இளவரசன் மரணம் : திவ்யாவின் தாலியறுத்த பா.ம.க சாதி வெறியர்கள் !

130

ன்று காலை தருமபுரி கலைக்கல்லூரிக்குப் பின் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது கொலையா தற்கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை.

இளவரசன்
இளவரசன்

இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய கொலையாளிகள பா.ம.க வின் சாதிவெறியர்கள்.

திவ்யாவின் தந்தையுடைய மரணத்துக்கும் இவர்கள்தான் காரணம். ஒரு கலவரம் நடத்துவதற்காகவே திவ்யாவின் தந்தையை மரணத்துக்குத் தள்ளியவர்கள் இந்த கொலைகாரர்கள்.

நேற்று திவ்யாவை உயர்நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து “நான் சேர்ந்து வாழ விரும்வில்லை” என்று பேட்டி கொடுக்க வைத்தார்கள். அதை மிகவும் பெருமையாக பிரசுரித்து மகிழ்ந்தார் பசுமைப்பக்கங்கள் அருள்.

இன்று “வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா” என்று தலைப்பிட்டு பசுமைப்பக்கங்கள் அருள் மிகவும் சந்தோசமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவருடைய மட்டற்ற மகிழ்ச்சிக்கு காரணம், குரல் தழுதழுக்க திவ்யா அளித்திருக்கும் தொலைக்காட்சி பேட்டி. அவர் வெளியிட்டிருக்கும் அந்த பேட்டியில் திவ்யா கூறியிருந்தது இதுதான்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன். அம்மாவும் வேணும் அவுங்களும் வேணும்னுதான் இவ்வளவு நாள் வரையிலும் இருந்திட்டிருந்தேன். ஆனா மேற்கொண்டு எனக்கு என்னுடைய அப்பாவோட நினைவுகள் இருந்துகிட்டே இருக்கிறதுனாலே எனக்கு சேர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் சேர்ந்து வாழத் தயாராவே இல்லை. நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன். இதைத்தான் நான் நீதிபதிகிட்டேயும் சொன்னேன். ஆனா ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால, இன்னிக்கி நான் யாரோட ஆதரவுமே இல்லாம தனிமையில நிக்கிறேன். நான் வந்ததே என்னுடை பேரண்ட்சோட எதிர்பார்ப்புக்காகத்தான், அவுங்க கூட வாழணும். எனக்கு நீங்கதான் முக்கியம். நான் செஞ்சது தப்பு அப்பிடிங்கிறத உணர்ந்து நான் வந்தேன். ஆனா அவுங்க ஒரு தவறான செய்திய வெளியிட்டதனால, எல்லார் மத்தியிலயும் எனக்கு ஒரு ஆதரவு கிடைக்காம இன்னக்கி நான் தனிமையில நிக்கிறேன். அத விளக்குறத்துக்காகத்தான் நான் இன்னிக்கி கோர்ட்டுக்கு வந்தேன்”

“தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார் “ என்று நாம் சென்ற பதிவில் எழுதியிருந்தோம். “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று தெளிவுபடுத்துவதற்காக திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் சத்திரியர்கள்.

இந்த ஒரு வரியைக் காட்டி வினவின் முகத்தில் திவ்யா கரி பூசிவிட்டதாக கொக்கரித்திருந்தார் அருள்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொல்லத் தொடங்கி, “வாழத்தயாராக இல்லை” என்று கூறி முடிக்கும், பரிதாபத்துக்குரிய ஒரு பெண்ணின் கண்ணீரில் மகிழ்ச்சியடையும் மனவக்கிரம் பிடித்த இந்த மிருகங்களை என்ன செய்வது?

கண்ணகி, முருகேசன் கொலை ஒரு ரகம். இது ஒரு ரகம்.

நேற்று திவ்யாவின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினார்கள். இன்று தாலி கட்டிய கணவன் அகற்றப்பட்டு விட்டான்.

மீண்டும் சொல்கிறோம். தற்கொலையே ஆனாலும் இது கொலைதான். இதற்கு முழுப்பொறுப்பு பா.ம.க.

ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!

திவ்யாவை உடனே அவரது குடும்பத்தினரிடமிருந்தும் சாதி வெறிக் கும்பலிடமிருந்தும் விடுவிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் திவ்யாவையும் இளவரசனையும் மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உடனே திவ்யாவை விடுவிக்காவிட்டால், தங்களுடைய குற்றங்களை மறைக்கும் பொருட்டு, சாதிவெறியர்கள் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு, தற்கொலை என்று முடித்து விடுவார்கள்.

சாதி வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வோம்! சாதிக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்!

130 மறுமொழிகள்

 1. உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

  ‘வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா?

  எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். எட்டு மாதத்திற்கு முன்பு ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை’ என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.

  • ஏய் கொலைகாரா உன்னை எல்லாம் உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டித் தட்ட வேண்டும். என்ன தைரியம் இருந்தால் ஒரு கொலை நடந்த பிறகும் நீ விளக்கம் கொடுத்து பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பாய்.

  • இரண்டு மரணத்திற்கும் காரணம் சாதிவெறியர்கள் தானே தவிர –

   “வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ ” – எந்த வெஙகாயமும் இல்லை –

  • திவ்யா அவர்களின் அப்பா மரணத்தை வைத்து அரசியல் செய்த ஓநாய் நீங்கள் இதை சொல்ல தகுதியற்றவர்கள் \\\\எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம். எட்டு மாதத்திற்கு முன்பு ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை’ என்பதையும் நினைத்து பார்க்கிறோம்./////

  • இதை தட்டச்சு செய்யும் போது உங்கள் முகத்தில் நிச்சயம் ஒரு கொக்கரிப்பும் எள்ளல் நகையும் இருந்திருக்கும். அது இந்த வார்த்தைகளில் தெரிகிறது. இன்னும் செல்வி டாட் திவ்யா என்றே எழுதுங்கள் அருள் அவர்களே.

  • தாலியறுத்து விட்டீர்கள். அடுத்து வன்னியர் மேட்ரிமோனியில் நீட்டி எழுதிவிடுங்கள், சாதி காத்த பெண்ணரசி செல்வி டாட் திவ்யாவுக்கு ஒரு வன்னிய குல சத்திரிய சிங்கம் தேவை என்று. அந்த பெண்ணை இன்னும் எவ்வளவு இழிவு படுத்துவீர்கள் என்று பார்ப்போம்.

  • ////உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

   ‘வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா? //

   அதைத் தீர்மானிக்க “நீங்கள்” யார்??? உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது??? இளவரசனையும், திவ்யாவையும் ஆள்வதற்கு “நீங்கள்” யார்??? அந்த இருவரும் மனிதர்கள். தங்களுக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு இருவருக்கும் உரிமை உண்டு. அதற்கான ஜனநாயகம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அது வெற்றியில் முடிவதும், தோல்வியில் முடிவதும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். “காதல்” எதிர்க்கப்படவேண்டுமென்றால் காதலை எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள். விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்; விரும்பாதவர்கள் ஒதுக்கட்டும். “காதல் எதிர்க்கப்படவேண்டும்” என்பதை எவர் மீதும் திணிக்காதீர்கள். அது ஜனநாயகமல்ல. கொஞ்சம் கூட உமக்கு மனசாட்சியில்லையே??? எப்போது திருந்தப் போகிறீர்கள் அருள்???

