வேண்டாம் நீட்! கண்டன ஆர்ப்பாட்டம் | வேலூர்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் முறைகேடு எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பகுதியில் அப்பகுதி ஜனநாயக சக்திகள் ஆகஸ்ட் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு மோசடிகளுக்கு எதிராகவும் அரசு தேர்வுகளில் நடந்து வரும் குளறுபடிகளுக்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பகுதியில் அப்பகுதி ஜனநாயக சக்திகள் ஆகஸ்ட் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பில் சி.பி.ஐ., வி.சி.க., பி.எஸ்.பி., எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி, மக்கள் நல சேவா சங்கம், மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு. சார்பில் தோழர் சுந்தர் உரையாற்றுகையில், “பாசிச கும்பல் நீட் தேர்வை முறையாக நடத்தாததால் நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் நடத்திய  எழுச்சி மிகுந்த போராட்டம்  பாசிச ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. கும்பலைப் பணிய வைத்துள்ளது. இப்படி மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும். மாநில உரிமை, மக்களின் வாழ்வாதாரம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்.  அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

த.ஒ.வ. இயக்க  மாவட்டத் தலைவர் தோழர் விநாயகம், பி.எஸ்.பி.  மாவட்டப் பொறுப்பாளர் தோழர்  ராஜா, சி.பி.ஐ. கட்சியின் மாநிலக் குழு தோழர் மணி, மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் மதனகவி, பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்க தலைமைக் குழு தோழர் பரசுராமன், எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் நகரத் தலைவர் ரியாஸ் அஹமத், மக்கள் நல சேவா சங்கத் தலைவர் முன்ரத்தினம், வி.சி.கா-வின் மாநிலக் கருத்தியல் பரப்புச் செயலாளர் தோழர் செல்லப்பாண்டியன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் சரவணன் ஆகிய தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்.
வேலூர் மாவட்டம்.
84897 35841

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க