இளவரசன் திவ்யா திருமணத்தை ஒட்டி நத்தம் காலனியை சூறையாடி, பின்னர் திவ்யாவை பிரித்து, இளவரசனை ‘தற்கொலை’ செய்ய வைத்து ஆட்டம் போட்ட பாமக சாதிவெறியர்களை கண்டு கொள்ளாத அரசு, இளவரசனது இறுதி நிகழ்விற்கு எல்லா அடக்குமுறைகளையும் ஏவியது.
இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்விற்கு நத்தம் காலனியில் உள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும், வெளியூர் சொந்தக்காரர்கள் கூட கலந்து கொள்ள முடியாது என்று கலெக்டர் உத்தரவு போட போலீசு அதை அமல்படுத்தியது. சேலத்தில் தங்கியிருந்த இளவரசனது வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கலெக்டர் போட்ட உத்தரவை ஏற்று போலீசு அவர்களையும் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டது.
இது போக எந்தக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை கறாராக அமல்படுத்தினார்கள். வழக்கறிஞர்கள் வரவில்லை என்றால் உடல் அடக்கம் செய்யப்படாது என்று இளவரசனது தந்தை இளங்கோ உறுதியாகச் சொல்ல, அதையும் போலீசு சட்டை செய்யவில்லை.
இறுதியில் உடல் அடக்கம் செய்வதென்று முடிவாக மக்களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் காட்டுப்பாதையில் போலீசுக்குத் தெரியாமல் நத்தம் காலனிக்கு வந்தார்கள். ஒரு தலித் இளைஞனது இறுதி நிகழ்ச்சிக்கு வெளிப்படையாக கலந்து கொள்ளக்கூட இங்கே ஜனநாயகம் இல்லை.
மேலும் திவ்யா இளவரசனை விட்டு பிரிந்து விட்டார் என்று அவர்கள் சேர்ந்த மாதிரி இருந்த பேனர்களைக்கூட போலிசு அகற்றிவிட்டது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஊருக்குள் வந்த போது அவரை கைது செய்ய போலீசு முயன்றது. ஆனால் மக்கள் உறுதியாக தடுத்து நிறுத்தி விட்டார்கள். இதனால் போலீசுக்கும் மக்களுக்கும் தள்ளு முள்ளு நடந்தது. போலீசு பலவாறு மிரட்டியும் சிவகாமியை கைது செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை.
பின்னர் மூக்குடைபட்ட போலீசு தாங்கள் சிவாகாமியை கைது செய்ய வரவில்லை, பார்த்து பேசத்தான் வந்தோம் என்று சமாளித்தது. பிறகு தன்னால் பிரச்சினை வேண்டாம் என்று சிவகாமியே போலிசிடம் பேசிவிட்டு வெளியேறினார். இதனிடையே பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் முழக்கமிட்டவாறு இளவரசனது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இளவரசனது உடலை புதைப்பதற்கும் நினைவு மண்டபம் கட்டுவதற்கும் முதன்மைச் சாலையருகே ஒரு நிலத்தை வாங்கியிருந்தார்கள். அங்கே இளவரசனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் முடிந்த உடன் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தோர் அஞ்சலி உரை ஆற்றினார்கள்.
இளவரசனது இறுதி நிகழ்ச்சிக்கு என்னென்ன தடைகள் போடமுடியுமோ அத்தனையும் போட்டு முடக்க நினைத்தது போலிசு. ஆனால் மக்களும் தோழர்களும் அதையும் தகர்த்து சில ஆயிரம் பேர் திரண்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை கூட கிடையாது என்பதற்கு இளவரசனது மரணம் ஒரு சான்று என்றால் அப்படி இறந்தவர்களை அணிதிரண்டு அடக்கம் செய்வதற்கும் உரிமை இல்லை என்பதை இளவரசனது இறுதி நிகழ்வு எடுத்துக் கூறியிருக்கிறது.