  • ஒவ்வொரு வார்த்தையை தட்டச்சு செய்யும் போது அருள் என்ன மனதில் நினைத்திருப்பார் என்பதை பார்ப்போம்.

   //
   உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.
   //

   பறப்பயலே. உனக்கெல்லாம் படிப்பு, வேலை, வருமானமெல்லாம் ஒரு கேடு. ஏண்டா.

   //
   ‘வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’,
   //

   காதல் போயின் சாதல் அப்படின்னு பாட்டுக்காரன் சொல்லி வச்சுருக்கிறான். விழுந்து சாவு.

   //
   ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’
   //

   காசு பணம் இல்லாத பரதேசி செத்து போடா

   //

   எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம்.
   //

   (ஒரு நக்கலான சிரிப்பை இங்கே போட்டுக் கொள்ளவும்)

   //
   எட்டு மாதத்திற்கு முன்பு ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை’ என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.
   //

   பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம். எங்க சொந்த சாதிக்காரரை நாங்களே சாகடிச்சாலும் காரணம் இந்த பயலுகள் தான். அதனால் அவனை கொன்னுட்டதால நாம ஜெயிச்சுட்டோம்.

   அப்படித்தானே அருள் அவர்களே.

   • you are right…. செம பதில் அடி……..உயிர்களின் மதிப்பு அறியாத மிருகம்…மிருகத்துடன் ஒப்பிட்டல் மிருகத்துக்கு தான் அவமானம்

   • enpa Naan Kadavul arya ipadi andha aalu kooda nenachu irukka maaturupa nee en andha aalu sonna vaarthaiku pala artham ehu kadhu mooku thonda heart kooda varaia polakkudhu???

  • சாதிவெறி கொலைகாரர்களே திவ்யாவின் அப்பாவை தற்கொலைக்கு தூண்டியது பாமக தான்.இன்று இளவரசனையும் கொன்றுவிட்டார்கள்.காட்டுமிராண்டி கூட்டத்தை பேசி திருத்த முடியாது.

  • பா.ம.க-விற்கும், அதன் முதலாளியான ராமதாசுக்கும், அவரின் வாரிசான சின்ன அய்யாவுக்கும், அவரின் அடிப்பொடியான உனக்கும், மற்றும் இதர சாதி வெறியன்களுக்கும் சாவு மணி அடித்தாகி விட்டது.

   அருள்!! ஒன்றை நினைவில் கொள்க….நீ என்ன தான் ஓலமிட்டாலும், உனக்குத் தேதி குறிப்பதும் உன் அய்யா-வாகத் தான் இருக்கும், ஏனென்றால் இப்போது நீ ஒரு பங்களா நாய், அவ்வளவு தான்…

   ஆதிக்க வெறியும்,இனவெறியும், பொருள் வெறியும் வரலாற்றில் என்றுமே நிலைத்ததில்லை. உழைக்கும் மக்களின் ரத்தம் குடித்து அதில் பசியாறும் நீங்கள் இப்போது வேண்டுமானால் அகம் மகிழலாம்….ஆனால்……

   பார்ப்பனீயத்தை எதிர்க்க வக்கின்றி, ஓட்டுப் பொறுக்கி வாழும் உங்களுக்குத் தெரியுமா,நீங்கள் பார்ப்பானின் பார்வையில் தேவடியாள் மகனென்று…

   முதலாளித்துவத்தை எதிர்க்க வக்கில்லை…உனக்கு பாட்டாளி என்ற பெயர் வேறு…..ஆண்ட பரம்பரை என்று அடிக்கடி குரைக்கிறாயே….எங்கே உன் தலைவனை முதலாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றி வைக்கச் சொல்…பார்ப்போம்….

   நன்கு தெரிந்து கொள்….சாதி வெறிநாய்களுக்கு அவனவன் சார்ந்த உழைக்கும் மக்களே சாவு மணி அடிப்பார்கள்….இது உறுதி…

  • சாதிவெறியன் அருள் , உங்களைப் போன்றவர்களை இனி அம்பலப்படுத்தி சமூகத்தில் அனாதைகளாக்கப்போகிறோம். இளவரசன் செத்து சாதிக்கப்போவது இதைத்தான்.

  • காதலை நீங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா?? இளவரசனுக்கு படிப்பில்லை, வேலையில்லை, வருமானம் இல்லை என்று தெரிந்து தான் திவ்யா அவனுடன் சென்றாள். முதலில் இந்த பண்பாடு, கலாசார காவலன் என்ற வேடத்தை களையுங்கள். இளவரசனின் மரணம் உங்களை உலுக்க வில்லையா?.இன்று இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா???? மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒன்றும் அனைத்து வன்னியர்களின் பாதுகாவலர்கள் அல்ல.உங்களின் முந்தைய செயல்பாடுகளை குறித்து நினைத்து மனம் நொந்து இனியாவது திருந்த முயற்சிக்கொள்ளுங்கள்

  • டெ ________ எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுககு ராமதாஸ்,பா.மா.க கட்சியும் தான்ட காரணம்

   • அட ____ உங்க வீட்டில் நிகழ்ந்த எழவுககும் ராமதாஸ்ம்,பா.மா.க கட்சியும் தான்ட காரனம் நம்ம ரெண்டு பெர் வீட்டுஎழவுககும் இந்த சாதி வெறியர்கள் காரனம்ங்ரது உனக்கு என்டா புரியமட்டங்குது?

  • Love is a feeling, one doesnt love another just for the sake of Money or material or caste. PMK/Caste groups do not know this. The type of marriage based on Caste/Money/Job/Education being supported by PMK/Caste groups is nothing but a kind of Prostitution/Rape, where the marriage happens because of Caste/Money considerations and not love, and the sex that happens in those marriages of convenience is nothing but Rape!!!

  • நாயில் கலப்பினம்
   நாடெல்லாம் நன்றாய் வாழுது
   உயர் கலப்பினம்
   ஒய்யாரமாய் உலவி வருகுது
   நானோ தமிழனம்
   நாயகனோ வேறினம் என்றே
   வீணா வீழ்த்திய
   வீணர்களை வேரறுப்போம் என்றோ

  • பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்…

   மகாபலிபுரம் பாமக கூட்டத்தில் ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர் சர்ச்சைக்குரிய பேச்சு…

   LINK;

   http://youtu.be/kbdhHQCISIw http://youtu.be/kbdhHQCISIw?t=12s

   ( Kaduvetti Guru’s Controversial speech at Mahabalipuram PMK meeting)

 2. //நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன்//

  கவனிக்கவும். அந்த பெண்ணோட முடிவு அல்ல.

 3. //நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன்//

  கவனிக்கவும். இது அந்த பெண்ணோட முடிவு அல்ல.

 4. இளவரசன் இறப்பு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. அவரது குடுமபத்தினரின் துயரத்தில் பங்குகொள்கின்றேன். இவரது இறப்பிற்கு பாமக என்ற சாதிவெறியனின் கட்சி முற்றுமுழுதான காரணம் என்றாலும் இந்த அரசும், நீதித்துறையும், இந்த கேடுகெட்ட சமூகமும் குற்றவாளிகள்தான்.

 5. If the communal devils like _____, _____ and so on, 1000 of Periyar will come also they cant do anything in this country.
  While going (death) these guys will take their community with them for hell also.

 6. //ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால,//

  வக்கீல் ரஜினி செய்த பொய்க்காரியம் திவ்யாவை ஒரு பேட்டிக் கொடுக்க வைத்து..ஒரு உயிரை காவு வாங்கிவிட்டது… இந்த _______ தூக்குல போட்டாவே இன்னும் நிறைய உயிர்களை காப்பாத்தலாம்….

