மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போலவும், மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் வெளியில் பேசுகிறார்கள் என்று தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் சந்திர குமார் நேற்று (1.2.2012) சட்டசபையில் பேசினார்.
கொஞ்சம் மேலோட்டமாக பாருங்கள், இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க நேரடியாக வைக்கவில்லை! வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்பதன் மூலம் இதை புரட்சித்தலைவியின் மனம் கோணாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தே.மு.தி.கவின் உறுப்பினர்கள் அம்மா பயத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஏற்கனவே இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை, புவியியலும் தெரியவில்லை என்று அம்மா ஏகப்பட்ட டோஸ் கொடுத்திருக்கிறார்.
இப்போதும் அப்படித்தான். மின் கட்டண உயர்வை நிர்ணயிப்பது அரசு கிடையாது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் நிர்ணயிக்கிறது, கருத்து கேட்பதும் கூட அவர்களது விதிமுறையின் கீழ்தான் நடக்கிறது, தான்தோன்றித்தனமாக கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கவில்லை, இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பேசுவது உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது என்று ஜெயலலிதா சீறினார்.
அல்லிராணி அவையில் வெளியே சில ஆட்டுக்குட்டிகள் பசியில் கத்துகின்றன என்று பேசுவதை உள்ளே ஒரு அடிமை முணுமுணுத்தது கூட அல்லிராணிக்கு அலர்ஜி என்பதுதான் விசயம். இப்படித்தான் புரட்சிக் கலைஞருக்கும், புரட்சித் தலைவிக்கும் உள்ளே ஆவேச வாதங்கள் துவங்கின.
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பேயே அமல்படுத்தவில்லையே ஏன் என்று தே.மு.தி.க அப்பாவிகள் அடுத்த கேள்வியை கேட்டதால் சினமடைந்த ஜெ இதெல்லாம் ஏனென்று மக்களிடம் விளக்கிவிட்டேன், நீ யார் கேட்பதற்கு என்று சீறினார். கூடவே இதை சவால் விட்டுப் பேசும் அக்கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி போட்டியிட தில் உள்ளதா என்று சவால் விட்டார். அதாவது மேற்கண்ட கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் தேர்தலில் கூட நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது ஜெவின் சவால்.
உண்மையில் இது சவால் இல்லை வெறும் போங்காட்டம் என்பது அதிர்ஷ்டவசமாக கேப்டனுக்கும் பட்டிருப்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியம்தான். அவரும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதும், அது போன்ற அதிகார பலத்தால் நீங்களும் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவீர்கள் என்பது தனக்குத் தெரியுமென்று பேச இரு தரப்பு அடிமைகளும் ஆவேசமாக சண்டை போட்டனர்.
விஜயகாந்த் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டாரென ஜெ பேச, பென்னகரத்தில் நீங்கள் டெபாசிட் கூட வாங்கவில்லையே என்று பதிலுக்கு விஜயகாந்த் பேச சண்டை வலுத்திருக்கிறது. பின்னர் அ.தி.மு.கவினர் கையை காட்டி பேசியதாக கேப்டன் சீற அவரது கட்சியினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தே.மு.தி.கவினரின் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். உண்மையில் இவர்கள் அனைவரையும் சட்டசபை நடக்கும் காலம் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும், போனால் போகிறதென இத்தோடு முடித்திருக்கிறோம் என்று ஜெ உறுமியிருக்கிறார்.
இதன்பிறகு சட்டசபையில் தான் கூட்டணி வைத்தாலும், வைத்திருக்காவிட்டாலும் அ.தி.மு.க பெரு வெற்றி அடைந்திருக்குமெனவும், தன்னோடு கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.கவினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்டு கிடைத்திருக்கறது, தகுதியில்லாவர்களெல்லாம் பதவிக்கு வந்தால் என்ன ந்டக்குமென்பது தற்போது தெரியவந்திருக்கிறது, இவர்களோடு கூட்டணி வைக்க தான் விரும்பவில்லை, கட்சிக்காரர்களுக்காகத்தான் கூட்டணி வைத்தேன் என்றெல்லாம் ஜெ பொங்கியிருக்கிறார்.
