Saturday, November 28, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

-

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

வினவு தோழர்களுக்கு வணக்கம்,

ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை படிக்க நேர்ந்ததின் விளைவே இம்மடல். இருப்பினும் இதற்கு மூலமான பத்ரியின் கட்டுரைக்கு குருஜீயே விளக்கமளித்த பின் சிஷ்யரின் வார்த்தையை படித்து துன்புறவேண்டுமா என நினைத்து படிக்கவில்லை.

ஜெயமோகனின் அகஒளி தரிசனத்திற்க்கும் சமூக எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி பாரியது. பல்வேறு விசயங்களில் அபத்தமாக எதையாவது உளறி கொட்டி விட்டு தனது மொழிநடையின் மூலம் அதை பூசிச்செல்வது அவரது தந்திரம். பிறகு அழுத்தி கேட்டால் நான் ஆய்வாளன் இல்லை, அது எனது பணியும் கிடையாது என ஒரே போடாக போட்டுவிடுவார்.

இந்த விசயத்தை பொறுத்தவரை பூர்வாசிரமத்தில் பார்ப்பனனாக இருந்த எனக்கு இதைப்பற்றி பேச அதிகம் தகுதி உள்ளதாகவே நினைக்கிறேன். பிறப்பில் எனது பங்கு எதுவும் இல்லாவிட்டாலும், பின்பு நான் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளுக்காக இப்போதும் குற்ற உணர்ச்சி கொள்கிறேன். குற்ற உணர்ச்சியை சகித்து கொண்டு ஜெயமோகனுக்காக என் ரிஷிமூலத்தை கொஞ்சம் கிளறி அளிக்கலாம் என நினைக்கிறேன்.

என் வார்த்தைகள் எதுவும் அசீரீரியாய் உள்ளிருந்து ஒலித்தவை அல்ல. என் வாழ்வில் எனக்கே எனக்கேயுமாகவும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்.

பார்ப்பனர்களும் சமூக அவமதிப்பும் எனும் இரண்டாவது தலைப்புக்கு முதலில் செல்லலாம் என நினைக்கிறேன். ஆயிரம்தான் உதாரணங்கள் காட்டினாலும், சொந்த அனுபவத்தின் வாயிலாக உண்மையை அடைவது போல ஆகுமா? ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன். முதலில் நம்பகதன்மைக்காக என்னுடைய சாதியை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நான் ­­­­­_________ எனும் ஊரில் மாத்வா எனப்படும் கன்னட பார்ப்பன வகுப்பில் பிறந்தவன். சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட ஊரில் மூன்றே குடும்பங்களை கொண்ட ஆகச்சிறுபான்மையிலும் சிறுபான்மை பார்ப்பன சாதி எங்களுடையது.

ஒரு காலத்தில் பல கிராமங்களை சொத்தாக கொண்ட உத்ராதி மடமும், பல நூறு பார்ப்பன குடும்பங்களையும் கொண்ட ஊரில் மற்றவர் அனைவரும் உயர்ந்த வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என அமர்ந்துவிட கடைசியாக மிஞ்சியது எங்கள் மூவர் குடும்பங்களும் உத்ராதி மடமும் மட்டுமே.

எங்களை தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அய்யர், அய்யங்கார் குடும்பங்களும் இங்குள்ளது. என்னதான் பார்ப்பனர்களாய் இருந்தாலும் எங்கள் சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. வருடந்தோறும் நடக்கும் மடத்தின் ஆராதனை விழாக்களின் போது எங்கள் சாதியினர் உணவின் போது முன்வரிசையில் அமர அய்யர், அய்யங்கார்களுக்கு பின் வரிசையில் இடம் கிடைக்கும். இதனாலேயே அந்த சாதியினரில் பலர் மடத்தின் விழாவின் போது வருவதில்லை. நாங்களும் அவர்களின் மடத்தின் விழாக்களுக்கு செல்வதில்லை.

இந்த உணவருந்தும் நிகழ்ச்சியும் பார்ப்பனர்களுக்கானது மட்டுமே, இதில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள முடியாது. அது மட்டுமின்றி பார்ப்பனர்கள் உணவருந்தும்பொழுது மற்றவர்கள் பார்த்தால் தீட்டாகிவிடுமென்று கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டுவிடும். இது இன்றும் நடைமுறையில் தொடர்கிறது. இதை கண்டு _________யில் யாரும் பொங்கி எழுவதில்லை, என்ன இது பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி பந்தியா என்று…

guiltinessஉணவு அருந்தி முடித்தபின் கர்நாடகாவில் உள்ளது போல் எச்சில் இலையில் உருளும் நிகழ்ச்சியும் நடைபெறும், என்ன வித்தியாசமென்றால் இங்கே உணவருந்துவதும் பார்ப்பனர்கள் உருளுவதும் பார்ப்பனர்கள். உருண்டு முடித்த பின் எச்சில் இலைகள் எடுக்கப்பட்டு தனியாக புதைக்கபட்டுவிடும். காரணம் பார்ப்பனர் உருண்ட இலைகள் புனிதமானவையல்லவா, அவை பிற இலைகளுடன் கலந்து அசுத்தமாகலாமா?

இதே போன்று திருவரங்கத்தில் உள்ள இராகவேந்தர் மடத்திலும் ஆராதனை சமயத்தில் வெளியே சூத்திரர்க்கு ஒரு பந்தியும், பிராமணர்களுக்கு ஒரு பந்தியும் நடக்கும். இதன் தலைமை மடமான மந்த்ராலயத்தில் பிராமணர்களுக்கான பந்தியில் உணவருந்த சென்று அவமான பட்ட கதையை அரவிந்த் மாளகத்தி தனது கவர்மெண்ட் பிராமணன் நூலில் எழுதியிருப்பார். இதையெல்லாம் கண்டு யாரும் கொதித்து கொந்தளித்து தமிழகத்தில் மாத்வர்கள் எனப்படும் சாதியே இருக்க கூடாதென்று அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டார்களா? இல்லையே! எப்போதும் போல் அவர்கள் தீண்டாமையை கடைபிடித்துதான் வருகிறார்கள். இத்தனைக்கும் இது மற்ற பார்ப்பன சாதிகளை போல அதிகார வர்க்கத்தில் அதிகம் பங்கெடுக்காத பார்ப்பன சாதி.

பார்ப்பனன் என்ற ஒற்றை காரணத்துக்காக எந்த அவமதிப்பையும், ஒதுக்கலையும் நானும் என் குடும்பமும் பெற்றதில்லை. இன்றும் கூட சாமி என்றே எனது தந்தை ஊர்மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஆரம்ப நாட்களில் பலகார கடையும் அது நொடித்த பின் பெரும்பாலான நாட்களில் சிறுகடைகளிலும் பணி புரிந்தவர். பார்ப்பன சிறுவன் என்பதற்க்காக தனிமைபடுத்த பட்டதோ, கிண்டல் செய்யப்பட்டதோ, ஒதுக்கப்பட்டதோ இல்லை.

மாறாக நரசிம்மன் எனும் இன்னொரு பார்ப்பன சிறுவனின் வீட்டிற்க்கு சென்ற பொழுதுதான் தனி அலுமினிய குவளையில் நீர் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டேன். ஆச்சாரமான அவர்கள் வீட்டில் யார் வந்தாலும் தனிக்குவளை!

மற்ற சிறுவர்களிடமிருந்து பார்ப்பனன் என்ற காரணத்தால் ‘ஒதுக்கப்பட்ட’ சுவையான சம்பவமும் ஒன்று உண்டு. நான்காவது படிக்கும் பொழுது ‘கெட்ட’ வார்த்தை பேசும் குழுவொன்று இருந்தது. அந்த குழுவில் இடம்பெற்று கெட்டவார்த்தைகள் பேச வேண்டுமென்பது என் அவா!

ஆனால்,

“நீயெல்லாம் அய்யருடா, நீ கெட்ட வார்த்தை பேசக்கூடாதுடா” என்று ஒதுக்கப்பட்டேன்.

“ஏண்டா அய்யருக்கு மட்டும் ரெண்டு ________ இருக்கு” என கூறி வலுக்கட்டாயமாக பல கெட்டவார்த்தைகள் பேசி அந்த குழுவுடன் சேர்ந்தது தனிக்கதை. இன்றும் என் பள்ளிக்கால நண்பர்களின் மத்தியில் சிரிப்புடன் நினைவுக்கூறப்படும் கதை இது. அந்த வயதில் பார்ப்பனர்கள் மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு புரியவில்லை.

எனது தம்பியின் வாழ்வில் இது போன்று வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. சம்பவம் என்னமோ வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் முடிவு அத்தனை வேடிக்கையாக இருக்கவில்லை. இது அவன் ஒன்றோ அல்லது இரண்டோ படிக்கும் பொழுது நடந்தது. அவனுடைய சக வகுப்பு தோழன் ஒருவன் வலுக்கட்டாயமாக மீன் குழம்பை எனது தம்பிக்கு ஊட்டிவிட முயன்று, உதடெல்லாம் மீன் குழம்பாகி வீட்டில் வந்து தம்பி அழத்தொடங்க என் அம்மா பள்ளிக்கு சென்று புகார் அளித்தார்.

பின்னர்தான் நடந்தது கொடுமை. ஊட்டி விட்ட பையனை வெளுத்து வாங்கிய வாத்தியார், பின்னர் அந்த சிறுவனை என் தம்பியின் காலிலும் விழச்செய்தார். சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சேட்டைகளுக்கு இந்த தண்டனைகள் எந்த விதத்தில் சரி?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பார்ப்பனர்களின் ஆச்சாரத்திற்கு ஆபத்து வரும்போது ஏற்படுத்தியவர்களுக்குத்தான் கடும் தண்டனை. பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்வதிலிருந்து, குப்பையை திண்ண சொல்வது வரை பல்வேறு கொடுமைகள் அரங்கேறும் காலத்தில்,அரிதினும் அரிதாகவாவது ஊளைச்சாம்பார் சத்தம் உண்மையில் கேட்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

பள்ளி கல்லூரி காலங்கள் தொடங்கி யாரும் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதில்லை. வளைகுடா நாட்டில் நான் பணிபுரிந்த பொழுது அங்குள்ள அராபியர்களுடன் அவர்கள் வீட்டில் சேர்ந்து உணவருந்தும்போது கூட அவர்கள் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியதில்லை.

நிலப்பிரச்சனை பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா? எளியவர்களின் சாதாரண நிலங்கள் எங்கும் பிடுங்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார் கொடுக்க வரிசையில் நின்றவர் எத்தனை பேர்?

வன்னிய பெண்களை கூலிங்கிளாசும், ஜீன்சும் போட்டு மயக்குறாங்க என்று இராமதாசு சொன்னது போல, தமிழகத்தின் அத்தனை பொறுக்கிகளும் பார்ப்பன பெண்களாக பார்த்து வம்பு செய்கிறார்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். சாலையில் தனியாக நடந்து செல்லும் அத்தனை சாதி,மத பெண்களும் ஆணாதிக்க பொறுக்கிகளிடம் அனுபவிக்கும் துன்பத்தை பார்ப்பன பெண்களுக்கு மட்டும் மடை மாற்றி விட இலக்கிய குருஜீ ஒருவராலேயே முடியும்.

பெண்கள் மீதான் ஆண்களின் இத்தகைய வக்கிரங்கள் நிகழும் இடங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. அலுவலகம், பேருந்து நிலையம், முகநூல் தொடங்கி ஏன் இலக்கிய உலகம் (சாரு நிவேதிதாவை மனதில் கொள்க) வரை இது தொடர்கிறது. இதையெல்லாம் தனிப்பட்ட சாதியின் பிரச்சனையாக மாற்ற தனித்திறமை வேண்டும்.

லவ் ஜிகாத் புகழ் ஆர்.எஸ்.எஸ்-இடம் ஆரம்ப கல்வி பயின்றவராகையால் ஜெயமோகனக்கு இது எளிதாகவே வருகிறது. சாதி என்பது என் அளவில் அரசியல்வாதிகளுக்கும், பெருந்தொழிலதிபர்களுக்கும் தங்களின் அதிகாரத்தையும், சொத்துக்களையும் பெருக்கி பாதுகாத்து கொள்ள ஒரு வழி அல்லது கருவி. இதில் மயங்கி பலியாகும் அடித்தட்டு வர்க்கத்திற்க்கு எந்த ஒரு பலனும் இதில் இல்லை.

இராமதாசோ, வைகுண்டராஜனோ அல்லது டிவிஎஸ் முதலாளியோ அனைவருக்கும் சாதி என்பது ஒரு கேடயம்தான். சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ்ல் பணி புரிந்ததின் அடிப்படையிலேயெ சொல்கிறேன், பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் வெளியேறுகிறார்களா?

ஆமாம், அவங்க ஊரை காலி பண்ணி போய் ரொம்ப காலமாச்சு. பொழைக்க தெரியாத வழியில்லாத சில பேருதான் ஊர்ல இருக்காங்க. பீகார்ல இருந்தும் உ.பியில இருந்தும் ஏதோ பொழைக்க முடியமா தமிழ்நாட்டுக்கு வந்த மாதிரியில்ல சொல்றாரு அவரு. போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லாதானே இருக்கான், ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் கல்லு உடைக்குற மாதிரியில்ல இருக்கு ஜெயமோகன் சொல்றது. நான் கூட வளைகுடாவுலயும் இப்போ வேறு ஒரு வெளிநாட்டிலும் இருக்கேன்.

இதுக்கும் காரணம் திராவிடச்சதியா? இன்றைய உலகமயமாக்கல் இப்படித்தான் தொழிலாளர்களோட வாழ்வை சூறையாடுது, இதுல பார்ப்பனர்கள் படுற பாடு ரொம்பவும் குறைவுதான். எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல இருந்து மற்ற சாதி மக்கள் நிறைய பேரு கேரளாவுக்கும் குஜராத்துக்கும் போறாங்க கூலி வேலைக்கு. சுகந்திரமடையுறதுக்கு முன்னாடி தென் ஆப்ரிக்காவுக்கும், மொரிஷியசுக்கும் கூட தமிழன் அடிமையா போனான். ஒருத்தன் பொழைக்கவே வழியில்லாம போறான், இன்னொருத்தன் தன் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்க போறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒன்னுனு சொன்னா எதால சிரிக்கனு தெரியலை.

பண்பாட்டு அடையாளம்

எங்கள் குடும்பத்திற்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்ததே இது போன்ற சிறப்பு பூசைகள் செய்யும் பொழுதுதான். என் அம்மாவின் பூசையினால் மாமி ரொம்ப பக்தியானவுங்க என்று எங்கள் தெரு முழுவதும் பெயர் வேறு. அந்த மரியாதையும் பெயரும் மொத்தமும் சரிந்தது, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொழுதுதான்.

தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது. பிரதோசம் என்றால் என்னவென்ற தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்றோ எல்லா சிவன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது?

குமுதம், விகடன் தொடங்கி தினமலர்,தினத்தந்தி வரை ஆன்மிக இதழ் போட்டு பக்தியை காசாக்கும் காலமிது. பார்ப்பனிய பண்பாட்டையே அனைவரின் பண்பாடாய் நிறுத்தும் இவ்விதழ்களின் காலத்தில் ஸ்ரீராம நவமியை பார்த்து சிரிப்பது யார்? ஒருவேளை அவரது நாத்திக நண்பர் கமலஹாசனாய் இருக்குமோ!

பார்ப்பனர்களும் அதிகாரமும்

selfசட்ட சபையிலேயே தான் ஒரு பார்ப்பனத்தி என அறிவித்து கொண்ட தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வரென சங்க பரிவாரங்களால் போற்றப்படும் ஜெயாவின் காலத்திலா இப்படி ஒரு அசட்டுத்தனமான ஆதங்கம்? தமிழ்நாட்டுக்கு ஒரு மாமி டெல்லிக்கு சுப்பரமணிய சாமி. மத்தியிலும் மாநிலத்திலும் பார்ப்பனியத்தின் ஆட்சிதானே பிறகென்ன மீண்டும் அதிகாரமில்லை என்ற ஒப்பாரி!

அருந்ததிராயின் சமீபத்திய கட்டுரையான இந்தியாவின் இழிவு கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்வந்சிங் எழுதியதை மேற்கோள் காட்டியிருப்பார். நண்பர்களையும் தோழர்களையும் மீண்டுமொருமுறை நிதானமாக இக்கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் நீதித்துறையிலும் ஊடகங்களிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கு எப்படி மேலோங்கி இருக்கிறது என்று விளக்கியிருப்பார். அதிகாரத்திலும் உயர்பொறுப்பிலும் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்கும் உண்மை இவ்வாறிருக்க அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல துரத்தப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

வினவை தொடர்ச்சியாக படித்து வரும் வாசகன் என்ற முறையிலே கடைசியாக சொல்வது இதுதான், பார்ப்பனர்களை மட்டுமல்ல தேவர் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகளைகளை எதிர்த்தும் அவர்களின் வெறியாட்டத்தின் போது பகிரங்கமாக சாதியின் பெயரை சொல்லி கண்டித்தும் போராடுவது புரட்சிகர அமைப்புகள்தான்.முத்துராமலிங்கம் மீதான விமரிசனம் தொடங்கி தர்மபுரி இளவரசன் முதல் உசிலம்பட்டி விமலாதேவி வரை பல கட்டுரைகள் வினவில் உள்ளன.

திருவையாறு போராட்டங்களை குறித்து கீழைக்காற்று நூலான இசை,போதை, பொழுதுபோக்கு- நூலில் விரிவான கட்டுரைகள் உள்ளன. அறிவு நாணயமிருந்தால் ஜெயமோகன் அதற்க்கு முதலில் பதில் சொல்லட்டும். தமிழை நீச மொழியாக்கி மேடை ஏறவிடாத திருவையாறும், கன்னட ஒக்கலிக்கர் மாநாடும் ஒன்றா?

கலைஞருக்கும்,செயலலிதாவுக்கும்,ராகுல்காந்திக்கும் கருப்பு கொடி காட்டி அடியும் உதையும் பெற்று சிறையும் சென்றவர்கள் எம் தோழர்கள். மொழி,இன வெறியை எதிர்த்து வர்க்க அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை ஆதரிப்பதும் எம் தோழர்கள். இவை அனைத்திற்க்கும் ஆதாரம் வினவிலேயே உள்ளது, படித்து பார்த்து பின்னர் வழக்கம் போலதன் அகஒளி தரிசனத்தின் வாயிலாக இந்தியாவை தகர்க்க சீன சதி என ஜெயமோகன் தாரளமாய் அவதூறு எழுப்பலாம்.

தோழமையுடன்

_______________

(பெயர், ஊர் அடையாளங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன – வினவு)

 1. என்னது இது நம்ம அம்பியின் கடிதமா ? பார்பன மனம் மாறிய நம் அம்பியின் கடிதமாக இது இருக்க வேண்டும் என்று என் மனம் நினைக்கின்றது

 2. சுய சாதி மீது விமர்சனம் வைப்பதும், சுய சாதி அடையாளத்தை ஒழிப்பதும் மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று.

  ஜெயமோகன், பத்ரி, நீலகண்டன் போன்ற பார்ப்பன கும்பலை சாதி ஒழிப்பு சிந்தனை கொண்ட பார்ப்பன நண்பர்கள் பிரித்து மேய்வதைப் பாராட்டுகிறேன்.

  வாழ்த்துகள்.

 3. //ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை // என்னது “ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்” ஜெமோ எழுதுன கட்டுரைய ? நான் அவரு தெனமும் எழுதுற மகபாரதத்தோட ஒரு பார்ட் கதைன்னு நெனைச்சேன்

 4. ”பூர்வாசிரம பார்ப்பனன்” என்று மரியாதையுடன் வினவின் தலைப்பில் குறிப்பிடப்படும் கட்டுரையாசிரியர் ”தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது.” என்று வருந்துவதைப் படித்துமா இது அம்பியின் கடிதமா என்று கேட்கிறீர்கள்..? இது நியாயமா..!

  கட்டுரையாசிரியரின் பெயர் தெரியாததால் அவரை பூர்வாசிரம பார்ப்பனன் அல்லது சுருக்கமாக பூபா என்றே இனி குறிப்பிடுகிறேன்..

  நம்ம பூபா சென்னையை விட்டு தமிழகத்தில் வேறு எங்கும் போயிருக்காதவராய் இருக்க வேண்டும்.. அவரது ஊர் சுமார் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும், பல நூறு பார்ப்பனக் குடும்பங்களையும் கொண்ட ஊர் என்கிறார்.. இம்மாம் பெரிய ஊர் தமிழகத்திலோ, இந்தியாவிலோ எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.. சுமார் 2 லட்சத்துக்கும் அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தமிழகத்தில் சுமார் 15 இருக்கலாம்.. 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரையான மக்கள் தொகை கொண்ட சிறு நகரங்கள் ஒரு டஜன் இருக்கலாம்.. இந்த நகரங்களின் வாழ்க்கை முறைக்கும் ஊர்களில் வாழ்க்கை முறைக்கும் நடைமுறையில் பல வேறுபாடுகள் உண்டு.. குறிப்பாக சாதியத் தாக்கம் ஒப்பீட்டளவில் நகரங்களில் இருப்பதைவிட பேரூர்கள், ஊர்கள், சிற்றூர்கள், கிராமங்களில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காணலாம்.. ஆகையால் நமது பூபா யாரோ ஒரு வினவு வாசகரின் மானசீக புத்திரராக இருக்கலாம் என்ற வலுத்த சந்தேகம் எழுகிறது.. ஏதோ ஒரு நகரத்தைத்தான் ஊர் என்கிறாரோ என்ற சந்தேகத்தின் பலனை அவருக்களித்து மேற்கொண்டு பார்க்கலாம்..

