திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

140
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா

‘‘ எப்பா இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. உள்ள வாப்பா.. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…. ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா… ராஜா மாதிரி படிக்கும்பா எம் பொண்ணு… எப்பா ஏழை பாழைங்கண்ணா படிக்கத் கூடாதப்பா மீன் பிடிக்கிறவண்ணா போகக் கூடாதாப்பா எதுனாச்சும் நடவடிக்கை பண்ணிக் கொடுங்கப்பா’

குனிந்து குடிசைக்குள் நுழைந்தால் அதுதான் பி.காம் மாணவி திவ்யாவின் வீடு மொத்தமே பதினைந்து பதினைந்து அடி நீள அகலத்திலான குடிசை. அம்மா சாந்தி, அப்பா, பாட்டி, இரண்டு தம்பிகளோடு திவ்யா வாழும் வீடும் அதுதான். அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை………அவரே பேசுகிறார் இப்படி…,

‘‘ நாங்க பட்டினவரு கடலுக்குத்தான் போவார் அவர். சொந்தமா கட்டுமரமோ வலையோ கிடையாது கட்டுமரத்துல கூலிக்கு கடலுக்குப் போவாரு ஐம்பதும் கிடைக்கும் நூறும் கிடைக்கும் ஐநூறும் கிடைக்கும் ஆனால் அவரு குடி இப்போ கடல்ல வருமானம் இல்ல ஏண்ணா அவருக்கு கால்ல கட்டி வந்து அவுரால கடலுக்கு போக முடியல்ல அதனால் வாச்மேன் வேலை பாத்தாரு அவருக்கு 3, 500 ரூவா சம்பளம் நான் பெசண்ட்நகரில் இருக்குற ராஜாஜி பவனில் பெருக்குற வேலை பாக்குறேன் 2,500 ரூபாய் சம்பளம் . இது போக எங்கம்மா திவ்யாவோட பாட்டி இட்லி சுட்டு விக்கிறாங்க அவங்கதான் திவ்யாவோட படிப்புச் செலவை ஏத்துக் கிட்டாங்க. அவ அடையாரில் இருக்கிற அன்னை சத்தியா கல்லூரியில் பிகாம் படிக்கிறா ஒரு வருஷத்துக்கு 14,500 ரூபாய் பீசு. அதை இரண்டு தவணையா கட்டுறது திவ்யா பாட்டிதான். நான் வீட்டுச் செலவை பார்த்துப்பேன்….

அண்ணைக்கி சனிக்கிழமை  என்ன நடந்ததுண்ணா அவருக்கு கால் வலி அதிகமாயிடுச்சு பெசண்ட்நகரில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செஞ்சேன் செரியாகல்ல, ஸ்கேனிங் பண்ணனும்னு எட்டாயிரம் ரூபாய் கேட்டாங்க அது நம்மால முடியாதுப்பாணு ஸ்டேன்லில போனேன். அவங்க உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னதால அவரை அங்க ஆஸ்பத்தரில சேர்த்துட்டு இரவு எட்டரை மணிக்கு விட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தப்போ புள்ள மொகம் வாடியிருந்தது. அதுவா வந்து அம்மா  காலேஜ்ல ஒரு பொண்ணோட மூணாயிரம் ரூபா காணாமப் போயிடுச்சும்மா. எல்லோரையும் சாதாரணமா சோதிச்சுட்டு விட்டுட்டாங்க என்னை மட்டும் தனியா ஒரு ருமுக்குள்ளாற கூட்டினு போய் டிரஸ் எல்லாம் கழட்டி நிர்வாணமாக்கி சோதனை பண்ணினாங்கம்மா சொன்னா, நாளை லீவு (ஞாயிற்றுக்கிழமை) நாள மறு நாள் நான் வந்து அவங்க கிட்டே கேக்குறம்மாண்ணேன். ஆனா எம்பொண்ணு அடுத்த மாசம் எக்சாம் வருதும்மா மார்க் டிக் பண்ணிடுவாங்கம்மாண்ணா… வாழ்வு இல்லாத போயிடும்ணு என்னைத் தடுத்துட்டா எம்பொண்ணு… எப்பா வாழ்வுண்ணா என்னணு எனக்குத் தெரியாதுப்பா ஆனா அவளுக்குத் தெரிஞ்சதுனால எனக்கு அப்படிச் சொன்னாப்பா….

நானும் மறு நா கிளம்பி ஞாயிற்றுக் கிழமை ஸ்டேன்லி ஆஸ்பிட்டல் போயிட்டேன். எம் பொண்ணு எங்கிட்ட சொன்னதோட மட்டுமில்ல இங்கிருந்து மூணாவது ஊட்லருக்குற மேத்தாங்கற பொண்ணுக்கிட்டயும் அவங்க அப்பா அம்மாகிட்டேயும் இதைச் சொல்லி அழுதிருக்கா அவங்க ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காங்க நான் திங்கட்கிழமை வேலைக்குப் போனோன். அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா… நான் வேலை முடிஞ்சு சாயங்காலம் ஒரு ஏழு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ தலை சரிஞ்சி எம்பொண்ணு தொங்கிட்டுருந்துச்சுப்பா……. ரொம்ப நேரமா தொங்கிட்டாப்பா எம்பொண்ணு……….. ஏம்பா அவ கிளாஸ்லயே அவ மட்டுதாம்பா ஏழ , இங்க இருந்து கூட இரண்டு பசங்க படிக்கிறாங்க ஆனா அவங்க வசதியானவங்கப்பா எம் பொண்ணு ஏழையாப் பொறந்ததால படிக்கக் கூடாதாப்பா? ……………..

அழுது அரற்றும் அந்த ஏழை மீனவத்தாய் சாந்தி தன் மகளின் மரணம் பற்றிக் கொடுக்கும் வாக்குமூலம் இதுதான்.

 

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை

…………………………………………………………………..

திவ்யா சென்னை அடையாரில் இருக்கும் எம்.ஜீ.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவி. கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் நான்கு மாணவிகளுள் அனுராதா என்னும் மாணவி மூன்றாயிரம் ரூபாய் எடுத்து வந்ததாகவும் அந்த ரூபாய் காணாமல் போக கடைசி இருக்கை மாணவிகளை அந்த இடத்திலேயே சாதாரணமாக சோதனை செய்து விட்டு திவ்யாவை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்திருக்கிறார்கள். அக்கல்லூரியைச் சார்ந்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் அவமானம் தாங்காத கடுமையான மன வேதனையடைந்த திவ்யா தன் தாயிடமும் பக்கத்து வீட்டிலும் சொல்லியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழமை கல்லூரி சென்றவரை நண்பர்கள் கிண்டல் செய்ய மனமுடைந்த திவ்யா தற்கொலை செய்துள்ளார். கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

முன்னாள் சாராய வியாபாரிகள், அரசியல் ரௌடிகள், விபச்சார தொழிலதிபர்கள் எல்லாம் கல்வி வள்ளல்களாக வளர்ந்து பள்ளி கல்லூரிகளை கைப்பற்றிய தனியார்மயத்தில் செல்வச்செழிப்பான பின்னணியில் பிறந்து பல லட்சம் ரூபாய்களைக் கொட்டி வளரும் மாணவிளுக்கு இது நேர்வதில்லை. முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் ஏழை மாணவிகளுக்கே இது நடக்கிறது. ஏழை என்றால் திருடுவார்கள் என்கிற மத்யமர் மனோபாவம்தான் திவ்யாவை நிர்வாணப்படுத்தத் தூண்டுகிறது. அங்கிருந்துதான் திவ்யாக்கள் மீதான கொலை வெறி உருவாகிறது.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யாவின் தற்கொலை கடிதம்

குற்றவழக்கு எண்- 265/2011 என்று எண்ணில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியிருக்கும் வழக்கில் திவ்யா தற்கொலை என்று பதிவாகியிருக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாகக் கூட இல்லை. திவயாவின்  கொலையால் ஆவேசம் அடைந்த ஊரூர் ஆல்காட் குப்பம் மீனவர்கள் திரண்டு வந்து அடையார் சாலையை மறிக்க ஒரு வழியாக ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் கைது செய்யப்பட்டார்கள்.இல்லை கைது செய்வதாக அந்த மக்களிடம் பாவனை செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கச் சென்ற போது ஒரே நேரத்தில் அவர்கள் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இப்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திவ்யாவின் கொலைக்கு நியாயம் கேட்டுப் போன மக்களிடம் நிர்வாகம் ஒரு இலட்சம் தருகிறோம் புதைத்து விடுங்கள் என்று பேரம் பேச அதற்கு சம்மதிக்காத மக்களை போலீஸ் ஒரு வழியாக திருப்பி அனுப்ப செவ்வாய்கிழமை பெசண்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டாள் அந்த பி. காம் மாணவியான திவ்யா.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா – குடும்பத்தினருடன்

இந்த வழக்கில் என்ன நடக்கும்….? என்பது புரியாத புதிரல்ல அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று நான்கு நெஞ்சுவலிக்காரர்களும் கேட்பார்கள் நீதிமன்றமும் அதை அனுமதிக்கும். தனியார் மருத்துவமனையில் வாங்கும் சான்றிதழின் படியும் முதல் தகவல் அறிக்கையில் நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோரின் பெயரும் இல்லாததாலும் இன்னும் சில நாட்களில் அவர்கள் விடுதலையாகக்கூடும்.  கண்ணியமிக்க நமது நீதிமன்றங்களில் இருந்து 100 குழந்தைகளைக் கொன்ற கல்வி வள்ளல்களே தப்பி விடும் போது நிர்வாணச் சோதனை செய்தவர்கள் தப்புவது என்ன கடினமா?
………………….

திவ்யா இறுதியாக எழுதிய கல்லூரித் தேர்வின் டைம்டேபிள்

திவ்யாவின் குடிசையை இரண்டாகப் பிரித்து தோள் உயரத்தில் எழுப்பட்டிருக்கும் மண் சுவரில் தன் தேர்வு நாட்களை சாக்பீஸ்களால் எழுதி வைத்திருக்கிறார். சுகவீனமுற்ற திவ்யாவின் தகப்பன் ஓரமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தக் குடிசைப் பகுதியில் பல கார்கள் நின்றிருக்க, வெள்ளுடை வேந்தர்கள் நிறைந்திருந்தார்கள். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கவனித்த போது அந்த அரசியல் ரௌடிகள் திவ்யாவின் உடலுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்த ஏழைத் தாயின் கண்ணீருக்கு என்ன விலை தேறுமோ தெரியாது…

_________________________________________

– வினவு செய்தியாளர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

140 மறுமொழிகள்

  1. மாணவி திவ்யா – B.Com ஒரு பச்சைப் படுகொலை !…

    மாணவி திவ்யா தற்கொலை – இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா…….

  2. உண்மை குற்றவாளிகள் மிகவும் கடுமையாக சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்

    • சரிகா ஷாவின் துர்மரணமும், திவ்யாவின் தூக்கும் – பரிதாபத்தில் பரிணாமங்கள் ஏன்?

      ***

      திருக்குவளைக் கருணா நிதி, சாப்பாடு தேடி, திருட்டு ரயில் ஏறி வந்தார் – சென்னைக்கு.
      அன்று அவர் ‘பத்தோடு பதினொன்று’.
      யாரும் அவருக்கு எந்தவிதத்திலும் பரிதாபப் பட்டிருக்க மாட்டார்கள்.
      மாறாக அவரது வறுமையை சாடியிருப்பார்கள்.

      ஒரு உதாரணத்துக்காகவோ, அல்லது, தனது நகைச்சுவை உணர்வை தன் சக மந்திரிகளிடம் காட்டுவதர்காகவோ,
      இன்று அதே கருணா நிதி (இன்றைய சூழலில் பல்லாயிரம் கோடிகளில் ஒருவர்) ஒரு ‘மஞ்சப் பையை’ கக்கத்தில் அடக்கிக் கொண்டு, ஏழையோடு ஏழையாக, ஒரு ரூபாய் அரிசி வாங்க
      ரேஷன் கடை வரிசையில் நின்று, இந்த முறையும் அரசாங்கத்தை ஏமாற்றாமல், உண்மையிலேயே ஒரு ரூபாய் கொடுத்து
      அரிசி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? :

      தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கும். தூர்தர்ஷனில் மூன்று நாட்களுக்கு துக்கப் பாட்டு. உணர்ச்சிவயப்படும் தொண்டர்கள்
      தீக்குளிப்பார்கள். தாய்மார்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறுவார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்றி
      சாபமிடுவார்கள்.

      ஏனிந்த முரண்பாடு?

      திருக்குவளைக் கருணா நிதி தலை காய்ந்து போய், உடல் வாடி, உழைத்த வியர்வையின் வாசத்தோடு, தமிழகத்தின் மெஜாரிட்டி மக்களில் ஒருவராக, டிக்கெட்டு வாங்க காலணாயில்லாமல், ரயிலில் அமர்ந்திருந்தார்.
      இவருக்காக கண்ணீர் விட வேண்டிய மக்கள் கண் மூடி மௌனமாய் இருந்தார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்ற வேண்டிய மக்கள், இவரை ஏளனப் பார்வை பார்த்தார்கள்.
      ஏனென்றால் அந்த மக்களைச் சுற்றியிருந்தவர்கள் இப்படித் தலை காய்ந்து போனவர்களின் நடுவிலேயே, பிறந்து, வாழ்ந்து,மடிந்துபோயிருந்தார்கள். இந்த ஊரே கோவணம் கட்டிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கோவணாண்டியைப் பார்த்து எவ்வாறு பரிதாபப் பட முடியும்?