இந்த இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த போதே இதைபற்றி எழுதியிருக்கிறோம். ஜெயலலிதாதான் விஜயகாந்த், விஜயகாந்துதான் ஜெயலலிதா என்பதால் இந்த இரண்டு குண்டு ஆளுமைகளும் சேர்ந்திருப்பது சாத்தியமே இல்லை என்பதையும் அப்போது எழுதினோம்.
தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று. கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை. தன்னைப் போன்ற கான்வென்டு எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.
எல்லாவற்றும் மேலாக தேர்தல் காலத்தின் போது அவர் கூட்டணி வைத்தது என்பது அவரது கூற்றுப்படி அவர் விரும்பிய ஒன்றல்ல. எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டுமென்ற பொதுக்கருத்தை அறுவடை செய்து கொள்ள வேறு வழியின்றித்தான் அவர் கூட்டணி வைத்தார். சோ போன்ற தரகர்களும் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தனர். அப்படியும் அந்த கூட்டணியை கேலிக்குள்ளாக்கும் வகையில் அவர் தனியாக வேட்பாளர்களை அறிவித்ததும், அப்போதும் கூட தே.மு.தி.க மற்றும் போலிக்கம்யூனிஸ்டுகள் வெட்கம், மானம், ரோஷமின்றி அம்மாவை கூல் செய்து கூட்டணியை தொடர்ந்ததும் வரலாறு.
இந்த நிலையில் ஈழப்பிரச்சினைக்காகத்தான் ஜெ வெற்றி பெற்றார் என்று நமது தமிழின ஆர்வலர்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அம்மாவின் கவனத்திற்கு போனால் அனைவருக்கும் குண்டாஸ் சட்டத்தில் உள்ள போவது உறுதி. ஏற்கனவே ஈழத்தாய் பட்டம் கொடுத்து அம்மாவை தொழுது வணங்கிய நாம் தமிழர் புலி சீமான் இப்போது ஆட்டுக்குட்டியாய் அடைந்து கிடைக்கிறார்.
ஜெ வெற்றி பெற்றதும் முற்றிலும் மாறிவிட்டார் என்று பார்ப்பன ஊடகங்களும், தி.மு.க எதிர்ப்பாளர்களும், போலிக் கம்யூனிஸ்டுகளும், தமிழின – ஈழ ஆர்வலர்களும் பிதற்றித் திரிந்தது அடி முட்டாள்தனம் என்பதை முன்னரே சொன்னபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
உள்ளாட்சித் தேர்தலின் போதே இதை ஜெ பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தினார் என்றாலும் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க, போலிக் கம்யூனிஸ்டுகள் எல்லாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி இவர்கள் அனைவரும் ஜெவை பயபக்தியோடுதான் அணுகினர் அல்லது விமரிசித்தனர். இன்று கூட இவர்கள் ஜெவே எதிர்ப்பதெல்லாம் அவர்களது சொந்தக் கருத்து, கட்சி காரணமாக இல்லை. அதுவும் கூட ஜெவே பிடித்து தள்ளியதால் வந்த முரண்பாடுதான். இதில் கொள்கை, மக்கள் நலன், என்று எதுவுமில்லை.
ஆனாலும் சில அப்பாவிகள் அடிமைகளான தே.மு.தி.கவின் எதிர்ப்பை வைத்து விஜயகாந்தை ஏதோ மாபெரும் புரட்சி வீரனாக சித்தரிப்பதைப்ப பார்த்தால் இதற்கு ஜெவே தேவலாம் என்று தோன்றுகிறது. ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமது மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது? கவுண்டமனி, வடிவேல், விவேக் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து சிரித்த மக்களின் தரம் இதுதான் என்றால் நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதி.