  // பார்ப்பனன் என்ற ஒற்றை காரணத்துக்காக எந்த அவமதிப்பையும், ஒதுக்கலையும் நானும் என் குடும்பமும் பெற்றதில்லை. இன்றும் கூட சாமி என்றே எனது தந்தை ஊர்மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஆரம்ப நாட்களில் பலகார கடையும் அது நொடித்த பின் பெரும்பாலான நாட்களில் சிறுகடைகளிலும் பணி புரிந்தவர். பார்ப்பன சிறுவன் என்பதற்க்காக தனிமைபடுத்த பட்டதோ, கிண்டல் செய்யப்பட்டதோ, ஒதுக்கப்பட்டதோ இல்லை. //

  சாதிய முரண்பாடுகளும், பூசல்களும் உள்ள ஊராக இருந்து, திராவிட இயக்கங்களின் தாக்கம் கொண்ட மேல், இடைநிலைச் சாதியினர் உள்ள ஊராக இருக்கும் பட்சத்தில் ஒரு பலகாரக் கடை பார்ப்பானின் மகன் சிலபல கிண்டல்களை கட்டாயம் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.. இவர் சற்று கொடுத்து வைத்தவர் என்பதால் இவரது அபூர்வமான ஊரில் அப்படி ஒரு நிலை இல்லை என்பது தெரிகிறது.. ஜெயமோகனும் தமிழகத்தின் பொதுவான நிலையைக் கூறும்போது ஒரு சில அபூர்வமான ஊர்களை உள்ளடக்கியிருக்கமாட்டார்.. ஆனால் எந்த ஊராக இருந்தாலும் பொதுவுடமை இயக்கங்களின், சங்கங்களின் வலுவான தாக்கம் இருக்கும் ஊர்களில் சாதி ரீதியான ஒதுக்கங்களும், கிண்டல்களும் (அது இல்லாத ஊர்களுடன் ஒப்பிடும் போது) குறைவு என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..

  // மாறாக நரசிம்மன் எனும் இன்னொரு பார்ப்பன சிறுவனின் வீட்டிற்க்கு சென்ற பொழுதுதான் தனி அலுமினிய குவளையில் நீர் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டேன். ஆச்சாரமான அவர்கள் வீட்டில் யார் வந்தாலும் தனிக்குவளை! //

  இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திராவிட, பொதுவுடமை இயக்கங்களின் தாக்கம் அதிகம் இல்லாத ஊராக பூபாவின் ஊர் இருக்கலாம்.. ஏனெனில் நரசிம்ம பார்ப்பானின் குடும்பம் இத்தகைய அதிதீவிர ஆச்சாரத்தின் பயனான எதிர்வினையையும் சந்தித்து ’கொஞ்சம்’ குறைத்துக் கொண்டிருந்திருக்கும்.. இத்தகைய ஊர்கள் இன்னும் அபூர்வம்..

  // நான்காவது படிக்கும் பொழுது ‘கெட்ட’ வார்த்தை பேசும் குழுவொன்று இருந்தது. அந்த குழுவில் இடம்பெற்று கெட்டவார்த்தைகள் பேச வேண்டுமென்பது என் அவா!

  ஆனால்,

  “நீயெல்லாம் அய்யருடா, நீ கெட்ட வார்த்தை பேசக்கூடாதுடா” என்று ஒதுக்கப்பட்டேன்.

  “ஏண்டா அய்யருக்கு மட்டும் ரெண்டு ________ இருக்கு” என கூறி வலுக்கட்டாயமாக பல கெட்டவார்த்தைகள் பேசி அந்த குழுவுடன் சேர்ந்தது தனிக்கதை. //

  அய்யர் கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்னும் ஊரில் அய்யருக்கு இருக்கும் மரியாதை வியப்பளிக்கவில்லை.. ஆனால் சிறுவயதிலேயே இவர் வாலண்டியராக வண்டியில் ஏறுவதைப் பார்த்தால் பின்னாளில் பெரியாரின் வசைகளில் உள்ளத்தைப் பறிகொடுக்கப் போகும் அறிகுறிகள் தென்படுகின்றன..

  // அவன் ஒன்றோ அல்லது இரண்டோ படிக்கும் பொழுது நடந்தது. அவனுடைய சக வகுப்பு தோழன் ஒருவன் வலுக்கட்டாயமாக மீன் குழம்பை எனது தம்பிக்கு ஊட்டிவிட முயன்று, உதடெல்லாம் மீன் குழம்பாகி வீட்டில் வந்து தம்பி அழத்தொடங்க என் அம்மா பள்ளிக்கு சென்று புகார் அளித்தார்.

  பின்னர்தான் நடந்தது கொடுமை. ஊட்டி விட்ட பையனை வெளுத்து வாங்கிய வாத்தியார், பின்னர் அந்த சிறுவனை என் தம்பியின் காலிலும் விழச்செய்தார். சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சேட்டைகளுக்கு இந்த தண்டனைகள் எந்த விதத்தில் சரி? //

  சரியில்லைதான்.. அந்த ஆசிரியர் என்ன சாதிக்காரர் என்று சொல்லியிருந்தால் தெளிவாக இருந்திருக்கும்.. இத்தகைய ஊரில் இருந்து கொண்டு எனக்கெல்லாம் ஒரு அவமரியாதையும் நடக்கவில்லையே என்று ஜெயமோகனைச் சாடுவது ஏனோ.. மேலும், பெரியாரியத்தின் கோட்டைகளான ஊர்களில்கூட வலுக்கட்டாயமாக பார்ப்பானுக்கு மீன் குழம்பு ஊட்டும் செயல்கள் நடைபெற்றதில்லை என்பதையும் பார்க்கும் போது இதை சிறுபிள்ளைகள் விளையாட்டு என்று ஒதுக்கிவிடலாம்.. ஜெயமோகனும் இது போன்ற ஒரு குறும்பை ஒரு சிறுபிள்ளை விளையாட்டாகத்தான் கூறியிருக்கிறார்..

  // பார்ப்பனர்களின் ஆச்சாரத்திற்கு ஆபத்து வரும்போது ஏற்படுத்தியவர்களுக்குத்தான் கடும் தண்டனை. பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்வதிலிருந்து, குப்பையை திண்ண சொல்வது வரை பல்வேறு கொடுமைகள் அரங்கேறும் காலத்தில்,அரிதினும் அரிதாகவாவது ஊளைச்சாம்பார் சத்தம் உண்மையில் கேட்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. //

  இது பூபாவின் ஊரின் மகிமை.. ஊளைச்சாம்பார் சத்தம் விட்டுக்கொண்டே தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்லும் ஊர்களும் நகரங்களும் கணிசமானவை என்றுதான் ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்..

  // பள்ளி கல்லூரி காலங்கள் தொடங்கி யாரும் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதில்லை. வளைகுடா நாட்டில் நான் பணிபுரிந்த பொழுது அங்குள்ள அராபியர்களுடன் அவர்கள் வீட்டில் சேர்ந்து உணவருந்தும்போது கூட அவர்கள் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியதில்லை. //

  உண்மைதான்.. வாலண்டியராக வண்டியில் ஏறத்தயாராயிருக்கும் பூபா அசைவம் சாப்பிடுவதில்லை என்பது ஒரு இன்ப அதிர்ச்சியாக எனக்கு இருப்பதைப் போல், அவர் அசைவம் சாப்பிட்டிருந்தால் அது சாப்பிட அழைத்தவர்களுக்கு முதலில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும்.. அது தொடர்ந்தால் கிண்டலாயிருக்கும்.. கவுச்சி விலை இப்பெல்லாம் ஏறிப் போச்சு என்று நாசூக்காக கூறியிருப்பார்கள்.. அவர்களுக்கும் கட்டுப்படியாகாதே..

  // நிலப்பிரச்சனை பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா? எளியவர்களின் சாதாரண நிலங்கள் எங்கும் பிடுங்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார் கொடுக்க வரிசையில் நின்றவர் எத்தனை பேர்? //

  பார்ப்பனர்களுக்கு நிலவுடமை இருந்ததைவிட நிலத்தின் வருமானத்தின் மீது மட்டுமே உரிமை இருந்தது என்றுதான் ஜெமோ கூறுகிறார்.. தமிழகத்தின் பெரும்பான்மை பார்ப்பனர்களுக்கு இந்த வருமானமும் மிகவும் சொற்பம் அல்லது கிடையாது என்பதையும் கூறியிருக்கவேண்டும்..

  // வன்னிய பெண்களை கூலிங்கிளாசும், ஜீன்சும் போட்டு மயக்குறாங்க என்று இராமதாசு சொன்னது போல, தமிழகத்தின் அத்தனை பொறுக்கிகளும் பார்ப்பன பெண்களாக பார்த்து வம்பு செய்கிறார்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். சாலையில் தனியாக நடந்து செல்லும் அத்தனை சாதி,மத பெண்களும் ஆணாதிக்க பொறுக்கிகளிடம் அனுபவிக்கும் துன்பத்தை பார்ப்பன பெண்களுக்கு மட்டும் மடை மாற்றி விட இலக்கிய குருஜீ ஒருவராலேயே முடியும். //

  பூபா சொல்லும் சாதி பார்க்காத பொதுவான பொறுக்கித்தனம் நகரங்களில் உண்டு.. ஊர்களில் சாதியினரின் வலிமை உள்ள பெண்களிடம் பொறுக்கித்தனம் செய்தால் ஜெமோ சொல்வது போல் செவுள் பிய்ந்துவிடும்.. ஆனால் இது போன்ற விவரமான பொறுக்கிகள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் என்று கூற இயலாது.. ஆனால் குறிப்பிடக் கூடிய அளவுக்கு கணிசமான இடங்களில் இருக்கிறார்கள்..

  // சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ்ல் பணி புரிந்ததின் அடிப்படையிலேயெ சொல்கிறேன், பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை. //

  பார்ப்பான் டிவிஎஸ் போல முதலாளியாகத்தானே இருப்பான்.. உழைக்கும் தொழிலாளியாய் எந்த பார்ப்பான் இருக்கிறான்..? இதை நான் சொல்லவில்லை.. இணைய அறிவுசீவிகள் சிலர் இங்கேயும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்..

  // ஆமாம், அவங்க ஊரை காலி பண்ணி போய் ரொம்ப காலமாச்சு. பொழைக்க தெரியாத வழியில்லாத சில பேருதான் ஊர்ல இருக்காங்க. பீகார்ல இருந்தும் உ.பியில இருந்தும் ஏதோ பொழைக்க முடியமா தமிழ்நாட்டுக்கு வந்த மாதிரியில்ல சொல்றாரு அவரு. போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லாதானே இருக்கான், ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் கல்லு உடைக்குற மாதிரியில்ல இருக்கு ஜெயமோகன் சொல்றது. நான் கூட வளைகுடாவுலயும் இப்போ வேறு ஒரு வெளிநாட்டிலும் இருக்கேன். //

  போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லா இருந்தால் பாடிக்கும், பம்பாய்க்கும் போன பஞ்சைப் பார்ப்பான் எல்லாம் தங்களது கணக்கில் இல்லையா..?

  // இதுக்கும் காரணம் திராவிடச்சதியா? இன்றைய உலகமயமாக்கல் இப்படித்தான் தொழிலாளர்களோட வாழ்வை சூறையாடுது, இதுல பார்ப்பனர்கள் படுற பாடு ரொம்பவும் குறைவுதான். //

  90-களில் ஆரம்பித்த உலகமயமாக்கலுக்கு முன்பே திராவிட இயக்கங்கள் பார்ப்பானை உலகமயமாக்கிவிட்டன என்பதைப் பற்றியும் பூபா பேசவேண்டும்..

  // எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல இருந்து மற்ற சாதி மக்கள் நிறைய பேரு கேரளாவுக்கும் குஜராத்துக்கும் போறாங்க கூலி வேலைக்கு. சுகந்திரமடையுறதுக்கு முன்னாடி தென் ஆப்ரிக்காவுக்கும், மொரிஷியசுக்கும் கூட தமிழன் அடிமையா போனான். ஒருத்தன் பொழைக்கவே வழியில்லாம போறான், இன்னொருத்தன் தன் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்க போறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒன்னுனு சொன்னா எதால சிரிக்கனு தெரியலை. //

  எதாலயாவது சிரிச்சேதான் ஆகணுமா.. சிந்திக்கவேண்டாமா பூபா அவர்கள்.. மேற்படி சாதிக்காரர்களையெல்லாம் விரட்டிவிட்டு நிலங்களையும், பாறைகளையும், மணலையும் சுருட்டிக் கொண்டு இருப்பவர்கள் யார், அவர்களுக்கு ஆதரவாயிருந்து ஆள், அம்பு, அல்லக்கை என்று செல்வாக்கோடு இருக்கும் கரைவேட்டிகள் யார் என்பதைப்பற்றியும் சிறிது சிந்திக்கலாமே.. இன்றைக்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், நகரங்களுக்கு பஞ்சம் பிழைக்கவும் வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்..

  // எங்கள் குடும்பத்திற்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்ததே இது போன்ற சிறப்பு பூசைகள் செய்யும் பொழுதுதான். என் அம்மாவின் பூசையினால் மாமி ரொம்ப பக்தியானவுங்க என்று எங்கள் தெரு முழுவதும் பெயர் வேறு. அந்த மரியாதையும் பெயரும் மொத்தமும் சரிந்தது, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொழுதுதான். //

  மேட்டிமை, ஜம்பம் என்று வீணாய் அலட்டிக்கொண்டு திரியும் பல பார்ப்பனர்களுக்கு இப்படி குடும்பத்தில் ஒருவராவது கலப்புத் திருமணம் செய்து கொண்டால்தான் அடக்கம் வரும் என்பது சரிதான்.. நீங்கள் யாரோ எவரோ, இருந்தாலும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பூபா அவர்களே..
  ஆனால் இதில் மரியாதை சரிகிறது என்றால் பூபாவின் ஊரின் மகிமை அப்படி இருக்கிறது..

  // தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது. //

  தமிழ்-தாகம் அவர்களே, நான் பூபா அல்ல என்று தாங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்..!

  // பிரதோசம் என்றால் என்னவென்ற தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்றோ எல்லா சிவன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. //

  முன்பிருந்தே சிவன் கோயிலுக்கு போய்க் கொண்டிருந்தவர்களுக்கு பிரதோசம் என்றால் என்னவென்று தெரியும்.. இப்போது கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் பிரதோசமும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.. இதற்கும் பார்ப்பனர்களுக்கும் அத்தனை தொடர்பில்லை.. கடைசியில் மக்களை கோவிலுக்குள் தஞ்சம் புக வைத்த பெருமையும் பெரியாரின் சீடர்களுக்கே உரியது..

  // அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது? //

  அட்சய திரிதியைக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன ஓய் சம்பந்தம்..

  // குமுதம், விகடன் தொடங்கி தினமலர்,தினத்தந்தி வரை ஆன்மிக இதழ் போட்டு பக்தியை காசாக்கும் காலமிது. பார்ப்பனிய பண்பாட்டையே அனைவரின் பண்பாடாய் நிறுத்தும் இவ்விதழ்களின் காலத்தில் ஸ்ரீராம நவமியை பார்த்து சிரிப்பது யார்? ஒருவேளை அவரது நாத்திக நண்பர் கமலஹாசனாய் இருக்குமோ! //

  பார்ப்பன எதிர்ப்பும், பகுத்தறிவும் பேசிக்கொண்டு காசு பார்க்க ஆரம்பித்தால் மக்களுக்கு எஞ்சுவது ஆன்மிகம்தான், அதையும் சிலர் காசாக்குவது ஒரு பின்விளைவுதானே..

  // சட்ட சபையிலேயே தான் ஒரு பார்ப்பனத்தி என அறிவித்து கொண்ட தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வரென சங்க பரிவாரங்களால் போற்றப்படும் ஜெயாவின் காலத்திலா இப்படி ஒரு அசட்டுத்தனமான ஆதங்கம்? தமிழ்நாட்டுக்கு ஒரு மாமி டெல்லிக்கு சுப்பரமணிய சாமி. மத்தியிலும் மாநிலத்திலும் பார்ப்பனியத்தின் ஆட்சிதானே பிறகென்ன மீண்டும் அதிகாரமில்லை என்ற ஒப்பாரி! //

  ஜெ அதிகாரத்தில் இருப்பதால் பயனடைந்தவர்கள் யார்..? சு.சாமியால் யாருக்கு என்ன லாபம்..?
  ஜெமோ சொல்வது என்ன.. தாங்கள் கூறிக்கொண்டிருப்பது என்ன..?!

  // மேலும் நீதித்துறையிலும் ஊடகங்களிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கு எப்படி மேலோங்கி இருக்கிறது என்று விளக்கியிருப்பார். அதிகாரத்திலும் உயர்பொறுப்பிலும் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்கும் உண்மை இவ்வாறிருக்க அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல துரத்தப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! //

  நீதிபதியாக பார்ப்பனர்கள் வருவதற்கு முன் திறமையான வழக்கறிஞர்களாக இருந்திருக்கிறார்கள்.. அவர்கள் வழக்கறிஞர்களாக இருந்து பார்ப்பன சமூகத்திற்கோ, பிற சமூகங்களுக்கோ என்னத்தை சாதித்தார்கள் என்பது வேறு பிரச்சினை.. அருந்ததி ‘ராயை’ ஆளாக்கிய ஊடகங்கள் யாருடையவை..? பார்ப்பன எதிர்ப்பு ஊடகங்களின் பட்டியல் வேண்டுமா..?! இதில் பார்ப்பனர்களின் ஊடக அதிகாரம் என்று பூச்சாண்டி காட்டுவது புகழ்ச்சியா அல்லது இகழ்ச்சியா என்று தெரியவில்லை..

  // வினவை தொடர்ச்சியாக படித்து வரும் வாசகன் என்ற முறையிலே கடைசியாக சொல்வது இதுதான், பார்ப்பனர்களை மட்டுமல்ல தேவர் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகளைகளை எதிர்த்தும் அவர்களின் வெறியாட்டத்தின் போது பகிரங்கமாக சாதியின் பெயரை சொல்லி கண்டித்தும் போராடுவது புரட்சிகர அமைப்புகள்தான்.முத்துராமலிங்கம் மீதான விமரிசனம் தொடங்கி தர்மபுரி இளவரசன் முதல் உசிலம்பட்டி விமலாதேவி வரை பல கட்டுரைகள் வினவில் உள்ளன. //

  ஜெமோ பொதுவாக நிலவும் ஊடக நிலைமையைத்தானே கூறியிருக்கிறார்.. மேலும், வினவை அவரும் தினமும் படித்து மகிழ்வதாகவும் தெரிகிறது.. எனவே வினவை அவர் வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாக கருத இயலாது..!

  // படித்து பார்த்து பின்னர் வழக்கம் போலதன் அகஒளி தரிசனத்தின் வாயிலாக இந்தியாவை தகர்க்க சீன சதி என ஜெயமோகன் தாரளமாய் அவதூறு எழுப்பலாம். //

  வினவு அவரை நோண்டும்போது அவரும் வினவை நோண்டப்படாதா..?!! அவருடைய அகஒளி தரிசனத்தைவிட தங்களது அகஒளி தரிசனங்கள் பிரமிப்புட்டுறதா இருக்குங்காணும்..!

  • \\”பூர்வாசிரம பார்ப்பனன்” என்று மரியாதையுடன் வினவின் தலைப்பில் குறிப்பிடப்படும் கட்டுரையாசிரியர் ”தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது.” என்று வருந்துவதைப் படித்துமா இது அம்பியின் கடிதமா என்று கேட்கிறீர்கள்..? இது நியாயமா..!\\

   அது தானே! நியாயமா இது? ஷுயவிமர்ஷனம் வரிசையில் வந்து ஏத்துக்கோங்கோ என்று தீர்த்தம் கொடுக்க மட்டும்தான் அம்பிக்கு தெரியும். மத்துவாச்சாரிகளுக்கு மார்க்சிய கலைச்சொற்கள் மத்யமமாகத்தான் இருக்கும். ஜெமோவைவிட நிலப்புரத்துவம் சுயவிமர்சனம் என்று அம்பி கொடுக்கிற விதுர நீதி செந்துர்க்கமும் சேப்பு, தோழர்களின் கொடியும் சேப்பு; சேப்பும் சேப்பும் சேர்வதை விட்டு விட்டு பார்ப்பானை அடித்துக்கொண்டிருப்பது நியாயமா என்று கண்ணீர் உகுக்குகிற சாணக்கியர்களுக்கு கடிதம் எழுத வருமா?

   \\ நம்ம பூபா சென்னையை விட்டு தமிழகத்தில் வேறு எங்கும் போயிருக்காதவராய் இருக்க வேண்டும்.. அவரது ஊர் சுமார் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும், பல நூறு பார்ப்பனக் குடும்பங்களையும் கொண்ட ஊர் என்கிறார்.. இம்மாம் பெரிய ஊர் தமிழகத்திலோ, இந்தியாவிலோ எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.. குறிப்பாக சாதியத் தாக்கம் ஒப்பீட்டளவில் நகரங்களில் இருப்பதைவிட பேரூர்கள், ஊர்கள், சிற்றூர்கள், கிராமங்களில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காணலாம்..\\\

   2 இலட்சம் என்று சொல்றேளே அது எப்படி ஊராக இருக்கமுடியும் என்று கேட்கிறார். நகரமா ஊரா என்பதுதான் அம்பிக்கு இருக்கிற அதீத கவலை. ஏனெனில் “நகரங்களின் வாழ்க்கை முறைக்கும் ஊர்களில் வாழ்க்கை முறைக்கும் நடைமுறையில் பல வேறுபாடுகள் உண்டு.” என்கிறார். என்ன வேறுபாடு என்று சொன்னாதானே தெரியும். பார்ப்பனியம் என்று வந்தால் அய்யருக்கு வீடு கொடுக்காத அய்யங்கார் காம்பவுண்டு மேற்கு மாம்பலம் காஞ்சி மடத்திற்கு எதிர்த்தாப்ல தான் இன்னும் இருக்கு. பார்ப்பனியம் நகரமா இருந்தாலும் ஊரா இருந்தாலும் ஒன்றாகத்தானே இருக்கு. இதில் ஒப்பீட்டளவில் சாதியத் தக்கம் பூபா கூறுவதைப் போல நகரங்களில் கிடையாது என்று அம்பி, ஜெமோவிற்கு ஏற்றபடி சுரப்பொட்டியை டீயுன் செய்கிறார்.

  • \\ சாதிய முரண்பாடுகளும், பூசல்களும் உள்ள ஊராக இருந்து, திராவிட இயக்கங்களின் தாக்கம் கொண்ட மேல், இடைநிலைச் சாதியினர் உள்ள ஊராக இருக்கும் பட்சத்தில் ஒரு பலகாரக் கடை பார்ப்பானின் மகன் சிலபல கிண்டல்களை கட்டாயம் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்..\\

   இருக்காதா பின்ன? சின்னக்குத்து ஊசியின் எழுத்துக்கள் அத்துணை கூர்மையானவை அல்லவா! அம்பி, ஜெமோ, சேசாத்ரி போன்ற பிழைப்புவாதிகளுக்கு பார்ப்பனியத்தை மீட்டி வாசிக்கிற ராகம்பாடிகளுக்கு திராவிட இயக்கங்களின் தாக்கம் முள்ளாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே!