      இன்று, காட்சி மாறி, அவர் அந்தஸ்தில் உயர்ந்து, மிக மிகக் குறைந்த மைனாரிட்டி (எங்கோ கேட்டது போல இருக்கிறது) மக்களில் ஒருவராக, ராஜ ராஜ சோழ பரம்பரை போலவும் சித்தரிக்கப் படுகிறார். இவர் அரிசி வாங்கினால் ஏன் மக்கள் கலங்குகிறார்கள்? நம்மில் ஒருவராகத்தானே அன்று இருந்தார் என்று யாராலும் அதை சாதராணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் அவர் இன்று ஆண்ட பரம்பரை / வாழ்ந்த பரம்பரை / தின்று தீர்த்த பரம்பரை. இந்த இறக்க மனோபாவம்தான் மக்களைக் குழப்புகிறது. இறக்கப்பட வைக்கிறது.

      இன்னும் சில உதாரணங்களைக் கூட எடுத்து வைக்கலாம் :

      1. செல்வி ஜெயலலிதா காது, மூக்கு, கழுத்திலெல்லாம் ஜொலித்த தங்க நகைக் கடையை கழற்றி வைத்துவிட்டு, மக்களோடு மக்களாக பரதேசிக் கோலத்தில் நின்றபோது அல்லது அவருக்கு ‘சிறைத் தண்டனை’ என்று தீர்ப்பு வந்தபோது…

      2. புரட்சிப் புயல் ராகுல் காந்தி திடுமென ஒரு குடிசையில் புகுந்து சட்டியிலிருக்கும் சப்பாத்தியை சாப்பிடும்போது…

      3. காந்தி அண்ணல் அரையாடையுடுத்தி அல்லல் பட்ட போது…

      4. எம்ஜியாருக்கு சாப்பிடும்போது புரைஏறினால்…

      5. நேரு மாமாவின் சட்டையிலிருக்கும் ரோஜா கீழே விழும்போது…

      ***

      அன்று, சரிகா ஷாவின் மரணத்தால், மீடியாக்கள் கொதித்தெழுந்து, தமிழக மக்கள் புரண்டு புரண்டு அழுது, போலிசார் உடனடி நடவடிக்கையெடுத்து, நீதி மன்றம் உடனடித் தீர்ப்பு எழுதி, எல்லாம் சரியாகத்தானே நடந்தது?

      ஆனால், அதே கொத்தெழுதலும், கண்ணீரும், நடவடிக்கையும், நீதியும், இன்று – இந்த திவ்யா மரணத்தில், மறுக்கப்படுவது ஏன்?

      ஏனென்றால் திவ்யா தலை காய்ந்து, ஏழ்மையில் வீழ்ந்து, தமிழகத்து மெஜாரிட்டியில் ஒருவராகக் கிடந்தாள்!

      ***

  3. திவ்யா போன்ற ஏழைகள் இந்த உலகில் பிறப்பதற்கு, படைப்பின் கதாநாயகன் கடவுள்தானே! ஆதலால் இது கடவுள் செய்தது.பாவம் மனிதர்கள் என்ன செய்யமுடியும்.

    இதற்கெல்லாம் தீர்வு கம்யூனிசம் என்று சொன்னால் அது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது,தீவிரவாதம் என்று சொல்வார்கள்.

    • ஒரு இளம்பெண்ணின் அவலமான சாவில் உங்கள் கேடுகெட்ட அரசியலுக்கு ஆதாயம் தேடாதீர்கள், மனம் பதறுகிறது. அப்புறம் அவள் உடலுக்கு விலை பேசும் வெள்ளை வேட்டி சட்டை மாமாக்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இருக்காது.

      ஏழை பாழைகளின் சோகத்தை தனதாக வரிந்தெடுப்பது மனிதத்தன்மை. ஆனால் இதெற்கெல்லாம் தீர்வு கம்யுனிசம் தான் என்று சந்திலே சிந்து பாடுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் சரி, இதற்கு முன்னாலும் சரி, கம்யுனிசம் எதையும் புடுங்கியதில்லை, இனிமேலும் எதையும் புடுங்கப் போவதுமில்லை. தெருமுனை டீக்கடைகளில் நடத்தும் உங்கள் வெட்டிப் பேச்சுகளால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

      புலி வருது, இயேசு வருகிறார், கல்கி வருகிறார், அல்லா சொர்க்கம் தருகிறார், புரட்சி வருது – எல்லாமே ஒன்றுதான் – வெட்டி அரட்டை.

      • புலி வருது, இயேசு வருகிறார், கல்கி வருகிறார், அல்லா சொர்க்கம் தருகிறார், புரட்சி வருது – எல்லாமே ஒன்றுதான் – வெட்டி அரட்டை.//

        அய்யா தோடா வந்துட்ராரூ வலது மாமா!

        ஒருதர் ஏழையாக பிறப்பதற்கும்,ஒருத்தர் பணக்காரராக பிறப்பதற்கும் சம்மந்தம் இல்லையா? ஒரு பணக்காரனுக்கு வரும் பிரச்சனைகளும்,ஒரு ஏழைக்கு வரும் பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் இல்லையா. ஏன் கடவுள் வழிபாடுவதில் கூட சாதியைப்பார்க்குற மிருகவெறி பிடித்தவர்கள் வாழ்கின்ற நாடு தானே இது. திவ்யாவை எடுத்துக்கொள்ளுங்கள்,ஏழ்மைதானே அந்த பெண்ணுக்கு சாவை கொடுத்து இருக்கிறது. இது பொருளாதார பிரச்சனை இல்லையா? சாதியின் படிநிலைகளில் பிரச்சனை இல்லையா?அதிகார தீமிர் இல்லையா. நீ தான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, ஏழைகளின் இறப்புக்கு தனிமனிதர்கள் மட்டும் தான் காரணம் என்று உன் கம்யூனிச எதிர்ப்புகளை சொல்கிறாய்.ஏழைகளின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கம்யுனிசம் தான் இதுதான் சாதி,மத பிரசனைகளுக்கு தீர்வு.பிறகு புரட்சியைப்பற்றி சொல்கிறீர்! புரட்சியைப்பற்றி உனக்கு தெரியவில்லை என்றால் டுனிசியாவைப்பார்,எகிப்தைபார். அப்பவாவது புத்திவரும்.நீ என்றைக்குமே இறக்காமல் இருக்கமாட்டாய்,இறந்துக்கொண்டுதான் இருக்கிறாய்.மாற்றம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.நீ தான் உணராமல் உலரிக்கொண்டு இருக்கிறாய்

        • நீயும் கண்ணைத் திறந்து பார் – துனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் ஜனநாயகத்தை நாடிப் போராட்டம் நடத்துகிறார்கள், கம்யுநிசத்தை தேடி அல்ல.

          மேற்படி பதிவர் திவ்யா தற்கொலைக்கு தீர்வு கம்யுநிசமே என்று போட்டுள்ளார் – இவ்விஷயத்தில் நீங்கள் ஆதாயம் தேடினால் நானும் உள்ளே வருவேன்

      • தமிழ் வலதுசாரி
        தயவு செய்து சொல்லப்பட்ட கதையில் என்ன அரசியல் ஆதாயம் தேடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.

        மிக மோசமான ஒரு காரியம் நடந்துள்ளது. அதைக் கண்டிக்க உங்களுக்கு மனமில்லை, அதைக் கண்டிக்கிறவர்களை ஏன் கண்டிக்கிறீர்கள்.

        வலதுசாரி என்றாலே பிற்போக்குவாதிதான்.
        தமிழ் வலதுசாரி என்றால் அதிலே கேடுகெட்ட ஒரு வகையா?

        • மேற்படி பதிவர் திவ்யா தற்கொலைக்கு தீர்வு கம்யுநிசமே என்று போட்டுள்ளார், அதற்குத் தான் என் மறுமொழி. உங்கள் குட்டிச்சுவர் சித்தாந்தங்களை வைத்து நாட்டில் நடக்கும் எல்லா கொடுமைக்கும் விளக்கம் சொல்லி கம்யுநிசத்துக்கு ஜால்ர கொட்டுவீர்கள், அதை நான் சுட்டிக் காட்டினால் அது கேடுகேட்டத் தனம் – நல்ல லாஜிக்.

          முதலில் உங்கள் இயக்கத்தில் எல்லோருக்கும் மனிதாபிமானத்தை கற்றுத் தர வேண்டும், அப்புறம் தான் மற்றதெல்லாம்…

  4. இக்கட்டுரையப் படித்து அழுது விட்டேன். ஏழைகளி கண்ணீருக்கு அவர்கள் பழி வாங்க வேண்டும். பண முதலைகளை.

  5. இரண்டு இடங்களில் திவ்யாவிற்கு பதிலாக வித்யா என வருகின்றது. மாற்றவும்.

    மேலும் கைதான அந்த நான்கு பேய்களில் ஒன்றின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி எனபது இங்கே குறிப்பிடத்தக்கது

  6. திவ்யா வறியவள்.
    பசியின் வடு முகத்தில்.
    “அதனால் அவள் திருடியோ”
    ஆண்டைகள் அடிமைகளைத்தான்
    சந்தேகிக்கிறார்கள்.

    சொல்லித்தரும்
    பள்ளிகள் திருடுகின்றன –
    நிர்வாண சோதனை
    இதுவை நடந்ததில்லை.

    சுடுகாட்டுக் கொட்டகையிலும்
    ஸ்பெக்ற்றம் ஊழலிலும்
    அரசு நிலத் திருட்டிலும்
    திருடியவர்களை
    யாரும் நிர்வாணப்படுத்தியதில்லை.

    திருடாத குற்றத்துக்கு
    திவ்யாவின் நிர்வாணம்
    மரணத்தைக் கொடுத்தது –
    அது திவ்யாவின் தன்மானத் தீர்ப்பு.

    பகல் வெளிச்சத்தில்
    பலகோடி மக்களுக்கு மத்தியில்
    கூச்சல் போட்டுத் திருடிய
    திருட்டுக் கும்பல் முகத்தில்
    புன் முறுவல் – ஏனென்றால்
    சி பி ஐ விசாரணையும்
    காவிக் கட்டிட கோர்ட்டுத் தீர்ப்பும்
    இவர்களை நிர்வாணப் படுத்தாது என்பது
    அவர்களுக்கு
    திருடுவதற்கு முன்பே தெரியும்.
    இதுதான் ஆளும் வர்கத்தின்
    மனசாட்சித் தீர்ப்பு..

    மக்கள் தீர்ப்பு மட்டுமே
    உண்மையான திருடர்களை
    நிர்வாணமாக்கும்!

  7. தாங்க முடியவில்லை வினவு, கண்ணீரில் திரை மறைக்கிறது….ஆனால், இதை இப்படியே விடுவதும் திவ்யாவுக்கான நீதியாக ஆகாது!

  8. இதை எவ்வளவு அடக்கி வாசித்தன ஊடகங்களும் தினசரிகளும். சரிகா ஷா போன்று சேட்டுப்பெண்களுக்கு நடந்தால் மட்டுமே தானும் பதறி நம்மையும் பதற வைக்கிறார்கள்.இதில் நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது.தொண்ணூறு சதம் அடித்தட்டு மக்கள் உள்ள சமூகத்தில் இந்த அளவுதானா எதிர்வினை?

    • இங்கு எப்படி செய்திகளை பரப்ப முடியும், அனைத்து மீடியா களும் அரசியல்வாதியிடம் அல்லவே இருக்கிறது , அவர்களுக்கு விளம்பரங்கள் போடவே நேரம் இல்ல அப்புறம் எப்படி இதுக்கு லாம் நேரம் இருக்கும்

  9. //அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை//

    என்ன கொடுமை..?.. ஏழைப்பிள்ளைகள் , வயிற்றுக்கு கூட இல்லாமல் படிக்க வந்தால் அவமானப்படுத்துவீங்களா?…யார் கொடுத்த துணிவு ?.. கேட்க ஆளில்லை என்ற நினைப்பா?..

    அவமானப்படுத்தியவங்களை அதே முறையில் விசாரிக்கலாமா?..

    கொதிக்கிறது…

    என் பதிவிலும் கண்டனங்கள் போட்டேன் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்..

    http://punnagaithesam.blogspot.com/2011/02/blog-post_04.html

  10. என்ன சொல்வது. என்ன எழுதுவது…………….. போன உயிர்க்கு யார் பொறுப்பு.

    மனம் வலிக்கிறது.

    பொறுக்கிதனமான பேராசிரியைகள், பணக்கார திமிரில் என் சகோதரியை ஏளனம் செய்த தறிகெட்ட சக மாணவிகள், இவற்றை பற்றி பெரிதாய் கவலை படாத ஊடகங்கள், அந்த கயவர்களை காக்க துணிந்த உயிர் காக்கும் மருத்துவ மாமுனிகள், நடவடிக்கை எடுப்பதா அல்லது சக போலீஸ்காரன் பொண்டாட்டிக்காக மூடி மழுப்புவதா என குழம்பி கொண்டிருக்கும் காவல்துறையை சொல்வதா.

    இந்த வெட்கங்கெட்ட சமூகம் உன்னையும் நீ சந்தித்த வேதனயையம் நாளை மறுத்து போகும் தங்கச்சி.

    இன்னும் எத்தனை திவ்யாக்களை இந்த வெட்கங்கெட்ட சமுதாயம் பலி வாங்குமோ…………. இறைவா

  11. அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா…//

    இதுங்களையும் தூக்கி உள்ளே போட்டா என்ன?..

    சாடிஸ்டுகள்… :((((((.. கொலைகாரிகள்..

  12. நீங்கல்லாம் எதுக்குடா புள்ளைங்களை படிக்க அனுப்புறீங்க என்று நேரடியாக கேட்கிறார்கள்.இந்த மக்களும் அதை கேட்பதாக தெரியவில்லை பாவம் கலைகல்லூரிக்கே அவ்வளவு தொகை தேவைப்பட்டால்,தொழிற்கல்வி எல்லாம்?அடங்கொய்யால மாவோயிஸ்டுகள் ஏன் உருவாகிறார்கள் என்று மட்டும் புரிகிறது, அதையும் இங்கே டாஸ்மாக் தடுக்கிறது.

