முகப்பு"லவ் ஜிகாத்" ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
Array

“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!

-

vote-012வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், “அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்”எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், “அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்டதாக’’ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.  குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.

ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது.  இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், “அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட” உண்மையைப் போட்டு உடைத்தனர்.  மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்து விடவில்லை.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் “இந்து’மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது.  இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, “வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்” கூறி வருகிறது.  எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன.  இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் “பாலியல் ஓநாய்கள்’என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க “ராணாராகினி’என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான “பைக்’’குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு “காதல் புனிதப் போர்'(ஃணிதிஞு  ஒடிடச்ஞீ) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன.  முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.

ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம்.  இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்-அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.

கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,”தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக’பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர்நீதி மன்றம், “லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?”என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் “லவ் ஜிகாத்’பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.

தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், “தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்”எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,”தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக” வாக்குமூலம் அளித்தார்.  எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜாராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது.  சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.

போலீசார் தமது அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை “லவ் ஜிகாத்’என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது.

உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றில், “வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை” ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை.  வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில்  மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?  இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

-புதிய ஜனநாயகம், டிசம்பர், 2009

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. http://www.ndtv.com/news/india/karnataka_church_attacks_first_draft_of_inquiry.ப்ப்

  Karnataka church attacks: First draft of inquiry
  Maya Sharma, Monday February 1, 2010, Bangalore

  Who is guilty of attacking a series of churches in and around Mangalore in Karnataka in 2008? A former High Court judge says it appears that rightwing Hindu groups – the Bajrang Dal, Sri Rama Sene and the Vishwa Hindu Parishad (VHP) – are to blame.

  Based on meetings with hundreds of witnesses, a commission headed by Justice B K Somasekhara states this in an interim report; the final report is expected later this year.

  Worrying for the government, Somasekhara also says that top police officers, district administration and other authorities appear to have colluded with the right-wing organisations in these attacks – and that authorities did not treat the incidents sympathetically when alerted.

  இத்தனையும் சொன்ன நீதிபதி கூடவே கீழ உள்ளதையும் சொல்றாரு:

  Somasekhara’s report also recommends that all criminal cases filed in connection with these attacks so far be withdrawn to promote harmony.

  அதாவது, மத நல்லிணக்கத்துக்கா வேண்டி எல்லா கேசையும் வாபஸ் வாங்கனுமாம். இதத்தானே பாபர் மசுதிலிருந்து, மாலேகான் குண்டு வெடிப்பு வரைக்கும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் சொல்றாங்க

 2. மேல உள்ள அறிக்கை சர்ச் அட்டாக் பற்றிய அறிக்கை. ஆனால் இந்த அறிக்கையைப் பற்றி செய்தி வெளியிடும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆர் எஸ் எஸ் பத்திரிகையோ, அதிலுள்ள தனக்கு தேவையான தகவலைப் பற்றி மட்டும் திரித்து, புரட்டி செய்தி வெளியிடுகிறது, அதாவது மதமாற்றம்தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்று ஜட்ஜ் அந்த அறிக்கையில் சொல்றாராம்.

  ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் சர்ச் அட்டாக்கைச் செய்துள்ளது பற்றி வாயை திறக்கவில்லை டைம்ஸ் ஆப் இந்தியா.

 3. லவ் ஜிகாத் என்ற செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை. நூறு சதவீதம் மறுக்க முடியாது. ஒரு செய்தியை மறுக்கவேண்டும் என்பதற்காக பிழையான ஒரு தகவலை வைத்து மறுக்கிறீர்கள். சங்கிதா அலைஸ் ஆயிஷாவை வைத்து மறுக்கவேண்டியதுதானே ? 

  பின்னூட்டங்கள் :

  கலகம் : வந்துட்டான்யா வீணாப்போனவன். எதை மறுப்பது என்பது மறுக்கும் செய்தியை பொறுத்தது. அப்படி என்றால் நீ ஆர் எஸ்.எஸ்.ஆளா ?

  இத்துப்போனவன் : நீ எதை மனசுல வெச்சுக்கிட்டு இப்படி பேசுற ? 

  பயங்கரன் : இவனே ஒரு ஆர் எஸ் எஸ் ஆளுடா ?

  அதி பயங்கரன் : நீ எதும் ஜிகாத பண்ணியிருக்கியா, உனக்கு பத்வா போடுவோம்.

  • செந்தழல் ரவி, கட்டுரையை படித்துவிட்டுத்தான் இந்தப் பின்னூட்டமா என்பது ஐயமாக இருக்கிறது. எந்தப் பெண் காணாமல் போனாலும் அது ஒரு கிரிமினல் வழக்குமட்டுமே. அதற்கு மதச்சாயம் பூசுவதும், நீதிமன்றம் வக்காலத்து வாங்குவதும், ஊடகங்கள் ஊதிப்பெருக்குவதையுமே கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஒரு வயது வந்த இந்துப்பெண்ணை மயக்கி மதம்மாற வைத்து பயங்கரவாதியாக மாற்றுவது என்பது விட்டலாச்சாரியா படங்களில்தான் சாத்தியம். இந்தி பேசும் மாநிலங்களில் இந்துப் பெண்கள் காதலித்து முசுலீம் இளைஞர்களை மணப்பதை தண்டிப்பதற்கு தனி இயக்கமே நடத்தும் இந்து மதவெறி அமைப்புக் இங்கு அதை லவ் ஜிகாத் மூலம் செய்யத் துடிக்கின்றன.

   • இங்கே அடித்தால் அங்கே வலிக்கிறது, ஏன் ?
    இதிலிருந்தே கம்யூனிஸ்டுகள்-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கூட்டுச்சதி அம்பலமாகிறது.
    மதம் மாற்றுவதற்காகவும், ஜிஹாதில் ஈடுபடுத்தவும் பெண்களை கடத்துவது தான் நடந்துள்ளது. அதற்குப் பெயர் லவ் ஜிஹாத்.
    உன் போன்ற கம்யூனிஸ்டுகள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுகிடப்பதாக எண்ணினால் மற்றவர்கள் என்ன முட்டாள்களா ?
    நீ யாருடைய அல்லக்கை என்று எல்லோருக்கும் தெரியும்.

    • //மதம் மாற்றுவதற்காகவும், ஜிஹாதில் ஈடுபடுத்தவும் பெண்களை கடத்துவது தான் நடந்துள்ளது. அதற்குப் பெயர் லவ் ஜிஹாத். உன் போன்ற கம்யூனிஸ்டுகள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுகிடப்பதாக எண்ணினால் மற்றவர்கள் என்ன முட்டாள்களா ?//

     கண்ணை மூடிக்கிட்டெல்லாம் இல்லை. நல்லா தெரிஞ்சு தான் இப்படி நடிக்கிறாங்க.

    • கொஞ்சம் அழகாக இருக்கும் முஸ்லீம் ஆண்களுக்கு பைக், கைச்செலவுக்குப் பணாம் எல்லாம் கொடுத்து பெண்களை மயக்கச் சொல்வது. அப்படி மயங்கிய பெண்களை மதம் மாற்றி தீவிராதச் செயல்களில் ஈடுபடுத்தப் பயன் படுத்துவது, அல்லது தீவிரவாதிகளைப் பெத்துப்போடும் மெஷ்னாகப் பயன்படுத்துவது இதெல்லாம் தான் லவ் ஜிஹாத்.
     இதைத் தெரிந்தே ரூம் போட்டு யோசித்துச் செய்கிறார்கள் சிலர். முஸ்லீம்களில் பலர் இதற்கு உதவுவதும் நடக்கிறது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் கம்யூனிஸ்டுகள் இதற்கு உதவுவது ஏனோ ?

     இதனால் கம்யூனிஸ்டுகளுக்கும், “உழைக்கும்” மக்களுக்கும் என்ன நன்மை ?

 4. என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒண்ணுமே புரியல. லவ் ஜிகாத் என்ற ஒன்று இல்லவே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? இல்லை…ஆர்.எஸ்.எஸ். காரங்க புதுசா கண்டுபிடிச்ச வார்த்தைன்னு சொல்ல வர்றீங்களா ? இல்லை…இந்துப் பெண்கள் காணாமல் போனால் விசாரிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா ?

  இல்லை… சும்மா இருக்கவங்கள சொறிஞ்சி விட இந்தப் பதிவா?