   \\ அய்யர் கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்னும் ஊரில் அய்யருக்கு இருக்கும் மரியாதை வியப்பளிக்கவில்லை..\\

   எப்படி ஓய் வியப்பளிக்கும்? பார்ப்பான் தின்று போட்டஎச்சியலையில் உருண்ட பொழுதே இது பார்ப்பானின் வேலை இல்லை என்று சொன்ன பெருந்தகை அம்பிதானே ஓய்!

   \\ ஆனால் சிறுவயதிலேயே இவர் வாலண்டியராக வண்டியில் ஏறுவதைப் பார்த்தால் பின்னாளில் பெரியாரின் வசைகளில் உள்ளத்தைப் பறிகொடுக்கப் போகும் அறிகுறிகள் தென்படுகின்றன..\\

   பெரியாரிடம் வசை வாங்கி புண்பட்ட பார்ப்பனக் கூட்டம் எல்லாம் பிராமணாள் நலச் சங்கம் என்று இன்று நிற்பதை இந்து ஆன்மீக கண்காட்சியில் பார்க்கவில்லையா? அதே சமயம் கடிதம் எழுதியவர் பூபாவாக மாறவில்லையா? இந்த இரு முனைகளுக்கிடையே அம்பி வைத்தியாக நிற்கவில்லையா?

   \\ சரியில்லைதான்.. அந்த ஆசிரியர் என்ன சாதிக்காரர் என்று சொல்லியிருந்தால் தெளிவாக இருந்திருக்கும்.. இத்தகைய ஊரில் இருந்து கொண்டு எனக்கெல்லாம் ஒரு அவமரியாதையும் நடக்கவில்லையே என்று ஜெயமோகனைச் சாடுவது ஏனோ..\\

   ஆசிரியர் என்ன சாதியாக இருந்தாலும் அவரின் சாதிக்கு தலைமையேற்றது பார்ப்பனியம் தானே! இதைவிட அகமண முறையில் பார்ப்பனர்களிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்சாதிகள் இருக்கிற பொழுது பூபாவின் மாத்வா கன்னட பார்ப்பனர் பிரிவு அய்யரையும் அய்யங்காரையும் விட உசந்தது என்று சொல்லி உத்ராதி மடத்தில் முன்வரிசையில் உட்கார்ந்து சாப்பிடுகின்றன. இப்படிப்பட்ட பார்ப்பனிய பரிமாணத்தை மறைத்துவிட்டுதான் பத்ரி சேசாத்ரியும், ஜெமோவும், அம்பியும் பார்ப்பனருக்கு அவமானம் என்று திராவிட பொதுவுடமை இயக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்றால் இந்த பிழைப்புவாதிகளின் பார்ப்பனியப்பிடிப்பு எத்தகையது என்பதை விளங்கிக்கொள்ளலாம். வைத்தி வேலை பார்க்கிறதுக்கு இப்படியொரு நாடகம்!

  • \\ இது பூபாவின் ஊரின் மகிமை.. ஊளைச்சாம்பார் சத்தம் விட்டுக்கொண்டே தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்லும் ஊர்களும் நகரங்களும் கணிசமானவை என்றுதான் ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்..\\

   நாயர் சாதியை தூக்கிப் பிடித்து நாடார் சாதியை புனைவு என்னும் பெயரில் இழிவுபடுத்துகிற ஜெமோவிற்கு சால்ரா அடிக்க அம்பிக்கு மானம் மரியாதை ஏதும் இல்லையா என்ன? அல்லது ஜெமோ பார்ப்பனர்களை இழிவுபடுத்தவில்லை ஆகையால் ஜெமோ உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் போலும். எதுவாக இருந்தாலும் அம்பியின் ஜெமோ பற்றிய புரிதல் பார்ப்பனியத்தியப் பற்றியொழுகுகிற மானக்கேடன்றி வேறல்ல.

   \\ உண்மைதான்.. வாலண்டியராக வண்டியில் ஏறத்தயாராயிருக்கும் பூபா அசைவம் சாப்பிடுவதில்லை என்பது ஒரு இன்ப அதிர்ச்சியாக எனக்கு இருப்பதைப் போல், அவர் அசைவம் சாப்பிட்டிருந்தால் அது சாப்பிட அழைத்தவர்களுக்கு முதலில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும்..\\

   பூர்வாசிரம பார்ப்பனர் பழைய மரபுகளையே மயிரென மதித்து குற்ற உணர்ச்சி அடைவது அம்பிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கவில்லை. அசைவம் மட்டும் உண்ணாமல் இருக்கிறாரே என்பது அம்பிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதாம். இதெயெல்லாம் ஓட்டைகள் என்று தலை கொடுக்கும் இண்டு இடுக்கு கரப்பானாக அம்பி நிறைய விவாதத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் நம்புகிற சித்தாந்தத்தை நடைமுறையில் தோய்த்து பார்க்காத விரும்பாத அம்பி மற்றும் ஜெமோ போன்ற அற்ப மனங்களுக்கு வேண்டுமானால் ஒரு காலத்தில் பூர்வாசிரம பார்ப்பானாக இருந்தவர்களின் சைவப் பழக்கம் சவாரி செய்யும் புஷ்பக விமானமாக இருக்கலாம். ஆனால் போராட்டங்களில் புடம் போடுபவர்கள் கம்யுனிசம் மட்டுமல்ல கறி திங்கவும் கற்றுக்கொள்வார்கள். எனவே இதெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி என்று பிழைப்புவாத அற்பர்கள் மட்டுமே சொல்வர். ஜெமொ சொல்லாத ஒன்றா;
   ‘பெரியாரின் நெற்றியிலே விபூதி இருந்தது’.

   இந்தக் கழிசடைகளின் பிரச்சாரமே ஒன்றுக்கும் இல்லாமல் நொறுங்கிப்போயிருக்கிறது. இதில் அசைவம் சாப்பிடாதது அம்பிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதாம்! பரிதாபம்!

   \\ பார்ப்பனர்களுக்கு நிலவுடமை இருந்ததைவிட நிலத்தின் வருமானத்தின் மீது மட்டுமே உரிமை இருந்தது என்றுதான் ஜெமோ கூறுகிறார்..\\

   ஜெமோவிற்கு அடிக்கிற அடுத்த சிங்கியாக இருந்தாலும் உண்மையான வாசகம் இல்லையா? பார்ப்பனர்கள் நிலம் இல்லாமலேயே நிலத்தின் வருமானத்தில் மட்டும் உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால் சுரண்டலின் ஆழ அகலம் லேசுபட்டதா? தில்லை ரியல் எஸ்டேட் என்று தீட்சிதப் பார்ப்பான்கள் கூறுபோட்டு வித்ததையும் நாம் அம்பி அடிக்கும் சிங்கி வழியாகவே புரிந்துகொள்வோமாக!

   \\ தமிழகத்தின் பெரும்பான்மை பார்ப்பனர்களுக்கு இந்த வருமானமும் மிகவும் சொற்பம் அல்லது கிடையாது என்பதையும் கூறியிருக்கவேண்டும்..\\

   இவர்கள் இவ்வாறு கண்டிசன் போட்டு விட்டு மக்களைச் சுரண்ட கணபதி ஹோமம் வளர்ப்பார்கள்! தன் கஷ்டங்களுக்கு போராட முன்வராதாவனின் பார்ப்பனியப்பிடிப்பை கேள்வி கேட்டு கொள்ளாத அம்பியின் நெஞ்சு இதையும் சொல்ல வேண்டும் என்று சப்புக்கொட்டு கொட்டுகிறது! ஓடுகிறவனை கட்டையால் வீழ்த்திவிட்டு இவனையும் தூக்கிக்கொண்டு ஓடு என்று சொல்வது மனவக்கிரத்தின் வெளிப்பாடின்றி வேறில்லை.

   \\ பார்ப்பான் டிவிஎஸ் போல முதலாளியாகத்தானே இருப்பான்.. உழைக்கும் தொழிலாளியாய் எந்த பார்ப்பான் இருக்கிறான்..? இதை நான் சொல்லவில்லை.. இணைய அறிவுசீவிகள் சிலர் இங்கேயும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்..\\

   பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் இருக்கிறதா இல்லையா?

   \\ போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லா இருந்தால் பாடிக்கும், பம்பாய்க்கும் போன பஞ்சைப் பார்ப்பான் எல்லாம் தங்களது கணக்கில் இல்லையா..?\\

   பம்பாய்க்கு போனது பஞ்சைப் பார்ப்பானா என்பதை மார்கழி சீசனில் சபாவில் குவியும் சங்கீத சிகாமணிகளைப் பார்த்தாலே தெரியாதா! நியாயமாய் அம்பியின் கணக்கில் புளிக்காய்ச்சல் விற்றுப் பிழைக்கும் மேலமாசி வீதி பார்ப்பான்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  • \\ 90-களில் ஆரம்பித்த உலகமயமாக்கலுக்கு முன்பே திராவிட இயக்கங்கள் பார்ப்பானை உலகமயமாக்கிவிட்டன என்பதைப் பற்றியும் பூபா பேசவேண்டும்..\\

   பார்ப்பன எதிர்ப்பு மரபு என்று சரியாகச் சொல்லுங்கள் அம்பி! மற்றபடி பார்ப்பான் கடல் கடப்பது தோசம் என்றாலும் உலகமயமாக்கியது முதலாளித்துவம் தான்! நாலு மணிக்கு பின்னூட்டம் எழுதுறேளே கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாவோ?

   \\ சிந்திக்கவேண்டாமா பூபா அவர்கள்.. மேற்படி சாதிக்காரர்களையெல்லாம் விரட்டிவிட்டு நிலங்களையும், பாறைகளையும், மணலையும் சுருட்டிக் கொண்டு இருப்பவர்கள் யார், அவர்களுக்கு ஆதரவாயிருந்து ஆள், அம்பு, அல்லக்கை என்று செல்வாக்கோடு இருக்கும் கரைவேட்டிகள் யார் என்பதைப்பற்றியும் சிறிது சிந்திக்கலாமே.. இன்றைக்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், நகரங்களுக்கு பஞ்சம் பிழைக்கவும் வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்..\\

   அம்பியின் கணக்குபடி கரைவேட்டிகள், ஆள், அம்பு, அல்லக்கை என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஆளும் வர்க்கம் யார்? அதிகாரவர்க்கம் யார் கையில் இருக்கிறது? இவ்வளவு சுரண்டினால் இவ்வளவு கிடைக்கும் என்று ஆடிட் போட்டுக்கொடுத்த ஆச்சாரியை பிராதுல சேர்க்காமவிட்டுபுட்டு ஆள்,அம்பு,அல்லக்கை என்று உதார் விட்டால் எப்படி?

   \\ மேட்டிமை, ஜம்பம் என்று வீணாய் அலட்டிக்கொண்டு திரியும் பல பார்ப்பனர்களுக்கு இப்படி குடும்பத்தில் ஒருவராவது கலப்புத் திருமணம் செய்து கொண்டால்தான் அடக்கம் வரும் என்பது சரிதான்.. நீங்கள் யாரோ எவரோ, இருந்தாலும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பூபா அவர்களே..
   ஆனால் இதில் மரியாதை சரிகிறது என்றால் பூபாவின் ஊரின் மகிமை அப்படி இருக்கிறது..\\

   சுயமரியாதை திருமணம் செய்கிற பார்ப்பனரின் செல்வாக்கு சரிகிறது என்றால் அது பார்ப்பனியத்தின் செல்வாக்கா அல்லது அனாமதேய ஊரின் மகிமையா? எப்படி ஊரின் மகிமை என்று சொல்லுங்களேன் அம்பி?

   \\ தமிழ்-தாகம் அவர்களே, நான் பூபா அல்ல என்று தாங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்..!\\

   தமிழ்தாகம் அவர்களே! அம்பி பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் ஜெமோ போன்ற பிழைப்புவாத கூட்டங்களின் அற்ப மனம் என்பதை தாங்கள் இப்போது உணர்ந்திருபீர்கள் என்று எண்ணுகிறேன்.

   • அம்பி,தென்றல் ,

    ஆம் அம்பி நீங்கள் பூபா அல்ல! ஆனால் ஜெமோவின் விசிறி! ஜெமோவின் கட்டுரையை விமர்சிக்கும் பூபாவின் கட்டுரை இது ! அதற்கு ஜெமோ சார்பான பதிலாகத்தான் உங்கள் பின்னுட்டம் மின்னுகிறது

    \\ தமிழ்-தாகம் அவர்களே, நான் பூபா அல்ல என்று தாங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்..!\\

    தென்றல் , மாற்றம் என்ற வார்த்தையை தவிர மாறாதது ஏதும் இல்லை என்னும் போது ,அம்பியும் அவரை நாம் வினவில் அவரின் பார்பனிய கருத்தாக்கத்துக்கு எதிராக விவாதித்து அம்பலபடுத்தும் போது மாறாமலா போவார் ?

    //தமிழ்தாகம் அவர்களே! அம்பி பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் ஜெமோ போன்ற பிழைப்புவாத கூட்டங்களின் அற்ப மனம் என்பதை தாங்கள் இப்போது உணர்ந்திருபீர்கள் என்று எண்ணுகிறேன்.//

  • \\ முன்பிருந்தே சிவன் கோயிலுக்கு போய்க் கொண்டிருந்தவர்களுக்கு பிரதோசம் என்றால் என்னவென்று தெரியும்.. இப்போது கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் பிரதோசமும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.. இதற்கும் பார்ப்பனர்களுக்கும் அத்தனை தொடர்பில்லை.. கடைசியில் மக்களை கோவிலுக்குள் தஞ்சம் புக வைத்த பெருமையும் பெரியாரின் சீடர்களுக்கே உரியது..\\

   கோயிலுக்கு தஞ்சம் புகவைத்தது பெரியாரின் சீடர்களுக்கு உரியது என்று அம்பி சேம் சைடு கோல் போட்டு ஆலய நுழைவுத் தீண்டாமையை அகற்றியது பார்ப்பன எதிர்ப்பு மரபு என்கிறார். மிகச் சரி. இதே பார்ப்பன எதிர்ப்பு மரபை இன்னும் கட்டியிருந்தால் சமஸ்கிருத கழிசடைத்தனத்தையும் பார்ப்பனர்களின் பிரதோச குப்பையையும் அகற்றியிருக்கலாம் என்பதை ஏற்று கொள்கிறாரா?

   \\ அட்சய திரிதியைக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன ஓய் சம்பந்தம்..\\

   பூபா கேட்ட கேள்வி “அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது?” இது. பார்ப்பனியம் பண்பாட்டு அடையாளத்தை எங்கே இழந்தது என்று கேட்கிற பொழுது பார்ப்பனர் பார்ப்பனர் என்று ஜெமோ மாதிரி அரசியல் கழிசடைத்தனத்தைக் காண்பித்தால் எப்படி அம்பி? வைகாசி, சித்திரை, கார்த்திகை வளர்பிறையில் யாகம் கோமம் வளர்த்து வயிறு வளர்க்கிறேள்! அந்தகாலத்துல மன்னர்கள் படியளந்தார்கள் அது நிலவுடமை-பார்ப்பனியம். இந்த காலத்துல முதலாளிகள் பே பண்றா! இது முதலாளித்துவம்-பார்ப்பனியம். இந்த உண்மை இப்படியிருக்க இங்கிதம் இல்லாம என்ன சம்பந்தமுன்னு கேக்குறேளே! நியாயமா?

   \\ பார்ப்பன எதிர்ப்பும், பகுத்தறிவும் பேசிக்கொண்டு காசு பார்க்க ஆரம்பித்தால் மக்களுக்கு எஞ்சுவது ஆன்மிகம்தான், அதையும் சிலர் காசாக்குவது ஒரு பின்விளைவுதானே..\\

   வெண்முரசு விற்றுக்கொண்டே அரவிந்த ஆசிரமத்தின் 300 வழக்குகளை பாலியல் சீண்டல்களை தரிசனம் என்று சொல்கிற ஜெமோவிற்கு மானமாவது மிஞ்சியதா? இதையும் பார்ப்பன எதிர்ப்போடு பகுத்தறிவோடு இணைக்கிற அம்பியின் கயமைத்தனம் முன் விளைவா? பின்விளைவா?
   \\ ஜெ அதிகாரத்தில் இருப்பதால் பயனடைந்தவர்கள் யார்..?\\

   ஜெவுக்கு ஒன்னுமே தெரியாது! எல்லாமே சூத்திரச்சி சசிகலா செய்தது என்று துக்ளக்கில் அதிகம் எழுதுகிறார் சோ. அதைத்தான் தாங்களும் கேட்கிறீர்களா?

   \\ சு.சாமியால் யாருக்கு என்ன லாபம்..?\\

   நாட்டை கூட்டிக்கொடுத்த சு.சாமியால் பயனடைந்தவர்களின் பட்டியலை எழுதுவது மிகவும் சிரமம். ஆனால் பறிபோனது பாரதமாதா.

   \\ நீதிபதியாக பார்ப்பனர்கள் வருவதற்கு முன் திறமையான வழக்கறிஞர்களாக இருந்திருக்கிறார்கள்.. அவர்கள் வழக்கறிஞர்களாக இருந்து பார்ப்பன சமூகத்திற்கோ, பிற சமூகங்களுக்கோ என்னத்தை சாதித்தார்கள் என்பது வேறு பிரச்சினை.. \\

   குஷ்வந் சிங் ஒரு வரியில் இப்படி சொல்லவில்லையா? “பார்ப்பனர்கள் பெற்ற 34-69% பதவிகள் அவர்களின் திறமையால் பெற்றவை என்று நான் நம்பிவிட்டேன்!”

   \\ அருந்ததி ‘ராயை’ ஆளாக்கிய ஊடகங்கள் யாருடையவை..?\\

   அருந்ததி ராயை எந்தந்த ஊடகங்கள் ஆளாக்கியது? முதலில் அருந்ததி எப்படி ஆளானார் என்பதை விளக்கவும்.

   \\ பார்ப்பன எதிர்ப்பு ஊடகங்களின் பட்டியல் வேண்டுமா..?!\\

   கண்டிப்பாக வேண்டும். தயவு செய்து தாருங்களேன்.

   \\ இதில் பார்ப்பனர்களின் ஊடக அதிகாரம் என்று பூச்சாண்டி காட்டுவது புகழ்ச்சியா அல்லது இகழ்ச்சியா என்று தெரியவில்லை..\\

   கஸ்தூரி ரங்கன் குடும்பத்தாருக்கு டிவி ராம சுப்பையருக்கு இருப்பது ஊடக அதிகாரமா இல்லையா?

   • தென்றல்,

    என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் என்பதாக நீங்கள் பின்னூட்டங்கள் என்ற பெயரில் வழக்கம் போல் எதையெதையோ உளறி வைத்து உங்கள் அறியாமையை காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.. நான் மெல்லுவதற்கு நிறைய அவலை என் கையில் கொடுத்துவிட்டு தாங்கள் மெல்லுவதற்கு கையில் மண்ணை ஏந்திக்கொண்டு தயாராக நிற்கிறீர்கள்.. ஏன் இப்பிடி ஆயிட்டீங்க..?! சுயவிமர்சனம் என்பது ஒன்றும் அத்தனை மோசமானதாக எனக்கு தெரியவில்லை.. முயன்றுதான் பாருங்களேன்..

    • நான் கூறுவதில் நம்பிக்கை இல்லையென்றால், சுயவிமர்சனத்தின் அவசியத்தை தமிழ்-தாகம் அவர்களிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும்..

     • பார்ப்பனியத்தை சுமக்கும் அம்பியிடம் அதற்கு எதிராக கேள்வி எழுப்ப படும் போது அவர் மற்றவர்களை குறை கூறி ஓடுவது பற்றி அம்பி தான் முதலில் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் !

  • ***நம்ம பூபா சென்னையை விட்டு தமிழகத்தில் வேறு எங்கும் போயிருக்காதவராய் இருக்க வேண்டும்.. அவரது ஊர் சுமார் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும், பல நூறு பார்ப்பனக் குடும்பங்களையும் கொண்ட ஊர் என்கிறார்.. இம்மாம் பெரிய ஊர் தமிழகத்திலோ, இந்தியாவிலோ எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.***

   அம்பி எதற்க்கும் கட்டுரையை ஒரு முறை முழுவதும் நிதானமாக படிப்பது நல்லது. கட்டுரையிலிருந்து

   $$$சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட ஊரில் மூன்றே குடும்பங்களை கொண்ட ஆகச்சிறுபான்மையிலும் சிறுபான்மை பார்ப்பன சாதி எங்களுடையது.
   ஒரு காலத்தில் பல கிராமங்களை சொத்தாக கொண்ட உத்ராதி மடமும், பல நூறு பார்ப்பன குடும்பங்களையும் கொண்ட ஊரில் மற்றவர் அனைவரும் உயர்ந்த வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என அமர்ந்துவிட கடைசியாக மிஞ்சியது எங்கள் மூவர் குடும்பங்களும் உத்ராதி மடமும் மட்டுமே.$$$

   தற்போது எஞ்சியவை மூன்று என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

   என்னுடைய ஊர் ஒன்றும் அபூர்வமானது அல்ல, தனி சட்டமன்ற தொகுதி அது. பெருநகரங்களை தவிர்த்து பார்த்தால் கூட குறைந்தது என் ஊரை போன்று 150 ஊர்களாவது காணக்கிடைக்கும் தமிழகத்தில். மேலும் என்னுடைய உறவினர்கள் தமிழகமெங்கும் விரவியுள்ளனர் ஈரோடு உள்பட. அவர்களின் அனுபவங்களையும் கணக்கில் கொண்டே சொல்கிறேன் ஜெயமோகனின் கட்டுரை பச்சை புழுகு.

