“சரியாத்தான் சார் கேட்பேன்” ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உரை!

129
சரியாத்தான் சார் கேட்பேன் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உரை
நன்றி www.thehindu.com

வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்….

சரியாத்தான் சார் கேப்பேன், தகராறு வேண்டான்னுதான் பார்ட்டிகிட்ட பேரம் பேசுவேன். அவ்ளோ தூரம் ஓட்றதுக்கு இவ்ளோ வாங்குனாதான் பத்தோ இருபதோ எனக்குத் தேறும்

பெட்ரோலுக்கே பாதி காசு போயிடுது. வண்டிக்கு வாடகை தொனோம் கொடுக்கணும். இது எல்லாம் போக ஒரு  நாளைக்கு சம்பாதிக்க வேண்டும். தினசரி வாடகை 150 ரூபாய் பகலுக்கு, ராத்திரிக்கு 80 ரூபாய். 24 மணி நேரம் ஓட்டிட்டு வண்டியை ஓனர்கிட்ட் கொடுத்துட்டுதான் வீட்டுக்கு போவனும். ஷிப்டு, காலேல 10 மணிக்கு ஆரம்பிக்குதுன்னா ஓனராண்ட பேசி வண்டி எடுக்கும் போது மணி 12 கிட்ட ஆயிடும். அப்புறம் நைட்டு வரைக்கும் ஓட்டி விட்டு எக்மோர்ல வண்டியிலேயே தூங்கி விட்டு, எழுந்து முகம் கழுவி விட்டு மறுபடியும் 10 மணி வரை ஓட்டுவேன். வீடு அரக்கோணம் பக்கத்தில ஒரு கிராமம், வண்டி எடுப்பது சிந்தாதிரிப் பேட்டையில்.

இப்படி என் பொழைப்பு ஓடுது சார். 1990-ல் இருந்து 20 வருஷமா ஆட்டோ ஓட்றேன். மெட்ராசில எல்லா இடமும் ஓரளவுக்குத் தெரியும். அதிகமா படிக்கல. 3ம் கிளாஸ் படிக்கும் போதே அப்பா செத்துட்டார். அதனால் வேலை செய்ய வந்துட்டேன். முதலில் கந்தசாமி கோயிலாண்ட ஒரு கடையில் டெலிவரி வேலை பார்த்தேன். பொருள் எல்லாம் எடுத்துப் போய் கொடுத்து விட்டு வர வேண்டும். சைக்கிளில் போவேன். அதற்கு பிறகு மாத்தி மாத்தி சம்பள வேலை. ஒரு நேரத்தில ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு தொழில்ல விட்டேன். ஏதோ முன்ன இருந்ததுக்கு நல்லாத்தான் இருக்கிறேன்.

1000 ரூபாய் வரை வருமானம் வந்தால் 500 ரூபாய் பெட்ரோலுக்கே போயிடும். ஒரு டியூட்டி சென்ஞா 700 ரூபாய் வரை நிக்கும். அவ்வளவு இருந்தாதான் குடும்பம் நடத்த முடியும், ரெண்டு பசங்க ஒருத்தன் 7ம் கிளாஸ் இன்னொருத்தன் 4. ரெண்டு பேரும் பிரைவேட்டு ஸ்கூல்தான். இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்க வைக்கிறேன். நான்தான் படிக்கலை. படிப்பு வேணும் சார். எம் பசங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. பெரிய படிப்பு படிச்சவன் மாதிரி நோட்டுல எழுதுகிறாங்க சார்.

ஸ்கூல் பீஸ் பெரியவனுக்கு வருஷத்துக்கு 22,000 ரூபாய், சின்னவனுக்கு 20,000 ரூபாய் ஆவுது. வருமானம் ஆட்டோ ஓட்டறது மட்டும்தான். சொந்த வீடு கிராமத்தில அதை ரிப்பேர் கூட செய்யமுடீல. வெலவாசி ஏற ஏற கஷ்டமா இருக்கு சார். மதியம் சாப்பாடு 50 ரூபாய் வரை ஆகிடுது. ஒரு டீயும் வடையும் கூட 10  ரூபாய்க்கு கம்மியா இல்ல. ராத்திரீல ஒரு தோசையும், இரண்டு பரோட்டாவும் சாப்பிட்டா 60 ரூபாய் ஆகி விடுகிறது. இப்படி எனக்கு சாப்பாட்டுச் செலவே ஒரு நாளில் கணிசமாக ஆவுது. அன்னைக்கு என்னடான்னா ஒரு கடையில டீ விலை 6 ரூபாய் ஆக்கிட்டதா சொல்றான்.

மாசக் கடைசில சவாரி குறைவாத்தான் கிடைக்கும், பிசினஸ் செய்றவங்கதான் ஏறுவாங்க. மாச ஆரம்பித்தில சம்பளம் கிடைத்த புதுசில சவாரி அதிகமா கிடைக்கும். குளிர் காலத்தில எதுக்கு வெளியில் அலைகிறோம் என்று வீட்டுக்குப் போயிடுவாங்க, அப்பவும் குறைவுதான்.

நல்லவேளை எனக்கு குடிப்பழக்கம் எல்லாம் இல்ல,  இல்லைன்னா அதுக்கு வேற தெனோம் 100 ரூபா மொய்யெழுதனும்.

ஆட்டோக்கு எப்சி காலாவதி ஆகி ஒரு மாசம் ஆவுது. அதை ரின்யூ பண்ண போனா அங்கேயும் பணம்தான். போக நாலஞ்சு நாள் ஓட்ட முடியாது. எங்க ஊரில் ஒருத்தன் நிலங்களை வளைச்சுப் போட்டு நாலஞ்சு வீடு கட்டிட்டான் சார். இப்போ பெரிய கடை வச்சிருக்கான். அவங்களும் எங்களை மாதிரிதான் 5 அண்ணன் தம்பிகள், அவன் நடுவில் உள்ளவன், நான் எங்க வீட்டில் நடுவில் உள்ளவன். சிந்தாதிரிப் பேட்டையில் பல வகையான கடைகள் வச்சிருக்கான், பாபுன்னு பேரு.

என் கூடப் படிச்சவன்தான், சின்ன வயசிலேயே நல்லா படிக்கிறவன்தான். நான் ஏதாவது தொழில் ஆரம்பிச்சா ஒன்ன வாட்ச்மேன் வேலைக்காவது வைச்சுக்கிறேன் என்று அப்போ சொல்வான் சார். கொஞ்சம் பெயின்ட் வாங்க அவன் கடைக்குப் போனா, எல்லாம் லிஸ்ட போட்டு விலை சொன்னான். டிஸ்கவுண்டு எதுனா குடுன்னா 1200 ரூபாய் பில்லில் 100 ரூபாய் குறைச்சுக்கிறேன் என்றான், அவ்வளவுதான் சார் நட்பு எல்லாம்!

நமக்கு சொந்தமா ஆட்டோ வாங்க எல்லாம் முடியலை சார். சிட்டில வீடு இருந்தாத்தான் கொடுப்பாங்களாம். தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க சிட்டில இருந்தாலும் அவங்க கிட்டப் போய் கேட்க முடியாது சார். அந்த சின்ன வயசு பிரண்டுகிட்ட ஒன் அட்ரஸ் போட்டு ஆட்டோ எடுத்துக் கொடு என்று கேட்டா முடியாதுன்னு சொல்லிட்டான் சார். ஏதாவது பிரச்சனை வந்தா என் தலையிலதானே விழும் என்று காரணம் சொல்றான். பாசம்லாம் எதுவும் கிடையாது சார். எல்லாம் பணம்தான்.

சம்பாதிக்கிறது எல்லாம் செலவுக்கே சரியாகப் போயிடுது. அரை காணி நிலம் இருக்கு, ஆனா அதுலேருந்து எந்த வருமானமும் கிடையாது. ரெண்டு சீட்டு போட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்காரி கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில ஒரு நகை கூட வாங்கித்தலேன்னு என்று தொணதொணக்க, 1 லட்ச ரூபாய் சீட்டு 3 மாதம் இருக்கும் போது 7000 ரூபாய் தள்ளி எடுத்தேன். அதை வச்சு நகை வாங்கப் போனோம், அப்போ சவரன் 16,500 ரூபாய், அஞ்சர சவரன் வாங்கினோம். 82,500 ரூபாய் சேட்டு பில் போட்டான்.

ஒரு மாசம் கழிச்சு அக்கா பொண்ணுக்கு கல்யாணச் செலவு வந்தது. அக்கா செத்து போச்சு சார், நாமதான் செய்யணும். அந்த நகையை சேட்டுக்கிட்ட திரும்பக் கொண்டு கொடுத்தா, 70,000 ரூபாய் தரேன் என்கிறான். கேட்டா செய்கூலி, சேதாரம் எல்லாம் கழிக்கிறானாம். என்னா சார் நியாயம் இது. நகைய வாங்கிக்கிட்டுப் போய் அப்படியே வச்சிருந்தோம். போட்டுக் கூடப் பார்க்கவில்லை. அதுக்கு என்ன சேதாரம். நாம ஒன்னரை மாசம் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறத இவன் சும்மா உட்கார்ந்துகிட்டே ஒரே நொடியில அடிச்சுக்கிட்டுப் போகப் பார்க்கிறான். பேசாம எழுந்துட்டேன். நான் போலீசில போய் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னேன் ஆனா பக்கத்தில இருக்கிறவன் எல்லாம் எதுக்கு போலீஸ் வம்பு எல்லாம் பேசித் தீத்துக்கோன்னு சமாதானம் சொல்றான். நம்ம நாடு உருப்படாது சார். இவனுங்களே இப்படி இருந்தா எப்படி.

அப்புறம் திரும்பப் பேசி எடுத்து 75,000 ரூபாய் தந்தான். ஏதோ 1000 – 2000 கழிச்சுக்கிட்டு கொடுப்பான்னு பாத்தா இப்படி ஒரேயடியாக 7,500 ரூபாய் அடிச்சுட்டான் சார். இப்படி சும்மா இருந்துகிட்டே சம்பாதிக்கிறானுங்க சார். நீ உருப்படவே மாட்டே என்று சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்படி சம்பாதிக்கிறவனுங்க, ஆட்டோல ஏற வந்தா பேரம் பேசுவானுங்க, இவ்வளவு தூரத்துக்கு 40 ரூபாயா, கொஞ்சம் நியாயமா, தருமமா கேளுப்பான்னு சொல்லுவானுங்க!

இது மாதிரி சேட்டுங்க வந்து என்னா அட்டூழியம் பண்ணுறானுங்க, நம்ம ஊர்க்காரனுங்க இந்த சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி வச்சிருந்தா அங்க போய் வம்பு செய்து கடையை மூடுறான். இந்த சவுகார்பேட்டையில் சேட்டுங்களும் அப்படித்தான் கடை வச்சிருக்கானுங்கள, அவனுங்கள கேட்க ஆள் கிடையாது.

ஏழை பாழைங்க ஒரு குடிசை வைக்க நிலம் வேணும்னா வாங்க முடியாது, எங்க ஊரிலேயே  60க்கு 20 நிலம் 5 லட்ச ரூபாய் சார். இந்த அரசாங்கம் எல்லாம் என்னதான் செய்யுதுன்னே தெரியல  கலைஞர் போய் ஜெயலலிதா வந்தா அவங்களும் அப்படித்தான். விஜயகாந்த் வந்தா என்ன செய்வாரோ!’

– பேசி முடித்து விட்டு ஆட்டோக்காரர் அவர் பிழைப்பை பார்க்க போய்விட்டார். அவர் பேசியது அனுபவப் பேச்சு. படித்து தெரிந்து  கொண்டதில்ல. அவற்றில் ஒரு சிலவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. முக்கியமாக எந்த வேலையும் செய்யாமல் அந்த சேட்டு உட்கார்ந்த இடத்திலேயே விற்ற நகையை மீண்டும் வாங்கி 7,500 ரூபாய் சம்பாதித்து விட்டார். இல்லை சுருட்டி விட்டார்.

இனி அதே நகையை மீண்டும் 82,500 ரூபாய்க்கு விற்பார். மேலும் சுருட்டலாம். அதை திரும்ப வாங்கினாலும் சுருட்டல் தொடரும். இது சேட்டுக்கு மட்டும்தானா? பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அம்பானி, டாடா, பிர்லா, மிட்டல்…எல்லோரும் இதுதானே செய்கிறார்கள்?

முதலாளிகளின் தொழில் முனைப்பு என்ன என்பதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிந்து கொள்ளும் போது அதியமான் போன்ற ‘படிப்பாளிகள்’ அதற்கு திறமை, புத்துயிர்ப்பு, சாகசம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஒரு வேளை அதியமான் அவர்கள் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டித்தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தால் அவரும் புரிந்து கொள்வாரா? இவ்வளவிற்கும் அனுபவம்தான் பெரிய ஆசிரியன் என்பது அவரது கூற்று, எங்களதல்ல…..

– வினவு செய்தியாளர்

129 மறுமொழிகள்

  1. புத்திசாலிதனமாக ஏமாற்ற தெரிந்தவனுக்கு பேர் தான் அறிவாளி. அதே சமயம் இந்த ஆட்டோ டிரைவரின் நண்பர் மேல் பெரிய தப்பு ஏதும் இல்லை. என்ன, அந்தஸ்து பார்க்காமல் அவருக்கு உதவினால் நன்றாக இருக்கும். ஆனால், எனக்குள் வரும் பெரிய கேள்வி, சென்னையில் திநகர் ரங்கநாதன் தெருவில் மட்டும்தானா ஆக்கிரமிப்பு உள்ளது?!? மற்ற ஏரியாக்களில் எதுவுமே இல்லையா?!? இதில் அரசு முழு நியாயத்துடன் நடந்துகொண்டதாக தெரியவில்லை.

    • //புத்திசாலிதனமாக ஏமாற்ற தெரிந்தவனுக்கு பேர் தான் அறிவாளி. அதே சமயம் இந்த ஆட்டோ டிரைவரின் நண்பர் மேல் பெரிய தப்பு ஏதும் இல்லை.//

      உங்க தத்துவமும் இவங்க தத்துவமும் ஒன்றா இருக்கே எப்புடி 🙂

  2. Very good post.This is the reality of capitalism and also the reality of poor primary education in our country.If this guy had a good primary education,he would have benefited a lot.

    Ultimately people who make money from this society are the ones who control the supply of essential commodities like the Settu who makes money off bid-ask spreads or anyone else in trading of goods and commodities.So,who causes the inflation,is it because of online trading or advanced financial products,no?These products merely exchange the amount of money in the system from one pocket to another.

    The real culprit is the government of India and TN.They inflate the economy by borrowing excessively or printing notes excessively and the value of money weakens.All those free TVs and free stuff that people get for votes is done by borrowing and paying interest,not from Amma or Kalaignar’s pockets.

    Regarding the Auto problem,basically most Autos are owned by Politicians,Civil Servants and Cops.They lease it out at excessive rates and look at the equation here

    Inflation causes prices to go up,which means people spend less on auto rides,which means petrol prices go up and all these factors cause negative return to the auto driver but the owner makes a fixed 150 rupees,whatever happens.

    And the people who cause this inflation also own the autos.what an irony.

    if the auto driver doesn’t own the vehicle,he gains nothing in driving it.

    it would be great if we banned it altogether.will hurt people in the short run but ll save a lot of them entering it in the first place.

    Regarding the settu problem,if u knw that the settu is making money doing nothing,then dont give him business.

    Put it in a bank,dont do anything with it.If u dont give the sett business or ride the autos,then people would be saved from a bad livelihood and the govt ll face the real issues.

    so,who is responsible for this guy’s problem,the govt squarely.

  3. செம காமெடி சார் இந்த ஆட்டோகாரங்க கிட்ட..எதுவும் வேணாம் ஒரு ID cardஐ கழுத்துல மாட்டிட்டு போங்க.. ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது அதுக்கே நாப்பது ஐம்பது ரூபாய் கேப்பாங்க.. கேட்டா அதான் மாசம் வந்த சுளையா வாங்கறீங்க இல்லை குடுங்கன்னு ஏதோ இவன் அப்பன் வீட்டு காசை எங்களுக்கு குடுக்குற மாதிரி டயலாக் பேசுவானுங்க..10% ஆட்டோகாரங்க ஒழுங்கா இருந்தா பெரிய விஷயம்.

    ஆட்டோகாரங்களை விட வினவு செம காமெடி.. சேட்டு பசங்களோட இவங்களை ஒப்பிட்டு அவங்க கொள்ளையடிக்கிறாங்க இவங்க கொள்ளையடிச்சா தப்பு இல்லையான்னு கேக்கறீங்க..

    • @Santhosh,

      //அதான் மாசம் வந்த சுளையா வாங்கறீங்க இல்லை குடுங்கன்னு ஏதோ இவன் அப்பன் வீட்டு காசை எங்களுக்கு குடுக்குற மாதிரி டயலாக் பேசுவானுங்க..//

      அந்த டயலாக்கில் என்ன தப்பு? கழுத்தில ஐடி மாட்டின தகுதிக்காக ஒரு நாளுக்கு 3,000 ரூபாய் (சராசரியாக – மாதத்துக்கு 3,000×20=60,000 ரூபாய்) வருமானம், ஆட்டோ ஓட்டுபவருக்கு ஒரு நாள் உழைப்புக்கு என்ன வருமானம்?