  • ரஜனி கிட்ட திவயா அப்படி சொல்லைன்னு உங்களால ஊர்ஜிதமா சொல்லமுடியுமா?

  • அம்மா ஏற்றுக்கொண்டால் வாழ்வேன் என்பது பொய்யான அறிக்கை என்றாலும் கூட எந்த விதத்திலும் அது உயிரை எடுக்கும் செய்தியே அல்ல, உன்னை மாதிரி லூசெல்லாம் இன்னும் இங்கே வந்து எங்க உசுரை எடுப்பது தான் வேதனையாக உள்ளது.எப்படிப்பா இன்னும் அப்படியே இருக்கிறாய்?

 7. //இளவரசனை கொன்ற பா.ம.க சாதிவெறியர்கள்//

  #திவ்யாவின் தந்தையை கொன்ற வினவு பெண்வெறியர்கள்

  இப்படியும் சொல்லாமே?????????????????????

  • இளவரசனை கொன்ற தமிழ்நாட்டு சாப்ட்வேர் சாதிவெறியர்கள்
   இப்படியும் சொல்லாமே??

 8. //#திவ்யாவின் தந்தையை கொன்ற வினவு பெண்வெறியர்கள்
  இப்படியும் சொல்லாமே?????????????????????//

  திவ்யாவின் தந்தை எப்படிக் கொல்லப்பட்டார்? கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் ஆர்.தியாகு.

 9. I am really depressed after I came about Mr. Ilavarasan death. I was very optimistic both will get a good life. I think casteism is a part of Indian psyche. It takes another 100 years or even more to remove from the minds of Indians. This is really regressive and only proves we are still 1000 years back. First our country should start creating more and more awareness about untouchability. Actually we need to cancel our space travel to Mars planned to ISRO and all these crap. Who cares. First we need to look at this county. We are in deep trouble.

 10. ரத்தவகையோ D.N.A வோ ஒவ்வொரு சாதிக்கும் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்து சாதிகளையும் அறிவியல் அடிப்படை இல்லை என்று தடை செய்யவேண்டும். ரத்தக்கலப்பு நடக்க கூடாதென சாதி வெறியர்கள் மேடையில் பேசுவதை படித்தவர்களும் பகுத்தறிவுள்ளவர்களும் சான்றோர்களும் கண்டும் காணாமலும் இருப்பது மிகப் பெரிய தவறு

 11. மனிதநேயம் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.சாதிவெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்.

 12. கொண்டாடுங்கள் சாதி வெறியர்களே, இனி எப்பொதும் திவ்யாவும் இளவரசனும் சேர மாட்டார்கள்.
  இளவரசனின் மரணத்தை உள்ளூர ரசிக்கும் குரூர நெஞ்சம் கொண்ட சாதி வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வோம்.
  ச்சீ, மனுசனுங்களாட நீங்க?

  • கொண்டாடுங்கள் பெண்வெறியர்களே..திவ்யா தந்தை தன் மகளைப் பார்க்க இனி வரமாட்டார்.. நாகராஜனின் மரணத்தை உள்ளூர ரசித்த கல்நெஞ்சம் கொண்ட பெண்வெறியர்கள் முகத்தில் காறித் துப்பாத்தீர்கள்.. நம் எச்சிலுக்கும் ஒரு தகுதி இருக்கிறது.. கண்டவர்களின் முகத்தில் விழுந்து அதன் புனிதம் கெட்டுவிடக்கூடாது..

 13. ஒரு பெண் தான் விரும்பும் வாழ்க்கையை தானே தெரிவு செய்துகொள்வது, அந்த உரிமைக்காக குரல் கொடுப்பது, பெண்ணை தன் குடும்பத்தின் அசையும் சொத்தாக கருதி தன் வெற்று சாதி கௌரவத்திற்கு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று போராடுவது, இவை எல்லாமே ஒருவனுக்குப் பெண் மீதான வெறியாக தோன்றுகிறது என்றா, அவன் எவளவு வக்கிரமான எண்ணமும் சாதி உணர்வும் கொண்டவன்??? உண்மையில் பென்வேரி பிடித்தவன் ஜீன்சுக்காகவும் கூலிங் க்லாசுக்காகவும் தன் சாதிப் பெண்கள் தலித் இளைஞர்கள் பின்னாள் போய்விடுகின்றனர் என்று கூச்சமின்றிப் பேசிய உங்கள் ராமதாசுதான்…

 14. இளவரசனின் மரணத்திற்கும் காதலுக்காக உயிரைத் துறந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  இளவரசனின் மரணதினம் “சாதிகளுக்கு சாவு மணி அடிக்கும் தினமாக” நினைவு கூறப்படவேண்டும்.
  சாதி, மதம் மறுத்து காதலிக்கும் இளைஞர்களே, உங்கள் முன் கடும் போராட்டம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதனை எதிர்க்கும் மனவலிமையையும், பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிக்கொள்ளுங்கள். இது சாதி மத த்தால் அழுகிப்போன சமூகம். அதிலிருந்து வெளியேறுங்கள். புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள்.

 15. இளவரசனிடம் அழகு இருந்தது
  அறிவு இருந்தது
  ஆற்றல் இருந்தது
  கொஞ்சம் வசதியும் இருந்தது
  அவனிடம் இல்லாதது ஒன்றே ஒன்றுதான் அது ஆதிக்க சாதி ஆண்குறி …..
  இங்கே காதலிக்க
  ஆதிக்க சாதி ஆண்குறிமட்டுமே தகுதி படைத்தது….

  …முகநூலில் நண்பர் வீரபாலு என்பவர் எழுதிய வரிகள்.

 16. மிகவும் வேதனையான செய்தி.
  இது ஒரு தற்கொலையெனில், இளவரசன் வாழ்க்கையில் சாதனைகளைச் செய்து தன்னை ஒதுக்கியவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்திருக்க வேண்டும்.
  எனக்குத்தெரிந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணும் இந்துப் பையனும் சமூகம் (முக்கியமாக பெண் பகுதி) மதம் மாறாது சேர்ந்து வாழ அனுமதிக்காது என்று தெரிந்து வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றார்கள். அதற்காக திருமணத்திற்கு முன்பே இருவரும் தம்மை நன்கு தயார்படுத்திக் கொண்டதால், இன்று இருவருமே தத்தமது இறை நம்பிக்கைகளைப் பின்பற்றுவதுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

 17. I am ashamed of being a citizen of this country. For how many years will we be like this ? We all in our all walks of life shun caste. Dalits are really tortured in this country in every walk of life. The death of Ilavarasan is a direct outcome of PMKs DIRTY POLITICS. The leaders of this party should be arrested and punished for their activities

 18. //உரிய வயதும் வரவில்லை, படிப்பையும் முடிக்கவில்லை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

  ‘வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை ஆகாது’, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்பதை மரணத்தின் மூலம்தான் அறிய வேண்டுமா?