   ***சாதிய முரண்பாடுகளும், பூசல்களும் உள்ள ஊராக இருந்து, திராவிட இயக்கங்களின் தாக்கம் கொண்ட மேல், இடைநிலைச் சாதியினர் உள்ள ஊராக இருக்கும் பட்சத்தில் ஒரு பலகாரக் கடை பார்ப்பானின் மகன் சிலபல கிண்டல்களை கட்டாயம் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.***

   யப்பா! இருந்து, கொண்ட, பட்சத்தில் என எத்தனை நிபந்தனைகள். இதுதான் எனக்கு அபூர்வமான ஊராக தெரிகிறது. இத்தனையும் உள்ள ஊர் தமிழகத்தில் எங்குள்ளது. ஒரு பத்து ஊர்களின் பெயரை பட்டியலிடுங்களேன்.

   ***ஊளைச்சாம்பார் சத்தம் விட்டுக்கொண்டே தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்லும் ஊர்களும் நகரங்களும் கணிசமானவை என்றுதான் ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்***

   அப்படிப்பட்ட ஊர் எங்குள்ளது? ஊளைச்சாம்பார் என்பதே கற்பனை. அப்படிப்பட்ட நகரங்களே இல்லை என்பதே உண்மை. ஆர் வியின் பின்னூட்டம் அதற்க்கு ஒரு உதாரணம். மேலும் எனக்கு தெரிஞ்சு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் தான் ஐயர்களின் உணவு :).

   ***வாலண்டியராக வண்டியில் ஏறத்தயாராயிருக்கும் பூபா அசைவம் சாப்பிடுவதில்லை என்பது ஒரு இன்ப அதிர்ச்சியாக எனக்கு இருப்பதைப் போல்***

   என்னை யாரும் வற்புறுத்தவில்லை, இருந்தாலும் நானே பின்னாட்களில் மாட்டுகறி உட்பட அனைத்தும் சாப்பிட ஆரம்பித்து விட்டேன். என்ன எலும்பு கடிக்க, மீன் சாப்பிட மட்டும் இன்னும் பயிற்சி போதவில்லை.நான் சொல்ல வந்தது தனிப்பட்ட பார்ப்பனரின் உணவுப்பழக்க வழக்கங்கள் இச்சமூகத்தில் மதிக்கப்படுகிறது என்பதே

   ***ஊர்களில் சாதியினரின் வலிமை உள்ள பெண்களிடம் பொறுக்கித்தனம் செய்தால் ஜெமோ சொல்வது போல் செவுள் பிய்ந்துவிடும்..***

   https://www.vinavu.com/2014/06/16/vanniar-caste-politics-protects-child-rapists-killers/

   இந்த சம்பவத்தில் தன் மகளை பறி கொடுத்தவரும் வன்னியரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரும் வன்னியரே.வன்னியர் வலுவான சாதியில்லையா? இதற்க்கு என்ன சொல்வீர்கள்? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது எல்லா சாதிகளிலும் நடப்பதுதான், பார்ப்பன சாதியினருக்கு மட்டும் எதிராக நடப்பதல்ல.

   ***ஆனால் இதில் மரியாதை சரிகிறது என்றால் பூபாவின் ஊரின் மகிமை அப்படி இருக்கிறது..***

   எனக்கு பரவாயில்லை, சாணிக்கரைசல் தொடங்கி குழாயடி வரை எத்தனையோ பிரச்சனைகளை எமது தோழர்கள் சந்திக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் என் வாழ்க்கை சீராகவே செல்கிறது. https://www.vinavu.com/2012/01/31/inter-caste-marriage-questions/ இதுதான் தமிழகத்தின் யதார்த்தம்.

   அம்பி நீங்கள் பார்ப்பனராக இருக்கும் பட்சத்தில், அதனால் நிஜ உலகில் நீங்கள் பட்ட அவமானங்களும் வேதனைகளும்தான் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன். மேலும் பார்ப்பனர்களுக்குள்ளேயே இருக்கும் ஏற்றதாழ்வுகள் குறித்து தங்களின் கருத்தும் விமர்சனமும் என்ன?

   மற்ற படிக்கு தென்றலின் பதில்களே தங்களுக்கு போதுமானதென்று கருதுகிறேன்.

   • // என்னுடைய ஊர் ஒன்றும் அபூர்வமானது அல்ல, தனி சட்டமன்ற தொகுதி அது. பெருநகரங்களை தவிர்த்து பார்த்தால் கூட குறைந்தது என் ஊரை போன்று 150 ஊர்களாவது காணக்கிடைக்கும் தமிழகத்தில். மேலும் என்னுடைய உறவினர்கள் தமிழகமெங்கும் விரவியுள்ளனர் ஈரோடு உள்பட. அவர்களின் அனுபவங்களையும் கணக்கில் கொண்டே சொல்கிறேன் ஜெயமோகனின் கட்டுரை பச்சை புழுகு.//

    சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு ’ஊர்’, அதுவும் தனி சட்டமன்ற தொகுதி என்று கூறினால் அது தனி நகரமாக அல்லது பெருநகரத்தின் பகுதியாகத்தான் இருக்கமுடியும்.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தமிழகத்தில் 20-30 க்குள் தான் இருக்கிறது.. தங்கள் ஊர் போன்றே சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊர்கள் தமிழகத்தில் 150 இருக்கும் என்று நீங்கள் கூறுவதை நீங்கள் மீண்டும் சரிபார்க்கவேண்டும்.. எனவேதான் நீங்கள் ஊர் என்று கூறுவது நகரமாக (அல்லது பெருநகரத்தின் பகுதியாக) இருக்கவேண்டும் என்று கூறினேன்.. சாதியம் பற்றி பேசும் போது நகரம், ஊர் என்று தெளிவாகக் குறிப்பிடுவது அவசியமானது.. தங்கள் உறவினர்கள் சிறீரங்கம், மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், நுங்கம்பாக்கம் போன்ற நகர/பெருநகரப்பகுதிகள் மற்றும் இது போன்று பார்ப்பனர்கள் அதிகம் இருக்கும் சில காஞ்சிபுரப் பகுதிகள், காவிரி டெல்டாப் பகுதிகளில் இருந்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்களில் அதிகம் வேறுபாடு இருக்கப்போவதில்லை.. ஜெமோ கூறுவதை மறுக்க இது போதாது..!

    // யப்பா! இருந்து, கொண்ட, பட்சத்தில் என எத்தனை நிபந்தனைகள். இதுதான் எனக்கு அபூர்வமான ஊராக தெரிகிறது. இத்தனையும் உள்ள ஊர் தமிழகத்தில் எங்குள்ளது. ஒரு பத்து ஊர்களின் பெயரை பட்டியலிடுங்களேன். //

    (1) மேலே நான் குறிப்பிட்ட பெருநகரப் பகுதிகள்;
    (2) பார்ப்பனர்கள் அதிகம் இருக்கும் சில காஞ்சிபுர, காவிரி டெல்டாப் பகுதிகள்.. இவற்றிலும் கூட சாதி பூசல்கள் அல்லது திராவிட இயக்கத்தின் தாக்கம் முற்றிலும் இல்லை என்றும் கூறமுடியாது..

    ஆனால் இவைகளைப் போன்ற ’தனித்தன்மை’ இல்லாத, தமிழகத்தின் பிற நகரங்கள், பேரூர்கள், ஊர்கள், பெரிய கிராமங்களில் பரவலாக உள்ள பார்ப்பனர்களின் மொத்த எண்ணிக்கை, மேலே (1)&(2)-ல் கூறிய பகுதிகளில் உள்ள பார்ப்பனர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம்.. ஜெமோ பொதுவாகக் குறிப்பிடுவதும் இவர்களைத்தான்..

    // அப்படிப்பட்ட ஊர் எங்குள்ளது? ஊளைச்சாம்பார் என்பதே கற்பனை. அப்படிப்பட்ட நகரங்களே இல்லை என்பதே உண்மை. ஆர் வியின் பின்னூட்டம் அதற்க்கு ஒரு உதாரணம். மேலும் எனக்கு தெரிஞ்சு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் தான் ஐயர்களின் உணவு :).//

    ஊளைச்சாம்பார் பல்வேறு வடிவங்கள் எடுக்கும்.. எடுத்துக்காட்டாக, நீங்கள் கூறும் வத்தக்குழம்பு, நீங்கள் கூறாத தயிர்சாதம், பருப்புசாதம், ரசம் இன்ன பிற, பல்வேறு அடைமொழிகளுடன்..!

    // என்னை யாரும் வற்புறுத்தவில்லை, இருந்தாலும் நானே பின்னாட்களில் மாட்டுகறி உட்பட அனைத்தும் சாப்பிட ஆரம்பித்து விட்டேன். என்ன எலும்பு கடிக்க, மீன் சாப்பிட மட்டும் இன்னும் பயிற்சி போதவில்லை.நான் சொல்ல வந்தது தனிப்பட்ட பார்ப்பனரின் உணவுப்பழக்க வழக்கங்கள் இச்சமூகத்தில் மதிக்கப்படுகிறது என்பதே //

    பார்ப்பனர்களின் சைவ சாப்பாட்டு வழக்கத்துக்கு எதிராக வற்புறுத்தல், வலுக்கட்டாயம் போன்றவை இருப்பதாக நானும் கூறவில்லையே..! மெல்லிய கிண்டல் வேண்டுமாயின் இருக்கலாம்.. இது நீங்கள் சைவப்பார்ப்பனராக இருந்தால் மட்டுமல்ல, அசைவப்பார்ப்பனராக இருந்தாலும்..!

    // தன் மகளை பறி கொடுத்தவரும் வன்னியரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரும் வன்னியரே.வன்னியர் வலுவான சாதியில்லையா? இதற்க்கு என்ன சொல்வீர்கள்? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது எல்லா சாதிகளிலும் நடப்பதுதான், பார்ப்பன சாதியினருக்கு மட்டும் எதிராக நடப்பதல்ல. //

    ”உங்க சாதிப் பொண்ண மட்டுமா கிண்டல் பண்றேன், என் சாதிப் பொண்ணயுந்தான் கிண்டல் பண்றேன், எல்லா சாதிப் பொண்ணுகளையுந்தான் கிண்டல் பண்றேன்.. ஏன்டா தேவையில்லாம சொல்லாம கொள்ளாம சாதிப் பிரச்சினையை எழுப்புறீங்க, போயி ஈவ் டீசிங் கேஸ் போடுங்க, அத விட்டுட்டு இப்படியா கூட்டமா வந்து செவுள் பிய்யுற மாதிரி அடிக்கிறது, சாதி வெறி பிடிச்சவனுகளா..”

    சாதிப் பாகுபாடு பார்க்காத ஒரு பொறுக்கியாக வடிவேலு நடித்தால் இப்படித்தான் காட்சி இருக்கும்..

    ஆனால் ஜெமோ கூறுவது சாதி பார்த்து பொறுக்கித்தனம் செய்பவர்களை அல்லவா பூபா அவர்களே..

    // பார்ப்பனர்களுக்குள்ளேயே இருக்கும் ஏற்றதாழ்வுகள் குறித்து தங்களின் கருத்தும் விமர்சனமும் என்ன? //

    ஏற்ற தாழ்வு பார்ப்பது என்று வந்துவிட்டால் அது சொந்த சகோதரர்கள், சொந்த பிள்ளைகள் வரைக்கும் வந்து நிற்கும்.. ஒரு பார்ப்பான் இந்த அற, தார்மீகச் சீரழிவிலிருந்து வெளியே வராத வரை மனிதனாக வாழ்ந்தேன் என்று கூற இயலாதவனாகிறான்.. ஒரு மனிதனாக வாழ்வதா அல்லது ஒரு பிரம்ம ராட்சசனாக வாழ்வதா என்று அவன் சிந்திக்கவேண்டும்.. ஒரு பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனீயனும்தான்..

   • // மற்ற படிக்கு தென்றலின் பதில்களே தங்களுக்கு போதுமானதென்று கருதுகிறேன். //

    நன்றாக கருதிக் கொள்ளுங்கள்.. அது உங்கள் கருத்துரிமை.. தங்களிடமிருந்து மேலும் எந்த பதிலையும் நானும் எதிர்பார்க்கவில்லை..

 5. என் பெயர் ஆர்வி. ஆர்வி சுப்ரமணியன். ஒரு காலத்தில் – வினவு தளம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் – இங்கே தீவிரமாக விவாதித்திருக்கிறேன். இந்தப் பக்கம் வருவதை நிறுத்தி சில வருஷம் ஆகிவிட்டது.

  நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன். இப்போது எப்படியோ அறியேன், நான் இங்கே வருவதை நிறுத்த ஒரே காரணம்தான். வினவு தள நிர்வாகிகளிடம் தெரிந்த அப்பட்டமான பிராமணக் காழ்ப்புதான். என் வாதங்களுக்கு எதிராக வாதாடியவர்கள் பிராமணர்களுக்கு ஒரு அளவுகோல், மற்றவர்களுக்கு ஒரு அளவுகோல் என்று பேசுவதை என்னால் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் வினவு தள நிர்வாகிகளே அப்படிப் பேசியது இங்கே செலவு செய்யும் நேரம் விரயம் என்று என்னை உணர வைத்தது. குறிப்பாக டாக்டர் ருத்ரன் என் genotype – அதாவது என் பிறப்பு என்னை, என் எண்ணங்களை, என் சிந்தனையை நிர்ணயித்தது – என்று சொன்னதை வினவு தளம் கண்டிக்கத் தயாராயில்லை, சப்பைக்கட்டு கட்டிக் கொண்டே போனது என்பது எனக்கு ஆரம்பத்தில் வியப்பாக இருந்தது; பிறகு இந்தத் தளத்தை தப்பாக எடைபோட்டுவிட்டேன் என்று உணர வைத்தது.

  டாக்டர் ருத்ரனும் நானும் அதற்குப் பிறகும் இணையம் வழியாக நிறையப் பேசி இருக்கிறோம், எங்களுக்குள் மனக்கசப்பு ஏதுமில்லை என்பதை பதிவு செய்கிறேன்.

  2008-2009, ஏன் 2010 வரை கூட வினவு தளத்தில் என்னுடன் வாதிட்டவர்கள், பின்னூட்டம் எழுதியவர்கள், வினவு தள நிர்வாகிகள் ஆகியோரிடம் பரவலாக பார்ப்பனர்களை அவர்கள் பிறப்பை வைத்து திட்டுவோம் என்ற tendency பரவலாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறேன். இணையத்தில் பொதுவாக என் வாதங்களை மறுக்கமாட்டார்கள், நீ பார்ப்பானா என்றுதான் முதல் கேள்வி வரும். வெறுத்துப் போய் நான் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் “நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன்” என்றே ஆரம்பிக்கத் தொடங்கினேன்.

  சுப்ரமணிய சாமியின் செய்கைகளை விமர்சனம் செய்வதை விட அவரது பிறப்பைத் திட்டுவதுதான் முக்கியமாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்றே யூகிக்கிறேன். கருணாநிதியை விமர்சிக்கும்போது இசை வேளாளரின் “ஜாதிப்புத்தி” என்று தப்பித்தவறிக் கூட சொல்லிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் ஜெயலலிதாவின் ஜாதியைக் குறிப்பிடாமல் இன்று வரை வினவு தளத்தில் அவரைப் பற்றி ஒரு பதிவு இருந்தால் சொல்லுங்கள்.

  ஜெயமோகனை நான் தமிழின் all-time முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக, எழுத்து மேதையாகக் கருதுகிறேன். அவர் எனது நண்பரும் கூட. ஆனால் பார்ப்பனர்களைப் பற்றி அவர் எழுதியிருப்பது மிகைப்படுத்துதல் என்றே நான் கருதுகிறேன். நான் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி வெகு நாளாயிற்று. இன்று நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த காலத்தில் சமூக தளத்தில் பார்ப்பனருக்கு ஜாதியால் அவமதிப்பு என்பது அத்தி பூப்பது போலத்தான். வினவு தளம், மற்றும் இணையத்தில்தான் இங்கே பலருக்கும் பார்ப்பான் என்பது ஒரு வசைச்சொல் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் தலித்கள் இன்றும் அனுபவிக்கும் அவமானங்களுக்கு இணையாக பார்ப்பனர்கள் எந்த அவமானத்தையும் அனுபவிப்பதில்லை, தலித்களையும் பார்ப்பனரையும் தராசின் இரு சமமான தட்டுக்கள் என்று ஜெயமோகன் எழுதுவது மிகைப்படுத்துதல் என்றே நான் கருதுகிறேன். ஆனால் வினவு தள அனுப்வங்களை கணக்கில் கொண்டால் இன்றே இப்படிப்பட்ட நிலை வந்துவிட்டதோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

  • ஆர்.வி,

   வினவு குறித்து நீங்கள் சொல்லியிருப்பது வடிகட்டிய பொய், அவதூறு, வரலாறு – உண்மையை திரிப்பது என்பதை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். அது என்னென்ன பொய், எப்போது சொல்லப்பட்டது என்பதையெல்லாம் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆதலால் விருப்பமிருக்கும் வாசகர்கள் இந்த இணைப்பில் சென்று https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13025 படிக்கலாம்.

   மற்றபடி ஜெயலலிதா குறித்து சாதியுடன் சொல்வது, மோடியை மதத்துடன் சொல்வது இதெல்லாம் ரத்தமும், சதையுமான வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. அது வெறுமனே உள்ளொளியைக் கிளப்பி சுய இன்பம் காணும் மேட்டிமைத்தனம் அல்ல. ஆக உங்கள் தலைக்குரிய தொப்பியை நீங்கள் தாராளமாய் அணியலாம். மாறாக உங்கள் தொப்பிக்கு எங்கள் தலையை அதாவது உழைக்கும் மக்களின் தலையை வெட்ட விரும்பாதீர்கள் என்று மட்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

   ஆர்.வியின் ஆல் டைம் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன் போன்றே ஆர்.வியும் நெஞ்சறிந்து பொய்யுரைக்கிறார். ஆதலால் இந்த காம்பினேஷன் இயல்பானதுதான். ஆனால் என்ன, வினவில் ஆர்.வியின் பொய்களை வெளியிடுவதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஜெயமோகனது மடத்தில் உண்மைகளை சொல்லக் கூட உரிமையில்லை.

   இறுதியாக ஜெயமோகன் சொன்னது போல பார்ப்பனர்கள் இங்கே கொடுரமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று நேரடியாகவே நீங்கள் சொல்லியிருக்கலாம்.
   //வினவு தள அனுப்வங்களை கணக்கில் கொண்டால் இன்றே இப்படிப்பட்ட நிலை வந்துவிட்டதோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.// என்று நீங்கள் நேரடியாக சொல்லியிருந்தாலும் அதற்கு முன் நீங்கள் சிந்திய ‘கண்ணீர்’ உண்மை என சிலர் நம்பிவிடலாம். ஆகவே பரசுராமனைப் போல எரிக்கும் போது சகுனி போல தாயமாடவேண்டியதில்லை.

   உங்கள் உண்மை முகத்தை அடையாளம் காட்டிய வாசகர் கேள்விக்குறி இப்போது வினவில் பின்னூட்டமிடுவதில்லை. ஒருக்கால் இதைப்பார்த்து அவர் வந்தால் எங்களைவிட உங்களை அழகாக அடையாளம் காட்டுவார்.

   எனினும் உங்களைப் போன்றவர்களின் அழுக்குகளை அறுவைசிகிச்சை செய்து அழகுபடுத்தும் சேவைப்பணியை வினவு என்றுமே செய்யும்.

   நன்றி!

   • “மற்றபடி ஜெயலலிதா குறித்து சாதியுடன் சொல்வது, மோடியை மதத்துடன் சொல்வது இதெல்லாம் ரத்தமும், சதையுமான வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. அது வெறுமனே உள்ளொளியைக் கிளப்பி சுய இன்பம் காணும் மேட்டிமைத்தனம் அல்ல. ஆக உங்கள் தலைக்குரிய தொப்பியை நீங்கள் தாராளமாய் அணியலாம். மாறாக உங்கள் தொப்பிக்கு எங்கள் தலையை அதாவது உழைக்கும் மக்களின் தலையை வெட்ட விரும்பாதீர்கள் என்று மட்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ஒரு வரியில் இத்தனை அந்தார் பால்டி.

    அது என்ன ரத்தமும் சதையும் கலந்த வாழ்கை. ஒன்றையான ஸைஸ் அறையில் உட்கார்ந்து கொண்டு உங்களை நீங்களே உழைக்கும் மக்கள் என்று என் குறிப்பிடுக்ரீர்கள்?

    why are you giving justifications for having multiple standards,one for yourself and one for others.

    people have common sense to figure who is what and what their priorities are? if you need a place without criticism and if u only need people who have your agenda in their heads,why bother getting people’s opinions on the internet?

  • RV ,

   தற்காலத்தில் வினவு தளத்தில் பார்பனிய கருத்துகளுடன் உடன்பட்டு அதனை தன் தோளில் சுமக்கும் அம்பி போன்றவர்களுடன் விவாதம் செய்து கொண்டு தான் இருகின்றேம். அவர்கள் பார்ப்பனியத்தை முழுவதும் துறக்காவிட்டாலும் பார்பனர்க்ளின் மேட்டிமை ஜம்பத்தை கிழ்கண்டவாரு சுட்ட்டிகாட்டுகின்றார்

   “மேட்டிமை, ஜம்பம் என்று வீணாய் அலட்டிக்கொண்டு திரியும் பல பார்ப்பனர்களுக்கு இப்படி குடும்பத்தில் ஒருவராவது கலப்புத் திருமணம் செய்து கொண்டால்தான் அடக்கம் வரும் என்பது சரிதான்.. நீங்கள் யாரோ எவரோ, இருந்தாலும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பூபா அவர்களே..”

   https://www.vinavu.com/2014/12/18/truth-about-tamil-brahmins/#comment-351915

   மேலும் அவரிடம் பார்பனியத்தை பற்றி அதன் சமுக ஆளுமைகள் பற்றி சுட்டிகாட்டபடும் போது எல்லாம் ,கேள்வி எழுப்பபடும் போது எல்லாம் அவற்றை நேரடியாக மறுக்காமல் பிறர் தவறுகளை பார்பனியத்துடன் ஒப்பிட்டு சமன் மட்டுமே செய்கின்றார் என்னும் போது அவரால் பார்பனியத்தை முழுமையாக ஆதரிக்க முடியவில்லை என்று தானே பொருளாகின்றது. இவை எல்லாம் வினவு தளத்தின் பார்பனியத்துக்கு எதிரான கருத்தியல் சார் வெற்றி தானே ? வினவில் அவருடன் நாங்கள் தொடர்ந்து விவாதிப்பதே அவரின் பார்பனிய கருத்துக்களை அம்பலபடுத்தி ,அவரின் பார்பனிய கருத்தாக்கத்தில் இருந்து அவரை விடுவித்து அவர் உள் பொதிந்து உள்ள மனிதத்தை வெளிக்கொண்டு வருவது தானே ? அதிலும் நாங்கள் வெற்றி பெற்று தானே உள்ளேம் ! தமிழ் ஈழம் சார் கருத்தாக்கத்தில் அவரின் கருத்துக்கள் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதும் ,ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவின் விடுதலைக்கு அவர் ஆதரவு கொடுப்பதும் பார்ப்பனியத்தையும் மீறிய அவரின் மனிதத்தை தானே வெளிக்காட்டுகின்றது. இவ்விடயங்களில் அம்பியுடன் சு.சாமியை ஒப்பிடும் போது எமக்கு அம்பி ஒரு எளிய நல்ல, வன்மம் அற்ற மனிதராக தானே தெரிகின்றார்!