      நீங்கள் சொல்வது போல ‘கொள்ளை அடிக்கும்’ ஆட்டோக் காரர் (இந்தப் பதிவில் பேசுபவர்) 2 நாள் உழைப்புக்கு சுமார் 700 ரூபாய் பெறுகிறார். அதிலும் கை வைக்க பேரம் பேசுகிறோம்.

    • வீட்டு வாடகைக்கு மீட்டர் கிடையாது. டி, காபி, பன், வடைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் கிடையாது. பள்ளிக்கூடத்து கட்டணத்துக்கு இருக்குற கட்டண நிர்ணயத்த கல்வி வள்ளல் ஒருத்தனும் பின்பற்றுவது கெடையாது.

      ஆனா ஆட்டோ காரங்க கிட்ட மட்டும் நியாயம் பேசுவாங்க, இந்த ஐ.டி அறிவாளிங்க.

      நியாயவாதம் பேசுற ஐ.டி. ‘விஞ்ஞானிங்க’ அவங்க அவங்க ப்ராஜெக்ட் மேனேஜர் கிட்ட கேப்பாங்க்யளா ‘நாம பண்ற மொக்கையான காபி-பேஸ்டு வேலைக்கு இவ்வளவு பில்லிங் போடறீங்களே, நியாயமா’-ன்னு?

      • பார்ரா பரமேசுக்கு தான் என்னா அறிவு.. ஒடம்பு முழுக்க மூளை போல சாருக்கு..

        //வீட்டு வாடகைக்கு மீட்டர் கிடையாது. டி, காபி, பன், வடைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் கிடையாது. பள்ளிக்கூடத்து கட்டணத்துக்கு இருக்குற கட்டண நிர்ணயத்த கல்வி வள்ளல் ஒருத்தனும் பின்பற்றுவது கெடையாது. //
        இதையெல்லாம் எதிர்த்து நீங்க என்ன கிழிச்சிங்க?

        //நியாயவாதம் பேசுற ஐ.டி. ‘விஞ்ஞானிங்க’ அவங்க அவங்க ப்ராஜெக்ட் மேனேஜர் கிட்ட கேப்பாங்க்யளா ‘நாம பண்ற மொக்கையான காபி-பேஸ்டு வேலைக்கு இவ்வளவு பில்லிங் போடறீங்களே, நியாயமா’-ன்னு?//
        Copy & Paste பண்ணா எல்லா வேலையும் முடிந்து விடுமா? கிளையண்டு என்னா ரஷ்யாகாரனா இல்ல சீனாகாரனா.. நம்மளை தவிர மத்தவனையெல்லாம் கேணைப்பயலுன்னு நெனைச்சி பேச வேண்டியது..

        பரமேசு என்ன வேலை பாக்குறாப்புல்ல?

        • //இதையெல்லாம் எதிர்த்து நீங்க என்ன கிழிச்சிங்க? //

          இத நான் கேக்கணும். இதையெல்லாம் எதிர்த்து என்ன கிழிச்சுட்டு ஆட்டோக்காரன குத்தம் சொல்ல வந்திருக்கீங்க?

          • கிழிஞ்சிது போ… கட்டுரையை படிக்காமலே கமெண்டு போடுறதுக்குன்னே சந்தோஷ் மாதிரி ஆளுங்களை எல்லாம் வல்ல இறைவன் படைத்திருக்கிறார் போல?

    • //சேட்டு பசங்களோட இவங்களை ஒப்பிட்டு அவங்க கொள்ளையடிக்கிறாங்க இவங்க கொள்ளையடிச்சா தப்பு இல்லையான்னு கேக்கறீங்க//
      நீங்க சொல்றது நூத்துல ஒரு வார்த்தை. ஆனா ஒரு விசயம் மட்டும் புரியல? ஆட்டோகாரனும் ஏமாத்துறான்,சேட்டும் ஏமாத்துறான்னு சொன்னா… அதெபபடி ஆட்டோகாரன் ஊரை சுத்தி எடம் வாங்கி போட்டிருக்கிறான், சேட்டு 50, 100க்கு மாரடிக்கிறான்? அதெப்படி ஆட்டோகாரன் வயிறு தள்ளி தொப்பை போட்டிருக்கிறான், சேட்டு கருத்து போய் உடம்பு ஒட்டி இருக்கிறான்? ஒன்னும் பிரியிலயே…? ஒருவேளை சேட்டுக்கு, ஆட்டோகாரன் ரேஞுக்கு ஏமாத்த தெரியலியோ?

  4. சந்தோஷ்,
    //அவங்க கொள்ளையடிக்கிறாங்க இவங்க கொள்ளையடிச்சா தப்பு இல்லையான்னு//
    இதுக்கு பேரு கம்முனிசமோ என்னமோ சொல்வாங்களே?

  5. I think the publisher must question the work done by the reporter. The experienced Auto Driver claims, out of 1000/= collected, 500/= goes towards Petrol. Means, at today’s cost of 70/= per liter, when he collects 50/=, he spends 25/= on petrol.

    From Virugambakkam Police Station to Pondicherry Guest House (KK Nagar) is hardly 1.5 KM. Automan demands and collects 50/=. Does it mean that for 25/= worth of petrol, his auto can run only for 1.5 KM? Even if we concede 25% more, can it run only for 2 KM?

    In other words if 25 Rs petrol for 2 KM, for 1 liter (70 Rs), Auto can run only for just 5.6 KM ? Please do not encourage greedy frauds.

    • Auto mileages are around 20 kmpl.

      Will you arrange a ‘savaari’ for the auto’s return back to the stand or will you bear the petrol costs when the auto is on the roaming searching for a savari?

      If calltaxis determine their tarriffs, why shouldn’t autos?

    • There is another way to see this.

      Sometimes the auto consumes more pertol than it is supposed to, due to trafic, wornout parts, inefficient engine etc. After paying the owner and spends for petrol, whatever amount left out is less than the above outgo. That amout is for his service. If it is 5 or 10 rupees more it is an attempt by the auto-driver to make the ends meet at the end of the day. Greediness is too harsh term when it is just frustration for not getting paid for the time, energy he spends for the day. Ofcourse, there are greedy auto-drivers who start from double the charge but not the majority.

  6. //முதலாளிகளின் தொழில் முனைப்பு என்ன என்பதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிந்து கொள்ளும் போது அதியமான் போன்ற ‘படிப்பாளிகள்’ அதற்கு திறமை, புத்துயிர்ப்பு, சாகசம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஒரு வேளை அதியமான் அவர்கள் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டித்தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தால் அவரும் புரிந்து கொள்வாரா? இவ்வளவிற்கும் அனுபவம்தான் பெரிய ஆசிரியன் என்பது அவரது கூற்று, எங்களதல்ல…..//
    மிகவும் சரி தான் பாஸ்

    இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் ஆனா பாருங்க சில அறிவாளிகள் அந்நிய மூலதனம் ஏகாதிபத்தியம்தான் காரணம்னு சொல்றாங்க

    • தத்துவபிணி தியாகு, அந்திய மூலதனம்-ஏகாதிபத்தியம் என்ன ஆயா சுட்ட வடையா? அந்த எழவு முதலாளித்துவத்தோட தன்மைதானே… ஏன்யா படுத்தற?

      • இந்த பெயரெல்லாம் எப்படிதான் உங்களுக்கு தோணுதோ?, போங்க, எல்லாம் சூப்பர்…

        • தத்துவபிணி தியாகு, அந்திய மூலதனம் காரணம் என்று யார் எப்போ எங்க சொன்னாங்க, அப்படி சொல்லியிருந்தா அதுல என்ன தப்புன்னு விளக்குங்க? சொல்ல்லேன்னா, ஏங்க இங்க லூசு மாதிரி சொல்லாததை சொன்னாங்கன்னு வந்து பினாத்திங்?

          காலங்காத்தாலே ரொம்ப குஷ்டமப்பா

          • //தத்துவபிணி தியாகு, அந்திய மூலதனம் காரணம் என்று யார் எப்போ எங்க சொன்னாங்க, அப்படி சொல்லியிருந்தா அதுல என்ன தப்புன்னு விளக்குங்க? சொல்ல்லேன்னா, ஏங்க இங்க லூசு மாதிரி சொல்லாததை சொன்னாங்கன்னு வந்து பினாத்திங்?//

            அந்நிய மூலதனம் பிரதான முரண்பாடுன்னு இன்னொரு முரண்பாடு நிலபிரபுத்துவ முரண்பாடு (இதை புதியஜனநாயக புரட்சி திட்டம் சொல்லுது )

            நீங்கதான் உங்க கட்சி திட்டத்த படிக்காம இங்க வந்து பினாதிங்

            • ///////////////இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் ஆனா பாருங்க சில அறிவாளிகள் அந்நிய மூலதனம் ஏகாதிபத்தியம்தான் காரணம்னு சொல்றாங்க////////////

              தத்துவ கோணி தியாகு – அந்திய மூலதனம் ஏகாதிபத்தியத்திமெல்லாம் முதலாளித்துவம் இல்லயா என்ற என் கேள்விக்கு என்ன பதில்?

              ///////அந்திய மூலதனம் காரணம் என்று யார் எப்போ எங்க சொன்னாங்க, அப்படி சொல்லியிருந்தா அதுல என்ன தப்புன்னு விளக்குங்க? /////////

              அதுல என்ன தப்புன்னு என்னோட கேள்விக்கு என்ன பதில்?

          • //தத்துவ கோணி தியாகு – அந்திய மூலதனம் ஏகாதிபத்தியத்திமெல்லாம் முதலாளித்துவம் இல்லயா என்ற என் கேள்விக்கு என்ன பதில்?// அய்யா அறிஞரே

            முதலாளித்துவம் – ஏகாதிபத்தியம்- அந்நிய மூலதனம்

            தத்துவம் நடைமுறை – அணி சேர்க்கை – புரட்சி இப்படி எல்லாம் உங்களிடம் பேசியது என்னோட தவறுதான்

            நீங்க தொடர்ச்சியா மொக்க போடுங்க அல்லது கொஞ்சமாவது தெளிவா விசயங்களை தெரிஞ்சுட்டு விவாதமெல்லாம் செய்யுங்க

            இல்லைன்னா கீழ்கண்ட மந்திரத்தை தினமும் சொல்லுங்க

            தனியார்மயம் , தாராளமயம் , உலகமயம் , ஓம் நமச்சிவாயா

            • தத்துவ பிராணி தியாகு, ரொம்ம்ம்ம்ம்ப வலிச்சிடுச்சோ? இப்படி அழுகறீங்க? இப்ப பதில் தெரியலேண்ணா என்னவாகப்போவுது? வழக்கம் போல சுயமா சிந்திச்சு தியாகுத்தனமா எதாச்சும் சொல்லவேண்டீயாதுதானே?

            • ///////அந்திய மூலதனம் காரணம் என்று யார் எப்போ எங்க சொன்னாங்க, அப்படி சொல்லியிருந்தா அதுல என்ன தப்புன்னு விளக்குங்க? /////////

              அதுல என்ன தப்புன்னு என்னோட கேள்விக்கு என்ன பதில்?

              இரண்டு மாதத்துக்கு முன்னால் காஷ்மீர் போராட்டத்தை பற்றி ராம் காமேஷ்வரனுடனான விவாதத்தை வேலை பளுவின் காரண்மாக தொடர முடியாமல் போனதற்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் அதன் பிறகு மறுமொழியிட சந்தர்ப்பம் கிடைத்தது தற்போதுதான். அவர் விரும்பினால் அந்த விவாதத்தை இங்கேயே கூட தொடரலாம்.

  7. அப்புறம் பெட்ரோல்ல ஓடுற ஆட்டோ எல்லாம் மலையேறி ரொம்ப நாள் ஆச்சி.. இப்ப அட்டோ ஓடுவது பெரும்பாலும் டீசல் இல்லாட்டி Gas தான்..

    //அந்த டயலாக்கில் என்ன தப்பு? கழுத்தில ஐடி மாட்டின தகுதிக்காக ஒரு நாளுக்கு 3,000 ரூபாய் (சராசரியாக – மாதத்துக்கு 3,000×20=60,000 ரூபாய்) வருமானம், ஆட்டோ ஓட்டுபவருக்கு ஒரு நாள் உழைப்புக்கு என்ன வருமானம்?//

    கழுத்துல பட்டை மாட்டினா மாசம் அறுபதாயிரம் சம்பளம் தராங்களா ஐய்யையோ இது தெரியாம நாட்ல நிறைய பேர் கூலி வேலை செய்து பிழைக்கிறாங்களே.. இந்த மாதிரி எந்த கம்பெனியில குடுக்குறாங்கன்னு சொல்லுங்க.. ஆளுக்கு ஒரு பட்டை மாட்டி விட்டுடலாம்…பயபுள்ளைங்க பொழச்சி போவட்டும்..

    //நீங்கள் சொல்வது போல ‘கொள்ளை அடிக்கும்’ ஆட்டோக் காரர் (இந்தப் பதிவில் பேசுபவர்) 2 நாள் உழைப்புக்கு சுமார் 700 ரூபாய் பெறுகிறார். அதிலும் கை வைக்க பேரம் பேசுகிறோம்.//

    கொள்ளையடிக்கிறவனுக்கு கூட தான் வருமானம் கம்மியா வருது..அதுக்காக அவங்களுக்குன்னு ஒரு பேங்க் ஆரம்பிச்சி கொள்ளையடிக்க விடலாமா? நல்லா இருக்குய்யா உங்க ஞாயம்..

    • //அப்புறம் பெட்ரோல்ல ஓடுற ஆட்டோ எல்லாம் மலையேறி ரொம்ப நாள் ஆச்சி.. இப்ப அட்டோ ஓடுவது பெரும்பாலும் டீசல் இல்லாட்டி Gas தான்..//

      இதையே white colour வேலை பார்க்கும் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். ‘சாப்பாட்டு செலவு மாதம் 5,000 ரூபாய்தான் ஆகுது (அதை வச்சுதானே வேலை செய்ய எனர்ஜி கிடைக்குது), ஆனாலும் மாசா மாசம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கி கொள்ளை அடிக்கிறானுங்க இவங்க’ என்று கணக்கு பார்த்தா சம்பளம் கொடுக்குறாங்க?

      நல்ல துணி உடுத்த, வீடு வாங்க, கார் வாங்க, குழந்தைகளை படிக்க வைக்க, எதிர்காலத்து சேமிப்புக்காக இதை எல்லாம் சேர்த்துதானே சம்பளமும் வருமானமும். ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஏன் பராமரிப்புச் செலவைக் கணக்கு போட்டு கறாராக வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் வாங்க வேண்டும்?

      அவர் 2 பெட்ரூம் பிளாட் வாங்கவும், சொந்தமாக ஆட்டோ வாங்கவும் சம்பாதிக்கக் கூடாது என்று ஏன் நினைக்கிறோம்?

      //கழுத்துல பட்டை மாட்டினா மாசம் அறுபதாயிரம் சம்பளம் தராங்களா ஐய்யையோ இது தெரியாம நாட்ல நிறைய பேர் கூலி வேலை செய்து பிழைக்கிறாங்களே.. இந்த மாதிரி எந்த கம்பெனியில குடுக்குறாங்கன்னு சொல்லுங்க.. ஆளுக்கு ஒரு பட்டை மாட்டி விட்டுடலாம்…பயபுள்ளைங்க பொழச்சி போவட்டும்..//

      ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு ஆட்டோ ஓட்டுபவரை விட சுமார் 10 மடங்கு அதிக சம்பளம் என்ன லாஜிக்கில் என்று யோசித்துப் பாருங்கள்?

      அந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு நாம் உணவுப் பொருட்கள், துணி மணிகள் வாங்கும், குழந்தைகளைப் படிக்க வைக்கும், வீடு வாங்கும் அதே உலகத்தில்தானே, ஒரு நாள் உழைப்புக்கு 10 மடங்கு குறைவாக வாங்கும் ஆட்டோ டிரைவரும் தான் சம்பாதித்த பணத்தில் தனது குடும்பத்துக்கு உணவுப் பொருட்கள், துணிமணிகள் வாங்கவும், குழந்தைகளை படிக்க வைக்கவும், வீடு வாங்கவும் வேண்டியிருக்கிறது.

      அவர் 10 ரூபா கூடுதல் கேட்டா கொள்ளையா? நல்லா இருக்குங்க உங்க ஞாயம்!

      //கொள்ளையடிக்கிறவனுக்கு கூட தான் வருமானம் கம்மியா வருது..அதுக்காக அவங்களுக்குன்னு ஒரு பேங்க் ஆரம்பிச்சி கொள்ளையடிக்க விடலாமா? நல்லா இருக்குய்யா உங்க ஞாயம்..//

      இதை சாய்சில் விடுகிறேன் 🙂

      • //இதையே white colour வேலை பார்க்கும் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். ‘சாப்பாட்டு செலவு மாதம் 5,000 ரூபாய்தான் ஆகுது (அதை வச்சுதானே வேலை செய்ய எனர்ஜி கிடைக்குது), ஆனாலும் மாசா மாசம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கி கொள்ளை அடிக்கிறானுங்க இவங்க’ என்று கணக்கு பார்த்தா சம்பளம் கொடுக்குறாங்க?//

        மாசி ஜெலூசில் குடிங்க இந்த மாதிரியான சிந்தனை வராது.