  13. கண் கலங்குகிறது தோழர்.. அனால் எத்தனை நாள் தான் இப்படி கண் கலந்கிக்கொண்டே மட்டும் இருப்பது என்று நினைக்கும் போது நானும் ஒரு குற்றவாழி போல் உணர்கிறேன்.. இது சமந்தமாக எதுவும் போராட்டம் நீங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும். நானும் பங்கேற்கிறேன்

  14. பெண் காவலர்கள் கூட செய்ய தயங்கும் கொடுமையை கல்லூரி பெண் பேராசிரியர்கள் செய்திருப்பது பெண் ஆசிரியர் அனைவருக்குமே பெருத்த அவமானம், அசிங்கம். ஏழைகள் என்றால் கிள்ளுகீரையா அவர்களுக்கு?

    வக்கிரம், குரூரம்..

    எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் இருக்கின்றன? எவை ஒன்றாவது இவர்களை கண்டிக்குமா? இவர்களை எதிர்த்து குரல் கொடுக்குமா?

    படித்த நடுத்தர மேல்தட்டு பெண்களுக்கு தானே பெண் உரிமை சங்கங்கள், கழகங்கள் எல்லாம் குரல் கொடுக்கும் ?

    ஏழை பெண்ணுக்கு யார் கொடுப்பார்?

    • கண்டிப்பாக கம்யுநிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் வராது – இந்தப் பிரச்சினையில் தேவையான பப்ளிசிட்டி கிடைத்தவுடன் நழுவி விடுவார்கள். அடுத்ததாக எந்தப் பிரச்சினையில் ஆதாயம் தேடலாம் என்று போவார்கள்.

      நாம் தான் பார்க்கப்போகிறோமே?

      • Rest in peace divya….
        அம்பிகா மரணம் , வினவு கோஷ்டி குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டதை தவிர என்ன செய்தீர்கள் ????
        அப்பாவி பெண்ணின் மரணத்தில் அரசியல் செய்ய உங்கள்ளுக்கு வெக்கமாக இல்லையா ????

    • அதுக்கு காரணம் ஒரு பேராசிரியை ன் நாயகன் காவல் துறை அதிகாரி என்பதால் என நான் நினைக்கிறேன் , அவ போச்சு ல தீ பந்தம் கொண்டு சொருகின தெரியும்

  15. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அத்தனை ஊழல்களிலும் லடசக்கணக்கான கோடிகளை திருடியிருப்பது பணக்காரக் கும்பல்கள் தான் என அம்பலப்பட்ட பின்பும், ஏழைதான் திருடுவான் என திமிர்த்தனம் பேசும் பொதுப்புத்தி, தன் திருட்டை மறைக்க அடுத்தவனைச் சுட்டும் அதிகார வர்க்க மனோநிலையிலிருந்து தான் பிறப்பெடுக்கிறது. தங்களால் ஒரு உயிர் போயிருக்கிறது என்பதை அறிந்த பின்னும் இல்லாத நெஞ்சுவலிக்காக மருத்துவனையில் படுத்திருக்கிறதே இந்த அதிகாரவர்க்க திமிர்த்தனம் தான் ஏழை மாணவியை துகிலுறியவும் வைத்திருக்கிறது.

    • // ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அத்தனை ஊழல்களிலும் லடசக்கணக்கான கோடிகளை திருடியிருப்பது பணக்காரக் கும்பல்கள் தான் என அம்பலப்பட்ட பின்பும், ஏழைதான் திருடுவான் என திமிர்த்தனம் பேசும் பொதுப்புத்தி, தன் திருட்டை மறைக்க அடுத்தவனைச் சுட்டும் அதிகார வர்க்க மனோநிலையிலிருந்து தான் பிறப்பெடுக்கிறது. தங்களால் ஒரு உயிர் போயிருக்கிறது என்பதை அறிந்த பின்னும் இல்லாத நெஞ்சுவலிக்காக மருத்துவனையில் படுத்திருக்கிறதே இந்த அதிகாரவர்க்க திமிர்த்தனம் தான் ஏழை மாணவியை துகிலுறியவும் வைத்திருக்கிறது. //

      ஏழைகள் என்றால் கிள்ளுகீரையா அவர்களுக்கு?

    • எப்போதுமே ஏழை யாய் இருந்து படி படியாய் உழைச்சு முன்னும்மு வந்தவன் பண பேய் பிடிச்சு இருக்க மாட்டன் , திடீர் பணக்காரன் தான் இப்டி எல்லாத்துக்கும் விலை பேசுவான் அவனது தாய் கொடுத்த தாய் பாலுக்கும் சேர்த்து

  16. i have no courage to read this article. our Tamil society now changed as a criminal society. some powerful party people never care the Law and they do whatever they want and loot the people money. most of the people are terrified and find no way to check this criminals. even the police has no faith in the society, enforcement of law,courts
    ability they take the gun and shoot the most dreaded person in encounters,not to save the people, but to save themselves.every person in Tamil Nadu thinks they can do anything with a hope the Law have no power to punish them. to day one party glorify a person who looted the government money in lakhs of cores.the whole world is shocked to see this with unbelievable eyes.
    Here four ladies teacher mortally wounded the poor girl, the girl then committed suicide.the poor girl go the burial ground , the four teacher go to hospital to save themselves. it is only happen in Tamil Nadu. why? what ha pend to Tamil Nadu?

  17. “our Tamil society now changed as a criminal society.” இந்த வரிகளுக்கு ஆழமான பொருள் உண்டு.

    திவ்யாவை நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோர் பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏன் என்றால் ஒரு சாதாரண தனியார் கலைக்கல்லூரியில் ஆசிரியர்களாகப் பண்புரிவோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். ஏழைகளின் வாழ்க்கையை அறியாதவர்களாக இருக்கமுடியாது. பிறகு எப்படி இவர்கள் இப்பாதகச் செயலைச் செய்தார்கள்?

    இந்தக் கேள்விக்கு பதில்தான் “our Tamil society now changed as a criminal society.” என்கிற வரிகள். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் மக்களிடையே போட்டி-பொறாமைகளை வளர்த்து வருகின்றன. தனக்குச் சமமாக உள்ளவர்கள் அல்லது அதற்குக் கீழே உள்ளவர்கள் சற்றே முன்னேறுவதற்கு முயற்சி செய்தாலோ அல்லது முன்னேறி விட்டாலோ பொறாமை காழ்ப்புணர்ச்சியாக மாறி எதிர் வினையாற்றும் மன நிலைக்கு மாறுகிறார்கள். இத்தகைய மனநிலையில் பலர் இருக்கவே செய்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது இவர்கள் மேற்கண்ட கொடியச் செயலை எவ்வித தயக்கமும் இன்றி செய்யத் துணிகிறார்கள். கொலை பாதகச் செயலைச் செய்வதற்கும் தயங்குவதில்லை.

    ஆசிரியர் அடித்து மாணவியின் கண் பறிபோனது, கை உடைந்தது போன்ற பல சம்பவங்கள் நடந்த வண்ணம்தான் உள்ளன. மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளைக்கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் கிருஷ்ணா கல்லூரி நிர்வாகம் பசுமாடுகளை நஞ்சு வைத்துப் படுகொலை செய்தது. (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html).

    போதாக் குறைக்கு சமூகப் பிரச்சனைகளை அலசுகிறேன் என்ற போர்வையில் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மக்களை கல் நெஞ்சக்காரர்களாக மாற்றும் வேலையை போட்டிப் போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.

    இது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    சமூகப் பிரச்சனை என்று சொல்லி ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி போன்ற கொடியவர்களை சும்மா விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் சமூகத்தில் எங்கும் பரவியிருக்கும் இக்கொடிய குற்றமனநிலையை (criminal mind) மாற்றும் பணியைச் செய்யும் கடமையும் நமக்குள்ளது.

  18. படிக்கப்படிக்க ரத்தம் கொதிக்கிறது..

    நேற்று நோக்கியா-பாக்ஸ்கான் தொழிற்சாலையில் கொல்லப்பட்ட அம்பிகா – இன்று திவ்யா… கண்முன்னே நிகழும் இந்தக் கொடூரக் கொலைகள் ஏற்படுத்தும் உளைச்சலைவிட இந்தக் கையறு நிலை ஏற்படுத்தும் உளைச்சலே மனதைக் குத்திக்கிழிக்கிறது.

    இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா என்று எகனை பேசும் வெண்ணைகளை முகத்தோடு சேர்த்து தரையில் தேய்த்து விடலாம் என்று தோன்றுகிறது. அவர்களால் திவ்யாவின் உயிரைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? இந்தத் தொழிற்சாலைகளைப் பாருங்கள், செல்போன்கள் இத்தனை சிப்பா கிடைக்குமா சொல்லுங்க என்று பீத்திக் கொள்பவர்கள் அம்பிகாவின் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட முடியுமா?

    உலகமயத்தின் விலை அம்பிகா என்றால் பார்ப்பனியத்தின் விலை திவ்யா. சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது பழைய மனுநீதி – இன்றைய நவீன மனுநீதியோ உடைகளைக் களைந்து அவமானப்படுத்தி கயிற்றில் தொங்க விடுகிறது.

    • ///உலகமயத்தின் விலை அம்பிகா என்றால் பார்ப்பனியத்தின் விலை திவ்யா. சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது பழைய மனுநீதி – இன்றைய நவீன மனுநீதியோ உடைகளைக் களைந்து அவமானப்படுத்தி கயிற்றில் தொங்க விடுகிறது///

      அவசரபடாதீங்க. அந்த நான்கு lecturersகளும் என்ன சாதி என்று இன்னும் தெரியவில்லை. ’சூத்திரர்களாக’ இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவோ மனுநீத பற்றி இங்கு பேச இன்னும் முகாந்திரம் இல்லை.

      • ////அவசரபடாதீங்க. அந்த நான்கு lecturersகளும் என்ன சாதி என்று இன்னும் தெரியவில்லை. ’சூத்திரர்களாக’ இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவோ மனுநீத பற்றி இங்கு பேச இன்னும் முகாந்திரம் இல்லை.//////

        சூத்திரன் முன்னேறி விட்டால் பாப்பான் பிட்டத்தை நக்க சென்று விடுகிறான் . அதுக்கப்புறம் இந்த நவீன பிராமணன்களை வைத்து பாப்பான் எல்லா வேலையும் கச்சிதமாக முடித்து விடுகிறான் . அதாங்க பெரியாருடைய முயற்சியில் கிடைத்த சமூக விடுதலையை ஒரு பக்கத்தில் அனுபவித்து கொண்டே அவரை பற்றி இழித்துரைக்கும் அந்த முன்னால் சூத்திரன்கள் தான் இந்த நவீன பிராமணன்கள். ஆக பாப்பானுக்கு இன்னொரு அடியாள் படை உருவாகி விட்டது .

        ம்ம்ம்ம் பெரியாரின் தொண்டர்கள் காவி காம வெறியர்களின் கோவணத்தை அல்லவா தூக்கி சுமக்கிறார்கள்

        இங்கு பாப்பான்கள் என்று நான் குருப்பிடுவது சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை மதத்தின் பெயரால் திணித்து கொண்டிருக்கும் சமூக விபச்சாரிகளை

  19. காலம் காலமாகத் தொடரும் வன்முறைகள்.
    புரிந்துகொள்ளவதும், புரிந்துகொண்டு போராடச்செய்வதும் தமது கடமை.
    முதலாளித்துவம் கொள்ளும்!
    மூலதனம் மட்டுமல்ல. முதலாளித்துவ சிந்தனையும்தான்.

    • உங்கள் போலி மனிதாபிமானம் இதிலேயே வெளிப்பட்டுவிட்டது…நான்கு கல்நெஞ்சக்கார அரக்கிகள் செய்த அநியாயத்திற்கு மொத்த சமூகத்தையும் குறை சொல்வது பைத்தியக்காரத்தனம்.

      அப்புறம் ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கொன்ற எட்டுக் கோடி உயிர்களுக்கு உலகில் உள்ள எல்லா கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்களையும் தூக்கிலே போட வேண்டியிருக்கும் அல்லவா ?

      • தமிழ் வலது saree//

        உன்னுடைய கம்யுனிச எதிப்பை பணத்திமீர் பிடித்த முதலாளிகளின் எதிர்ப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
        ஏழைகளுக்கு பிரசனையே இந்த போலி ஜனநாயக ஆட்சிதான். இதுதான் இந்த சமுகத்தை கேடுகெட்ட சமுகமாக வைத்து இருக்கிறது.
        ஏழ்மையை கேலிக்கிண்டல் செய்து நாள் தோரும் ஒடிக்கிவருகிறது.பின்பு அதன் மீது குறைசொல்லாமல் யார் மீது குறைசொல்லவேண்டும்.நீங்கள் என்ன அதியமானுடைய தம்பியா? அப்படியே தெரியுதுங்க.

        • திவ்யாவின் தற்கொலையில் ஆதாயம் தேட முனையும் இடது sareeக்களே –

          என் கோபமே உங்கள் போலி பிரசாரத்தின் மேல், உங்கள் மூட நம்பிக்கைகள் மேல் தான்.

          ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று சொல்லியே உள்ளே வந்து எட்டுக் கோடி பேரை கொன்று குவித்த கம்யுநிஸ்ட் ஸ்டாலின், மாவோ, போல்போட் சரித்திரங்களை ஏன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைக்கிறீர்கள் ? உயிர் எங்கும் உயிர் தானே ?

          ரஷ்யாவிலும் சைனாவிலும் எவ்வளவோ ஏழைகள் இறந்த போது எங்கே போயிற்று இந்த பதைபதைப்பு? ஒன்றாம் நம்பர் போலிகள்…

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        //நான்கு கல்நெஞ்சக்கார அரக்கிகள் செய்த அநியாயத்திற்கு மொத்த சமூகத்தையும் குறை சொல்வது பைத்தியக்காரத்தனம்.//
        இந்தக் கொடுஞ்செயலை இந்த நான்கு அரக்கிகள்தான் செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த அரக்கிகளுக்குரிய மனோபாவம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மையமான கேள்வி? இச்சமூகத்தை ஆளுகின்ற சித்தாந்தம்தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்? அவ்வளவு ஏன் இந்த அரக்கிகளுக்குரிய் மனோபாவம் இச்சமூகத்தில் இந்த நான்கு பேர் மட்டும்தானா? வலதுசாரி எந்த ஒரு விசயத்தையும் அவதூறுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட விமர்சன்க் கண்னோட்டத்தில் பாருங்கள்.

