Tuesday, April 13, 2021
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன. இந்தசூழலில் இவர்கள் தமது உடல் நலன்,சுகாதாரமான, சத்தான உணவு பற்றி அதிக அக்கறை கொள்ளத் துவங்கியுள்ளதோடு, இயற்கை வேளாண் உணவு பொருட்கள் சத்தானவை, சுகாதாரமானவை,வேதி-நச்சுக்கள் இல்லாதவை என்று நம்புகின்றனர்.

படிக்க

ஆர்கானிக்ஆனால், ஸ்டன்ஃபொர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய  ஆய்வு விளம்பரம் செய்யப்படுவது போல Organic உணவுப் பொருட்களில்,  வழக்கமான முறையில் பயிரிடப்படும் பொருட்களை விட அதிக சத்தும், விட்டமின்களும் இல்லை என்றும் இயற்கை வேளான் உணவுப் பெருட்கள் என்று விற்கப்படுபவை ரசாயான உரங்கள், பூச்சிக் கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக குறைவாக பயன்படுத்தப்பட்டவையே என்றும் சொல்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகள் நமது மரபுவழி விவசாயத்தை அழித்ததோடு, ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் இந்த மண்ணையே விசமாக்கி வைத்திருக்கின்றன. இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் நமது விளை பொருட்கள் வேதி-நச்சுக்களால் மாசு பட்டிருப்பதாகவும், அதனால் சுத்தமான, வேதி பொருட்களை பயன்படுத்தாத இயற்கை வேளாண் பெருட்களை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. பல கம்பெனிகள் கார்ப்பரேட் விவசாய பண்ணைகளையும் அமைத்திருக்கின்றன.

பசுமை புரட்சி என்ற பெயரில் பாரம்பரிய விவசாயத்தை பன்னாட்டு கம்பெனிகளுடன் கைகோர்த்து அழித்த அதே அரசு, இந்த ஆர்கானிக் உணவு பெருட்களுக்கும் விதிமுறைகளை நிர்ணயித்திருக்கிறது. உலகின் (இந்தியா உட்பட) பல நாடுகளிலும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான விதிமுறைகள் எவற்றிலும் ரசாயான உரங்கள், பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படவில்லை.

உணவுப் பொருட்களின் மீதான அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நுகர்வோர் விழிப்புணர்வும் மிகுந்த மேற்குலகில் வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சமேனும் பின்பற்றப்படலாம் – அல்லது அவ்வாறு ஒரு பாவனை காட்டப்படலாம். இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தையும், விதிமுறையையும் கழிவறை காகிதமாகக்கூட மதிக்காத கார்ப்பரேட் கம்பெனிகள் ஆர்கானிக் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் மட்டும் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்று நம்புவது எவ்வளவு முட்டாள் தனம்?

நடுத்தரவர்க்கத்தின் பயத்தையும் நம்பிக்கையையும் தனது லாப வேட்டைக்கு  பயன்படுத்திக் கொள்ள பல இயற்கை வேளான் உணவுப்  பெருட்களுக்கான  (Organic Food) சங்கிலி  தொடர் கடைகள் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல பன்னாட்டு கம்பெனிகள் இந்திய நடுத்தர  வர்க்கத்தைக் குறிவைத்து களமிறங்க உள்ளன. இந்த வகைகடைகளில்  இயற்கை முறையில் பயிரிடப்பட்டகாய்கறிகள், தானியங்கள் மட்டுமல்லாது,  இறைச்சி,முட்டைகளும் கிடைக்கும்.  சாதாரண உணவுப் பொருட்களுக்கும் இவற்றுக்கும் பாரிய அளவிளான வேறுபாடுகள் இல்லை, ஆனால் விலையோ பலமடங்கு அதிகம்.

ஆர்கானிக்
படம் நன்றி இந்து நாளிதழ்

சென்னையில்,கடந்த மாதம் இயற்கை வேளான்மைஉணவுப் பெருட்களுக்கான ‘உணவு திருவிழா’பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பினால் (Safe Food Alliance) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டோர் பாதுகாப்பான உணவை உட்கொள்வது என்பது ஒவ்வொரு நுகர்வோருடைய உரிமை என்றும் இதற்கு அரசு ஆவண செய்யவேண்டும் என்று யார் பாரம்பரிய விவசாயத்தை அழித்தார்களோ அவர்களிடமே கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளொன்றுக்கு ரூ.28 க்கும் குறைவான வருமானமுள்ளோர் அதிகம் வாழும் நாட்டில், ஒருவேளை உணவே பலருக்கு கிடைக்காத நாட்டில் தனக்கு மட்டும் சத்தான, சுகாதாரமான உணவு வேண்டும், என்று கோருவது நியாயமா?