        //நல்ல துணி உடுத்த, வீடு வாங்க, கார் வாங்க, குழந்தைகளை படிக்க வைக்க, எதிர்காலத்து சேமிப்புக்காக இதை எல்லாம் சேர்த்துதானே சம்பளமும் வருமானமும். ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஏன் பராமரிப்புச் செலவைக் கணக்கு போட்டு கறாராக வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் வாங்க வேண்டும்?//

        வாங்குவதற்கும் புடிங்கி திங்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு மாசி.

        //அவர் 2 பெட்ரூம் பிளாட் வாங்கவும், சொந்தமாக ஆட்டோ வாங்கவும் சம்பாதிக்கக் கூடாது என்று ஏன் நினைக்கிறோம்?//

        அப்படின்னு நீங்க நெனைக்கிறீங்க..என்னவோ சென்னையில மட்டும் தான் ஆட்டோ ஓடுவது மாதிரியும் நாங்க எல்லாம் ஆட்டோவையே பாக்கத மாதிரியும் இல்ல சீன் போடுறீங்க.. இங்க பெங்களூருக்கு வந்து பாருங்க எப்படி மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுறாங்கன்னு.. இவங்களால மட்டும் எப்படி முடியுது?

        //ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு ஆட்டோ ஓட்டுபவரை விட சுமார் 10 மடங்கு அதிக சம்பளம் என்ன லாஜிக்கில் என்று யோசித்துப் பாருங்கள்?//
        ஓ நீங்க கம்யூனிசம் பேசுறீங்க அதுவும் கேப்பிடலிஸ்டு உலகத்துல ரைட்டு விடுங்க உங்க லாஜிக்குக்கே வரேன் கொம்யூனிசத்துலயும் கொம்யூனிச நாடுகளிலும் சில தோலர்கள் மட்டும் ஏன் கார்ல போறாங்க…. அவங்களும் மத்த டோளர்கள் மாதிரி நடந்து போவலாம் இல்ல.. நிறைய டோளர்கள் தெரு ஓரம் பிளாட்பாரத்துல இருக்கும் பொழுது சில டோளர்கள் மட்டும் மாட மாளிகைகளில் ஏன் இருக்காங்க? யோசிங்க டோளர்..

        //அவர் 10 ரூபா கூடுதல் கேட்டா கொள்ளையா? நல்லா இருக்குங்க உங்க ஞாயம்!//
        பத்து ரூபாய் அதிகம் கேட்டா எவன் கொள்ளைன்னு சொல்றான். சென்ட்ரல்ல இருந்து எக்மோர் போக 200+ ரூபாய் வேளச்சேரி விஜய நகர் பஸ் நிலையத்துல இருந்து AGS காலனிக்கு செல்ல 60+ ரூபாய் (2 கிலோ மீட்டர் இருந்தா அதிகம்). இதை உங்க ஊருல என்னான்னு சொல்லுவாங்க சாமி?

        • //மாசி ஜெலூசில் குடிங்க இந்த மாதிரியான சிந்தனை வராது.//

          ஜெலூசில் குடிக்கும் வழக்கமே இல்லை 🙂

          //வாங்குவதற்கும் புடிங்கி திங்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு மாசி.//

          புடிங்கி திங்கிறது என்று எப்படி சொல்றீங்க? ஆட்டோவில் போற நாம அடுத்த வேளை சாப்பாட்டுக்கு 100 ரூபாய் மட்டும் வைத்திருந்து, ஆட்டோ டிரைவர் அதைப் புடுங்கிகிட்டு போவதாகவும் இருந்தால் நீங்கள் சொல்வது சரி.

          அவருக்கு,
          — அன்றைய வருமானத்திலிருந்து ஒரு பகுதி ஆட்டோ உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டிய அழுத்தம், — அடுத்த நாள் சாப்பாட்டுக்கு வீட்டில் காசு கொடுக்க வேண்டிய தேவை,
          — குழந்தைகள் படிப்புக்கு சேர்த்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
          இருக்கிறது.

          அதற்காக நேர்மையாக ஒரு தொழில் செய்கிறார். அந்த தொழிலில் தனக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தைக் கேட்கிறார்.

          அதைப் புடுங்கி தின்பது என்று எப்படிச் சொல்றீங்க?

          //அப்படின்னு நீங்க நெனைக்கிறீங்க..என்னவோ சென்னையில மட்டும் தான் ஆட்டோ ஓடுவது மாதிரியும் நாங்க எல்லாம் ஆட்டோவையே பாக்கத மாதிரியும் இல்ல சீன் போடுறீங்க.. இங்க பெங்களூருக்கு வந்து பாருங்க எப்படி மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுறாங்கன்னு.. இவங்களால மட்டும் எப்படி முடியுது?//

          பெங்களூரில் ஆட்டோ ஓட்டி அன்றாடம் காய்ச்சியாக இருந்தால் சென்னையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன சட்டம்?

          நீங்க பெங்களூரில் பார்த்திருக்கீங்க. நான் பெங்களூரு, மும்பை, தில்லி, கொல்கத்தா, இந்தூர் என்று இன்னும் பல இந்திய நகரங்களிலும் ஆட்டோ, டாக்சி பார்த்திருக்கிறேன். அந்த ஊர் உழைக்கும் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களைப் போல தைரியமும், தமது உரிமையைக் கேட்கும் தன்னம்பிக்கையும் வந்திருக்கவில்லை.

          ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக, ‘அவனுக்கு 10 ரூபாய் செலவாகிறது, அதனால் 11 ரூபாய் தருவேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதித்து கஞ்சி குடித்துக் கொள்ளட்டும். ஆட்டோ காரன் குழந்தைகள்தானே, மாநகராட்சி பள்ளிக்கு அனுப்பட்டும்’ என்ற மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

          //ஓ நீங்க கம்யூனிசம் பேசுறீங்க அதுவும் கேப்பிடலிஸ்டு உலகத்துல ரைட்டு விடுங்க உங்க லாஜிக்குக்கே வரேன் கொம்யூனிசத்துலயும் கொம்யூனிச நாடுகளிலும் சில தோலர்கள் மட்டும் ஏன் கார்ல போறாங்க…. அவங்களும் மத்த டோளர்கள் மாதிரி நடந்து போவலாம் இல்ல.. நிறைய டோளர்கள் தெரு ஓரம் பிளாட்பாரத்துல இருக்கும் பொழுது சில டோளர்கள் மட்டும் மாட மாளிகைகளில் ஏன் இருக்காங்க? யோசிங்க டோளர்..//

          நான் கம்யூனிசம் பேசவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கிறது.

          நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள். ‘8 மணி நேர வேலைக்கு ஒருவருக்கு 350 ரூபாய், இன்னொருவருக்கு 3000 ரூபாய் என்பது என்ன அடிப்படையில்? 10 மடங்கு அதிக திறமை என்பதாலா?’. இதற்கு லாஜிக்கலாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

          ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் சூப்பர் மேன்கள் இல்லை, ஆட்டோ ஓட்டுபவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் இல்லை. மேலே சொன்னது போல, இப்படி வருமான ஏற்றத் தாழ்வு இருக்கும் போது உயர்ந்த வருமான வாய்ப்பு கிடைக்காதவர்கள், சந்தையில் நசுக்கப்பட்டு விடுகிறார்கள். நாமும் அப்படிப்பட்ட பின்னணிகளில் இருந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்தான் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

          //பத்து ரூபாய் அதிகம் கேட்டா எவன் கொள்ளைன்னு சொல்றான். சென்ட்ரல்ல இருந்து எக்மோர் போக 200+ ரூபாய் வேளச்சேரி விஜய நகர் பஸ் நிலையத்துல இருந்து AGS காலனிக்கு செல்ல 60+ ரூபாய் (2 கிலோ மீட்டர் இருந்தா அதிகம்). இதை உங்க ஊருல என்னான்னு சொல்லுவாங்க சாமி?//

          எங்க ஊருல பேரம் பேசுவது என்று சொல்லுவாங்க. ஒரு காலை வேளையில், சென்டிரல் நிலையத்தில் அதிக ரேட் சொன்ன ஆட்டோ டிரைவரை வைத்துக் கொண்டு மொத்த உலகத்தையும் மதிப்பிடுவது சரியில்லை.

          நாம் வலி தெரியாத உயரத்தில் இருப்பதால், கீழே நிற்பவன் எல்லாம் அயோக்கியன்கள், திருடன்கள் என்ற பொதுப்புத்தியை விடுங்கள். திறந்த மனதுடன் எல்லோரும் நம்மைப் போல மனிதர்களே என்று யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

          ‘கொம்யூனிசம்’, ‘டோளர்’ எல்லாம் அந்த அடிப்படையைத் தாண்டிதான்.

          • //புடிங்கி திங்கிறது என்று எப்படி சொல்றீங்க? ஆட்டோவில் போற நாம அடுத்த வேளை சாப்பாட்டுக்கு 100 ரூபாய் மட்டும் வைத்திருந்து, ஆட்டோ டிரைவர் அதைப் புடுங்கிகிட்டு போவதாகவும் இருந்தால் நீங்கள் சொல்வது சரி.//
            அப்ப உங்க அடுத்த வேளை சாப்பாட்டை தவிர மிகுதியாக இருக்கும் பணத்தை கத்தியை காட்டி புடிங்கினால் கூட தப்பு இல்லைன்னு சொல்ல வரீங்க?

            //அதற்காக நேர்மையாக ஒரு தொழில் செய்கிறார். அந்த தொழிலில் தனக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தைக் கேட்கிறார்.//
            எதை நேர்மைன்னு சொல்றீங்க? காலங்காத்தால ஆபீசுக்கு லேட்டாயிடிச்சேன்னு அவசரத்துக்கு ஒரு ஆட்டோ புடிச்சா 200 குடு 300 குடு அங்க ஆட்டோவராது இங்க ஆட்டோவராது நீங்க மெயின் ரோடுன்னு சொன்னிங்க இப்ப என்ன சந்துக்குள்ள போவச்சொல்றீங்கன்னு கேக்குறதா நேர்மையா தொழில் பண்றது?

            //பெங்களூரில் ஆட்டோ ஓட்டி அன்றாடம் காய்ச்சியாக இருந்தால் சென்னையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன சட்டம்?//
            செம ஜல்லி சார்… அப்ப வசதியா இருக்க வழிப்பறி பண்றது கூட தப்பு இல்லைன்னு சொல்றீங்க அப்படிதானே? Btw ஒழுங்கா மீட்டர் போட்டு கட்டணம் வசூலிக்கும் ஆட்டோகாரங்க சென்னையில இருக்கும் ஆட்டோகாரங்களை விட வசதியாவே இருக்காங்க. ஏன் சென்னையில் Centralல pre paid ஆட்டோ ஓட்டுபவர்கள் எல்லாம் என்ன பிச்சையா எடுத்துட்டு இருக்காங்க? அவங்களால ஓட்ட முடிந்த பொழுது மத்தவங்களுக்கு என்ன கேடு?

            //நீங்க பெங்களூரில் பார்த்திருக்கீங்க. நான் பெங்களூரு, மும்பை, தில்லி, கொல்கத்தா, இந்தூர் என்று இன்னும் பல இந்திய நகரங்களிலும் ஆட்டோ, டாக்சி பார்த்திருக்கிறேன். அந்த ஊர் உழைக்கும் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களைப் போல தைரியமும், தமது உரிமையைக் கேட்கும் தன்னம்பிக்கையும் வந்திருக்கவில்லை.//
            அது உரிமை இல்ல கொழுப்பு. கையாளாகாத ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் இவர்களை ஓட்டுவங்கிகளாக பாவித்து இவனுங்க செய்யுற அக்கிரமத்தை கண்டு கொள்ளாத காரணத்தினால் தான் இவனுங்க இந்த ஆட்டம் ஆடுறானுங்க..

            தமிழகத்துல உழைப்பாளிகள் தைரியசாலிகளா.. அடிச்சி விடுங்க மாசி..

            //ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக, ‘அவனுக்கு 10 ரூபாய் செலவாகிறது, அதனால் 11 ரூபாய் தருவேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதித்து கஞ்சி குடித்துக் கொள்ளட்டும். ஆட்டோ காரன் குழந்தைகள்தானே, மாநகராட்சி பள்ளிக்கு அனுப்பட்டும்’ என்ற மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.//

            நான் ஒண்ணும் அப்படி சொல்லவே இல்லையே…நியாமான ஒழுங்கான கட்டணத்தை வாங்குங்கன்னு தானே சொல்றேன்.

            //நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள். ’8 மணி நேர வேலைக்கு ஒருவருக்கு 350 ரூபாய், இன்னொருவருக்கு 3000 ரூபாய் என்பது என்ன அடிப்படையில்? 10 மடங்கு அதிக திறமை என்பதாலா?’. இதற்கு லாஜிக்கலாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.//

            இல்லையே அவங்களுக்கு திறமை குறைவுன்னு யாரும் சொல்லவே இல்லையே.. எங்களை Hire செய்து இருக்கும் கம்பெனிகள் எங்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்கிறாங்க அதனால குடுக்குறாங்க. சரி நீங்க வாங்கும் சம்பளமும் உங்களிடம் வேலைபார்ப்பவரின் சம்பளமும் ஒன்றா? உங்களை விட எந்த விதத்தில் உங்களிடம் வேலை பார்ப்பவர் குறைந்து விட்டார்?

            //எங்க ஊருல பேரம் பேசுவது என்று சொல்லுவாங்க. ஒரு காலை வேளையில், சென்டிரல் நிலையத்தில் அதிக ரேட் சொன்ன ஆட்டோ டிரைவரை வைத்துக் கொண்டு மொத்த உலகத்தையும் மதிப்பிடுவது சரியில்லை.//
            கண்டிப்பா கிடையாது நான் சென்னையில் ஒரு 5 வருடம் இருந்து இருக்கிறேன் சும்மா ஒரு நாள் நடந்ததை வைத்து sweeping statment எல்லாம் விடலை.

            //நாம் வலி தெரியாத உயரத்தில் இருப்பதால், கீழே நிற்பவன் எல்லாம் அயோக்கியன்கள், திருடன்கள் என்ற பொதுப்புத்தியை விடுங்கள். திறந்த மனதுடன் எல்லோரும் நம்மைப் போல மனிதர்களே என்று யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.//
            வாவ் சூப்பர் Looks like the messah is here.. இதை எங்க எப்படி கண்டுபுடிச்சிங்க மாசி? அடிச்சி விடுங்க…ஐடிகாரன் தானே யார் அடிச்சாலும் தாங்குவான்.

            Btw for your information சென்னையில் ஐடிகாரங்க ஒரு 10% இருந்தா அதிகம், ஆனா நீங்க சொல்ற புனித பிம்பங்களான Non IT மக்களிடமும் இந்த ஆட்டோகாரங்க இப்படி தான் நடந்துகிறாங்க அதுக்கு என்ன சொல்லப்போறீங்க?

            • @சந்தோஷ்,

              1. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் வழிப்பறிக் கொள்ளை செய்கிறார்கள் என்று கடைசிப் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறீர்கள். இதைத்தான், ‘மேட்டுக்குடி மக்களின் திமிரான பேச்சு’ என்று குறிப்பிட்டேன்.

              ‘தன்னை விட பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்களை அயோக்கியர்கள்’ என்று ஒட்டு மொத்தமாக முத்திரை குத்துவதைப் பற்றிச் சுட்டிக் காட்டினால், நான் மெசையாவாக உங்களுக்குத் தெரிகிறேன்.

              2. இரண்டாவதாக, வழிப்பறிக் கொள்ளை என்று சொல்வதை கடுமையாக கண்டிக்கிறேன். அவர்கள் கேட்கும் கட்டணம் (‘புடுங்குவது’ இல்லை), உங்களுக்கு அதிமாக தோன்றுகிறது. மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகத் தோன்றுகிறது. உங்கள் தேவையைப் பயன்படுத்தி சம்பாதிக்க முயல்வதாகத் தோன்றுகிறது.

              அதை வழிப்பறி என்று சொன்னால், நானும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.
              (இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒப்பீட்டுக்காக மட்டும் சொல்கிறேன்).
              ========
              ‘காலையில எழுந்து டீக்கா டிரெஸ் போட்டுக்கிட்டு வருகிறான். 8 மணி நேரம் 10 மணி நேரம் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் தட்டுகிறான். இதே போல ஜாவா புரோகிராமிங் செய்யும் ஆளுக்கு திருநெல்வேலியில் மாதச் சம்பளம் 7000 ரூபாய்தான். இவன் மட்டும் ஏதோ பெரிசா புடுங்கி விட்டது போல மாசச் சம்பளம் 60,000 ரூபாய் வாங்குவதோடு மட்டுமில்லாமல் அடுத்த வருஷத்தில் 20% hikeம் கேட்கிறான். பகல் கொள்ளையாக அல்லவா இருக்கு.

              திருநெல்வேலியில் எல்லாம் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பட்டினி கிடந்தா சாகிறார்கள். இவனுங்களுக்கு மட்டும் ஏன் இந்த திமிரு’
              ========
              இப்படி ஐடி துறையில் வேலை கொடுக்கும் முதலாளிகள் நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

              3. ‘புரோகிராமர்களை வைத்து வேலை வாங்குவதால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது, அதனால் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்’ என்று நீங்கள் காரணம் சொல்கிறீர்கள்.

              அவசரமாக காலையில் அலுவலகத்துக்குப் போவதன் மூலம் ஐடி ஊழியருக்கு 3,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது, அதை வைத்து 300 ரூபாய் ஆட்டோ ஓட்டுனருக்குக் கொடுக்க ஏன் கசக்கிறது?