  • கபிலன் – இது தலைப்பு – “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !! தமிழ் தெரிந்த அனைவரும் புரிந்து கொள்ளக்கூடியதே. நீங்களோ லோக்கல் தமிழன், புரியலையின்னா எப்படி???

 5. //பின்னூட்டங்கள் :

  கலகம் : வந்துட்டான்யா வீணாப்போனவன். எதை மறுப்பது என்பது மறுக்கும் செய்தியை பொறுத்தது. அப்படி என்றால் நீ ஆர் எஸ்.எஸ்.ஆளா ?

  இத்துப்போனவன் : நீ எதை மனசுல வெச்சுக்கிட்டு இப்படி பேசுற ?

  பயங்கரன் : இவனே ஒரு ஆர் எஸ் எஸ் ஆளுடா ?

  அதி பயங்கரன் : நீ எதும் ஜிகாத பண்ணியிருக்கியா, உனக்கு பத்வா போடுவோம்.//

  1/2 TICKET AND FEW ARE MISSING:-)

 6. உங்களுக்கு பிடிச்ச நியூஸ் வரலைன்னா, உடனே எல்லோருமே கைக்கூலிகள் தான்…அட! போங்கப்பா…

  எல்லாமே உங்களுக்கு லேட்டாத்தான் புரியுமோ என்னமோ…வினவு.

  சரி! காதலித்து திருமணம் செய்தாலும், அந்த பெண்ணை மதம் மாத்தாம பொன்டாட்டியா ஆக்கிக்கவே முடியாதா? இப்படிபட்ட கேள்வியெல்லாம் ஏன் உங்களுக்கு தோனவே மாட்டேங்குது? இல்ல, இது தான் உங்க ‘நடுநிலமை’யா? வடநாட்டு ஊடகங்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை நீங்கள்.

 7. ‘Love jihad’ is a absolute crime planned and organised by outside terrorists and its true.
  Already caught in Kerala and hope within few months.. will be vanished by the police forces.

  • சீனு, நண்பன் – இசுலாமிய பெண்களை வன்புணர்சிக்கு இறையாக்குவதை, அவர்களை காதலிப்பது போல ஏமாற்றி அவர்கள் கருவில் இந்து விந்தை விதைப்பதை ஒரு திட்டமாகவே கொண்டிருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அப்படிபட்டவர்கள் லவ் ஜிகாதை பற்றி பேசுவது வேடிக்கைத்தான்.

   • சரி! காதலித்து திருமணம் செய்தாலும், அந்த பெண்ணை மதம் மாத்தாம பொன்டாட்டியா ஆக்கிக்கவே முடியாதா? வெள் well said seenu…
    Answer this point Mr Vinavu and Araiticket…
    Don’t rule out Islamic terrorism and Just blame RSS Terrorists

 8. யோவ், வினவு போன்ற புன்னாக்குகளே, ஒய்யால தாலிபான் போல ஆட்சி இருந்தா இது போல ஓசியில கிடைக்கிற பிலாக்க வைச்சிகிட்டு ரீல் உட்டுகினி இரிப்பின்கிலா , ராவிட மாட்டானுங்க.. போங்கடா ஏதாவது பிரயோஜனமா அள்ளி வுட்டுகினு இருங்க.

 9. வினவு மற்றும் வினவு குழுவிற்கு,
  நீங்கள் தெளிவோடு விவரமாகத்தான் எழுதுகின்றீர்களா? புரியவில்லை.

  //இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.//
  //அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.//

  //சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.//

  //இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை. //

  இவை எல்லாம் நீங்கள் நீதிமன்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டவை.

  நீதிமன்றங்களைப் பற்றி விமர்சிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

  யாராவது ஒருவர் ஒரு தன்னார்வ வழக்கை உங்கள் மீது தொடர்ந்தால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்.

  புரியவில்லை.!!!!!

  • நண்பன் உங்க பின்னூட்டம் கேனைத்தனமா இருக்கு. நீதி மன்றங்களே தவறு செகின்றன என்பதுதான் பதிவே. இதை நீதி மன்ற விமர்சனம், தப்பு என்று சொல்லுவது, ”இந்திய இறையாண்மை” மாதிரி வெத்துப் பேச்சா தெரியுது.

  • NANBAN

   உங்கள் அக்கறைக்கு நன்றி. நீதிமன்றங்களை விமரிசிப்பது குற்றமில்லை. அரசியல் சாசனம் அளித்திருக்கும் பேச்சுரிமைப் பிரிவின்படி இது குற்றமில்லை. ஆனால் நீதிபதிகள் இதை குற்றம் என்று விளக்கம் அளித்து தீர்ப்புச் சொல்வதும் நடைமுறையில் இருக்கிறது. ஆயினும் இந்த அநீதியை நாம் மக்களை அணிதிரட்டி போராடமுடியும். எனவே வினவு இதற்குப்பயப்படவில்லை. ஒரு வேளை அப்படி நீதிமன்றங்களை நம்மைத் தண்டித்தாலும் தொடர்ந்து இந்த வேலையை செய்வோம். இதை நீதிமன்றங்களால் நிறுத்த முடியாது.

 10. சொல்லுவதைச் சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்லி விட்டோம்.
  உங்களைப் போன்ற உசுப்பேத்தி விடுபவர்களால்…..
  அனுபவிக்க வேண்டியவர்கள் அனுபவிக்கட்டும்.
  எல்லாம் விதி…

  //நண்பன் உங்க பின்னூட்டம் கேனைத்தனமா இருக்கு.//

  வினவு குழுமத்தில் சேர்வதற்கு உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கின்றது…
  வாழ்த்துக்கள்.

 11. காணவில்லை…. ஷாஜஹான், ஷேக்தாவூத், பீ.ஜே, நெத்தியடி முகம்மத் ஆகியோரை, காணவில்லை, இவர்கள் நால்வரும் ஒரே ஆளாகவோ அல்லது இரு ஆளாகவோ அல்லது ஒரு மினிபஸ்ஸாகவோ இருக்கலாம்… இவர்களை யாராவது கண்டுபிடித்தால் தயவுசெய்து மீண்டும் தொலைத்துவிடவும். தோழமையுடன் இங்கணம் வேண்டும் கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, அடைப்புக்குறி மற்றும் குடும்பத்தார்.

  பி.கு. ஒருவேளை இவர்கள் இந்து மதவெறியர்களிடம் பயந்து ஒளிந்துகொண்டிருக்கலாம் அப்படியிருந்தால் ஒரு டவுசர் வாங்கி கொடுத்துவிட்டு வரவும்

 12. //அந்த பெண்ணை மதம் மாத்தாம பொன்டாட்டியா ஆக்கிக்கவே முடியாதா? //

  இது நல்ல கேள்வி, அதைவிட ஒரு முஸ்லீம் கிரிமினல் இந்து பெண்ணை காதலித்தால் அவர்கள் வழக்கப்படி அந்த ஆண் இந்து வாக மாற வேண்டியது தானே. ஏன் பொண்ணை முஸ்லீமாக்கனும். ? முஸ்லீம் பெண்ணை மணம் செய்யும் இந்து ஆண் முஸ்லீமா மாறனுமாம், இவனுங்க மட்டும் இந்து பொண்ணுங்களை முஸ்லீமா மாத்தி நாக்கிட்டு போவாங்களாம்??? இத கேக்க வினவுக்கு துப்பு இல்ல. ஜால்றா கோஷ்டிங்க வேற இவனுங்களுக்கு. வெக்கங்கெட்டவங்க.

  • RAM, ஒரு ஆணோ, பெண்ணோ காதலித்துவிட்டு முசுலீமாக மாறினால் உங்கள் வயிறு ஏன் எரிகிறது? அவர்கள் ஏன் இந்துவாக மாறவில்லை என்றால் அதுதான் இந்து மதத்தின் யோக்கியதை. பிறமதத்தவர் எவரும் இந்துவாக மாறினால் அவர்களைக்கென்று என்ன சாதியை ஒதுக்குவது? இந்தப்பிரச்சினை இருப்பதால்தான் இந்துமதமாற்றம் என்பது உங்களைப் பொறுத்தவரை கனவாக இருக்கிறது. முதலில் சாதியை ஒழித்துக்கட்டினால்தான் நீங்கள் விரும்பும் இந்து மத மாற்றம் நடக்க முடியும். அப்படி சாதிகளை ஒழித்துக் கட்டினால் அப்புறம் ஏது இந்து மதம்?