இதே ’கனவான்கள்’ நாடு முழுவதும் ரசாயன உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக நடந்துவரும் எந்த போராட்டத்திலும், உதாரணமாக எண்டோசல்பானுக்கு எதிரான போராடம், பி.டி. கத்திரிகாய்க்கு எதிரான போராட்டம் என எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. தங்களது சொந்த கோரிக்கையான சத்தான, சுகாதாரமான உணவு என்பதற்கும் இத்தகைய போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை ’மறந்தும் கூட’ யோசிப்பதில்லை.இதே உயர் நடுத்தர வர்க்கம், இப்படி வீட்டில் வேதி நச்சுக்கள் இல்லாத உணவை சமைக்க தேடி கொண்டே, பிசா ஹட், மெக்டோனல், கேஎப்சி, சரவணபவன், தல்ப்பாகட்டு, அஞ்சப்பர் என நாக்கின் சுவைகாக சில ஆயிரங்களை சிதறடிக்கவும் தயங்குவதில்லை.

இந்தியாவே மேற்குலகின் குப்பைத்தொட்டியாக மாறி வரும் சூழலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் தமது அணுக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை நமது கடல் எல்லையிலும் நாட்டினுள்ளும் கொட்டி வருகிறார்கள். இந்த விஷத் தொட்டியிலிருந்து அமிர்தம் வேண்டும் என்று கேட்கும் காரியவாதம் ஒருபக்கமென்றால், மறுபக்கம் பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டைக்கு இரையாதல் என்று செயல்படும் இந்த அறியாமை சுயநலவாதிகள் இருக்கும் வரை, சாத்தியமான ”எல்லா” வழிகளிலும் கார்ப்பரேட் கொள்ளைகள் தொடரத்தான் செய்யும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. இந்தியாவைப் பொருத்தவரை ஆர்கானிக் உணவு உற்பத்தியில் பெரிய கார்பரேட்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரையிலான முயற்சிகள் தனி நபர்கள் தமது கார்பரேட் வேலைகளை உதறிவிட்டு, தனிப்பட்ட முறையில் சிறுதொழில் முனைவோராக ஓரிரு கடைகள் மூலம் விற்பனை செய்வதே. நம்மாழ்வார் போன்றவர்கள் கண்டிப்பாக ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ சிறு அளவில்கூடப் பயன்படுத்துவது இல்லை என உறுதியாகச் சொல்லலாம். இணையத்தில் எதையாவது அமெரிக்க சூழ்நிலை பற்றி எழுதப்பட்டதைப் படித்துவிட்டு ‘இதோ பார் கார்பரேட் பூச்சாண்டி’ என்று காட்டாதீர்கள்.

  • ஆமா சரவணன் சொல்லிட்டாரு அதனால நாம இனிமே ரிலையன்சு, சஹாரா, பேண்டலூன் போன்ற கம்பெனிகள் ஏற்கனவே இந்த துறையில் இருப்பதை மறந்துவிடனும். நாளைக்கு வால்மார்ட் வந்து இங்க ஆர்கானிக் புளோர் போட்டாலும், அதை 21G ஏறி வந்து வாங்குபவர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்கள் என்று தான் கருத்திக்கொள்ளனும். கூடவே கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி அல்லாமல், இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு வரையறையெல்லாம் சிறப்பாக கடைப்படிக்கப்பட்டு வருகிறது என்று சரவணன் சொல்வதை ஏற்று நாமெல்லாம் பயத்தை நீக்கி சந்தோஓஓஓசமா இருக்கனும்.

   ஓகேயா?

 2. நாளொன்றுக்கு ரூ.28 க்கும் குறைவான வருமானமுள்ளோர் அதிகம் வாழும் நாட்டில், ஒருவேளை உணவே பலருக்கு கிடைக்காத நாட்டில் தனக்கு மட்டும் சத்தான, சுகாதாரமான உணவு வேண்டும், என்று கோருவது நியாயமா?////ஏன் கேட்ககூடாது…

 3. வினவில் வந்த மகா முட்டாள் தனமான கட்டுரை. இயற்கை விவசாயம் பட்ரி படித்துவிட்டு எழுதவும்.

  • நிர் பெரிய அறிவாளிய இருந்த இயற்கை விவசாயம் பட்ரி எலுதும் நாங்க படிச்சிட்டு நிர் எவ்வள்வு பெரிய…….அறிவாளினு பார்கிரோம்……

  • கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது நம்மாழ்வார் ப்ரப்புரை செய்யும் இயற்கை விவசாயம், இயற்கை உணவு பற்றி அல்ல.
   இயற்கை உணவு (Organic Food) என்று சொல்லி மிக அதிக விலையில் கொள்ளையடிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பற்றியது.

   ஏற்கனவே நாளுக்கு நாள் விலைவாசி ஏறிகிட்டு போவுது, கொஞ்ச நாள்ல சாதாரண உணவு பொருளையே வாங்க முடியுமா தெரியலை. இதுல அதை விட பல மடங்கு அதிக விலை வைத்து விக்குறத எப்படி வாங்குறது?

 4. இந்த கட்டுரை இயற்கை விவசாயத்தை பற்றியது இல்லை மாறாக ஆர்கானிக் உணவு என்று மக்களை ஏமாற்றும் Corparet பற்றியது. இதில் இயற்கை விவசாயத்தையும் தற்சார்பு விவசாயத்தையும் அழிதவர்களே தான் இப்பொது ஆர்கானிக் உணவு என்று மத்தியதர வர்கங்களின் பொதுபுத்தியை பயன் படுத்தி அதன் மூலம் லாபம் சம்பாதித்து கொள்கின்றனர்.

  • Friends… The article questions the validity of organic farming done by corporates. It says no effective & transparent regulatory mechanisms are available to test whether these organic foods are free from fertilizers…. If this is true its a wake up call. Pls don’t distort the debate with insults and naive attitude. If you guys really have a proof to refute Vinavu’s claim. Pls share it.

 5. பல் இருக்கறவன் பட்டாணி திங்கறான் காசு இருக்கறவன் ஆர்கானிக் பொருள் வாங்கறான் உனக்கேன் வினவு எறிகிறது.

  • பல் இருக்கிறவன் தொடர்ந்து பட்டாணி தின்ன வேண்டுமென்று ஆசைப்படுகிறோம் ராம்தாஸ். ஏற்றத்தாழ்வுகள் இப்படியே தொடர்ந்தால் அவனது பல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது என்பதுதான் எங்களது கவலை. வயல்களையும் தோப்புத் துரவுகளையும் குளங்களையும் ஆறுகளையும் தூர்த்து வீட்டுமனைகளாக விற்பனை செய்து உயர் வர்க்கத்தினர் ஆர்கானிக்கை மட்டும் தின்று உயிர் வாழ்ந்து விடலாமென்று நினைக்கிறார்கள். ஆர்கானிக் உண்பவர்களும் அரை வயிற்றுக்கும் இல்லாதவர்களும் ஒரே உலகத்தில்தான் வாழ்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும். நான் உயர்ந்தவைகளைத் தின்பேன். எனக்கு பல் இருக்கிறது என்று நினைப்பது அறியாமையின் உச்சம்.

 6. Dear Vinavu,
  The largest organic producers company in India is “Indian Organic Farmers Producer Company Limited (IOFPCL)” which is owned by the farmers.Everyone in the company has a single vote irrespective of the number of shares held. I don’t have any data on lands owned by various corporates. I did hear from my friends that reliance owns such large tracts of land. Can you please share the links where such data could be available….

 7. dear ramdoss all are going to be affected because of organic food. vinavu’s article is good only.in future ur next generation will be affected by organic foods.vinavu says it only for the sake of the people. you got it ramdoss?