        • ஒரு திருட்டுக் குற்றம் நடந்தால் உடனே அதைச் செய்தவன் குற்றப்பரம்பரை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டது சென்ற நூற்றாண்டுப் பிரிட்டிஷ் காலப் பழக்கம். ஜமீன்தார்களும் நிலப்பிரபுக்களும் இதையே செய்து வந்தார்கள். திவ்யாவின் தற்கொலைக்கு காரணம் அவரைச் சுற்றியுள்ளவர்கள் கொண்டிருந்த குற்றம்சாட்டும் மனப்பான்மை – இது ஜமீந்தார் காலங்களின் அடையாளம், நம்மை விட்டு இன்னும் செல்லவில்லை. பரம்பரை அரசர்கள் மட்டுமே பிற மக்கள் முன்னேறுவதை வெறுத்தார்கள், bullying செய்தார்கள்.

          இதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும், தூங்குகிறாற்போல் நடிக்கிறீர்கள். சொல்லப்போனால், ஜமீந்தார்காலத்தில் எழைகளைப்பற்றி முன்முடிவுகள் கொண்டிருந்தார்கள், கம்யுநிசத்தில் வசதி படித்தவர்களைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள் -இரண்டுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. கம்யுனிசம் வந்தால் ஏழை திவ்யாவிற்கு பதிலாக கொஞ்சம் வசதி படைத்த எவளோ ஒருத்தி இருப்பாள் – இரண்டுமே முன்முடிவுகளால் ஏற்படுபவை.

          முதலாளித்துவ ஜனநாயகத்தில் மட்டுமே இந்த முன்முடிவு கழிசடைகளுக்கு எதிரான நியாயங்களும் நீதிமன்றங்களும் உண்டு.

        • இங்கு படிக்கவும். என்னால் முடிந்த அளவு இந்த மனநிலை எவ்வாறு உருவாகிறது என்று எழுதியுள்ளேன்
          http://paraiyoasai.wordpress.com/10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        ///ஒரு திருட்டுக் குற்றம் நடந்தால் உடனே அதைச் செய்தவன் குற்றப்பரம்பரை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டது சென்ற நூற்றாண்டுப் பிரிட்டிஷ் காலப் பழக்கம்///
        நான் எழுப்பிய கேள்வி என்ன?
        “இந்த அரக்கிகளுக்குரிய மனோபாவம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மையமான கேள்வி? இச்சமூகத்தை ஆளுகின்ற சித்தாந்தம்தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்? அவ்வளவு ஏன் இந்த அரக்கிகளுக்குரிய் மனோபாவம் இச்சமூகத்தில் இந்த நான்கு பேர் மட்டும்தானா?”
        இதில் நான் அந்த அரக்கிகளின் பரம்பரையைப் பற்றி பேசவேயில்லையே? நீங்கள்தான் ஒரு முன்முடிவைக் கட்டிக்கொண்டு பேசுகிறீர்கள்.
        ///முதலாளித்துவ ஜனநாயகத்தில் மட்டுமே இந்த முன்முடிவு கழிசடைகளுக்கு எதிரான நியாயங்களும் நீதிமன்றங்களும் உண்டு.///
        அப்படியே இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கிவிடுங்களேன் கொஞ்சம் புண்ணியமாய் போய்விடும்.

        • திரும்பவும் படித்துப் பாருங்கள். – நானும் அவர்கள் பரம்பரையைப் பற்றிப் பேசவே இல்லையே ! இப்படி திரித்துப் பேசியே உங்கள் எல்லோருக்கும் பழக்கமாகிப் போய் விட்டது.

          நான் சொன்னது இதுதான் – “இவன்தான் திரூடியிருப்பான், அவன்தான் கொன்றிருப்பான்” என்று ஏழை மனிதரைப் பற்றிய முன்முடிவுகளோடு நீதியை அணுகுவது ஜமீந்தார்கால அணுகுமுறை. கம்யுநிசமும் அதை ரிவர்ஸ் வழியில் பின்பற்றுவதுவே. இரண்டையும் ஏறக்கட்டும் காலம் வந்துவிட்டது.

        • ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு சட்டத்தையும் நியாயத்தையும் காக்கும் கடமை உண்டு. அந்த ஆட்சி அப்படி செய்யத் தவறினால் அதை தூக்கிக் கடாசி வேறு அரசாங்கத்தை அமைக்கும் சக்தியும் மக்களுக்கு உண்டு. இந்திரா காந்தி, செயலலிதா என்று ஏகப்பட்ட உதாரணங்கள். (கம்யுனிச ஆட்சியில் ஸ்டாலின் மாவோ போன்ற ரௌடிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த உரிமையும் சக்தியும் கிடையாது. சனியன்கள் தாங்களாக செத்துப் போனால் தான் உண்டு).

          உழைப்பை மூலதனமாகக் கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். மக்கள் இந்த கருத்தை விரும்புவதாலேயே கம்யுனிசம் மீண்டும் மீண்டும் வெறுக்கப்பட்டு தேர்தல்களில் தோற்கிறது.

          நம் நாட்டில் உண்மையான முதலாளித்துவ ஜனநாயகம் அமைய தடையாக இருப்பது இரு விஷயங்கள் – மிச்சமிருக்கும் ஜமீந்தார்கால மனப்பான்மை, ஆதிக்க சாதிகளின் மனதில் ஆழ ஊறியிருக்கும் வெறுப்பு.

          திவ்யாவைப் போன்ற குழந்தைகளுக்கு நாம் ஊட்ட வேண்டியது உழைத்து முன்னேற வேண்டிய தன்னம்பிக்கை தான். ஆனால் கம்யுநிசமோ வெறுப்பையும் வயிற்றேரிச்சலையுமே வளர்க்கிறது.

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        ///வலதுசாரி எந்த ஒரு விசயத்தையும் அவதூறுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட விமர்சன்க் கண்னோட்டத்தில் பாருங்கள்.///
        இவை நான் உங்களிடன் கேட்டுக்கொண்டவைதான். ஆனால் இதை ஒரு வலதுசாரியிடம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்பதை கவனத்தில்கொள்ள தவறிவிட்டேன். அவதூறு என்பது வலதுசாரிகளின் குணாம்சம். குதர்க்கம் என்பது அவர்களின் சித்தாந்தம். பூனைக்கும், எலிக்கும் இடையிலான உறவு என்ன வகைப்பட்டதோ, அதுதாங்க மாணவி திவ்யாவுக்கும், இந்த சமூகத்துக்கும் இடையிலான உறவு. இந்தப் பின்னணியிலிருந்துதாங்க இந்தப் படுகொலையை பார்க்க வேண்டும் என்று நாம் சொன்னால், உடனே, வலதுசாரியோ அதெல்லாம் இல்லை. முதலாளித்துவ சமூக அமைப்பில் பூனையின் நல்னும், எலியின் நலனும் வேறு வேறு அல்ல. ஆகையால் இவை இரண்டிற்கும் உள்ள முரண்பாடு என்பதே இங்கு ஒழித்துக்கட்டப்பட்ட ஒன்று என்று குதர்க்கம் பேசுவார். இது என்னுடைய அனுமானம் அல்ல. அவர் இட்ட பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். ஆகையால் எந்த ஒரு சமூகப் பிரச்சினைக்கும அக, புற காரணிகளைக்கொண்டு தீர்வு காண்பது என்ற கண்ணோட்டமில்லாமல் எதற்கெடுத்தாலும் ‘கம்யூனிசம் ஒழிக, கம்யூனிசம் ஒழிக’ என்று கீ கொடுத்த ரோபோ மாதிரி பேசுபவரிடம் எப்படி ஒரு ஆரோக்கியமான விவாதததை நடத்த முடுயும்?

        • திவ்யாவின் தற்கொலைக்கு சமூக புற அக காரணிகளை நான் என் தரப்பிலிருந்து தெளிவாக விளக்கி விட்டேன் – விவாதிப்பதும் விவதிக்காததும் உங்கள் விருப்பம்.

          நீங்கள் ஏன் விவாதிக்கவே மறுக்கிறீர்கள் என்பதைத் தான் நான் சுட்டிக் காட்டுகிறேன் – மாற்றுக் கருத்து என்ற விஷயத்தையே உங்கள் சித்தாந்தம் ஏற்பதில்லை.

  20. Whether the teachers are rich or poor, what they motivated to commit the atrocity. One of them is wife of the police officer. Govt should take a strong action by filing an FIR by changing the present one from suicide to murder. Let the families of the four teachers suffer then only others will get some fear in their public dealing.

  21. ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தன் அன்னையின் முன்னால் கூட நிர்வாணமாக வரமாட்டாள். மெத்தப் படித்த அந்த நான்கு ஆசிரியர்களுக்கு இதுகூடவா தெரியாது?

  22. ஏழைப்பெண் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாமா?
    படித்து முன்னேற துடித்த இப்பெண்ணின் சாவிற்கு யார் பொறுப்பு?என்ன விலை கொடுத்தாலும் அதற்கு ஈடேது?கண்ணீருடன்.

  23. இச்செய்தியை நானும் சில இணையதளங்கள் ஊடாக படித்தேன் ! திவ்யா கேட்கும் அதே கேள்வியை எனக்கும் கேட்க தோன்றுகிறது ! எதற்கு அவளை மட்டும் நிர்வாணப்படுத்தி சோதனை.

    சென்னையில் நீடித்திருக்கும் சாதிக் கொடுமையின் ஒரு சிறு துளியே திவ்யா போன்ற பாரத்த்தின் தூண்கள் சாய்ந்துவிட்டது. ஆதிக்கச் சாதிகளின் இந்தக் கொடுமை, பேராசியர்களின் பாலியல் வங்கொடுமைகள் என பலவும் பல நேரங்களில் கமுக்கமாகிப் போய்விடுகிறது. இதனை பாதிக்கப்பட்டவரோ ! பக்கத்தில் இருப்பவரோ ! யாரும் எடுத்துரைத்து போராடவும் முனைவதில்லை. இருப்பினும் ஆல்காட் கடற்கரைக் கிராம வாசிகள் கொஞ்சமாவது போராடினார்கள். அவர்களுக்கு துணையாக யாதொன்றையும் யாம் செய்ய முடியாமல் விழி பிதிங்கி நிற்கின்றோம்.

    கல்லூரி மாணவர்களோ ! சம்பந்தப் பட்டவர்களோ ! இந்த வன்செயலை செய்த ஆசிரியர்களின் புகைப்படங்களையும் பெயரை இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யாத பெண்னே வெட்கி மரணிக்கும் போது , தவறு செய்தோர் மட்டும் முகம் மூடிக் கொண்டு திரிய வேண்டுமோ !!!

    அசிங்கம் அசிங்கம் அந்தக் கல்லூரிக்கே இது அசிங்கள் ! இதனை ஒரு issue ஆக்கக் கூட முடியாத இத்தனை இத்தனை சென்னை ஊடகங்கள் பேசமால் நேரடையாக மாமா வேலைப் பார்க்கலாம் !

    • இதுக்கு மேலேயா மாமா வேலை பார்க்க வேண்டும் ஊடகங்கள், பல வருடமாக அனைத்தும் அதை தானே செய்கின்றன.. நயன்தாரா நாளைக்கு காலை எழுந்து பல்விளக்கினால் அதை தலைப்பு செய்தியில் போடுவார்கள்..

  24. தாங்கவே முடியவில்லை. திவ்யாக்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளுக்கு முடிவே இல்லையா?

    அந்த நான்கு அராஜக ஆசிரியைகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    நாலு பேருக்கும் ஒண்ணுபோல நெஞ்சு வலியா? என்ன ஆட்டம் போடுறாங்க.

  25. Did they find out the real culprit or the cause of missing money? Was it proven that Divya stole the money? No mention about this in the article! Why should the other students laugh at her when she went to her college the next day?

    I feel that the teachers should have superficially checked everyone in the same manner. Not partially as they did for Divya! Just because Divya is from a poor family, she should not be considered as the primary culprit. For further searching, they should have informed magalir police.

  26. Dear Vinavu,
    This incident is the tears of the heart . Without my knowledge my eyes were filled with ……
    I am shocked .. stressed .. its pain in the heart…
    I am not having any words..only too much pain…really its hurting to the core.its difficult to sleep tonight.
    regards
    rv

  27. முதல் தலைமுறையாக படிக்கவந்து முடிஞ்சுபோச்சு எல்லாம்!. ஊடகங்கள் வழக்கம்போல இதை கண்டுகொள்ளாது, வெள்ளைத்தோல் வேணும் பிணங்களுக்கும் ஊடகங்கள் கண்டுகொள்ள. ஏழைகள் எனில் ‘அவர்களை’ப்போலவே மானமில்லாதவர்களாக எண்ணும் மனப்போக்கு. ஒரு அனுராதாவின் கவணக்குறைவு அப்பாவியின் உயிர்பறித்துவிட்டது.

    சில பெண்கள் கல்லூரிகளில், ஆசிரியைகள் பெண்களை கேலி செய்வது, மார்க் எடுக்கவில்லையெனில் திட்டுவது எல்லாம், லேபர் வார்டில் அழும் பெண்களைப்பார்த்து அங்கிருக்கும் நர்ஸ்கள் அடிக்கும் கமெண்ட்டுகளை ஒத்தது!. குறைந்தபட்சம் வெளியில் சொல்லக்கூடியதென்றால், “நீயெல்லாம் படிக்கலைன்னு யாரு அழுதா, கல்யாணத்தபண்ணிட்டு போக‌ வேண்டியதுதானே?” பார்ப்பதற்கு எதிர்த்து பேசிவிடுவோம் என்பதுபோல் தெரிந்தால் மட்டுமே இவர்களிடம் இருந்து தப்பமுடியும்.