   • என் வயிறு எரியவில்லை. ஒரு வேளை அந்த பெண் (முஸ்லீம் கொள்கை பிடித்து) முஸ்லீமாக மாற விரும்பினால் அது அவள் இஷ்டம். ஆனால், ஒரு வேளை அந்த பெண் இந்துவாக இருக்க விரும்பினால் அந்த முஸ்லீம் அந்த இந்து பெண்ணை இந்துவாக இருக்க விடுவார்களா? இதற்கு பதில் சொல்லுங்கள். 

    என் முஸ்லீம் நண்பனின் இந்து மனைவி இப்பொழுது அந்த நிலையில் தான் இருக்கிறாள். 
    இதே அரதப்பழசான “சாதியை ஒதுக்குவது” என்பதையே பேசுகிறீர்கள்.  இது அவுட் ஆப் ஸிலபஸ்.
    உங்களுடைய ஆசை சாதியை ஒழிப்பது. அதற்கு என்னை போன்றவர்கள் உதவி நிச்சயம் உண்டு. ஆனால், அதற்காக முஸ்லீகளுக்கு ஜால்ரா அடிப்பது தான் பிரச்சினையே…

    • சீனு, வினவு கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, இந்துவா மாறினா எந்த சாதியில சேப்பீங்க, சூத்திரனா இல்ல அதுக்கும் கீழயா?

    • முஸ்லீமாக மாறினான் எந்த சாதியில் சேர்ப்பார்கள் ?
     இந்துவாக மாறினாலாவது கணவன் இருக்கும் சாதியில் சேர்த்துக்கொள்ளப்படுவாள்.

     சாதி மாறி கலியாணம் கட்டுனவர்களைப் பார்த்ததேயில்லையா ? அவர்கள் எல்லாம் எந்த சாதியில் சேர்ந்துகொள்கிறார்கள். கணவனோ மனைவியோ இருக்கும் ஏதாவது சாதியில் அடங்கிவிடுவார்கள் தானே…அதே மாதிரிதான் இதுவும்.

   • அட லூஸு வினவே , பொண்டாட்டி என்ன ஜாதியோ அதே ஜாதியைத்தான் முஸ்லீம் ஆன் மாறனும். இது கூட தெரியாம முஸ்லீம்கு ஜல்லியடிக்கற. கூமுட்ட.

    • ராம் நல்லா நழுவுறக் கண்ணாநாங் கேக்கறதுக்கு பதில் சொல்லு.

     கலக்சனானு ஒரு பாப்பாத்தி பாதாங்கீர்னு ஒரு முசுலிம்பு,  பையன காதலிச்சு கண்ணாலம் பண்ணிக்குது .    அநதப் பாதாங்கீர்ன்ற பையன்,   இந்து மதம் மாறறான்அவனுக்கு பூணுல் போட்டு பாப்பான சேத்திக்குவியா
     இன்னொன்னு
     ஒரு கூலி முசுலிம்பு இந்து மதம் மாறி ராமனுக்கு கல்லறை கட்டுனும்னு வறாரு அவுர எந்த ஜாதில வைப்ப?

     (மேலே கோயில் என்பது கல்லறை என்று தவறாக வந்து விட்டது அதை கோயில் என்று படிக்கவும்) 

 13. //உன் போன்ற கம்யூனிஸ்டுகள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுகிடப்பதாக எண்ணினால் மற்றவர்கள் என்ன முட்டாள்களா ?
  நீ யாருடைய அல்லக்கை என்று எல்லோருக்கும் தெரியும்//

  Vinavu is Hu’s allakkai.
  Thats what I want to know whose allakkai.
  Thats what I am telling
  you vinavu parivar is hu’s allakkai.

  BTW why is that vicious periyaarist cum maoist terrorist who calls himself “I am mani” hasnt surfaced here as yet.Is he on one of his nefarious and evil mission?On Hu’s assignment.Mao only knows.

 14. @@@ஷாஜஹான், ஷேக்தாவூத், பீ.ஜே, நெத்தியடி முகம்மத் @@@@ எங்கப்பா போனீங்க, சவடால்லான் வினவு கிட்டதானா.. இங்க இந்துமதவெறி பாசிஸ்டுங்க பின்னூட்டத்துக்கு பதில் இல்லையா? அய்யோ இப்படி சுரணையில்லாம இருக்கீங்களே..???? இந்த இந்து மதவெறியர்கள் கூட வந்து விவாதம் பண்ணுங்க வாங்க நெத்தியடி, வாங்க ஷாஜஹான், வாங்க ஷேக்தாவூத், வாங்க சார், வாங்க சார், வாங்க சார்..

  • இடம் : PJ office
   ஷாஜஹான்:ண்ணா ஆர்.எஸ்எஸ் காரனுங்க வினவுல ராவுடி பண்றானுங்க பாத்தீங்ளா 

   பீ.ஜே: பார்த்தண்டா கண்ணு சூப்பரா இருக்குது
   ஷேக்தாவூத்: லவ் ஜிகாத் கட்டுரையதான சொல்றீங்க
   பீ.ஜே: அட ஏண்டா திரியற ஆர்.எஸ்எஸ் காரனுங்க வினவு மேல அவதூறு பணறானுங்கள்ள அதச் சொன்னேன்,

   ஷேக்தாவூத்: ஏங்ணா அவுங்க நமக்கு சப்போர்ட்டாத்தான எழதறாங்க நம்முளும் போயி எதாவுது…

   பீ.ஜே: நிறுத்துடா!    நம்ப மூஞ்சிய கிழி கிழின்னு கிழிச்சானுங்கள்ள அடிச்சிகிட்டு சாவுட்டும் நம்ம அங்க போவக்கூடாது.           ஆர்.எஸ்எஸ் காரனும் ஜாமி இருக்குதுங்றான் நாம்பளும் இருக்குதுங்கறோம், ஆனா வினவு காரனுங்க சாமியே இல்லன்றானுங்க ,  அதானால ஆர்.எஸ்எஸ் காரனுங்ககிட்ட நல்லா அடி வாங்கி சாவட்டும்.
     
   நெத்தியடி முகம்மத்:  ஆர்.எஸ்எஸ் காரனுங்க வினவு மேல அவதூறு பண்ணும்போது எனக்குஉடம்பெல்லாம் ஐஸ் வச்ச மாதிரி இருக்குது.

   ஷாஜஹான்:அவுங்ளாவது சாவறதாவுது அவுங்க அடிக்கற அடில ஆர்.எஸ்எஸ் காரனுங்க துண்ட காணோம் துணிய காணம்ணு ஒடறானுங்க,

   பீ.ஜே வும்,   ஷேக்தாவூத்,   நெத்தியடி முகம்மத்தும் பேயறைந்தது போல் நிற்கிறார்கள். 

 15. காலனி ஆதிக்க காலங்களில் பெரும்பாலான இந்துக்கள் கிறிஸ்தவமதப்பிரிவுகளுக்கு மாறிய காரணங்களில் காலனி ஆட்சியாளர்களின் கெடுபிடிகள் தவிர்ந்த இந்துக்களின் கடுமையான சாதி பாகுபாடு மூலமான ஒடுக்கப்படுதல்களும் காரணமாக அமைந்திருந்தன. எப்படியிருப்பினும் தொட்டதற்கெல்லாம் முஸ்லீம் சமூகம் நோக்கி சுட்டுவதென்பது அபத்தமானது. மேற்கூறிய சம்பவங்கள் பற்றி கேள்விப்படும் பொழுது இந்துவாக பிறந்ததற்காக சமயங்களில் வெட்கப்படுவதுண்டு. இத்தகைய கேவலமான சதி காரியங்களில் ஈடுபடுபவர்கள் பின்னர் அமைதிக்கும், சமாதானத்திற்கும் கடும் விலை கொடுக்க நேரிடும்.

 16. குஷ்பூ, ஜோதிகா, மான்யதா போன்ற முஸ்லிம் பெண்கள் இந்து ஆணகளை திருமணம் செய்து அவர்கள் இந்துக்களாக வாழ்கிறார்களே. இதற்கு பெயர் என்ன லவ் பார்ப்பனீயமா?

  இதற்கு நண்பன், வஜ்ரா வகையறாக்களின் பதில் என்னவோ?