  எந்த ஒரு மரணமும் வருத்ததிற்கு உரியது, வருந்துகிறோம்.எட்டு மாதத்திற்கு முன்பு ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த எழவுக்காக ஒருவரும் அழவில்லை’ என்பதையும் நினைத்து பார்க்கிறோம்.//

  ராமதாஸ்-அன்புமணி-குரு-அருள்-பாலு——–போன்ற சாதிவெறி கிரிமினல்களை வெறும்
  விவாதத்தால் மட்டும் மாற்ற முடியாது. முச்சந்தியில் நிறுத்தி ‘ உன் சொந்த நலனுக்கு அடுத்தவனைக் கொல்வாயா?’—என்று கேட்டு செருப்பால் அடித்தே சாகடிக்க வேண்டும்.
  பிறகு நாமும் சொல்லலாம்—-
  உரிய வயதிருந்தும் அறிவில்லை—படிப்பிருந்தும் பண்பில்லை—வேலையே கொள்ளையடிப்பது——
  சாதிவெறியே வாழ்க்கையாகாது—பிராடுகளுக்கு இவ்வுலகில்லை——எல்லா மரணமும் வருந்தத்தக்கதல்ல!

 19. வினவு போன்ற ஜாதி வெறி மற்றும் இஷ்லாமிய மத வெறி கும்பல் இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க முடியாது. தூபம் இட்டுக் கொன்டெ இருப்பார்கள். ஜாதியை திட்டுவது போல் பாசாங்கு செய்வார்கள்! இதுதான் இவர்களின் தொழில்!!!

  • மு.நாட்ராயன் அவர்கலுக்கு

   வினவு தளத்தை அவதுறு பேச என்ன தகுதி இருக்கு உங்கலுக்கு ஆதரபுர்வமாக நிருபிக்க உங்களால் முடியுமா? நெட்டு ஓசில இருக்கு இன்றதாள நெட்டு கழன்டா மாதிரி பேசாத.

   • வினவு எப்போதும் ஜாதி அடிப்படையில் தான் செயல்படுகிறது. மற்றும் இஸ்லாமிய வெறிக்கு தூபம் போடுகிறது. ஒரு பக்கம் தலித் என்றும் ஆதிக்க ஜாதி என்றும் ஜாதியின் பெயரை குறிப்பிடாமல் எழுதுவதும் வினவுவின் வேலை. ஒருபக்கம் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு மறுபக்கம் ஜாதி ஒழிப்பு குரல். இதெல்லாம் ஜாதியின் பரிணாம வளர்ச்சி. இன்னொருபுறம் பார்ப்பனன் புனுல் என்று சாடுவது. இதெல்லாம் ஜாதி சம்பந்தமான பரிநாமங்கள்தானே!!!

    தி.க.போன்ற சில தற்குறி கூட்டங்களும் ஒரு பக்கம் ஜாதி ஒழிப்பு கூட்டம் மறுபக்கம் ஜாதி அடிப்படியில் இட ஒதுகீடுகோரி ஆர்ப்பாட்டம். இதனால் எப்படி ஜாதி ஒழியும்? ஒருபக்கம் பகுத்தறிவு திருமணம் என்ற பெயரில் தாலியை எடுத்துக்கொடுத்தல் மறுபக்கம் தாலி அறுப்பு திருவிழா!! இதல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பது தமிழனின் தலைஎழுத்து!!!!!!

 20. பா.ம.க தான் கொலை செய்தது என்று கூறினால் இளவரசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏன் அவரின் உரவினர்களே தடுக்க வேன்டும்….

  அப்படி என்றால் இளவரசனின் மரணதிர்க்கு (கொலைக்கு) யார் காரனம்

 21. “ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!”

 22. “ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!”

  அருள் போன்ற பதிவர்களை இந்தப் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை? சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் அனைவருக்குமே இந்தக் கொலையில் பங்கண்டு.

  • ஏன் இதில் வினவுவை சேர்க்க வில்லை. இதுவும் தலித் ஆதிக்க ஜாதியினர் பார்ப்பனன் பூணுல் இஸ்லாமிய மத வெறிக்கு தூபம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது. ஆகையால் இவர்களையும் வன்கொடுமை சட்டத்தில் கொண்டுவர வேண்டும்.

 23. “ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!”

  அருள் போன்ற பதிவர்களை இந்தப் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை? சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் அனைவருக்குமே இந்தக் கொலையில் பங்குண்டு.

 24. நெஞ்சு பொறுக்குதில்லையே! சாதிவெறி ஒரு அப்பாவித் தமிழனைப பலி கொண்டு விட்டது. இந்தக் கொலையில் அல்லது தற்கொலைக்கு உடந்தையானவ்ர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரையும் செல்வி. ஜெயலலிதா கம்பி எண்ண வைக்க வேண்டும். முதலில் சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். திவ்வியாவை விதவையாக்கியது அவளது உற்றாரும், உறவினர்களும் தான்.

  • ///சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்///

   ஜாதி கட்சிகளை தடை செய்வது முடியாது மற்றும் வீண்வேலை. ஜாதியை வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களது பள்ளி சான்றிதழ்களில் மற்றும் தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களின் பள்ளிசான்றிதழ்களில் “ஜாதி இல்லை” என்று குறிப்பிட வேண்டும். எத்தனை பேர் இதற்கு தயார்??? ஒருவரும் முன்வர மாட்டார்கள். ஜாதி இருந்தால்தால் “பகுத்தறிவு” !!!!!!!!!!.

 25. மருத்துவர் தமிழ்குடிதாங்கியையும், அவரது கட்சியையும் தமிழத்தில் புல்பூண்டு அளவுக்கும் இல்லாமல் செய்வதே இளவரசன் (தற்)கொலைக்கு நாம் செய்யக் கூடிய பரிகாரம்.

 26. தம்பி இளவரசா,
  நீயும் திவ்யாவும் மனமொத்து மணம் புரிந்தபோது
  நான் மகிழ்ந்தேன்.
  எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நீங்கள் சேர்ந்திருந்தபோது
  பெருமைப்பட்டேன்.
  காதல் மணம் சாதியை வேரறுக்கும் எனும் உண்மையை ஊர் உணரச்செய்வீர்கள் என நம்பினேன்.
  வாழ்ந்துகாட்டுவீர்கள் ஊர் வியக்க
  என பெரிதும் நம்பினேன்.

  அய்யகோ!

  வாழ்ந்துகாட்டியிருக்கவேண்டுமடா நீ!
  காதல் சிறக்க, சாதிவெறியர் தலை குனிய,
  நெஞ்சு நிமிர்த்தி
  வாழ்ந்துகாட்டியிருக்கவேண்டுமடா நீ!

  ஏன் வீழ்ந்தாய்?
  ஏன் உன் செந்நீரை நிலத்தில் பாய்ச்சினாய்?
  உங்கள் காதலை வாழ்த்தாத சமுதாயத்தின் முகத்தில்
  சேறு பூசவா???

  – அந்தோணி அருள்ராஜ்

 27. Let media and public stop popularizing the issue further.
  Let them allow atleast Divya to live peacefully. People seek death when their minds stop working and their hearts wounded. Encouragement and persuasion are the need of the hour to save those who are left.

 28. இரன்டு குடும்ப்ப்தயும் நாசமாகியது இரன்ன்டு சாதி வெர்யர்கல் . VCk and PMK both are accuest. vck accuest for Divya’s father death. PMK accuest for ilavarasan’s death.

 29. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
  மனு இன்னும் மடியவில்லை!

 30. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
  மனு இன்னும் மடியவில்லை!
  http://hooraan.blogspot.com/2013/07/blog-post.html

 31. முதலில் இளவரசனுக்கு இரங்கல். நீ இளவரசன் இல்லையடா! நீ பேரரசனடா!!!
  காரியம் முடிந்ததும் முடிந்ததும், கழட்டி விடாமல், அவளை வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டது தான் நீ செய்த தவறுடா !
  இந்த கொலையை செய்த பா ம க வினரை என்ன செய்வது என்பதை ஆண்டவனிடமும் தமிழக மக்களிடமும் விட்டுவிடுவோம்.