    ஒரு இடத்திலாவது கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இது குறையும். டிவிக்களால் எதையும் மக்கள் கண்டுகொல்லவதில்லை.

  28. ஏன் இந்த விவகரந்தில் கல்லூரி மாணவர்கள் strike செய்யவில்லை? தமிழ் நாடு முழுவதும் strike செய்யவேண்டாமா?

  29. கண்கள் குளமாகிவிட்டது.

    மக்களுக்கெதிரான இந்த சமூக அமைப்பை தகர்த்து புதிய சமூகத்தை படைக்கும் வேலையை விரைவு படுத்த வேண்டிய அவசியத்தை தலையில் கொட்டுகிறது.

  30. திவ்யா விஷயத்தில் ஆசிரியர்கள் செய்தது உச்சக்கட்ட அவமதிப்பு +அரக்கத்தனம் .அந்த பெண்ணை பற்றியே அவர்கள் சிந்தித்ததாக தெரியவில்லை .வகுப்பிற்கு மறுநாள் வந்த பெண்ணை கிண்டல் செய்த சக மாணவிகளையும் என்ன சொல்வது ?
    ரொம்பவே வேதனையான விஷயம் இதில் இந்த ஆசிரியர்கள் எல்லோருமே இளம் வயது தான் .அவசரப்பட்டு ஒரு உயிரை பலி வாங்கி விட்டார்கள் .அதுவும் ஆசிரியர்களாக இருந்து கொண்டு இப்படி செய்ததும் அல்லாமல் கைது என்று வந்தவுடன் நெஞ்சுவலி நாடகம் வேறு .
    கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் …

    • ///வகுப்பிற்கு மறுநாள் வந்த பெண்ணை கிண்டல் செய்த சக மாணவிகளையும் என்ன சொல்வது ?///

      ஆம். இதுதான் மிக கொடுமையான விசியம்.

      தற்கொலை என்பது மிக கொடுமையான, செய்ய கூடாத செயல். அதற்க்கு பதில் அப்பெண் போராடியிருக்கலாம். மகளிர் அமைப்புகள் அல்லது ம.க.இ.க வினரடம் சென்று உதவி கேட்டிருக்கலாம். எதிர்காலமே இருண்டுவிடும் என்ற பயத்தால் தன் தாயை தடுத்தவர், தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்க்கு சென்றது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதற்கு பதில் ஒரு போராட்டத்தில் என்ன விளைவுகளையும் சந்திக்க தயராக இருந்திருந்தால் ; கல்லூரி படிப்பு நின்றுபோனாலும் பரவாயில்லை, ஆனால் சாகும் வரை போராடுவேன் என்ற நிலைபாட்டை எடுத்திறுந்தால். (இங்கு இதை சொல்வது மிக சுலபம் தான். நடை முறையில் ஒருவர் எப்படி முடிவு எடுப்பார் என்பதை சொல்ல முடியாது).

      இத்தகைய நேரங்களில் நம் மனசாட்சி தெளிவாக இருக்கும் பட்சத்தில் உலகமே நம்மை இகழ்ந்தாலும், அவமத்திதாலும், கேலி செய்தாலும் லட்சியம் செய்யாமல், தலை நிமிர்ந்து, தைரியமாக எதையும் எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய தைரியத்தையும், மனோபாவங்களையும் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். ஆனால் அப்படி நடப்பது அரிதாக இருக்கிறது. இதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்க்கலாம். பல பெண் வீராங்கனைகள் வாழ்வில் இருந்து பாடம் கற்க்க வேண்டும்.

      எம்மை பொருத்த வரை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டால், அநீதி இழைத்தவரை கொலை செய்ய முடிவு செய்து, அதற்க்கு தண்டனையாக மரண தண்டனையை ஏற்க்க முயல்வேன். இது, நான் முன் மொழியும் மனித உரிமைகளுக்கு மிக முரணான செயல் என்றாலும், சில நேரங்களில் உணர்ச்சி வசப்படும் போது, தற்கொலை செய்து கொள்வதை விட, போராளிகளை போல் இப்படி செயல் படுவது மேல் என்று தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம். மனித மனம் விசித்திரமானது.

  31. THOZHAR
    WHAT ARE WE GOING TO DO? I WAS JUST A READER FOR THE ARTICLES. NO MORE I WANT TO BE THE SAME.SOLLUNGA THOZHAR ENNA SEIYALAM? LET US ALLOW ANY MORE DIVYAS TO DIE HERE AFTER. BUT RATHER TO KILL THOSE WHO MAKE DIVYAS NAKED DAILY IN ALL THE ASPECTS.

  32. Again as our friend thozhar kovan said in the CD VASANTHATHIN IDIMUZHAKAM ‘PAATAALI PADIKKA KOODATHU. IS CONFIRMED ONCE AGAIN.Another exposure and example for our eductioanal policy.POLITICAL PARTIES ARE SILENT PREPARING FOR LICKING THE FOOT OF THE PEOPLE FOR VOTE AND THE MEDIAS ARE AFTER THEM TO HOLD THE LIGHT.WE ARE NOT FREED FROM VARNASRAM. LET US LEARN THE ALPHABET OF WEAPON.

  33. மீனவர்கள் கடலுக்குபோனாலும் கொல்கிறார்கள் கல்லூரிக்குபோனாலும் கொல்கிறார்கள் அவர்கள் உழைக்கும் வர்க்கம் என்பதாலேயே ..

  34. சேட்டு, மார்வாடி, ஜெயின் வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு தீங்கு என்றால் போலி மோதலை உருவாக்கி கொலை கூட செய்யும் இந்த அரசும் போலிசும். (கோவை டிரைவர் மோகன்ராசு கொலை) ஆனால், தமிழ் மீனவன் என்றாலும் அவர்களது குலக்கொழுந்துகளானாலும் உயிர் என்பது செல்லாக்காசு மாதிரி. உழைக்கும் மக்கள் இனி போலி மோதல் அல்ல நிஜ மோதலை சந்திக்க வேண்டியுள்ளது. தயாராவோம். இந்திரஜித்

  35. மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு. பதிவை படிக்கும்போதே அடக்க முடியா ஆத்திரம் வருகின்றது.

  36. காலம் காலமாகத் தொடரும் வன்முறைகள்.
    புரிந்துகொள்ளவதும், புரிந்துகொண்டு போராடச்செய்வதும் தமது கடமை.
    முதலாளித்துவம் கொள்ளும்!
    மூலதனம் மட்டுமல்ல. முதலாளித்துவ சிந்தனையும்தான்.

    • உங்கள் போலி மனிதாபிமானம் இதிலேயே வெளிப்பட்டுவிட்டது…நான்கு கல்நெஞ்சக்கார அரக்கிகள் செய்த அநியாயத்திற்கு மொத்த சமூகத்தையும் குறை சொல்வது பைத்தியக்காரத்தனம்.

      அப்புறம் ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கொன்ற எட்டுக் கோடி உயிர்களுக்கு உலகில் உள்ள எல்லா கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்களையும் தூக்கிலே போட வேண்டியிருக்கும் அல்லவா ?

      • இப்படி ஒரே ரெக்கார்டை எத்தனை முறைதான் தேய்ப்பீர்களோ. சிராய்ப்புகளால் இணையத் திரைகளில் இரத்தம் வழிகிறது. ஆமாம்! உங்களிடம் வேறு ரெக்கார்டு எதுவும் இல்லையோ?

        • ஏழைப் பங்காள கம்யுனிச ரேக்கார்டை நீங்கள் எவ்வளவு தடவை தேய்ப்பீர்களோ அவ்வளவு தடவை நானும் தேய்ப்பேன். உங்கள் பொய்களை தோலுரித்து காட்டுவது தான் என் பணி.

          சரி, என்னை விடுங்கள் – என் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க முடியவில்லை ?

  37. thivyaa ஏழை என்பதை விட படித்த பேராசியைகளின் ஆணவமே இரு சிறு பெண்ணின் மரணத்திற்க்கு காரணமாகியுள்ளது. கல்லூரிகளில் பேராசிரியைகளின் அடாவடித்தனம் அரசியல் ரவுடிகளை விட கொடுமையானதே!

  38. கண்ணியமிக்க நீதிமன்றங்களில் இருந்து 100 குழந்தைகளைக் கொன்ற கல்வி வள்ளல்களே தப்பி விடும் போது நிர்வாணச் சோதனை செய்தவர்கள் தப்புவது என்ன கடினமா?

  39. மாணவி திவ்யாமீது தொடுக்கப்பட்ட இக்கொடூரம் நெஞ்சை உலுக்குகிறது. இக்கட்டுரையைப் படிக்கும் எவரும் அநேகமாய் கண்கலங்காமல் இதிலிருந்து வெளிவந்திருக்க முடியாது. என்றாலும், இது சில முன்நிபந்தனைகளைக் கொண்டது என்றே கருதுகிறேன். அதாவது மரணம் குறித்த செய்தி நம்மில் ஏற்படுத்தும் பாதிப்பு எதிலிருந்து வருகிறது? அந்நபர் எத்தகைய கொடுமையால் மரணத்தை எதிர்கொண்டார், எனபதை விட அந்நபர் சமூகத்தில் எத்தகைய அந்தஸ்தில் இருந்தார் என்பதுதான் முதன்மை வகிக்கிறது. அதாவது அவர் எந்த வர்க்கப் பின்னணியைக்கொண்டவர் என்பதை வைத்துத்தான் மரணச் செய்தி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் பத்திரிக்கைகள் ஊடக தரும பாவத்திற்காக பெட்டிச் செய்திகளோடு இதை நிறுத்திக்கொண்டன. நூறு வயதை நெறுங்கிவிட்ட எங்கோ ஒரு வேசக்காரன் இறந்துவிட்டால் எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் ஒரே ஒப்பாரியாகத்தான் இருக்கும் அந்த வாரம் முழுவதும்.
    ஆளும் வர்க்க கருத்தில்தான் இன்றைய ‘தன்மானம்’ உயிர் வாழ்கிறது. அதனால்தான் வரதட்சனையால் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் ஒரு ‘ஆண்’ மகன் அதனையே தன்மானமாகக்கொள்கிறான். என்றால் உன்மையான தன்மான உணர்வு என்பது என்ன? அதற்கு சொந்தக்காரர்கள் யார்? அராஜக நோக்கத்திற்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது தன்மானத்தை விட்டுக்கொடுப்பது எனும் போது அதை எதிர்த்து நிற்பதுதான் தன்மான உணர்வு. இதை யாரிடம் எதிர்பார்க்க முடியும்.? இழப்பதற்கு ஏதுமற்ற் உழைக்கும் வர்க்கத்திடம்தான் எதிர்பார்க்க முடியும். இதற்கான சாட்சியம்தான் மாணவி திவ்யா.
    மாறாக, டாடா, கருணாநிதி, நித்யானந்தா, ரஜினிகாந்த், இந்து ராம்,…… பேர்வழிகளிடம் இதை எதிர்பார்க்க ஏதாவது அடிப்படை இருக்கிறதா? மாணவி திவ்யா மீது இப்படியொரு குரூரத்தை நடத்தியது அந்த நான்கு ஆசிரியயைகள் வழியாகத்தான். என்றாலும், இவர்களை வழி நடத்தியது எது? ஏழைகள் என்றால் ஒழுங்கற்றவர்கள், திருடுபவர்கள் என்ற கருத்தைக் கொண்ட மேட்டுக்குடி மனோபாவம்தான் இந்த நடுத்தர வர்க்க பெண்களை வழி நடத்தியிருக்கிறது. இது இந்த நான்கு பேருடன் நின்றுவிடவில்லை என்பதுதான் நம்முன் இருக்கும் சவால். இதை எதிர்கொள்வதன் ஊடாகத்தான் இப்பேர்வழிகளை நாம் தண்டிக்க முடியுமே தவிர வேறு குறுக்கு வழி இல்லை.

    • மிகவும் சாமர்த்தியமாக பேச்சை உங்கள் பக்கம் திருப்புகிறீர்கள் – சத்தியமாக கோயபெல்ஸ் தோற்றான்.

      பிரெஞ்சு புரட்சி, காரல் மார்க்சு காலங்களில் ஏழை பணக்காரன் என்று இரு சமூகங்களே இருந்தன, நடுவே கொஞ்சம் நடுத்தரவர வர்க்க ஆட்களும் இருந்தார்கள். அன்றைய பிரமிடு போன்ற சமூக கட்டமைப்பில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

      இன்றைய முதலாளித்துவ அமைப்புகளில் மக்கள் நிதி நிலையிலும் சமூக நிலையிலும் வளர ஏராளமான வைப்புகள் உள்ளன – ஆனால் அவற்றை அடைக்கப் பார்ப்பது நம்மில் பலரது கட்டுப்பெட்டி ஜமீந்தார்கால எண்ணங்களே….

      உண்மையான சமத்துவளிக்கும் ஜனநாயகத்தை ஏற்போம், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் மூலதன சிந்தனையை ஏற்போம். ரௌடிகளை ஆட்சியில் ஏற்றி வீண் கனவுகளை போற்றும் கம்யுநிசத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருக்கிறோம்.

  40. ooran is completely reflect my thinking.As usual the criminal mind has two side. one side it has compete fear, complete failure of hope ,complete breakdown of rational thinking. this is the cumulative effect of the present day happening in the Tamil people life. we are fed up with a belief of that no one cane win, no can defense against the evil or criminal in Tamil Nadu. to day every one see how the criminals are walking in the street with all kind of military titles and posed as hero . the young girl
    afraid of the uncertainty in her mind and find a easy way to escape from the cruel people who posed as teacher.. Because of the same of kind of fear I feared to read this articles.I am ready to accept I am a coward . it is not justice if we expect a bravery from this young girl. we expect some people take this mater as their life challenge and give justice to her

  41. kadan kattamudiatha vivasayee manamilanthu vaalvaa yendrum,thirudiathaka solli nirvanapaduthium (thar)kolai seitharkal aanaal ooraiyae kollai adithavarkalai yenna seitharkal

  42. the agriculturists unable to repay the loans are driven to sucide,poor student suspected of theft was stripped naked and driven to sucide,But those who looted the country are left untouched

  43. The issue is not any ‘isms’ but the indifference towards fellow humans particularly to the downtrodden , the poor and to those in the lower strata of the inhuman ‘caste system’. The political class and the rich have all the powers in this farcical ‘democratic system’. The middle class is greedy and lack any courage.They are spineless selfish and highly hypocritical.They are the staunch and vehement promoters and supporters of of all the unwanted aspects of religions ignoring the basic tenet that all are equal before(any) God. They seek favours from the rulers and the rich ignoring all social responsibility.If the middle class functions responsibly the rulers cannot behave arrogantly(forgetting that they are simply servants of the people) and the filthy rich would exhibit some social responsibility.The curse here is that all sort of funny characters promote political parties and they seem to all the economics and political theory. How gullible and self centred all of us are. Thats why we kill poor souls like Divya. The youngsters should come forward to set things right.