  முஸ்லிம்களை திருமணம் செய்யும் பெண்கள் தலித்களாக் இருந்தால் இப்பிரச்சினை கிளப்பபடுவதில்லை. சாதி இந்துப் பெண்கள் விடயத்தில் மட்டுமே இதுப் பிரச்சினையாக்கப் படுகிறது. 

  மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு இந்துவை காதலிக்கும் பட்சத்தில் அவர் இந்துவாக மதம் மாற விரும்பினால் எழும் முதல் பிரச்சினை அவர் எந்த சாதியைச் சேருவார் என்பதுதான். ஏனேன்றால் சனாதான த(க)ருமதத்தைப் பொறுத்தவரை சாதி பிறப்பால் வருவது இடையில் வருவதில்லை.

  பார்ப்பனீயத்தின் படைத் தளபதியான சுப்பிரமணியசாமி லவ் ஜிகாத் விடயத்தில் பதுங்குவதின் மர்மம் தெரியுமோ?. அவர் மகள் திருமணம் செய்திருப்பது ஒரு முஸ்லிமை. ( CNN-IBNல் ஊடகவியலாராக பணிப்புரியும் சுகாசினி ஹைதர் சுப்பிரமணியம் சாமியின் சுபுத்ரிதான்). 

  • கருப்பன்,
   இந்துப்பெண்கள் முஸ்லீம்களைத் திருமணம் செய்து ஏன் இந்துக்களாக வாழ விடப்படுவதில்லை என்பதே விவாதப்பொருள்.
   முஸ்லீம் பெண்களுக்கு இந்துக்களை திருமணம் செய்யும் போது முஸ்லீமாகவோ இந்துவாகவோ வாழ choice உள்ளது. ஆனால் அந்த choice முஸ்லீம் ஆண்களைக் கட்டும் சர்மிளா டாகூர் (ஆயிஷா சுல்தானா கான்), டீஸ்டா செடல்வாத் போன்றவர்கள் ஏன் இல்லை ?

   லவ் ஜிஹாத் செய்வது எல்லா முஸ்லீம்களும் அல்ல. முஸ்லீம்களில் சிலர் தான். அந்த சிறுபான்மை அடிப்படைவாதிகள் செய்யும் செயலுக்கு கம்யூனிஸ்டுகள் ஏன் சப்போர்ட் செய்கிறார்கள் என்பது என் கேள்வி. முடிந்தால் பதில் சொல்லவும். இல்லையென்றால் ஓப்பனிங்குகளை மூடிக்கொண்டு ஓரமாக ஒக்காரவும்.

   • வஜ்ரா
    தீஸ்தா சேதல்வாத் ஒரு முசுலிமை ( அவருக்கும் பெரிய அளவு மதநம்பிக்கை கிடையாது) திருமணம் புரிந்திருந்தாலும் மதம் மாறவில்லை. இந்து மதவெறியர்கள் அவரை வெறுப்பதனால் இப்படி ஒரு அபாண்டத்தை சொல்கிறீர்களோ என்னவோ?

    • வினவு,
     டீஸ்டா மதம் மாறவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வளவே. அவளது செயல்கள் அனைத்தும் எப்பேற்பட்டது என்பது உலகறிந்த உண்மை.
     பிரச்சனை டீஸ்டா பற்றியதோ, சுஹாசினி ஹைதர் பற்றியதோ அல்ல.
     லவ் ஜிஹாதில் ஈடுபடும் முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு நீங்கள் கம்யூனிஸ்டுகள் ஏன் துணை புரிகிறீர்கள் என்பதே. இதனால் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன நன்மை ?

     அரபு பெட்ரோ டாலரில் உங்களுக்கும் பங்கு கிடைக்கிறதா ? அதனாலேயே வாலை நன்றி விசுவாசாத்துடன் ஆட்டுகிறீர்களா ?

    • தோழர் வினவு,

     வக்ரா பஞ்சர் போன்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நேரத்தை வீண்டிப்பது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தமிழ்மணத்தில் அடி வாங்கிக் கொண்டிருந்த பொழுது ஓடி ஒளிந்து கொண்டவர்களில் ஒருவன் தான் இவன்.

     இப்போ கொஞ்ச காலமா தலைய வெளிக்காட்டி இப்போ இங்க வந்துருக்குது.

     • தோழர் அசுரன்,

      வஜ்ரா என்ற பெயரில் பின்னூட்டம் எழுதியிருக்கும் இவர்தான் வினவில் இதுவரை வெளியான அனானி ஆபாச பின்னூட்டங்களில் 90 சதவிகிதத்தின் கர்த்தா. இவரது விருப்பமான பெயர் Anonymous, அவ்வப்போது காக்கா ராதாகிருஷ்ணன், தம்பிதுரை, முருகன், கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன், ரூம் போட்டு யோசிப்பவன், St. Laurent என்ற பெயர்களில் எழுதுவதும் உண்டு. தனது ஒரிஜினல் அடையாளத்தை வினவுக்கு வெளிப்படுத்த தேரந்தெடுத்த கட்டுரையில்லேயே இவ்வளவு போலி பெயர்களில் இவர் பின்னூட்ட்டம் இட்டிருப்பதை பார்த்தால் துணைக்கு ஆளில்லாமல் அநாதையாக சுற்றிக்கொண்டிருப்பவர் போல இருக்கிறது.

      ஒரு கோரிக்கை – தமிழ்மணத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அடித்து விரட்டப்பட்ட நினைவுகளை வினவு வாசகர்களுக்காக ஒரு பதிவு எழுதித்தாருங்களேன்.

      தோழமையுடன்

      • உங்களுக்கு புடிக்காதவன் கெடச்சா, எல்லா பழியையும் அவன் மேல போட வேண்டியது தானா ? வெளங்கிடும்டா..

       • டேய்! யார்ரா நீ ?
        அது அசுரன் என்ற அரவேக்காட்டு கம்யூனிஸ்டு கம்மினாட்டி எனக்கு அன்பளிப்பா கொடுத்த பெயர். அதை நானும் அந்த அரை லூசும் தவிர எந்த வெண்ணைவெட்டியும் பயன் படுத்தக்கூடாது. அப்படிப்பயன் படுத்துவதாக இருந்தால் அசுரனிடம் போய் டவுசரைக் கிழித்துக்கொண்டு வரவும்.

        • //அது அசுரன் என்ற அரவேக்காட்டு கம்யூனிஸ்டு கம்மினாட்டி எனக்கு அன்பளிப்பா கொடுத்த பெயர். அதை நானும் அந்த அரை லூசும் தவிர எந்த வெண்ணைவெட்டியும் பயன் படுத்தக்கூடாது.//

         இது உண்மையான வஜ்ராவா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஏனேனில், வக்ரா பஞ்சர் என்பது விடாது கருப்பு அன் கோ கொடுத்த பட்டப்பெயர். அசுரன் கொடுத்தது என்று ராங் இன்பர்மேசன் கொடுக்கிறது இந்த வஜ்ரா. யாராயிருந்தால் என்ன, விசயம் அவர்கள் பேசுகிற அரசியல் மட்டுமே.

      • //ஒரு கோரிக்கை – தமிழ்மணத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அடித்து விரட்டப்பட்ட நினைவுகளை வினவு வாசகர்களுக்காக ஒரு பதிவு எழுதித்தாருங்களேன்.//

       கட்டாயம் செய்யலாம். பழைய பதிவுகள், விவாதங்கள் என அனைத்தையும் ஒரு குறைந்த பட்ச மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவற்றை வெறுமனே தகவல் என்று இல்லாமல், ஒரு அனுபவம் என்ற அடிப்படையில் தொகுக்க வேண்டும். இன்றைய தேவை என்ன என்கிற எனது எதிர்பார்ப்புகளை சுட்ட வேண்டும். எழுத இயலுகிறதா என்று பார்க்கிறேன்….

      • ஆஹா.. வினவின் இந்தக் கோரிக்கைக்கு ஒரு ப்ளஸ். அதிலும் அசுரன் Vs நீலதண்டன் + வக்ரா + சடாயு சண்டைகளில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள்
       டவுசர் கிழிந்து புறமுதுகிட்டோடிய காட்சிகள் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

       தோழர் அசுரன் விரைவில் இப்படியான ஒரு பதிவுக்கு ஆவன செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

       இப்படி பல பெயர்களில் ஒன்னுக்கடித்து விட்டுப் போகும் ஆர்.எஸ்.எஸ் நேர்மையாளர்கள் தான் இணையத்தில் எத்திக்ஸ் பத்தி நெம்பவே
       நீட்டி முழக்குவார்கள். யெப்பா இவனுகள எதிர்த்து எழுதிய எல்லோரையும் போளி விற்பனையாளர்கள் என்று ஜல்லியடித்து முத்திரை குத்திய
       காட்சிகளை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?