 32. தலித் வீட்டில் ‘கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண்’ என மற்ற சாதியினர்தான் குடும்பம் நடத்த வேண்டும்.

  ஆனால், தாழ்த்தப்பட்டவர்களிலேயே இன்னும் தாழ்ந்தவராக இருக்கும் சக்கிலியர் வீட்டில் மற்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர் குடும்பம் நடத்தக் கூடாது. அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் சக்கிலியரான கார்த்திகேயன் வீட்டில் குடும்பம் நடத்தமுயன்ற பறையர் இனப்பெண் கோகிலாவை, அவர்கள் குடும்பத்தினரே கொலை செய்துவிட்டனர்.

  இதுகுறித்த உண்மை அறியும் குழுவினர் “பள்ளிநேலியனூர் கிராமத்தில் 2012 நவம்பர் 11 அன்று நடந்த குடும்ப/சாதி வெறி, திமிர் கொலையில் (கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

  ஆனாலும் புரச்சியாளர்கள் இதுகுறித்தெல்லாம் பேசமாட்டார்கள். பேசினால், அது புரச்சிக்கு எதிர் புரச்சி ஆகிவிடாதா?

  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும் என்று பேசும் இதே ரஜினிக்காந்தால் “ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் பறையர் பெண் குடும்பம் நடத்தட்டும்” என்று பேச முடியுமா?

  வாழ்க தலித் புர்ச்சி! வாழ்க பழிக்குப்பழி சாதிஒழிப்பு!!

  • The incident on 11th November 2012 is a problem within the family itself, it doesn’t arose as a riot, none of any disturbances to the people weren’t created.. But now the situation is controversial, have your thirst for blood has been over?? you have started with one but this will be leading to loss of several lives, are you happy now? are you satisfied? do you need anything more DICK???…..

  • ராஜா, உங்கள் பதிவை படித்தும் படிக்காத மாதிரி போய்டுவானுங்க… முற்போக்குவாதிகள் என்றாலே இதுப்போன்ற பதிவுக்கு பதில் சொல்லாமல் முக்கப் போரது மாதிரி அவசரமா போய்டுவாங்க…

 33. இது தற்கொலையல்ல.கொலைதான்.சாவுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இளவரசன் ATM ல் 9000 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.ரயிலில் விழுந்து சாக போகிறவனுக்கு அவ்வளவு பணம் எதுக்கு.காவல்துறை சரியான முறையில் செயல்பட வேண்டும்.தற்கொலை என ஊத்தி மூடாமல் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

 34. இளவரசனுக்கு ஆதரவாக தலித் ஆதரவு கட்சியை சேர்ந்தவர்கள் ஆஜராகலாம்.. ஆனால் திவ்யாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வன்னியர் ஆதரவு கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராகி விடகூடாது.

  திவ்யாவின் அப்பா செத்தாலும் பா.ம.க காரணம்.. இளவரசன் செத்தாலும் பா.ம.க காரணம். நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.

  தலித் தரப்பு நியாயங்களை வெளியிடுவதோடு பிற சமுதயாங்களை வசை பாடுபவர்கள் முற்போக்கு வாதிகள். இன்னொரு தரப்பின் நியாயத்தை எழுதுகிற ஒரே ஒரு ஆர்வலர் “அருள்” சாதி வெறியர்.

  தான் இறந்து போனால் தன் குடும்பம் கஷ்டபடும் என்று இளவரசனோ, தான் ஓடி போனால் அவமானத்தால் தன் குடும்பம் தவறான முடிவை எடுக்கும் என்று திவ்யாவோ முன்பே யோசித்திருந்தால் இந்த பிரச்சனைகளுக்கு இடம் ஏது???

  • ராசு,
   பிரச்சினையை இப்படித் துண்டு துண்டா பிரிச்சுப் பார்த்தா இப்படித்தான் கேள்வி கேட்கத் தோணும். இளவரசனும், திவ்யாவும் காதலிச்சாங்க. பெத்தவங்க அனுமதி தரமாட்டாங்ககிறதால வெளியே போயி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இளவரசன் வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. திவ்யா வீட்டுல ஏத்துக்கல. இவ்ளோதான ராசு பிரச்சினை??? அவங்க ரெண்டு பேருக்குள்ள அவங்க பேசி தீர்த்துக்க வேண்டியதை சங்கூதி ஊர்க் கலவரம் உண்டாக்குனது யாரு ராசு??? திரும்ப திரும்ப கைய பிடிச்சி இழுத்தியா ரேஞ்சுலயே பேசிக்கிட்டு திரியுதுங்க..!

 35. வேதனையாக இருக்கிறது, இந்த நாடு எப்போது திருந்தும். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு ரஷ்யரிடம் பேசிக்கொண்டிருந்த பொது, இந்தியாவில் பிறப்பை வைத்து ஏற்ற தாழ்வு உள்ளது என்பதை தான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்ப்பதாக கூறினார். சோவியத் ரஷ்யாவின் கால கட்டத்தில் இந்தியாவை பற்றிய பரப்புரை ரஷ்யாவில் நேர்மறையாகவே செய்யப்பட்டதாகவும் ஆனால் இப்போது இந்தியா உள்ள நிலை மிகவும் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் சொன்னார். நாம் மனம் எப்படி கப்பல் ஏறுகிறது பாருங்கள்.
  இளவரசனின் முடிவு… மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

 36. எங்கள் ஜீன்ஸ் பேண்டும் கூலிங் கிளாசும்
  கழற்றி எறியப்பட்டு விட்டது,
  இனி உங்கள் விதவைப்பெண்ணை வீட்டில்
  பத்திரமாக பூட்டி வைக்கலாம்.

 37. காதல் செய்யும் இளைஙர்களே.. காதல் செய்யபோகும் நண்பர்களே.. காதல் தோல்வியில் இறந்தவர்கள் நிறயப்பேர்.இரண்டு உயிர்கள் மனமாற காதலித்தது வாழ நினைத்தது குற்றம் என்று கருதி இளவரசனை கொலை செய்த பா.ம.க சாதி வெறியர்கள் இனி இந்த மண்ணில் வாழ தகுதியானவர்களா? யோசியுங்கள் காதலிப்பது தவறு என்றல் காதல் நீக்கமற நிறைந்துள்ள இந்த மண்ணில் சாதி வெறியர்கள் வாழ்வதே தவறு.பெறும் தவறு. “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை”.என்பது போல மூளை இல்லார்க்கு இவ்வுலகு இல்லை.புரிந்துகொல்லுங்கள் சத்திரிய காதலர்களே.

  • இந்த பூமி தழைத்து வாழ யாரெல்லாம் வாழ வேண்டுமோ, அவர்களைத் தவிர்த்து பிற விஷச்செடிகள் அனைத்தும் செழித்து வளர்கிறதுகள்!!! வேறென்ன சொல்ல..

 38. I deeply saddened due to this incident. There are 90% chances, that it is a murder.That guy illavarasan is looking good.They(SC) are also human being. Give them the respect they deserved. All are having same body. If ramdoss went to united states before 1850, then surely he wont make these kind of statements.For them, All Indians are SC(including bhramins).