இறுதியில் பத்து நாட்களுக்குப் பிறகு இளவரசனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பத்து நாட்கள் ஆகியும் பாமக சாதிவெறியர்கள் கைது செய்யப்படவில்லை. அப்படிக் கைது செய்யப்பட வேண்டுமென்ற சுவரொட்டிகளைக்கூட விட்டு வைக்கவில்லை போலிசு. ஆதிக்க சாதிவெறியை எதிர்த்த நமது போராட்டம் சாதிவெறியர்களை எதிர்த்து மட்டுமல்ல, அதை தூக்கிப்பிடிக்கும் அரசையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.
____________________
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
காவல் துறை அதிகாரிகளுடன் விவாதம் :
இறுதி ஊர்வலம் :
வழக்கறிஞர் ராஜு உரை :
படங்கள், வீடியோ : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி.
உங்க அளப்பறைக்கு அளவே இல்லாம போச்சே ,,, அப்புரம் யாரு மக்கள் சமத்துவப்படை கட்சி தலைவி ,நல்லவேலை அந்த அம்மா தன்னோட ஐ ஏ எஸ் பதவிய ராஜினாமா பண்ணிடுத்து , அய்யோ அய்யோ இவங்கள்ளாம் பதவில இருந்திருந்தா பிற ஜாதிக்காரன் ஒருத்தனும் இந்தநாட்ட்ல வாழ்ந்து இருக்கவே முடியாது , நல்லவேள
காவல்துறை மூக்குடைப்பு// நல்ல நகைசுவை , அவங்களா விடவில்லை என்றால் நாங்க உடலை அடக்கம் பண்ணமாட்டோம் ?? முடியாது என்றால் என்ன பண்ணவா என்னவா பம்புரிங்க இதுல காவல்துறைக்கு மூக்கு எங்க உடைஞ்சது விட்டு இருந்தா அவர்களே அடக்கம் அப்ன்னிட்டு எல்லோரயும் உள்ள தூக்கி போட்டு இருப்பார்கள்
ஆமாடா கண்ணா
ஒரு காலத்துல நாங்க உங்களுக்கு வெட்டியான் வேல பாத்தோம்ல.. இப்பொ நீங்க எங்க பொணத்த பொதைங்க.. சாதி இந்து கையால பொதச்சா பொதையுமாண்ணு பாப்போமே!
பணம் கொடுகமல பண்ணின , அந்த பணம் கௌடுகல்னா கூட சாபத்துக்கு வழி இல்லாமல் இப்ப நீ இங்க கருத்து எழுத வாய்ப்பு இருந்து இருக்காது வேலைக்கு ஊதியம் வாங்கிகிட்டு வேலை பார்த்ததற்கு யாரு பொறுப்பு இப்ப கூடத்தான் பல நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறோம் அதனால உன் வீட்டுக்கு அந்த நிறுவனர் வந்து கூலி வேலை பார்க்க கூபிடுவிய
இறங்கல் கூட்டம் என்று சொல்லி அரசியல் கூட்டம் அரசியல் பண்ணவா
இளவரசனுக்கு நமது அஞ்சலிகள்!
இந்த சமூகத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சாதி மறுத்து திருமணம் செய்து வாழ்வதில் தான் எத்தனை சிக்கல்கள்! இதற்காக நாம் எல்லோரும் தலைகுனிய வேண்டும். இளவரசனுக்காக இரங்கல் தெரிவிக்கிற நாம் சாதிய அமைப்பிலிருந்து நம்மை துண்டித்துக்கொள்ள வேண்டும்.
அரசு எப்பொழுதும் ‘சமூக அமைதியை’ நிலைநாட்டுவதிலேயெ நிறைய அக்கறைப்படுவது தெரிகிறது.
வன்னிய சாதி வெறியர்களை தண்டிக்க தொடர்ந்து போராடுவோம்! ஆதிக்க சாதி சங்கங்களை கலைக்க போராடுவோம்!
Kuruthu.. kalacha ellathium kala.. athu enna athika sathi sangatha mattum..
உங்க அளப்பறைக்கு அளவே இல்லாம போச்சே… ituku nengalum savallam …ituvum oruuu polapu……. சாதி சங்கங்களை கலைக்க போராடுவோம்!வெட்டி வேல அய்யோ அய்யோ இவங்கள்ளாம் பதவில இருந்திருந்தா பிற ஜாதிக்காரன் ஒருத்தனும் இந்தநாட்ட்ல வாழ்ந்து இருக்கவே முடியாது , நல்லவேள….