       வக்ரா பஞ்சர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளே பொந்து மதத்தை பாதுகாக்கும் ஒரே கட்சியென்று சொல்லிக் கொண்டு
       மத்திய பிரதேசத்தில் அரசு சார்பில் இலவச திருமனம் செய்து கொள்ள வந்திருந்த பெண்களுக்கு கன்னிமை பரிசோதனை நடத்தி
       அவமானப்படுத்தியும், ராஜஸ்தானில் சதி எனும் பேரில் நெருப்பில் தள்ளி கொன்றும்.. இன்னும் இது போல் ஒவ்வொரு காதலர் தினம் அன்றும்
       நாடெங்கும் பெண்களை இழிவு படுத்தும் நீங்கள் பெண்கள் இசுலாத்துக்கு மாறி பர்தா போட்டுக் கொண்டு கஷ்ட்டப்படுகிறார்கள் என்றும்
       தங்கள் மத சுதந்திரத்தை காத்துக் கொள்ள முடியவில்லை என்றும் முதலைக் கண்ணீர் வடிக்க எந்த யோக்கியதையும் கிடையாது.

       • ஆமாம் அமாம், கிழித்துத் தொங்கத்தான் போட்டுவிட்டீர்கள்.
        மூளையில் மலச்சிக்கலும், வாயில் பேதியும் வந்தவன் போல் காதுகளை மூடிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தால் டவுசர் என்ன….அதையும் தாண்டி ஆசன வாய் கூட கிழியும்.

      • உங்கள் புலன் விசாரணையின் கண்டுபிடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது வினவு குழுவே…
       உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் நீங்கள் எல்லாம் ஏன் தமிழகத்தில் இருக்கவேண்டும். ரஷ்யா, சீனா, வட கொரியா, போன்ற உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளில் பணியாற்றவேண்டியது தானே ? அங்கே தான் உழைக்கும் மக்களை மதிக்கிறார்கள். உழைப்புக்கு ஊதியம் சரியாக வழங்குகிறார்கள்.
       சாதி இல்லை, மதம் இல்லை, பார்ப்பான் இல்லை.

       • வினவு குழுவே,

        ஆனாலும், கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர் சங்கம், ரூம் போட்டு யோசிப்பவர் சங்கம் என்ற பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.எம். எஸ்ஸில் வருவது போல் வந்து அடித்திருக்கிறான். அதை எவன் யோசித்து வைத்தானோ அவன் வாழ்க.

        என் பெயரில் எக்கச்செக்க அனானி ஆட்டங்கள் ஆடப்பட்டுவிட்டன. இன்னும் என்னையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு என் பெயரில் அனானி ஆட்டம் அதுவும் வினவு போன்ற தளங்களில் வந்து அடித்து ஆடுகிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
        அவர்களுக்குத் தெரிந்த அளவு கூட எனக்குத் தமிழ் ஒழுங்காகத் தெரியாது. கம்யூனிஸக் கழிசடைகளும், பாட்டாளி வர்க்கத்துப் பெண்குறிகளும் (எல்லாம் நீங்கள் பயன் படுத்தும் சொற்கள் தான்!) நிறைந்து காணப்படும் உங்கள் தளம் எனக்கு ஒவ்வாத தளம். இங்கெல்லாம் வந்து நான் பின்னூட்டம் போடுவதில்லை. எனக்கு வேற வேலை உள்ளது. உங்களைப்போல் இப்படியெல்லாம் எழுதி நான் ஒன்றும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை.
        இது நான் வஜ்ரா என்ற வலைப்பதிவு தளத்துக்குச் சொந்தக்காரன் தான் இட்டேன் என்பதற்குச் சான்றாக எனது வலைப்பதிவில் இதை இட்டுவைக்கிறேன்.

        http://sankarmanicka.blogspot.com/2009/11/le-chant-des-mariees.html

        • வஜ்ரா, வினவு தளத்தின் தொழில்நுட்ப வடிவம் அப்படி இது பிளாகர் போல புராதன மென்பொருள் அல்ல. பெயர் பட்டியலில் Maskerade Del Porto யும் சேர்த்துக்கொள்ளுங்கள். இனிமேலாவது வஜ்ரா என்ற பெயரில் மட்டும் வந்து திட்டவும்

         • IP tracking செஞ்சா தெரியப் போறது. ஆனால் சும்மா சொல்லப் படாது, நம்ம அம்பி வினவு, ரொம்ப நல்லவர் பா. பிடிகறதோ இல்லையோ எழுதினத publish senjiduraaa.

          • அப்படித்தான் இருக்க வாய்ப்புள்ளது… இல்லேன்னா இந்நேரம் பதில் சொல்லி இருக்கணுமே?

          • வஜ்ரா வும் இல்லை, வயக்ரா வும் இல்லை. மஞ்ச காமல் வந்தவனுக்கு எதப் பார்த்தாலும் மஞ்சளாம். வினவ பத்தி நல்லதா எழுதினகூட ஏன்டா குட்டிகளா இந்த துவேஷம்.

    • இஸ்ரேலில் உளவுத் துறை உனக்குப் போடும் பிஸ்கெட் தின்று வளந்த வக்ரா பஞ்சரே.. உன்னிடம் எழுப்பப்பட்ட பழைய கேள்விகளுக்க் முதலில் பதில் சொல்….

    • ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்கள் ஆதரிக்கும் சாதி வெறியர்கள் நடத்தும் காதல் எதிர்ப்பு காட்டுமிராண்டித்தனம்

     Honor Killing:
     In the name of honour
     Frontline Volume 26 – Issue 17 :: Aug. 15-28, 2009

     A serial kidnapper and his `mission’
     Frontline – Volume 23 – Issue 25 :: Dec. 16-29, 2006

     Bajrang Dal activist Babu Bajrangi “rescues”, by kidnapping, Patel girls who marry outside their community.

     Babu Bajrangi: “I don’t believe in love marriage. We have to marry within our own community.”

     இதெல்லாம் ஆர் எஸ் எஸ் பஜ்ரங்கி சொன்னதுதான். லவ் ஜிகாத்துக்கும் சாதி வெறிபிடித்த மேற்சொன்ன ஆர் எஸ் எஸ் ந்டவடிக்கைகளுக்கும் அடிப்படை ஒன்றுதான்.

     ‘Love Jihad’ racket: VHP, Christian groups find common cause
     http://timesofindia.indiatimes.com/home/india/Love-Jihad-racket-VHP-Christian-groups-find-common-cause/articleshow/5117548.cms

     லவ் ஜிகாத் என்ற பெயரில் கிருத்துவ வெறியர்களும், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் ஒன்று கூடியுள்ளனர் கேரளாவில். இது போன்ற பிற்போக்கு விசயங்களில் இவர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு

    • //Assu,
     you don’t know the difference between bajrang dal, RSS, babu bajrangi, muthalick.
     Why unnecessarily bad mouth about people who you don’t know about ?//

     டேய் ஊத்தவாயா.. நீ வேணா என்ன வித்தியாசம்னு சொல்லு. ஒரேயொரு வித்தியாசம்தான். கபிலன் மாதிரி ஆளுங்களுக்கு ஆர் எஸ் எஸ் என்ற க்லாச்சார நிறுவனம், அதுல உள்ள ஆளுங்களே கம்னாட்டி பயங்கர்வாதிகலா வேசம் கட்டி ஆடுறதுக்கு எழுபதெட்டு சன் பரிவார முகமூடிகள்

  • //குஷ்பூ, ஜோதிகா, மான்யதா போன்ற முஸ்லிம் பெண்கள் இந்து ஆணகளை திருமணம் செய்து அவர்கள் இந்துக்களாக வாழ்கிறார்களே. இதற்கு பெயர் என்ன லவ் பார்ப்பனீயமா// கருப்பா! அவங்கெல்லாம் வியாபாரப் பொம்பளைங்க. சினிமால வர்ர மாதிரியே பொட்டு வெச்சி வாழ்றதில அவங்களுக்கு லாபம் தான். அதனால் அப்படி இருக்காங்க. பாத்திமா பாபு ஜெயா டிவில பொட்டு வெச்சி நியூஸ் வாசிச்சாலும் அவ பேரு பாத்திமா பாபு தாம். மாரியாத்தா, காளியாத்தான்னு யாரும் மாத்திடல. அவளை பாத்திமாவாவே இந்துக்கள் ஏத்துக்கிட்டாங்க். 