  44. we must come forward to request the Government to give monetary assistant to the poor parents at least Rs.5 lakhs and a government job to them. our government give liberally give monetary assistant even to
    the accidental victim and all sorts of death..

    • யார் அப்பன் வீட்டுக் காசு என்று நாட்டின் வரிப்பணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க சொல்கிறீர்கள்? முதலில் இந்த நட்ட ஈடு முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.

      யார் மீது தவறோ அவரே நட்ட ஈடு தரவேண்டும் – சந்தேகம் தீர விசாரித்து குற்றவாளிகளை அடையாளப்படுதுவதே நீதிமன்றங்களின் பணி. குற்றவாளிகளிடமிருந்தே நட்ட ஈடு பெறப்பட்டு அடிபட்டவரிடம் தரப்படவேண்டும். (உடனே இயற்கை சீற்றங்களைப் பற்றி கேட்பீர்கள் – அதற்கு insurance என்ற வழி உள்ளது)

      எதற்கெடுத்தாலும் பொதுப்பணத்தில் கைவைப்பது முட்டல்தானம் மட்டுமல்ல, வரி கட்டுவோரின் மீதான மேலாதிக்க செயலும் கூட.

      • இப்படி அனைதிற்கும் இழப்பீடு என்று பணமதிப்பை கட்டும் வரை, தவறு செய்பவன் பணத்தால் சரி செய்து விடலம் என்ற எண்ணம் மேலோங்கும்.

        தீர்ப்புகள் சரியக இருக்க வெண்டும் !

        போராட்டங்கள் பற்றியும், பத்திரிக்கை பற்றிம் நான் கேட்ட ஒரு வாசகம்,

        “ படிப்பவனுக்கு நியூசு…
        பத்திக்கை காரனுக்கு காசு…”

        இந்த நிலை மாறனும்,

        போரட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பத்திரிக்கை நடத்தினர்….
        ஏன்னென்றால் தனது விழிப்புனற்வு மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகம் இதுதான் என்று…

        இன்று மக்கள் போரட்ட குணம் குரய காரணம்….

        “ படிப்பவனுக்கு நியூசு…
        பத்திக்கை காரனுக்கு காசு…”

        என்ற நிலையே, பத்திரிக்கை தரும் எழுத்தில் எழுச்சி வேண்டும்…
        நீதிக்காக போராடும் நீதி தாகம் வேண்டும்…..

        நீதி கிடக்கும் வரை போரடும் எழுச்சி வேண்டும்,
        குற்றவாளிகளை தோலுரித்து நீதிக்கு உதவ வேண்டும்…
        நீதிமன்றம் தண்டிக்க தவறினால் அதை தோலுரிக்கும் சக்தி பதிரிக்கைக்கு உண்டு…

        இதை செய்ய உதவி தேவைபட்டால் அதை செய்ய மாணவ சமுதாயம் உண்டு…

        மாணவ சமுதாய மாற்றம், நல் சமுதாய மற்றமாகும் என்பதற்கு இன்று உலகில் பல்வேறு நாடுகளில் தோன்றியுல்ல புரட்சி ஒரு உதாரணம் ஆகும்.

        • நீங்கள் சொல்வது மிகச் சரியே – சட்டத்தின் படியும் நீதிகளின் படியும் தீர்ப்பளிப்பது நீதிமன்றங்களின் கடமை, அதை நிறைவேற்றுவது அரசின் கடமை, இது எல்லாம் மக்களின் உரிமை. நிறைவேறாத போது அதை நடக்க வைப்பது மக்களும் ஊடகங்களுமே.

          மேலே simple என்ற பதிவர் அரசாங்கமே இழப்பீடு தர வேண்டும் எனப் பேசியுள்ளார்.

          ஆகவே இப்படி வைத்துக்கொள்வோம் – பண இழப்பீடு தந்தால் கணக்கு சரியாகிவிடுமா என்பது மனிதவியல் கேள்வி. அதற்க்கு முடிவு கிடைத்தபின்னர் யார் இழப்பீடு தருவது என்பது பொருளாதார சித்தாந்தக் கேள்வி.

          அரசு என்கிறார் simple. இல்லை குற்றவாளி தான் தர வேண்டும் என்கிறேன் நான்.

  45. என்னை சமீபத்தில் பாதித்த நிகழ்ச்சி இது. யாரும் இதை பற்றி வலைத்தளத்தில் பதிவு செய்யாதது கொடுமையின் உச்சி.திவ்யா சோதனைக்கு ஆளானதுக்கு ஒரே காரணம் அவ்ளின் வறுமை, வறுமை, வறுமை. பணத்தை பறிகொடுத்த மாணவி பற்றி இதுவரை யாரும் வாய் என் திறக்கவில்லை என்று தெரியவில்லை? நான்கு பெராசிரியர்கல்லும் கண்டிக்க பட வேண்டியவையே. இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். போலீஸ்காரரின் மனைவி வேற பேராசிரியார இருகாங்க?போடோஸ் அருமை யாரும் இதை வெளியடவில்லை

  46. நால்வருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சு வலி வந்த போதே அவர்கள் தான் குற்றவாளீகள் என்பது நிரூபணமாகி விட்டது. ஏழைகளை ஏளணம் செய்யும் இவர்களுக்கு நம் சட்டம் எந்த தண்டணையும் கொடுக்கப் போவதில்லை. இன்னும் ப்ல திவ்யாக்கள் கொல்லப் படுவார்கள். இது தற்கொலை அல்ல.

  47. தவறு செய்யாதபோது எதிர்த்து நிற்கும் மனதைரியத்தை இளமைமுதலே பிள்ளைகளுக்கு பழக்கவேண்டும். யாரும் என்னை விழ உயர்ந்தவரில்லை, தாழ்ந்தவரில்லை என்கிற எண்ணத்தினை குழந்தை முதலே சொல்லி தெளிவுற வளர்த்திடவேண்டும். தாழ்ந்தவருடைய பயம், எதிர்நிற்கின்றவருக்கு அளவிலா தைரியத்தை தந்துவிடுகிறது. தற்கொலை என்கிற செய்தியின் ஆயுள் சொற்பமே. இதே இறப்பு எதிர்த்துநின்று நிகழ்ந்திருந்தால் அது எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாதிருக்க விதையாக விழுந்திருக்கும்.

    தவறுசெய்யாதபோது பயம் இல்லாமலிருத்தல் இதுபோன்ற வன்கொடுமை செய்ய துணிவும் ஒவ்வொருவருக்கும் அச்சத்தினை ஏற்படுத்தும்.

    வறுமையில் கல் என சொல்லிகொடுத்தோம். வறுமையிலும் நேர்மையாய் இரு என சொல்லிக்கொடுத்தோம். நேர்மையில் பயமில்லாமலிறு என சொல்லிக்கொடுக்க தவறிவிட்டோம்.

    இந்த கொடுமையை செய்தவர்கள் மீது கோபம் வருகிறது. அதைவிட வன்கொடுமைக்கு தன்னையே பலியாக்கிக்கொண்டு தன் கோபத்தினை தன்னோடு புதைத்து சென்றுவிட்ட திவ்யா மீது இன்னும் கோபம் வருகிறது.

    • நண்பர் இல்யாஸ்.மு,
      வன்கொடுமைக்கு பலியான மாணவி திவ்யா அச்சத்தால் மட்டும் அம்முடிவுக்குச் சென்றிருக்க முடியாது. சமூகத்தால் ஏழ்மையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இது தனக்கு மட்டுமே ஏற்பட்ட அவமானப் பிரச்சினையாகவும் பார்த்ததும் அம்முடிவுக்கு தள்ளியிருக்கிறது. ஏழைக்களுக்கே உரிய அல்லது ஏழைகளிடமிருந்து பிரிக்க முடியாத இந்த “தன்மான உணர்வை” போராடுவது என்று மாறிவிடாமல் தனக்குரிய பிரச்சினையாக முடங்குவதற்கு கற்றுக்கொடுப்பதில் ஆளும் வர்க்கம் குறிப்பிட்ட அளவில் வெற்றியடைந்திருக்கிறது என்பதோடு சேர்த்து இதைப் புரிந்துகொள்ள் வேண்டும்.

    • //இந்த கொடுமையை செய்தவர்கள் மீது கோபம் வருகிறது. அதைவிட வன்கொடுமைக்கு தன்னையே பலியாக்கிக்கொண்டு தன் கோபத்தினை தன்னோடு புதைத்து சென்றுவிட்ட திவ்யா மீது இன்னும் கோபம் வருகிறது//

      வழிமொழிகிறேன். தற்கொலை என்பது தீர்வல்ல. எதிர்த்துப் போராடுவது என்பதே தீர்வு.

  48. ஒரு தமிழ் வலதுசாரி,
    ///புலி வருது, இயேசு வருகிறார், கல்கி வருகிறார், அல்லா சொர்க்கம் தருகிறார், புரட்சி வருது – எல்லாமே ஒன்றுதான் – வெட்டி அரட்டை///
    நீங்கள் இயேசு, கல்கி, அல்லாவுக்கு இணையாக புரட்சியை புரிந்துவைத்துக்கொண்டு, கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை என்றால்தான் கேள்வியே.

    • என் புரிதல் மிகவும் தெளிவானது – போலி வாக்குறுதிகளைப் பொருத்தவரை இந்த கடவுள் பிம்பங்களும் கம்யுநிசமும் ஒன்றுதான். மற்றபடி கடவுள் அளவுக்கு உங்களை ஏற்றவோ
      இறக்கவோ இல்லை.

      கம்யுனிசம் ஏழைகளுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி ரௌடிகள் ஆட்சி செய்யும் நிலைக்கே வழிகோலுகிறது, அங்கே அமைதிக்கும் இன்பத்திற்கும் முன்னேற்றத்துக்கும் வழியே இல்லை.

  49. வறுமை குற்றமில்லை ,வறுமையிலும் நேர்மையாய் இருக்க

    கற்று கொடுத்தோம், ஆனால் வாழ்க்கையில்

    போராடக் கற்கவில்லை, கற்றுக்கொடுக்கவில்லை, இதனால்

    திவ்யாக்களை இழந்து வருகிறோம், இனி போராடக்கற்போம்,

    போராடுவோம், இப்படித்தான் தன்மான உணர்வை

    வெளிப்படுத்தவேண்டும் வேறு வகையில் இல்லை.

  50. “ஒரு திருட்டுக் குற்றம் நடந்தால் உடனே அதைச் செய்தவன் குற்றப்பரம்பரை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டது …. – இது ஜமீந்தார் காலங்களின் அடையாளம், நம்மை விட்டு இன்னும் செல்லவில்லை.”
    .
    “திரும்பவும் படித்துப் பாருங்கள். – நானும் அவர்கள் பரம்பரையைப் பற்றிப் பேசவே இல்லையே ! இப்படி திரித்துப் பேசியே உங்கள் எல்லோருக்கும் பழக்கமாகிப் போய் விட்டது.”
    .
    இரண்டும் தமிழ் வலதுசாரியின் கூற்றுக்கள்.
    அப்போ எந்தப் பரம்பரையைப் பற்றி அவர் முதலில் சொன்னார்?
    .
    இங்கே முக்கியமானவை, நாலு நடுத்தர வர்க்கப் பெண்கள் மிகக் கொடுமையாக நடந்ததும் மாணவ சமூகத்திற் காணப்பட்ட இரக்கமின்மையுமே.
    அவற்றை இயலுமக்குவது என்ன? இந்தச் சமூக அமைப்புக்கு அதிற் பங்கில்லையா?
    இந்தக் கேள்விகளிலிருந்து விலகியோடும் விதமாகவே ஸ்டாலின், மாஓ என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உரையாடல் திசை திருப்பப்படுகிறது.

    ரசிகன் “இதற்கெல்லாம் தீர்வு கம்யூனிசம் என்று சொன்னால் அது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது,தீவிரவாதம் என்று சொல்வார்கள்.” என்று சொன்னதற்காக இவ் விடயத்தில் அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக முதலிற் குற்றம் கூறப்பட்டது.

    ஆனால் நடப்பதென்ன?
    இன்னமும் தமிழ் வலதுசாரியும் தமிழ் அடையாளமற்ற வலதுசாரிகளும் அரசின் மெத்தனமான போக்கையும் சகமூகத்தில் புரையோடிக் கிடக்கம் சாதிய, உயர் வர்க்க ஆதிக்கச் சிந்தனைகளையும் விமர்சிக்கிறதைத் தவிர்க்கிறார்கள்.

    சமூகத்தில் நடக்கிற சட்ட மீறல்களை அரசு தண்டிக்கிறதென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டை வழங்க அதற்குப் பொறுப்பில்லையா?
    அரசு அதை எப்படிச் செய்கிறது என்பது அரசின் தெரிவு.
    அரசு தன் கடமையிலிருந்து நழுவுவதை எப்படி நியாயப்படுத்த இயலும்?

    • அப்பட்டமான புளுகுனி ஆட்டம் !