              இவைதான் நான் உங்களுடன் விவாதம் செய்ய ஆரம்பித்ததன் அடிப்படைகள்.

              • மா சி – ஜெலூசில் குடிச்சு பழகுங்க… IT காரன் மட்டும் தான் ஆட்டோ use பன்ற மாதிரியே பேசிகிட்டு ..

      • /இதையே white colour வேலை பார்க்கும் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். ‘சாப்பாட்டு செலவு மாதம் 5,000 ரூபாய்தான் ஆகுது (அதை வச்சுதானே வேலை செய்ய எனர்ஜி கிடைக்குது), ஆனாலும் மாசா மாசம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கி கொள்ளை அடிக்கிறானுங்க இவங்க’ என்று கணக்கு பார்த்தா சம்பளம் கொடுக்குறாங்க?//

        மா. சிவக்குமார் அவர்களே ஆட்டோவில் ஏறுபவர்கள் எல்லாரும் ஐடி தொழிலாளர்கள்தானா அப்படி இல்லை என்றால் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக கேட்கப்படும் 10 ரூபாய்க்கான பொருத்தமான காரணம்

        • அளவுக்கு அதிகமாக கேட்கப்படும் 10 ரூபாய்க்கான பொருத்தமான காரணம்?

          வேறு என்ன தோழர் தியாகு, ஆட்டோ டிரைவர்கள் அம்பானி – அண்ணாச்சி வரிசையில் மக்களை சுரண்டிக் பிழைக்கும் சுரண்டல்காரர்கள் என்பதுதான். அவர்களுக்கு வழக்கம் போல வினவு வக்காளத்து வாங்கியிருக்கிறது. இப்படி ஆட்டோ டிரைவர்களெல்லாம் நேச சக்தியாக பார்ப்பதினாலேதேன் நடுத்தர வர்க்கம் புரட்சிக்கு ஆதரவு தருவதில்லை.

        • தியாகு அவர்களே,

          //ஆட்டோவில் ஏறுபவர்கள் எல்லாரும் ஐடி தொழிலாளர்கள்தானா அப்படி இல்லை என்றால் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக கேட்கப்படும் 10 ரூபாய்க்கான பொருத்தமான காரணம்//

          நீங்கள்தான் விளக்கமாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

  8. kadavul or iyarkaiyin pillaiye vulakam! athiloru killaiye nam vaallkkai!!

    athanaal avaravarey thirunthannum, illaathapothu ippadithaan ellorumay varunthanum!

    manithan oru vuyarntha padaippinamillai ena arithalay ngaanathin thuvakkam!

    nantri.

  9. நான் பெரும்பாலும் ஆட்டோகளில் பயணம் செய்வதில்லை… 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோவின் அதிகமாக பயணம் செய்தது உண்டு… அப்போது இங்கு பதிவு செய்திருப்பதை போல் ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேச்சு கொடுத்த போது… அவர்களின் ஒரு நாள் வருமானத்தில் பாதி அளவு பணத்தை ஆட்டோ ஓனரான சேட்டிற்கு கொடுக்க வேண்டும் என்றார்…

    அவர்கள் சேட்டிற்கு தினமும் பணம் கொடுத்து அடிமை போல் வாழ வேண்டி இருக்கிறதே என கேட்டு… வங்கிகளில் கடன் மூலம் ஆட்டோ வாங்கினால் 1 1/2 வருடத்தில் முழு கடனையும் அடைத்து விடலாமே என கேட்டதற்கு… வங்கிகளில் கடன் கொடுக்க மாட்டார்கள்… அந்த பேப்பர்… இந்த பேப்பர் என இழுத்தடித்து கடன் கொடுக்க மாட்டார்கள் என்றார்…

    கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்டோவில் சென்ற போது… அந்த ஓட்டுனர் சொன்ன தகவல்… அம்பத்தூர் தொழிற் பேட்டையில் நிறுவனங்களை மூடி… கம்பியூட்டர் நிறுவனங்கள் வந்த பின்னர்… வேலை இழந்த தொழிலாளர்கள் அம்பத்தூர், முகபேர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவது மட்டுமே தொழிலாகி விட்டது என்றார்…

    கொடுமை என்னவென்றால் அரசு வங்கிகளில் எல்லாம் தொழிலாளர்கள் கடன் கொடுக்க மறுப்பவர்கள்… மிக பெரிய நிறுவனங்களுக்கு வரா கடன் கொடுத்து சேவை செய்து வருகின்றன…

    • //வங்கிகளில் கடன் மூலம் ஆட்டோ வாங்கினால் 1 1/2 வருடத்தில் முழு கடனையும் அடைத்து விடலாமே என கேட்டதற்கு… வங்கிகளில் கடன் கொடுக்க மாட்டார்கள்… அந்த பேப்பர்… இந்த பேப்பர் என இழுத்தடித்து கடன் கொடுக்க மாட்டார்கள் என்றார்…//
      அதெல்லாம் அந்த காலம் இப்ப புது ஆட்டோ வாங்கும் பொழுது Showroomலயே கடன் குடுக்க வங்கி ஆளுங்க ரெடியா இருக்காங்க.. obviously சில பேப்பர் கேப்பான். உங்க வசிப்பிட சான்றிதழ், ID முதலியவை… சேட்டு மட்டும் அப்படியே தூக்கி குடுக்குறானா என்ன அவனும் ஜாமின் கேக்குறான் இல்ல.

  10. புத்தகத் திருவிழா 2012 க்குப் பதிலாக தவறுதலாக 2011-வது ஆண்டின் லேஅவுட் வெளியிடப்பட்டுள்ளது. 35 -வது ஆண்டு திருவிழா லேஅவுட்-ஐ வெளியிடவும்.

  11. அரசு, மாநகராட்சி நடத்தும் இலவசப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்க்க ஒரு ஏழை ஆட்டோ டிரைவர் கூட விரும்பவில்லை என்பதைக் கவனித்தீர்களா? அரசு நடத்தும் எதுவும் உருப்படாது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது! தனியார் துறையின் எஃபிஷியன்சிக்கு அவரது இந்தக் கூற்றே உதாரணம்!

    *** பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அம்பானி, டாடா, பிர்லா, மிட்டல்…எல்லோரும் இதுதானே செய்கிறார்கள்?***

    இந்த மாதிரி ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட்களுக்கு அர்த்தமே இல்லை.

    • அது அந்த ஆட்டோ டிரைவரின் அறியாமையைக் காட்டுகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதில் தெளிவான புரிதல் இருந்திருந்தால் பள்ளிக்கல்விக்கு பல ஆயிரங்களில் அவர் கொட்ட மாட்டார். இவ்வாறு பல ஆயிரங்கள் கொட்டி தனியார் பள்ளியில் படித்த என் மாமா பையன் 10ம் வகுப்பில் ஏன் 500க்கு 275 எடுத்தான்? தனியார் பள்ளியின் பப்பு ஏன் அவனிடம் வேகவில்லை?

  12. அரசு, மாநகராட்சி நடத்தும் இலவசப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்க்க ஒரு ஏழை ஆட்டோ டிரைவர் கூட விரும்பவில்லை என்பதைக் கவனித்தீர்களா? அரசு நடத்தும் எதுவும் உருப்படாது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது! தனியார் துறையின் எஃபிஷியன்சிக்கு அவரது இந்தக் கூற்றே உதாரணம்!

    /// பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அம்பானி, டாடா, பிர்லா, மிட்டல்…எல்லோரும் இதுதானே செய்கிறார்கள்? ///

    Sweeping statement!

  13. அய்யா… எனது வீட்டின் அருகே பல ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எனக்கு பழக்கம். அதிக பணம் கேட்டு ஸ்டாண்டிலேயே நின்று பொழுதைக் கழிக்காமல், வரும் வாடிக்கையாளரை இழக்காமல் நியாயமாக ரேட்டு பேசி ஓட்டும் சாமர்த்தியசாலிகள், நன்றாகவே பணநெருக்கடி இல்லாமல் வாழ்கிறார்கள்.

    மற்ற நகரங்களை ஒப்பிட்டால் சென்னையில் தான் அநியாய ரேட்டு பேசுகிறார்கள். சரி. நம்மூரில் அதிக ரேட்டே வாங்கிக்கொள்ளட்டும். ஆனால் அது முறையாக செயல்படுத்தலாமே.. முன்பு கைரிக்சா இருந்த போது ஸ்டாண்டில் போகும் இடம், மற்றும் அதற்கான தொகை இருக்கும். ஆட்டோ ஸ்டாண்டில் ஏன் இல்லை. அடிக்கடி சென்று வரும் இடம் என்றால் நமக்கு தூரம் தெரியும், குத்துமதிப்பாக எவ்வளவு ஆகும் என தெரியும். ஆனால் புது இடம் செல்லும்போது என்ன செய்வது.

    என் வீட்டிலிருந்து சென்ட்ரலுக்கு 100 ரூ குறைந்து ஆட்டோ வராது. ஆனால் காலையில் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் 250 ல் ஆரம்பித்து, கடைசியில் “உங்களுக்காக 200 க்கு வருகிறோம்” என்று போலி பச்சாதாபம் காட்டுவார்கள். இவை எல்லாம் ஏமாற்றுதல் இல்லையா? இவர்கள் செய்யும் கொள்ளையை நியாயப்படுத்தும் வினவு, உண்மையாய் உழைக்கும் தோழர்களைக் கொச்சைப்படுத்துகிறது.

    • //அய்யா… எனது வீட்டின் அருகே பல ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எனக்கு பழக்கம். அதிக பணம் கேட்டு ஸ்டாண்டிலேயே நின்று பொழுதைக் கழிக்காமல், வரும் வாடிக்கையாளரை இழக்காமல் நியாயமாக ரேட்டு பேசி ஓட்டும் சாமர்த்தியசாலிகள், நன்றாகவே பணநெருக்கடி இல்லாமல் வாழ்கிறார்கள்.// அய்யயோ

      இந்தமாதிரி வசனம் பேசாதா ஓட்டுனர்களால் என்ன லாபம் நீங்க இன்னும் வளரனும் பாஸ்

  14. தமிழ்நாட்டுலே நான் பார்த்தவரைக்கும்..

    1. மீட்டர் கிடையாது
    2.நாம ஒரு இடத்துக்குப் போகனும்னு சொன்னா “ அங்கேலாம் போகாது சார் , வேற ஆட்டோ பாருங்க”ன்னு சொல்லுவாங்க .
    3.ஒரு இடத்துக்குப் போகனும்னா உத்தேசமா அவங்களா ஒரு ரேட் சொல்லுவாங்க , என்னப்பா இதோ இருக்கிற இடத்துக்கு இவ்வளாவான்னு கேட்டா , “ திரும்பி வர சவாரி கிடைக்காது சார் , தனியாத்தான் வரணும்”னு சொல்லுவாங்க – இதுக்குன்னு நாம போய் இறங்கிட்டு ஆட்டோக்காரர் திரும்பிப் போக சவாரிக்கு ஆள்பிடிச்சா கொடுக்கிறது ???
    4.குடிச்சுட்டு ஆட்டோ ஓட்டுறது ரொம்ப சர்வசாதரணமா நடக்கும் .
    5.வழி தெரியாம ஆட்டோல ஏறுவதிலும் ஆபத்து இருக்கிறது .

    ஹைதரபாத் , மைசூர் , மும்பை, கொச்சி , ஆகிய நகரங்களில் நான் பார்த்த வரை மீட்டர் போட்டுதான் ஆட்டோவே எடுக்கிறாங்க . ரொம்ப ஆச்சரியமான விசயம் , மீட்டர் 23.50 காட்டியபோதும் , 25 ரூபா கொடுத்ததுக்கு ரூ.2.50 திருப்பி தந்தாரு அந்த நல்ல மனுசன் . வாங்க மனசு வரலை வாங்கல. மற்ற மாநிலங்களில் சாத்தியப்படுகிற விசயம் ஏன் தமிழ்நாட்டுலே முடியல?

    வினவு பட்டியலிடுகிற கொள்ளைக்காரன் , பெரு முதலாளி , வட்டிக்கடை சேட் , அம்பானி , டாடா , பிர்லா யாரும் ஆட்டோல போறதில்லீங்க . வக்கதுப்போன நடுத்தர வர்க்கம் தான் ஆட்டோல போறாங்க .

    • //வினவு பட்டியலிடுகிற கொள்ளைக்காரன் , பெரு முதலாளி , வட்டிக்கடை சேட் , அம்பானி , டாடா , பிர்லா யாரும் ஆட்டோல போறதில்லீங்க . வக்கதுப்போன நடுத்தர வர்க்கம் தான் ஆட்டோல போறாங்க .//

      பாஸ் நடுத்தர வர்கத்தை வக்கத்தவங்கன்னு தான் வினவு சொல்றாங்க கமிசன் மண்டிகாரன நட்புசக்தி ஆனால் நடுத்தர வர்க்கம் எல்லாம் நோ சான்ஸ் 🙂

      • //பாஸ் நடுத்தர வர்கத்தை வக்கத்தவங்கன்னு தான் வினவு சொல்றாங்க கமிசன் மண்டிகாரன நட்புசக்தி ஆனால் நடுத்தர வர்க்கம் எல்லாம் நோ சான்ஸ் :)// தியாகு தன்னுடைய பழைய நிறுவனத்தில் சில ஆயிரங்கள் கையாடல் செய்து அது பற்றிய வழக்கில் 2 ஆண்டு சிறை சென்றவர். இது போன்றதொரு பொய்தான் மேலே அவர் கழிந்து வைத்திருப்பது. ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருந்து அவரது முதலாளிக்காக தொழிலாளிகளை சுரண்டும் இவரைப் போன்ற பொய்யர்களை செருப்பால் அடித்தால் கூட செருப்பு வருத்தப்படும். வால்மார்டும், அன்னிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன் என்று சொல்லுபவர் இவர். விவசாயிகளை சுரண்டும் உரக் கம்பனிகளை சமூக சேவகர்கள் என்றவர் இவர். அதனால்தான் ஆட்டோக்காரனை அயோக்கியன் என்கிறார்.

        • /வால்மார்டும், அன்னிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன் என்று சொல்லுபவர் இவர். விவசாயிகளை சுரண்டும் உரக் கம்பனிகளை சமூக சேவகர்கள் என்றவர் இவர். அதனால்தான் ஆட்டோக்காரனை அயோக்கியன் என்கிறார்.//

          வால்மார்ட்டும் அந்நிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன்னு நான் எங்காவது சொல்லி இருந்தால் அதை எடுத்து போட்டு பேசனும் இல்லாட்டினா செருப்படி உமக்குத்தான் அகமது 🙂

          • ///வால்மார்டும், அன்னிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன் என்று சொல்லுபவர் இவர். விவசாயிகளை சுரண்டும் உரக் கம்பனிகளை சமூக சேவகர்கள் என்றவர் இவர். அதனால்தான் ஆட்டோக்காரனை அயோக்கியன் என்கிறார்.//

            வால்மார்ட்டும் அந்நிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன்னு நான் எங்காவது சொல்லி இருந்தால் அதை எடுத்து போட்டு பேசனும் இல்லாட்டினா செருப்படி உமக்குத்தான் அகமது

            // இதே மாதிரிதான் வினவு பற்றியும் மக இக பற்றியும் ஆயிரத்தெட்டு பொய்களை வாந்தி எடுத்து சூரியனைப் பார்த்து நாய் குலைப்பது போல குலைத்து கொண்டுள்ளீர்கள். இவை பொய் என்பதை சுட்டிக் காட்டிய பின்பும் தொடர்ந்து செய்யீறீங்க. அதை உங்க தளத்தில் செய்தால் ஈ காக்கா கூட வராது. இங்க வந்து பொது இடத்த அசுத்தம் செய்யாதீங்க. அதே மாதிரி உங்களப் பத்தி இதுக்கு முந்தின பதிவுகளீல் பல தோழர்கள் கேட்டிருந்த கேள்விக்கு இது வரை பதில் சொல்லல. இங்க நீங்க பதில் சொன்ன என்னுடடய பின்னூட்டத்திலும் உங்கள குறிப்பிட்டு(உங்க முதலாளிக்கு அடிமை நாய் போல வேலை செய்து தொழிலாளியைச் சுரண்டும் தியாகு என்ற மேனேஜர்) உள்ள பகுதிக்கு நோ பதில்.

            • //வால்மார்ட்டும் அந்நிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன்னு நான் எங்காவது சொல்லி இருந்தால் அதை எடுத்து போட்டு பேசனும் இல்லாட்டினா செருப்படி உமக்குத்தான் அகமது

              // வால்மார்ட்டும் அன்னிய மூலதனமும் விவசாயிக்கு (குறைந்த பட்சமேனும்) நண்மை செய்யுது, நாட்டில் பாட்டாளிகளை அதிகமாக்கி புரட்சிக்கு சேவை சேய்யுதுன்னு சொன்னவர் நீங்கள்தான் தியாகு.