   • காதலையும் திருமணத்தையும் இவ்வளவு கொச்சைப் படுத்தறீங்களே ராம். அவங்க எந்தத் தொழில் செஞ்சா என்ன? எந்த மதத்தில பிறந்திருந்தா என்ன? தனக்கு விரும்பினவங்களக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க. உங்களுக்கு என்ன வந்தது? விரும்பினவங்களோட வாழ்வத விடவா கும்பிடும் தெய்வம் முக்கியம்?

 17. நண்பரே கேள்விக்குறி, அவர்கள் வரமாட்டார்கள்! கம்யூனிஸ்டுகளை கண்டபடி திட்டலாம், ஏனென்றால் அவர்கள் என்னவானாலும் தனது கொள்கையின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டமக்களின் சார்பாகவே சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள்… ஆர்.எஸ்.எஸ் வெறியன்களை அப்படி திட்டிவிடமுடியுமா? அவர்கள் இவர்களைப்போலவே காட்டுமிராண்டிகளாயிற்றே! மதவெறியர்கள் என்ற ஒரு ஒற்றுமை அவர்களை இணைக்கிறதல்லவா, இருவரும் அரசியல் அதிகாரம் பெற்றால் முதலில் ஒழிப்பது கம்யூனிஸ்டுகளைத்தானே…எல்லா நிற பாசிஸ்டுகளுக்கும் நாம்தான் முதல் எதிரி, இசுலாமிய மதவெறியர்கள் நம்மை திட்டும் போது அவர்களும் இந்து மதவெறியர்கள் நம்மை திட்டும்போது இவர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சூட்சுமம் இதுதான். இதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்த இந்த கட்டுரைக்கு நன்றி… அவர்களை மறந்து நாம் மேலே செல்வோம்!

 18. பின்னூட்டத்தில் கேட்கப்படும் பல கேள்விகள் அர்த்தமற்றதாய் இருக்கின்றது. பதிவின் சாராம்சமாக, முன்பெல்லாம் தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்று முழங்கி வந்த கோஷம் போய், படித்த, அழகான, நன்றாய் பேசக்கூடிய, விதமாய் உடுத்துகிற, இவற்றில் ஒரு சிலவோ அல்லது எல்லாம் சேர்ந்த எந்த வகை முஸ்லீமாயினும் மக்களே அவர்களை நம்பாதீர்கள். அவர்களை உங்கள் அருகே அண்ட விடாதீர்கள். அவர்கள் உங்கள் வீட்டுப் பெண்களை கவர்ந்து சென்று விடுவார்கள் என்ற வகை பிரச்சார யுத்தியை கேள்வி கேட்டவர்கள் புரிந்து கொண்டதாகவோ அல்லது இதன் பின்னே ஒளிந்திருக்கும் மத துவேஷத்தை, அயோக்கியத்தனத்தை உணர்ந்து கொணடதாகவோ தெரிய வில்லை.
  மாறாக ஆதாரமே இல்லாமல் இப்படிதான் நடக்குது என்று குரல் கொடுப்பதிலும், அந்த பெண்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்று சண்டையிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆக மாற்று மதத்தின் மீது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமான குற்றச்சாட்டை வீசுவதும் இவர்களுக்கு உறுத்தலாய் இல்லை மாறாக என் மதத்து ஆளை ஏன் மாத்தின என்ற சுய மதாபிமானம் மட்டுமே கண் முன்னே நிற்கிறது.
  நிற்க முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஆண் ஒருவரை விரும்பும் பெண் தன்னுடைய சொந்த மதத்திலிருந்து  முஸ்லீம் மதத்திற்கு மாறுவது என்பது மதம் சார்ந்தது அல்ல. அது நமது ஆணாதிக்க சமூகத்தின் குடும்ப அமைப்பின் வழியால் வரும் பெண் அரசியல் சார்ந்ததோர் குறைபாடு. பெண் என்பவள் தன்னுடைய இடத்திலிருந்து இடம் பெயர்ந்து கணவனின் வீட்டில் சென்று இருக்க வேண்டும் என்ற குடும்ப அமைப்பில் முஸ்லீம் மதம் என்றில்லை எல்லா மதங்களிலுமே பெரும்பாலும் பெண் என்பவள்தான் தான் சார்ந்த மதத்தை கணவன் அல்லது காதலனிற்காக விட்டுக் கொடுப்பவளாய் இருக்கிறாள். இது பெரும்பான்மையான ஒன்று. வெகு குறைவான இடங்களில் மட்டுமே ஆண் என்பவன் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொள்ள முன் வருகின்றான். அதுவும் கூட பொருளாதார சமூகக் காரணிகளோ, அல்லது தான் சார்ந்த சாதீய குறியீடுகளை முழுதாய் மறைப்பதற்கோ இதை உபயோகப்படுத்திக் கொள்வதாய் அமைந்து விடுகின்றது. முழுதாய் ஒரு பெண் தனது சுயத்தை நிறுத்திக் கொள்ள தான் சார்ந்த மதத்திலேயே இருக்க விரும்புவது என்பது வெகு அரிதாகவே நடைபெறுகின்றது.
  இந்த நிலையில் ஏன் அந்த பொண்ணை மதம் மாற்ற கூட்டாய் முயற்சிக்கின்றீர்கள் என்பது பசப்புவாதம். இது மத அமைப்புகளின் குறைபாடல்ல. குடும்ப அமைப்புகளின், ஆணாதிக்க சமுதாய அமைப்பின் குறைபாடு. 

  • நீங்க சொல்றத பாத்தா இது ஆண் ஆதிக்கம்கறீங்க. அப்ப அந்த ஆண் ஆதிக்கம் முஸ்லிம்களை விட இந்துக்களிடம் கம்மியா இருக்குங்கரீங்க 🙂

   • அடிப்படையில் எல்லா மதங்களுமே பிற்போக்குத்தனமும், பெண்ணடிமைத்தனமும் நிறைந்தவைதான். இதுல எவனும் ஒருத்தனுக்கொருத்தன் சளைச்சதில்லை. எப்படியாவது இந்து மதத்தை கட்டிக் காப்பாற்றி விட வேண்டும் என்ற வெறி உங்களுக்கு சீனு. கடைசி வரை பதிவின் சாராம்சத்தை பேசாமலேயே என் மதம்தான் பெஸ்ட், என்னோடதுதான் பெஸ்ட்டுன்னு நிறுவ முயன்றதை விட வேறு எந்த முயற்சியை உங்களிடம் கண முடிய வில்லை.

    • யப்பா நந்தா,
     மொதல்ல இருந்து படிச்சு பாரு.  என் மதம் தான் பெஸ்ட்டு, மத்ததெல்லாம் வேஸ்டுனெல்லாம் எங்கேயும் சொல்லல. அப்படி ஆண் ஆதிக்கம் பத்தி பேசுறவங்க இந்து மதத்தோட மட்டும் ஏன்  நிறுத்திக்கறாங்க அப்படீங்கறது தான் என் கேள்வி.
     சொல்றது புரியலைன்னா கேட்டு தெரிஞ்சுக்கோங்க. தப்பில்ல.

    • //யப்பா நந்தா,மொதல்ல இருந்து படிச்சு பாரு.  என் மதம் தான் பெஸ்ட்டு, மத்ததெல்லாம் வேஸ்டுனெல்லாம் எங்கேயும் சொல்லல. அப்படி ஆண் ஆதிக்கம் பத்தி பேசுறவங்க இந்து மதத்தோட மட்டும் ஏன்  நிறுத்திக்கறாங்க அப்படீங்கறது தான் என் கேள்வி.//
      
     சீனு கண்ணா   உம்  மதம் பெஸ்டுனுற   வார்த்தையத்தான் சொல்லுலயோ தவிர உன் விவாதம் அப்டிதான் இருக்குது,   மேலே நீ கேட்ட கேள்விலயே அது ஒளிஞ்சிகிட்டு இருக்குது.

 19. ஒருவர் மீது இன்னொருவர் அவதூறுகளையும், தேவையற்ற வார்த்தை பிரயோகங்களையும் அள்ளி வீசுவதை தவிர்த்து விட்டு ,நாகரீகமான முறையில் கருத்துக்களை முன்வையுங்களேன் 

 20. 16, 16.1, 16.2 பின்னூட்டங்கள் எல்லாம் இந்தப் பதிவுக்கு தேவைதானா? அதிலும் பொட்டை, ஒமபோது என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் பாமரத்தனமானது. பெண், மற்றும் திருநங்கைகள் சார்ந்த உடல் அரசியலை வைத்து இயற்றப்படும் இது போன்ற கருத்துக்களடங்கிய பின்னூட்டங்களை (அதுவும் பதிவுக்கு சம்பந்தமில்லாத) குறைந்த பட்சம் எடிட் செய்தோ அல்லது கட்டுரையாளர் சார்பாக எவரேனும் தலையில் குட்டியோ நிறுத்துங்களேன்.

 21. இதில் வாதிட எதுவுமில்லை. இந்துக்களில் ஆண்களே இஸ்லாமுக்கு எதிரியாக இருக்கிறார்கள். பெண்கள் இஸ்லாத்தை தழுவி இஸ்லாம்கொடுக்கும் பர்தா போன்ற பாதுகாப்பை பெற விரும்புகிறார்கள். அதனால் அவர்களே இஸ்லாமிய இளைஞர்களை காதலித்து இஸ்லாமுக்கு மதம் மாறுகிறார்கள். மேலும் இஸ்லாமை பரப்புவது என்பது இஸ்லாமியர்களின் கடமை. அதனால்தான் கருத்தடை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அதனால், இஸ்லாமியர்கள் மாற்று மத பெண்களை காதலித்து அவர்களை மதம் மாற்றுவது ஏற்புடையதுதான். இஸ்லாமில் ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்ற அனுமதி இருப்பதால், ஏராளமான பெண்களின் தேவை இருக்கிறது. ஆகையால் மாற்றுமதத்தினரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இஸ்லாமை பரப்புவது மார்க்க கடமைகளில் ஒன்று.

  • இதுவே உங்களின் அழுக்கு பிடித்த கோட்பாடு தெரிகிறது. வினவு தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். (ஏன்னா வினவு, அடுத்த பதிவு ரெடி போல…)

  • இசுலாமிய மக்களை கேவலப்படுத்துவதற்காக அப்துல்லா என்ற பெயரில் aik என்ற இந்து மத அபிமானி ஒருவர் போட்டுள்ள வன்ம்மான பின்னூட்டம். இங்கே அவரது உண்மையான பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது

   • அவங்களுக்கு அதுதான் தெரியும்…..

    பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!

    இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

    இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’ என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர். இதில், ராகேஷ் மத்துக்கு ‘பூசை’யும், மற்றவர்களுக்கு வெறும் ‘தீபாராதனையும்’ காட்டப்படவே, வேறு வழியின்றி இந்தக் கும்பலை பெல்லாரி மாவட்ட சிறைக்கு கடந்த ஞாயிறன்று (08.01.12) மாற்றியிருக்கிறார்கள்.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.01.12) இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இன்னொருவரை கைது செய்து பெல்லாரியில் அடைத்திருக்கிறார்கள். இதன் மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.

    இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் சேனா அமைப்பினர், ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஆனால், காவல்துறை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பெயர் வெளியில் வராதபடி பார்த்துக் கொள்கிறது. வேண்டுமென்றே எங்கள் அமைப்பை களங்கப்படுத்த முயற்சிக்கிறது…’ என்று கூறியதுடன், இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

    • இது நடந்தது வேரேங்கும் இல்ல. கர்னாடகவுலதான் அது பா.ஜ.க ஆட்சிநடத்துர இடத்துல தான்.

 22. For the comments that simply shower hatred on Muslims and generalizing things, What you guys are discussing here is something not proven and even proven to be a myth. But the fact that, hundreds of thousands of people from one community gathering together and gang raping and killing and looting is the most cruel and horrible act. Its the most barbaric, its the most terrorizing thing in this world. And it happened many times in this country in day light. Its the same/similar gang that mills around these kinds of rumors/myths, to justify their bestial gross acts. Its like the thief calling some one else as thief while running after the theft. Well, if you have no shame do whatever you wish. But dont dream an india without Muslims. Islam is not a religion to be taught and forced, but its a natural feeling, of one God, springing up in a honest heart. Even after 100 Gujarats there will be people to sign up themselves into Islam as its a manifestation of a natural passion.
  http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=185:intelligence-bureau-of-india-&catid=82:indiia&Itemid=199

  லவ் ஜிஹாத் என்பது அறவே கிடை யாது கட்டாய மதமாற்றத்தைப் பரப்பும் லவ் ஜிஹாத் அல்லது ரோமியோ ஜிஹாத் என்ற அமைப்பு கேரளாவில் அறவே கிடையாது என மத்திய உளவுத்துறையான ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்­ம் இளைஞர் களைக் குறிவைத்து சமூக அளவில் அவர்களுக்கு எதிரான சந்தேகத்தை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த முஸ்லி­ம் சமுதாயத்தையும் தனிமைப்படுத்தி நாட்டை வன்முறைக் காடாக்கத் துணிந்த சக்தி முகத்தில் மத்திய உளவுத் துறையின் அறிக்கை அழுத்தமான அடுப்புக்கரியைப் பூசியுள்ளது. –

 23. காதல் அன்பு ஏற்படுறது ஒருத்தனோட/ஒருத்தியோட மனசு மட்டும் சேருரதுதான் அதுக்கு பேர்தான் காதல். அந்த புனிதமான வார்த்தைய மத வெறி கொண்டு மாசுபடுத்த வேணாம் மனிதர்களே.
  அழகு அறிவு இனம் பணம் மொழி ஜாதி மதம்
  இவை இல்லை இதுதான் காதலின் வேதம்.
  காதல் வரணும் மனசு புரிதல் என்ட காரணத்தால மட்டும்தான். அத விட்டுட்டு வேற சுய லாபத்துக்காக காதல பயன்படுத்தாதீங்க.
  அன்ப அசிங்கப்படுத்துறது இறைவனுக்கே புடிக்காது.
  இந்த உலகத்தில மதங்கள் எத்தனையோ?
  யாரும் ஒரு மதத்துல இருந்து இன்னொன்றுக்கு போறது, போறவன் மதத்த புரிஞ்சவனாகவும் அதுதான் உண்மை என்ட நம்பிக்கையோடவும் இருக்கனும்.
  மனிதர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: இஸ்லாம் கிறிஸ்தவம் இந்து இந்த 3 மதத்தையும் அதனோட ஆதாரங்களா இருக்கிற வேதங்கல கொண்டு ஆராய்ஞ்சு பாருங்க. அதுல எதில உண்மை இருக்கோ, ஒரு இறைவனால படைக்கப்பட்ட மனிதன் நல்லவனாக ஒழுக்கமானவனாக தன்னை புரிஞ்சுகிட்டவனாக மத்தவங்கள நேசிக்கிறவனாக அநியாயங்களுக்க போராடுரவனா இருக்க சொல்லுதோ அத முடிவு பண்ணுங்க.
  தருமத்த செய் எண்டு சொன்ன மதங்கல வச்சுக்கொண்டு அதன் பெயரால அதர்மத்த செய்கிறாயே அறிவுகெட்ட மனிதா…………
  உன்னால் செய்யப்பட்ட செய்கிற செய்யபோற எல்லாத்துக்கும் நீ ஒரு நாள் உன்ன படைச்சவனுக்கு பதில் சொல்லணும்.
  தயாராகு????????????????
  நீதிமன்றம் தண்டனய இப்பவே தந்திடும் ஆனால்
  இறைவனோட தண்டன நிரந்தரமானது(late a latest a வரும்)
  பயப்படு.
  நீ பயப்பட்டால் உனக்கு நன்மைதான்.
  இறைவன் மனிதனுக்கு மட்டுமே தந்த 6th அறிவ பயன்படுத்தி யோசி.
  வெற்றி உனக்கே.