இதில் சசிகலா நீக்கத்தை வைத்து ஜெவின் அனைத்து பாவங்களையும் கழுவி புனிதப்படுத்திய பார்ப்பன ஊடகங்கள் இப்போது என்ன சொல்வார்கள்? மன்னார் குடி கும்பல் போய், மயிலாப்பூர் கும்பல் வந்த பிறகும் இதுதாண்டா ஜெ என்று அவர் காட்டிவிட்டதை குற்ற உணர்வுடன் ஒத்துக் கொள்வார்களா?
சுயமோகமும், பார்ப்பன விழுமியங்களும், அதிகார வர்க்கத்தை வைத்து பாசிச ஆட்சி நடத்தும் ஒரு சர்வாதிகாரிதான் ஜே என்பைதயும் இந்த பாசிஸ்ட்டை விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்தி ‘வீரர்கள்’ எதிர்க்க முடியாது என்பையும் இந்த அக்கப்போரிலிருந்து நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம். முல்லைப் பெரியாறு, கூடங்குளம் என்று மக்களின் ஜீவாதாரா பிரச்சினைகள் பேசப்படும் காலத்தில் இந்த அக்கப்போர்களெல்லாம் மாபெரும் பாரதப் போர் என்று அரசியலாக முன்வைக்கப்படும் துரதிர்ஷடமான காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மக்கள் நலனிலிருந்து மட்டுமே அரசியல் மலர முடியுமென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த எதிர்மறை சான்றும் ஒரு எடுத்துக்காட்டு.
மக்கள் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறிப்பாக கூடங்குளம், முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் முறையே இந்துமதவெறி பாசிஸ்டுகளும், ஆளும் வர்க்கமும் அம்பலமாகி இருப்பதால் ஜெயா இந்த நாடகத்தை அரங்கேற்றியது புலப்படுகிறது. ஆயிரம் இருந்தாலும் ஓட்டுப்போட்ட மக்களிடம் போய் அறுவடை செய்த ஓட்டை தனது கட்சிக்காகத்தான் கூட்டணிக்கு சம்மதித்தேன் என்ற கூற்றின் மூலம் அவமானப்படுத்தி உள்ளார் ஜெயா. போலி ஜனநாயகத்தை இவ்வளவு கேவலமாக ஒரு பாசிஸ்டே அம்பலப்படுத்திய பிறகும் மக்கள் கொதித்தெழவில்லை என்பது வருத்தமாக உள்ளது. முதலாளித்துவ ஜனநாயகம் சிறந்த ஒன்று என்று பேசுபவர்களுக்கும் வெட்கமாக இல்லை. மானங்கெட்ட மார்க்சிஸ்டுகளுக்கு யாரால் வெற்றி என்பதுதான் முக்கியமே தவிர ஓட்டுப் போட்ட மக்கள் அல்ல என்பதும் தெளிவானது. மொத்தத்தில் நேற்று நடந்த நாடகம்தான் 89 லும் நடந்தது.
பி.கு. எனக்கு ஒரு சந்தேகம். பார்ப்பன மேட்டிமைத்தனம்தான் ஜெயா தராதரம் பற்றி பேசியதற்கு காரணம் என்பது சரிதான். அதை மீறி தன்னைத் தவிர வேறு சாதியிலிருந்து திரைத்துறையினர் அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கிறாரோ என்பதுதான் எனது சந்தேகம். இதற்கு சீமான் கட்டாயம் பதில் அளிப்பார் என நம்புகிறேன். இன்று இயல் விருது பெற்றதற்காக எஸ்.ரா வுக்கு சென்னை காமராசர் அரங்கத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகிறார். அநேகமாக தகுதியற்ற தராதரமற்ற என்ற சொற்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசுவார் என எதிர்பார்க்கலாமா?
so a politician need not behave politely,decently and with dignity. she referred to his antics and trying to bite his tongue and he is a drunkard,doesn’t maintain a good demeanour and all these things are what makes tharaatharam and now u guys are twisting decent behaviour to be the property of some caste,when it is the requirement of one’s post.
how decent is ms jayalalithaa? was not mr thaamaraikani’s behaviour so crude?