  Those peoples(SC) are also our brothers and sisters .There are bad elements in every caste. I dont know how their family will gooing to bear his loss. May god give enough strength to his parents. We(vanniyar’s(sorry to mention the caste name. I am not proud of it)) never liked that guy ramdoss. We never vote for him. Everyone in tamilnadu know about him. Don’t listen to his words or his party words. We all are with you.Please please protest peacefully. Don’t go for violence like that asshole ramdoss.

  P.S: Earlier i put lot of offensive comments against the SC peoples. i just want to see the reaction from your side.I didn’t mention it seriously. Sorry. It wont happen again.

 39. இந்த கொலையில் எக்காளமிடும் அனைத்து சாதி வெறியர்களும், தங்கள் அனைத்து மனித குணங்களையும் தொலைத்து விட்டு, ராமதாசு,காடுவெட்டி,சின்ன ராமதாசு போன்ற விலங்கினதிற்கு கீழானவர்களின் நரவேட்டை வெறிக்கு ஏற்றபடி ஆட்டம் போடுபவர்களே.

 40. காதலிப்பது அவரவர் சொந்த விருப்பம், அதை நாட்டாமை பண்ண நீங்க யாருடா? சாதி வெரியன்களா,சாதி என்பது ஒருவன் செய்த தொழிலால் தான் தோன்றியது. நீங்கள் செய்ய கூச்ச பட்ட தொழிலை செய்த சிலரை தாழ்த்த பட்டோராக நினைக்கிரீர்கள், அவர்கள் தொழிலால் தான் தாழ்த்த பட்டோர், ஆனால் நீங்கள் எண்ணத்தால், செயலால் தாழ்த்த பட்டு விட்டீர்கள், இது தானே உங்கள் வீரம், பெருமை எல்லாம்.. மனித மாமிசத்துக்காக அலையும் ரத்த வெறி பிடித்த மிருகங்களே, உங்களால் மனித சமுதாயம் கண்டிபாக முன்னேரும்..!!!!
  Today its for him, Tomorrow definitely it will be yours, waiting for your decline..

 41. “ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!”அருள் போன்ற பதிவர்களை இந்தப் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை? சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் அனைவருக்குமே இந்தக் கொலையில் பங்கண்டு.

  இளவரசனின் உடலை கருவியாக்குவோம்! ஜாதி வெறியை வெட்டி சாய்ப்போம்!

  எங்கள் இளவரசா – எங்கள் எண்ணங்களில் நீ நெருப்பாய் வாழ்வாய்! அந்த நெருப்பு ஜாதியை சுட்டெரிக்கட்டும்!

 42. நெஞ்சம் அழுகிறது நீதி சாகையிலே
  வஞ்சம் வாழும் வக்கற்ற நாட்டினிலே
  நீ யல்ல இளவரசா அவர்கள் செத்துவிட்டார்கள்

  அணையும் விளக்குதான் சுடர்விடும்
  அதுபோலத்தான் சாதியெனும் விளக்கு
  அணைய போகிறது அழிய போகிறது
  நீயல்லா இளவரசா சாதி அழிய போகிறது

  வாழ்ந்து கொண்டிருப்பதால் இவர்கள்
  மக்களில்லை வாழ்க்கை என்பது
  மூச்சை மட்டும் விடுவதில்லை
  நீயல்ல இளவரசா இவர்களேள செத்த பிணங்கள்

  திட்டமிட்டு காதலிப்பார் எனசொல்லி
  திட்டமிட்டு கொலை செய்தனர்
  நீயல்ல இளவரசா அவர்களின் -நினைப்பு
  சாக போகிறது

  கொலை செய்ய ஒரு கட்சி அதை
  சொல்ல ஒரு தலைவன்
  இதற்கெனவே ஒரு கூட்டம்
  நீயல்ல இளவரசா இவர்களே இருக்க கூடாது

  நீண்ட இரயில் சாலை நீ
  நீட்டி படுத்து இறந்திருக்கலாம்
  அய்யோ துண்டானது உன் கழுத்தானாலும்
  நீயல்ல இளவரசா இறந்தது இவர்களே

  -சாதியை ஒழிப்போம்

  தியாகு

 43. மிகவும் மன வருத்தத்திற்குரிய சம்பவம்.

  சாதி வெறி சாதித்தது என்ன? இதனால் சமூகம் அடைந்த நன்மை தான் என்ன?

  பல உயிர்கள் காவு வாங்கப்பட்டது தான் மிச்சம். தந்தையை இழந்த குடும்பம் ஒரு பக்கம், மகனை இழந்த குடும்பம் மறு பக்கம், நடுவில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லா உயிரிழப்புகள் சில. இதற்கு எல்லாம் என்ன காரணம் பிழைப்புவாதமும், சுயநலமும் மட்டுமே..

  இதில் தந்தையும் மகனும் மருத்துவர்கள் வேறு, மருத்துவம் படித்தவர்களுக்கு தெரியாதா என்ன சாதி, மதம் எல்லாம் கட்டுகதைகள் என்று, தெரியும் நன்றாக தெரியும். இவர்கள் அரசியலுக்கு வந்த காரணமே தானும் தன் குடும்பமும் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்கு. கொள்கை, இலட்சியம், நேர்மை, அறம் இது எதுவுமே இவர்களின் பிறவியிலேயே இல்லை, சரி! எதை சொல்லி அரசியல் நடத்துவது; இருக்கவே இருக்கிறது இழிவான சாதி அரசியல். இவர்களுக்கு ஏற்றாற்போல் தமிழ் நாட்டு மக்களும் மூடர்களாக, அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.

  மக்கள் சுய அறிவும, சுய சிந்தனையும் பெறாதவரை இவ்வாறான பிழைப்புவாத பிணம் தின்னி கழுகுகளிடம் இருந்து திவ்யா-இளவரசன்கள் தப்ப முடியாது. கௌரவக் கொலைகளும் தற்கொலைகளும் தொடரும்…..

  (கீழே உள்ள வரிகள் “இந்திய வரலாற்றில் பகவத் கீதை” புத்தகத்தின் பின் அட்டையில் இருந்து எடுக்கப்பட்டது)

  “ஓர் இந்துவின் உள்ளத்தில் பழங்காலக் கருத்துகளும் காட்டு மிராண்டிக் காலத்து மூடநம்பிக்கைகளும் நிறைந்துருப்பதோடு நவீனத் தத்துவ கோட்பாடுகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நிறைந்துள்ளன. குழறுபடி நிறைந்த இந்த அலங்கோலம்தான் ஓர் இந்தியனை தெளிவாகச் சிந்திக்கவிடாது தடுக்கிறது. அறிவியல் கருத்துகள் அவனை|அவளை ஒரு பக்கமாக இழுத்துச் சென்றால், அதற்கு நேர் எதிர்த் திசையில் பழங்கால மூடநம்பிக்கைகள் அவனை|அவளை இழுத்துச் செல்கின்றன.