 24. என் அன்பு ஹிந்து சகோதரர்களே… இன்னும் காலம் கரைந்துவிடவில்லை உன்னை நீ அறிய இபோதாவது முயற்சி செய்…… நமக்காக பரிந்து பேச இங்கு எந்த அரசியல்வாதியும் வர போவதில்லை…. ஏன் சிந்தித்து பார் நமக்குள் ஒற்றுமை உணர்வு இல்லை இந்த விசயத்திலும் கண்ணை மூடி கொண்டு நமது மத்திய மாநில அரசுகள் கிருதுவர்களுகுத்தான் ஆதரவாய் இருக்க போகிறது ஏன் சிந்தித்து பார் அவர்களை பார்த்து ஒற்றுமையை கத்து நாமும் ஒன்றுபடுவோம் கிருத்துவர்களுக்கு எதிராக அரசாங்கம் சிறிய துரும்பை நுள்ளி போட்டாலும் அவர்களது ஓட்டு கிடைக்காது போராட்டம் செய்வார்கள் ஹிந்துக்கள் முட்டாள்கள் தலையில் ஏறி முட்டினாலும் நாம் அவர்களைத்தான் அரசியலில் ஆதரிப்போம் என அவர்களுக்கு தெரிகிறது நாம் முட்டாள்களாக இருந்தது போதும் இனியாவது விளித்து கொள்வோம் இல்லையெண்டால் நாம் நமது மதம் இந்த அரசாங்கத்தாலும் கிருத்துவ முஸ்லிம் ஆட்களாலும் அழிக்கப்படும் மதவாதம் மதவாதம் என பொய் கூச்சல் இடும் இந்த அயோக்கியர்கள்தான் உண்மையான மதவாதி என்பதை நமது சாதாரண ஹிந்து மக்கள் உணர எல்லாம் வல்ல பரம்பொருளை மனமார ஹிந்துகளாகிய நாம் அனைவரும் ஒரு நிமிடம் கண்ணை மூடி வேண்டி கொள்வோம் …….. இந்த அரசாங்கத்தை நம்பாதே இறைவனை நம்பு அவன் நம்மை நம் மதத்தை அழிவில் இருந்து காப்பான்…ஜெய் ஹிந்து

  • சுப்பண்ணே, இங்க சாதாரண இந்து யாரு??? ஸ்பெசல் இந்து யாருன்னு விளக்கமா சொன்னா நாங்க விவரமாயிக்குவோம்…

  • யாரடா இந்துன்னு சொல்றஇந்துவெல்லாம் எப்ட்றா சகோதரன் ஆவ முடியும்பக்கத்துல வந்து தொட்டா பள்ளானங்றான், பறையன்ங்றான் இதுல எங்கட இந்து,எங்கள சூத்திரன், தேவிடியா பசங்கனு சாதி அடுக்குமுறைய வெச்சுட்டு உன்னோட ஆதிக்கத்த நிலைநாட்றதுக்கு இந்து சகோதரான்னு சொல்றியே உன்க்குவெக்கமில்ல திருட்டு பாப்பான் பசங்களாஎவனாவது இந்து சகோதரானு எழுதாதிங்கடா மானங்கெட்ட சங்கராச்சாரி வாயனுங்களா?
   அய்யா எல்லாம் உசாரா இருங்க இந்த இந்து காவி கேப்மாரி பசங்க நம்மள சகோதரன்னு சொன்னா மயங்கீடாதீங்க நந்தனுக்கும், வள்ளலாருக்கும் நடந்ததுதான் நமக்கும் நடக்கும்.

  • தம்பி புரிந்து தான் பேசுரயா. இந்தியாவுல இந்துக்கள் 80.5% முஸ்லிம் 13.2% கிரிஸ்டின் 2.3% அப்புரம் எப்படி தம்பி..

   அரசியல்வாதிகள் இந்த 2.3% க்குதான நம்பி இருக்கு.

  • புழல்,.. சாதா இந்துக்கு என்ன தகுதி வேணும் ஸ்பெசல் இந்துவாக என்ன தகுதிவேணும், நான் ஏன் ஸ்பெசல் இந்து, எதுக்காக சாதா-ஸ்பெசல்னு வேற வேற இந்து இருக்கு.. எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க

 25. வினவை மற்றும் பு க, பு ஜ வை அறிமுகம் செய்து சில நாட்களில் அல்லது சில மணி நேரங்களில் அனைவரும் கேட்கும் கேள்வி உலகில் நல்லதே நடப்பதில்லையா ? அல்லது உங்கள் கண்களுக்கு தேரிவதில்லையா? எப்போதும் குறையை மட்டுமே எழுதுகிறீர்களே என்று . இது குறித்தும் எழுதவும் . 

 26. எல்லாம் சரிதான்.

  //////மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.////

  இதை வினவு சொல்வது தான் முரண்நகை !!! உங்க ’கனவுகள்’ நிறைவேற, இதே தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை அடியோடு நசுக்க தயங்க மாட்டீர்களே !!
  ’சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்ற பழிமொழி இங்கு பொருந்துகிறது !!

  • அதியமான் வினவோட இவ்வளவு நாள் பழகி விட்டு இப்படிச் சொல்கிறீர்களே? எடுத்துக்காட்டாக வினவில் உள்ளது போல பின்னூட்ட ஜனநாயகம் ஜெயமோகன் தளத்தில் உண்டா? நாங்கள் சாத்தான் என்றால் அவர் தேவனாயிற்றே! கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை மதம் என்பது தனிநபர் உரிமை. மதவிவகாரங்கள் அத்தனையிலும் அரசு விலகி உண்மையான மதச்சார்பின்மையை அரசு கடைபிடிக்கும்.

   • அப்படியா வினவு ? tell this to the brids. அதாவது வரலாறு தெரியாதவர்களிடம் சொல்லுங்கள். சீனாவிலும், ரஸ்ஸியாவிலும் (மத உரிமைகள் நசுக்கப்பட்டதை) நடந்ததை நீங்கள் வேண்டுமானால் திரிக்கலாம். சரி, நான் கேட்டது தனி மனித உரிமைகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் சொல்வதை பற்றி. இரண்டுமே உங்களுக்கு ஆகாதவைகள் தானே ?

    ஜெமோவின் தளத்திலும் மாற்றுக்கருத்துக்கள், விவாதங்கள் இப்ப நடக்கிறதுதான்.
    தனிமனித தாக்குதல்களை அனுமதிப்பதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

    அவரின் ’பின் தொடருன் நிழலின் குரல்’ நாவலை பற்றி இதுவரை விரிவான, ஆழமான
    மறுப்பு வரவில்லையே. வெறும் ஒற்றை வரி நிராகரிப்புகள், பொதுவான கருத்துக்கள் தான். புகாரினின் வாக்குமூலம் பற்றி இன்னும் விரிவான விவாதங்கள் யாரும் செய்யவில்லையே ?

    • //ஜெமோவின் தளத்திலும் மாற்றுக்கருத்துக்கள், விவாதங்கள் இப்ப நடக்கிறதுதான்.
     தனிமனித தாக்குதல்களை அனுமதிப்பதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.//

     ஹா… ஹா.. இல்லாத ரஸ்ய வரலாறுகளை தோண்டியெடுத்து புரளி பேசும் அதியமான். ஜெ மோவின் கருத்து சுதந்திர(??) வரலாற்றை தலைகீழாக திருத்தி இங்கு பிரச்சாரம் செய்கிறார்.

     கடந்த காலங்களில் ஜெ மோ இருட்டடிப்பு செய்த நிகழ்வுகளில் ஒன்று இதோ இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு சோற்று பதமாக.

     நமது அதியமான்தான் அதி அற்புத பரிசுத்த ஜனநாயகவாதியாயிற்றே, அப்படியிருக்கையில் ஜெ மோவின் இந்த செலக்டிவ் கருத்து சுதந்திரத்தை அம்பலப்படுத்தாத காரணம் என்ன? வேறொன்றும் இல்லை அதுதான் அரசியல் அதுதான் முதலாளித்துவ மூளைப் பக்கவாதம், சிந்தனை முடக்குவாதம்.

     1/ கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!
     http://porattamtn.wordpress.com/2009/02/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

     //கம்யூனிஸ்டுகளின் கடிதங்களை தமது தளத்தில் பிரசுரிப்பதோ, அதற்கு பதில் சொல்வதோ நேர விரயம் என அறிவித்த ஜெயமோகன், கடந்த பிப்ரவரி 8 அன்று, ஜி.எஸ்.குணசேகரன் எனும் நடமாடும் மேதை எழுதிய இந்தியஊடகங்களை யார் நடத்துகிறார்கள்?:கடிதம் எனும் உன்னத கடிதத்தை தமது தளத்தில் வெளியிட்டார். அந்தோ, இரண்டே நாட்களில் அந்தக் க