          • வால்மார்ட்டும் அந்நிய மூலதனமும் தொழிலாளிகளின் நண்பன்னு நான் எங்காவது சொல்லி இருந்தால் அதை எடுத்து போட்டு பேசனும் இல்லாட்டினா செருப்படி உமக்குத்தான் அகமது //////////////

            தியாகுவை தெளிய தெளிய வச்சு அடிக்க வேண்டியதா இருக்கே 🙁

            இதே அதை எடுத்து போட்டு பேசனும்னு இப்ப ஓட்டும் ரீலை ஏற்கனவே மாயாண்டியிடம் இங்க ஓட்டியாச்சு

            https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53903

            அதுக்கு மாயாண்டி பதிலும் சொல்லியாச்சு நீங்க இந்த சுட்டியல
            இதனால் விவசாயிக்கும் லாபம் வாங்குபவருக்கும் லாபம்/னு
            சொல்லியிருக்கீங்கன்னு
            https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53639

            சுட்டியை கொடுத்த உடனே வால்மார்ட்டின் பி.ஆர்.ஓ போல அது ஒரு பிசினஸ் டெக்னிக் என்று சப்பைக்கட்டு கட்டினீர்கள்..

            ——————

            அடுத்து வால்மார்ட்டுக்கும் சாதாரண மக்களுக்கும் பிரச்சனையில்லை அது ரிலையன்சு போன்ற நிறுவனங்களுக்குத்தான் போட்டி என்று நீங்கள் எழுதிய உளரல்கள்

            https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53594

            ——————

            அடுத்து 100% அந்நிய முதலீடு வந்த பின்னரும் சீனாவில் ஒன்றும் அவர்கள் ஜெயித்து விடவில்லை என்று வால்மார்ட்டு எதிர்ப்புக்கு எதிரப்பாக அதாவது வால்மார்ட்டுக்கு ஆதரவாக நீங்கள் எழுதியது https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53371

            ————————

            அடுத்து அமெரிக்கா ஜெர்மென்லலாம் கூட போட்டிதானே தவிர அவர்கள் வந்தால் யாரும் அழிந்து போகப்போவதில்லை என்று நீங்கள் வால்மார்டுக்கு ஆதரவாக எழுதியது
            https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53604

            ——————————

            அடுத்து வால்மார்ட்டு வந்தால் சிறிய சில்லரை வியாபாரிகள் அழிவார்கள் என்று எழுதுவதை வால்மார்டுக்கு எதிரான கோயபல்ஸ் பிரச்சாரம் என்று இப்படி

            ///////வால் மார்ட் வந்தால் சின்ன சின்ன ஆயாகடைகள் அழிந்துவிடும் என மந்திரம் போல திருப்பி திருப்பி சொல்வது கோயபல்ஸ் பிரசாரம்//// என்று
            https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53639 பின்னூட்டத்தில் எழுதியது
            ———-
            இன்னும் இருக்கும்.. நேரம் கிடைச்சா எடுத்து போடறேன்…
            இப்படி வால்மார்டுக்கு சொம்பு, கூஜா, பக்கெட்டு, அண்ண, டிரம்மு அனைத்தையும் தூக்கி நீங்கள் வால்மார்டின் பணியாள் போல அதரவளிப்பதை குறித்த ஆதரங்கள் போதுமா?

            சரி, இப்ப அகமது கிட்ட செருப்பு இருக்கு, மாயாண்டி கிட்ட செருப்பு இருக்கு, ஏன்கிட்டயும் இருக்கு.. எங்க வச்சு வேணா அடிக்கலாம்… ஆனா என் செருப்பு சானியை வேணாலும் மிதி ஆனா தியாகுவை அடிக்காதே, மீறி அடிச்சா நான் தற்கொலை செஞ்சுக்குவேன்னு மிரட்டுது.. மத்தவுகளதப்பத்தி தெரியாது!

            • லூசுத்தனம் அல்லது கியாதிதனம் என்பதெல்லாம் இதான்

              ——————-
              ஒரு பெரிய கடைக்காரன் வருகிறான் என்றால் இன்னொரு பெரிய கடைக்காரனுக்கு ஆப்பு என்பதை உளிறி கொட்டி ஊசி மாட்டி கொண்டது

              //இதனால் விவசாயிக்கும் லாபம் வாங்குபவருக்கும் லாபம்/னு
              சொல்லியிருக்கீங்கன்னு//

              விவசாயிக்கும் லாபமில்லாம வாங்குபவருக்கும் லாபமில்லாத கமிசண்மண்டி காரனை நட்பு சக்தின்னு
              சொல்லிட்டு அதை காப்பாத்த முடியாம இட்லி சுடுற ஆயாதான் வால்மாட்டுக்கு எதிரின்னு சொல்லி பித்த பிதான்னு முழிச்சதை பார்கனும் இங்கே
              //இதனால் விவசாயிக்கும் லாபம் வாங்குபவருக்கும் லாபம்/னு
              சொல்லியிருக்கீங்கன்னு//

              நீங்கள் கமிசன் மண்டிக்காரன் இப்படியே இருப்பான்னு அவனை வாழ விடுங்கள் விவசாயிகள் சாவது அரசின் நிலைபாடுதான்னு சொன்னதுக்கு இன்னும் பதிலே வரலையே ராசா

              ஆகா நீங்க எடுத்து போட்ட எந்த சுட்டியிலயும் வால்மாட்டு தொழிலாளியோட நண்பன்னு வரலை ஆனால் உங்க அக்கவுண்டு அகமது என்ன சொல்லீருக்காருன்னா தொழிலாளி விவசாயிகளை சுரண்டுகிறான்னு எப்படின்னு கேட்டு சொல்லுங்க (அது நான் சொன்னதன் லாஜிக்குன்னு தப்பிக்க பார்ப்பாரு )

              சோ அகமதுக்கு இதோட சேர்த்து இரண்டு செருப்படி 🙂

              • சொந்த மூளைக்கு பதிலாக, செத்த ஆட்டுமூளையை வைத்திருக்கும் தியாகு, திட்டுவதற்குகூட என்னிடமிருந்து காப்பியடிக்கவேண்டுமா? கருமம் கருமம்!!

                கமிசண்மண்டி காரனை நட்பு சக்தின்னு சொல்லிட்டு ///////

                இப்படித்தான் ரிலையன்சை நட்புசக்தின்னு சொல்றாங்கன்னு உளரி கொட்டி, அதுக்கு போறவன் வரவெனெல்லாம் செருப்பால் அடிச்சிப்புறம் உம்ம பதிவினை தலைப்பை மாற்றிய கோழையே.., நீர் வால்மார்ட்டுக்கு ஆதரவாய் சொம்படிச்ச சுட்டியை எடுத்து போட்டிருக்கேன், கமிசன்மண்டியை நட்பு சக்தின்னு சொன்ன ஆதாரம் உண்டா? உமக்கு கிடைக்காது நானே எடுத்து தருகிறேன்

                நீர் நீட்டி முழக்கும் கட்டுரையில் என்ன சொல்லியிருக்கிறது?
                //////////இடைத்தரகர்களை ஒழிப்பதல்ல இவர்கள் நோக்கம். ஊருக்குப் பத்து கமிசன் மண்டி ஏஜென்டுகள் என்கிற நிலையை ஒழித்து நாட்டுக்கே நாலு பிரம்மாண்டமான கமிஷன் மண்டிகளை உருவாக்குவது தான் இவர்கள் நோக்கம். இந்த பெரிய சந்தை இன்றைய நிலையில் உள்ளூர் அளவில் பல்வேறு சிறிய போட்டியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை ரிலையன்ஸிடமும் வால்மார்ட்டிடமும் ஒப்படைத்து விட்டால் விவசாயிகளுக்கு வேறு போக்கிடமே இல்லாமல் போய் விடும். இடைத்தரகர்களை ஒழிப்பதே நோக்கம் என்று நீட்டி முழங்கும் இவர்களின் உண்மையான திட்டம் அதற்கு நேர் எதிரானது – இருக்கும் சாதா ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு சூப்பர் ஏஜெண்டுகளை வளர்ப்பது தான் அது.///////////////

                இதை உம்மைப்போன்ற செத்த ஆட்டு மூளை உடைய நபர்தான் கமிசன் மண்டியின் ஆதரவு என்று புரிந்து கொள்ளமுடியும்.

                இப்படித்தான் சொல்லாத எழுதாத விசயங்களையெல்லாம் சொன்னதாகவும் எழுதியதாகவும் கோயபல்சு வேலை செய்யும் பிழைப்பு உமக்கு தேவையா?

              • //அக்கவுண்டு அகமது என்ன சொல்லீருக்காருன்னா தொழிலாளி விவசாயிகளை சுரண்டுகிறான்னு எப்படின்னு கேட்டு சொல்லுங்க (அது நான் சொன்னதன் லாஜிக்குன்னு தப்பிக்க பார்ப்பாரு ) // அது நீ சொன்னதுதாண். இதுல நான் தப்பிக்க எதுவும் இல்ல. உன்னோட சொந்த லாஜிக் உன்னையே வர்க்க எதிரியா மாற்றும் முட்டாள்தனத்தை பத்தி பேசின இடத்துலதான் அதைச் சொல்லியிருந்தேன். இப்போ கூட இந்த விளக்கமெல்லாம் உனக்கு இல்லை, நீ ஒரு கேடுகெட்ட டுபாக்கூர் என்பதை எடுத்துக் காட்டத்தான் இத்தன விளக்கம். அத புரிஞ்சிக்கிற கெப்பாசிட்டியும் அதுப்பெடுத்த உன்னோட ஆட்டுப் புளுக்கை மூளைக்கு கிடையாது. இப்பொ உன்னோட பிரச்சினை அக்கவுண்ட அகமதா இலல் வினவா? நீ சொன்ன அத்தனையும் பொய், அவதூறு பித்தலாட்டம் என்பதை தோழர்கள் சுட்டி எடுத்துப் போட்டு கிழி கிழி என்று கிழித்தெடுத்து விட்டார்கள். அதோட இல்லாம நீ வால்மார்ட்டுக்கு ஆதரவா எழுதியதையும் போட்டாயிற்று. உன்னோட முதலாளிக்காக மேனேஜரா இருந்து தொழிலாளிய சுரண்டும் வர்க்க எதிரி நீ என்பதற்கும் பதில் இல்லை. உன்னத்த்க்கும் உன்னிடம் பதில் இல்லை. அடி வாங்கின சொம்பு கூட க்யுங்… என்று சத்தம் கொடுக்கும் நீயோ கொஞ்சம் கூட சொரனையில்லாம பதிவுலக வடிவேலு மாதிரி இருக்க. வேற ஒன்னுமில்லன உடனே தொழிலாளி விவசாயிய சுரண்டுறாருன்னு அகமது சொன்னாரு என்கிற நெளிஞ்ச சொம்ப எடுத்துட்டு வற்ற… இப்பயும் ஒன்னும் கெட்டுப் போயிடல இன்னும் அதிகமா அசிங்கப்படுறதுக்கு முன்னாடியே ஒழுக்கமா ஓடிப் போயிரு.

  15. முழுக்க முழுக்க கற்பனை பதிவு… “ஆட்டோ ஓட்டுனர் பேசினால்” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்
    ஆட்டோ ஓட்டுனர்களின் பேச்சு நடை மற்றும் கருத்தாக்கம் சிறிதளவும் இல்லை..
    பெட்ரோல் ஆடோக்கள் மலையேறி போச்சு..
    வாடகை ஆட்டோக்களுக்கு ஓட்டுனர் ஏன் F.C போட வேண்டும்?
    மற்றபடி சரவணா ஸ்டோர்ஸ் போன்ற தி.நகர் வர்த்தக நிறுவன முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது உண்டியல் வருமானத்துக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்…

    • //மற்றபடி சரவணா ஸ்டோர்ஸ் போன்ற தி.நகர் வர்த்தக நிறுவன முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது உண்டியல் வருமானத்துக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்…//

      அதெப்படி நீங்க சொல்லலாம் டி-நகர் நிறுவனம் நட்பு சக்தி அதை எப்படி விட்டு கொடுக்க முடியும்

    • பாஸ் இது மாதிரி எல்லாம் சிந்திச்சி கேள்வி கேக்க கூடாது.. அப்புறம் உங்களை ஆட்டத்துல சேத்துக்க மாட்டாங்க.. அவங்க சொன்னா சரின்னு கேட்டுட்டு போவணும்..

      • சந்தோசு, உங்க பின்னூட்டமும் இருக்கு மனிதனின் பின்னூட்டமும் இருக்கு, நடுவில ஒரு பிம்பிலிக்கா பிலியாச்சியோட பிண்ணூட்டமும் இருக்கு.. அப்புறம் எதுக்கு ‘ஆட்டத்துல சேத்துகறது’ ‘சரின்னு கேட்டுட்டு போவணும்’ அப்படீங்கற டெம்ப்ளேட் புலம்பலெல்லாம்.. அவ்வளவு ஆணியா ஆபீசுல 🙂

      • //அவங்க சொன்னா சரின்னு கேட்டுட்டு போவணும்.// இல்ல பாஸ் அவங்க வினவுன்னு பேரு வச்சிருக்கிறதால வினவினேன் .

        வினவாதேன்னு மாத்திட்டாங்கன்னா நான் ஏன் கேள்வி கேட்க போறேன்

        தனியார் மயம் , தாராளமயம் , உலகமயம் , ஓம்நமச்சிவாயான்னு மந்திரத்தை சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்ல (அவங்களோட மந்திரம் இது )

        • தத்துவ பிராணி தியாகு, சந்தோசட பதில் உமக்கு மேல எழுதியிருக்கும் மனிதனுக்கு, மேலே பதில் சொல்ல்ல பயந்திட்டு ஓடி வந்திட்டு இங்க என்ன பயாஸ்கோப்பு? நான் வெயிட்டிங்கு வாங்க சார் வாங்க சார் வாங்க சார்

    • //பெட்ரோல் ஆடோக்கள் மலையேறி போச்சு..//

      அளவில் குறைந்து விட்டிருக்கின்றன. இன்னமும் பல பகுதிகளில் இருக்கின்றன.

      //வாடகை ஆட்டோக்களுக்கு ஓட்டுனர் ஏன் F.C போட வேண்டும்?//

      இந்த ஆட்டோ அவரது சொந்த ஆட்டோவாகத்தான் தெரிகிறது அவரது பேச்சிலிருந்து.

      //மற்றபடி சரவணா ஸ்டோர்ஸ் போன்ற தி.நகர் வர்த்தக நிறுவன முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது உண்டியல் வருமானத்துக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்…//

      ஆட்டோ டிரைவர்தான் வக்காலத்து வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. வினவு அதை ஆமோதித்திருப்பதாகத் தெரியவில்லையே!

  16. எல்லோருக்கும் வணக்கம்!
    இந்த ஈT கம்பெனி காரவுக நடுத்தரவர்க்கம்னுஅவங்களேசொல்லிகிறவுக,
    தனியார்நிறுவனத்தில் வேலை செய்றவுக,எல்லாரும் முடிஞ்சா தோழர்.துரை,சண்முகம் அவர்களுடைய “மட்டபலகை” சிறுகதை படிங்க.
    அதுல தெரியும் ஆட்டோ ஓட்டுறவுங்க,கூலிக்காரங்க,சுமைதூக்குறவங்க,இவங்களோட வியர்வையின் வாசமும்,
    குறை சொல்லியே வாழும் மத்தவங்களோட சென்ட் நாத்தமும்.

    அதை படிச்சிட்டு அப்புறம் இந்த கட்டுரையை படிங்க புரியும்…

    • என்ன லூசுத்தனமான வாதம் இது.. IT மக்கள் என்னவோ சும்மாவே சம்பளம் வாங்குற மாதிரியும் மத்தவங்க மட்டுமே உழைப்பது மாதிரியுமே சீன் போட்டுட்டு சுத்துறீங்க.. பாஸ் வியர்வை வந்தா தான் உழைப்பு இல்லை.. ஒரு IT companyல போயி பாருங்க எவ்வுளவு மன அழுத்தத்தை சந்திக்கிறாங்கன்னு.. இது மூளை சம்மத்தப்பட்ட வேலை இதையும் உடல் உழைப்பையும் ஒப்பிடுவதே தவறு.

      • ஒரு ஐ.டி. ஊழியர் தன் மேனேஜரிடம் உழைப்புக்கான கூடுதல் சம்பளம் கேட்டுப்பெற வாய்ப்பிருக்கிறது. இங்கு ஆட்டோ டிரைவர் தன் பயணிகளிடம்தானே கூலி பெற முடியும். அதை ‘கூடுதல்’ என்பதை எப்படிச் சொல்ல முடியும்? உடல் உழைப்புக்கு அவர் உபயோகிக்கும் Resources ஐ பொறுத்து அவருக்கு நீங்கள் கூலி நிர்ணயிப்பீர்கள் எனில், உங்கள் மூளை உழைப்புக்கு எந்தக் காரணிகளைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிப்பீர்கள்?

        • //ஒரு ஐ.டி. ஊழியர் தன் மேனேஜரிடம் உழைப்புக்கான கூடுதல் சம்பளம் கேட்டுப்பெற வாய்ப்பிருக்கிறது.//
          Centralல இருந்து எக்மோர் போக 250 கேக்குறது எப்படி இருக்குன்னா ஒரு fresher project managerகிட்ட போயி எனக்கு மாசம் அறுபதாயிரம் சம்பளம் குடுங்கன்னு சொல்றது மாதிரி..

          // இங்கு ஆட்டோ டிரைவர் தன் பயணிகளிடம்தானே கூலி பெற முடியும். அதை ‘கூடுதல்’ என்பதை எப்படிச் சொல்ல முடியும்?//
          காசு குடுக்குறது நான் சாமி நான் தான் சொல்ல முடியும்?