 8. pattan puttan yeppadi vivasyam seithaarkalo athai alithu.. thirumbavum athai pola seivatharku 3 madanku kasai pudunkaran.. organic support seium kootam .. santhaiyil oru amma nan uram podamal iyarkaiya vilancha vendaikai athuku nee double rate kodukanumnu sonna oru piyan vanka mattan.. athaiye oru coverla pottu lableaa otti oru poster aduchu 10times athikama vitha vankuvan.. velankidum..

 9. Farming based on chemical inputs invites chemical hazards, while organic farming carries organic hazards. Neither of these hazards is safe or holy.

  While science is very clear on this, billions of dollars spent on lobbying and counter lobbying taken up by conflicting sections of imperialistic west. Both the ends carry out their own imperialistic agenda, through directly by MNCs and their shadow boxing agents, NGOs. The imperialistic agribusiness cartels – either directly or through holy cows, the proxy performers of the respective imperialistic principals – vociferously propagate the following two big myths.

  1.Modern technology alone assures food security and poverty alleviation.
  2.Organic farming ensures food safety and environmental sustainability.

  Hazard is a hazard and the lie is a lie, no matter, whether the lobbying is done by western corporate or their proxies, the Indian holy cows.

 10. இன்றைய உலகில் ஒருவராலும் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளவும் முடியாது; ஆர்கானிக் உணவையும் வழங்கமுடியாது. நீர் – நிலம் – காற்று அனைத்துமே மாசடைந்துவிட்ட பிறகு எங்கிருந்து ஆர்கானிக் உணவை வழங்க முடியும்? அடர்ந்த அமேசான் காட்டுக்குள் இயற்கையாய் வளரும் வாழைகூட மாசுபடாமல் இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத போது இந்தியாவில் ஆர்கானிக் உணவு வழங்குவேன் என்று ஒருவன் சொல்வானேயாகில் அவன் உங்களை ஒரு ‘ஈமு’வாக்குகிறான் என்று பொருள்.

  இன்றைய தேவை ஆர்கானிக் உணவு அல்ல. ஆர்கானிக் உணவுக்காக நம்மை அலையவிட்ட பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளையும் அவர்களை கட்டிக்காக்கும் அரசமைப்புகளையும் புதைகுழிக்குள் அனுப்புவதுதான். அதுவரை நமக்கு ஆர்கானிக் உணவு ஒரு எட்டாக் கனிதான்.

 11. ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்து விற்பவர்கள் கார்பரேட்கள் அல்ல.சிறிய விவசாயிகள், நடுத்தர விவசாயிகள்தான்.சென்னையில் சில தனி நபர்கள்,அமைப்புகள் இதற்காக கடைகள் துவங்கியுள்ளார்கள்.அதில் ஈடுப்பட்டிருப்போர் பிடி கத்தரிக்காயை எதிர்த்தவர்கள்,எதிர்ப்பவர்கள்.லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றிய பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதே safe food alliance.இவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக முந்தைய அரசு (திமுக அரசு) பிடி கத்தரியை அனுமதியோம் என்றது.சித்த மருத்துவர் சிவராமனும் இன்னும் பலரும் இதில் உறுப்பினர்கள்.நீங்களும் சேரலாம்.இவர்களும் பிடி பருத்தி,கத்திரியை எதிர்ப்பவர்கள்.சங்கீதா சீரிராம் பசுமைப் புரட்சியை விமர்சித்து நூல் எழுதியிருப்பவர்,மாற்று வேளாண்மையை ஆதரிப்பவர்,அதில் விளையும் பொருட்களை விற்கும் அமைப்பான restore ருடன் தொடர்புடையவர். ஞாநி,தியோடர் பாஸ்கரன்,காஞ்சனை சீனிவாசன்,லாயர் சுந்தர் உட்பட பலர் கார்பரேட் விவசாயத்தையும்,பிடி பயிர்களையும் எதிர்ப்பவர்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரியாவிட்ட்டால் நீங்கள்தான் வெட்கபட வேண்டும்.ஏனெனில் நீங்கள் இருப்பது சென்னையில்தானே.இன்று தமிழகமெங்கும் பல பகுதிகளில் இயற்கை முறை வேளாண்மையை ஏற்று விவசாயம் செய்வோர் எண்ணிக்கை கூடி வருகிறது.
  எனவே சில ஆண்டுகளில் இவர்களின் விளைப் பொருட்கள் பல பகுதிகளில் கிடைக்கும்.
  கீழைக்காற்றில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கலாமே.ஏன் செய்வதில்லை.