   நான் முருக பிறப்புக்கான் பார்பன புராண கசடுகளை காட்டி அவரிடம் பேசும் போது கூட அவற்றை தமிழர் தொன்மம் என்று கூறி ஓடி ஒலிந்தாறே தவிர அம்பியால் பார்பன புராண கசடுகளை உயதி பேசும் பேச்சு எல்லாம் அவரிடம் இல்லை என்னும் போது அது அவரிடம் ஏற்பட்டு உள்ள சிறிய ஆனால் நல்ல மாற்றம் தானே ? ஒரு வேலை வினவில் RV தொடர்ந்து விவாதித்து இருப்பின் அவரும் ஒரு இன்றைய அம்பியாக ,எளிய மனிதராக மாற சாத்தியம் இருந்து இருக்கும்.

   அது சரி பார்பனிய ஆளுமை காருத்தாக்கத்தில் இருந்து விடுபடாத எவரையுமே பார்பான் என்று குறிப்பிடுவதில் RV க்கு என்ன சிக்கல் ?

  • ஜெயாவும், சுப்பிரமணியசாமியும் தாங்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக பெருமைப்படும் சாதி வெறியை வெளிப்படையாக கூறியிருக்கிறார்களே? அவர்களைப்பேசலாம். கருணாநிதி ஜாதி குறித்து பேச தேவையில்லை என்று நினைக்கிறேன்.

   ஜெயமோகன் எழுதியது மிகைப்படுத்துதல் என்று உங்களுக்கு தோன்றுவதற்கும், அயோக்கியதனம் சகிக்க முடியாத ஒன்று என்று இந்த கட்டுரையாளர்(முன்னாள் பார்ப்பனர்) கருதுவதற்கும் உள்ள இடைவெளியில் ஒரு மெல்லிய இழை தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இழையை ஆராய்ந்து பாருங்கள். அது ‘நூல்’இழை அகக்கூட இருக்கலாம்.

  • // ஆனால் நான் வளர்ந்த காலத்தில் சமூக தளத்தில் பார்ப்பனருக்கு ஜாதியால் அவமதிப்பு என்பது அத்தி பூப்பது போலத்தான். //

   ஆர்வி அவர்களே,

   நீங்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழல், தங்களது குடும்ப அந்தஸ்து போன்றவைகளின் பின்னனியில் தங்களது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பேசுகிறீர்கள்.. இதைத்தான் பூபாவும் பேசுகிறார்.. ஆனால் ஜெமோ கூறுவது தமிழகத்தில் பரவலாக கணிசமான இடங்களில் நிலவிய, நிலவும் நிலைமையை..

   // ஆனால் தலித்கள் இன்றும் அனுபவிக்கும் அவமானங்களுக்கு இணையாக பார்ப்பனர்கள் எந்த அவமானத்தையும் அனுபவிப்பதில்லை, தலித்களையும் பார்ப்பனரையும் தராசின் இரு சமமான தட்டுக்கள் என்று ஜெயமோகன் எழுதுவது மிகைப்படுத்துதல் என்றே நான் கருதுகிறேன். //

   தலித் மக்கள் அனுபவித்த இன்றும் அனுபவிக்கும் அவமானங்களுக்கு ஒரு போதும் நிகர் இல்லை.. ஜெமோ இருதரப்பையும் தராசின் சமமான தட்டுகளில் நிறுத்தவில்லை; இரு கோடிகளிலும் இருக்கும் இவர்கள் அவமானப்படுத்தப்படுதலுக்கு எளிய இலக்குகளாக இருப்பதையும், சில வகையான அவமானங்கள் பொதுவாக இருப்பதையும், பிற சாதியினருக்கு இருக்கும் தடுப்பரண்கள் இவர்களுக்கு இல்லாததையும் சுட்டிக்காட்டுகிறார் என்றுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்..

  • எனக்குத் தெரிந்து நான் பழகிய பார்ப்பான்கள் 100% தங்கள் பிறப்பின் மேல் ஒரு பெருமிதம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்..இருக்கிறார்கள். எனக்கும் அறிவு இருக்கு என்று நிரூபித்தால் மட்டுமே இறங்கி வருவார்கள். தம் பிறப்பின் மேல் பெருமை கொள்ளாத ஒரு பார்ப்பான் இருந்தால்..அவர் கலப்பினமாக இருப்பார்!

   • நான் பழகிய பல இதை நிலை சாதி மக்கள் குறிப்பாக தெலுங்கு மக்கள் பார்ப்பனர் மீது மிகுந்த வெறுப்பு கொண்டவர்.

    இன்றைக்கும் BC கொட்டாவில் பிச்சை எடுத்து வாழும் நாயுடு சைவ வெள்ளாளர் பட்டாணி இஸ்லாமியர் போன்ற சமூகத்தினர் தான் பார்ப்பன வெறுப்பை கக்குவதில் முதல் இடம் பிடிக்கின்றனர்.

    • ஹரிகுமார்……

     //இன்றைக்கும் BC கொட்டாவில் பிச்சை எடுத்து வாழும் நாயுடு சைவ வெள்ளாளர்…//

     முட்டாள்த்தனமாக எதையெதையோ பேசுவதா… சைவ வேளாளர்கள் பிற்ப்படுத்தப்பட்ட சாதியில்(BC) வருபவர்களல்ல. FC எனப்படும் முற்ப்படுத்தப்பட்ட சாதியில் வருபவர்கள். இதே தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் “பிராமணாள்” உணவு விடுதி என்று இருந்தப் பொழுது அதற்க்கு இணையாக சைவ வேளாளர்களால் “சைவாள்” உணவு விடுதிகள் விமர்சையாக செயல்ப்பட்டு வந்தது குறிப்பிட தக்கது. அனைத்து சாதியிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறாகள் என்பதை உணர்ந்துப் பேசவும்.

    • பிபிச்சை எடுத்து…சிரிப்பு வருது…

     யார் பிச்சை எடுத்து பிழைப்பது? கோவில் விக்கிரகம் முன்பாக அர்ச்சனை தட்டை ஏந்தி பிச்சை எடுத்து பிழைப்பது பூணூல்களா….(அ) நீங்கள் வசைபாடும் நாயுடு.பிள்ளை,முதலியார் வகயராவா?

  • \\வினவு தளம், மற்றும் இணையத்தில்தான் இங்கே பலருக்கும் பார்ப்பான் என்பது ஒரு வசைச்சொல் என்பதை நான் உணர்ந்தேன். //

   இல்லை.பார்ப்பனர் என்பது பிராமணர் என்பதற்கு இணையான தமிழ் சொல் என்ற அளவில்தான் பயன்படுத்தப்படுகிறது.அது அவமதிப்பு தரும் வசைச்சொல் இல்லை என்பதால்தான் அம்பி,வெங்கடேசன் போன்ற பார்ப்பன சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் கூட அச்சொல்லை தயக்கமின்றி பயன்படுத்துகிறார்கள்.மேலும் இது குறித்து வினவில் படித்த பின்னூட்டம் ஒன்று.

   https://www.vinavu.com/2012/03/14/jayas-govt-sucks/#comment-58476

   சுட்டியிலிருந்து

   ”இழிவு படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படுவது அல்ல பார்ப்பனர் என்ற சொல்.பிராமணர்-Brahman- Brahmin -என்ற வட மொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்தான் பார்ப்பனர் எனபது.அது மட்டுமல்ல பிராமணர் என்று சொல்லும்போது அவர் பிரம்மனின் தலையில் பிறந்தவர்,உயர்ந்த பிறவி,ஏனையோர் தாழ்ந்த சாதி சூத்திரன் பஞ்சமன் என்ற கட்டுகதையைஎல்லாம் ஒப்புக் கொள்வதாகிறது.எனவேதான் பிறவியிலேயே இழிவு கற்பிக்கப்படுவதை மறுக்கும் வகையில் மான உணர்வு உள்ளோர் பிராமணர் என்பதை விடுத்து தமிழ் சொல்லான பார்ப்பனர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.ஆகவே பிறரை இழிவு படுத்துவதற்கு அல்ல தம் மீது இழிவு சுமத்தப்படாமல் இருக்கவே பார்ப்பனர் என்ற சொல்.”

   • திப்பு

    பிராமணன் என்றால் பிரம்மதை அறிந்தவன் என்று பொருள்.
    ________________

    பார்ப்பான் என்பது வசை சொல் இல்லை,ஆனால் இன்று ஆகி விட்டது.

    பள்ளர் என்பது எப்படி வசை சொல்லொ அது போலவே தான் பார்ப்பானும் இன்று வசை சொல்.

    உங்கள் வெட்டி வியாக்கியானம் எல்லாம் தேவை இல்லை.

    ___________________

    ஆனால் தயநந்த் சரஸ்வதி சொன்ன கூற்றை,(அதுவும் நிரூபணம் ஆகவில்லை) ஹிந்துக்களின் வேத வாக்காக நீங்கள் கூறுவது எப்பவும் போல நகைச்சுவையாக உள்ளது.திப்பு

    பிராமணன் என்றால் பிரம்மதை அறிந்தவன் என்று பொருள்.

    • பார்ப்பான் என்பது வசை சொல் அல்ல. குறி பார்த்தல், சோதிடம் போன்ற தொழில்களை கொண்டிருந்ததால் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அழைக்கப்படுகின்றனர். பிரம்மத்தை அறிந்தவர்கள்(?), பிரம்மாவின் தலையில் உதித்தவர்கள் என்பதால் பிராமணர்கள் என்பதை பார்ப்பனர்களும், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்பவர்களும் நம்பிக் கொள்ளட்டும். மற்றவர்கள் அதனை ஏற்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

     ஐயர் என்று அழைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. ஐயர் என்றால் உயர்ந்தவர்; தலைவர் என்ற பொருள் கொடுக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் உயர் தகுதியை எப்படி அங்கீகரிக்க முடியும்? பகுத்தறிவும், நாகரிகமும் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நவீனக் காலட்டத்தில் காலப்பிழை கொண்ட சொல்லாட்சிகளை(பிராமணர், ஐயர்,ஐயங்கார்) பார்ப்பனர்களும், பார்ப்பனீயத்தை ஏற்பவர்களும் விட்டொழிப்பதே நல்லது.

     • “ஐயங்கார்” என்பதற்கு “ஐந்து அங்கங்கள் கொண்டோர்” என்றும் பொருள் சொல்கிறார்கள். 1. வைணவத்தின் மூன்று மந்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல் (“ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரம் மற்றும் திருமாலிடத்து சரணாகதி அடைவதை பேசும் இரண்டு மந்திரங்கள்) 2. ஸ்ரீராமாநுஜரை சரணம் அடைவதை குறித்து பெயருக்கு பின்னால் “தாசன்” என்ற பட்டம் ஏற்றல் (உதாரணமாக, “வெங்கடேச தாசன்” என்றவாறு). 3. கேசவன் உள்ளிட்ட திருமாலின் பன்னிரு நாமங்களை குறித்து உடலில் பனிரெண்டு இடங்களில் திருமண் அணிதல். 4. திருமாலை தினமும் முறைப்படி பூஜித்தல் (இந்த மரபான வழியில் பூஜை செய்தால் அதன் வடமொழி பாகத்தை விட தமிழ்மொழி பாகம் அதிக நேரம் எடுக்கும்). 5. சங்கு, சக்கர சின்னங்களை தீ கொண்டு உடலில் பொறித்துக் கொள்ளுதல். இவ்வைந்தும் வடமொழியில் “பஞ்சசம்ஸ்காரம்” என்று அழைக்கைப்படும். இந்த ஐந்தையும் ஒரு குருவின் மூலம் தொடங்கப் பெறுபவன் வைணவ பரம்பரையில் இணைகிறான். இந்த தொடக்கச் சடங்கு (initiation ceremony ) “சமாஸ்ரயணம்” என அழைக்கப்படும். மேலதிக விவரங்களை இந்த தளத்தில் காணலாம்: http://www.mudaliandan.com/samashrayanam.php

      இக்காலத்திலும் இந்த சடங்கு நடைபெறுகிறது. ஆனால், “ஐயங்கார்” ஜாதியை சேர்ந்தோரை தவிர மற்றவருக்கு இச்சடங்கு நடத்துகிறார்களா என எனக்குத் தெரியவில்லை. மேலே சொன்ன தளம் “During ‘SamAshrayanam’, the AchAryA initiates a person, irrespective of caste, creed or sex, as his sishyA” என்று சொல்கிறது. “irrespective of sex” என்பது நடைமுறையில் உள்ளது; “irrespective of caste” என்பது நடைமுறையில் உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்ததில்லை.

      ஸ்ரீராமானுஜர் இந்த ஐந்து-அங்க சடங்கு மூலம் சாதி வேறுபாடின்றி பலரையும் வைணவ பரம்பரையில் சேர்த்தார். அந்த வகையில் “ஐயங்கார்” என்பது “ஸ்ரீராமானுஜ மதத்தை சார்ந்தவன்” என்று பொருள் கொள்ளலாம்.

      ஆனால், அது அப்படிதான் என ஜல்லியடிக்க விருப்பமில்லை. தற்காலத்தில் “ஐயங்கார்” என்பது ஜாதிப் பூர்வமானதாக மட்டுமே உள்ளது. ஸ்ரீராமானுஜ மதமும் ஜாதி கலந்ததாகவே உள்ளது. ஸ்ரீராமானுஜ மதம் ஜாதி கடந்து மாற வேண்டும் என்பதும், இதில் ஈர்ப்பு கொண்டு வருவோர் அனைவரும் “தொண்டர் குழாம்” என்ற வகையில் வேறுபாடின்றி அமைய வேண்டும் என்பதும் என் கனவு.

      • நீங்கள் முதல் பத்தியில் பகிர்ந்திருக்கும் தகவல்கள் வேடிக்கையாக இருக்கின்றன. நான் அறிந்த வரையில், “வைணவ பார்ப்பனர்கள் மற்ற ஸ்மார்த்த, சைவ பட்டர் பார்ப்பனர்களிடம் இருந்து சற்றே வித்தியாசப்பட்டவர்கள். தமிழ் மீது மதிப்பு கொண்டவர்கள். தமிழ்ப் பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாடுகிறவர்கள். நம்மாழ்வார் பாடல்களை திராவிட வேதம் என்று போற்றுபவர்கள். பார்ப்பனர் அல்லாத வைணவர்களையும் வைணவர்களாக அரவணைப்பவர்கள்”. எனினும், அவர்களில் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டோர் எத்தனை பேர் இருக்கின்றனர்? நால் வருணத்தை ஏற்பவர்கள் தானே இவர்களும். யூ-வுக்கும், ஒய்-க்கும் அது தானே பொருள்.

       • சுகதேவ்,

        வைணவ அய்யங்கார்களிடையே இரண்டு பிரிவுகள் உள்ளது. வடகலை & தென்கலை.

        வரலாற்று ரீதியில் வடகலை அய்யங்கார்களிடையே சனாதன வெறி அதிகம் என்றும் தென்கலைகள் இடையே இது குறைவு அல்லது இல்லை என்றும் சொல்லக் கேள்வி.

        வெங்கடேசன் சொல்வது தென்கலை பிரிவை என்று நினைக்கிறேன். சரி தானே?

        இவர்களிடையே கூட வடகலை பிரிவினர் தென்கலை பிரிவினரை இழிவாக பார்ப்பதும் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பதும் உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

        இதெல்லாம் எவ்வளவு சரி என்று தெரியாது, இந்தப் பிரிவுகள் பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் புரிந்து கொள்வேன்.

        • தொடராது. வைணவம் பற்றி தொடர்ந்து நிறைய எழுதியாகி விட்டது. எனவே, இது தொடராது. மன்னாரு கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகள்.

         // வரலாற்று ரீதியில் வடகலை அய்யங்கார்களிடையே சனாதன வெறி அதிகம் என்றும் தென்கலைகள் இடையே இது குறைவு அல்லது இல்லை என்றும் சொல்லக் கேள்வி. //

         இருவரிடத்தும் சனாதனம், ஜாதி-வேறுபாடு பார்க்கிறார்கள். நீங்கள் சொன்னது போல, ஒப்பீட்டளவில் தென்கலையில் சனாதனம் குறைவு. வடகலை வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். தென்கலை நாலாயிரத்துக்கு. அதன் பாதிப்பாக இருக்கலாம்.

         // இவர்களிடையே கூட வடகலை பிரிவினர் தென்கலை பிரிவினரை இழிவாக பார்ப்பதும் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பதும் உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். //

         The feeling is mutual.

         நிற்க. மேலே சொன்னதெல்லாம் முப்பாட்டன் காலத்திய நடைமுறைகள். தற்காலத்தில் வடமொழியும் கிடையாது, தமிழும் கிடையாது. வேதமும் கோவிந்தா! !நாலாயிரமும் காலி! இருவரின் பொது மொழி C, C++, Java! பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்றவகையில் சமீப காலத்தில் வேதம்-நாலாயிரம் கற்பது மீண்டும் பிரபலமாக தொடங்கியுள்ளது. இங்கே, தெரிந்த மொழி என்பதால் நாலாயிரம் முந்துகிறது, இரு தரப்பிலும்! திருமண பந்தம் என்ற வகையில் கலை-வேறுபாடு பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. கல்யாணம் கட்ட பொண்ணே கிடைக்க மாட்டேங்குது! இதுல எவன்யா வடகலை-தென்கலை பார்க்கறது!

       • மன்னாரு, மறுமொழி 5.6.1.1.1 வடகலை-தென்கலை இருவருக்கும் பொருந்தும்.

        ——————————————

        இந்த பேதம் பற்றி சில குறிப்புகள். அங்கே-இங்கே படித்தவை தான். Take them with a pinch of salt.

        ஸ்ரீராமானுஜர் காலம் (கி பி1017 – 1137) வரை இப்பேதமில்லை. அவர் காலத்திற்கு பின் இந்த பேதம் சில தளங்களில் நடைபெற்றது. ஒன்று பூகோள ரீதியாலனது என்கிறார்கள். தொண்டை மண்டலத்தை சார்ந்த திருப்பெரும்பூதூரில் அவதரித்த ஸ்ரீராமானுஜர் காஞ்சியில் பல காலம் வாழ்ந்த பின், திருவரங்கத்துக்கு இடம் பெயர்ந்தார். அவ்வகையில் காஞ்சி (வடக்கு) – திருவரங்கம் (தெற்கு) என்ற வகையில் அவரது சீடர்கள் பிரிந்தனர் என சொல்கிறார்கள். அடுத்து, வடமொழி (மற்றும் அது சார்ந்த வேதங்கள்), தென்மொழி (தமிழ், நாலாயிரம்) என இரண்டிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமக்குப் பின் இவற்றை பேணுவதற்காக இரு சீடர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்து பேதம் உருவானதாக கருத்தும் உண்டு.

        இவ்வாறு தொடங்கிய பேதம் வேதாந்த தேசிகர் (கி பி 1268 – 1370), மணவாள மாமுனிகள் (கி பி 1370 – 1443) ஆகியோர் காலத்தில் ஸ்திரப்பட்டது. இருபிரிவினரும் ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆச்சார்யர்கள் பொதுவானவர்கள். அதன் பின்னர் வருவோரில் வடகலையாரின் முக்கிய ஆசார்யன் தேசிகர்; தென்கலையாரின் முக்கிய ஆசார்யன் மணவாள மாமுனிகள். மற்ற பிரிவு ஆசார்யர்களை முழுதும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. யார் முதன்மையானவர் என்பதில் வேறுபாடு. உதாரணமாக, காஞ்சி (வடகலை), திருவல்லிக்கேணி (தென்கலை) ஆகிய கோவில்களில் இருவருக்கும் தனி சந்நிதி வைத்து அவர்கள் பிறந்த நாள் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. எளிமைப்படுத்தி சொன்னால், அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி-எம்ஜிஆர் இருவரை முன்வைத்து திமுக-அதிமுக என பிரிந்ததைப் போன்றது.

        இத்தருணத்தில், முதலில் சொன்ன பேதங்கள் பொருத்துவதை காண்கிறோம். தேசிகர் காஞ்சியை சார்ந்தவர், மாமுனிகள் திருவரங்கத்தை சார்ந்தவர். அடுத்து, இவ்விருவரும் வடமொழி-தென்மொழி இரண்டிலும் தேர்ச்சி பெற்று நூல்கள் எழுதி இருந்தாலும், தேசிகர் நூல்களில் வடமொழியும், மாமுனிகள் நூல்களில் தமிழும் அதிக முக்கியத்துவம் பெரும். தற்காலத்திலும் இவ்விரண்டையும் காணலாம். காஞ்சி வடகலையாரின் கோட்டையாகவும், திருவரங்கம் தென்கலையாரின் கோட்டையாகவும் உள்ளது. அதே போல இரு பிரிவினரும் இரு மொழிகளையும், வேதம்+நாலாயிரம் இரண்டையும் ஏற்றாலும், முதலாமவர் வடமொழி+வேதங்கள் என்பதற்கும், இரண்டாமவர் தமிழ்+நாலாயிரத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். உதாரணமாக, கோவில் கோஷ்டிகளில் பெருமாளுக்கு பின்னால் செல்லும் வேத கோஷ்டியில் வடகலையாரையும், முன்னால் செல்லும் நாலாயிர கோஷ்டியில் தென்கலையாரையும் அதிகம் காணலாம். அதே போல, ஒருவர் தன் மகனுக்கு பயிற்சி அளிக்கும் போது வடகலையில் வேதம் முழுதும், கூடவே முக்கிய நாலாயிர பகுதிகள் என்ற ரீதியில் அமையும். தென்கலையில், நாலாயிரம் முழுதும், கூடவே வேதத்தின் முக்கியப் பகுதிகள் என்ற ரீதியில் அமையும். மேலே சொன்னவை பொதுவில் (on an average) நிகழ்பவை என்றும், வேறுபாடு கறாரானது இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். இரண்டு மொழிகளிலும் புலமை பெற்று வடமறை, தென்மறை இரண்டிலும் தேர்ச்சி பெற்று நூல்கள் எழுதிய ஜாம்பவான்கள் இரண்டு தரப்பிலும் இருந்துள்ளனர்.