          // உடல் உழைப்புக்கு அவர் உபயோகிக்கும் Resources ஐ பொறுத்து அவருக்கு நீங்கள் கூலி நிர்ணயிப்பீர்கள் எனில், உங்கள் மூளை உழைப்புக்கு எந்தக் காரணிகளைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிப்பீர்கள்?//

          என்னோட மூளை உழைப்புக்கு Client என்ன காசு தரானோ அதை பொறுத்து தான் சம்பளம்.

          • //Centralல இருந்து எக்மோர் போக 250 கேக்குறது எப்படி இருக்குன்னா ஒரு fresher project managerகிட்ட போயி எனக்கு மாசம் அறுபதாயிரம் சம்பளம் குடுங்கன்னு சொல்றது மாதிரி..// இதே வசனத்தை ரெண்டு வருசம் முன்னயும் சொல்லிருப்பார் சந்தோஷ். ஒரேயொரு வித்தியாசம் அப்போ அவர் 25 ஆயிரம் என்று சொல்லியிருப்பார். காரணம் அப்போ அவர் வாங்குனது 25ஆயிரம் இப்போ வாங்குறது 60 ஆயிரம். இதுக்காக அவர் 35 ஆயிரம் மதிப்புள்ள கூடுதல் மன அழுத்தம் இன்ன பிற இத்தியாதிகளை சுமக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. இவர மாதிரி ஆளுங்களுக்கு பதில் சொல்லி நேரத்த வீணடிக்காதீங்க பாசு. நாக்கு என்ற வஸ்து எப்படி வேணா மாத்தி பேசும் என்பதற்கு உதாரணம் இவர்கள்.

          • //// உடல் உழைப்புக்கு அவர் உபயோகிக்கும் Resources ஐ பொறுத்து அவருக்கு நீங்கள் கூலி நிர்ணயிப்பீர்கள் எனில், உங்கள் மூளை உழைப்புக்கு எந்தக் காரணிகளைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிப்பீர்கள்?//

            என்னோட மூளை உழைப்புக்கு Client என்ன காசு தரானோ அதை பொறுத்து தான் சம்பளம்.

            // சந்தோஷோட பிரச்சினை கேள்விக்கிடமற்ற அவரது எஜமான விசுவாசம்தான். ஒரு முதலாளி(கிளையண்டு) என்ன போடுறானோ அத வாங்கிட்டு போ என்பதுதான் அவரது தத்துவம். அதை விடுத்து ஒரு தொழிலாளி முதலாளிக்கிட்ட இவ்வளவு குடுன்னு கேட்டா? அதுதான் சந்தோஷால சீரணிக்க இயலாததாக உள்ளது. சம்பளத்தை அல்லது உழைப்புக்கான-சேவைக்கான கூலியை முதலாளி நிர்ணயிப்பதா அல்லது சேவை வழங்குபவன் நிர்ணயிப்பதா என்ற கேள்விக்கு ஆட்டோக்கார பயபுள்ள நிர்ணயிப்பதா என்று கோபம். உரிமையில்லா அடிமை நாயாம் போலீசு உரிமம கேட்டு போராடும் விவசாயி மீது வெறியுடன் பாய்ந்து குதறும் மனநிலைததன் இது. என்ன சந்தோசு போன்றோர் காக்கி உடுப்பு போடுவதில்லை.

      • சந்தோசு,

        மூளை உழைப்பை செலுத்துபவனுக்கு மன அழுத்தம் மட்டும்தான். உடலுழைப்பை செலுத்தபவனுக்கோ எல்லா அழுத்தமும் உண்டு.

      • கரெக்ட். மூட்டை தூக்றவன், கல்லு சுமக்கறவன் எல்லாரும் தான் ஆட்டோ ஓடறவங்கள விட அதிகமா உடல் உழைப்பை தராங்க.. அவங்க கூலி ஒரு நாளைக்கு 150 ரூபா கூட தேராது… ! இங்க வக்கனையா பேசறவங்க தான் ஆடோகாரன்கிட்ட 5 ரூபாவுக்கு சண்ட போடுவாங்க..

      • puriyalaya? thamizh ma padathula ITkaaran mele ellarukkum irukkara kobathaiyum vayitherichalayum director hero moolama kaamichiruppar. subbu saar athaithaan solraru. actually, it’s the comments section that is more like tamil ma movie.

        ellarukkum ITkaran enrale erichal. yenna avan 3-4 varushathule 40-50 aayiramnu sambathikkaran. matha sector-la innum padukevalamana soozhnilaithaan. maathavum mudiyathu. antha kobathai engeyavathu kaatta vendama. adhaan inga vandhu theethukkaranga. vinavukkum thozharkalukkum yen IT enrale erichalnu puriyala. adhigama sambalam vaanguvathu kutrama?

        IT companies are closer to communism than other sectors, because they distribute a greater share of the profits to employees than others. Our dear comrades should be celebrating it.

  17. “ரெண்டு பசங்க ஒருத்தன் 7ம் கிளாஸ் இன்னொருத்தன் 4. ரெண்டு பேரும் பிரைவேட்டு ஸ்கூல்தான். இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்க வைக்கிறேன். நான்தான் படிக்கலை. படிப்பு வேணும் சார். எம் பசங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. பெரிய படிப்பு படிச்சவன் மாதிரி நோட்டுல எழுதுகிறாங்க சார்.
    ஸ்கூல் பீஸ் பெரியவனுக்கு வருஷத்துக்கு 22,000 ரூபாய், சின்னவனுக்கு 20,000 ரூபாய் ஆவுது. வருமானம் ஆட்டோ ஓட்டறது மட்டும்தான். சொந்த வீடு கிராமத்தில அதை ரிப்பேர் கூட செய்யமுடீல. வெலவாசி ஏற ஏற கஷ்டமா இருக்கு சார். மதியம் சாப்பாடு 50 ரூபாய் வரை ஆகிடுது. ஒரு டீயும் வடையும் கூட 10 ரூபாய்க்கு கம்மியா இல்ல. ராத்திரீல ஒரு தோசையும், இரண்டு பரோட்டாவும் சாப்பிட்டா 60 ரூபாய் ஆகி விடுகிறது. இப்படி எனக்கு சாப்பாட்டுச் செலவே ஒரு நாளில் கணிசமாக ஆவுது. அன்னைக்கு என்னடான்னா ஒரு கடையில டீ விலை 6 ரூபாய் ஆக்கிட்டதா சொல்றான்.”

    My Thought.
    இங்கிலீஷ் மீடியத்துலதான் சேர்க்கணும்னு ஏன் ஆசைபடிறீங்க? தமிழ் மீடியம்ல சேர்த்து நல்லா படிக்க வைக்கலாமே! உங்கள் செலவும் குறைந்து இருக்குமே!
    நீங்களும் 3 நேரமும் நிம்மதியாக சாப்பிட்டு இருக்கலாம்.

  18. //வாங்குவதற்கும் புடிங்கி திங்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு மாசி//.

    சந்தோசு கவுரவமா புடுங்கனுன்னு சொல்லுறாரு. இனிமேல், பத்திரிகையில் நாளைமுதல் எக்மோர்லந்து செண்ட்ரலுக்கு 250 ரூவா என அறிவிப்பு கொடுத்துவிட்டு கட்டணம் வசூலிக்கனும்.

    • மாயாண்டி,
      பண்ணுங்களேன் அதை தான் கட்டணமுன்னு நிர்ணயம் செய்து வாங்குங்க நான் மறு பேச்சு பேசாம குடுக்க தயாரா இருக்கேன்.. சென்னையை பத்தி யார் பேசினாலும் அதில் இந்த ஆட்டோகாரங்க அநியாயத்தை பத்தி பேசாம இருக்க மாட்டாங்க.. கால் டாக்ஸி தொழில் நல்லா நடைபெற இவங்களும் ஒரு காரணம்.10-20 போனாலும் போயி தொலையுது ஆட்டோகாரங்க கிட்ட மாரடிக்க முடியாதுன்னு சொல்றவங்களே அதிகம்.

  19. I see the discussion is going in

    whether Autowalas request for more money is justified
    Or why not the IT guys who make money without any hardwork(?) pay more

    The actual issue is
    1) Inflation – Govt is raising interest rates to curb the prices. But black money is not allowing to
    2) If Autowalas cannot run their family with in the Govt specified tariffs they should actually negotiate with Govt to raise the tariffs
    3) Address proof issue- Govt is addressing this with Adhaar project
    4) Credit history to get the loan – Adhaar project
    5) Food price – Govt is playing cricket

  20. முன்னெல்லாம் காரிலோ,ஆட்டோவிலோ,விமானத்திலோ சென்றால் தான் அவர் பணக்காரன். இப்போது அரசு பேருந்தில் பயணம் செய்தாலே பணக்காரன் தான்.

  21. ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் கேட்பதாக குறை கூறுவோரே,

    கடைசியாக எப்போது ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடுவது சாத்தியமேயில்லை.யாரும் மறுக்க முடியுமா.அப்படியானால் பேரம் பேசும் நிலைக்கு ஆட்டோ ஓட்டுனர்களை தள்ளியது யார் குற்றம்.மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறுகிறது.குண்டும் குழியுமான சாலைகள் கூடுதலாக எரி பொருளை தின்கின்றன.வரைமுறையற்ற வாகனப்பெருக்கம் ஏற்படுத்தும் நெரிசலால் வீணாகும் எரிபொருள் செலவு கணக்கிட முடியாததாக உள்ளது.இந்த நிலையில் அவர்கள் கேட்கும் கட்டணம் கூடுதல் என்று எதை வைத்து சொல்ல முடியும்.

    வேலைக்கு போனால்தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் உடல் என்ன இரும்பால் அடித்ததா.அவர்கள் வருமானத்துக்கு ஏற்ற வீடு கிடைக்கும் ”இடங்கள்தான்” நோய் தாக்குதலுக்கும் ஏற்ற இடங்களாக உள்ளன.நோய்.சொந்த வேலை, நண்பர்கள்,உறவினர்கள் திருமண மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு போவது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டவில்லை என்றால் வருமானம் கிடையாது என்ற நிலையில் அம்பதுக்கும் நூறுக்கும் அல்லாடும் அவர்கள் மீது வன்மம் பாராட்டாமல் நட்பு பாராட்டி பாருங்கள்.அப்போது தெரியும் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என்று.

    ஆம் நண்பர்களே,நீங்கள் சாலையில் செல்லும்போது ஏதேனும் அடிபட்டோ, மயக்கமுற்றோ விழ நேர்ந்தால் உங்களுக்கு ஓடோடி வந்து உதவுவது அருகில் நிற்கும் ஆடோக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.கழுத்தில் அடையாள அட்டை மாட்டிய கன மற்றும் தனவான்கள் ”ஒ மை குட்நெஸ்” என்று ”உச்”கொட்டி விட்டு நகர்ந்து விடுவார்கள்.

    தமிழ் வழி அரசு பள்ளியில் அவர்கள் பிள்ளைகளை சேர்க்க சொல்வோரே,

    அரசு பள்ளி தரமற்றது என்றும் தமிழ் வழி கல்வி முன்னேற்றத்தை தராது என்றும் தொய்வில்லாத பரப்புரை பற்ற வைத்திருக்கும் நெருப்பு வளையத்திற்குள் எரியாத கற்பூரமாக ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா.

  22. சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் , மற்ற ஊர்களில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் என்றாலே மக்களிடம் ஒரு பயம் ,வெறுப்பு இருக்கிறது. காரணம் அநியாயமாக பணம் கேட்பது, மரியாதையற்ற முறையில் பேசுவது. ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு போக இவ்வளவு தொகை கொடுக்கலாம் என்று ஒரு அளவு இருக்கிறது. அதில் 50 % கூடுதலாக கேட்டால் கொடுக்க முடியுமா.? நான் கோயம்பேட்டில் இருந்து மேட்டுக்குப்பம் வர ஆட்டோ ஓட்டுனர் 600 ருபாய் கேட்டார். கால் டக்ஸியில் 470 ரூபாய்தான் வந்தது.
    IT கம்பனிகளை பொறுத்தவரை ,லாபத்தை கணக்கிடுகையில் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுக்க படுகிறது. வெளிநாட்டு கம்பெனிகளின் ப்ராஜெக்ட் என்பதால் வருமானம் அதிகம். அதற்காக உழைக்காம சம்பாதிக்கிற மாதிரி பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர். இதே ஆட்டோ ஓட்டுனர் அரபு நாடுகளில் லாரி ஓட்டினால் வருமானம் அதிகம். அதற்காக வெளிநாட்டில் சம்பாதிக்கிறவன் எல்லாம் உழைக்காம சம்பாதிக்கிறான் என்பது சரியாகுமா?

  23. சென்னையில் பல வருடங்களாக ஆட்டோக்களை உபயோகபடுத்தி வந்து இருக்கிறேன்… நான் அறிந்த வரையில் ஆட்டோவாகட்டும், கால் டாக்ஸி ஆகட்டும் ஓட்டுனர்கள் அனைவரும் நல்ல நட்புணர்வுடன் இருக்கின்றனர்… ஆட்டோகாரர்கள் அறுபது சதவீதம் இரவு சுமார் 9 .30 க்கு சோமபானம் சோபிக்க அரசு உதவி பெற்ற மது கூடங்களை நாட ஆரம்பித்துவிடுவர். நாள் முழுதும் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசாங்கத்திடம் சேர்ப்பிக்க அப்படி ஒரு தீவிர ஆவல்…
    இரவு 9 மணிக்கு சென்னையின் ரன்னிங் ஆடோக்களை நிறுத்தி அரை மணிக்குள் அடையக்கூடிய எந்த இடத்துக்கு கூப்பிட்டாலும் 100 ல் ஆரம்பித்து பேரம் 70ல் அல்லது அன்றைய தேதியில் கால் புட்டியின் விலையில் படியும்..

    மற்ற நேரங்களில் ஆட்டோ காரர்களை நீங்கள் அணுகும் விதம், இடம், காலம் பொறுத்து கட்டணங்கள் இருக்கும்… காலை 7 மணிக்கு போத்தீஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 ரூபாய்கள் கேட்பர் அதே, இரவு 7 மணிக்கு 150 ரூபாய்கள் விலையாகும்…

    பயணியின் மொழிபுலமை , தோற்றப்பொலிவு, பணபல பராக்கிரமும் விலையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்..

    உதாரணத்திற்கு.. பார்க் ஷெரட்டன் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நடந்த உரையாடல் பட்டினப்பாக்கம்(FourShore Estate ) செல்ல

    பயணி : எக்ஸ்கியூஸ் மீ, ஹௌ மச் டு ஃபோர் ஷோர் எஸ்டேட்?
    ஓட்டுனர் : த்ரீ ஹன்ட்ரட் சார்! சிட் சார்! வி கோ சார்!!

    பயணி : இந்தாப்பா ஆட்டோ பட்னப்பாக்கம் வர்றியா.. இன்னா கேப்ப..
    ஓட்டுனர் : குந்து சார், முப்பது ரூவா குடு சார்!

  24. ஆட்டோ டிரைவர்கள் கேட்கும் கட்டணம் அதிகம் என்று ஒருவர் கருத்து வைத்திருப்பது தவறில்லை, அதே நேரத்தில் இது பேரம் பேச வாய்ப்புள்ள ஒரு வியாபாரம், விலை கட்டுப்படி ஆகவில்லை என்றால் வேறு வண்டியை பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதே?

    சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் 5ரூபாய் 10ரூபாய் விலையில் பஸ் சர்வீசை விட சிறப்பாக செயல்படுகிறதே? அதுவும் ஆட்டோ தானே?

    எனக்கு தெரிந்து சென்னையில்

    ஷேர் ஆட்டோ, கால்டாக்சி எண்ணிக்கை உயர உயர ஆட்டோவுக்கு கிடைக்கும் சவாரி குறைந்து போனது, அதன் விளைவாகவும்.

    ஆட்டோ மற்றும் கார் ஓட்ட நூற்றுக்கணக்கில் வேலைவாய்ப்பற்ற மற்ற மாவட்டங்களை சேர்ந்த புதியவர்கள் வருவதால் ஏற்பட்ட போட்டியின் விளைவாகவும்

    கடந்த சில ஆஃண்டுகளில் விண்ணை முட்டிய அத்தியாவசிய தேவைகளின் (கல்வி-வீடு-உணவு-குடிநீர்) விலைவாசி உயர்வின் காரணமாகவும்,

    2வீலர், 4வீலர் என்று தனிநபர் பயன்பாட்டு வண்டிகள் உயர்ந்ததன் காரணமாகவும்.

    பெட்ரோலின் பன்மடங்கு விலையேற்றமும் (காஸ் வண்டிகள் இன்னமும் சிறுபான்மைதான், அதுவும் கூட விலை அதிகமே)

    வாகன பழுதுபார்த்தல் உள்ளிட்ட உப தொழில்கள் அனைத்திலும் உள்ள விலையேற்றம் காரணமாகவும்

    உலகெங்கிலும் இருப்பவர் இல்லாதவர் இடையே பிளவு வெகு அதிகமாக வளர்ந்து ஒரு பக்கம் அற்பமான விசயங்களுக்கு கணிசமான பணம் விரயம் செய்யப்படுவதும் (உதாரணம் ஜீன்சு பேண்டு 1500 ரூபாய்) மறுபக்கம் சாதாராண உழைக்கும் மக்கள் டீகுடிக்க கூட 10 ரூபாய் செலவு செய்யும் நிலையும், அதன் காரணமாக ஊதாரிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பும்,

    முரண்பட்டு விவாதிக்க முடியாத, மக்கள் மொழி தெரியாத, சாதாரண மக்களுடன் பழகவே தெரியாத, பேரம் பேசத்தெரியாத கேட்பதை கொடுத்து பழகிப்போன புதிய தலைமுறையின் அதள பாதாளத்தில் இருக்கும் சமூக அறிவும்,

    இது தவிர நுகர்வு கலாச்சாரம் அனைத்து மக்கள் மீது செலுத்தியிருக்கும் உழைப்பை சுமையாக கருத்தி நுகர்வை இன்பமாக கருதும் போக்கு உழைக்கும் மக்களின் மீதும் தாக்கம் செலுத்தியிருக்கிறது … இதுவும் இதற்கு மேலும் பல காரணங்கள் ஆட்டோக்களின் கூடுதலானது என்று சொல்லப்படும் கட்டணத்துக்கு காரணமாக அமைகிறது.

    ஏன் மற்ற மாநிலங்களில் இதெல்லாம் இல்லையா என்ற விவாதம் பொருளற்றது. ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு வகையில்தான் செய்யப்படும். ஒரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்குள்ளேயே இந்த வித்தியாசங்கள் இருக்கும் போது வெவ்வேறு மாநிலங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்

    ஆட்டோ என்பது இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு சலுகையான உல்லாச சவாரிதான். பஸ்ஸுக்கு காசில்லாமல் நடந்தே போகும் மக்கள் நம் நாட்டில் அதிகம் என்பதை வறுமைக்கோடு உணர்த்துகிறது… தினமும் பிதுங்கி வழியும் பேருந்துகளும், மின்சார இரயில்களும், ஷேர் ஆட்டோக்களும் நகரங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பயணம் செய்ய வாய்ப்பிருக்கும் நடுத்தர வர்க்கம் ஆட்டோகாரர்களை மட்டும் மட்டமாக பேசுவது தவறு மட்டுமல்ல, மாசி குறிப்பிட்டதைப்போல தனக்கு கீழே உள்ள மக்களை மட்டமாக நினைப்பதுவும் ஆகும்

    • இப்படி நியாயத்தைக் கேட்டால் கம்யூனிசம் பேசுகிறீர்களோ எனக் கொக்கரிக்கிறார்கள்! என்ன செய்வது!!

    • நண்பர் சவாரி,

      உங்களது அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறேன் ,சிலவற்றை தவிர.

      //ஏன் மற்ற மாநிலங்களில் இதெல்லாம் இல்லையா என்ற விவாதம் பொருளற்றது. ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு வகையில்தான் செய்யப்படும். ஒரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்குள்ளேயே இந்த வித்தியாசங்கள் இருக்கும் போது வெவ்வேறு மாநிலங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்//
      நகரங்களை பொருத்தமட்டில் ,இந்தியாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் மீட்டர் முறை பின்பற்றபடுகிறது, சென்னையை தவிர. நீங்கள் சொல்வது போல தொழில் வேறுபாடாக இருப்பின் ஏன் ஒவ்வொரு ஆட்டோவிலும் மீட்டர் பொருத்தப்படுகிறது.

      //தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பயணம் செய்ய வாய்ப்பிருக்கும் நடுத்தர வர்க்கம் ஆட்டோகாரர்களை மட்டும் மட்டமாக பேசுவது தவறு மட்டுமல்ல, மாசி குறிப்பிட்டதைப்போல தனக்கு கீழே உள்ள மக்களை மட்டமாக நினைப்பதுவும் ஆகும்//

      காசு இருக்கு என்பதற்காக அதிகபடியான விலைக்கு செல்லமுடியுமா? ஒவ்வொரு பொருளுக்கும் , சேவைக்கும் என்று ஒரு நியாயமான விலை இருக்கிறது அல்லவா. அது மீறப்படும் போது, அதை எவ்வாறு ஏற்று கொள்ளமுடியும். தனக்கு கீழே உள்ள மக்களை மட்டமாக நினைக்கும் பழக்கம் என்பதை இங்கு முடிச்சு போடுவது தவறு.

  25. தம்பி சிவக்குமார் ஆட்டோவில் போகும்போது அரை கிலோ மீட்டரக்கு ஆயிரம் ரூவா கொடுப்பாராக்கும்..

    //இதையே white colour வேலை பார்க்கும் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். //
    white colour உடை அணிபவர்கள் அனைவரும் white collar வேலை பார்ப்பதில்லை… போக்குவரத்து கான்ஸ்டபில் என்ன white collar வேலை பார்க்கிறாரா?

    //‘சாப்பாட்டு செலவு மாதம் 5,000 ரூபாய்தான் ஆகுது (அதை வச்சுதானே வேலை செய்ய எனர்ஜி கிடைக்குது), ஆனாலும் மாசா மாசம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கி கொள்ளை அடிக்கிறானுங்க இவங்க’ என்று கணக்கு பார்த்தா சம்பளம் கொடுக்குறாங்க?//

    என்னமோ தனது பட்டன் முப்பாட்டன் வீட்டு சொத்தை கொள்ளையடிப்பதை போல சிலாகிக்கிறாரே… இது மென்பொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணி, அயல் நாட்டு வருவாய். …

    உங்க லாஜிக் வைச்சு பார்த்தால், நாட்டின் பிரதமர் முதல் கலெக்டர், மருத்துவர், ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் 5000 ரூபாய்கள் சம்பளம் தான் கொடுக்கணும் போலிருக்கிறது…

    //நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள். ’8 மணி நேர வேலைக்கு ஒருவருக்கு 350 ரூபாய், இன்னொருவருக்கு 3000 ரூபாய் என்பது என்ன அடிப்படையில்? 10 மடங்கு அதிக திறமை என்பதாலா?’. இதற்கு லாஜிக்கலாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.//

    8 மணி நேரம் பிச்சையெடுத்தும் 18 ரூபாய்தான் கிடைக்குதுன்னு புலம்பாம இருந்தீரே…

    ஆட்டோ ஓட்டுபவன் செய்வது சுய தொழில், அவன் அந்த தொழில் செய்ய யாரும் நிர்பந்திக்கவில்லை… சுய தொழிலில் அவன் அடைவது இலாபம்.. ஊதியம் அல்ல… மாற்று திறனாளியல்லாத யார் வேண்டுமானாலும் (சிவக்குமார் உட்பட) ஆட்டோ ஓட்டலாம்..

    IT ஊழியன் பெறுவது ஊதியம்.. IT ஊழியம் செய்ய அடிப்படை தகுதிகள் தொழில் கல்வி, நேர்முக தேர்வு, அனுபவ அறிவு, தனித்திறமை, ஆளுமை பண்பு, மொழி வளம், கருத்தியல், முடிவெடுக்கும் திறமை, 24 மணி நேர உழைக்கும் தன்மை, இக்கட்டான சூழ்நிலையில் சீரான இயக்கம், வாடிக்கையாளர் நூறு சதவீத திருப்தி, சக ஊழியர் கூட்டு திறனாக்கம், நிறுவனத்துக்கு நேர்மையான ஊழியம், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு நடத்தல், குறைந்த பட்சம் 8 மணி நேர அலுவலக இயக்கம், நூற்றுக்கணக்கான கோப்பு பராமரிப்பு, குறைந்த ஓய்வு நிறைந்த உழைப்பு, குறித்த பணியை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது, விழாக்காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் கூட ஓய்வில்லா உழைப்பு என அடுக்கி கொண்டே செல்லலாம்…

    நாட்டின் பேரு நகரங்களில் வசிக்கும் IT துறை ஊழியன் அந்நிய செலவாணி மூலம் பெரும் ஊதியத்தை அதிகம் அதிகம் என பொறாமையோடு பொருமும் உங்களுக்கு, நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் வி எ ஒ க்களும், ஆசிரியர்களும், பி டி ஒ க்களும் பெரும் 30 ,40 ஆயிர சம்பளங்களையும் , 50 ,60 ஆயிர கிம்பளங்களையும், மேலதிக அரசு சலுகைகளையும் கண்டிக்க துப்பில்லையே ஏன்?

    • மனிதன்,

      இது போன்ற அதிகப்படியான சம்பளங்களை சுழற்சிக்கு விடத்தான் சந்தையில் விலைவாசியும் உயருகிறது. நுகர்வு வெறியும் தூண்டப்படுகிறது. இத்தகைய விலைவாசி உயர்வுதான் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களையும், சமூகத்தின் ஒழுக்கத்தையும் பாதிக்கிறது.
      ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தம்படும்போதும் ஆட்டோத் தொழிலாளர்கள்தான் அடையாளப் போராட்டம் நடத்துகிறார்கள். IT துறை ஊழியர்களும் அவர்களுடன் இணைந்து போராட முன்வரலாமே.

    • மாசி பாவம் பாஸ் ,

      நீங்க கேட்க வேண்டியது 10 ரூபாய் அதிகம் கேட்கும் ஆட்டோகாரரின் செயலை நியாயப்படுத்தும் வினவு அவர்கள் எதற்காக நியாயப்படுத்திகிறார் ?என்பதே
      ஆனா எல்லாரும் ஆட்டோ காரர்களா – ஐடி காரர்களா – என பேசிட்டு இருக்கீங்க

      • வினவை எவனாச்சும் திட்டமாட்டானான்னு அலைய வேண்டியது, அப்படி எவனும் திட்டலேன்னா, அவன் கம்யூனிச விரோதியா இருந்தாலும் , திட்டுங்க பிளீஸ் வினவை திட்டுங்கன்னு கெஞ்ச வேண்டியது.. நல்ல பிழைப்பு 🙂

    • @manithan,
      //IT ஊழியன் பெறுவது ஊதியம்.. IT ஊழியம் செய்ய அடிப்படை தகுதிகள் தொழில் கல்வி, நேர்முக தேர்வு, அனுபவ அறிவு, தனித்திறமை, ஆளுமை பண்பு, மொழி வளம், கருத்தியல், முடிவெடுக்கும் திறமை, 24 மணி நேர உழைக்கும் தன்மை, இக்கட்டான சூழ்நிலையில் சீரான இயக்கம், வாடிக்கையாளர் நூறு சதவீத திருப்தி, சக ஊழியர் கூட்டு திறனாக்கம், நிறுவனத்துக்கு நேர்மையான ஊழியம், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு நடத்தல், குறைந்த பட்சம் 8 மணி நேர அலுவலக இயக்கம், நூற்றுக்கணக்கான கோப்பு பராமரிப்பு, குறைந்த ஓய்வு நிறைந்த உழைப்பு, குறித்த பணியை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது, விழாக்காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் கூட ஓய்வில்லா உழைப்பு என அடுக்கி கொண்டே செல்லலாம்…//

      பார்க்கப் போனால், இந்தப் பதிவில் ஐடி ஊழியர்களின் உழைப்பு, ஊதியத்தைப் பற்றி ஆட்டோக்காரர் எதுவுமே சொல்லவில்லை. பின்னூட்டங்களில்தான் ஐடி ஊழியர்கள் பற்றிய விவாதம் நடந்திருக்கிறது.

      பதிவின் முக்கிய பேசு பொருளாக எனக்குப் படுவது, ஆட்டோ ஓட்டுனர் தங்க நகை வாங்கி திரும்பிக் கொடுத்த போது சேட்டு 7,500 ரூபாய் சம்பாதித்து விட்டது குறித்த அவரது குமுறல். ‘ஒன்றரை மாதம் நான் ஆட்டோ ஓட்டி சம்பாதித்தை உக்காந்து கிட்டே அவரு சம்பாதித்து விட்டாரு’ என்ற அடிப்படை புரிதல்தான் இந்தப் பதிவின் மையம். (இவர் சண்டை போட்டிருக்கா விட்டால் 12,500 ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பார் அந்த நகைக் கடைக்காரர்).

      நமது தனிப்பட அனுபவங்களின் கசப்பில் இருப்பவர்கள், ஆட்டோக்காரர் என்றதுமே அவற்றைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்.

  26. நோவாம பீஸாக்கும், கலர்பிளஸ் சட்டைக்கும், செல்போனுக்கும் தூக்கிக் கொடுக்குறானுங்க ஆட்டோக்காரன் கேட்டா அநியாயம்றானுங்க! என்னா உலகமப்பா இது.

    • பெங்களூரு, சென்னையில் வேலைசெய்யும் IT ஊழியர்கள் சனி ஞாயிறன்று பாண்டிச்சேரியில் அடிக்கும் லூட்டிகள் எழுத்தில் எழுதமுடியாதது. இவனுகளுக்கென்றே பாண்டிச்சேரி இப்போது பிராத்தல் (இதுதான் சுற்றுலா வளர்ச்சியாம்)நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. சிறு கடைகள் இருந்த இடங்களெல்லாம் ஸ்டார் ஹோட்டல்களாக மாறிக்கொண்டிருக்கிறது. பாண்டியிலிருந்து பெங்களூருக்கு அரசு பஸ்சில் 125 ரூபாய். சர்மா டிராவல்சில் 500 ரூபாய். சர்மாவ கேள்வி கேட்காத மண்டை உழைப்பாளர்கள் ஆட்டோக்காரர்களிடம் வரிந்துகட்டி நிற்பது ஏன்?

      • மாயாண்டி அண்ணே.. சும்மா ஸ்லீப்பிங்க ஸ்டேட்மெண்டா அடிச்சி விடாதிங்க.. உலகமே உங்களை மாதிரி யோக்கிய சிகாமணிகளால் நிரம்பி வழியுற மாதிரியும்.. ITல வேலை செய்யுறவனுங்க எல்லாம் அயோக்கியனுங்க மாதிரியும் சீன் போடுறீங்க.. எந்த துறையில வேலை செய்யுறீங்க நீங்க? அதுல நீங்க மேல சொல்லுற மாதிரி இருக்குற மக்களை காட்ட எனக்கு எவ்வுளவு நேரம் ஆவும்…

        //நோவாம பீஸாக்கும், கலர்பிளஸ் சட்டைக்கும், செல்போனுக்கும் தூக்கிக் கொடுக்குறானுங்க ஆட்டோக்காரன் கேட்டா அநியாயம்றானுங்க! என்னா உலகமப்பா இது.//
        ஆமா இவர் மாச மாசம் சம்பளம் வாங்கிய உடனே அதை இல்லாதவங்களுக்கு தானம் செய்த்டுட்டு தான் மறுவேலை பாப்பாரு..

        • அண்ணே சந்தோசு,

          // உலகமே உங்களை மாதிரி யோக்கிய சிகாமணிகளால் நிரம்பி வழியுற மாதிரியும்.. ITல வேலை செய்யுறவனுங்க எல்லாம் அயோக்கியனுங்க மாதிரியும் சீன் போடுறீங்க//

          நீங்கதான் ஆட்டோக்காரன்னாலே அயோக்கியர்கள் மாதிரி எழுதுனீங்க.

          //நோவாம பீஸாக்கும், கலர்பிளஸ் சட்டைக்கும், செல்போனுக்கும் தூக்கிக் கொடுக்குறானுங்க ஆட்டோக்காரன் கேட்டா அநியாயம்றானுங்க! என்னா உலகமப்பா இது.// இதுக்கு பதில் சொல்லு.

          • //நீங்கதான் ஆட்டோக்காரன்னாலே அயோக்கியர்கள் மாதிரி எழுதுனீங்க. //
            ஒ நீங்க அப்ப வரீங்க.. ரைட்டு விடுங்க.. உங்க கிட்ட பேசி பயன் இல்ல..

            //நோவாம பீஸாக்கும், கலர்பிளஸ் சட்டைக்கும், செல்போனுக்கும் தூக்கிக் கொடுக்குறானுங்க ஆட்டோக்காரன் கேட்டா அநியாயம்றானுங்க! என்னா உலகமப்பா இது.//

            அதுக்கு அவ்ளோ வொர்த்து இருக்கு குடுக்குறோம்.. என்னோட பணத்தை நான் எங்க எப்படி செலவு செய்யணுமுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.. பெங்களூருல ஆட்டோவுல போக தயங்காத மக்கள் சென்னையில ஏன் தயங்குறாங்கன்னு யோசிக்கணும்.. நமக்கு உண்டியல் வசூல் பாக்கவே நேரம் சரியா இருக்கு.. ரைட்டு விடுங்க உங்க கிட்ட பேசி பயன் இல்ல.. உண்மை நிலவரம் என்னான்னு எல்லாருக்கும் தெரியும்..

            இப்படியே ஆட்டம் போட்டுட்டு இருந்தா இன்னமும் 5-6 வருஷங்களில் ஆட்டோ என்ற ஒரு வாகனவே சென்னையில இல்லாம போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

            முன்னாடியெல்லாம் வினவுல விவாதம் பண்ணவே முடியாது.. ஒண்ணு புரியுற மாதிரி பேச மாட்டாங்க.. அதை பத்தி பேசினா இதை பத்தி பேசுவாங்க இதை பத்தி பேசுனா அதை பத்தி பேசுவாங்க.. சரி நிலைமை மாறி இருக்குமுன்னு நினைச்சேன் சுத்தமா மாறவில்லை. பொதுமக்கள் ஏன் உங்களை கண்டுகளைன்னு இப்பவாச்சும் புரிந்தா சரி..

