செய்தி-05

இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மத்திய அரசில் உருக்குத் துறை அமைச்சராக இருக்கும் பெனிபிரசாத் வர்மா விழா ஒன்றில் பேசும் போது, ” பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்கின் அமைச்சர் ஒருவரது பொது அறிவு உண்மையில் யாரையும் மெய்சிலிர்க்க வைக்கும். டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, உரங்கள் – பூச்சி கொல்லிகள் விலை உயர்வு, கொள்முதல் விலையை உயர்த்தாத அரசு என்று எல்லா பக்கமும் அடிபடும் விவசாயிகளுக்கு இந்த விலைவாசி உயர்வு எந்த ஆதாயத்தையும் அளிக்கப் போவதில்லை என்பதோடு அவர்களது அன்றாட குடும்ப செலவு ஏனைய மக்களைப் போல பாதிக்கப்படும் என்பதே உண்மை. அதே போல விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை.
விலைவாசி உயர்வின் ஆதாயம் தரகு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் சில்லறை அங்காடி நிறுவனங்களுக்கும் மட்டும்தான் போய்ச் சேரும். இப்படி அனைத்து பிரச்சினைகளையும் இந்த அமைச்சர் போல ஏட்டிக்கு போட்டியாக பேசினால் இப்படித்தான் வரும்:
- தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகரிப்பினால் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இன்ஞ்சினியராக முடியும்.
- கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதிகரிப்பினால் அரசு மருத்துவமனையின் க்யூவில் நின்று அவதிப்படும் தொல்லை இருக்காது.
- போலிசு, இராணவத்திற்கு அதிகம் ஆளெடுப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். மேலும் எல்லாப் போராட்டங்களையும் உடனுக்குடன் ஒடுக்கி அமைதியை நிலைநாட்ட முடியும்.
ஆனால் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு அவர் மட்டும் சொந்க்காரர் அல்ல. ஏற்கனவே ” பத்து ரூபாய் கொடுத்து ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு அரிசி விலை உயர்வை தாங்க முடியும்” என்று அறிஞர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். தி.மு.க அமைச்சர்கள் பலர் ” வருமானம் கூடியிருப்பதால்தான் விலைவாசி உயர்ந்திருக்கிறது” என்றும் நியாயப்படுத்தியிருக்கின்றனர். 2ஜி ஊழலைக் கூட மக்களுக்கு செல்பேசி சேவை மலிவாக கிடைக்கச் செய்ததற்கான தியாகம் என்று அவர்கள் நியாயப்படுத்தவில்லையா? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று ஜெயலலிதா முழங்கியதும் இந்த வகையில்தான் வரும்.
பா.ஜ.க, சமாஜ்வாதி போன்ற கட்சிகளெல்லாம் அமைச்சரின் கருத்தை ‘பயங்கரமாக’ எதிர்க்கின்றன. பா.ஜ.க ஆட்சியின் போதுதான் தனியார் மயம் பெரும் வீச்சில் அமல்படுத்தப்பட்டது. நாளைக்கே பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய காங்கிரசு ஆட்சிக்கும் அதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. சமாஜ்வாதி கட்சியோ அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முதல் ஆளாய் வேலை பார்த்தது.
விலைவாசி உயர்வும், பணவீக்கமும் ஒட்டு மொத்த நாட்டின் அரசியல், பொருளாதர வாழ்வோடு பிணைக்கப்பட்டிருப்பதை இவர்கள் மறுக்கிறார்கள். அதனால்தான் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்து விட்டு விலைவாசி உயர்வை மட்டும் எதிர்ப்பது போல நடிக்கிறார்கள். அந்த நடிப்பும் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்ற ஒரு கடமைக்காக மட்டும்.
_____________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!
- ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
- புதைமணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!
- சாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! – ரீமிக்ஸ்!
- பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
- செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
- ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
- கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்