        (தொடரும்)

      • “வேடிக்கை” என்பதை “amusing” என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்களா? இந்த ஐந்தையும் வைத்து ஸ்ரீராமானுஜ மதத்தை வரையறுப்பது அல்ல என் நோக்கம். “ஐயங்கார்” என்ற வார்த்தையின் மூலமென்ன என்ற கேள்விக்கு, அதை “பஞ்ச சம்ஸ்காரம்” என்ற கோட்பாட்டோடு தொடர்பு சொல்லி விளக்கும் ஒரு பார்வையும் உண்டு என்பதை சுட்டிக்க் காட்டினேன். அவ்வளவுதான். இந்த பஞ்ச சம்ஸ்காரம் என்ற கோட்பாடு ஏதோ ஒரு ஹைதர் அலி கால நூலில் இருந்து உருவி எடுத்துப் போடவில்லை. இவை தற்போதும் இம்மதத்தின் முக்கியக் கோட்பாடுகளாக உள்ளன. நான் குறிப்பிட்ட சடங்கும் பரவலாக நடைமுறையில் உள்ளது (எனக்கும் நடந்தது).

       நீங்கள் சொன்ன மற்ற விஷயங்களைப் பற்றிய உரையாடல் இக்கட்டுரைக்கு தொடர்பில்லாமல் தனி பாதையில் சென்றுவிடும் என தோன்றினாலும், நாலாயிரம் பற்றி வினவில் எழுதக் கிடைக்கும் வாய்ப்பை தவற விட முடியுமா?

       நீங்கள் சொன்னபடி இம்மதத்தில் நாலாயிரம் மிக முக்கிய நூலாக கருதப்படுகிறது. கோவில் விழாக்களில் வடமொழி வேதங்களுக்கு இணையாக ஓதப்படுகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதமென போற்றப்படுகிறது. உதாரணமாக, திருவாய்மொழி ஓதுவதன் முன் பாடப்படும் தனியன்கள் என்ற பிற்காலத்திய தனிப்படல்களில் இரண்டு உதாரணங்கள் கீழே:

       ஏய்ந்த பெருங்கீர்த்தி ராமானுசமுனி தன்
       வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குங்கின்றேன் – ஆய்ந்தபெரும்
       சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
       பேராத உள்ளம் பெற.

       திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
       மருவினிய வன்பொருநல் என்றும் – அருமறைகள்
       அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
       சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

       [சடகோபன் – நம்மாழ்வார்; திருவழுதி நாட்டுத் தென்குருகூர் – நம்மாழ்வார் அவதரித்த தலம், திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது; பொருநல் – தாமிரபரணி நதி]

       • நம்மாழ்வாரின் திருவாய்மொழி மட்டுமன்றி, தேவார திருமுறைகள் அனைத்துமே வேதங்களுக்கு இணையானவை. அவை எல்லாமே தமிழ் வேதங்கள் என்று போற்றப்படுபவை தான். இன்றைக்கு திருப்பதி தமிழர்களின் கைகளை விட்டுப் போன பின்னரும், அங்கே நாச்சியார் திருமொழியும், திருவாய்மொழியும் பாடப்படும் பாரம்பரியத்தைக் கைவிடாமல், சிதைக்காமல் அப்படியே தொடரும் வடுகர்களைத் தமிழர்கள் பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் சூடிக் கொடுத்த நாச்சியார் சுத்த தமிழில் பாடிய திருப்பாவையைப் பாடுவதற்கு முன்னர் கூட, கீழேயுள்ள வடமொழி சுலோகங்களை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பாடுகின்றனரே, அது ஏன்? தமிழை விட வடமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தானே?

        தமிழில் நாலாயிரம் திருவாய்மொழியையும் பாடு முன்னர் சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி விட்டுத் தான் தொடங்குகின்றனர். அதை நான் தமிழ்நாட்டு வைணவக் கோயில்களில் அவதானித்திருக்கிறேன். அக்கால விண்ணவப் பார்ப்பனர்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்கள், சாதி வேறுபாடற்று, சூத்திர வெள்ளாள நம்மாழ்வாரைத் தமது குருவாகப் போற்றிவர்கள். ஆனால் இக்காலத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அந்தப் பாரம்பரியத்தையே சிதைத்து, எந்த தமிழைக் கேட்க பள்ளிகொண்ட பெருமாள் பூமிக்கு வந்ததாக தமிழர்கள் நம்புகிறார்களோ அதே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாட முன்பு, சமஸ்கிருத சுலோகங்களைக் கூறித் தமிழையும், ஆழ்வார்களையும் மட்டுமல்ல, தமிழர்களின் திருமாலையும் அவமதிக்கிறார்கள் என்று நாங்கள் தமிழர்கள் நினைப்பதில் தவறேதுமில்லை அல்லவா?

        “நீளாதுங்கஸ்தநகிரிதடீஸப்தமுத்போத்யக்ருஷ்ணம்
        பாரார்த்யம்ஸ்வம்ச்ருதிசதசைரஸ்ஸித்தம்த்யாபயந்தீ –
        ஸ்வோச்சிஷ்டாயாம்ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்யபுங்க்தே
        கோதாதஸ்யைநம்இதமிதம்பூயஏவாஸ்துபூய”

        • வியாசன்,
         “ஐயங்கார்” என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் பொருள்களில் ஒன்றை குறிப்பிடத் தொடங்கிய உரையாடலில் பேசிய மறுமொழிகள் அவை. அதை வைணவ x சைவ, நாலாயிர x தேவார விவாதமாக வளர்க்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு இரண்டும் பிடிக்கும். நாலாயிர தலங்களுக்கு இணையாக, தேவார தலங்களையும் தரிசித்து வருகிறேன். முற்றும்.

         ———————————-

         இப்போதும் நம்மாழ்வார் தான் முதல் ஆசார்யன். அவரையும், ஆழ்வார்களையும் முன்வைத்தே வைகுண்ட ஏகாதசியை உள்ளடக்கிய இராப்பத்து-பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இருபது நாட்களும் நாலாயிரம் பாடப்படும். வைணவத்தில் வடமொழி x தமிழ்மொழி என்ற முரண் இல்லை. “தென்னன் தமிழை, வடமொழியை, நாங்கூரில் மன்னு மணிமாடக்கோவில் மணாளனை” என திருமங்கை மன்னன் பாடுகிறார். இருமொழியாகவும் விளங்குபவன் அவன். ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்தே இரண்டும் சமமாக பயன்படுத்தப் படுகின்றன. அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் வடமொழியில் அமைந்தவை. மறுபுறம் அவரது சீடர் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமுனுச நூற்றந்தாதி தமிழில் அமைந்தது. நாலாயிரத்துக்கு இணைப்பாக கருதப்பட்டு, அதனுடன் இணைந்து பாடப்படுகிறது.

         நாலாயிரத்தில் பல்வேறு ஆழ்வார்களால் பாடப்பட்ட 24 நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றைப் பாடும் முன்பு சில தனிப்பாடல்கள் பாடப்பெறுகின்றன. இவற்றில் சில வடமொழியிலும், சில தமிழ் மொழியிலும் அமைந்துள்ளன. எம்மொழியில் அமைந்தாலும், இத்தனியன்கள் குறிப்பிட்ட ஆழ்வாரையோ அல்லது குறிப்பிட்ட நாலாயிர நூலையோ போற்றுபவவைதாம். இவை சமீப காலத்தில். உருவானவை அல்ல. ஸ்ரீராமானுஜர் காலத்திய அடியார்களால் பாடப்பட்டவை. நீங்கள் குறிப்பிட்டது திருப்பாவையின் வடமொழி தனியன், ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரால் எழுதப்பட்டது. திருப்பாவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றின் போது ஆண்டாளைத் துதித்து அவர் பாடியது. நாலாயிரத்தில் ஈர்ப்புடைய இவர் திருமங்கைமன்னனின் திருநெடுந்தாண்டகத்துக்கு உரை எழுதியுள்ளார். இந்தத் தனியன் தவிர இரண்டு தமிழ் மொழித் தனியன்களும் திருப்பாவை பாடும் முன் பாடப்பெறுகின்றன. இவை ஸ்ரீராமானுஜருக்கு முற்பட்ட உய்யக்கொண்டார் என்ற ஆசார்யனால் பாடபெற்றவை. . திருமலையில் திருப்பாவை பாடினாலும், இத்தனியன்கள் பாடப்பெறும்.

         நீங்கள் சொல்வது படி பார்த்தால் “Tamil is a beautiful language” என ஒருவன் சொன்னால் கூட “ஏண்டா அதை இங்கிலீஷில் சொன்னாய்” என அடிக்க வேண்டி வரும் 🙂

         • வைணவப் பார்ப்பனர்கள், என்ன காரணத்துக்காக ஆழ்வார்கள் பாடிய தமிழ்ப்பாசுரங்களுக்கு முன்பு, சமஸ்கிருத சுலோகங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவற்றைக் கூறிவிட்டு, தமிழ்ப்பாசுரங்களைப் பாடுகிறார்கள்? அதைப் பார்க்க, ஆழ்வார்களின் பாசுரங்களை அவமதிப்பது போலிருக்கிறது என்ற எனது கேள்விக்கு நீங்கள் என்னவோ கூறிச் சமாளிக்கிறீர்கள். ஆழ்வார்கள் பாசுரங்களை வடமொழியில் பாடவில்லை, பின்னர் வந்த தமிழரல்லாத பட்டர்கள் வடமொழித் தனியன்களை இயற்றிக் கொண்டார்கள். அந்த பட்டர்களின் வடமொழித் தனியன்களை, தூய தமிழில் ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்களைப் பாடு முன்னர் பாடுவது, தமிழ் ஆழ்வார்களை விட அந்த தனியன்களை இயற்றிய வடமொழிப் பட்டர்கள் உயர்ந்தவர்கள் என்று நினைப்பது போலிருக்கிறது.

          வைணவப் பார்ப்பனர்கள், தமிழ்ப்பற்றுள்ளவர்கள், தமிழில் பாடுகிறார்கள் என்பது தான் இங்குள்ள வாதம், அதை நானும் ஒப்புக் கொள்கிறேன், தமிழில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி பூசை செய்வது வைணவத் தளங்களில் வழக்கத்திலுண்டு. தேவாரங்கள் பாடுமுன்பு யாரும் சம்ஸ்கிருத தனியன்களைப் பாடுவதில்லை.

          உதாரணமாக, சேக்கிழாரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், நாயன்மார்கள் அனைவரும் சமமானவர்கள் ஆனால் அவர் பாடிய பெரிய புராணத்தை, நாயன்மார்கள் பாடிய தேவாரங்களைப் பாடு முன்பு யாரும் பாடுவதில்லை. கடைசியாகத் தான் பாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டு வைணவப் பார்ப்பனர்கள், தமிழில் பாசுரங்களைப் பாடுமுன்பு, பிற்காலப் பார்ப்பனப் பட்டர்களின் வடமொழித் தனியன்களை முதலில் பாடுகிறார்கள். இக்காலப் பார்ப்பனர்களின் தமிழெதிர்ப்பைப் பார்க்கும் போது, அதன் பின்னணியில் ஒருவகையான சமக்கிருதத்திமிர் இருப்பதாக, அதைப் பார்க்கும் என்னைப் போன்ற தமிழர்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது.

          ///திருப்பாவையின் வடமொழி தனியன், ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரால் எழுதப்பட்டது. ///

          தேவாரம் பாடும் போது புராணம் பாடுவது போல், கடைசியில் சமஸ்கிருதத்தில் பாடலாம் தானே, ஏன் அதை முதலில் பாட வேண்டும். தமிழில் பாடு முன்னர், தமிழில் பாடும் தீட்டை கழிப்பதற்காகவா சமஸ்கிருதத்தில் பாடுகிறார்கள்?

          //நீங்கள் சொல்வது படி பார்த்தால் “Tamil is a beautiful language” என ஒருவன் சொன்னால் கூட “ஏண்டா அதை இங்கிலீஷில் சொன்னாய்” என அடிக்க வேண்டி வரும் ///

          ஒருவர் அதை அதை ஆங்கிலத்தில் தமிழரல்லாதவர் மத்தியில் சொல்வது வேறு. தமிழை நன்கு பேசத்தெரிந்தவர்கள், தமிழ் பற்றிய நிகழ்ச்சியில், தமிழ் விழாவில், தமிழர்கள் மத்தியில், தமிழ்ப் பாட்டைப் பாட முன்பு, தேவையேயில்லாமல் ஆங்கிலத்தில் கூறினால், அதற்குப் பல காரணங்கள் உண்டு.

          1. ஆங்கிலத்தில் அவருக்கு அதிகளவு மோகம் உண்டு
          2. ஆங்கிலம் தமிழை விட மேன்மையானது என்று அவர் நினைக்கிறார்
          3. தமிழை விட ஆங்கிலத்தில் தமிழின் அழகை விவரிக்கலாமென அவர் நினைக்கிறார்
          4. அவருக்கும், ஆங்கிலத்துக்கும்ம் ஏதோ சிறப்பான தொடர்பிருப்பாதாக நினைத்துக் கொண்டு, தமிழ் விழாவிலேயே ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு வரியிலாவது பேசி விட்டுப் பேசுகிறார்
          5. அல்லது ஆங்கிலம் தெய்வீக மொழியென அவர் நினைக்கிறார், ஆகவே நீச மொழியாகிய தமிழில் பாடமுன்பு, ஆங்கிலத்தில் ஒரு வரியைக் கூறித் தீட்டுக் கழித்துக் கொள்ளுகிறார் என்றும் கூறலாம்.

          என்னைப்பொறுத்த வரையில் அப்படி விவஸ்தை இல்லாமல் நடந்து கொள்கிறவர்களை அடிப்பது மட்டுமல்ல, தலையில ஓங்கி ஒரு குட்டு வைத்து இனிமேல் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்காத படி, விரட்டி விட வேண்டும். 🙂

          • அந்த வடமொழி பாடல்கள் திருமாலையோ, வேறெதையோ பாடவில்லை. ஆழ்வார்களையும், அவர்களின் நூல்களையும் தான் புகழ்ந்து பாடுகின்றன. இந்த வடமொழி பாடல்களை பாடியோர், நாலாயிரத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டோர். அதற்கு உரை எழுதுவது, கோவில்களில் பாடுவது என்று இருந்தோர். பிற்காலத்தில், “வியாசன்” என்றொரு தமிழ் பேரறிஞர் இப்படி எல்லாம் தங்கள் தமிழ்பற்றை கேள்வி கேட்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக என்னிடம் தகவல் அனுப்பி உள்ளனர். பாவம், இன்டர்நெட் பழக்கம் இல்லாததால் நேரடியாக உங்களிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை. அதற்காகவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக சொல்லச் சொன்னார்கள்.

          • எந்தத் தனியனை யார் எழுதியது என குறிப்பாக பார்த்ததில்லை. சரி, ஆராய்வோம் என புத்தகத்தை பிரித்தால், முதல் தனியன். வடமொழியில் அமைந்தது. பாடியவர் நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகள். அத்துடன் இந்த அசட்டு ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்டேன். இது தொடர்பாக வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை, வியாசன்.

          • நீங்கள் விடும் நளினத்தில் ஏதும் நியாயமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை வெறும் பார்ப்பனத் திமிர் தான் தெரிகிறது. இதனால் உங்களைப் போன்றவர்கள் தமிழை, தமிழ்ப்பற்றைப் பற்றிப் பேசினால் கூட தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். எனது கேள்வி உங்களுக்குப் புரியவில்லைப் போல் தெரிகிறது. ஆழ்வார்கள், பாசுரங்களைத் தமிழில் தான் பாடினார்கள், அந்த தமிழ்ப்பாசுரங்களுக்கு உருகித் தான் திருமால் அற்புதங்களை நடத்திக் காட்டியது மட்டுமன்றி பூமிக்கு வந்து ஆண்டாளை மணந்தார் என்றும் நம்புகிறார்கள் தமிழர்கள். அதாவது ஆழ்வார்களின் தெய்வத்தமிழ்ப் பாசுரங்கள் தான் திருமாலை நெகிழ வைத்தன. அந்த தமிழ்ப்பாசுரங்களை அரங்கனின் முன்னாள் பாடுவதற்குப் பதிலாக, எதற்காக அதைத் தொகுத்தவர் இயற்றிய வடமொழித் தனியனை முதலில் பார்ப்பனர்கள் பாடுகிறார்கள் என்பது என்னுடைய கேள்வி. ஆனால் நாங்கள் (தமிழர்கள்) பாசுரங்களைப் பாடும்போது, முதலில் சம்ஸ்கிருதத்தில் எதையும் முணுமுணுப்பதில்லை(இலங்கையிலும் புகழ்பெற்ற, பழமையான திருமாலின் ஆலயங்கள் உண்டு). அதேபோல் தேவாரங்கள் பாடும் போது யாருமே சம்ஸ்கிருத தனியன்கள் எதையும் பாடுவதில்லை. இங்கு உங்களின் வாதம் என்னவென்றால் சைவர்களை விட வைணவர்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்கள், ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை பூசையில் பயன்படுத்துகிறார்கள் என்பது தான். கோயிலில் வடமொழியில் தான் நாள் முழுவதும் பூசைகள் நடைபெறுகின்றன. அத்தி பூத்தாற் போல் ஆண்டுக்கொரு முறை தான் திருவாய்மொழிகள் முழுவதும் பாடப்படுகின்றன. அதில் சமக்கிருத தனியன்களை, அதிலும் தமிழ்ப்பாசுரங்ககளைப் பாடுவதற்கு முன்பாக ஏன் பாட வேண்டும். தமிழில் பாடும் போதும் வடமொழியைக் கட்டாயம் கலக்க வேண்டுமா? நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளின் சமக்கிருத தனியன்களை (முதலில் திருப்பாவையின் வடமொழி தனியன், ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரால் எழுதப்பட்டதென்றீர்கள்) ஏன் முதலில் பாட வேண்டும். அப்படிச் செய்வதால், அங்கேயே தமிழில் ஆராதனை என்ற கருத்தே அடிபட்டுப் போகிறது. சைவர்கள் தேவாரம் பாடும் போது அவற்றைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் பாடல்களை அல்லது வடமொழியில் எதையாவது பாடித் தொடங்குவதில்லை.

      • ஸ்ரீராமானுஜ மதத்தில் வர்ணம்-ஜாதி என்பது பற்றிய சில குறிப்புகள். வரலாறு-புராண ரீதியில் பார்த்தால் இம்மதத்தில் ஜாதியை கடந்த அல்லது கடக்க முயலும் தன்மையை காணலாம். பன்னிரு ஆழ்வார்களில் மூவர் மட்டும் பார்ப்பன குலத்தில் பிறந்தவர். திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் முறையே கள்வர், தாழ்த்தப்பட்டோர், அரசர் மரபினர்.

       முக்கிய ஆழ்வாராக கருதப்படும் நம்மாழ்வார், திருமால் தொடங்கி சொல்லப்படும் ஆசார்ய பரம்பரையில் விண்ணுலகத்தோரை விடுத்து பார்த்தால், முதல் ஆச்சர்யானாக வைக்கப்படுகிறார். இவர் பார்ப்பனர் அல்ல. ஸ்ரீராமனுஜரின் முக்கிய ஆசார்யனான திருக்கச்சி நம்பிகளும் பார்ப்பனர் அல்ல. இவரை தம் மனைவி ஜாதி காரணமாக அவமதித்த நிகழ்வு ஸ்ரீராமானுஜர் துறவறம் செல்ல வழிகோலியது. ஆசார்ய பரம்பரையில் மாறநேர் நம்பி, வடுக நம்பி என பார்ப்பனரல்லாத மற்ற பலரையும் உதாரணம் சொல்ல முடியும்.

       இவை எல்லாம் வரலாறு-புராணங்கள். இன்றைய நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மற்ற ஜாதி வைணவர்களோடு ஓரளவு ஒழுங்காகப் பழகினாலும், பார்ப்பனீய மையத்தை தெளிவாக காணலாம். இம்மத மடங்கள் பார்ப்பன தலைமையும், ஆதிக்கத்தையும் கொண்டுள்ளன. கோவில்களிலும் ஜாதி வேறுபாடு காட்டுவதை எளிதாக உணரலாம். நாலாயிர கோஷ்டியில் பார்ப்பனர் மட்டுமே இடம்பெறுவர். மறந்தும் புறந்தொழா வைணவராக இருந்தாலும் மற்ற ஜாதியாரோடு திருமண கொடுக்கல்-வாங்கல் கிடையாது. இப்படிப் பல.

       சரி, இக்கால நிலைமை இப்படி. இம்மததின் மூல அடிப்படை என்ன சொல்கிறது? இதில் கூட ஜாதி-வர்ணம் இல்லை என ஜல்லி அடிக்க முடியாது. திருமங்கையாழ்வார் “நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை” என்று திருமாலை தெளிவாக பாடுகிறார். இவர் பாடல்களில் திருமால் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் பற்றிய விவரணைகளில் நீர் வளம், நில வளம் போன்றவற்றை அதிகம் காணலாம். ஆனால், இவற்றில் வாழும் மனிதர்கள் என்று வரும்போது பார்ப்பனர் தவிர மற்றவர் பற்றிய குறிப்புகள் மிக அரிது. “நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூர்”, “அந்தணர்தம் ஆகுதியின் மிகையார் செல்வத்து அணியழுந்தூர்” என்றவாறு அந்தணர்-மறையவர் பெருமை பேசும் வரிகள் பரவலாக உண்டு. ஆனால் , “எயினர் தாம் மகிழ்ந்தேத்தும் திருமால்” என்ற ரீதியிலான பாடல்கள் (நான் கண்டது) இல்லை. மறுபுறம், எல்லாரும் வைணவர் என்ற ரீதியிலான பாடல்களையும் பார்க்க முடியும். உதாரணமாக, “வேதமோர் நான்குமோதி ஜாதி அந்தணர்களேனும் நமர்களைப் பழிப்பராகில், அவர்கள்தாம் புலையர் போலும்” என்ற தொண்டரடிப்பொடிகளின் வரிகள்.