/// முதலாளித்துவ ஜனநாயகம் சிறந்த ஒன்று ///
இதில் முதலாளித்துவ ஜனநாயகம் என்ன தப்பு செய்தது? சங்கரன் கோயிலில் ஜெ-யை எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டால் தோற்கடிக்கும் வாய்ப்பு உள்ளதே! இதே ‘போலி (?)’ ஜனநாயகம்தான் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது என்பதை மறக்கக்கூடாது.
சிறிய குறைகள் இருந்தாலும் கேப்பிடலிஸம் + டெமாக்ரஸியை விட சிறந்த முறை ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
நன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! ‘கேபிடலிஸம்’ – இதற்கு சரியான தமிழ்ப்பதம் ‘முதலியம்’ அல்லது ‘முதலீட்டியம்’ என்பவையே. முதலாளித்துவம் என்ற பிழையான, காலாவதியான மொழியாக்கத்தைத் தவிர்க்க.
(இன்னும் கொடுமை ‘முதலாளி’ என்பதையே ‘தரகு முதலாளி’ என்றே எப்போதும் எழுதுவது! ஆனாலும் விஷயத்தை திசைதிருப்ப விரும்பாததால் அதைப்பற்றிய விவாதம் இப்போது, இங்கு வேண்டாம். அதனால்தான் அடைப்புக்குறி.)
மற்றபடி ஜெ – தமிழ்நாட்டின் சாபக்கேடு. சு.சுவாமிக்கு இணையாக இந்தியாவின் மிக மோசமான அரசியல்வாதி.
நண்பர் சரவணன்,
இப்போ நம்ம சுப்ரமணி (அவர் பேரும் தமிழ் கிடையாது) டபால்னு வந்து உங்க கருத்துக்கு மிகச் சரியான எதிர்கருத்தா என்ன சொல்வாரு தெரியுமா? “சரவணன் என்ற பெயர் தமிழ் பெயர் கிடையாதே? முதலில் நீ உன் பெயரை தமிழுக்கு மாற்று” என்பார். இப்படிபட்ட ஒரு பொருத்தமான எதிர்கருத்தை அமோதிப்பது போல,நம்ம ‘மனிதன்’ வந்து “ஆமாம் சாமி. மாறிடு. இல்லை நாறிடுவ”ன்னு ஜால்ரா தட்டுவார். அதை கண்டும் காணாத மாதிரி விட்டுடணும். பதிலுக்கு நீங்க எதாவது எழுதுனீங்க,கடைசியில ரெண்டுபேரும் சேர்ந்து ஆளை அசரடிக்கிற மாதிரி கோரசா என்ன சொல்லுவாங்க தெரியுமா? “விவாதத்தை திசை திருபபாதீர்கள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்”… எப்பூடி?
பொன்ராசு வேற இடத்திலே கடையை விரிங்க… இந்த இடத்திலே எனக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை..
நீங்க கடை விரிச்ச எடம் எல்லாமே கருத்து ஒற்றுமை இருந்த இடம் தான் என்பது குறித்து எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை 🙂
நீங்க உபயோகபடுத்துற எள்ளு பல கிலோ மீட்டர் நீளம் இருக்கும் போல… 🙂
ponnarasu,
i am not trying to establish any purity of any form.my wife is punjabi and not even brahmin and the lifestyle we lead is very mixed of different cultures and we dont pay attention to stick anyone.i never said my name is tamizh or it has to be or it should have been.
you are the one who keeps talking of all these separatist tendencies and racial/cultural purity.so i feel u shud be ponnarasu and ponraj.
i find it funny that my casual comment hurt u so much that u keep on repeating it.gazetta mooditaangala enna,ponraaju pera maathi veyyi.
neenga vivaadhata thisai thiruppuna vera enna solla mudiyum?
நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதிதான்
தூள் சொர்னாக்கா மாதிரியே பேசுது இந்தம்மா! விஜயகாந் நாம் சட்டசபையில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல். ஏதே பேரரசு பட சூட்டிங்ள இருக்குற எபக்ட்ல பேசிருக்காரு.நல்லாத்தான் மக்கள் நலனுக்காக நானா? நீயா?ன்னு போட்டிப்போட்டு போராடியிருக்காங்க. ச்சூ…….ப்பர்.
நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதி.
இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்றே தெரியாமல் பலரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதில் உண்மை! நீங்கள் சொன்னதுபோல் இதை வெறும் நகைச்சுவைக் காட்சியாக மட்டுமே பார்க்க வேண்டும்! வாழ்க தமிழகம்!
இரண்டுமே அட்டைக்கத்திகள் தான். இதில் ஏன் புரட்சி என்ற வார்த்தையை சேர்க்கிறீர்கள். பிறகு புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இருவருக்கும் பெரிய அளவில் ஒற்றுமையும் இல்லை: பெரிய அளவில் வேற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர் அரை குறை ஆடையுடன் பல நடிகர்களுடன் ஆடிப்பாடியிருக்கிறார். அவர் அரை குறை ஆடை அணிந்த பல நடிகைகளுடன் ஆடிப் பாடிக்கொண்டிருக்கிறார். இவர் ஆங்கிலப் பள்ளியில் படித்தவர். அவர் ஆங்கிலம் என்பதை தமிழில் எழுதிப் படித்தவர். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய நாறிய மட்டைகள் தான்.
mr raja. bold and straight.
ஜெயின் தகுதிக்கு(?) முதல்வர் பதவி கிடைத்திருக்கும் போது, விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருப்பதில் என்ன குறைந்துவிடப்போகிறது. மக்களாகிய எங்களின் தகுதிதான் கீழே போய்க்கொண்டிருக்கிறது.
Well Said.
” அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது ” என்று சவால் விட்ட அழகிரி தனது முகத்தை இன்று எங்கு வைத்துகொண்டு இருக்கிறாரோ அதே இடத்தில் தான் ,ஒரு வேளை சங்கரன்கோவிலில் தோற்றால்,முதல்வர் அவர்களும் தனது முகத்தை வைத்துக்கொள்ள நேரிடும் . பெரிய பதவிகளில் இருப்போருக்கு நாவடக்கம் தேவை. முதல்வரே நீங்கள் வெற்றி போதையிலிருந்து இன்னமும் மீளவில்லை போலும் . கடந்த தேர்தல் அதிமுக கூட்டணி ஆதரவு அலை என்ற மாய பிம்பத்தை சில ஊடகங்கள் உருவாக்கின. ஆனால் உண்மையான விஷயம் என்ன வென்றால் அது திமுக கூட்டணி எதிர்ப்பு அலை. சிறப்பாக ஆட்சி செய்வார் என்ற மக்களின் நம்பிக்கையில் ஒரு சிறு கல் விழுந்திருக்கிறது . திமுக வை வீழ்த்த அதிமுக விற்கு தேமுதிகவும் , தேமுதிக விற்கு அதிமுக வும் தேவைப்பட்டது . இந்த உண்மையை தேமுதிக புரிந்து வைத்துள்ள அளவிற்கு அதிமுக புரிந்து வைக்கவில்லை .
எனினும் நீங்கள் ஜெயலலிதாவிற்கு ஆணவம் இன்னும் குறையவில்லை என்று கூறுவதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது . சில விஷயங்களில் அவர் பக்குவப்பட்டது போல தெரிகிறது .ஆனாலும் முழுமையாக பக்குவப்படவில்லை . ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும் கொஞ்சம் கண்டிப்பு இருந்தால்தான் சில விஷயங்கள் நமது நாட்டில் நடக்கும் . அவ்வகையில் தமிழகத்திற்கு கிடைத்த முதல் அரசியல்வாதி ஜெயலலிதாதான் .
//ஒரு வேளை சங்கரன்கோவிலில் தோற்றால்,முதல்வர் அவர்களும் தனது முகத்தை வைத்துக்கொள்ள நேரிடும்//
நீங்க ஜெயா’வை தப்பா புரிஞுசுகிட்டீங்க… சங்கரன்கோவில் இடை தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிட்டால், ஒன்று அது வெற்றி பெரும்வரை ‘இடைத் தேர்தல்’ திரும்ப திரும்ப நடக்கும்.. இல்லை என்றால் வெற்றி பெற்ற அந்த நபர் ‘அதிமுக’விற்கு ஐக்கியமாவார்…!!!
இதுதான் தேனி கூடலூர் நகராட்சியில் நடந்தது. வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியமானார் (அல்லது ஐக்கியமாக்கப்பட்டார்!!). இதுவே போலி ஜனநாயகத்தைப் பற்றிய சரவணனின் 1.2 பின்னூட்டத்திற்கான பதிலும்!
//கண்டிப்பு இருந்தால்தான் சில விஷயங்கள் நமது நாட்டில் நடக்கும் . அவ்வகையில் தமிழகத்திற்கு கிடைத்த முதல் அரசியல்வாதி ஜெயலலிதாதான் .//
கண்டிப்பு என்று சொல்வதை விட தான்தோன்றித்தனம் என்பது பொருத்தமாக இருக்கும். ‘நாங்கள்’ செய்கிறோம்.. ‘எங்கள்’ அரசு செய்தது – என்று அவர் எப்போதும் கூறுவதில்லை. நான் எனது என்ற அகங்கார ஆணவ வார்த்தைகள்தான் தெறித்துவிழும். குழுச்செயல்பாட்டில் இது சரியான அணுகுமுறை அல்ல.
வாழ்க தமிழகம்! :-))))))))))))
ராஜபக்ஷே கூட இந்த மாதிரி சொன்னாலும் சொல்லுவான்:
“நான் ஏன் தமிழர்களை போட்டு தள்ளினேன்னு மக்கள்கிட்ட(இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ஈரான்,இஸ்ரேல்) சொல்லிட்டேன். கூட்டமைப்புகெல்லாம் தனியா சொல்லிகிட்டு இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு ஓபன் சேலங்ஜ். இத்தனை லட்சம் பேரை கொன்னதுக்கு அப்புறமும், இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்களை தெருவில் அலையவிட்ட பிறகும்,பல ஆயிரம் முன்னாள் போராளிகளை சிறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்துகொண்டிருந்தாலும், நான் தில்லா சொல்றேன், ‘வன்னியில் வெற்றிலை சின்னம் தான் வெற்றிபெறும்’. இந்த சவாலை ஏற்றுகொள்ள கூட்டமைப்பு தயாரா?”. — நிற்க — ஜெயாவின் பேச்சுக்கும், ராஜபக்ஷேவின் பேச்சுக்கும் இடையே ஆறுவித்தியாசங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிப்போருக்கு ‘விஜய்ராஜுலு’ நடித்த ‘நாக்கு அவுட்’ படத்தின் டிக்கெட் இலவசம்…!!! 🙂
பொன்ராஜ்ன் வார்த்தைகள் எல்லாம் அவரின் பெயர் போல் பொன் வார்த்தைகள்.
நன்றி.
பொன்ராஜ் கருத்து மிக அருமை.
ஜெயலலிதாவுக்கு பார்ப்பன மேட்டிமை திமிர் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. ஓரு முறை பா.ஜ.கா வின் பிரமோத் மகாஜனை விமர்சிக்கும் போது “I can’t answer every Tom, Dick and Harry” என்று ஆணவமாக சொன்னார். இது அவரது சுபாவம்.
ஐயாவும் பத்து மாசம்
அம்மாவும் பத்து மாசம்.
பழம் தின்னுக் கொட்டை போட்ட
பழைய ஆளும் பத்து மாசம்.
காங்கிரசும் பத்து மாசம்
கம்யூனிஸ்ட்டும் பத்து மாசம்
பாரதீய ஜனதா கூட
பழுதில்லாம பத்து மாசம்.
நேத்து மொளைச்சி கிளைவிட்ட
லெட்டர் பேடும் பத்து மாசம்.
சட்டசபை கால்பதிச்சா
அத்தனையும் பத்து மாசம்.
அட, கேடுகெட்ட ஜனங்க மட்டும்
எட்டுமாசப் பிரசவமா?
ஏறிப்போன பால் வெலைக்கு
எகிறிக் குதிச்சிக் கேக்குறாங்க
நாக்கை ரெண்டா கடிக்கிறாங்க.
கரண்ட்டு குடுக்கும் மந்திரிய
கத்திக் குதறிக் கேக்குறாங்க.
வெலவாசி எகிறிப்போனா
மைக்க முறிச்சிக் கேக்குறாங்க.
கேக்குறாங்க கேக்குறாங்க
கேட்டுக்கிட்டே இருக்காங்க.
பத்து மாசப் பிறவிங்க
பதவி பிடிச்ச மேதைங்க
அஞ்சு அஞ்சு ஆண்டுகளா
ஆண்டு ஆண்டு அனுபவிச்ச
அசராத அற்புதங்க
அல்லும் பகலும் அலுக்காம
பல்லுமேல நாக்கப்போட்டு
மாய்ஞ்சு மாய்ஞ்சு கேக்கறாங்க
மல்லுக்கட்டி நிக்கறாங்க.
அறுவது வருஷமாச்சி.
ஆனது ஒண்ணுமில்ல.
ஓட்டுப்போட்ட விரல் தேஞ்சும்
ஒண்டிக் குந்த குடிசையில்ல.
குடிக்கக்கூடக் கஞ்சியில்ல
கோமணக் கந்தையில்ல.
முப்பாத்தாறு ரூபாய்ல
மென்னு முழுங்கி தின்னாக்கா
சத்துபத்தாக் குறையாலே
சவலைப் பிள்ளைதான் பிறக்கும்.
குத்துக் கல்லாட்டம்
குழந்தை பிறக்கவேணுமின்னா
சத்தான உணவு வேணும்
சம்பாதிக்க வேலை வேணும்.
அத்தனையும் வேணுமின்னா
அதுக்கு புதுப்பாதை வேணும்.
பத்து மாச மசிரானுங்க
பதவி கிழிச்சது போதும்.
மிச்ச வாழ்க்கை வேணுமின்னா
அவங்க வாழ்க்கை நமக்கு வேணும்.
நம்மோட தேவையெல்லாம்
நாமதானே கேக்கவேணும்?
திருடியதை திருப்பிக்கேட்டு
தரும அடி கொடுக்கவேணும்.
உரிமை கேட்டு உதைச்சா
அவங்க சவலைபிள்ளை
உரிமை மொத்தம் கிடைச்சா
நமக்குக் கவலையில்லை.
கையை நீட்டிப்பேசுவோம்
நாக்கை மடக்கிக் காட்டுவோம்
மைக்கை உடைத்து மோதுவோம்
மிருகங்களை வீழ்த்துவோம்
மனிதன் என்று காட்டுவோம்.
சவலைகள் இங்கே இல்லையென்று
சாவுச் சங்கு ஊதுவோம்!
கண்டிப்பு என்றால்: பால், பஸ் கட்டணம், சமச்சீர் கல்வி, அண்ணாநூலகம் என்பன தானே?
கொஸ்டின் பாஸ்? நெக்ஸ்ட் 🙂
மூடிவைத்த ரகசியத்தை போட்டுடைக்கும் பண்பு ஜெ க்கு எப்போதுமே உண்டு.எல்லா
விலை ஏற்றத்திற்கும் மற்றும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிறகு சங்கரன்கோவிலில் அதிமுக ஜெயித்தே தீரும் என்று சட்டமன்றத்தில் சவால் விடுகிறார் ஜெ.காசு,கள்ள ஓட்டு,வெட்டு குத்து,போலீசு சமஸ்தமாகத்தானே வெற்றி அரங்கேரும் என்கிறார் கேபுட்டன்.பல்லக் குத்தி நாத்தம் காட்டுறதுக்குத்தான் சட்டமன்றம்னு நிருவிச்சுட்டாங்கைய்யா.சபாசு. நல்ல போட்டி.கடந்த தி மு க ஆட்சியில மதுரையில இடைத் தேர்தல் வந்துச்சி.அ னா அவுத்து உட்டாரு 2ஜி பண்த்த.கேபுட்டன் கச்சியும் போட்டிபோட்டுது.ஓட்டு கேட்டு போன கேபுட்டன் கச்சிக்காரங்ககிட்ட வாக்காளருங்க கவர எங்கன்னு கேட்டப்ப கையெடுத்து கும்புட்டுட்டு நாங்க புது கச்சிதான.இன்னும் சம்பாதிக்கல.அடுத்த தேர்தல்ல பெரீய கவரா தர்றோம்னு சொன்னாங்களாம்.கவரு கேட்டவரே எங்கிட்ட சொன்னாரு.இந்த நாகரிகம் எப்படி இருக்கு?எதால சிரிக்க??
//ஓட்டு கேட்டு போன கேபுட்டன் கச்சிக்காரங்ககிட்ட வாக்காளருங்க கவர எங்கன்னு கேட்டப்ப கையெடுத்து கும்புட்டுட்டு நாங்க புது கச்சிதான.இன்னும் சம்பாதிக்கல.அடுத்த தேர்தல்ல பெரீய கவரா தர்றோம்னு சொன்னாங்களாம்.கவரு கேட்டவரே எங்கிட்ட சொன்னாரு.இந்த நாகரிகம் எப்படி இருக்கு?எதால சிரிக்க??//
கட்சிக்காரனும் அப்படித்தான்.. மக்களும் அப்படித்தான் இருக்காங்க. நீ எவ்வளவு வேணும்னாலும் கொள்ளையடிச்சிட்டுப் போ. எனக்கு ஒரு பங்கை கொடுத்துடுங்கிற மனோபாவம் மாறணும். கவரு கொடுக்கற கையைப் புடிச்சி முறிக்கற தில்லு இல்லாத மக்களுக்கு இப்படிப்பட்ட ‘தலைவர்கள்’தான் அமைவர்!
இந்த பதிவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இதையும் பாருங்க.
http://www.tehelka.com/story_main51.asp?filename=Ne040212Coverstory.asp
விஜயகாந்த் குறித்த முதல்வரின் கருத்து சரியானதே: அன்புமணி
யாரு அண்ணன்? – யாருது திண்ணை ? செப்பண்டி பாபு??? By கடலூர் சித்தன்.ஆ
Pl c link:
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=547163&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%
இதில் எல்லோரும் மிகச் சிறந்த ஒரு நகைச்சுவைக் காட்சியை கவனிக்க தவறிவிட்டதாக தெரிகிறது. விஜயகாந்த் பேசும் போது சபாநாயகரின் தவிப்பை பாருங்களேன். வடிவேலு, கவுண்டமணி எல்லோரும் தோற்றுவிடுவார்கள்.
தமிழா!!! நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா???
ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்!!!
சினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே????-தங்கராஜா/தினமணிக்கு நன்றி.
Pl c link:
http://www.dinamani.com/edition/story.aspx?artid=545532
ஐயோ தினமனியிலேயா போட்டிருக்கான்.. அது பார்ப்பன பத்திரிகை ஆச்சே… நம்ம கீத்து கீத்தில வந்துருக்கான்னு பார்த்து லிங்க் போடக்கூடாதா ? 🙂
🙂 ஜப்பான் போன்ற உழைக்கும் மக்களை சுரண்டும் நாடு தமிழனை சிறப்பித்தாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம். தினமணி போன்ற பார்ப்பன அடிவருடிகள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். என்னண்ணே, நான் சொல்றது சரிதானே?