            • //முன்னாடியெல்லாம் வினவுல விவாதம் பண்ணவே முடியாது.. ஒண்ணு புரியுற மாதிரி பேச மாட்டாங்க.. அதை பத்தி பேசினா இதை பத்தி பேசுவாங்க இதை பத்தி பேசுனா அதை பத்தி பேசுவாங்க.. சரி நிலைமை மாறி இருக்குமுன்னு நினைச்சேன் சுத்தமா மாறவில்லை. பொதுமக்கள் ஏன் உங்களை கண்டுகளைன்னு இப்பவாச்சும் புரிந்தா சரி..//

              இந்த விசயத்தை நான் மறுக்கிறேன் அவங்க புரிஞ்சிதான் தன்னோட நட்பு சக்திக்காக பேசுறாங்க நீங்கதான் புரிஞ்சிக்கலை

              வித்தியாசம் இதான் நீங்க புரிஞ்சிக்காம எதுக்குன்னு கேட்கிறீங்க

              நான் புரிஞ்சிட்டு அவங்கெல்லாம் புரட்சி நெருங்காத இப்போ நட்பு சக்தி இல்லைன்னு சொல்றேன்

              • //// அவங்கெல்லாம் புரட்சி நெருங்காத இப்போ நட்பு சக்தி இல்லைன்னு சொல்றேன்
                /////

                அதாவது இந்த தத்துவபிராணி என்ன சொல்றாருன்னா… புரட்சிக்கு முன்னால அதாவது இப்போ ஆட்டோ காரங்க எதிரியாம், ஆனா புரட்சி நெருங்கி தொருக்கோடி வரைக்கும் வந்திடிச்சின்னா ஆட்டோகாரன் நண்பனாம்…

                அயோ அயோ அயோ அயோ அயோ உடம்புல உள்ள எல்லா வாசல் வழியா சிரிச்சாலும் கூட சிரிச்சு மாளலடா சாமீயோவ்வ்வ்வ்வ்!!!!

            • வலுத்தவன் மட்டுமே வாழ முடிகிற இந்த உலகத்தில் ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்வோர் வாழவே இயலாது. அதாவது அவரது வாழ்க்கைத்தரம் ஒருபோதும் மாறாது. அதேபோல் நல்லவன் கெட்டவன் என்ற சொற்பதங்களுக்கெல்லாம் இந்த மானிட உலகத்தில் அர்த்தம் கிடையாது. அவரவர்க்கு என்ன தேவையோ அவற்றை வேட்டையாடி எடுத்துக் கொள்வர். எதிர்காலத்தில் உடல் உழைப்பிலான பாட்டாளிகளே இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அதாவது இன்றைய தலைமுறை பாட்டாளிகளின் பிள்ளைகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்து அதற்கேற்றாற்போல் வேலைகளுக்குச் சென்று விடுவர். இன்னும் ஏழெட்டு வருடங்களில் மாதம் ஒரு லட்சம் வருமானமாவது இருந்தால்தான் சராசரியாக வாழ்க்கை நடத்த முடியும் என்னும் நிலை ஏற்படும். மனிதனின் அபாயகரமான நுகர்வுவெறிக்கு சவுக்கடி விழும். எல்லோரது மனநிலையும் உச்சபட்ச அதிர்வுக்கு ஆட்படும். தயாராய் இருங்கள்.

            • ரைட்டு விடுங்க சந்தோசு. ஒரு பீஸாக்கு இருக்குற ஒர்த்து ஒரு மனித உழைப்பிற்க்கு இல்லைன்னு சொல்லுற உங்களோட பேசுவது வீண்தான்.

  27. boss,sharma bus nalla irukku,sugama irukku.bangalore poga 500 roova normal thaan,t nagar lirunthu lloyds road poga 100 roova ketta,yaarukku thaan kovam varadhaan.

  28. மக இக:ஆட்டோ காரரெல்லாம் பாவங்க ஒரு ஆட்டோவை வச்சிகிட்டு அவனும் வேலை பார்க்கிறான் அவன்கிட்ட போய் 10 ரூபாய் அதிகமா கேட்டதுக்கு வம்பு பண்றீங்க

    ஆட்டோ பயணி:யோவ் அப்போ நாங்க யாருகிட்டய்யா இதெல்லாம் கேட்கிறது

    மக இக:அரசாங்கத்த கேட்கனும் ,வட்டிகட சேட்ட கேட்கனும் நீங்க (சரவணா ஸ்டோரெல்லாம் மறந்தும் கேட்டுட கூடாது)

    ஆட்டோ பயணி:ஆனா அவங்கெல்லாம் எங்களை ஆட்டோவில கூட்டிட்டு போவலையே

    மக இக:அதுக்கு என்னங்க செய்றது ஆட்டோ காரர போய் ஏண்டா அதிகம் கேட்கிறன்னு கேட்டீங்கன்னா அவன் தொழிலை விட்டுடுவான்

    ஆட்டோ பயணி:யோவ் அவன் விட்டா உனக்கென்னா

    மக இக:இல்லை பாஸ் நான் உனக்காக பேசுறேன் உனக்கு ஆட்டோ இல்லாம எப்படி போவ நீயு

    ஆட்டோ பயணி:இப்ப ஆட்டோவில வந்த லட்ணம்தான் பார்த்தமே

    மக இக:முதல்ல நீ என்ன வேலை பார்க்கிற அதை சொல்லு

    ஆட்டோ பயணி: யோவ் நான் ஒரு கம்பெனில கூலிவேலை பார்க்கிறேன்

    மக இக:நீ அப்படி பார்க்கிற அதுக்கு ஆட்டோகாரர் என்ன செய்வாரு அவரு வட்டி கட்டனும் எப்சி போடனும் பிள்ளைகளை காண்வெண்டில் படிக்க வைக்கனும்

    ஆட்டோ பயணி: யோவ் எனக்கு இதெல்லாம் இல்லையா

    மக இக: இருக்கும் அதுக்கு காரணம் இவரில்லை
    அதுக்கு காரணம் தனியார் மயம் தாராளமயம் உலகமயம் -அமெரிக்கா சதி

    ஆட்டோ பயணி:இத பார் விசயத்தை தெளிவா சொல்லு

    மக இக:பாஸ் நீ இதை புரிஞ்சிக்கனும்னா புஜாவை திருப்பி திருப்பி படி அதில நாங்க எத்தனை பேரை குழப்பிருக்கோம்னு தெரியும்

    யோவ் அதெல்லாம் விடு அதிக வாடகைக்கு என்ன சொல்ற

    எஸ்கே ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  29. ஜெண்டில் மேன் இதோ பாருங்கள்

    கமிசன் மண்டிக்கும் சரவணா ஸ்டோருக்கும் எப்படி எல்லாம் வக்காலத்து வாங்குறாங்கன்னு

    ————————
    https://www.vinavu.com/2010/04/08/angadi-theru/

    அண்ணாச்சிகளை காப்பாற்ற துடிக்கும் துடிப்பை பாருங்கள்

    //அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.//

    ஏன் அப்படி சுரண்டுகிறார்கள் என்பதற்கு பல்வேறு சமூக காரணி என்கிற பூச்சாண்டி வேறு

    // பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.
    //

    • செத்தாட்டு மூளை என்று சொன்னது கூட தப்போ? ஆட்டுப்புழுக்கையால் அமைந்த மூளை கூட இதை வக்காலத்து என்று புரிந்து கொள்ள முடியாது…

      ஆனால் தியாகு எந்த பதிவில் போலி பெயரில் வந்து வினவிடம் வசமாக மாட்டிக்கொண்டு செருப்படி பட்டாரோ அதே பதிவின் சுட்டி கொடுத்திருப்பது அருமை…. ஜனங்களே அந்த சுட்டியில் அண்ணனின் வாதத்தை பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள்

  30. //கடைசியில இவரு இப்படி ஆயிட்டாரே…

    // அடிக்க அடிக்க தியாகுவோட உண்மையான கலரு வெளுக்குது… 🙂 தோழர்களை இன்னும் அடிங்க. முழுசா வெளுக்கட்டும்.

    • பாட்டாளி வர்க்க அணிசேர்க்கைக்கு இண்டர்வியூ நடக்குமிடம்

      ஆட்டோ காரர்: அண்ணே என்னையும் சேர்த்துகங்க

      மக இக : ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கிற

      ஆட்டோ காரர்: ரொம்பமில்லை 1000 ரூபாய்ங்க

      மக இக : உள்ள போ நீ நம்ம சக்தி

      மளிகை கடைக்காரர்: அண்ணே என்னையும் சேர்த்துகங்க

      மக இக :ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கிற

      மளிகை கடைக்காரர்:ரொம்பமில்லை 1500 ரூபாய்ங்க

      மக இக : உள்ள போ நீ நேச சக்தி

      உரம்விக்கிறவர்: அண்ணே என்னையும் சேர்த்துகங்க

      மக இக :ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கிற

      மளிகை கடைக்காரர்:ரொம்பமில்லை 5000 ரூபாய்ங்க

      மக இக : உள்ள போ நீ நேச சக்தி

      கூலிக்காரன் : யோவ் உனக்கு அறிவிருக்கா ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிற என்ன்னோட நேச சக்தியா இவனுகெல்லாம்

      மக இக : உனக்கு ஒன்னும் தெரியாது கம்முன்னு கெட மாவோ சொல்லி இருக்காரு இவங்களை புரட்சில சேர்த்துகனும்னு

      கூலிக்காரன் : எதாவது கண்டிசனோட சேர்த்துக்க சொன்னாரா இல்லையா

      மக இக : இதபார் அதெல்லாம் தத்துவ விசயம் நீ பேசாம உக்கார்ரதினா உக்காரு இல்லாங்காட்டி கெட்டவுட்டு நீ துரோகி ஓடுகாலின்னு விரட்டி விட நெம்ப நேரம் ஆகாது

      கூலிக்காரன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      பாருங்க மகாஜனங்களே இவங்க கம்யூனிஸ்டாம் மார்க்ஸ் ஆவிய எழுப்பி கேட்டாலும் ஒத்துகாது

      • //பாட்டாளி வர்க்க அணிசேர்க்கைக்கு இண்டர்வியூ நடக்குமிடம்//

        தியாகு, புரட்சியை இதை விடவும் வேறு யாராலும் கொச்சைப் படுத்த முடியாது. மெய்யாலுமே நீரு கம்யூனிஸ்டுதான்.

        • //புரட்சியை இதை விடவும் வேறு யாராலும் கொச்சைப் படுத்த முடியாது. மெய்யாலுமே நீரு கம்யூனிஸ்டுதான்.//

          மாயாண்டி புரட்சிக்கும் உங்களமாதிரி குட்டி முதலாளிகளின் சுரண்டலை நியாயப்படுத்திரவர்களுக்கும் சம்பந்தம் இல்லை அதான்

      • தியாகு இதை சொல்லவேண்டிய இடம் சி.பி.ஐ சி.பி.எம் கட்சிகளிடம்.ஒரு ஆட்டோகாரரின் அனுபவம் மூலமாக என்ன உணர்த்த முற்படுகிறார்கள் என்பதை புரிந்து ஏன் வேண்டுமென்றே குழப்புகிறீர்.புரியவில்லையா விளக்கம் கேளுங்க.அதை விட்டு நக்கல் கேலி கிண்டல் செய்து அசிங்கபடாதீங்க புரியுதா

        • /புரியவில்லையா விளக்கம் கேளுங்க.அதை விட்டு நக்கல் கேலி கிண்டல் செய்து அசிங்கபடாதீங்க புரியுதா//

          பாஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா

  31. நடுத்தர வர்க்கத்தினரிடையேயான அதீத பணப்பெருக்கம் மூலதனமாக மாறும்பட்சத்தில் மிகைப்படுத்தபட்ட மதிப்பாக அந்த மூலதனம் தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும். அப்படிப் பெருக்கும்போது உழைப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு அவர்களுக்கு ரொட்டுத் துண்டை மட்டும் போடும். இதற்கெல்லாம் தீர்வே கிடையாது. முறையற்ற, கட்டற்ற பணப்பங்கீட்டின் அளவு மாறுபாடுகள் சமுதாயத்தில் வெகு குழப்பநிலையை ஏற்படுத்தும். “நல்ல” எனும் பதம் எதிர்காலத்தில் பயன்பாட்டிலேயே இருக்காது. காலம் இதை வெகு சீக்கிரம் கொண்டுவரும். இயற்கையை மனிதர்கள் முறைகேடாக உபயோகிப்பதனாலும், அளவு கடந்த அளவில் ஓரிடத்தில் மட்டும் போய்த் தேங்குவதாலும் சமநிலை மாற்றம் ஏற்படும். முதலாளித்துவம், சோசலிசம் என்ற கோட்பாடுகளையெல்லாம் உலக மக்கள் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும். அந்நேரம் உலகில் பெரும்பாலானோர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு மிகுதியாக இறப்பர். ஒரு புது யுகம் பிறக்கும். அதன்பின் மீண்டும் கால சுழற்சி நடைபெறும்.

  32. ஓர் ஆட்டோ ஓட்டுநர் தன் உழைப்புக்கு சரியான கூலி என தான் எண்ணும் தொகையை கேட்கிறார். அது நமக்கு சரியெனப் பட்டால் அவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதிகமெனப் பட்டால் வேறோர் ஆட்டோவைத் தேடவும் நமக்கு உரிமை உள்ளது. பிறகு ஏன் இந்த வெட்டி விவாதம்?

  33. அகமது நெம்ம கோபப்படுறீங்களே

    // அகமது சொன்னாரு என்கிற நெளிஞ்ச சொம்ப எடுத்துட்டு வற்ற… இப்பயும் ஒன்னும் கெட்டுப் போயிடல இன்னும் அதிகமா அசிங்கப்படுறதுக்கு முன்னாடியே ஒழுக்கமா ஓடிப் போயிரு.//

    நீங்க தொழிலாளி விவசாயியை சுரண்டுகிறான்னு சொல்லவில்லையா 🙂

    அசிங்கப்பட்டது நீங்க என்னைய சொல்வதுதான் காமெடி

    என்ன மிரட்டுறீங்களா பாஸ் இந்தமாதிரி ஒடுக்குமுறைய பல வருசமா பாத்திருக்கேன்

    சும்மா மிரட்டாதீங்க சார் பதில் சொல்லுங்க

    • தியாகு, இன்னும் பொறக்காத 4 நாள் கருவா இருக்கும் குழந்தைக்கு கூட அகமது சொல்லியிருப்பது புரியும்… உம்மோட ஓட்டை லாஜிக்கை பொருத்திப்பார்த்தா தொழிலாளி கூட விவாசாயியை சுரண்டுவது போலத்தான் வரும் என்ற அர்த்தத்தில் தான் அவர் எழுதினார். அவர் அதை பலமுறை விளக்கியும் விட்டார், ஆனால் வழக்கம் போல வால்மார்ட் ஆதரவு நிலைப்பாடு எடுத்த மூத்திர சந்தில் தெளியவச்சு தெளியவச்சு அடிச்சப்புறம் அடுத்த மூத்திர சந்துக்கு ஓடி அடிபடுவதிலேயே குறியா இருக்கீறே தவிர கொஞ்சமாச்சும் இப்படி அண்டாடாயர் லேபிள் மட்டுமே மீதியிருக்கும் அளவுக்கு நம்மளை பீராஞ்சிட்டாங்களே, இனிமேலாவது இப்படி உளருவதை நிருத்துவோம்னு தோணுதா.

  34. //தியாகு, இன்னும் பொறக்காத 4 நாள் கருவா இருக்கும் குழந்தைக்கு கூட அகமது சொல்லியிருப்பது புரியும்… உம்மோட ஓட்டை லாஜிக்கை பொருத்திப்பார்த்தா தொழிலாளி கூட விவாசாயியை சுரண்டுவது போலத்தான் வரும் என்ற அர்த்தத்தில் தான் அவர் எழுதினார்.//

    ஓ அடுத்து நீங்க வந்திட்டீங்களா முடியாது பாஸ் முடியாது அவரு தப்பிக்க பார்க்கிறாரு

    என்னோட லாஜிக்கு அதுன்னு பின்னாடி பிரண்டு பேசிட்டு ஓடிட்டாரு இப்ப மூத்திர சந்துக்குள்ள மாட்டிட்டு முழிக்கிறாரு பிராண்டுறாரு நீங்க அவர வெளிய இழுக்க முயற்சி செய்றீங்க விடுங்க சரி

    இருங்க அவரும் நானும் பேசினாத்தான் விசயம் தெளிவாகும்

    • நீங்க அவர வெளிய இழுக்க முயற்சி செய்றீங்க விடுங்க ///////

      அடக்கொடுமையே, நான் உம்மையல்லவா வெளியே இழுத்து போட முயற்சிக்கிறேன்… ஏன் இப்படி எதுவுமே ஏறாத ஒரு கூழாங்கல்லால் ஆண மூளையை கொண்டிருக்கிறீர்களோ புரியவில்லை.

      • /அடக்கொடுமையே, நான் உம்மையல்லவா வெளியே இழுத்து போட முயற்சிக்கிறேன்… ஏன் இப்படி எதுவுமே ஏறாத ஒரு கூழாங்கல்லால் ஆண மூளையை கொண்டிருக்கிறீர்களோ புரியவில்லை.//

        மூளையை எப்படி கூலாங்கல்லாம் செய்ய முடியும் அந்த கம்பெனி வச்சிருக்கீங்களா சார்

      • //அடக்கொடுமையே, நான் உம்மையல்லவா வெளியே இழுத்து போட முயற்சிக்கிறேன்… ஏன் இப்படி எதுவுமே ஏறாத ஒரு கூழாங்கல்லால் ஆண மூளையை கொண்டிருக்கிறீர்களோ//
        நீங்க ஏன் என்னை வெளிய இழுத்து போடனும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க