       இந்த ஜாதி-வர்ணம் பற்றி ஸ்ரீராமானுஜர் என்ன சொல்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவர் எழுதிய ஒன்பது நூல்களும் வடமொழியில் அமைந்தவை. பக்தித் தளத்தில் அமைந்த ஆழ்வார் பாடல்களுக்கு மாறாக, தத்துவத் தளத்தில் அமைந்தவை. நாலாயிரத்துக்கு வெளியே வைணவ நூல்களை நான் படித்ததில்லை.

       மொத்தத்தில், இம்மதத்தில் நிச்சயமாக ஜாதி-வர்ண வேறுபாடு கோட்பாட்டு அடிப்படை, நடைமுறை அடிப்படை என இரு விதங்களிலும் நிச்சயம் உள்ளது. மறுபுறம் இவற்றை கடக்க முயலும் இழைகளையும் காணலாம். முதலில் சொன்ன உமிகளை நீக்கி விட்டு புத்துருவாக்கம் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன். கணினி மொழியில் சொன்னால், மேலே சொன்ன bugsஐ fix புது version உருவாக்க முடியும் என நினைக்கிறேன். இது என் ஆசையும் கூட.

       பி கு: சுக்தேவ், U-Y குறியீடுகள் ஜாதி-வர்ணம் தொடர்பானவை அல்ல. அவை வெறும் வைணவ சின்னங்கள் மட்டுமே. அனைத்து வைணவர்களுக்கும் பொதுவானவை. U-Y வித்தியாசமும் தத்துவ ரீதியில் தொடங்கிய ஒன்று. தற்போது ஜாதி-ரீதியாக போய் விட்டது.

       • “சைவ ஆலயங்களில் பூசை செய்யும் பட்டர்கள் தமிழை சிவாலயங்களில் உச்சரிப்பதில்லை. தேவாரம் திருவாசகத்தை ஓதுவதற்கு தனியே ஓதுவர்கள் உண்டு. இந்த ஓதுவர்கள் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள். வைணவர்களிடம் பார்ப்பனியம் இறுக்கமாக இல்லை. தமிழ்ப் பாடல்களை பாடுகிறார்கள். பார்ப்பனரல்லாத வைணவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள்” போன்ற தகவல்களை ‘இது தான் பார்ப்பனியம்’ நூலில் மார்க்சிய சமூகவியல் ஆய்வாளர் தொ. பரமசிவன் குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் தற்சமயம் கைவசம் இல்லை என்பதால் விரிவாக பேச முடியவில்லை.

        வைணவம் பற்றிய குறிப்புகள் உங்களுக்கு வைணவத்தின் பாலுள்ள ஈடுபாட்டை காட்டுகிறது. பார்ப்பனர், பார்ப்பனியம் போன்றவற்றின் பொருத்தப்பாடுகளை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி. ஆனால், மெல்லிழை ஒன்றை கண்டு சாதிய வேறுபாட்டை கடப்பதாக நீங்கள் செய்யும் பாவனை அடிப்படை இல்லாதது. பார்ப்பனியம் என்ற முழுமையிலிருந்து பார்த்தால் ராமானுஜரின் பணி காலத்துக்கேற்ப பார்ப்பனியத்தை மீட்டு வடிவமைப்பதாகத் தான் கருத முடியும். கலப்பு திருமணத்தை ஆதரிக்காமல் அதை நடைமுறைபடுத்த முன்வராமல் சில சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது.

        வரலாறையும், புராணத்தையும் விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து அதற்குரிய இடத்தை வழங்குவது தான் சரியாக இருக்க முடியும். மாறாக அதன் பலபொருள் தரும் சொற் பிரயோகங்களுக்குள் வழுக்கி விழுந்து சிக்கிக் கொள்ள விரும்பினால் முடிவில் தெளிவின்மை தான் மிஞ்சும்.

        U Y குறியீடுகளை அணிவதன் வித்தியாசத்தில் சாதியும் வருணமும் இருப்பதாக நான் சொல்லவில்லை. இந்த தகவல் ஒரு பார்ப்பன நண்பன் சொன்னது. யூ குறியீடு என்பது விஷ்ணுவின் கால் பெருவிரல் மற்றும் அடுத்த விரலின் பிளவு வடிவம் என்றான்.

        மேலும், அவன் தங்களை(பார்ப்பனர்கள்) வீரமணி போன்றோர் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக சொன்னான். சூத்திரர்கள் காலில் பிறந்தார்கள் என்பதற்காக குற்றம் காண்கிறார்கள். நாங்கள் அந்த காலின் அடையாளத்தை தான் நெற்றியில் சுமக்கிறோம் என்றான்.

        நீங்கள் மென்மையான வேறொரு விளக்கத்தை வேண்டுமானால் அளிக்கலாம். ஆனால் அதுவல்ல பிரச்சினை. காலில் பிறந்ததற்கும், காலின் அடையாளத்தை நெற்றியில் அணிவதற்கும் உள்ள பிரச்சினையின் தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதை மட்டும் பரீலிக்கவும்.

        • சுக்தேவ்,
         “ஐயங்கார்” என்ற வார்த்தையின் மூலம் பற்றிய விசாரணையில் அதற்கும் “பஞ்ச சம்ஸ்காரம்” என்ற தற்போதும் உள்ள கோட்பாட்டுக்கும் உள்ள தொடர்பை சுட்டிக் காட்டினேன். இதனால், அவ்வார்த்தை ஜாதி தொடர்பற்றது என்று அர்த்தமில்லை. பார்ப்பனரல்லாத வைணவர் “ஐயங்கார்” என்று அழைக்கப்படுவதில்லை என்பதை காண்கிறோம். எனவே “ஐயங்கார்” என்பது ஜாதிப் பெயர்தான் என்பது தெளிவாகிறது.

         கலப்பு மணத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினீர்கள். ஆசார்ய-சிஷ்ய உறவும் முக்கியமானதே. ஜாதி-வர்ணம் வேரூன்றிய ஸ்ரீராமானுஜர் காலத்தில், பல்வேறு ஜாதி-வர்ணத்தோர் ஆசார்ய-சிஷ்யராய் இருந்ததும், ஆழ்வார்களாக கொண்டாடப்பட்டதும் நிகழ்ந்தது. பார்ப்பனரல்லாத நம்மாழ்வார்தான் இம்மதத்தின் முதன்மை ஆசார்யன். இதை “பார்ப்பனியத்தை மீட்டு வடிவமைப்பதாக” என்னால் கருத முடியவில்லை. அன்று நிகழ்ந்தது ஒரு முக்கிய முன்னேற்றம் (எனினும், அம்முன்னேற்றம் அந்த நிலையிலேயே நின்று விட்டது என்பதையும் உணர்கிறேன்).

         போலியோ சொட்டு மருந்து மூலம் ஒழிக்கப்பட்டு விட்டது. புற்றுநோய் அவ்வாறு இல்லை. சுமாரான மருந்துகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன. அப்பாடக்கர் மருந்து கண்டறிந்தபின்தான் புற்றுநோய் ஆராய்ச்சியை மதிப்பேன் என்பது சரி அல்ல.

         நான் மற்ற எந்த ஒரு விஷயத்தையும் போலவே இதுவும் கருப்பும்-வெளுப்பும் கலந்தது என்கிறேன். நீங்கள் கருப்பு மட்டுமே என நிராகரிக்கிறீர்கள். இருக்கும் தகவல்களை எல்லாம் பரப்பி வைத்தபின், எனக்கு ஒரு பார்வையும், உங்களுக்கு ஒரு பார்வையும் கிடைக்கிறது. வேறென்ன சொல்ல?

         ——————————————————————————

         திருமண் சின்னம் பற்றி: இது திருமாலின் இரு திருவடிகளை குறிக்கிறது என்று ஒரு பார்வை உண்டு. இப்படத்தை பாருங்கள்: http://srivaishnavasri.files.wordpress.com/2010/04/thenkalai1.jpg. இதனை காரணம் காட்டி “காலில் பிறப்பதே சிறந்தது” என பேசுவது ஜல்லியடிப்பு வேலை. இக்கருத்தை நான் ஏற்கவில்லை. இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தானோ என்னவோ, மனு ஸ்ம்ரிதி தெளிவாக சொல்கிறது. “சூத்திரர்கள் காலில் பிறந்தவர்கள்; தலையை விட கால்கள் தாழ்ந்தவை; எனவே, சூத்திரர்கள் தாழ்வானவர்கள்” என்ற ரீதியில் பேசும் சூத்திரம் ஒன்றை படித்திருக்கிறேன்!

         • வெங்கடேசன்,

          வரலாற்று பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் மதங்களை நெருங்கினால் மட்டுமே மதங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன். வைணவத்துக்கு முழுக்க உடன்பட்டு நீங்கள் வாதிடுகிறீர். எனவே இடறி விழுவது உங்களுக்கு தாவலாக இருக்கிறது.

          திவ்ய பிரபந்தம், பெரியபுராணம் ஆகியவை இயற்றப்பட்ட சமூகக் காலகட்டத்தை நாம் அறிந்து கொள்வது முக்கியமானது. 1-ம் நூற்றாண்டிலிருந்து 3-ம் நூற்றாண்டு வரை அவைதிக மதங்களான சமணமும், பவுத்தமும் மக்களின் பேராதரவு பெற்றிருந்தன. இவற்றுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெறாத வைதீகப் பார்ப்பனியம் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டன.

          அதில் ஒன்று தமிழ் மொழியை வசப்படுத்திக் கொள்வதாக இருந்தது.(இப்போதும் அதே போன்ற முயற்சியில் பார்ப்பனியம் இறங்கி இருப்பதை வினவில் வெளிவந்த ‘இலக்கிய அமித் ஷா’ கட்டுரை விளக்குகிறது. வைரமுத்து ஸ்வச் பாரத்துக்கு பாடல்கள் எழுதப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.) அப்பர் என்ற திருநாவுக்கரசர், நம்மாழ்வார் ஆகியோரின் பாடல்களை சைவமும், வைணவமும் சமணம், பவுத்ததுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டன.

          அப்பர், நம்மாழ்வார் போன்றோர் பெற்ற அங்கீகாரத்தை சமூகத்தில் சூத்திரர்கள் பெற்ற அங்கீகாரமாக கருதுவது பெரும்பிழை. இவர்கள் சற்சூத்திரர்கள் அல்லது வேளாளர்கள். அசத்சூத்திரர்கள் தான் பெரும்பான்மையான மக்கள். அவர்களுக்கு எதிராக இந்த சற்சூத்திரர்களும் பார்ப்பனர்களும் கூட்டு வைத்துக் கொண்டதன் சமய பிரதிபலிப்பே நம்மாழ்வார் — மதுரகவி(பார்ப்பனர்) கூட்டு.

          நம்மாழ்வார், அப்பர் போன்றோர் பிரதிநித்துவம் செய்யும் சற்சூத்திரர்கள் நிலவுடமையாளர்கள். பார்ப்பனர்களும் நிலவுடமையாளர்களாக இருந்தனர். சில பகுதிகளில் அசத்சூத்திரர்களின் (உண்மையான சூத்திர நிலையில் இருந்தவர்கள்) எழுச்சியை அடக்கப் பயன்படும் படைவீரர்களாகவும் (knights) இருந்துள்ளனர்.

          பாயிரங்களும், திருமுறைகளும் பகவத் கீதை, மனுநீதி ஆகியவை செல்வாக்கு பெற்ற போது மறைந்தன. பிறகு மீண்டும் சோழராட்சிக் காலத்தில் பார்ப்பனர்களுடன் சற்சூத்திரர்கள் செல்வாக்கு பெற்றபோது பக்தி இலக்கியங்களை மீட்டனர். நாதமுனிகள் ஆழ்வார்கள் பாடல்களை தொகுத்து ‘திவ்ய பிரபந்தம்’ என்று பெயர் சூட்டினார். ராமானுஜர் சற்சூத்திரர்களுக்கு பூணூல் அணிவித்ததால் சோழ நாட்டிலிருந்து விரட்டப்பட்டுள்ளார். கர்நாடகப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

          ராமானுஜர் வைதீகப் பார்ப்பனியத்தின் சீர்திருத்தவாதியாக அவரை பற்றிய குறிப்புகள் நமக்கு அறியத் தருகின்றன. ஆனால், அந்த சீர்திருத்தவாதம் என்பது பார்ப்பனியத்தை காலத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதாக இருந்தது என்பதையும் அந்த குறிப்புகளிலிருந்து காணலாம். ராமானுஜரை சூழ்ச்சிக்காரராக பார்க்கவில்லை. ஆனால், அவரது பணி தவிர்க்கவியலாமல் சீர்திருத்தவாத பார்ப்பனியத்துக்கு பயன்பட்டுள்ளன.

          ஒரு வகையில் அசல் பார்ப்பனியத்தை விடவும் சீர்திருத்தவாத பார்ப்பனியம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சீர்திருத்தவாத பார்ப்பனியம் மக்களுக்கு பார்ப்பனியம் மீதான அறக்கோபத்தை கட்டுப்படுத்தி மோன நிலையில் ஆழ்த்தும். (பார்ப்பனர்கள் ஷேக்கென்ட் கொடுத்தாலே அதனை போவோர் வருவோரிடம் பகிரும் சூத்திர உள்ளங்களை பார்த்துள்ளேன்.)

          எனவே ராமானுஜர் செயல்பாடுகளுக்கு மிகை மதிப்பு அளிப்பது சமூகம் பற்றிய தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். பார்ப்பனியம்/சாதியம் என்ற புற்றுநோய்க்கு அப்பா டக்கர் மருந்து அம்பேத்கரும், பெரியாரும் தான். ராமனுஜர் ஜண்டு பாம் தான் என்பதும் எனது கருத்து.

          • சுக்தேவ்,
           நம்மாழ்வார்-மதுரகவிகள் இடையேயான ஆசார்ய-சிஷ்ய உறவை சற்சூத்திர-பார்ப்பன கூட்டு என்று கொச்சை படுத்தியமை வருத்தம் தருகிறது. “தேவு மற்று அறியேன் குருகூர் நகர் நம்பி” என திருமாலையே நம்மாழ்வாருக்கு அடுத்த படியில் வைத்தவர் மதுரகவிகள். ஸ்ரீராமானுஜர் அடியார் கூட்டத்தில் சற்சூத்திரர் மட்டுமல்ல. அவரது அணுக்கத் தொண்டரான தாழ்த்தப்பட்ட ஜாதியை சார்ந்த வில்லிதாசரையும் காண்கிறோம். மற்றெல்லாரையும் விட இவர் மீது ஸ்ரீராமானுஜர் அதிக பாசம் காட்டினார். அவரது ஆசார்யனான ஆளவந்தார் அடியார் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியை சார்ந்த மாறநேர் நம்பியை காண்கிறோம்.

           நம்முடைய உரையாடைலை கீழே உள்ளவாறு நான் புரிந்து கொள்கிறேன். நம்மிருவருக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. நீங்கள் வைணவம் என்பதை பார்ப்பனீயத்தின் அங்கமாக பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் அவ்வாறு கருதவில்லை. இதற்குள் பார்ப்பனீயம் கலந்துள்ளது என்றுதான் காண்கிறேன்.

           உருவகமாக சொன்னால், என் பார்வையில் இந்த மதத்தை பற்றிய புற்றுநோய் ஜாதி-வர்ணம், அதை நீக்க முயற்சிதவர் ஸ்ரீராமானுஜர். மாறாக, பெரியார் நோக்கில் இந்த மதம் சமூகத்தை பற்றிய புற்றுநோய்; எனவே இம்மதமே ஒழிக்கப்பட வேண்டும். நீங்கள் பெரியார் பக்கம் இருப்பதால், அவர் முக்கிய மருத்துவராகவும், ஸ்ரீராமானுஜர் கஷாயம் போட்டு தருபவராகவும் தெரிறார். மாறாக, எனக்கு ஸ்ரீராமானுஜர் முக்கிய மருத்துவராகவும், பெரியார் (இந்த விஷயத்தில்) நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக ஆளையே தூக்க சொல்லும் மருத்துவராகவும் தெரிகிறார்.

           மேலே சொன்ன புரிதல் சரி என்றால், உங்களது அடுத்த கேள்வி பார்ப்பனீயத்தை நீக்கினால் ஸ்ரீராமானுஜ மதத்தில் ஏதாவது மிஞ்சுமா என்பதாக இருக்கலாம். ஆம் என்பதே என் கருத்து. ஆனால், அதை குந்தியிட்டு அமர்ந்து விவாதிக்கும் நிலையில் என்னுடைய தற்போதைய புரிதல்கள் போதாது. மேலும் காலம் தேவைப்படுகிறது. அது போழ்ந்தபின், நானும் உங்கள் பக்கம் நிற்கக் கூடும். யார் கண்டது!

        • பெரியாரியர்களில் ஒருவராகிய தொ.பராமசிவனின் கருத்துக்களை அளவுகோலாக வைத்து பெரும்பான்மைத் தமிழர்களின் மதமாகிய சைவத்தையும், வைணவத்தையும் கணக்கிடுவது வெறும் அபத்தம். அவரது கட்டுரைகளில் நடுநிலை கிடையாது, வெறும் பார்ப்பன எதிர்ப்பும், பெரியாரியமும் தான் உண்டு. முதலில் சைவ ஆலயங்களில் பட்டர்கள் பூசை செய்வதில்லை, வைணவ ஆலயங்களில் பூசை செய்பவர்களைத் தான் பட்டர்கள் என அழைப்பது வழக்கம். (அபிராமி பட்டர் என்று அபிராமி அந்தாதி பாடியவருக்கு பட்டர் என்பது மக்கள் இட்ட பெயர். அது அவருடைய இயற்பெயர் அல்ல, அவர் சைவப் பார்ப்பனர்).

         இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் சைவ ஆலயங்களில் பூசை செய்யும் பார்ப்பனர்கள் தேவாரம் ஓதுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் என்னுடைய தந்தையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அங்கிருந்த பார்ப்பனர் அந்த தலத்தின் தேவாரத்தை அங்கே பாடினார்.

         இங்கு பேசப்படும் விடயத்துக்கு தொடர்பில்லாது விட்டாலும், நினைவில் வந்ததைக் குறிப்பிடுகிறேன். இராச இராச சோழன் தில்லையில் தேவாரங்களை மீட்ட பின்னர், அவற்றை சோழ மண்டலத்திலும், ஈழமண்டலத்திலுமுள்ள எல்லாக் கோயில்களிலும் பாட வேண்டுமென அரச ஆணை (Royal Decree) விடுத்தானாம். அத்துடன் அதற்காகவே சிறப்பாக ஓதுவார்களையும் நியமித்தான். அந்த வழக்கத்தில் வந்தது தான் கோயில்களில் ஓதுவார்கள் மட்டும் தேவாரங்களைப் பாடுவது. பொலநறுவையில் இராச இராச சோழன் வானவன் மாதேவி சிவாலயத்தில் நியமித்த தேவாரப்பெருமான்களின் (ஓதுவார்கள்) சந்ததியினர் இன்று சிங்களவர்களாக மாறி, ‘தேவாரப்பெருமா’ என்ற குடும்பப் பெயருடன் தமிழர்களை எதிர்க்கும் அரசியல்வாதிகளாகவும் உள்ளனர்.

         இராச இராசனின் அந்தக் கட்டளை இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் கடுமையாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. தேவாரம் பாடாமல் எந்த நல்ல காரியத்தையும் ஈழத்தமிழர்கள் நடத்துவதில்லை. விளையாட்டுப் போட்டி தொடங்கு முன்பு கூடச் சிலர் தேவாரம் பாடுவார்கள்.ஒருவர் இறந்த பின்பும், சுடலையில் எரிக்கும் வரை பிணத்தின் தலைமாட்டில் ஒருவர் இருந்து தேவாரங்களைப் பாடும் வழக்கம் ஈழத்தமிழர்களிடம் உண்டு, அதாவது வாழ்க்கை முழுவதும் வருவது தமிழ்த் தேவாரங்கள் மட்டும் தான். ஆழ்வார் பாசுரங்களும், தேவாரங்களும் தமிழர்களுடைய சொத்துக்கள், தமிழின் அழகையும், நயத்தையும், பக்தியையும் அவற்றில் காணலாம்.

       • நாதமுனிகள்தான் நாலாயிரத்தைத் தொகுத்தவர். அதன்முன், அது நம்மாழ்வார் ஊர் ஜனங்களுக்கு மட்டுமே தெரியும். நாதமுனிகளுக்குக் கூட தற்செயலாகத்தான் தெரியவந்தது. நாதமுனிகள் ஊர் காட்டுமன்னார் கோயில். அங்குள்ள பெருமாள் கோயிலில் வணங்கச்சென்ற போது, இரு ஆட்கள் சில பாடல்களைப்பாடி பெருமாளை கும்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்பாடலகளின் இருந்த பெருமாள் பக்தியைக்கேட்டுப் புல்லரித்துப் போன நாத முனிகள், அவர்கள் பாடிவிட்டுத் திரும்பிச் செல்லும்போது,,அவர்களிடம் ஓடிச்சென்று: நீங்கள் யார்? இந்தப்பாடல்களின் ஆசிரியர் யார்? என்று கேடக, அவர்கள், நாங்கள் திருவழுதி நாட்டிலிருந்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள எல்லாப்பெருமாள் கோயில்களுக்கும் சென்று இப்பாடலகளைப்பாடி வணங்கி விட்டு ஊர்திரும்ப திட்டம். அவ்வழியே இங்கும் வந்தோம். இப்பாடல்களை யாத்தவர் எங்கள் குருநாதர் சடகோபர் என்றனர். எனக்கு உங்கள் குருவின் பாடல்கள் அனைத்தும் கிடைக்குமா? என்றதற்கு, எங்கள் குரு இப்போதில்லை. ஆனால் நீங்கள் எங்களூருக்கு வந்தால் தேடிக்கண்டெடுக்கலாம் என்று பதிலுரைத்தனர். பின்னர் நாதமுனிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதுள்ள சிரிவைகுண்டத்துக்குச் (திருவழுதிநாடு) சென்று நாலாயிரத்தைத்தொகுத்ததாக வரலாறு.