  பிரபஞ்சத்தைப் புதிய நோக்கில் பார்ப்பதற்கு அறிவியல் வழிவகுத்திருக்கிறது. அறிவியல் அறிவை தீரமுடன் நடைமுறைப்படுத்துவதிலில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. மனிதன் தனது தினசரி வாழ்க்கையில் அறிவியல் வழிமுறைகளை பயன்படுத்துவதற்குக் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவன்|அவள் தனக்குத் தகுதியான உயர் நிலையை எய்த முடியும். பழமைவாத மனப்பான்மையிலும் அறியாமையிலும் சாதி, மத வெறியிலும் வீழ்ந்து கிடக்கும் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கட்டும். இத் திருநாட்டின் பெருமை மிகு படையணி ஆற்றலுடன் தடையின்றி முன்னேறிச் செல்லட்டும். “

 44. ஜாதி மதங்களுக்காக காதலையும் காதலர்களையும் சாகடிப்பது மிக கொடூரமன செயல்.
  இதற்காக நாம் வெக்கப் பட வேண்டுமே தவிர விவாதம் செய்ய கூடாது 🙁

 45. இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க உழைத்து சாப்பிடுபவன் உயர்ந்த சாதியா?கள்ள சாராயம், கட்டை பஞ்சாயத்து, கள்ளநோட்டு, வழிப்பறி, விபச்சாரம் செய்றவன் உயர்ந்த சாதியா?இன்னைக்கு எல்லா சாதியும் தப்பு செய்தாலும் பெரும்பாலும் மேற்கண்ட தொழில்களை உங்கள் ஊர்களில் எந்த சாதியினர் செய்கிறார்கள் என்று மனம் தொட்டு யோசித்து யார் உயர்ந்தவர் என்பதை உரைப்போம்

 46. வினவு – அருளை பெரிய மனுசனகாதீஙக. ஆவன் ஒரு ஆலு, அவனும் அவன் கருதும்.

 47. இளவரசனுக்காக ஒரு இரங்கல் கவிதை எழுத ஏனோ தோன்றியது.. வார்த்தைகள் வரவில்லை… சிந்தனைகள்தான் முளைவிட்டன… அமிலம் தேடும் வேர்களுடன் . . . இந்த நாட்டுமிராண்டி ஈனச்சமூகம் கவிதைகளாலா திருந்தப்போகிறது… மொழிகூட இதற்கு ஒரு மேற்பூச்சு மட்டுமே அல்லவா.. ஒரு சாவு என்றாலும் சரி ஓராயிரம் உயிர்கள் பொசுக்கப்பட்டாலும் சரி மொழியை கவிதையை காணிக்கையாக்கிவிட்டு தனது குற்ற உணர்வுகளில் இருந்தும் கள்ள மௌணங்களில் இருந்தும் இலக்கியத்தனமாக மீண்டுவிடுகிறது இலாவகமாக… தாழ்த்திய சாதிகளை போல…போடா போ இளவரசா… கவிதைகளின்றி… மீண்டும் ஒரு ஏமாற்றம் வேண்டாம் இனிமேல்.. இன்று மதியம் ஒரு நேர உணவையாவது துறக்கிறேன்.. சின்னஞ்சிறு செயல்வடிவமாக.. வயிற்றிலிருந்து ஒரு நேர பசி .. சாதிவெறி(யர்)களை அடையாளமாகவாவது தின்றுதீர்க்க கிளம்பட்டும்…
  (பி.கு): சிலர் அவளையும் திட்டுகின்றனர்.. அந்த பெண்ணை குற்றம் சொல்லி ஆயிரம்பேர் அணுஅணுவாய் கொல்லவேண்டாம்.. அவள் மனமாற செய்யவில்லை.. அவள் சாதிவெறியர்களால் ஆணவம் பிடித்த ஆணாதிக்கத்தால் உயிரோடு உடன்கட்டை ஏற்றப்பட்டிருக்கிறாள்.. அக்கால சாதிகளின் ”சதி”யை மறுபடியும் புதிப்பித்திருக்கிறார்கள்… அவளுக்கு ஏற்பட்ட இழப்பு நாம் அனைவரது உணர்வையும் ஒன்று சேர்த்தால் கூட ஈடாகாத ஒரு இழப்பு ! வாய்விட்டு கட்டியழக்கூட முடியாத வேதனை… புரிந்துகொள்வோமா? ;-(

  • செல்லா கோவையில் இருந்து உங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பியுங்க

   அன்புடன் தியாகு

 48. அடப்பாவிகளா அந்த பொண்ணோட அப்பன் தற்கொலை செஞ்ச அப்ப நீங்க எங்கடா போனீங்க # வாழ்க உங்கள் சாதி ஒழிப்பு

  • மாநகரில் மெத்தப்படித்த ப்ராமின்சே ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள்,ஒரு கிராமத்து வன்னியன் தற்கொலை செய்து கொண்டால் அது யார் தப்பு?

 49. உண்மையில் சொல்ல போனால் கை நிறைய சம்பாதிக்கும் தகுதி இருந்தால் யாரும் சாதி பார்ப்பதில்லை. தகுதி இல்லாத ஒருவனுக்கு யார் தான் பெண் கொடுப்பார்கள்??

  • நீங்கள் சொல்வதை “உடன்படிக்கையுடன் கூடிய உடன்படுக்கை” என்று கூறலாம். அன்பென்பது அவ்வாறு தகுதி தராதரம் பார்த்து வருவதல்ல. அந்த உணர்வு முற்றிலும் வேறானது.

 50. // lawyer July 4, 2013 at 10:02 pm
  Permalink
  42

  இது தற்கொலையல்ல.கொலைதான்.சாவுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இளவரசன் ATM ல் 9000 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.ரயிலில் விழுந்து சாக போகிறவனுக்கு அவ்வளவு பணம் எதுக்கு.காவல்துறை சரியான முறையில் செயல்பட வேண்டும்.தற்கொலை என ஊத்தி மூடாமல் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும்.
  //

  இது என்ன?

  இது கொலைன்னு சந்தேகிக்க இதுபோதுமே?

  இது கொலையாக இருந்தால் அதற்காக …

  இல்லையெனில்… தற்கொலை என்றால் அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு படி சமத்துவத்துக்கு எதிராக சாதிய வன்முறையை தூண்டியற்காகவும்…

  தற்கொலைக்கு தூண்டியதற்காகவும்…

  சம்பனந்தபட்ட அனைவரையும் 7 ஆண்டு சிறைதண்டனைகான சட்டடத்தில் வழக்கு பதிவு செய்ய கைது செய்ய வேண்டும்.

 51. ஏற்றத்தாழ்வில்லாத ஒரு சமுதாயம் அமைவதற்கு எதிரான கருத்து உள்ளவன் எவனும் இங்கே வாழ தகுதி அற்றவன் அவன் என் சகோதரனே ஆனாலும் சரி.

 52. ஒரு மசுரும் பண்ண முடியாது….நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் விளங்காதுன்னு…. சும்மா நீ தான் எழுதிகிட்டே இருந்தே….. இப்பவும் எழுதுர….இனிமேலும் எழுதுவே…. ஆனா நடக்கறது தான் நடக்கும்… இந்த உலகம் வலியவர்களுடையது… புழுவுக்கு தவளையும், தவளைக்கு பாம்பும், பாம்புக்கு கழுகும், கழுகுக்கு வேடனும் போல, எளியவர்களுக்கு மேல் வலியவர்கள் உள்ளடக்கிய உலகம் இது… உன்னாலும், எவனாலும் எதுவும் செய்ய முடியாது… ( மீண்டும் முதல் வரியை படிக்கவும் )

  • இந்திய புழுவே!
   ஒரு மசுரும் பண்ண முடியாது தான்! ஆனா அது எங்களாலல்ல-உன்னால். ஆதிக்க சாதி வெறியர்களான உங்களின் தினவுக்கு ஆண்குறிகள் தானே அடையாளம்? அதுவே ஒரு சாதாரண பெண்ணின் கைகளால் சிதைக்கப்பட்டு குறட்டால் ஆண்மைநீக்கம் செய்யப்பட்டு செத்த பன்றியைப்போல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைகூளங்களின் நடுவே தெரு நாய்க்களால் கடித்திழுக்கப்பட்டு கிடந்த ஆறுமுகத்தை பார்த்த பின்னுமா புரியவில்லை – யார் உண்மையில் கையாலாகாதவர்களென்று? ஓவரா வாய் பேசினா கட் அன் பேஸ்ட் பண்ணிடுவோம்! ஆமா