      ஒரு இளம்பெண்ணின் தற்கொலையில் நீங்கள் முதலாளித்துவ சமூகத்தின் கொடுமை என சித்தரிக்கப் பார்க்கிறீர்கள், இல்லை நான் இதெல்லாம் ஜமீந்தார்கால மிச்சம் மீதிகள், இவற்றை தூக்கி எரிய முதலாளித்துவ சமூகத்தால் மட்டுமே முடியும் என சொல்கிறேன்.

      அதிலும் மேலாக, இவ்விஷயத்தில் பேச கம்யுநிசத்திற்கு எந்த அருகதையும் கிடையாது என்பதையும் விளக்குகிறேன்.

    • அரசாங்கம் என்ன அள்ள அள்ளக் குறையாத கஜானாவா? நாம் கட்டும் வரிப்பணம் அய்யா !!

      நாட்டில் தனி மனிதர் செய்யும் குற்றத்துக்கெல்லாம் அரசாங்கத்தை நட்டம் கட்டச் சொன்னால் அந்த நாடு உருப்படுமா ? பின்பு எந்த கிரிமினலுக்குதான் திமிரு ஏறாது ?

      உண்மையான நீதிமன்றங்களின் பணி கிரிமினல்களை அடையாளம் காட்டுவது, அவர்களை நட்ட ஈடு தரச்சொல்லி தீர்ப்பு தருவது. அரசாங்கத்தின் பணி அந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது.

    • அரசாங்கம் என்ன மாதிரிக் கஜானாவோ, பொது மக்களின் பணத்தை அள்ளுவதில் ஊழல் பெருசாளிகளும் முதலாளிகளும் ஒன்றாகத்தானே உள்ளார்கள்.

      குடிமக்களின் பாதுகாப்புக்காகவும் தானே வரி கொடுக்கிறேன். அதைச் செய்யத் தவறும் அரசு நட்ட ஈடு வழங்காமல் இருப்பது எப்படி?

      உங்கள் விடயத்தில் ஒரு இன்ஷூரன்ஸ் கம்பனி தவறினால் எவ்வளவு துள்ளுவீர்கள்.

      சில சமூகப் பொறுப்புக்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப் படுகிறது.
      அப் பொறுப்புக்களை ஏற்க இயலாதென்றால் முதலில் அதைச் சொல்லி விட்டு வோட்டுக் கேட்கலாம்.

      • உண்மையான ஜனநாயகத்தைப் பொறுத்தவரை நாட்டை அன்னியரிடமிருந்து காப்பதும் உள்ளே சட்ட நிர்வாகத்தைக் காப்பதும் தான் அரசின் கடமை. அரசின் பணம் நம் ஒவ்வொருவரின் பணம்.

        தப்புப் பண்றவன் ஒருத்தன், ஆனா நட்ட ஈடு குடுக்கறது நாம எல்லோரும் ஆயிட்டா, அப்புறம் தப்பு செய்யிறவனுக்கு எப்பிடி பொறுப்பு வரும் ?

        அரசியல் பெருச்சாளிகள் பற்றி சொந்நீர்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் பெருச்சாளிகள் திருடினால் நீங்களும் திருடுவீர்களா, இல்லை பெருச்சாளிகளை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? தேர்தல் வருகிறது – முதலில் போய் நல்ல ஆளாக தேர்ந்தெடுங்கள் அய்யா !!

      • “தப்புப் பண்றவன் ஒருத்தன், ஆனா நட்ட ஈடு குடுக்கறது நாம எல்லோரும் ஆயிட்டா, அப்புறம் தப்பு செய்யிறவனுக்கு எப்பிடி பொறுப்பு வரும் ?”

        தப்பு பண்ரவேன் ஸ்கூலே எரிசசா, ஹாஸ்பிட்லே இடிச்சர் அகப்புட்டர் யாரு குடுப்பா? அவங்கிட்டே பணமில்லேன்னர்?
        அகப்படலேன்னா யாரு குடுப்பா? பொலீசு குடுக்குமா? புடிக்காதது பொலீசு தப்பு இல்லியா?

        கவர்மேண்டுக்கு சமூகப் பொறுப்புன்னு ஒண்ணு இருக்கு. அது கூட வெளங்கலேன்னா என்னாத்தெ நா சொல்ல!
        .
        .
        “அரசியல் பெருச்சாளிகள் பற்றி சொந்நீர்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் பெருச்சாளிகள் திருடினால் நீங்களும் திருடுவீர்களா, இல்லை பெருச்சாளிகளை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? தேர்தல் வருகிறது – முதலில் போய் நல்ல ஆளாக தேர்ந்தெடுங்கள் அய்யா !!”

        யாரு திருடறான்? மெதலாளி திருடறான்! அதிகாரி திருடறான்! பொலீசு திருடறான்! அரசியல்வாதி திருடறான்!
        சட்டம் என்னா பண்ணுது? சும்மா பாயாஸ்கோப் காட்டுது.

        எல்லாத் திருட்டுப்பயலையும் வாண்ணா, வாங்க ஒழிச்சுப்புடுவம்!
        வோட்டுப் போட கண்ணுக்குத் தெரியறபடியா நல்ல ஆளு அகப்படலே.
        தெரிஞ்சா சொல்லுங்க.
        அது ஒங்களாலியும் முடியாதில்லியா!

        • கார்போரல் அவர்களே, இது என் பொறுப்பு மட்டுமல்ல – உங்களுக்குக் கூடத்தான் உண்டு. உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்லுங்கள்.

          இல்லையா, இருக்கிற திருடனில் கொஞ்சம் நல்ல திருடனுக்கு நான் ஓட்டுப் போட்டுவிட்டி போகிறேன். ஏனெனில் ஜனநாயகம் என்ற இந்த மரம் இன்றில்லாவிட்டாலும் நாளை நல்ல கனி தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

          நீங்கள் பேசுவது ஆயுதமேந்திய வன்முறை கொண்டு மக்களை ஆளும் ‘ஒரே கட்சி’ அரசு – அதில் மக்களுக்கு மீட்சி என்பதற்கே இடமில்லை.

        • தமிழ் வலதுசாரி சார்,
          போட்டு ஒண்ணுமே ஆகாதுன்னு தெரிஞ்சிக்கிட்டும் போடறவன் முட்டாளா அல்லது அயோக்கியனான்னு நீங்களா முடிவு பண்ணிக்குங்க.

          ஆயுதம் தூக்குறது தூக்காததுங்கறது ஜனங்களுக்கு எதிரா யாரும் ஆயுதம் தூக்கறதெப் பொறுத்தது.
          இப்பப் பாருங்க ஈஜிப்ட்லே, துனீசியவிலே எல்லம் யாரு ஆயுதம் தூக்காமே கவமேந்த்டே மாத்தனும்னு கேட்ட அப்பவிகளெ ஆயுதம் தூக்கி சாகடிச்சங்கன்னு சொல்லுங்க.

          அது போவட்டும், ஹாஸ்பிட்டல், ஸ்கூல் பில்டிங்குக்கு தீ வெச்சவன் அகப்படாங்காட்டியும் என்னா பண்ணறதுன்னு நீங்க சொல்லல்லியே.

        • “இருக்கிற திருடனில் கொஞ்சம் நல்ல திருடனுக்கு நான் ஓட்டுப் போட்டுவிட்டி போகிறேன்.”

          சத்தியமா எனக்குத் தெரிய ஒரு யோக்கியன் –இல்லை, நல்ல திருடன் கூடக்– கிடையாது.

          உங்களுக்குத் தெரிந்த அந்த ராபின் ஹுட் (அல்லது Robbing Hood?) யாரென்றாவது சொல்லுங்களேன்.

  51. கல்விக் கண் திறப்போரால்
    மூடப்பட்டது அவள் கண்..

    பறவை கொன்றால்
    ப்ளூ கிராஸ்..!
    ……பாவை கொன்றால்
    டோண்ட் கிராஸா??

    சந்தேகமா..
    சாதாரண நடைமுறையா..
    தன்மானச் சீண்டலா..
    தவறான கணிப்பா..

    எதுவாகினும்
    செத்தது..
    ஏழைக்கான மனிதம்..

    இவளின் மூடிய விழியால்
    விழிப்பார்களா
    இனியேனும் இத்தகையோர்…??!!! —–malar

  52. திவ்யாவின் மரணத்திற்கு எதிராக மாணவர் போராட்டங்கள் கூட நடக்கவில்லையே.வேதனையாக இருக்கிறது.

  53. உழைக்கு நம் தமிழ்ச் சமூகத்தைக் கவ்விப் பிடித்து வைத்திருக்கும் தாழ்வு மனப்பான்மை என்ற அறியாமையும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களை தன்னை விட உயர்ந்தவர்கக் கருதுவதும், பொருளாதார பலமற்ற நம் அடித்தட்டு உழைக்கும் மக்கள், மேட்டுக்குடியினரை பலம் பொருந்தியவர்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் கொடுத்த அதிகப் படியான விலை இந்தக் கொலை! நியாயமோ நேர்மையோ.. அனைத்தையும் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்ற உழைப்பவர் நலனைச் சிந்தித்தவரின் கருத்து திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது! கொலைகார ஆசிரியர்கள் நான்கு பேருக்கும் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி, அவர்களின் வர்க்கத் திமிர் ஆவர்களுக்கு அளித்த பாதுகாப்பு! உழைக்கும் மக்களை அவர்கள் ஏளனமாகக் கருதியதன் விளைவே இந்தத் திடீர் நெஞ்சு வலிகளெல்லாம்!
    நம் உழைக்கும் மக்களின் இந்தத் தொடர் தோல்வி என்பது பார்ப்பனியத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. மேட்டுக்குடி பார்ப்பனியத்தின் இந்த தொடர் வெற்றிகள் நம் மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் அவர்களுக்குக் கொடுத்த பலனே. நம் மக்களின் நம்பிக்கைகளே நம் எதிரிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது இன்று வரையிலும்! இந்த எதிரிகளை அடையாளம் காண்பதற்குக் கூட நம் மக்கள் ஒத்துக் கொள்வதில்லை! அடையாளம் காண்பிப்பவர்களைக் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை! மூட நம்பிக்கைகள் நம் மக்களை, சோம்பேரி மேல்தட்டு வர்க்கத்துக்கான பலியாடுகளாகத் தக்க வைக்கும் வேலையையே செய்கின்றன.! ஆனாலும் மீண்டும் மீண்டும் நம் மக்களே இழப்புகளையும், இழிவுகளையும் சந்திக்கிறார்கள்! எந்த இழப்புமே நம் மக்களிடம் குறிப்பிடத்தக்க மன மாற்றத்தை ஏற்படுத்தியதில்லை இதுவரை! புரட்சிகர இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் இதை ஒரு தோல்வியென ஏற்றால் மட்டுமே, நமது மக்களை அணுகும் முறையிலும், பரப்புரை செய்வதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து நம் உழைக்கும் மக்களை காக்க முடியும்!
    காசிமேடு மன்னாரு.

  54. வலதுசாரி(களு)க்கு இவ்வளவு குறைவாக மூளை வேலை செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை, திவ்யாபோன்றோரின் இழப்புக்கு நட்டஈடு அரசு வழங்கவேண்டும் என்றால் மக்கள் வரிப்பணத்தின்மீது அக்கரை அதிகமாக தலைக்கு ஏறி சாமியாடத் தொடங்கி விடுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாலும் நட்ட ஈடு இலங்கை இராணுவம்தான் வழங்கவேண்டும் என்று கூறுவார்களோ இவர்கள். அதாவது உழைப்பவர் இறந்துவிட்டால் மட்டும்போதாது. குடும்பமும் கல்லரைக்கு போனபிறகு கருமாதி செலவுக்கா இழப்பீடு? ஒருவேளை அந்த அளவுக்குத்தான் அரசாங்கம் கொடுக்கும் என்று சொல்லகிறார்களோ! மின்சாரம் பற்றாக்குறையினாலோ, அல்லது தடங்கல் எற்பட்டால்கூட நட்ட ஈடு தருவதாக பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு அரசு கஜானாவை அப்படியே தூக்கிக் கொடுக்கிறதே இந்த அரசாங்கம். என்றானுக்கு பலநூறுகோடிகளை தினசரி நட்ட ஈடாக கொடுத்ததே. இவைகளையும்தான் நாங்கள் தவறு என்று கூறுவதாக ஒன்றை வரியில் சொல்லிவிட்டு தப்பிக்க முயற்சிக்காதிர்கள் வலதுசாரிகளே. இந்த அரசாங்கம் பிஜேபி, காங்கிரசு, திமுக, அதிமுக என்று எதுவாக இருந்தாலும் இந்த ஒப்பந்தப்படி கடந்த 20 ஆண்டுகளாக செயல் படுத்துகின்றன. உங்களின் பிரதிநிகள்தானே இந்த ஆட்சியாளர்கள். நீங்கள் தானே தேர்ந்தெடுத்துள்ளீர்கள். பிறகு அரசு கஜானாவைப் பற்றி எதற்கு போலியான ஒப்பாரி? இந்த ஒப்பந்தங்களை எல்லாம் பகிரங்கமாக அரசாங்கம் ரத்துசெய்தால்தான் தேர்தலில் வாக்களிப்போம் என்று வலதுசாரிகள் போராடவேண்டாம், ஒப்பாரியாவது வைப்பார்களா?

    • வலதுசாரி என்றாலே ஊழலை ஆதரிப்பவன் என்று நினைப்பா? நீங்கள் உண்மையானவர் என்றால் நானும் உண்மையானவன் தான். உங்களுக்கு அரசு ஊழல் எவ்வளவு வேதனையாக இருக்கிறதோ அதே அளவு தான் எனக்கும். நான் ஒழுங்கான முறையில் வர்த்தகம் செய்கையில் என் போட்டியாள வணிகர் அரசுக்கு லஞ்சம் கொடுத்து காண்ட்ராக்ட் பெற்றால் எனக்கும்தான் கோபம் வரும்.