வெளிப்படையாக சாதி வெறி பேசும் கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். குறிப்பாக நாங்கள் ஆண்டவர்கள் மற்றவர்கள் எல்லாம் பேண்டவர்கள் அல்லது நாங்கள் சாணிச்சட்டியிலிருந்து வந்தோம் மற்றவர்கள் எல்லாம் சருவச்சட்டியிலிருந்து வந்தவர்கள் ஆனால் சாணிச்சட்டியிலிருந்து வெளியே வந்தாலும் நாங்கள் தான் சாதியில் உயர்ந்தவர்கள் என்ற மாதிரியெல்லாம் கதை விட்டு தமிழர்களைப் பிரிக்கும் கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இதுவரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இப்படி எதுவும் உளறியதாக எனக்குத் தெரியவில்லை, அப்படி அவர்களும் உளறினால், திருமாவளவனின் தலையில் ஒரு குட்டுப்போட்டு, அவர்களையும் தடைசெய்ய வேண்டும்.
திமிரி எழு..திருப்பி அடி.. கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு”
“ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
இதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும்.” இதெல்லாம் உளறல் இல்லாமல் தெளிவாக பேசியது தானே??? போங்கடா உங்க நடுநிலையும் பகுத்தறிவும்……..
NADUNILAI ENPATHU NAM NAATTIL ENI
EPPOTHUM PAARKA MUDIYAATHU!!!
“Let them try to answer why Nagarajan committed suicide more than a month after his daughter eloped with a Dalit youth. If he was so struck by shame, he would have committed suicide immediately, not a month later,” says Lakshmi.
Villagers at Sellankottai claim that Nagarajan who had to walk past Natham Colony every day to his cooperative society bank on the Dharmapuri-Thirupattur main road was harassed and verbally abused daily.
“It is a tactic used by some political party leaders to intimidate parents of girls who elope with ‘other’ men. When the humiliation reaches unbearable limits, a mediator would enter the scene and negotiate an amount for returning the girl back to the family and restore the family honour,” says another woman at Sellankottai who refuses to be identified.
She claims that in this particular case, the mediator was sub-inspector Perumal who used his official machinery to force Nagarajan to agree to Rs 3 lakh to get his daughter back.
“Only after Nagarajan died, senior police officials found out about Perumal’s role and they immediately suspended him,” she says.
Residents of Sellankottai point out that the arson and related activity were not triggered by the isolated death of Nagarajan or eloping of Divya.
In the Divya-Ilavarasan case, reliable sources point out that a deal was struck for Rs 3 lakh at a hotel in Dharmapuri town which was notorious for such kangaroo courts. “Despite Nagarajan agreeing to pay the amount, he was harassed by police and rival community leaders which could have led to his suicide,” a police source said.
Senior police officials in the region point out such kangaroo courts have been prevalent in Dharmapuri and the surrounding areas for a long time and many have made a killing out of it.
WHO IS FIGHTING AGAINST THE KANGAROO COURTS
One more Love story is in peril due to PMK
http://tamil.oneindia.in/news/2013/07/16/tamilnadu-vanniyar-girl-married-dalit-boy-seeks-protection-179275.html#comment-964560299
சாதி , மதம் , தெய்வம் – இம் மூன்றும்
ஒழியாமல் தீண்டாமை ஒழியப்போவதில்லை .
தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும் .
மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும் .சாதி
உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும் .-
தந்தைபெரியார்
சாதியைப் பிடித்துக்கொண்டு சவடால் பேசி
சாதிக்காரனைக் காட்டிச் சாதிவிற்றுப் பிழைப்பு
நடத்தும் நிலை நிற்கும்வரை இளவரசன்-திவ்யாக்கள்
நிலை தொடர்ந்தே . . . நிற்கும் . . . நீளும் . . . !! . . .
– மா . கவுதமபூபாலன்
ITHU SAATHI VARUTHU OZHIKKA VANTHA KOOTAMILLAI! ILLAVE ILLAI !!!SAATHIYAI VALARKKA VANTHA KOOTTAM!