   • enanga manamulla tamilan appo kerala irukkaravannlam maanam illaya karnattakka ikuravanukellam maanam illaya ?

    unga kanngacchanga katchikku ramadoss thaan potti aqndha aaloda PMKku neenga thaan potti rendu perum serndhu oru thoguthilyum deposit koods vaangama thaan poporeenga .,. thank god tamilnadu is in control of jayalalitha

 53. மனம் உடைந்தது , திவ்யா இளவரசனின் பெற்றோருடன் காலம் கழிபதே கழிப்பதே நலம் . எத்தனை ஊடகங்கள் வந்தாலும் எத்தனை நாளிதைகள் வந்தாலும் அவைகளால் சமுகத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதனையும் , லாப நோக்கிற்காக மட்டுமே அவைகள் செயல்படுகின்றது என்பதையே இவைகள் உணர்த்துகின்றன.

  • //எத்தனை ஊடகங்கள் வந்தாலும் எத்தனை நாளிதைகள் வந்தாலும் அவைகளால் சமுகத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதனையும் , லாப நோக்கிற்காக மட்டுமே அவைகள் செயல்படுகின்றது என்பதையே இவைகள் உணர்த்துகின்றன.//

   Let the people first say they dont want caste….it also means they are saying NO to caste based reservations. If people say they need reservation (for their profit) and expects caste system to be demolished, then they are as much guilty as the லாப நோக்கிற்காக மட்டுமே செயல்படும் media.

   • ரிசர்வேசனுக்கு முன்னாடியே கோயில் இருந்தது. முதலில் அனைத்து கோயில்களிலும் எவர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வலியுறுத்துங்கள்

    • Raj: I am a Brahmin and even if i want to be an archagar in a temple, i cannot. I need to fulfill certain criteria. I can tell you one thing: “Being a Brahmin” is not one of the criteria. Please read Harikumar’s posts on this topic…During certain days, i cannot even enter the poojai room in my own house. I need to again satisfy few requirements. So, dont make a blanket statement. If you dont want a casteless society, you should also be prepared to say NO to Quotas. Are you ready? On one hand, you want benefits – when it comes to you – and hence need caste system to continue, and on the other hand you dont want caste system when you want to fall in love with people from other caste. Having said that, my question to you is: Are you asking Dalits for becoming heads of Church and Mosques as well? PLs answer.

 54. சமூகத்தில் நடக்கும் தனி மனித காதல் வெளிப்பாட்டை தங்களது அரசியல் ஆதாயத்திர்காக ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டு, இரண்டு உயிரை பலி கொண்ட இந்த சுயநல கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

 55. சாதி வெறி பிடித்த இந்த கயவர்கள் ஒழியும் வரை நமது தமிழ்நாட்டிற்கு விமோச்சனம் இல்லை.

 56. இந்த கொலைக்கு பா.ம.க மட்டும் காரனம் இல்லை.இந்த சாதி வெறி கும்பலை வளர்த்து விட்ட திமுக ,அதிமுக போன்ற கட்சிகளும் தான் காரனம்.

 57. இந்தமாதிரி உணர்ச்சி வசபட்ட கூடம் இருக்கும் வரை ஜாதி மைனாரிட்டி கச்சிகளுக்கு நல்ல வாழ்வு உண்டு .போராட்டம் புண்ணாக்கு எல்லாம் நடத்துவதை விட்டு தனி மனித முன்னோற்றம் நோக்கி நகர்ந்தால் சமுதாயம் தானாகவே முன்னேறும் . திருமணம் என்பதில் புரட்சி எல்லாம் பண்ணமுடியாது. இரண்டு குடும்பங்கள் பொருளாதார இணக்கம், சமுதாய அங்கீகாரம் இதெல்லாம் இல்லாமல் திருமணம் என்பது தோல்வியில் தான் முடியும் .இந்த புரட்சி காதல் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு நல்லா இருக்கும். வாழ்க்கைக்கு உதவாது.

  • கவுண்டரே….
   புர்ச்சி புண்ணாகு பற்றி வக்கணைய பேசுனாப்புல சரியா போச்சா.. அதெல்லாம் 4ம் தேதிக்கு முன்…
   தனி மனித முன்னேற்றம் பற்றியெல்லாம் எல்லாருக்கும் தெரியும் தான்..

   கொலை பண்ணினா உணர்ச்சிவசப்படாம கேட்கம மட்டைய.. இருக்கணுமா?

   ஆழ்ந்து கருத்து சொல்லுறேன்னு .. அப்படியே கொலயை கண்டுக்கம விட்டுடா எல்லாம் சரியா போச்சா?

 58. பெரியார், அண்ணா இல்லாத குறையை உணர்கிறோம்! சாதி பேதம் வெறுத்த சித்தர்கள், வள்ளலார் வாழ்ந்த மண்ணில் சாதி வெறி இப்படி தலை விரித்து ஆடுகிறதே! தமிழக அரசின் உளவுத்துறை தூங்குகிறதா?

 59. எல்லா வட்ரிர்க்கும் பதில்- இது ஜாதியால்நடந்ததல்ல. பொருளாதார ஏட்ரத்தால்வே என புரிந்தும் அதை யாரும் பேச மருக்கிரார்கள்.

 60. He still having the childish face. He deserved to have a good family. I pray to god next time, he will born in a world that has no caste and he get all the things he wish. my family still not get out of the trauma of this incident. ramdoss you ara pig…..

 61. இளவரசன் தனக்கு கீழ் உள்ள புதிரைவண்ணார், துருவர், சக்கிலியர், மலம் அள்ளும் அருந்ததியர் இன பெண்னை காதலித்திருந்தால் இளவரசனின் பெற்றோர்கள் ஏற்ப்பார்களா? தன்னிலும் தாழந்த பெண்னை திருமணம் செய்ய இயலாமல் மரணித்திருந்தால் அதுதான் உண்மையான சாதி மறுப்பு தியாகமாக இருந்திருக்கும். எத்தனை மலம் அள்ளும் அருந்ததிய ஆண்கள் பறையர் வீட்டுப்பெண்ணை காதலித்தர்காக தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் இருந்தும் கருவேப்பிலையைப்போல் தூக்கி எறிந்துவிட்டு.. “புர்ர்ர்ட்சி” பேசுவது.. சிலைக்கு ஊட்டப்படும் உணவேயாகும்.

 62. சாதி இல்லை..சாதி ஒழிப்போம் என சொல்லும் நீங்கள் ..உண்மையில் சாதி இல்லை என அடிமனதில் எண்ணமிருந்தால்…

  சாதி சான்றிதழ் வேண்டாம்
  சாதிச்யை சொல்லித் தரும் சலுகை வேண்டாம்
  சாதியைச் சொல்லித் தரும் ஒதிக்கீடு வேண்டாம்
  சாதியைச் சொல்லித் தரும் பணம் வேண்டாம்

  என சாதி கொல்லப்படும் அத்தனை சான்றுகளையும் எரித்துவிட்டு “புர்ர்ர்ட்சி” பேசுங்கள்.

 63. Ilaarasan diya over attention given by media to these two village people… After all they can show some other problems instead of giving fodder for these to become a giant catastrophe

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க