      ஆமாம், இந்த லஞ்ச அரசியல்வாதிகளை ஏதோ நான் மட்டுமே தேர்ந்தெடுத்ததுப் போல் கூறுகிறீர்களே, ஏன் நீங்கள் ஒட்டே போடவில்லையா? இந்த நாட்டின் அரசைத் தேர்ந்தேடுத்ததில் உங்களுக்கும் எனக்கும் சமமான பங்குண்டு தோழரே ! இனி வரும் தேர்தலிலாவது நல்ல ஆட்களுக்கு ஒட்டுப் போடுங்கள் – அப்படி யாருமே இல்லையென்றால் நீங்களே ஜனநாயகத்தை நம்பி தேர்தலில் நில்லுங்கள் – நல்லவராக இருந்தால் என் ஒட்டு உங்களுக்குத் தான் 🙂

      நான் சொல்வது ஒன்றுதான் – மக்களின் வரிப்பணத்தை கண்டபடிக்கு வாரி இறைக்கக் கூடாது. நீங்கள் சொல்வது என்னவென்றால் – ஏழைகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக உதவ வேண்டும். இதில் கொள்கை முறையிலும், செயல்படுத்தும் முறையிலும் தான் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு. மக்கள் நலத் திட்டங்கள் சரியாக அமைக்கப்பட்டு ஒழுங்காக செயல்படுத்தப்படும் வரை எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை .

      ஆனால் கிரிமினல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கே நட்ட ஈடு குடுக்க வேண்டிய பொறுப்புண்டு – வெளிநாட்டு ராணுவம் தப்பு செய்தால் அவன் கழுத்தைப் பிடித்துக் கேட்கவேண்டும் – அதற்குத் ‘தில்’ உள்ள ஆட்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழரின் தானைத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பாதிப் பேருக்கு அந்த ‘தில்’ கிடையாது – அது என் தவறல்ல !

        • நம் மீனவரை இலங்கை ராணுவம் கொன்றது உண்மையென்றால் இலங்கை தானே பொறுப்பு? அவர்கள் தானே இழப்பீடு தர வேண்டும் ? இந்த அளவுக்கு நியாயத்தை நிலைநிருதுபவர்களைத் தானே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்?

          இதில் என்ன நகைச்சுவை ? சற்று சீரியசாக பேசுங்கள்.

    • உங்கள் தொகுதி வேட்பாளர் பட்டியல் வந்தவுடன் இங்கே லிஸ்ட் போடுங்கள், ‘ஓபனாக’ ஆராய்ச்சி செய்யலாம் யார் உங்கள் ஓட்டுக்கு தகுதியானவர் என்று.

      ஆனால் ஒன்று, நாம் இருவரும் சேர்ந்து முடிவு செய்தபின் நீங்கள் அவருக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் – உங்கள் அபிமானக் கட்சி கூட்டணியில் இருக்கிறாரோ இல்லையோ…தயாரா ?

    • தமிழ் வலதுசாரி,
      யாருமே யோக்கியனா இல்லேன்னாங்கறது தான் அவரோட நிலைப்பாடு.
      அப்போ யாருக்குமே போடாதேன்னு ஒரு பொது முடிவுக்கு வர நீங்க ஆயத்தமா?

      • சரி, ஆனால் அதற்குப்பின் யார் வந்தாலும் நீங்கள் கூப்பாடு போடக்கூடாது, ரெடியா ??

        இப்படியே பேசிக் கொண்டிருக்கலாம் தோழரே, ஆனால் அது வெட்டிப் பேச்சு என்றாகிவிடும். முதலில் ஜனநாயக நாட்டில் உங்கள் ‘பவரை’ உபயோகம் செய்யுங்கள்….நானும் நிற்கமாட்டேன், எவரையும் தேர்ந்தேடுக்கமாட்டேன், வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஆயுதப் புரட்சி செய்வோம் என்பதெல்லாம் தவிட்டுக்கு கூட லாயக்கில்லை.

      • அனாமதேயம் அவர்களே,
        நம்பி எமாறாச் சொல்லுகிறவர்களுக்குத் தான் கூப்பாடு போட முன்னுரிமை உண்டு. போதுமா?

        போடாதே என்கிறவன், இந்த ஆள் வந்து தான் எல்லாம் பிழையாகிப் போனது என்றோ அந்த ஆள் வந்து தான் எல்லாம் பிழையாகிப் போனது என்றோ பிலாக்கணம் வைப்பதில்லை.

        பெரும்பாலான மக்கள் உண்மைகளைத் தெளிவாக உணரும் வரை இந்தத் தேர்தல் கூத்து நடக்கும்.
        அது நடக்கும் வரை நம்பி ஏமாறாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு தான் இருப்போம்.

        யாரை நம்பி ஏமாறுவது என்பது உங்கள் சுதந்திரம்.
        ஏமாறாதே என்று எச்சரிப்பது எங்கள் சுதந்திரம்.

        இந்த ஜனநாயகம் உங்களுக்குப் போதும் என்றால் உங்களுக்குப் புரட்சி வேண்டாம்.
        இது ஜனநாயகமே இல்லை என்பவனுக்குப் புரட்சி வேண்டும்.

        புரட்சியைக் கொண்டுவரப்போவது நானோ நீங்களோ இல்லை. மக்கள் தானே!
        ஏன் பதறுகிறிர்கள்.

  55. என்ன வலதுசாரி சார் உங்க முதலாளி வர்க்க விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? மாணவி திவ்யாவின் படுகொலைக்கு அந்த நான்கு அரக்கிகள் மட்டும் என்ற தனி நபர் வாதத்தில் ஆரம்பித்து பிறகு அதன் மொத்த விவகாரத்திலிருந்து திசை திருப்பி இப்போ இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தூக்கி நிறுத்துவதற்காக நல்லவரை பார்த்து தேர்ந்தெடுங்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி ஒரு நல்லவரை தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் லஞ்சம் வாங்கும் போலீசோ, கொள்ளையடிக்கும் முதலாளிங்களோ திருந்திடுவாங்களா எனன?

    • பேச்சை நான் மாற்றவில்லை – உங்கள் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் 🙂

  56. இப்படிக்கு திவ்யா!

    ‘பெருக்குபவளுக்கும்
    வாட்ச்மேனுக்கும்
    பிறந்தவள்தான்
    திருடியிருப்பாள்’
    எனும்
    நான் அறிந்திராத
    விதியினை
    எனக்கு
    அறிமுகப்படுத்தப்பட்ட
    நாளம்மா அது!

    அவமானத்தில்
    நகர்ந்த
    நொடிமுள்ளின் கூர்மையில்
    தீண்டும் காற்று கூட
    ஊசியாய் குத்தி
    குருகச் செய்த
    அந்த நிமிடங்களை
    எப்படியம்மா விவரிப்பது!

    நிர்வானப்படுத்திவிட்டார்களே
    என்பதால் மட்டும்
    என் வேதனைகள்
    சாகும் அளவுக்கு
    போகவில்லையம்மா!
    என்னிடம்
    பணம் இல்லை என்ற
    உண்மையாவது வெளிப்பட்ட
    ஒரே ஆறுதலில்தான்
    அப்பாவையும் உன்னையும்
    நினைத்து
    வேதனைகளை
    அழுது தீர்த்துவிட்டு
    கண்கள் துடைத்து
    மறுநாளும்
    கல்லூரி சென்றேன்!

    என்னை மட்டும் ஏன்?
    என்று துளைத்துக்கொண்டே
    வந்த
    அந்த கேள்வியை மட்டும்
    அன்றைய நாள் முழுவதும்
    சக மாணவிகள்
    சிலரின்
    ஏச்சும் பேச்சும், பார்வைகளும்
    தட்டிஎழுப்பிக்கொண்டேயிருந்ததம்மா!

    கட்டப்பட்ட
    திருட்டுப்பட்டத்தை
    மறந்துவிட்டு,
    துகிலுரித்து சோதனையிட்ட
    அவமானத்தை ஈடுகட்டி நடைபோட
    நேர்மையைத் தவிர
    வேறெந்த கௌரவத்திற்கும்
    நமக்கு
    கொடுப்பினை இல்லையேயம்மா!

    எனக்கு
    சாக விருப்பமில்லையம்மா!
    அதனால்தானம்மா
    அவமானத்தில் செத்துப்போன
    என் உயிரை தூக்கு வைத்து
    உயிர் கொடுத்து பார்க்கலாமென
    தீர்மானித்துவிட்டேன்!

    திவ்யா
    திருடியில்லை
    ரோசமும் மானமும்
    ரத்தத்திலேயே கொண்ட
    ஏழை சாதிக்காரி,
    நல்ல சாதிக்காரி
    என
    என் சாவு அடிக்கப்போகிற
    பறை முழக்கத்தை
    கனவு கண்டுகொண்டே
    தூங்கப்போகிறேனம்மா!
    பலர் நினைவுகளிலாவது
    நல்ல பெயரோடு
    இனி
    நான் வாழ்வேனில்லையாமா!

    தேம்பி அழாதேயம்மா!
    என் சாவின் நினைவதிர்வுகள்
    தீருகிற காலமுட்டுமாவது
    ஒரு தூக்குக்கயிறு
    இன்னுமொரு திவ்யாவுக்கு
    தேவைப்படாதிருக்கலாமில்லையாம்மா!

    நம் தன்மானம் காக்க,
    நேர்மையை நிரூபிக்க
    இன்னும்
    எத்தனை பலிகள்தான்
    அவர்களுக்கு
    நாம் கொடுக்க நேர்ந்தாலும்
    மறுஜென்மமென
    ஒன்று இருந்தால்
    ‘நெஞ்சு வலிக்கிறது’
    எனவும்
    ‘அப்படியேதும்
    நடக்கவேயில்லை’
    எனவும்
    பொய் சொல்லுகிற
    தைரியமும்,
    மனிதனை மதிக்காத
    பணத்திமிரும்,
    ஒரு கெட்ட சொல்ல
    கேட்டு விடுகிற
    பழி பாவமும் அண்டாது
    நான்
    ஏழை சாதியிலேயே
    மறுபடியும்
    பிறக்க வேண்டுமென
    கடவுளை நல்லா
    வேண்டிக்கொள்ளம்மா!

    மாணவி திவ்யாவின் தற்கொலை முடிவு தவறானது எனினும் அதனைத் தூண்டிய பேராசிரியர்கள் கடும் கண்டனத்திற்குரியவர்கள். மாணவி திவ்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்கவிதையை அவரது எண்ணங்களாக பதிவு செய்துள்ளேன்.
    – யோவ்

  57. அவமானத்தில் செத்துப்போன
    என் உயிரை தூக்கு வைத்து
    உயிர் கொடுத்து பார்க்கலாமென
    தீர்மானித்துவிட்டேன்!

    — நெஞ்சைப் பிழிகிறது.

  58. திவ்யாவின் தற்கொலைக்கு காரணமாணவர்களை வழக்கு மன்றம் தண்டித்தும், இறந்த மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தை புடிச்சிக்கிட்டு வந்தும் இழப்பீடுகளைக் கொடுத்துக்கொள்வோம் வலதுசாரி. குடும்பங்களின் கல்லரை எங்கிருக்கும் என்று அப்பொழுது சொல்கிறேன். வந்து ஆறுதல் சாரி சொர்கத்தில் போடச் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அது கிடக்கட்டும். முதலாளிகளுக்கு அது புரியாது.

    வலது சாரி,எங்கள் தொகுதியில் அம்மா ஜெயலலிதா போட்டியிடப்போகிறார். அவர் நல்லவரா கெட்டவரா என்று சொல்லுங்கள். ஓட்டுப்போட தயாராகனும்.

  59. எங்கள் தொகுதியில் அழகிரி போட்டியிடப் போகிறாராம். அவரும் ஒரு நல்லவரா வல்லவரா என்று வலதுசாரி சொன்னா தேவலை.

  60. 2011 அரசுப் பொதுத் தேர்வுகள் எழுதப் போகும்

    அன்பு மாண்வச் செல்வங்களே,
    இது மிக முக்கியம்.

    தேர்வைக் கண்டு அஞ்சாதீர்கள் என்று
    அணி அணியாக வந்து அறுத்துக் குவித்திருப்பார்கள்.

    உங்கள் கவனத்திற்கு.

    *தேர்வறையில் பண்போடும் பணிவோடும் நடந்துகொள்ளுங்கள்.
    *தேர்வறைக் கண்காணிப்பாளர் உங்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்.
    *நீங்கள் தேர்வெழுதும் நேரத்தில் உங்களுக்கு மனத் துன்பம் கொடுக்க
    யாருக்கும் உரிமை கிடையாது.அனுமதியும் கிடையாது.
    *சந்தேகத்தின் அடிப்படையில் தெவையற்ற முறையில் உங்களை உடல் தொட்டு சோதனை
    செய்தாலோ, மன அமைதி குலையுமாறு நடந்து கொண்டாலோ
    அங்குள்ள புகார்ப் பெட்டி , சி இ ஓ , டி இ ஓ , காவல் துறைக் கண்கானிப்பாளர்,
    முதலியோர்க்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

    னாகப்பட்டினம் மாவட்டம் சி இ ஓ எண் 9442534457
    டி இ ஓ எண் 9442575834
    மனித் உரிமைக் கமிஷன் எண் 044 2495 1484

  61. அந்த ஆசிரிய மிருகங்களின் பெயர் ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி

  62. முதலில் திவ்யா அக்காவுக்கு எனது கண்ணீர் காணிக்கை. இது அப்பட்டமான ஒரு கொலை இவர்கள் நால்வரும் நீதியினூடாக தண்டிக்க பட வேண்டியவர்கள் அல்ல இவர்களையும் நிர்வாணப்படுத்தி சுட்டு கொல்லனும் அப்போதான் அவளுகளுக்கும் புரியும். இவர்களுடைய நெஞ்சு வலிக்கு சரியான மருந்து கொடுக்க வேண்டும் . ஒரு சின்ன பெண்ணின் மனதை காயப்படுத்திய இவர்களுக்கும் நெஞ்சு வலி வருவதுக்கு இவர்களுக்கு இதயம் இருக்குதா. இந்த விடயத்தை கூறிய உங்கள் தளத்துக்கு நன்றி.

Leave a Reply to ஒரு தமிழ் வலதுசாரி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க