 12. ’இன்றைய உலகில் ஒருவராலும் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளவும் முடியாது; ஆர்கானிக் உணவையும் வழங்கமுடியாது. நீர் – நிலம் – காற்று அனைத்துமே மாசடைந்துவிட்ட பிறகு எங்கிருந்து ஆர்கானிக் உணவை வழங்க முடியும்? ’
  இயற்கை வேளாண்மையை மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்தியாவில் இருக்கிறர்கள்.நம்மாழ்வாரின் பண்ணைக்கு ஒரு முறை சென்று வாருங்கள், உண்மை புரியும்.

  • அய்யா கேள்வி அவர்களே!

   nagaraj அவர்கள் கேட்ட கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். நீங்கள் பார்த்ததை விளக்கினால் புரிந்து கொள்ள உதவுமல்லவா!

   சாக்கடைக் கழிவு நீர் தேங்காத, இருசக்கர வாகன புகைகூட நுழையாத, உரம்-பூச்சி மருந்துகளைத் தழுவாத அடர்ந்த பசுமையான காட்டை ஒட்டிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து நீங்கள் இன்று நம்பிக் கொண்டிருக்கும் ‘இயற்கை வேளாண்மையைவிட’ ஆயிரம் மடங்கு தூய்மையான இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு அதில் விளைந்தவற்றை மட்டுமே உட்கொண்டு 1960 களில் வாழ்க்கையை ஓட்டியவன் நான்.

   அதனால்தான் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். நீங்கள் பார்த்ததை சற்றே விரிவாக விளக்கினால் எது இயற்கை வேளாண்மை என்பதை ஏதமறியா நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு எடுத்து இயம்பலாம்.

 13. இன்றைய தேவை ஆர்கானிக் உணவு அல்ல. ஆர்கானிக் உணவுக்காக நம்மை அலையவிட்ட பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளையும் அவர்களை கட்டிக்காக்கும் அரசமைப்புகளையும் புதைகுழிக்குள் அனுப்புவதுதான். அதுவரை நமக்கு ஆர்கானிக் உணவு ஒரு எட்டாக் கனிதான்.

 14. குளம், ஏரி, கிணறு ன்னு கிடைச்ச குடிநீர்
  இன்று குடிக்க தகுதியற்றதாக மாற்றியது யாரு?

  மினரல் வாட்டர் விக்கறவன் யாரோ அவனேதான்.

  மரம் நடுவோம் மழை பெறுவோம் ன்னு சொல்றவன் யாரு?

  காட்டை அழிச்சி பிளாட் போட்டவன் யாரோ அவனேதான்.

  வேதி உரங்களை தந்து மண்ணை மலடகியவன் யாரு?

  ஆர்கானிக் உணவு விக்கறவன் யாரோ அவனேதான்.

  இன்னும் புரியலையா? பணம் பணம் பணம்…

  இயற்கையை அழிக்கவும் பணம், ஆக்கவும் பணம்.

  பணம் பணம் பணம்…

  (கட்டுரையின் மையத்தை புரிந்துகொண்டு பின்னுட்டம் இடுங்கள் தோழர்களே)

 15. திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழி நெடுக இருந்த வாழைத்தோப்புக்கள் எல்லாம் எங்கே போனது? ஒருங்கினைந்த தஞ்சாவூரில் இருந்த வயல்வெளிகள் எல்லாம் எங்கே இடம் பெயர்ந்தது?
  உரமிட்ட உணவே இன்னும் சிறிது காலம் போனால் கிடைக்காமல் போகப் போகிறது. இதில் ஆர்கானிக் பின்னால் ஒரு கூட்டம்!!!.

  தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்று நம்மை குடிக்க அடிமைப்படுத்தியது போல் இப்போது இப்படி ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

  உரமிட்ட உணவே விலை ஏறிக் கிடக்கும் போது ஆர்கானிக் உணவா நம்மை ஆரோக்கியமாக்கி விடப் போகிறது.

 16. ஏலேய்களா..நீ சுவாசிக்குரது, குடிக்குறது, சாப்புடுறது…எல்லாமே விஷம் தான்டா….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க