        தனியன்கள் தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன நாதமுனி, கூரத்தாழ்வான், மற்றும் பல ஆச்சாரியர்களாள். வைணவர்கள் வடமொழித்தனியனகளைப்பாடுவது அவ்வாச்சாரியர்பால் கொண்ட பக்தியினால். வைணவத்தில் ஆச்சாரியர் வணக்கம் பெருமாள் வணக்கத்தைவிட மேலிடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், வைணவர்கள் தமிழோ வடமொழியோ என்று பார்க்காமல் அவர்கள் பாடிவைத்ததால் தனியன்களைப்பாடுகிறார்கள். திருப்பாவைக்குத் தனியன்கள் பாடியவர்கள்: பராசரபட்டர்; உய்யக்கொண்டார்; திருக்கண்ணமங்கை ஆண்டான். பராசரபட்டரின் மேலுள்ள ஈர்ப்பால் வைணவர்கள் அவரின் வடமொழித்தனியனையும் பாடுகிறர்கள். பட்டரின் தனியன் தவிர இதர தனியன்கள் தமிழ்மொழியிலே. வியாசன், பட்டர் புரட்சிக்கருத்துக்கள் கொண்டவர். அவரை வெறும் வடமொழிப்பாடகர் என்ற சிறுகட்டத்துக்குள் அடைப்பவர் கிடையா.

        இதற்கு வேறு உள்ளோக்கம் கற்பிப்பது அம்மதத்தைப் புரியாதவர் செய்யும் செயலாகும். வைணவருக்கு இருமொழிகளும் இருகண்கள். இங்கு வடமொழியா, தமிழா என்ற சர்ச்சை இல்லை. சைவத்தில் அந்த சர்ச்சை இன்றுமுடிந்த பாடில்லை.

        – பால சுந்தரம் கிருஷ்ணா.

       • //நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளின் சமக்கிருத தனியன்களை (முதலில் திருப்பாவையின் வடமொழி தனியன், ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரால் எழுதப்பட்டதென்றீர்கள்) //

        வியாசன்

        நாலாயிரம் என்பது அனைத்து ஆழ்வார்களின் பாட்லகளை உள்ளடக்கிய்து போக இராமனுஜர் அந்தாதியையும் கொணடுள்ளது. நாலாயிரத்துக்கு மேல் எண்ணிக்கை. இராமனுஜ அந்தாதியை இராமானுஜருக்கப்புறம் வைக்கப்படக் காரணம், நான் சொன்ன ஆச்சாரிய வணக்கம் பெருமாள் வணக்கத்துடனே சேர்திருக்கவேண்டுமென்பதால். வைணவர்கள் கண்டிப்பாக ஆச்சாரிய வணக்கம் செய்ய வேண்டும். சீக்கியமதம் போல குருவணக்கம் முக்கியமிங்கே.

        மொத்த நூலுக்கும் சேர்த்து நாதமுனிகள் எழுதியது தனியன். பட்டர் திருப்பாவைக்கு மட்டும் எழுதிய தனியனை வெங்கடேசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்

        • @ Bala Sundaram Krishna,

         தனியன்கள் தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன என்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் வடமொழியில் தான் பூசைகள் நடக்கின்றதே, அது போதாதா? தமிழில் பாசுரங்கள் பாடும் போதும் வடமொழி சுலோகங்களைக் கூறி, வடமொழிக்கு முன்னுரிமையும், முதலிடமும் கொடுத்துத் தான் தொடங்க வேண்டுமா என்பது தான் என்னுடைய கேள்வி. “தனியன்கள் தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன” ஆனால் தமிழ்நாட்டு வைணவப் பார்ப்பனர்கள் ஆச்சாரியார்களை வணங்குவதற்கு அவர்கள் பாடிய தமிழ்த் தனியன்களை விட்டு விட்டு, தூய தமிழில் பாடப்பட்டுள்ள திருப்பாவை, திருவாய்மொழி போன்றவற்றைப் பாடுமுன்னர் வடமொழித் தனியன்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்களே, ஏன், எங்கேயோ உதைக்கிறதே?

         உதாரணமாக, கீழேயுள்ள தனியன்களில், முதலாவது வடமொழித் தனியன், ஏனைய இரண்டும் தமிழ்த் தனியன்கள். தனியன்களைப் பாடும்போது கூட எதற்காக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வடமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறர்கள்? ஆனால் நாங்கள், ஈழத்தமிழர்கள் திருப்பாவை பாடுமுன்னர், “அன்னவயற்புதுவை ஆண்டாள்’ என்ற அடியிலிருந்து தான் தொடங்கிறோமே தவிர, சம்ஸ்கிருத தனியனைத் தொடுவதுமில்லை. தமிழ்நாட்டு வைணவப் பார்ப்பனர்களும் ஏதோ காரணத்தால், தமிழில் பாசுரங்களைப் பாடும் போது கூட, சமக்கிருதத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், என்ற எனது கருத்து இப்பொழுது உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

         1.
         நீளாதுங்கஸ்தநகிரிதடீஸப்தமுத்போத்யக்ருஷ்ணம்
         பாரார்த்யம்ஸ்வம்ச்ருதிசதசைரஸ்ஸித்தம்த்யாபயந்தீ –
         ஸ்வோச்சிஷ்டாயாம்ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்யபுங்க்தே
         கோதாதஸ்யைநம்இதமிதம்பூயஏவாஸ்துபூய:

         2. அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
         பன்னு திருப்பாவைப் பல்பதியம்
         இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
         பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

         3. சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
         பாடி அருளவல்ல பல்வளையாய்
         நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
         நாங்கடவா வண்ணமே நல்கு.

         • மேலதிக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி, பாலா.

          வியாசன்,
          மீண்டும் சைவம் x வைணவம் என்ற ரீதியில் விவாதிக்கிறீர்கள். அதில் எனக்கு விருப்பமில்லை.

          தனியங்கள் என்ன, யார் எழுதியவை, இவற்றின் பொருள், நோக்கம் என்ன என்ற விவரங்களை பாலாவும், நானும் தந்துள்ளோம். சுருங்கச் சொன்னால், இவை ஆழ்வார்களையும், அவர்தம் நூல்களையும் போற்றும் பாயிரம் போன்றவை. ஒரு ஆழ்வார் நூலை பாடும் முன், அவரையோ, அந்த நூலையோ போற்றி முதன்மையான ஆசார்யர்கள் பாடிய தனியன்களை பாடுவதில் தவறென்ன?

          அவ்வகையில், தமிழ் தனியன்களை பாடுவதில் உங்களுக்கு எதிர்ப்பு இருக்காது என நினைக்கிறேன்.

          நீங்கள் தூய தமிழ் நோக்கில் இருந்து பார்ப்பதால், வடமொழித் தனியன்கள் தவறாகத் தெரிகின்றன. வைணவத்தில் இந்த தூய தமிழ் நோக்கு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. “தென்னன் தமிழை, வடமொழியை” என்பது திருமங்கை ஆழ்வார் திருமாலை பாடும் வரி. அந்த வகையில், வடமொழி-தமிழ் மொழி தனியன்கள் இடையே வேறுபாடு இல்லை.

          ஏன் வடமொழி தனியன் முதலில் பாடப்பெறுகிறது என்றால் அது ஒரு மரபு.

          வேறொரு விதத்தில் தமிழுக்கும் முதல் மரியாதை உண்டு. கோவில் உற்சவங்களின் போது வேதம்-நாலாயிரம் இரண்டு கோஷ்டிகளும் இடம் பெறும். இதில் நாலாயிர கோஷ்டிக்கே முதலில் மரியாதை நடக்கும். அவர்களே முதலில் ஓதத் தொடங்குவார்கள். அதே போல கோஷ்டி முடிந்ததும் நாலாயிர கோஷ்டிக்கே முதலில் தீர்த்த-சடாரி சாதிப்பார்கள்.

          ஒன்றை சொல்லி முடித்துக் கொள்கிறேன். தற்போதுள்ள வைணவர்களை விட சைவர்கள் அதிக தமிழ் பற்று உடையவர்கள் என்று நீங்கள் கூறினால், எனக்கு அதில் விவாதிக்க எதுவுமில்லை. எந்த இந்த வகை விவாதத்தில் எனக்கு விருப்பமும் இல்லை. மாறாக, நீங்கள் நாலாயிரத்துக்கு உரை எழுதி அதை போற்றிய பராசர பட்டர் போன்றோரை “வடமொழி பட்டர்” என்ற ரீதியில் பேசுவதை ஏற்க முடியாது. வேறு விதமாக சொன்னால், என்னையும், தற்போதுள்ள வைணவர்களை என்ன வேணா திட்டிக்கோ! ஆனா, இந்த விஷயத்துல நம்ம தலைவர்களை ஒன்னும் சொல்லாத!

          இந்த நாலாயிர விஷயத்தில் எனக்கு வேறொரு விமர்சனம் உண்டு. கோஷ்டியில் பார்ப்பனர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். மாற வேண்டியது இந்த வழக்கம் தானே தவிர வட மொழி தனியன்கள் அல்ல.

          என்னளவில் இது முற்றும்.

          • //எழுதி அதை போற்றிய பராசர பட்டர் போன்றோரை “வடமொழி பட்டர்” என்ற ரீதியில் பேசுவதை ஏற்க முடியாது. ///

           பாராசர பட்டர் கூரத்தாழ்வார் என்ற அந்தணரின் மகன். அந்தணர் என்போர் தமிழர்களாகக் கூட இருக்கலாம். அகவே தமிழராகிய கூரத்தாழ்வார் என்ற அந்தணரின் மகன் பராசரபட்டரை வணங்குவதற்கு அவர் இயற்றிய வடமொழித் தனியன்களை மட்டும் எதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். இக்கால வைணவப் பார்ப்பனர்களுக்கு தமிழில் பாட முன்பு, சம்ஸ்கிருதத்தில் பாடி, வடமொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்ற நோக்கம் இல்லாது விட்டால் தமிழ்த் தனியன்களையே பாட வேண்டியது தானே. பாடினால் அவர் என்ன கோபித்துக் கொள்ளவா போகிறார்.

           //வேறு விதமாக சொன்னால், என்னையும், தற்போதுள்ள வைணவர்களை என்ன வேணா திட்டிக்கோ! ஆனா, இந்த விஷயத்துல நம்ம தலைவர்களை ஒன்னும் சொல்லாத!///

           வேறு விதமாகச் சொன்னால், என்னவாவது சொல்லிக்கோ, தமிழரல்லாதவர்களை (வடமொழிப் பட்டர்களை) எல்லாம் தமிழன் என்று வாதாடாதே. அது என்னைப்போன்ற தமிழர்களுக்கு எரிச்சலையூட்டுகிறது.

           //கோஷ்டியில் பார்ப்பனர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். மாற வேண்டியது இந்த வழக்கம் தானே தவிர வட மொழி தனியன்கள் அல்ல.///

           கோஸ்டியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தமிழர்களின் கோயில்களிளிருந்தும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். அத்துடன் வடமொழித் தனியன்களுக்குப் பதிலாக, தமிழ்த் தனியன்கள் பாடப்பட வேண்டும். ஆனால் தமிழெதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கோயில்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்காது. அதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் எப்பொழுது உணர்ந்து, விழித்துக் கொள்கிறார்களோ அப்பொழுது தான் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தமிழ் ஆளும்.

          • வியாசன், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். அடிப்படை தகவல்கள் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுங்கள். நன்றி.

           // பராசரபட்டரை வணங்குவதற்கு அவர் இயற்றிய வடமொழித் தனியன்களை மட்டும் எதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் //

           பட்டர் எழுதிய தனியன்களை பாடுவது அவரை வணங்க அல்ல. ஆழ்வார்களையும், அவர்களின் நூல்களையும் வணங்க.

           திருவாய்மொழிக்கு முன் பாடப்பெறும் தனியன்களில் இரண்டு கீழே கொடுத்துள்ளேன். பாடியவர் பராசர பட்டர்.

           வான்திகழும் சோலைமதிள் அரங்கர் வண் புகழ் மேல்
           ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும், — ஈன்ற
           முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
           இதத்தாய் இராமானுசன்.

           மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
           தக்க நெறியும் தடையாகித் — தொக்கியலும்
           ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
           யாழின் இசை வேதத்தியல்.

       • //ந்தணர்-மறையவர் பெருமை பேசும் வரிகள் பரவலாக உண்டு. //

        எனக்கு தமிழில் அடிச்சு கை வலிக்கு. எனவே இங்கிலீசில். மன்னிக்கவும் வினவு தோழர்களே.

        Venkatesan sir has written the above. To Sir with respect, I may clarify why Thirumangai Alwar wrote such lines.

        There are many differences between Awars – in historical time, style of bhakti, approach to social disparities, and approach to Brahmins. Thirumangai Alwar is the last Alwar. He came from the community of Kallars and also, a small king (near Sirkali). He was not only an Alwar who wrote only songs; but a ruler till last in the sense he administered the famous Srirangam mutt as Jeeyar. The Hindus i.e. the Brahmins left the chair to him because at the time their temples were under attack from Buddhists and they needed a strong leader to protect the religion. Alwar took the post in all earnestness and wanted to serve the religion and Perumal. He travelled to all temples in Tamilnadu not only to worship but also to oversee. He understood it were the Brahmins who had to look after the temples after he had left the place. The brahmins at the time, till our independence, lived for and on the temples for both livelihood and bhakti. I mean they did not take up any other profession. Alwar saw around the temples, living not only the ordinary priests of the temple, but also learned scholars and protectors and custodians of religion – also of the same community. Such persons can be found even today although they may not actually live there, because they are in other professions also. But they are great swamis. I avoid naming them as they may not like to be named.

        Alwar wanted to encourage them. He knew how essential these people are. Even after he leaves his mortal frame, the religion should continue and who will do that? Alwar’s praise of Brahmins are on both grounds: 1. To encourage and respect them; 2. He sincerely valued their devotion and learning.

        – BALA SUNDARAM KRISHNA

        • பாலா,
         திருமங்கை மன்னனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருமாலே அவருக்கு ஆசார்யனாய் இருந்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். மேலும், நானறிந்த தமிழ்ப் புலவரிலே அவனைப் போல சந்த நயம் கைவரப் பெற்றோர் மிகக் குறைவு. ஆனாலும், இதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

         “முந்தி வானம் மழை பொழிய மூவாவுருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே” என்ற ரீதியில் அந்தணர்களை வானளாவ பாடுகிறார்

         அந்தணர்கள் ஹோமம் செய்தால் மழை பொழியும் என்பதை மாற்றி, அவர்கள் ஹோமம் செய்யும் முன்பே (முந்தி) மழை பொழிந்ததாம்! அப்பாடக்கர் அந்தணர்கள் போலும் 🙂

         மற்ற ஜாதி அடியார்கள் பற்றி பேச சாதாரண ஒரு வரி கூடவா இல்லை? அவர்கள் திருப்பணி ஏதும் செய்யாமலா இருந்திருப்பார்கள்?

     • உங்களிடம் வந்து யாரும் இங்கு எதயும் நம்ப சொல்லி கேட்க வில்லை.

      ஒரு சொல்லின் மூல கரு எங்கிருந்து வந்தது என்பது மட்டுமே இங்கு கருத்து.

      பார்ப்பனர் என்பது பறையர் பள்ளர் போல எந்த ஒரு தீங்கும் இழைக்க விழையாத சொல் தான்.

      ஆனால் இன்று உள்ள சூழலில் அது ஒரு வசை சொல்லாக தான் பயன்படுத்த படுகிறது.

    • இந்த வாதத்தின்படி பார்த்தாலும் பத்து வயது பொடியன்ல ஆரம்பிச்சு பல்லு போன தாத்தா வரைக்கும் பார்ப்பனர்கள் அத்தனை பேருமே பிரம்மத்தை அறிந்தவர்களாக இருக்க முடியுமா? .முடியாது இல்லையா.அப்போ அத்தனை பேரையும் பிராமணர்கள் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வது அறிவுக்கு பொருத்தமாக இல்லையே.

     நாங்கள் இழிவு படுத்தும் நோக்கில் பார்ப்பனர் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்று சொல்கிறோம்.தூய தமிழ் என்ற அடிப்படையில்தான் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறோம். அது இழிசொல் அல்ல என்பதற்கு சான்றாக பார்ப்பன சமூக அன்பர்களும் அச்சொல்லை தயக்கமின்றி பயன்படுத்துவதை சுட்டுகிறோம்.இவ்வளவு விளக்கத்துக்கு பிறகும் அது வசைச்சொல்தான் என அடம் பிடிப்பது சரியல்ல.

     • பார்ப்பனர் என்ற சொல்லை முதலில் பயன்படுத்துவது நீங்கள் இல்லை,கடைசி மனிதனும் இல்லை.

      10 வயசோ 100 வயசோ பிரமத்தை அறிந்தோ அல்லது அறிய முனைபபவர் மட்டுமே பிராமணர் ஆவார்.

      இதார்க்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை.

      பிறமண்ணர் என்று கீழே வியாசன் கூறுவது எல்லாம் செம்ம காமெடீ.

      இன்னொருவர் கூறியது போல மது மாது என்று ஒழுக்கம் இல்லாமல் அலைபவர்கலுக்கு எந்த பெருமையும் பேச அறுககதை இல்லை.

      ரிபேக்க மேரீ,

      திருநெல்வேலி சைவ பிள்ளைமார் சாதி BC லிஸ்ட்ல தான் வறாங்க.

      GD நாயுடு போன்ற அறிவியல் வல்லுநர்களை 1947 இர்க்கு முன்பே கொண்ட சமூகம் பிற்பாதுத்தப்பத்டடாமாம்.

      கேக்குறவன் கெணையான இருந்தா…………..அட விடுங்க.

    • பிறமண்ணர்கள் என்ற தமிழ்ச்சொல்லே மருவி பிராமணர்களாகியது எனவும் கருத்துண்டு. (அதற்கு வெவ்வேறு கருத்துக்களை அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டாலும்), தமிழ்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவர்களை பிறமண்ணர்கள் என்று அழைத்தனர் பழந்தமிழர்கள். இன்று கூட காவேரி, பாலாறு, திருச்சி திருவரங்கம், கும்பகோணம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் பகுதிகளிலுள்ள பிராமணர்கள் அல்லது ‘பிறமண்ணர்கள்’ – அதாவது தமிழ்மண்ணல்லாத பிற மண்ணிலிருந்து வந்தவர்கள் – அவர்களில் 75 % வீதத்துக்கும் அதிகமானோர் இன்றும் தமது தாய்மொழியாக தெலுங்கு அல்லது கன்னடத்தைக் கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் இன்றும் தெலுங்கு, கன்னட பிராமணர்களுடன் தொடர்ந்து குடும்ப, மண உறவுகளைப் பேணிப்பாதுகாத்து வருகின்றார்களாம்.

     தமிழில் பார்ப்பனர் என்பது தான் சரியான சொல். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்நாச்சியார் கூட,

     “…பார்ப்பனச்சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
     பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
     காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்”…. என்கிறார்.

    • //பள்ளர் என்பது எப்படி வசை சொல்லொ அது போலவே தான் பார்ப்பானும் இன்று வசை சொல்//
     பள்ளர் என்பது எப்பிடி வசை சொல் ஆனது சற்று விளக்கவும் பள்ளர் என்பதுடன் வேறு ஏதேனும் எக்ஸ்ட்ராவா சேத்து பேசி ஏசுனாத்தான் வசவு முழுமை பெரும் என்று நான்நினைக்கிறேன் வெறும் பள்ளர் என்பது வசை சொல் அல்ல அமா எதுக்கெடுத்தாலும் இங்க ஏன்யா பள்ளர் இழுக்குறீங்க உங்க கோவத்த பார்ப்பானரோடு மட்டும் வைத்துக்கொள்ள கூடாதா…

 6. @Ambi, FYI Jayamohan hates parpanan. See the excerpts.
  பிராமணர்கள் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள், பிராமணர்களை திராவிடக்கட்சிகள் ஒடுக்கி அதிகாரமற்றவர்களாக ஆக்கின என்பது ஒரு மனப்பிரமை மட்டுமே. உயர்படிநிலைகளில் இருந்த சாதிகளில் எண்ணிக்கைபலம் அற்ற அத்தனை சாதிகளுமே இந்தியாவில் ஜனநாயகம் வந்தபோது அதிகாரத்தை இழந்தன. அது ஜனநாயகத்தின் இயல்பான போக்கு.
  இந்த மாற்றத்தை நான் ஒரு ஜனநாயக பூர்வமான மாற்றமாகவே எண்ணுகிறேன். அதை ஒரு கல்விகற்ற, வரலாற்றுணர்வுகொண்ட பிராமணர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பிற உயர்சாதியினரும்தான்.
  இந்தியாவில் பிராமண மறுப்ப்பு என்றும் இருக்கும். அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில் இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பது இயல்பானதே
  பிராமணர்களில் பலர் அவர்கள் மட்டுமே இந்தியப்பண்பாட்டை உருவாக்கியவர்கள், அதன் சாதனைகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அது முற்றிலும் அபத்தமானது. இந்தியமெய்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவு. இந்தியக் கலைகளில் அவர்களின் பங்களிப்பு ஒப்புநோக்க மேலும் குறைவே. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு மிகக்குறைவான இடமே உள்ளது.
  சாதிமுறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின் லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்றாகவேண்டும்.
  அந்த அமைப்பு கொடுமைகளுக்காக நாம் இன்று குற்றவுணர்வு கொண்டாகவேண்டும். எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களைவிடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாகவேண்டிய குற்றவுணர்ச்சி இது. இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மனநிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும்.
  பிராமணர்கள் சென்ற நூற்றாண்டில் தலித்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்கள் என்ற எளிய வரலாற்றைக்கூட அவர்களின் சாதிப்பற்று மறைத்தது
  பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் பிராமணர்களில் பலர் முயன்றார்கள்.
  தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
  பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதை