இருப்பவரைத்தான் ஆதரித்தார்) திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணாவை ஆதரித்தார். அதே போல்தான் வீரமணி ஐயாவும் ஆட்சியில் இருப்பவரை ஆதரிக்கிறார். ஏனென்றால் ஆட்சியில் இருப்பவரை ஆதரித்தால்தான் சூத்திரர்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். அப்படி இருக்கும் போது வீரமணி ஐயா அவர்களை மட்டும் நீங்கள் கருப்பு பார்ப்பான் என்று திட்டுகிறீகள். தயவு செய்து ஒரு நீதியாக கூறுங்கள். அவர்கள் பிழைப்புவாதியாக இருப்பது போய் நீங்கள் சந்தர்ப்பவாத சேற்றில் மூழ்கி நீங்கள் பிழைப்பவாதியாக புதைந்து விடப் போகிறீர்கள்.

    • தலித் தலைவரை கொச்சைப் படுத்தவே இவர்கள் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். திருமா அவர்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் ஏத்துக்கிட்டவர். அவரைப் போய் சந்தர்ப்பவாதி என்கிறார்கள். அம்பேத்கார், பெரியார் இவர்களைத் தான் பின்பற்றுவார். இவர்கள் பார்ப்பானை ஆதரிப்பது போல் சித்தரிக்கிறார்கள். உண்மையில் நீங்கள் சரியான நேரத்தில் சொன்னதற்கு நன்றி. இவர் எங்கிருந்தாலும் அம்பேத்கார் போல் தாழ்தப்பட்டவர்களுக்கு நன்மை செய்வார். இவரை போல் மற்ற தலித் தலைவர்களும் நன்மை செய்வார்கள். தாழ்தப்பட்டவர்கள் சாதி ரீதியாக கட்சி அமைத்தால் இவர்களுக்கு பிடிக்காது. அம்பேத்காரை போற்றுவார்கள் பெரியாரை போற்றுவார்கள். ஆனால் இவர்களைத் தவிர வேறு யாராவது அவர்களை பின்பற்றுவதாக கூறினால் இவர்களுக்கு பிடிக்காது. உங்களுடைய கருத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.

  26. வெறும் அவல்//

    தோழரே நீங்க சரியாகப்புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.நானும் திருமாவை ஏற்றுக்கொண்டு இருந்தேன்.
    ஆனால் அவரின் கொள்கை சரியான பாதையாக தெரியவில்லை.இவர் இன்று சொல்லும் பாதை பல அரசியல் கட்சிகள் சென்ற பாதைதான்.ஆதலால் கண்டிப்பாக இது தனிநபரின் சுயநலத்தை நோக்கியே சொல்லும்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேவை அறிவு,அரசியல்,பொருள்,சாதி விடுதலை,இவையேல்லாம்ப்பற்றி எந்த திருமாவளவன் தொண்டனுக்கே தெரியாது.அவன் பிழைப்புவாதியாகி,குடிக்காரனாக,கொள்ளைக்காரனாக ஆகி தன் இனத்துகாரனிடத்திலேயே உயர்வு,தாழ்வுப்பார்க்கும் பார்ப்பான் வேலையை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது தெளிவு. இவர் செய்த சாதனைகள் என்ன சொல்லமுடியுமா? அம்பேத்காரரே சாதியத்தை சரியாக புரிந்தும்,தாழ்த்தப்பட்டவர்களுக்கு எது தேவை என்றும், யாருடன் இருந்தால்,சேர்ந்தால் தன்மானத்துடன் வாழலாம் என்று கூறாமல் சென்றது தான் கண்ட கண்ட நாய்கலேல்லாம் அவரின் பெயரை உபயோகப்படுத்துரார்கள்.

  27. thiruma avarkalai vimarsippatharku ore karaNam than, ungkalai naalu per kavaNikkaveendum , avvalae. vaasakarkalai ematra veendam. kazpunarchikkum or aLavundu.

  28. June 9, 2010 at 7:39 am

    thiruma avarkalai vimarsippatharku ore karaNam than, ungkalai naalu per kavaNikkaveendum , avvalae. vaasakarkalai ematra veendam. kazpunarchikkum or aLavundu.//

    அய்யா இந்த கட்டுரை கூறி இருப்பதுதான் உண்மை.நீங்கள் திருமாவின் கட்சியையும்,அதன் செயல்படும் விதத்தையும், தொண்டர்களின் நடத்தையும்,கவனித்தீற்களானால்,உங்களுக்கே புரியும்.

    • roobakanth avarkalukku,avarkalin kolkaiye thiruppi adi enpathu thaane , avarkal thalai nimira vendum , athai udaikka ninaikkum  sakkthi allathu ninaiporai viratta vendum, { ethir tharappu edaiyuru seithiruppar}.illai endral kaththium kambum etharkku, anbu onre pothume

  29. roobakanth avarkalukku,avarkalin kolkaiye thiruppi adi enpathu thaane , avarkal thalai nimira vendum , athai udaikka ninaikkum sakkthi allathu ninaiporai viratta vendum, { ethir tharappu edaiyuru seithiruppar}.illai endral kaththium kambum etharkku, anbu onre போதுமே//

    நண்பரே எனது கொள்கை திருப்பி அடிப்பது அல்ல. நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் உண்மைகளைதான் கூறுகிறேன்.சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதியில்,தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நடக்கும் அடிதடி சம்பவங்களை நீங்கள் பார்த்தால் உங்களுக்கே புரியும். இவர்கள் சண்டை,வெட்டுக்குத்து போடுவது வேறு சாதிக்காரர்களிடத்தில் இல்லை.தன் சாதிக்குள்தான்.அதுவும் இரண்டு பகுதியிலும் வி.சி.கட்சிகாரர்கள்தான் பெரும்பாலும் இருப்பார்கள்.கொஞ்சம் சாதிவெறி தெரியாமல் இருக்கும் சென்னையிலேயே தனக்குள் சண்டைப்போட வைத்துக்கொண்டு உள்ளது உங்கள் வி.சி கட்சி.குறைந்தபட்சம் தன்சாதிக்குளாவது சண்டைப்போடக்கூடாது,ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று எந்த மேடையிலாவது உங்கள் தலைவர் அறிவிக்கிறாரா?அல்லது தனது தொண்டர்களிடத்திலாவது எதாவது வகுப்பு எடுக்கீறாரா?.ஒன்றுமே கிடையாது. தொண்டனை முட்டாளாக,அடியாளாக,கட்டப்பஞ்சாயித்து செய்பவனாக,பேனர் நாயகனாக தான் அவனை உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

  30. புதிய ஜனநாயகத்தின் விமர்சனம் கண்டனத்துக்குரியது.விடுதலை சிறுத்தைகளை விமர்சனம் செய்தால் புத்தகம் நன்றாக ஓடும் என்கின்ற எண்ணத்தில் புதிய ஜனநாயம் வெளியிட்டு இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. உங்கள் புத்தகத்தை அதிகமாக படிப்பவர்கள் யாரென்றும் உங்களது ம.க.இ.க வில் அதிகம் இருப்பது யாரென்றும் யோசித்து பாருங்கள். இது போன்ற கேவலமான கட்டுரைகளை வெளியிடுவதில் எத்தனை இன்பம் அய்யா உங்களுக்கு. திருமாவை விமர்சனம் செய்வதென்றால் அனைவருக்கும் அதில் இருக்கும் சுகமே தனி தான். திருமாவின் வளர்ச்சியில் உனக்கு ஏன் அய்யா இவ்வளவு பொறாமை…….? பா.ம.க. வினர் பேனர் வைத்தால் புகழ்வீரோ? விடுதலைச்சிறுத்தைகள் வைக்க கூடாதோ? எத்தனை வன்மம் நிறைந்த கட்டுரை இது. கண்டிக்கிறேன். இனி புதிய ஜனநாயகம் வாங்கி படிப்போரை என்னால் முடிந்த அளவிற்கு தவிர்க்க சொல்வேன். ச்சீ மிக கேவலமான உனது கட்டுரைக்காக என் வீட்டில் உள்ள உனது புத்தகங்களை எரிக்கிறேன்……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க